Followers

Tuesday, April 27, 2010

கமலஹாசனின் தேடித் தீர்ப்போம் வா!

பாமா பதிப்பகம் வெளியீட்டில் கமலஹாசனின் கருத்தாக தொகுக்கப்பட்ட சிறிய நூல்.பாமா பதிப்பகத்தினிடம் அனுமதி பெற்று இந்த புத்தகத்தை கணினியில் ஏற்றி விடலாமென்று பார்த்தால் அவர்களது இமெயில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.முழு புத்தகமுமே 96 பக்கங்கள் என்பதால் ஒவ்வொரு தலைப்பையும் ஒவ்வொரு இடுகையாக போட்டு விடலாம்.உலகில் பரந்து வாழும் தமிழர்களுக்கு ஒரு வாசிப்பின் இனிமை கிடைக்கும் என நினைக்கிறேன்.இதனால் காப்புரிமை பிரச்சினைகள் ஏதாவது வருமா என புத்தகம் பதித்த பதிவர்கள் மற்றும் ஏனைய சட்டமறிந்தவர்களின் ஆலோசனையை வேண்டுகிறேன்.இருந்தாலும் தற்போது பாமா பதிப்பகம் S.பாஸ்கர் அவர்களின் முகவுரையை இடுகைக்கு துணைக்கு அழைத்துக் கொள்கிறேன்.

இனி தேடித்தீர்ப்போம் வா முகவுரை:

இந்தியனே!

தேடினால்தான் விடை கிடைக்கும்.ஆனால் அந்த தேடலுக்கு யாரும் தயாராக இல்லை என்பதுதான் இன்றைய நிலை.ஆனால் திரு.கமல் அவர்கள் அதில் கொஞ்சம் வித்தியாசமானவர்,எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அது அவருக்கு உடன்பாடான பட்சத்தில் வெளிப்படையாக மற்றவர்களுக்குக் கூறி அதில் ஒரு சதவிகிதமாவது அவர்களை சென்றடைய வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்(Seems to be green signal is on my way)

"தேடித் தீர்ப்போம் வா" என்ற இந்த கட்டுரைத் தொகுப்பில் பல நல்ல விசயங்களை,பல பயனுள்ள நிகழ்ச்சிகளை நம்மிடையே பகிர்ந்து கொண்டிருக்கிறார்.சராசரி தமிழனாக இல்லாமல் சிறந்த 'இந்தியனாக' இருந்து நமக்குப் பலவகையிலும் பெருமை தேடித்தந்த சிறப்பு திரு.கமல் அவர்களைச் சேரும்

நாம் எச்சில் துப்புவதாலா அசுத்தம் ஏற்படுகிறது என ஒவ்வொருவரும் நினைத்து துப்ப ஆரம்பித்தால் சாக்கடைகளுக்கு மத்தியில் தான் நாம் வாழும் நிலை வரும்.எனெவே எச்சிலை விழுங்க கற்றுக்கொள்ளுங்கள்.இது நம்மைச் சுற்றி ஏற்படும் அசுத்தத்தை சுத்தப்படுத்தும் முதல்படி எனப் பட்டவர்த்தனமாகச் சொல்லும் வேகம் திரு.கமல் போன்றவர்களிடம் மட்டுமே இருக்கிற திறமையாகும்.

இந்த சிறந்த அற்புதமான புத்தகத்தை வெளியிடும் உரிமையைக் கொடுத்த திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


என்றென்றும் அன்புடன்

S.பாஸ்கர்

பாமா பதிப்பகம்.

(Courtesy Bhama pathippagam)


பின்னூட்டங்களின் ஆலோசனை மற்றும் திரு.பாஸ்கர் தொடர்பிலான யாராவது கருத்துரையின் படி தொடர்வது தொடரும்.நன்றி.

Monday, April 26, 2010

லங்கன் விழா கலாட்டா

பக்கத்து வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரியாமலே அமிதாப்பச்சன் IIFA பற்றியும்,எங்க பிரச்சினைய கவனிக்கவே நேரமில்லை,ஊர் சுத்துறவங்களுக்கு ஓட்டு போடறதுதான் ஒரு குறையான்னு நவின் சாவ்லா கேட்கிறாரே என்று வெளிநாட்டு இந்தியர்களின் ஓட்டுரிமைன்னு இரண்டு இடுகை போட்டாச்சு.எல்லோரும் ஞாயிற்றுக்கிழமை நல்லா தூங்கி எழுந்து வடிச்சு கொட்டிகிட்டு நேரா ஐ.பி.எல் மேட்ச் பார்க்க போயிட்டாங்க.பெரும்பாலோர் போட்டி மும்பய்ங்கிறதால சச்சின் அணிதான் ஜெயிக்கும்ன்னு காசு கட்டியிருப்பாங்க.அப்புறம் சீட்டு போடறவனுக்கு என்ன மதிப்பு?சென்னை கிங்க்சா பின்ன ஜங்சா.சென்னை கிங்க்ஸ் ஜெயிச்சு முடிஞ்ச கையோட லலித் மோடிக்கு கடிதாசி கொடுத்துட்டாங்க.இதெல்லாம் எங்களுக்கு தெரியாதான்னு கேட்கிறவங்களுக்கு தெரியாத ஒரு கதை சொல்லப் போறேன்.

தற்போது ஐ.நா மனித உரிமை கழகத்தின் முதல்வர் நவி பிள்ளை வளைகுடா சுற்றில் உள்ளார்.

முதல் நாள்
UN raps Gulf on Worker's rights,GCC urged to end sponsor system,lift curbs on women
என்று அறிக்கை கொடுத்தாச்சு.

அடுத்த நாள்
Pillay Sees rights 'advances' in Gulf
என்று ஒரு பத்திரிகை செய்தி வந்துச்சு.

அதற்கும் அடுத்த நாள்
Pillay Chides Gulf over women's employement
என்று இன்னுமொரு செய்தி.

மேல்மட்டப் பேச்சு வார்த்தைகள் இப்படி ஒரு புறம் நிகழ இனி இங்கே நிகழ்ந்த லங்கா விழாவை பற்றி லங்காவின் டெய்லி மிரர் வளைகுடா செய்தியை சுட்டு விட்டு என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.

Kuwaitis disrupt lankan event

A massive Sri Lankan celebration in Kuwait was interrupted after angry Kuwaitis claimed it violated Islamic rules. More than 5,000 Sri Lankans, including K.S.C. Dissanayake, Sri Lankan ambassador to Kuwait, had to leave the Jahra stadium after Kuwaiti Islamists invaded the field and pressed organisers to suspend the celebration and threatened to escalate the tense situation.

Negotiations between the event organisers, the police and the angry Kuwaitis failed to reach a compromise. The protesters said that the presence of men and women at the stadium and the playing of music on a Friday afternoon made the celebration “unacceptable” for not respecting Islamic values.

The ambassador, seeking to end the deadlock peacefully, urged his compatriots to cancel the celebrations two hours before schedule and to vacate the premises.

The police said that the Sri Lankans had all the necessary permits and did not break the law. Sri Lanka is organising on Monday a “Sri Lanka Culture Week” in Kuwait to help promote the country as a tourist and cultural destination. The event is hosted by Kuwait’s National Council for Culture, Arts and Letters and co-sponsored by the Sri Lanka Tourism Promotion Bureau and the Sri Lankan Airlines.

A28-member cultural troupe will perform 'Sri Lak Rangana', a fusion of historical and contemporary dance forms.

The week will also feature a handicraft exhibition of products, bronze items, masks, gems, jewellery and other ornaments while a food festival will introduce Sri Lankan cuisine to Kuwait residents. (Gulf News)

இனி உண்மைகள் என்னவாக இருக்குமென்று பார்ப்போம்.

ஒவ்வொரு நாட்டு கலாச்சார விழாக்கள் உள்துறையின் அங்கீகாரம் பெற்று குறிப்பிட்ட அரங்குகளிலோ அல்லது பொது வெளிகளிலோ நிகழ்கின்றன.இந்தியர்கள் அதிகம் வாழும் இடமான ஜிலிப் என்ற இடத்தில் பொதுவெளிகளில்(Garden) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு கூட நடிகை ரேவது மேடம் சில முறை கலந்து கொண்டிருக்கிறார்.எனக்கு தெரிந்தும்,சில நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுத்த அனுபவம் கொண்டும் வரவழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்,உள்துறையில் ஒருவர் தவிர எந்த குவைத் குடிமகனும் வந்து எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொள்வதுமில்லை.வந்து கலாட்டாக்கள் செய்வதுமில்லை.பொது வெளி நிகழ்ச்சிகளுக்கும் கூட ஒன்று இரண்டு வாலிபர்கள் வந்து அவர்களுக்குள்ளேயே ஊமக்குசும்பு செய்து விட்டு விலகி விடுவார்கள்.மொழி தெரியும் பட்சத்தில் இவர்களையும் சிரித்து சமாளித்து விட இயலும்.

சில லங்கா விழாக்கள் கூட முந்தைய கால கட்டங்களில் ஓட்டல்களில் நிகழ்த்தப்பட்டதுண்டு.அதற்கென்று குறுகிய கூட்டம் மட்டுமே கலந்து கொண்டிருப்பார்கள்.இதுவரையிலுமில்லாத வகையில் இந்த முறை 5000 பேர் திரளும்படியான திட்டத்தில் பல வீட்டுப் பணிப்பெண்களையும்,ஏனைய பணியாளர்களையும் திரட்டியதற்கு லங்கா புது வருட விழா கொண்டாட்டம் என்பது காரணமா என தெரியவில்லை.விழாவிற்கான ஸ்டேடியம் நகரை தாண்டிய ஒதுக்குப்புறமான இடம் என்பதால் உள்துறையும் அனுமதி வழங்கியிருக்க கூடும்.ஆனாலும் ஊரின் எல்லைப்புறமாக இருந்த போதிலும் வெள்ளிக்கிழமை தொழுகை நாளில் மதிய நேரத்தில் பெரும் கூட்டத்தைக் கூட்டியதும், இசையென்ற சப்தம் மைதான வெளியில் சிலரின் கவனத்தை ஈர்த்திருந்திருக்கலாம்.கலாச்சார விழாவாக இல்லாவிட்டாலும் எப்பொழுதாவது கொஞ்சம் ரிலாக்ஸாகிக் கொள்ள உதவும் ஒரு சந்தர்ப்பம் நிகழாமல் இவர்கள் கலைந்து போனது வருத்தத்திற்குரியது.லங்கா தூதரகம் விழா கொண்டாடாத இத்தனை வருடங்களில் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பணிபுரியும் பெண்களும், ஆண்களும் தனித்தனியாகவோ நண்பர்கள் கூட்டமாகவோ சில மணி நேரங்கள் நகரின் மத்தியில் சர்ச், போஸ்டாபிஸ், நகைக்கடை, துணிக்கடை, பஸ் ஸ்டாண்ட், ஓட்டல், மைதானம் என கலந்துரையாடி பிரிகிறார்கள். வெள்ளிக்கிழமை கூடும் கூட்டமென்பதால் காவல்துறை வாகன, கூட்ட நெரிசல்களை தவிர்க்க மட்டுமே உதவுகிறார்கள்.

லங்கா கைவினைப்பொருட்கள்,பித்தளை,வெண்கலம்,மற்றும் ஆபரணங்கள் இந்திய கலாச்சாரப் பொருட்களைப் போன்றே லங்கா பொருட்களும் சிறந்தவை என்பதில் சந்தேகமில்லை.சென்னையில் பாயாவும்,இடியாப்பமும் ஜோடிங்கிற மாதிரி இடியாப்பமும்,மிளகாய் கரைச்சலும் ஏகப் பொருத்தம் லங்காவுக்கு.காரம் சாப்பிடும் நாமே அலறி அடிச்சுகிட்டு ஓடும் போது இந்த ஊர்கார மக்களுக்கு லங்கா உணவு சிபாரிசு செய்யறாங்களாம்:)

Sunday, April 25, 2010

வெளிநாட்டு இந்தியர்களின் ஓட்டுரிமை

பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் 2014 பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க இயலும் என்று முன்பு கூறியிருந்தார்.நேற்று சனிக்கிழமை இந்திய தேர்தல் கமிசனர் நவின் சவ்லா வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஓட்டளிப்பதிலுள்ள நடைமுறை சிக்கல்களை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.April 24: Chief Election Commissioner Navin Chawla on Saturday said the Election Commission has pointed out to the Centre that there would be ‘logistical difficulties’ in implementing the proposal to grant voting rights to Non-Resident Indians (NRIs).

Prime Minister Manmohan Singh had a few months ago said the Centre would formulate a plan to allow for the Indian diaspora across the world to participate in elections in India, and hoped that this would be possible by the next Lok Sabha elections in 2014.

“There will be operational difficulties in allowing NRIs to vote as they are not confined to one particular place,” Mr Chawla told reporters here at the airport en route to Tiruchy. The CEC said setting up polling stations in cities abroad would involve major logistic problem. “The commission will have to move electronic voting machines to various cities abroad betw-een the last day of nominations and the polling day and then bring them back. This would be a mind-boggling exercise,” he said.

NRIs can currently be registered as voters only if they spend six months in the country ahead of the elections, so many of them would not qualify, the CEC pointed out. He said that the commission had written to the Centre on the issue since some statutory changes had to be made in the relevant Act to allow NRIs to vote.

To a query on candidates in the Pennagaram by-poll failing to declare their election expenditure, he said candidates of many political parties had failed to submit their expenses for recent elections across the country. “Notices had been issued to 16 political parties asking them to furnish the relevant details by April 29. Candidates in the Pennagaram by-poll still have time to file their expenses,” he said.

(Courtesy deccanchronicle.com)

நடைமுறை சிக்கல்களாக அவர் கூறுவது எலெக்ராடினிக் மயமாக்கப்பட்ட ஓட்டு இயந்திரங்களை பல இடங்களுக்கும் கொண்டு போய் மீண்டும் குறிப்பிட்ட நேரத்தில் திரும்ப இந்தியாவுக்கு கொண்டு வருவது சிரமம் என்கிறார்.என்ன ஒரு தொலை நோக்குப்பார்வை தேர்தல் கமிசனர்:).மேலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஒரே இடத்தில் நிற்காமல் நகர்ந்து கொண்டே இருக்கிறார்களாம்.

முதலாவதாக எலெக்ட்ரானிக் பெட்டிகளுக்கு மாற்று வழிகள் இல்லையா?அமெரிக்கர்கள் எலக்ட்ரானிக் முறைக்கும் முன்பும் கூட தபால் முறையிலான ஓட்டு முறையை நடைமுறைப்படுத்தினார்களே.இத்தனைக்கும் இந்தியர்களை விட அதிகம் ஊர் சுற்றுபவர்கள் அமெரிக்கர்கள்.ரயில்வே துறையில் முன்பதிவு முறைகளையெல்லாம் நடைமுறைப்படுத்தி விட்டு மாற்று வழிகளான கணினி முறையில் வாக்களிக்க இயலுமா என்பதையெல்லாம் ஆராயமல் நடைமுறை சிக்கல்களை மத்திய அரசுக்கு அறிவிப்பது நிர்வாக திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது.

மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு கணினி மயமாக்கப்பட்ட வாக்குரிமை முறையை சொல்லிக் கொடுக்க பயிற்சி நிலையங்கள் தேவையில்லை.வளைகுடா,சிங்கப்பூர்,மலேசியா போன்ற இடங்களில் வசிக்கும் ஒப்பந்த முறையில் பணி புரியும் கணினியின் சுவடுகள் அறியாத பணியாளர்களை இங்கே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.இந்தியர்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் தூதரகங்கள் உள்ளன.தூதரகங்கள் மத்திய அரசுக்கும்,தேர்தல் கமிசனுக்குமான இந்திய பாலம்.

ஒவ்வொரு நாட்டிலும் இந்திய தூதரகங்களால் அனுமதிக்கப்பட்ட அதிகார பூர்வமான ஒவ்வொரு மாநில அளவிலான கலாச்சார அமைப்புகள் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.கூடவே பள்ளிக்கூடங்களும்.கலாச்சார,பள்ளி நிறுவனங்கள் தூதரகத்தோடு இணையும் பாலங்கள்.கூடவே தன்னார்வ தொண்டர்களும்,ஊதியத்திற்கு உழைக்கும் மனித வளமும் அந்தந்த நாட்டில் நிறையவே உள்ளன.இந்தியர்கள் அனுப்பும் டெலக்ஸ் ட்ரான்ஸ்பர் மற்றும் ஸ்விப்ட் பரிமாற்றங்கள் மட்டும் எப்படி இதுவரை துரிதமாக செயல்படுகின்றன என்பதை வங்கியாளர்கள் நவின் சாவ்லாவுக்கு தெரியப்படுத்துவது அவசியம்.

மற்ற நாடுகளில் சிவில் ஐடி எனப்படும் விசிட்டிங் கார்டு அளவிலானஅடையாள அட்டை,வாகனம்,சுகாதாரம்,குடியுரிமை,காவல்துறை,குற்றவியல்,காதுக்குள் ரகசியமாய் மொபைல்,நீர் மற்றும் மின்சாரம் என்று ஒரே இணையத்துக்குள் தகவல்கள் பரிமாறபடுகின்றன.கணினி தொழில் நுட்பத்தில் முன்னணி நாடு என்று மார்தட்டிக்கொள்ளும் இந்தியா இன்னும் குழப்பங்களினுடாகவே வருடங்களை நகர்த்துகிறது.

Grow up India.

ராவண் IIFA

பல மனித வளங்களின் உழைப்பு,பொருளாதார முதலீடு,சமூகம் சார்ந்த பார்வை,திரைப்பட நுணுக்கங்கள்,இசையின் மகுடி,திரைப்படம் வெளியிடூ,மக்களின் வருகை,விமர்சனம்,முதலீட்டின் லாபம் என்ற இத்தனை விசயங்களையும் தாண்டி ஒரு திரைப்படம் வெளி வராததற்கு முன்பே அதனைப்பற்றிய சுயமதிப்பீடுகள் செய்வது என்பது சரியல்லதான்.ஆனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டு அதற்கான நீதி கிடைக்கும் முன்பே கலாச்சார பரிமாற்றங்கள் என்ற பெயரில் சுயநலங்களை விளம்பரப் படுத்தும் போது விமர்சனங்களை முன் வைப்பது அவசியமாகிறது.

இதனையெல்லாம் தாண்டி இந்திய அளவில் அனைவராலும் மதிக்கப்படும் அமிதாப்பச்சன் அவர்கள் இந்திய திரைப்படங்களின் துதுவர் என்ற மகுடத்தை ஏந்தும் காரணம் கொண்டும் பதிவுலகில் மெல்லியதாய் எழும் குரல்கள் பல காரணங்களால் அமுங்கிப்போகவும் கூடும். அப்படியான மெல்லிய குரலாக இருந்தும் எனது கண்டனத்தை பதிவு செய்வது அவசியமாகிறது

It would be prompt to declare International Indian Film Academy as International Indi Film Academy (IIFA)

தமிழக எதிர்ப்புக்களையும் தாண்டி International Indi Film Academy (IIFA) இலங்கையில் நடக்கும் எனபதை உறுதி செய்வதற்கான காரணிகள் சில:

இரு தேசங்களின் புரோட்டக்கல் எனும் முன்வரைவுகள் தீர்மானிக்கப்பட்டு விட்டது

அதனை உறுதி செய்யும் அமிதாப்பச்சனும்,ராஜபக்சேவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்

தமிழகத்திலிருந்து இந்தி திரைப்படங்களுக்கான சந்தை குறுகியது.

அபிஷேக்,ஐஸ்வர்யாவின் இணைந்து நடித்த திரைப்படம் என்பதால் இங்கேயும் ஒரு குடும்ப நலன்.

இந்திய அளவில் ஈழ இனப்படுகொலை குறித்த ஊடகங்களின் கவலையின்மையை இப்போதைய ஐ.பி.எல் சர்ச்சைகளை இன்னும் ஒரு மாதத்தில் IIFA ஊடகங்களை நிறைத்துக்கொள்ளூம்.இப்படி தொடர் சர்ச்சைகள் நடப்பதே மக்களை திசைதிருப்பி ஆட்சியை வெற்றிகரமாகவும் நடத்த எளிதாக அமையும்.

இரு நாடுகளின் கலாச்சாரம் மேம்படுத்தல் எனும் போர்வைக்குள் ஒளிந்து கிடக்கும் வியாபார நலன்கள்.

காமிரா தொழில்நுட்பங்கள்,வெளிநாட்டில் பாடல்காட்சிகள்,பெண்களின் அரைகுறை ஆடைகள்(இதெல்லாம் சமூக காவலர்களுக்கு பொருட்டேயல்ல)முத்தக்காட்சிகள்,இன்னும் இந்திப்படத்துக்கே உரித்தான மசாலாக்களுடன் இந்தி திரைப்படம் இந்திய திரைப்படமாக வலம் வருகிறது.தமிழ் திரையுலகம் எப்படி தமிழ் இலக்கியங்களையெல்லாம் விட்டு விட்டு வேறு பாதைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டதோ அதே மாதிரி இந்தி திரைப்படங்களும் துவக்கம் முதல் உண்மையான இந்திய கலாச்சாரங்களை விட்டு மிக தூரமாகவே பயணிக்கிறது.இந்திய திரைப்படங்களை மாநில அளவில் ஒப்பீடு செய்யும் போது இந்தி படம் மசலாக்கள் என்பதுடன் இந்தி திரைப்படங்களின் பலமே அதன் இசையில்தான்.ஏனைய மாநில அளவிலான ரசிகர்கள் குறைவாக இருந்தாலும் வங்காள,மலையாள,தமிழ் படங்களுடன் ஒப்பீடு செய்கையில் இந்தி திரைப்படம் பாப்கார்ன் மட்டுமே.

மாநிலங்கள் என்ற பெடரல் அமைப்பே இந்தியா எனும் முகம் என்பதை மறந்து விட்டு இந்திப்படத்தை மட்டும் முன்னிறுத்துவதற்கு IIFA என்பதனை குறிப்பிட்டு சொல்லும்படியாக கேரள,வங்க,தமிழ்,ஏனைய திரைப்படத்துறையினர் குரல் எழுப்பாதது ஏன் என்பதை அறிந்தவர்கள் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

இதில் நான் பெரிதும் மதிக்கும் இயக்குநர் மணிரத்னம் அவருடைய கட்டுக்கும் மீறி மீண்டும் ஒரு சர்ச்சையில் நுழைவது தனிப்பட்ட முறையில் வருத்தத்தை தருகிறது. ராஜபக்சேவுக்கு பஞ்ச் டயலாக் ஏதாவது வைத்திருக்கீறீர்களா மணிரத்னம் சார்? குறைந்த பட்சம் ரத்தம் படிந்த அந்த சிவப்பு துண்டு?

தமிழனின் குரல்கள் அவ்வப்போதான மழைக்காலத்து தனித்தனிக் குளத்தில் தவளைகளாய் கீச்சிட மட்டுமே செய்கிறது.ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்று பாடிக்கொண்டேயும் சில குரல்கள் வாழ்க்கை ஓட்டத்தில் பயணம் செய்கின்றன.

ஒற்றுமையின்மை,பொது நலனிலும் கூட சுயநலம் முன்நிற்பதும்,நமக்கென்ன என்று ஒதுங்கிப் போகும் மக்களின் மனோபாவம்,சுய வாழ்க்கையின் ஓட்டத்துக்கே ஒரு நாள் ஓடிப்போவது,இவை அனைத்துக்கும் மேலாக ஒரு கூட்டம் திட்டமிட்டு தமிழர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகிறது என்பதை சமீபத்து நிகழ்வுகள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தமிழனுக்கு உணர்த்துகின்றன.அந்த வகையில் இலங்கையின் IIFA வும் ஒன்றாக இணைத்துக் கொள்ளலாம்.

IIFA வுக்கான மேலும் சில எதிர்ப்புக் குரல்களாய் சிரவணன் அவர்களின் இடுகை தொடுப்பாக இங்கே மேலும் சில தகவல்களை காணலாம்.

பல தமிழ் திரைப்பட நடிகர்கள் திரைப்பட விழாவுக்கான அழைப்பிதழை பெற்றுக்கொள்ளவில்லை என்ற செய்திக்காகஅனைவருக்கும் நன்றி.முப்பது ஆண்டுகளை தமிழ் திரைப்படம் இலங்கை அரசின் உதவியில்லாமல் பயணித்திருக்கிறது.இன்னும் கொஞ்ச தூரம் இதே பாதையில் தமிழ் திரைப்பட உலகம் பயணிப்பதில் தவறில்லை.

Thursday, April 22, 2010

நெஞ்சுக்கு நீதியில்லை.

சிந்திப்பதே தவறு.ஏனென்றால் சிந்திக்கும் போது சுயநலங்களை கடந்து மனம் சுதந்திரமாக பறக்கிறது.சமூக அவலங்களை நினைத்து கவலைப்படுகிறது.அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் தொலைந்து போன தமிழை மீண்டும் கண்டுபிடித்ததும் கூட தவறோ?என்னவெல்லாம் புலம்ப வைக்கிறது.

மீன் பிடித்துக் கொண்டிருக்கலாம்,காமிராவை தூக்கிக் கொண்டு கடல் அலைவரிசைகளை நில் என்று சொல்லியிருக்கலாம்.பாடல்களின் இனிமையில் மெய்மறந்திருக்கலாம்.எதையும் யோசிக்க வேண்டாமென்று தொலைக்காட்சிகளை சுழற்றிக் கொண்டிருக்கலாம்.இது என்ன சோதனையும்,வேதனையும் தொண்டைக்குழியில் முட்டிக் கொண்டு நிற்கும் குமுறல்களை பொதுவிலே வை என்று மூளை கரங்களுக்கு கட்டளையிடுவது?யாரிடம் உன் சொல் விளையாட்டு!வேண்டாமே இந்த எழுத்துப் பரிட்சை.இருந்தும் மனதின்,சில நட்பின் சிபாரிசுகள் இங்கே முறியடிக்கப்படுகின்றன.

குடும்பம் சிதறி,வீடிழந்து,நாடிழந்து,சுய உரிமைகளையும் இழந்து,அரசியல் அவலங்களால் அலைக்கழிக்கப்படும் ஒரு வயதான மூதாட்டிக்கான குரல் இது.தமிழ் கற்ற குற்றத்தாலேயே மானுடம் குறித்த கவலைகள் எல்லாம் இங்கே வேற்று திசையிலும் கூட நோக்கப்படும்.

உலக நிகழ்வுகள் மட்டும் மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறது.ஆனால் வரலாறு மட்டும் மீண்டும் கண்ணாடிக்குள் தன் முகத்தை திரும்பி பார்த்துக் கொண்டே செல்கிறது.துடிப்பையும்,மனதின் கோபத்தையும் சில தினங்களுக்கு முன் சில இளைஞர்கள் பார்வதி அம்மாள் திரும்ப மலேசியா அனுப்ப பட்டது குறித்து எழுப்பிய குரல்கள் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது.அதே மாதிரியான துடிப்பும்,சமூக ஆர்வமும் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து கல்லக்குடி கொண்டான் தன் பெயர் சூட்டிக் கொண்ட ஒரு இளைஞனுக்கும் இருந்திருக்கும்.

M.A படித்திருந்தால் மட்டும் போதாது,நாவன்மையோடு சூழ்ச்சிகளும்,சகுனித்தனமும் மட்டுமே அரசியலை நிலைநாட்டும்,நட்புடன் இருந்தவனே நில பங்காளி என்ற வரலாற்றையும் எழுதி வைத்தாகி விட்டது.நெஞ்சுக்கு நீதி வாய்ப்புக்கள் கிடைத்தால் உண்மைகளின் சதவீதம்,ஒப்பனைகள்,சூழ்ச்சிகள்,உழைப்பின் பங்கு,அரசியல் பித்தலாட்டங்கள்,சுயநலங்கள்,சாதனைகள் என்று மெல்ல இனி வரும் காலம் மீள் பார்வை செய்யும்.சாதனைகளை ஒரு வேளை இதே சாம்ராஜ்யம் தொடரும் பட்சத்தில் பள்ளிப்பாட புத்தகங்கள் கூட சொல்லி வைக்கும்.அங்கே சொல்லாதவைகளையும் சிலர் பார்வையிடவும் இங்கே சில சொல்லாடல்கள்.

சிலம்பும்,சிலப்பதிகாரமும் கோவலனால் சிறப்புற்றதோ,அரசு துறந்து துறவறத்தில் இலக்கியம் படைத்த இளங்கோவால் சிறப்பானதோ தெரியாது.இலக்கியத்தின் திரிபுகள் என்னவென்றும் காலம் எழுதி வைக்கவில்லை.இருந்த பூம்புகார் பட்டினமும் கடல் கொண்டு போய் விட்டது.ஆனால் பத்திரிகை பார்த்தே உலமறிந்த முந்திய ஒரு தலைமுறைக்கும்,இணையம் கொண்டு வரும் உண்மைகளின் இன்றைய தலைமுறைக்கும் கோவலன்,மாதவியை விட கண்ணகியும்,கண்ணகியின் சிலம்பும் மெரினாவின் அலைகளுடன் சிலையாக நின்றதையே பாமரனுக்கும் கூட சொல்லி வைத்தது சாதனைதான்.


இலக்கியம்,கவிதை,வசனம்,எழுத்து,அரசியல்,பேச்சின் நாவன்மை என்ற பன்முகங்கள் இன்றைய வரலாற்றோடு கூடவே பயணிக்கிறது.பாண்டிய மன்னர்களின் வரலாற்றை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும்,சோழர்களின் வரலாற்றை தஞ்சை கோயிலும்,பல்லவர்களின் பண்புகளை கற்பாறை ஓவியங்களும் மாமல்ல புரமும் பறைசாற்றிக்கொண்டிருப்பது போல் இன்றைய தி.மு.கவின் வரலாற்றின் சாட்சியாக திருவள்ளுவன் சிலையும் எதிர்கால சந்ததிகளுக்கு பாடங்கள் சொல்லும்.

கூடவே இன்னும் எழுதப்படாத அத்தியாயங்களும் ஒரு ஆட்சியின் மறுமுகத்தையும் காட்டக் கூடும்.முத்துப்பரல்கள்,மாணிக்கப்பரல்களின் குழப்பத்தால் பாண்டிய மன்னன் தடுமாறி அறம் பிழைத்தானோ அதே வரலாற்றுச் சுற்றில் போராட்ட குணமிழந்து,குடும்பம்,சுயநல கணக்குகளுடன் ஈழத்தின் உரிமைகளை நீர்த்துப்போக செய்ததும் தமிழக அரசியலில் எழுதி வைக்கப்படும்.

அதை விட அரசியல் அறம் பிழைத்தவன் என்ற குற்றம் பார்வதி அம்மாள் விமானத்தளத்திலிருந்து திருப்பி அனுப்பிக்க வைக்கப்பட்டதையும் வரலாறு எழுதி வைக்கும்.

திராவிட சிந்தனைக்கே மஞ்சள் துண்டு பரிகாரம் இருக்கும் போது பார்வதி அம்மாள் இந்திய இறையாண்மையில் கட்டம் கட்டுவதை நீக்குவதற்கும்,மருத்துவம் பார்ப்பதற்கும் பரிகாரம் செய்ய இயலாதா?

பார்வதி அம்மாள் தமிழக விமான தளத்துக்கு வர மறுப்பு என்ற தினத்துக்கான மனப்பிரவாகம் இது.வலையில் ஊறும் நண்டு மாதிரியான சில்லுண்டி ஒன்று பார்வைகளையெல்லாம் தடம்புரள செய்து விட்டது.அதன் காரணம் கொண்டே தூதுக்கடிதத்துடன் தாமதமாக விமானம் சென்னை நோக்கிப் புறப்படுகிறது.Sunday, April 18, 2010

பார்வதி அம்மாள்

தாயே!தமிழின் உண்மையான முகவரியே!
கண்ணீரை மட்டும் காணிக்கையாக்குகிறேன்.

நான் உரைநடைக்காரன்
இருந்தும் என்னிடம் சொல்வதற்கு வார்த்தையில்லை.
இருந்த வார்த்தைகளையெல்லாம் எங்கள்
மேடைப்பேச்சாளர்கள் திருடிக் கொண்டு போய் விட்டார்கள்.

தாயே!தமிழின் உண்மையான முகவரியே!
தலைகுனிகிறேன்.


Friday, April 16, 2010

லீனா மணிமேகலை

ஹுசைனின் ஓவியம் பற்றிய ஒட்டிய விவாதங்களூம்,அவருக்கு எதிரான எதிர்வினைகளுக்கான இடுகைகளும்,பின்னூட்டங்களும் எனக்கு ஒரு புரிதலை தந்தது.அதாவது கருத்து விவாதம் என்பதை விட பொருளின் கரு யாரால் சொல்லப்படுகிறதென்பதே முன்னிறுத்தப் படுகிறது.

என்னை மாதிரி நோஞ்சான் பதிவராக இருந்தால் ஒரு பார்வையிட்டு விட்டு ஒதுங்கிப் போகும் மனப்பான்மையோ,பிள்ளைப் பூச்சியையெல்லாம் அடிப்பதா என்ற பரிதாபம் கொண்டோ,நமக்கு நிகரான கருத்துவாதியா என்றோ,மூக்குல ரோசம் வர்றமாதிரி எழுத மாட்டேன்கிறானே என்று அகன்று போவதையும் அவதானித்தேன்.அப்படியும் வந்து விட்டோமே என்று நாகரீக எதிர்வினை மாற்றுக்கருத்து பின்னூட்ட நண்பர்களுக்கும் நன்றி.இதே எதிர்வினைக்காரர்கள் இன்னொரு பிரபல பதிவரின் தளத்திற்கு சென்றால் விவாதத்திற்கான களம் மாறி வார்த்தை சொற்றாடல்கள் மாறிப் போகின்றன.எனவே யார் யார் வாய் எப்பொருள் கேட்பினும் சொல்பவரின் பெயர்ச்சொல் முன் நிற்கும் புதிய மொழியை உணர்ந்து கொண்டேன்.

இப்பொழுது லீனா மணிமேகலை என்ற பெண்ணின் கவிதைகள் விவாதப் பொருளாகியுள்ளது.நிர்வாணம்,உடல் பற்றிய உணர்வுகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் உளவியலாக தனிமனிதனுக்கு ஒரு அதிர்ச்சியை தருகிறது என்ற புரிதலையும் இப்பொழுது ஏற்படுத்துகிறது.ஆனால் தனிமனிதக் கோபங்கள் ஒரு இசத்துக்குள் நுழையும் போது விவாதப் பொருள் ஒரு புதிய வடிவம் பெறுகிறது.

உதாரணம் லீனா மணிமேகலையின் கவிதைக்கு இந்துக்கட்சி என்ற புதுமுக அறிமுகமும்,சித்தாந்தவாதிகளான கம்யூனிஸ்ட்டுகளும் குரல் கொடுப்பது.ஒரே பொருள் இரு விதமாகப் பேசப்படுகிறது.இருவருக்குமான காரண காரியங்களை விளக்க வேண்டிய அவசியமில்லை என்பதை லீனா மணிமேகலை குறித்த விமர்சனங்களை கவனித்து வருபவர்களுக்கு புரியும்.

ஹுசைன் விசயத்தில் இந்துக்கடவுள்களை கொச்சைப்படுத்தும் ஹுசைன் முகமதுவை அப்படி வரைய துணிவாரா என்ற கேள்விக்கு நிகராக லக்கிலுக் யுவகிருஷ்ணா "கம்யூனிஸத் தலைவர்களுக்கு பதிலாக பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பின், வினவுத் தொழர்கள் செய்த கலாட்டாவை விட மிகப்பெரிய கலாட்டாவை திராவிட இயக்கத்தவர் செய்திருப்பார்கள்."

கலாட்டாக்கள் செய்தே கட்சி வளர்த்த பரம்பரைக்காரர்கள் அல்லவா நாம்,எனவே அந்த உணர்வுகள் நமத்துப் போகாது என்பதுடன் குறிப்பிட்ட தலைவர்கள் விவாதத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் என்ற மாயையிலிருந்து விடுபட நாம் விரும்பா விட்டாலும் திராவிட இயக்கத்தில் கூடவே பயணித்த கண்ணதாசன் ஏற்கனவே திராவிட தலைவர்களில் சிலரை துவைத்து காயப்போட்டு விட்டார்.

கண்ணதாசன் பற்றிக் குறிப்பிடும் போது அவரது காலத்தில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் கூட விவாதத்திற்குட்படுத்தாமல் திறந்த புத்தகமாக இருந்து போய் விட்டார்.அப்படியும் அவரது கூந்தல் கருப்பு,குங்குமம் சிவப்பு,எலந்தப்பழம் போன்ற பாடல்கள் பொது மேடைகளில் விவாதங்களுக்குட்பட்டதும் அதனையெல்லாம் பின்னால் தள்ளி விட்டு அவரது சினிமா பாடல்களின் கவிதை வரிகளும்,அர்த்தமுள்ள இந்துமதமும் மக்கள் மனதில் நிரந்தரமாக குடிகொண்டு விட்டது.

அண்ணா,கருணாநிதி போன்றவர்களின் துவக்க கால திராவிட இலக்கியங்களும் கூட காலம் கடந்து எடைபோடும் போது நகைப்புக்குரியதாக இருந்த போதிலும் அந்தக்கால கட்டத்தில் சிலரை கோபப்படுத்தியிருக்கும் என்பதையும் கடந்து அவர்களின் பொது முகங்கள் மாறிப் போயிருக்கின்றன.

எரிக்கா யங்க்(Erica Yong) என்ற 1942ம் ஆண்டு பிறந்த ஜெர்மன் யூத பெண் எழுத்தாளரும்,கவிதாயினியும்,1970,80களின் கால கட்டத்து கேரளத்து எழுத்தாளரும்,கவிதாயினிமாகிய கமலாதாஸின் என்னுடைய கதை,அவரது ஓவியத்துக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்ததும் கூட அந்த அந்த கால கட்டத்தில் ஆணாதிக்க மனோபாவங்களுடன் விவாதங்களை ஏற்படுத்தியது.ஆனால் காலங்கள் கடந்து இவர்களின் கவிதைகள் இன்றும் உயிரோடு நிரந்தரமாகி விட்டன.எனவே லீனா மணிமேகலையின் தொடர்ந்த கவிதைகள் மட்டுமே விமர்சனங்களை கடந்தும் நிலைத்து நிற்கும்.

Wednesday, April 14, 2010

காணவில்லை

பதிவர்களே!உங்களுக்கு தெரியுமா?அட உங்களுக்கு தெரியுமா?
பதிவுலக வவ்வாலே!தலகீழா தொங்கினியே

மாறுபட்ட பார்வை வேறுபட்ட கோணமென்றாயே
இப்ப பார்வையோ மாறுகண்ணு,கோணமோ கோணல்

வெளிச்சம்தான் கண்ணுக்கு கேடுன்னா
இருட்டுலதான் ஒரு தடவை கீச்சிட்டுப் போகலாமே

போகனுமின்னு சிலர் வேண்டுவதெல்லாம்
பசை போட்டு உட்கார்ந்திருக்கு

மணல் போட்டு பதிவு குடுவை செஞ்ச விஞ்ஞான ரோசாவே!
இப்ப அந்த ரகசியமெல்லாம் காணாமல் போச்சே

கலவையெல்லாம் சரியாகத்தானே இருந்தது.
பாண்டிச்சேரி ரோடு கூட தெளிவாத்தான் தெரிஞ்சதுன்னீரே!

நல்லாத்தானே சிக்ஸர் அடிச்சு ஆடிட்டு இருந்தீக
அதென்ன மர்மம் வருசத்துக்கு ஒரு பதிவு
அப்புறமென்ன காணாமல் போன மர்மம்?

தமிழ்ப்பதிவுக்கு போட வேண்டிய பின்னூட்டத்தை
ஒரு தமிழ்ப்படத்துக்கு போட்டதுல
பழைய நினைப்புதான்
வவ்வால் பழைய நினைப்புதான்
என்ன கொடுமை சார் இது.

Monday, April 12, 2010

நம்பிக்கைகளை சீர்குலைக்கும் தமிழக சீட்டு கம்பெனிகள்.

அங்கேயும் வந்து ஆட்டையப் போட்டுட்டாங்களான்னு இங்கே வானம்பாடிகள் பாலா சொல்லி வாய் மூடுவதற்குள் இன்னுமொரு ஏமாற்று வேலை அரங்கேற்றம்.யாரை நொந்து கொள்வதென்றே தெரியவில்லை.திருடனையா அல்லது எங்கிட்ட பணமிருக்கிறதென்று வாலட்டை திருடன் கண்முன்னே காட்டுபவனையா?அல்லது அரசு இயந்திரம் செயல்படுவதையா?இல்லை மனசாட்சிகளையெல்லாம் அடகு இல்ல இல்ல புதைத்து விட்ட,எரித்து விட்ட மனநிலைகளையா? சென்ற பதிவில் இந்திய சுதந்திரங்களை நினைத்து மனதுக்குள் மகிழ்வான ஒரு புன்முறுவல் வந்து போகுமுன் இந்திய நாணயங்கள் ஏலம் போய்விட்டது.

வேளச்சேரி பக்கமெல்லாம் கொஞ்சம் காசு புரளுகிற இடமா?அல்லது ஏமாளிகள் அதிகம் நடமாடும் இடமா?குமாரராஜா,பிரகதீஷ்வரி என்ற தம்பதியினர் ஷேர்மார்க்கெட் மற்றும் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார்களாம்.இவர்களிடம் ரூபாய் 40 லட்சம் முதல் 1லட்சத்து 50 ஆயிரம் வரை பணம் கட்டி ஏமாந்தவர்கள் மொத்தம் 500 பேர்.

இவர்களிடம் கட்டும் பணத்துக்கு 10 சதவீதம் வட்டி தருவதாக தெரிவித்தனர். இந்த நிலையில் சீட்டு முதிர்வடைந்த 20 பேருக்கு “செக்” தரப்பட்டது.ஆனால், பாங்கியில் பணம் இல்லாததால் செக் திரும்பிவிட்டது. எனவே, குமாரராஜாவை சந்தித்து இது குறித்து கேட்டதற்கு வேளச்சேரியில் உள்ள வீட்டுக்கு வந்து பணம் வாங்கி செல்லும்படி தெரிவித்தனர்.அதன்படி வீட்டுக்கு சென்றால் வீட்டை பூட்டிவிட்டு கணவன் மனைவி இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.இந்த பணத்தை பெற்று தருமாறு போலிஸ் கமிசனரிடம் புகார்.

அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் இருக்கின்றன.பிக்சட் டெபாசிட், ATM வசதிகள் இருக்கின்றன.10% சதவீதம் லாப கணக்கு போட்டு இன்னும் இன்னும் எத்தனை முறை இந்த ஏமாற்று வித்தைகள்?திருடன் போலிஸ் விளையாட்டு மட்டும் நமக்கு அலுக்கவே அலுக்காது போல இருக்குதே.

இந்த விளையாட்டுக்கள் எல்லாம் இங்கே இல்லீங்க.ஒரே ஒரு மத்திய வங்கி நம்ம ரிசர்வ் வங்கி மாதிரி பணத்தை அச்சடிப்பதற்கு.அடுத்து தேசிய வங்கி,வியாபார வங்கி,வீட்டு கடன் வங்கி,பன்னாட்டு பொருளாதார வங்கி,வளைகுடா வங்கி என அனைத்துமே அரசால் அங்கீகரிக்கப் பட்டவையாகவும் எத்தனை வங்கி கிளைகள் தேவையோ அத்தனை அமைத்துக் கொள்ளும் உரிமைகள் கொண்டவை.இவைகள் மட்டுமே பணம் சேமிப்பு மற்றும் வியாபார நோக்கம் கொண்ட அரசு சார்ந்த மற்றும் தனியார் வங்கிகள்.

சில தனியார் பணம் கடன் தரும் நிறுவனங்கள் மற்றும் இந்திய மாநிலங்களுக்கும்,இலங்கை,பிலிப்பைன்ஸ்,நேபாளம்,பெங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு பணம் மாற்றம் செய்யும் தனியார் நிறுவனங்களும்,டாலர்,யூரோ,பஹ்ரெய்ன் தினார்,எகிப்திய பவுண்ட்,இந்திய ரூபாய்,ரியால்,திர்காம்,சிங்கபூர் டாலர் போன்ற பணங்களை குவைத் தினாருக்கு பதிலாக பணமாகவே தரும் தனியார் பண மாற்று நிறுவனங்களும் செயல்படுகின்றன.இதுவரை ஒரு பணம் ஏமாற்றும் செய்தி கூட நான் கேள்விப்பட்டதில்லை.காரணம் ஏலச்சீட்டு,ஹவாலா போன்றவை அரசால் அங்கீகரிக்கப்படாதவை.சேமிப்பின் பணத்தை ஐம்பது நூறென நண்பர்கள்,அறிந்தவர்கள் வட்டத்துக்குள் மட்டுமே 10 பேர் 12 பேர் என ஒரு வருட கால தவணையாக அதுவும் இந்தியர்கள் மட்டுமே ஏலச்சீட்டு நடத்துகிறார்கள்.இவையும்,தாய்லாந்து லாட்டரி போன்றவை அரசு சட்டப்படி குற்றம் என்பதால் யாரும் போய் காவல்துறையிடம் முறையீடு செய்ய இயலாது.

உள்ளூர்வாசிகள் சில சமயம் செக் கொடுத்து விட்டு பவுன்ஸ் ஆகி விட்டால் பணத்தை திருப்பி தரவோ அல்லது சிறையில் குப்பூஸ் சாப்பிட வேண்டிய கட்டாயம் உள்ளதால் இது போன்ற நிகழ்வுகள் எண்ணிக்கையில் குறைவு.எனவே பணம் விசயத்தில் வளைகுடா செயல்படும் விதம் பாராட்டுக்குரியது.

எகிப்திய முபாரக்கும் எல்பராடியின் அரசியல் கருத்துக்களும்

மத்திய கிழக்கின் நாகரீக தொட்டிலாகவும்,புராதன பிரமிடுகளின் வரலாற்றையும் தன்னகத்தே அடக்கிக் கொண்ட எகிப்து முந்தைய ஜனாதிபதிகளான நாசருக்குப் பின்னும்,சதாத்தின் இஸ்ரேல் ஒப்பந்தத்திற்கு பின்னும் 1981ம் ஆண்டு முதல் இன்றைய 2010 வரையிலுமான இரும்பு பிடிக்குள் சிக்கி ஜனநாயக மூச்சையே இழந்து போனது.ஹோஸ்னி முபாரக் ஆட்சிக்கு வந்த துவக்கம் முதல் அரசியல் கட்சிகள் அமைப்பதோ,5 பேர் கூடி பேசுவதோ தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

எகிப்தியர்கள் ஒரு புறம் ஓரளவுக்கு படித்தவர்களின் விகிதாச்சாரம்,அரைகுறை ஆங்கிலம் தெரிந்தவர்கள் குறைவாகவும்,படிப்பறிவில்லாதவர்களின் விகிதாச்சாரம் அதிகமாகவும் இருப்பது மாதிரியான தோற்றமே வளைகுடாக்களில் பணிபுரிபவர்களுடன் ஒப்பிடும் போது தெரிகிறது.இதற்கான காரணங்களாக மூச்சிழந்த ஜனநாயகம் காரணமாக இருக்கலாம்.நிலையான அரசு என்பதும் முன்னேற்றம் என்பதும் ஒரு பத்தாண்டு காலத்துக்குள் நிகழ்த்தி முடிக்கப்பட வேண்டியவை.அதற்கும் மிஞ்சிய காலத்தில் ஒரே அமைப்பின் ஆட்சி நிலைப்பது, ஊழல்கள் பெருகுவதற்கும்,ஏதோ ஒரு வடிவில் சர்வாதிகாரம் வேர் ஊன்றுவதற்கும் வழி வகுக்கும்.

முந்தைய அணு ஆயுத தடுப்பு நிறுவனத்தின் தலைவரும்,நோபல் பரிசு பெற்றவருமான எல்பராடி,இவ்வளவு காலம் உழைத்தோம்,இனி நாற்காலிய போட்டு பத்திரிகை படித்தோம்,பேஸ்புக்கில் கதையடித்தோமென்றில்லாமல் எகிப்தில் மாற்றங்கள் வேண்டும் என்று டிவிட்டரில் எகிப்தியர்களுக்கு இலை மறை காயாக அறிக்கையளிக்க வார இறுதியில் மீன் பிடித்துக் கொண்டோ,கால்பந்தாடிக் கொண்டோ,காயலாங்கடை சுத்திக் கொண்டோ இருந்த குவைத்தில் வசித்த சில எகிப்தியர்கள் எல்பராடிக்கு ஆதரவாக வாங்கய்யா இந்த வெள்ளிக்கிழமை இத்தனை மணிக்கு ஒன்றாக கூடி "சங்கம்" அமைப்போமென்கிற மாதிரி இணையத்தில ஒரு அறிக்கை விட வெள்ளிக்கிழமை கூடிய கூட்டத்தில் 17 முதல் 20 பேர் வரையிலான எகிப்தியர்களை குவைத் உள்துறை கைது செய்து அடுத்த நாளே பொட்டிய கட்டி எகிப்துக்கு அனுப்பி விட்டது.

குவைத் உள்துறை அமைச்சகம் சொல்வதென்னவென்றால் நீ காசு சம்பாதிச்சு புள்ள குட்டிகளை மட்டும் கவனிக்கற வேலையைப் பாரு எங்க ஊர்ல இருந்து அரசியல் கூட்டங்கள்,சங்கம்,அமைப்புகள் நிகழ்த்தக் கூடாது என்கிறது.எகிப்தில் இருக்கும் முபாரக்குக்கு எதிரா முணுமுணுக்கும், ஒளிந்து கொண்டிருக்கும் அமைப்புகள்,ஏனய்யா எங்க ஊர்ப்பிரச்சினைக்குத்தானே நாட்டாமை தேடுகிறோம் உங்க ஊர் அரசியலில் நாங்க தலையிட்டோமா என்று எகிப்தில் குரல் எழுப்புகிறது.

முப்பது வருடம் எகிப்தை தனது இரும்பு பிடிக்குள் வைத்துள்ள ஹோஸ்னி முபாரக் தனது 81வருட முதுமையில் தனது மகனை நம்மூர் ஸ்டைலில்:) அரியணை ஏற்றி விடவேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார்.எல்பராடி மூலம் எகிப்தில் மாற்றங்கள் வருமா அல்லது ஹோஸ்னி முபாரக்கின் வாரிசு அரசியல் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பழைய உலக நிகழ்வுகளை மறக்க நினைத்தாலும் சில நிகழ்கால நிகழ்வுகள் பழையவற்றை மீண்டும் தோண்ட வைக்கின்றன.பதவிக்காலத்தின் 4 அல்லது 8 வருட காலங்களில் ஒரு தேசத்தையே சீர்குலைத்து விட்டு காலணி வீச்சிலும் தப்பித்து விட்டு மத்திய கிழக்கு நாடுகளில் இதோ ஜனநாயகம் தழைக்கிறது,நான் ஓய்வெடுக்க செல்கிறேன் என்று காணாமல் போய் விட்டார் ஜார்ஜ் புஷ்.அமெரிக்காவின் கெட்ட பெயரை மீள கட்டியமைப்பதே தனது புதியமாற்ற வெளியுறவு கொள்கை என்று ஒபாமாவும் முட்டை மேஜையில் தின நிகழ்ச்சி நிரல்களில் மூழ்கியுள்ளார்.

உண்மையில் மத்திய கிழக்கு நாடுகளில் மக்களாட்சி அமைவதென்பது F16களாலோ,அமெரிக்க ஆக்கிரமிப்புகளாலோ நிகழாது.சிறிய குரலாக ஒலிக்க முயன்ற,நாடு கடத்தப்பட்ட முகம் தெரியாத எகிப்தியர்கள் போன்றவர்களால் மட்டுமே மக்களாட்சி மலருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. ஆனால் இதற்கெல்லாம் குரல் கொடுக்க அமெரிக்க பெரியண்ணன் வரமாட்டாரே!


கணவனும் மனைவியும் பக்கத்து பக்கத்து அலுவலகங்களில் வேலை செய்தால் ஒரு போன் போட்டு இன்னைக்கு "Honey!Shall we eat steak medium done with sauted baby carrots and potato with redwine at Le Bernardin?"ன்னு கேட்கறத விட்டுட்டு unix ல செய்தி அனுப்பனா போகுமா DOS ல Hi சொல்லிப் பார்க்கறதுன்னு சின்ன சின்ன செய்திகளா அனுப்பி நேற்றைக்கு ஒரு மாற்றம்,இன்றைக்கு ஒரு மாற்றம்ன்னு தொழில் நுட்பம் வளர்ந்து இப்ப இருக்குற நிலைமையில் இணையத்தால சிலருக்கு எவ்வளவு சிரமங்கள்.மனித பரிணாமத்தை ,மக்கள் சிந்தனையை எல்லோரும் வரவேற்பதில்லை,ஏனென்றால் அவை சில அடிப்படை சுய நம்பிக்கைகளை தகர்ப்பதுடன் நீண்ட சுய கட்டமைப்புகளாய் உருவாக்கியவைகளுக்கு சவாலாகவும் அமைகிறது.

Wednesday, April 7, 2010

பதிவர்கள் அரபி கத்துகிட்டாங்க:)

இப்ப அரபிக் வகுப்பில சில பேர் சேர்ந்து புத்தகமெல்லாம் வாங்கிட்டாங்க.இந்த புத்தகம் கொடுக்க காரணம் முன்னாடி ஹிந்து கத்துக்கொடுக்கிறேன்னு பதிவர் ஆடுமாடு இடுகையா போட்டார்.நன்றாகவே வகுப்புகள் போய்க் கொண்டிருந்தது.நானும் மலையாளம் கற்றுக்கொடுங்கள் என்று கலாய்த்து மலையாளமும், ஹிந்தியும் கரையேறவில்லை.சரி இப்ப புத்தகம் வாங்கின மாணவர்களில் நம்ம பதிவர்கள் அரபிக் பேசினா எப்படியிருக்கும்ன்னு ஒரு சின்ன கற்பனை:)

நசரேயன்:சலாம் மாலிக்கும்!ஸ்லோனக் பழம?

பழம: சலாம் மாலிக்கூம் ரகமத்துல்லா பரகாத்.ஸ்லோனக் என்த?
பக்கத்திலிருந்த வானம்பாடிகள் பாலா மனசுக்குள்ளே(இரண்டு பேரும் ஸ்லோனைப்பற்றி பேசிக்கிறாங்க போல இருக்குது)

நசரேயன்: சுனோ சவி இலீன்?
பழம: அன இக்துப் வாகித் அரபிக் கவிதா?
நசரேயன்:கலம் வாகித்!அன சுஃப்!

பழம:வாகித் யூம் பிலில் காளமேகப் புலவர் ஈஜி அன கனவு
உவா குல்,வலித் பழம எந்த அரஃப் செம்மொழி
அன கலம் அன ரோ இத்னீன் சார் பாதன் செம்மொழி கோவை
அன சுஃப் சுனோ குல் குல்லு நபர் இனி செம்மொழி
அன சுஃப் சுனோ கலைஞர் கலம் செம்மொழி
பாதன் காளமேகப்புலவர் குல் மினோ குல் பதிலி குல்லு தமிழ்?
அன குல் பாபா!அன மா அரஃப் அத குல்லு கருணாநிதி சரிக்கா பதிலி
ஹுவா(காளமேகப் புலவர்) வாஜித் ஜலான் பாதென் அன நூம் கராப்.

நசரேயன்:வொல்லா!எந்த வாஜித் அரஃப் அரபி.அன கனவு குல்லு குர்மா ஈஜி சைத்தான்

அது சரி:எந்த மும்கின் வாகித் பெக் தாகில் அனி வாகித் கொய்ஸ் குர்மா ஈஜி.

நசரேயன்: லா சதிக்!அன பி பெர்க்கின்சன் பீர்.அத காபி.

வானம்பாடிகள் பாலா:(இதென்னய்யா புதுசா பீரோட காபி!அமெரிக்கா இல்ல,கலந்து குடிச்சாலும் குடிப்பாங்க.எப்படியாவது இந்த பாசைய கத்துக்கனும்)

நசரேயன்:ஓகே குல்லு சதிக்.அன பி வாகித் பதிவு.அன சுஃப் புக்ரா.

அதுசரி: மா சலாம்.

பழம:அதுசரி!வெயின் ரோ எந்தா?மும்கின் வாகித் லிப்ட் லண்டன் ஏர்போர்ட்?
அது சரி: மூ முஸ்கில்!வானம்பாடி தால் என்த,நஃப்ஸ் தரிக் மத்தார் மதராஸ்

வானம்பாடி மறுபடியும் மனதுக்குள்,இருங்கய்யா!எனக்கு அரபி தெரியாதுன்னுதானே இந்த தாளிப்பு தாளிக்கிறீங்க?நீங்க பேசுனதெல்லாம் உங்களுக்கு தெரியாம டேப் செஞ்சிருக்கேன்.நடராஜன் குவைத்துலதான் ஊரச்சுத்திகிட்டு இருக்காரு.கொடுத்து விளக்கம் கேட்டுட மாட்டேன்.

ஒலிப்பதிவு நடராஜனிடம் வந்தவுடன் நடராஜன் வானம்பாடிக்கு சொன்னது

நடராஜன்:அது ஒண்ணுமில்லீங்ண்ணா,நானூம் அரைகுறைதான்,தெரிஞ்சத சொல்றேன்,அச்சுப்பிசகாம உங்களுக்கு தெரியணுமுன்னா துபாய்ல குசும்பன்கிட்ட கேட்டீங்க்கன்னா பேசுனதை இலக்கண சுத்தமா பிரிண்ட் அடிச்சே கொடுத்துருவாரு:)

பேசுனது இதுதானுங்ண்ணா:

நசரேயன்:சலாம் மாலிக்கும்!ஸ்லோனக் பழம?(வணக்கம்!எப்படியிருக்கீங்க பழம?)

பழம: சலாம் மாலிக்கூம் ரகமத்துல்லா பரகாத்.ஸ்லோனக் என்த? (வணக்கம்!நீங்க எப்படியிருக்கீங்க?)
பக்கத்திலிருந்த வானம்பாடிகள் பாலா மனசுக்குள்ளே(இரண்டு பேரும் ஸ்லோனைப்பற்றி பேசிக்கிறாங்க போல இருக்குது)

நசரேயன்: சுனோ சவி இலீன்? (இப்ப நீங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க?)
பழம: அன இக்துப் வாகித் அரபிக் கவிதா? (நான் இப்ப அரபி கவிதை எழுதிகிட்டு இருக்கிறேன்)

நசரேயன்:கலம் வாகித்!அன சுஃப்! (ஒண்ணூ சொல்லுங்க பார்க்கலாம்!நான் பார்க்கிறேன்)

பழம:வாகித் யூம் பிலில் காளமேகப் புலவர் ஈஜி அன கனவு ( ஒரு நாள் காளமேகப் புலவர் என் கனவில் வந்தார்)
உவா குல்,வலித் பழம எந்த அரஃப் செம்மொழி (அவர் சொன்னார்,பழம பையா உனக்கு செம்மொழி தெரியுமா?)
அன கலம் அன ரோ இத்னீன் சார் பாதன் செம்மொழி கோவை (நான் சொன்னேன் இரண்டு மாதம் கழித்து செம்மொழிக்கு கோவை போகிறேன்)
அன சுஃப் சுனோ குல் குல்லு நபர் இனி செம்மொழி ( எல்லோரும் என்ன சொல்கிறார்கள் இங்கே என்று கேட்கப் போகிறேன்)
அன சுஃப் சுனோ கலைஞர் கலம் செம்மொழி (கலைஞர் செம்மொழி பற்றி என்ன சொல்கிறார் என பார்க்கிறேன்)
பாதன் காளமேகப்புலவர் குல் மினோ குல் பதிலி குல்லு தமிழ்? (அப்புறம் காளமேகப் புலவர் கேட்டார் யார் தமிழை எல்லாம் மாற்றச் சொன்னது?)
அன குல் பாபா!அன மா அரஃப் அத குல்லு கருணாநிதி சரிக்கா பதிலி (ஐயா!எனக்கு ஒன்றும் தெரியாது,எல்லாம் கருணாநிதி நிறுவனத்தோட வேலை)
ஹுவா(காளமேகப் புலவர்) வாஜித் ஜலான் பாதென் அன நூம் கராப். (அவருக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது அப்புறம் எனது தூக்கம் கலைந்து விட்டது)

நசரேயன்:வொல்லா!எந்த வாஜித் அரஃப் அரபி.அன கனவு குல்லு குர்மா ஈஜி சைத்தான் (அப்படியா?உங்க கனவுல நிறைய அரபி கவிதை வருகிறதே,எனக்கு பேய்க பொண்ணுகளா வர்றாங்க)

அது சரி:எந்த மும்கின் வாகித் பெக் தாகில் அனி வாகித் கொய்ஸ் குர்மா ஈஜி.(நீங்க ஒரு பெக் அடிச்சீங்கன்னா இன்னும் அழகான பொண்ணுகளா வருவாங்க)

நசரேயன்: லா சதிக்!அன பி பெர்க்கின்சன் பீர்.அத காபி.(இல்ல தல!என்கிட்ட பெர்க்கின்ங்கிற பீர் இருக்குது.அது போதும்)

வானம்பாடிகள் பாலா:(இதென்னய்யா புதுசா பீரோட காபி!அமெரிக்கா இல்ல,கலந்து குடிச்சாலும் குடிப்பாங்க.எப்படியாவது இந்த பாசைய கத்துக்கனும்)

நசரேயன்:ஓகே குல்லு சதிக்.அன பி வாகித் பதிவு.அன சுஃப் புக்ரா.(சரி நண்பர்களே!எனக்கு ஒரு பதிவு இருக்குது,நாளை பார்க்கிறேன்)

அதுசரி: மா சலாம். (வணக்கம்.போயிட்டு வாங்க)

பழம:அதுசரி!வெயின் ரோ எந்தா?மும்கின் வாகித் லிப்ட் லண்டன் ஏர்போர்ட்?(அதுசரி!நீங்க எங்க போறீங்க? லண்டன் ஏர்போர்ட்டுக்கு ஒரு லிப்ட் கொடுக்க முடியுமா)
அது சரி: மூ முஸ்கில்!வானம்பாடி தால் என்த,நஃப்ஸ் தரிக் மத்தார் மதராஸ் (ஒண்ணும் பிரச்சினையில்ல!வானம்பாடி நீங்களும் வாங்க அதே வழிதான் சென்னை விமான நிலையத்துக்கும்)

Tuesday, April 6, 2010

காசா,பணமா, அரபிக் கற்றுக்கொள்ளுங்கள்

ஜார்ஜ் புஷ் இப்ப என்ன செய்துகிட்டு இருக்கிறார்?பதவியில் இருக்கும் போது ஆங்கிலத்துடன் வேறு ஒரு மாற்று மொழியைக் கற்றுக்கொள்ள சிபாரிசு செய்தார்.அவரது அரசியல் காலத்தில் அமெரிக்கர்களுக்கு சொன்ன உபயோகமான விசயம் இது.பதிவுலகில் இருக்கும் காலத்தில் நாமும் ஏதாவது பதிவர்களுக்கும்,பதிவுகள் பக்கம் எட்டிப் பார்ப்பவர்களுக்கும்,அரேபிய மொழி கற்க ஆவல் உள்ளவர்களுக்கும்,துபாய் குறுக்கு சந்துல இருந்துகிட்டும் அரேபிய மொழி தெரியாதவர்களுக்கும் இதனை செய்யலாமே என்ற எண்ணத்தில் கூட பணிபுரிபவரின் கணினியிலிருந்து சுட்ட:) PDF நகலை பகிர்ந்து கொள்ளலாமே என நினைக்கிறேன்.இந்தி திணிப்புங்கிறதால விட்டு விட்டோம்.இங்கே திணிப்புன்னு ஒன்னும் கிடையாது.விருப்பமுன்னா மட்டுமே பாடம்.

அதற்கு தபால் பெட்டி எண்,வங்கி கணக்கெல்லாம் கொடுத்து காசு அனுப்புங்கன்னு சொன்னா யோவ்!அதுக்கெல்லாம் வேறு ஆளு இருக்குதய்யா,போய் உருப்படியா ஏதாவது வேலையப் பாருன்னு நீங்க சொல்வீங்கன்னு எனக்கு தெரியும்.அதனால ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம் மாதிரி ஒரு பின்னூட்டத்திலோ அல்லது என்னோட தனிமெயிலுக்கோ வந்தீங்கன்னா PDF அனுப்பி வைக்கப்படும்.தனித்தனியா வந்து பின்னூட்டம்,தனிமெயில் அனுப்பாட்டியும் ஒருத்தர் வந்து வரிசையில நின்னுட்டு மற்ற நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்க.PDF வேண்டாதவங்க பின்னூட்டம்,தனிமெயில் அனுப்பாம வழக்கம் போல பதிவ படிச்சிட்டு அப்படியே அப்பீட் ஆகிக்குங்க.நன்றி.

Sunday, April 4, 2010

ஈரோடு கதிரின் புலம்பலும்,ஒரு நில ஏய்ப்பு அனுபவமும்

நன்செய் விளைநிலங்கள் எல்லாம் எப்படி பிளாட்டுகளாக விற்கப்படுகின்றன என்ற ஈரோடு கதிரின் பதிவு படித்ததும் மனம் துணுக்குற்றது.பதிவுக்கான சுட்டி இங்கே.அந்தியூர் போன்ற இடங்களில் விளைநிலங்கள் கூட விற்கப்படுவதென்பதற்கும் பின்புலங்கள் என்ன?தண்ணீர் பற்றாக்குறையா?90களில் வீரப்பனின் நடமாட்ட எல்லைக்கான பூமியா?மக்களின் நகர்நோக்கிய பயணமா?முன்பு போல் விவசாயம் பார்க்க ஆட்கள் கிட்டாத விவசாயிகளின் போராட்டங்களா?அல்லது இவைகளுக்கும் மேலாக பணம் சேர்க்கவேண்டும் என்ற சிலரின் பேராசையா?இப்படி தெரிந்த காரணிகளை தெரிந்தவர்கள் பின்னுட்டத்தில் தெரிவியுங்கள்.

ஆனால் மொத்த நிலங்களையும் ஒருவர் வாங்குகிறாரென்றால் அங்கே தவறுகளுக்கான அடிப்படைகள் உருவாகின்றது.(உயர்நீதி மன்ற நீதிபதி தினகரன் விவகாரங்களும் கூட அதனையே நிரூபிக்கின்றது.)அரசு நிறுவனங்கள் சரியாக செயல்படாத நிலையில் தனியார் நிறுவனங்களில் உற்பத்தி திறனும்,வளர்ச்சியும் அதிகம்.அந்த வளர்ச்சியின் சுழற்சியில் உள்நுழைந்து விட்ட பின் இருப்பதை தக்கவைக்க வேண்டியும்,இனியும் நிறுவன கட்டமைப்புக்களாகவும் குறுக்கு வழிகளும்,சில சமயம் குடும்ப சிக்கல்களும் எதிர்பார்த்த பலனை அளிக்காமல் துயரத்தின் வலைக்குள் சிக்க வைத்து விடுகிறது.அப்படியொரு நண்பர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூட இருந்து பார்த்த நிலம் சார்ந்த ஞாபகம் இது.

உள்ளூருக்குள்ளேயே நிலைத்து நிற்பதில் எவ்வளவு சிரமங்கள் உள்ளதோ அந்தளவுக்கு வெளிநாட்டு முதலீடு தேடுவதில் இல்லையோ என்று நினைக்கும் படி வீட்டு நிலம்,வீடுகட்டுதல் போன்ற நிறுவனங்கள் HDFC உதவியுண்டு என்ற விளம்பரங்களுடன் அடிக்கடி வளைகுடா வருகை.

நவீன CEO க்களின் நடை,உடை,பாவனைகளில் விமானம் ஏறும் வசதியும் ஷெராட்டன் போன்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கும் வசதியும்,பத்திரிகை விளம்பரங்களும்,இலவச VCR டேப்களுடனும்,200-300 பேருக்கான விருந்துக்கான செமினாரும்,பேச்சுத் திறனும்,அல்லக்கையாக இரண்டு பேரும் வைத்துக்கொண்டால் நீங்கள் இடும் திட்டத்தில் முக்கால் வெற்றியடைந்த மாதிரி.மீதி கால் பங்கு முன்பணம் கட்டியதும் மீதிப்பணத்தை வசூல் செய்வதில் சிரமம் இருக்கப் போவதில்லை.அப்படித்தான் VHF Selve என்ற திட்டத்துடனும் அதிக போனஸாக ராஜிவ் காந்தி உயிரோடு இருந்த காலத்தில் அவரது கையால் அவார்டு வாங்கினவர் என்ற முத்திரையுடனும் ஜெகநாதன் என்பவர் வளைகுடா நாடுகள் முழுவதுக்கும் வருகை தந்தார்.

மேற்சொன்ன ஷெராட்டன் ஸ்டைல் செமினாருடன் அவருடைய திட்டம் இதுதான்.5 தேக்கு மரம்,3 மாமரம்,2 கொய்யா மரம் போன்றவற்றுடன் தோட்ட வளாகத்திலேயே ஒரு வீடு கட்டிக்கொள்வதற்கான நிலமும் அரசு அங்கீகாரத்துடன் வழங்கப்படும்.இதற்கான பணத்தை முழுவதுமாகவோ,இயலாவிட்டால் ஒரு வருட கால தவணையில் கட்டி முடிக்க வேண்டும் என்ற உடன்படிக்கையோடு கேட்கவே நன்றாக இருக்கிறதே என்று வளைகுடா மக்களை கவர்ந்தார்.அந்த கால கட்டங்களில் பெங்களூர்,தமிழகம் போன்றவை இணைய தொழில் நுட்பத்துறையில் கலக்கும் நேரம் வேறு.இயற்கையாகவே பெங்களூரில் வீடு இருந்தால் நன்றாக இருக்குமே என்றும் இருக்கிற காசுக்கு தமிழ்நாட்டிலும்தான் ஒரு இடத்தை பிடிச்சு வைப்போமே என்ற கோவாவின் பீட்டர் போன்றவர்களும் VHFல் முதலீடு செய்தார்கள்.என்னோட நண்பர்களாய் விஜயராகவனும்,ஆந்திராவைச் சேர்ந்த சுந்தரராஜன் போன்றவர்களும் இதில் பங்குதாரர்கள்.என்னையும் இதில் இணைக்கப் பார்த்தார்கள்.எனக்கும் நண்பர்கள் சொல்வதற்காக வேண்டி இணையலாம் என்ற எண்ணமிருந்தாலும் வீட்டு உடன்படிக்கையின் ஒரு வரிசை மூளைக்கு தந்தி அடிக்கிறது.

அதாவது இந்த வீட்டுப்பத்திர உடன்படிக்கையின் படி தேக்கு வளரும் காலம் 20-25 வருடங்கள்.20 வருடத்திற்கும் நிலத்தை பாதுகாப்பது ஜெகநாதனின் கடமை.இத்தனை வருட கால இடைவெளிக்குள் காய்க்கும் காய்கறி,மா,கொய்யா(மரம் வளர்க்கும் திட்ட லக்கிலுக்கோ, நணபர்களோ கவனிக்க) போன்றவைகளை விற்று வரும் பணம் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.20-25 வருட காலத்திற்கு ஜெகநாதனே அதிகார பூர்வ நில உரிமையாளர்.இத்தனை வருட காலத்துக்கும் நிலபத்திரம் கிடைக்காது என்ற உடன்படிக்கை ஓட்டை காரணமாக நான் ஷெராட்டனின் புஃபே நன்றாக முழுங்கி விட்டு வந்து விட்டேன்:)

அதற்கு பின் VHF திட்டத்தில் பணம் செலுத்தியவர்கள் பெரும்பாலோருக்கு செலுத்திய பணம் வீணாகப் போனது.மொத்தமாக பணம் கட்டியவர்கள் சிலபேர் சுதாரித்துக் கொண்டு நில உரிமையை உரிமை கொண்டாடுகிறார்கள் என்பதையும்,ஜெகநாதன் இறந்து விட்டார் என்பதையும்,அவர் மகன் ஜெகநாதனின் வியாபாரத்தை தொடர்வதாகவும்,அவரும் காணாமல் போனவர்கள் வரிசையில் என்பது இணையம் தேடலில் தெரியவந்தது.அதற்கான நுகர்வோர்குறைகள் வலைத்தளமும் இங்கே காண நேர்ந்தது.சீட்டு பணம்,கந்துவட்டி,நில வியாபாரம்,ஆன்மீக ஏமாற்றுதல்கள்.எப்படி நம்ம மண்ணுல மட்டும் இவைகள்?

வீடு கட்ட எவ்வளவு பொட்டல் நிலங்கள் இருக்கின்றன.விளையுற பூமில வீடு கட்டுறது நியாயமா?எனவே ஈரோடு கதிரின் இடுகையும்,விளைநிலங்கள் அழிவதோடு அதற்கான பின்புலங்களாய் பணமோசடிகளும் கூட நிகழும் வாய்ப்புகள் இருக்கலாம்.இந்தியாவின் மண்ணும்,வாழ்க்கையும் விவசாயம் சார்ந்த ஒன்று.இதனை மேம்படுத்த சாலை வசதிகள்,(நல்ல சாலைகள் போட்டாலே பாதி மக்கள் படிச்சு முன்னேறிடுவாங்க)கிராமத்து கட்டமைப்பு வசதிகள் இவைகளுக்கும் மேலாக மக்கள் கிராமங்களில் வாழ்வதற்கு சாதகமாய் இரட்டை கிளாஸ் இல்லாத சமவாழ்க்கை நிலை போன்றவைகள் அவசியம்.இதெல்லாம் நடக்குற காரியமாய்யான்னு சங்க மனப்பான்மையோடு நினைத்தால் இந்த இடுகையப் படிக்கிறவங்க ஆளுக்கு ஒரு பெட்ரோல் டேங்கர இங்கே அனுப்பவும்.பெட்ரோல் விற்று பொழப்பு நடத்திக்கலாம்.

Saturday, April 3, 2010

பிரிட்டிஷ் கால தொழுகையும்,பதிவர் குழுவும்

வார இறுதியில் கடற்கரை போகலாம் என புறப்பட்ட வேலையில் நண்பர் ஜேம்ஸ் நல்ல வெள்ளிக்கிழமைக்காக தேவாலயம் போக வேண்டும் கூட்டிச் சென்று திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டியதால் ஒரு மணி நேரம் நடை போட்டு விட்டு நண்பர் வந்து விடுவார் என்று காத்துக் கொண்டிருந்தேன்.அவர் திரும்ப வராத 15 நிமிடங்களுக்குப் பின் தேவாலயத்திற்குள் ஒரு பார்வையிடலாமே என்று உள்ளே போனேன்.உள்ளே போனால் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.

சுவரின் ஒரே வளாகத்துக்குள் பல விசாலமான அறைகள்,பூங்காடுகள் கொண்ட மைதானம் போன்ற இடங்களில் தனித்தனியாக ஒவ்வொரு மொழிக்கும் தகுந்த வாறு சிலர் பிரார்த்தனை செய்து கொண்டும்,சிலர் சங்கம் கலையும் முன் வடை,டீ சாப்பிடுவது மாதிரி கேக்,சாண்ட்விச்,பெப்சி பானங்களுடன் காணப்பட்டார்கள்.இந்த கூட்டுப் பிரார்த்தனைகளுக்கு வந்தவர்கள் தனித்தனி குழுக்களாக மலையாளம்,தெலுங்கு,தமிழ்,அரேபிய,ஆப்பிரிக்க,ஆங்கில மொழிகளை சார்ந்தவர்கள் என்பது பேச்சு சத்தங்களாலும்,முக உருவங்களிலும் தெரிந்தது.

உருவ வழிபாடுகளில் நம்பிக்கை கொண்ட கத்தோலிக்க திருச்சபையும்,உருவ வழிபாடுகளில் நம்பிக்கையற்ற புரொட்டஸ்டண்ட்,இசைவடிவங்களால் இறைவனை தேடும் பெந்தகொஸ்தே போன்ற பிரிவுகள் இருந்தாலும்,பல நாட்டு கலாச்சார, மொழிகள் கொண்ட இவர்கள் அனைவரும் கிறுஸ்துவர்கள் என்ற ஒரே குடையின் கீழ் இணைகிறார்கள்.

19ம் நூற்றாண்டின் காலனி ஆதிக்கத்தில் பிரிட்டிஷ்காரர்கள்,ஏனைய மேற்கத்தியர்கள் தங்கள் தொழுகைக்கான இடமாக தேர்ந்தெடுத்த இடங்கள்,கட்டிட மாறுபாடுகளுக்கிடையிலும் இன்றும் நிலைத்திருக்கின்றன.இரு ஆலய இடத்தையும் சுற்றி நகரை மேம்படுத்தும் நோக்கில் அகண்ட, நீண்ட ரோடுகளுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.இந்த இரு ஆலயங்களும் மாற்று இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று அரசாங்க தீர்மானங்கள் ஏனோ ஒத்தி வைக்கப்பட்டு நீண்ட ரோடுகளுக்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது.காலனி ஆதிக்கக்காரர்கள் நாட்டை விட்டு செல்லும் முன் கத்தோலிக்க ஆலயத்தை ரோம் போப்பின் டயாசிஸில் இணைத்த காரணம் கொண்டோ பின் ஏனைய நாட்டவர்களின் கிறுஸ்தவ நம்பிக்கைகளுக்கு குவைத் அரசாங்கம் மதிப்பு கொடுத்தோ இந்த இரு வழிபாட்டு இடங்களும் இன்றும் நின்று கொண்டிருக்கின்றன.இந்த இடத்தை வழிபாட்டு நிலமாக உருவாக்கியவர்கள் மேற்கத்திய நாட்டவர்களாக இருந்தாலும் இதன் வழிபாட்டு பலனை அனுபவிப்பவர்கள் பெரும்பான்மையாக ஆசிய நாட்டைச் சார்ந்தவர்களே. தலைப்பில் சொல்ல வந்தது விதை விதைத்தவர்கள் சில பேர்.அதனை அறுவடை செய்து பலன் அடைபவர்கள் ஏனையோர்.

சென்ற வார சென்னை பதிவர்கள் சங்கம் அமைக்கும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்த பதிவர்களின் கருத்துக்களும்,எதிர் வினைகளும்,கும்மிகளும் எதிர்காலத்துக்கான விதை விதைக்கிறோம் என்ற தூரப் பார்வையில்லாமல் இப்பொழுதே விதைத்து சில மாதங்களில் அறுவடை செய்யும் பார்வையும்,கூடவே சிலருக்கு அதன் பலன்கள் போய் சேர்ந்து விடுமோ என்ற ஐயங்களும்,கட்சிகள் சார்ந்த அமைப்பாக ஆகி விடுமோ என்ற அச்சமும் கும்மிகள் அடித்து ஒரு விவாதக்களத்தை நீர்த்துப் போவ செய்வதும் பதிவுகளில் தெரிகிற்து.கூடவே பதிவர் குழுவுக்கான அக்கறையும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

சில நேரங்களில் இணைய தளங்களில் சலசலப்புகள் ஏற்பட்டாலும்,தொலைக்காட்சிகள் ஆற்ற இயலாத விவாதங்களை இடுகைகளின் கருத்துகளும்,பின்னூட்டங்களும் மாற்று ஊடகமாக இணைய எழுத்துகள் செயல்படுகின்றன.எனவே முதல் கூட்டம் பிசுபிசுத்து விட்டதென்று சோர்ந்து போகாமல் சென்னை பதிவர்கள் மொத்த தமிழ் பதிவர்களின் சார்பாக தமிழ் பதிவர்கள் சங்கம் என செயல்படாமல் சென்னையின் சுற்றுப் புறத்தில் உள்ளவர்களை துவக்கமாக கொண்டு செயல்படலாம்.இயலுமென்றால் தற்போது குழுவாக இயங்கும் மதுரை,திருச்சி,நெல்லை,கோவை,ஈரோடு மற்றும் ஏனைய குழுக்களுடன் இணையும் பாலமாக அமையலாம்.

துபாய்,சிங்கப்பூர்,அமெரிக்க பதிவர்கள் அவ்வப்போது ஒன்று கூடுகிறார்கள்.இலண்டன்,ஆஸ்திரேலியா,கனடா போன்ற இடங்களிலும்,இலங்கையிலும் பதிவர்கள் இணைகிறார்கள்.இவர்களையெல்லாம் மொத்த குழுவாக தமிழ்மணம் போன்ற இணைப்புக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளலாம்.தனித் தனியாக தீவுகளாய் இருப்பதை விட மொத்த கருத்துக்களின் தளமாக ஒருமுகப் படுத்துவது அவசியம்.பிரச்சினைகளாக தனி மனித விமர்சனங்கள்,கோபங்கள்,சட்டம்,பொருளாதாரம்,தற்போதுள்ள சூழலிலும்,எதிர்காலத்திலும் தமிழக அரசோ, மத்திய அரசோ,இலங்கை அரசோ குழுவாக செயல்படுவதற்கு முட்டுக்கட்டை போட முன் வரலாம்.இவைகள் தன்னம்பிக்கையை குலைக்கும் எதிர்விளைவுகள்.சரியான வழிகாட்டுதலும்,சட்டபூர்வமான ஆலோசனைக்குழுக்களும்,தலைமை அமைப்புகளும் அமையும் பட்சத்தில் எதிர்விளைவுகளை எதிர்கொள்வது கடினமானதாக இருக்காது.ஆனாலும் அடுத்த கால் நூற்றாண்டில்,அரை நூற்றாண்டில் இணையம் ஒரு வலிமை மிக்க ஏனைய இசங்களை பின் தள்ளக்கூடும் சாத்தியம் இருக்கிறது.அதற்கான விதையாக மட்டும் இப்போதைய பதிவர்கள் நன்மை,தீமைகளை அலசுவதும்,விவாதிக்க மட்டுமாவது செய்வது அவசியம்.

நண்பரை மறந்து விட்டேனே!கருத்துகளிலும்,கொள்கைகளிலும் இருவரும் மாறுபட்டு இருந்தாலும் நட்பு இருவரையும் இணைக்கிறது.கண்டு பிடித்து விட்டேன் அத்தனை கூட்டத்துக்குள்ளும்.