Followers

Sunday, April 4, 2010

ஈரோடு கதிரின் புலம்பலும்,ஒரு நில ஏய்ப்பு அனுபவமும்

நன்செய் விளைநிலங்கள் எல்லாம் எப்படி பிளாட்டுகளாக விற்கப்படுகின்றன என்ற ஈரோடு கதிரின் பதிவு படித்ததும் மனம் துணுக்குற்றது.பதிவுக்கான சுட்டி இங்கே.அந்தியூர் போன்ற இடங்களில் விளைநிலங்கள் கூட விற்கப்படுவதென்பதற்கும் பின்புலங்கள் என்ன?தண்ணீர் பற்றாக்குறையா?90களில் வீரப்பனின் நடமாட்ட எல்லைக்கான பூமியா?மக்களின் நகர்நோக்கிய பயணமா?முன்பு போல் விவசாயம் பார்க்க ஆட்கள் கிட்டாத விவசாயிகளின் போராட்டங்களா?அல்லது இவைகளுக்கும் மேலாக பணம் சேர்க்கவேண்டும் என்ற சிலரின் பேராசையா?இப்படி தெரிந்த காரணிகளை தெரிந்தவர்கள் பின்னுட்டத்தில் தெரிவியுங்கள்.

ஆனால் மொத்த நிலங்களையும் ஒருவர் வாங்குகிறாரென்றால் அங்கே தவறுகளுக்கான அடிப்படைகள் உருவாகின்றது.(உயர்நீதி மன்ற நீதிபதி தினகரன் விவகாரங்களும் கூட அதனையே நிரூபிக்கின்றது.)அரசு நிறுவனங்கள் சரியாக செயல்படாத நிலையில் தனியார் நிறுவனங்களில் உற்பத்தி திறனும்,வளர்ச்சியும் அதிகம்.அந்த வளர்ச்சியின் சுழற்சியில் உள்நுழைந்து விட்ட பின் இருப்பதை தக்கவைக்க வேண்டியும்,இனியும் நிறுவன கட்டமைப்புக்களாகவும் குறுக்கு வழிகளும்,சில சமயம் குடும்ப சிக்கல்களும் எதிர்பார்த்த பலனை அளிக்காமல் துயரத்தின் வலைக்குள் சிக்க வைத்து விடுகிறது.அப்படியொரு நண்பர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூட இருந்து பார்த்த நிலம் சார்ந்த ஞாபகம் இது.

உள்ளூருக்குள்ளேயே நிலைத்து நிற்பதில் எவ்வளவு சிரமங்கள் உள்ளதோ அந்தளவுக்கு வெளிநாட்டு முதலீடு தேடுவதில் இல்லையோ என்று நினைக்கும் படி வீட்டு நிலம்,வீடுகட்டுதல் போன்ற நிறுவனங்கள் HDFC உதவியுண்டு என்ற விளம்பரங்களுடன் அடிக்கடி வளைகுடா வருகை.

நவீன CEO க்களின் நடை,உடை,பாவனைகளில் விமானம் ஏறும் வசதியும் ஷெராட்டன் போன்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கும் வசதியும்,பத்திரிகை விளம்பரங்களும்,இலவச VCR டேப்களுடனும்,200-300 பேருக்கான விருந்துக்கான செமினாரும்,பேச்சுத் திறனும்,அல்லக்கையாக இரண்டு பேரும் வைத்துக்கொண்டால் நீங்கள் இடும் திட்டத்தில் முக்கால் வெற்றியடைந்த மாதிரி.மீதி கால் பங்கு முன்பணம் கட்டியதும் மீதிப்பணத்தை வசூல் செய்வதில் சிரமம் இருக்கப் போவதில்லை.அப்படித்தான் VHF Selve என்ற திட்டத்துடனும் அதிக போனஸாக ராஜிவ் காந்தி உயிரோடு இருந்த காலத்தில் அவரது கையால் அவார்டு வாங்கினவர் என்ற முத்திரையுடனும் ஜெகநாதன் என்பவர் வளைகுடா நாடுகள் முழுவதுக்கும் வருகை தந்தார்.

மேற்சொன்ன ஷெராட்டன் ஸ்டைல் செமினாருடன் அவருடைய திட்டம் இதுதான்.5 தேக்கு மரம்,3 மாமரம்,2 கொய்யா மரம் போன்றவற்றுடன் தோட்ட வளாகத்திலேயே ஒரு வீடு கட்டிக்கொள்வதற்கான நிலமும் அரசு அங்கீகாரத்துடன் வழங்கப்படும்.இதற்கான பணத்தை முழுவதுமாகவோ,இயலாவிட்டால் ஒரு வருட கால தவணையில் கட்டி முடிக்க வேண்டும் என்ற உடன்படிக்கையோடு கேட்கவே நன்றாக இருக்கிறதே என்று வளைகுடா மக்களை கவர்ந்தார்.அந்த கால கட்டங்களில் பெங்களூர்,தமிழகம் போன்றவை இணைய தொழில் நுட்பத்துறையில் கலக்கும் நேரம் வேறு.இயற்கையாகவே பெங்களூரில் வீடு இருந்தால் நன்றாக இருக்குமே என்றும் இருக்கிற காசுக்கு தமிழ்நாட்டிலும்தான் ஒரு இடத்தை பிடிச்சு வைப்போமே என்ற கோவாவின் பீட்டர் போன்றவர்களும் VHFல் முதலீடு செய்தார்கள்.என்னோட நண்பர்களாய் விஜயராகவனும்,ஆந்திராவைச் சேர்ந்த சுந்தரராஜன் போன்றவர்களும் இதில் பங்குதாரர்கள்.என்னையும் இதில் இணைக்கப் பார்த்தார்கள்.எனக்கும் நண்பர்கள் சொல்வதற்காக வேண்டி இணையலாம் என்ற எண்ணமிருந்தாலும் வீட்டு உடன்படிக்கையின் ஒரு வரிசை மூளைக்கு தந்தி அடிக்கிறது.

அதாவது இந்த வீட்டுப்பத்திர உடன்படிக்கையின் படி தேக்கு வளரும் காலம் 20-25 வருடங்கள்.20 வருடத்திற்கும் நிலத்தை பாதுகாப்பது ஜெகநாதனின் கடமை.இத்தனை வருட கால இடைவெளிக்குள் காய்க்கும் காய்கறி,மா,கொய்யா(மரம் வளர்க்கும் திட்ட லக்கிலுக்கோ, நணபர்களோ கவனிக்க) போன்றவைகளை விற்று வரும் பணம் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.20-25 வருட காலத்திற்கு ஜெகநாதனே அதிகார பூர்வ நில உரிமையாளர்.இத்தனை வருட காலத்துக்கும் நிலபத்திரம் கிடைக்காது என்ற உடன்படிக்கை ஓட்டை காரணமாக நான் ஷெராட்டனின் புஃபே நன்றாக முழுங்கி விட்டு வந்து விட்டேன்:)

அதற்கு பின் VHF திட்டத்தில் பணம் செலுத்தியவர்கள் பெரும்பாலோருக்கு செலுத்திய பணம் வீணாகப் போனது.மொத்தமாக பணம் கட்டியவர்கள் சிலபேர் சுதாரித்துக் கொண்டு நில உரிமையை உரிமை கொண்டாடுகிறார்கள் என்பதையும்,ஜெகநாதன் இறந்து விட்டார் என்பதையும்,அவர் மகன் ஜெகநாதனின் வியாபாரத்தை தொடர்வதாகவும்,அவரும் காணாமல் போனவர்கள் வரிசையில் என்பது இணையம் தேடலில் தெரியவந்தது.அதற்கான நுகர்வோர்குறைகள் வலைத்தளமும் இங்கே காண நேர்ந்தது.சீட்டு பணம்,கந்துவட்டி,நில வியாபாரம்,ஆன்மீக ஏமாற்றுதல்கள்.எப்படி நம்ம மண்ணுல மட்டும் இவைகள்?

வீடு கட்ட எவ்வளவு பொட்டல் நிலங்கள் இருக்கின்றன.விளையுற பூமில வீடு கட்டுறது நியாயமா?எனவே ஈரோடு கதிரின் இடுகையும்,விளைநிலங்கள் அழிவதோடு அதற்கான பின்புலங்களாய் பணமோசடிகளும் கூட நிகழும் வாய்ப்புகள் இருக்கலாம்.இந்தியாவின் மண்ணும்,வாழ்க்கையும் விவசாயம் சார்ந்த ஒன்று.இதனை மேம்படுத்த சாலை வசதிகள்,(நல்ல சாலைகள் போட்டாலே பாதி மக்கள் படிச்சு முன்னேறிடுவாங்க)கிராமத்து கட்டமைப்பு வசதிகள் இவைகளுக்கும் மேலாக மக்கள் கிராமங்களில் வாழ்வதற்கு சாதகமாய் இரட்டை கிளாஸ் இல்லாத சமவாழ்க்கை நிலை போன்றவைகள் அவசியம்.இதெல்லாம் நடக்குற காரியமாய்யான்னு சங்க மனப்பான்மையோடு நினைத்தால் இந்த இடுகையப் படிக்கிறவங்க ஆளுக்கு ஒரு பெட்ரோல் டேங்கர இங்கே அனுப்பவும்.பெட்ரோல் விற்று பொழப்பு நடத்திக்கலாம்.

25 comments:

வானம்பாடிகள் said...

ஆக்க்க்கா. கடல் தாண்டி வந்துமா ஆட்டய போட்டாய்ங்க:)). அந்த டிக்கட்ட காண்பிச்சி இங்க எண்ணெய் கிணறு வித்தாலும் விப்பாய்ங்க. சென்னைல இப்போல்லாம் ரியல் எஸ்டேட் கடத்தல் கொலை வரைக்கும் முன்னேறிடுச்சே சார்:((

ஈரோடு கதிர் said...

முதலில்... இப்படிப்பட்ட இடுகைக்கு நன்றி..

கடைசி வரிகள் “நச்”
விரைவில் யாராவது இந்த திட்டத்தை தொடங்க வாய்ப்பிருக்கிறது...

ராஜ நடராஜன் said...

//ஆக்க்க்கா. கடல் தாண்டி வந்துமா ஆட்டய போட்டாய்ங்க:)). அந்த டிக்கட்ட காண்பிச்சி இங்க எண்ணெய் கிணறு வித்தாலும் விப்பாய்ங்க. சென்னைல இப்போல்லாம் ரியல் எஸ்டேட் கடத்தல் கொலை வரைக்கும் முன்னேறிடுச்சே சார்:((//

போன மாதம் கூட ஷெராட்டனில் ஒரு கூட்டம் நடந்தது.பெரும்பாலும் மும்பாய்க்கும்,கேரளாவுக்குமான வியாபாரிகள்.

நேற்றுத்தான் வெண்பூவின் பதிவில் கலவரங்களுக்கான அதிக காரணமாக சென்னை இருக்கிற மாதிரி ஒரு பின்னூட்டம் போட்டேன்.குண்டர் சட்டம்,குண்டர்களை போலிஸ் சுட்டது என்றும் சொல்லியும் கூட தமிழகம் அமைதிப் பூங்கா என்ற பெத்த பேரும் சொல்லிக்கிறோம்.என்னமோ போங்க குற்றங்களும் குறைகளும் மட்டுமே கில்லி விளையாடுது:(

ராஜ நடராஜன் said...

//முதலில்... இப்படிப்பட்ட இடுகைக்கு நன்றி..

கடைசி வரிகள் “நச்”
விரைவில் யாராவது இந்த திட்டத்தை தொடங்க வாய்ப்பிருக்கிறது...//

இந்த இடுகையே உங்கள் எழுத்தால் வந்த ஆதங்கம்.

துளசி கோபால் said...

இங்கெ வந்து, அங்கெ கதிர் வீட்டுக்குப் போயிட்டு மறுபடி இங்கே வந்துருக்கேன்.

முப்பத்திரெண்டு வருசத்துக்கு முந்தி சாலிகிராமத்துலே நிலம் வாங்கிக்கலாமுன்னு சொல்ல விஜிபி ப்ரதர்ஸ் பூனா வந்தாங்க.

அப்ப ஊருவிட்டு ஊருவந்து வித்தாங்க. இப்ப நாடுவிட்டு நாடு.

அப்ப ஏமாத்து இல்லை. இப்ப....ஏமாத்தறதைத்தவிர வேறெதுவும் இல்லை.

காடா இருந்த பூமி. ஒரு க்ரவுண்டு 18 ஆயிரம்.மாமா வாங்குனார். இப்போ அங்கே போக்குவரத்து நெரிசல்.

ராஜ நடராஜன் said...

//இங்கெ வந்து, அங்கெ கதிர் வீட்டுக்குப் போயிட்டு மறுபடி இங்கே வந்துருக்கேன்.//

டீச்சர்! இது என்னோட பதிவுகள் படிக்கும் ஸ்டைல்:)

ராஜ நடராஜன் said...

//முப்பத்திரெண்டு வருசத்துக்கு முந்தி சாலிகிராமத்துலே நிலம் வாங்கிக்கலாமுன்னு சொல்ல விஜிபி ப்ரதர்ஸ் பூனா வந்தாங்க.

அப்ப ஊருவிட்டு ஊருவந்து வித்தாங்க. இப்ப நாடுவிட்டு நாடு.

அப்ப ஏமாத்து இல்லை. இப்ப....ஏமாத்தறதைத்தவிர வேறெதுவும் இல்லை.

காடா இருந்த பூமி. ஒரு க்ரவுண்டு 18 ஆயிரம்.மாமா வாங்குனார். இப்போ அங்கே போக்குவரத்து நெரிசல்.//

உண்மைதான் டீச்சர் முன்பு ஏமாற்றுதல்கள் ரொம்ப குறைவு.

தவணை முறை திட்டத்துக்கு முதல் வழிகாட்டுதலே விஜிபி காரர்கள்தான்.நிறைய திட்டம் போட்டாங்க.சில வெற்றிகளும் பல தோல்விகளுமென நினைக்கிறேன்.

பன்னீர்தாஸ் சகோதரர்களில் செல்வராஜ் என்பவர் இப்பொழுது நாடு நாடா போய் சுவிஷேச ஊழியம் செய்கிறார் போல் தெரிகிறது.

இவர்கள் இடத்தை வசந்த்&கோ பிடித்துக்கொண்டது மாதிரி தெரிகிறது.

கபீஷ் said...

விளை நிலம் வீட்டு மனையாகறதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. அதுல ஒண்ணு நிறைய விலை கிடைக்குதுன்னு, விவசாயம் பண்ணி எப்போ இவ்ளோ தொகை சம்பாதிக்கறதுன்னு விவசாய மக்கள் நல்ல விளைநிலங்களைக்கூட(எந்த பாதிப்பும் இல்லாமல் விவசாயம் நடக்கும் நிலங்களை, ஆள் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை etc ப்ரச்னை இல்லாத) ரியல் எஸ்டேட் மக்களிடம் விற்பது.

எங்க மாமாவின் ரோட்டோரத்தில் இருக்கும் தென்னந்தோப்பை, ஒரு ரியல் எஸ்டேட் ஏஜண்ட் ஒரு கோடிக்கு வாங்கறதுக்கு கொஞ்சா நாளா நடையா நடக்குறார். அவர் விக்கறதா இல்ல. ஆனால் பக்கத்து தோப்பு எல்லாம் விற்பனை ஆகிட்டிருக்கு

மக்கள் ரெண்டாவது, மூணாவது.. n no. of வீட்டு மனைகள் வாங்க ஆரம்பிச்சதும் காரணம்.(முதலீடா நினைச்சு)

இன்னும் நிறைய எனக்கு தொடர்ந்து 4 செண்டென்ஸ் எழுத ததிங்கினத்தோம் ஆகுது.

ராஜ நடராஜன் said...

//விளை நிலம் வீட்டு மனையாகறதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. அதுல ஒண்ணு நிறைய விலை கிடைக்குதுன்னு, விவசாயம் பண்ணி எப்போ இவ்ளோ தொகை சம்பாதிக்கறதுன்னு விவசாய மக்கள் நல்ல விளைநிலங்களைக்கூட(எந்த பாதிப்பும் இல்லாமல் விவசாயம் நடக்கும் நிலங்களை, ஆள் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை etc ப்ரச்னை இல்லாத) ரியல் எஸ்டேட் மக்களிடம் விற்பது.

எங்க மாமாவின் ரோட்டோரத்தில் இருக்கும் தென்னந்தோப்பை, ஒரு ரியல் எஸ்டேட் ஏஜண்ட் ஒரு கோடிக்கு வாங்கறதுக்கு கொஞ்சா நாளா நடையா நடக்குறார். அவர் விக்கறதா இல்ல. ஆனால் பக்கத்து தோப்பு எல்லாம் விற்பனை ஆகிட்டிருக்கு

மக்கள் ரெண்டாவது, மூணாவது.. n no. of வீட்டு மனைகள் வாங்க ஆரம்பிச்சதும் காரணம்.(முதலீடா நினைச்சு)

இன்னும் நிறைய எனக்கு தொடர்ந்து 4 செண்டென்ஸ் எழுத ததிங்கினத்தோம் ஆகுது.//

விரிவான விளக்கங்கள் கபிஷ்!அரசு விவசாய சலுகைகள் எல்லாம் இன்னும் அதிகபபடுத்த வேண்டும்.அரசியல் காரணங்களால அன்புமணியின் மருத்துவர்கள் கிராமதிட்டம் தோல்வி,விவசாய கல்லூரிகளின் தாக்கம் இன்னும் பரவல் இன்மை போன்றவைகள் கூட சிந்திக்க வேண்டியவை.விடுமுறைக் காலங்களில் விவசாய நிலத்தில் பணிபுரிந்தால் மாணவர்களுக்கு அரசாங்க ஸ்டைபண்ட் போன்றவைகளை ஊக்குவிக்கலாம்.கதாநாயகனையும்,நாயகியையும் வயல்வழிகளில் ஓடவிட்டே யதார்த்தத்துக்கும்,கற்பனைக்கும் சினிமாக்கள் வழிகாட்டி விட்டது.

மாமாகிட்ட சொல்லுங்க.நோட்டுகள் எண்ணிக்கை மட்டுமே அதிகம் தங்கத்துடன் ஒப்பிட்டால்.

இரண்டு,மூன்று வீடுகள் முதலீடுகள் நினைக்க மட்டுமே நன்றாக இருக்கும்.யதார்த்த வாழ்வுக்கு வில்லங்கம் புடிச்ச வேலை என்பது பார்த்து தெரிந்து கொண்ட அனுபவம்.

இவ்வளவு சொல்லியிருக்கீங்க ததிங்கணத்தனம் தெரியலையே:)

கபீஷ் said...

நீங்க சொல்லியிருக்கற யோசனைகள் நல்லாருக்கு.

//இரண்டு,மூன்று வீடுகள் முதலீடுகள் நினைக்க மட்டுமே நன்றாக இருக்கும்.யதார்த்த வாழ்வுக்கு வில்லங்கம் புடிச்ச வேலை என்பது பார்த்து தெரிந்து கொண்ட அனுபவம்.
//

முடிஞ்சா கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. ஏன்னா ப்ளாட் வாங்கி நல்ல விலை வந்தா விக்கறது இதுவரை லாபமாத்தான் போயிட்டுருக்கு, அட் லீஸ்ட் தமிழ்நாட்டுக்குள்ளாடி.

மாமா விக்கற ஐடியால இல்ல. முழுநேர விவசாயி. நல்ல லாபத்துல விவசாயம் பண்ணிட்டுருக்கார். கிடைக்கறத நிலம் எல்லாம் வாங்கிட்டு இருக்கார். என் காதுல கொஞ்சம் புகை வேற அதனால.

காசுக்கு ஆசைப்பட்டு விவசாயிங்க நிலத்தை விக்கறாங்கன்னு பொத்தாம் பொதுவா குற்றம் சொல்லவும் முடியாது. அவங்களுக்கேயான பிரச்னைகளும் அதிகம். எல்லா விவசாயிகளும் ஆசிர்வாதிக்கப்பட்டவர்கள் இல்லை.
இருந்தாலும் அப்படி விக்கறத இன்னும் என்னால நியாயப்படுத்த முடியல.
பொட்டல் காடா இருந்தாலுமே முயற்சி செய்து நல்ல வெள்ளாமை பாக்க முடியும். நிறைய பேர் பண்றாங்க.
மன உறுதி தான் முக்கியம்


முடிஞ்சா பதிவா எழுதப் பாக்கறேன் இதப்பத்தி. நிறைய இருக்கு சொல்றதுக்கு

பிரபாகர் said...

கதிரைத்தொடர்ந்து சமுதாய அக்கறையோடு இங்கும் ஒரு இடுகை. நன்றி நண்பரே!

கொள்ளியால தலையை சொறிஞ்சிக்கிறொம்ங்கறது ஏன் புரிய மாட்டேங்குதுன்னு தெரியல. கண்டிப்பாய் என் பணி முடித்து விவசாயம்தான் செய்யவேண்டும் என்பதில் உறுதியா இருக்கேன். பார்க்கலாம்.

பிரபாகர்...

ராஜ நடராஜன் said...

//முடிஞ்சா கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. ஏன்னா ப்ளாட் வாங்கி நல்ல விலை வந்தா விக்கறது இதுவரை லாபமாத்தான் போயிட்டுருக்கு, அட் லீஸ்ட் தமிழ்நாட்டுக்குள்ளாடி.

மாமா விக்கற ஐடியால இல்ல. முழுநேர விவசாயி. நல்ல லாபத்துல விவசாயம் பண்ணிட்டுருக்கார். கிடைக்கறத நிலம் எல்லாம் வாங்கிட்டு இருக்கார். என் காதுல கொஞ்சம் புகை வேற அதனால.

காசுக்கு ஆசைப்பட்டு விவசாயிங்க நிலத்தை விக்கறாங்கன்னு பொத்தாம் பொதுவா குற்றம் சொல்லவும் முடியாது. அவங்களுக்கேயான பிரச்னைகளும் அதிகம். எல்லா விவசாயிகளும் ஆசிர்வாதிக்கப்பட்டவர்கள் இல்லை.
இருந்தாலும் அப்படி விக்கறத இன்னும் என்னால நியாயப்படுத்த முடியல.
பொட்டல் காடா இருந்தாலுமே முயற்சி செய்து நல்ல வெள்ளாமை பாக்க முடியும். நிறைய பேர் பண்றாங்க.
மன உறுதி தான் முக்கியம்


முடிஞ்சா பதிவா எழுதப் பாக்கறேன் இதப்பத்தி. நிறைய இருக்கு சொல்றதுக்கு//

இரண்டு,மூணு வீடு பற்றி முதலில் பேசிடுவோம்.வளைகுடா வந்தும் பொருளாதார பிரச்சினைகளை சந்திப்பவர்கள் உண்டு.ஓரளவுக்கு காசு மிச்சம் புடிப்பவர்கள் உண்டு.நான் பதிவில் சொன்ன நண்பர் ஹைதராபாத்தில் வீடு வச்சிகிட்டு பெங்களூரில் முதலீடு செய்தார்.இன்னொருவரும் அப்படியே செய்து அதில் நில வில்லங்கம்.

இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தோமுன்னா அண்ணனுக்கு நிலம்,வீடு முதலீடுகளில் ரொமப ஆசைன்னு சொல்றத விட பேராசை.பொள்ளாச்சி பக்கம் ஒரு இடத்தை வாங்கினார்,பின் விற்று விட்டார்.கோவையில ஒரு வீடு வாங்கிட்டு என்னையும் இரண்டு வீட்டுக்கு முதலீடு செய்ய சொன்னார்.எனக்கு ஒரு வீட்டுக்கே மூச்சு முட்டிருச்சு.அதை விட கொடுமை கட்டின வீட்டுக்கு வாடகை கூட வாங்க இயலாமை.அப்புறம் கோவை,திருப்பூர் வழில ஏதோ நிலம் வாங்கி போட்டுகிட்டு அல்லாடிக் கொண்டிருக்கிறார்.

ஒருவர் மும்பாயில் வீடு வச்சுகிட்டு கேரளாவில் போய் வீடும் கட்டிகிட்டார்.சுத்தியிருந்த நிலத்தையும் கவனிக்க முடியல.வீடும் பாதி வேலையில நிற்குது.இப்ப எதுக்கும் இன்னொரு வீடு இருக்கட்டுமென்று மும்பாயில் மறுபடியும் பணம் செலுத்துகிறார்.உண்மையிலே அவருக்கு தலை சொட்டையாயிடுச்சு.பரம்பரை சொத்தா கோவாவில் கடலோரம் வீடு,டோனாபாலா பக்கம் முந்திரி தோட்டம் வெச்சுகிட்டு குவைத் வாழ்க்கையோட ஒன்றிப் போய் பதிவில் சொன்ன பீட்டர் தமிழகத்திலும் பணத்தை கொட்டி ஏமாந்து இங்கேயே காலத்தை தள்ளூகிறார்.இப்படி நிறைய.

விவசாயிகள் விவசாய வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர்கள்.ஆனால் விவசாயத்துல இருக்கும் பிரச்சினைகள்,முக்கியமா தண்ணீர்,விவசாயத்துக்கு ஆட்கள் கிடைக்காதது,சரியான ஊதியம் இல்லாமல் விவசாய நிலத்திலிருந்து திருப்பூர் போன்ற இடங்களுக்கு குடிபெயர்தல்,விவசாயம் செய்தும் பலன்கள் இடைத்தரகர்களுக்கு போய் விடுதல் போன்றவை நவீன வாழ்க்கையில் விவசாயிகளை சலிப்படையச் செய்யும் விசயங்கள்.மக்கள் தொலைக்காட்சியில் நிறைய விவசாயிகள்,உற்பத்தியாளர்கள் வெளிநாட்டு ஏற்றுமதி செய்வது எப்படியென்று கேள்வி கேட்கிறார்கள்.ஒரு பொருளை ஏற்றுமதி செய்வதற்கு நான்கு முக்கிய டாகுமெண்டேசன் தேவைப்படுது,Invoice,Packing List,Certificate of Origin,Bill of Lading and chamber of commerce attestation.இதோடு வங்கி கணக்குக்கான LC(Letter of Credit),உற்பத்தியை கப்பல் வரை நகர்த்தும் (Mobilization)செலவு,லேபர் இதர மொத்த செலவுகளையெல்லாம் சொல்லிக்கொடுக்கவும்,அரசு உதவிகளும் இல்லை.இப்படியும் விவசாயிகளுக்கான நலன்கள் சரியாக போய் சேர்வதில்லை.

ராஜ நடராஜன் said...

//கதிரைத்தொடர்ந்து சமுதாய அக்கறையோடு இங்கும் ஒரு இடுகை. நன்றி நண்பரே!

கொள்ளியால தலையை சொறிஞ்சிக்கிறொம்ங்கறது ஏன் புரிய மாட்டேங்குதுன்னு தெரியல. கண்டிப்பாய் என் பணி முடித்து விவசாயம்தான் செய்யவேண்டும் என்பதில் உறுதியா இருக்கேன். பார்க்கலாம்.

பிரபாகர்...//

பிரபாகர்!மனசுல உறுதியாகவாவது நீங்க இருக்கிறீங்க.சின்ன வயதில் அப்பா மம்முட்டி புடிச்சு கொத்துடான்னா இரண்டு கொத்து கொத்திட்டு ஓடி விடுவேன்.தொடர்ந்து நகர்ப்புற வாழ்க்கை பழகிப்போச்சு.இனி முதுகு வளையுமான்னு தெரியல.

ராஜ நடராஜன் said...

//கடைசி வரிகள் “நச்”
விரைவில் யாராவது இந்த திட்டத்தை தொடங்க வாய்ப்பிருக்கிறது...//

திரும்ப பின்னூட்டங்களை படிக்கும் போது மீண்டும் கவனிக்க தோன்றியதுங்க கதிர்.வாகனங்களுக்கு போடும் ஆயில்கள் கிட்டத்தட்ட 3000 கிலோமீட்டர் ஓடியதும் மறுபடியும் மாற்றுவது வாகனங்களுக்கு நல்லது என்பதால் இங்கே அனைவரும் ஆயில் மாற்றுகிறார்களா,இந்த மாற்றும் எண்ணையை என்ன செய்யறாங்கன்னா ஒவ்வொரு பஞ்சர்,எண்ணை மாற்றும் கடைகளிலிருந்து சேகரித்து டேங்கரில் ஈரான்,சிரியா போன்ற இடங்களுக்கும் உள்ளூருக்கும் செல்கிறது.மீண்டும் அவை சுத்தம் செய்யப்பட்டு கார்களுக்கு திரும்ப பயன்படுத்துகிறது.

கண்ணா.. said...

ம். ஃபாண்ட் சைஸ் பெரிசாக்கியாச்சா..

நல்லாயிருக்கு :)


நல்ல பகிர்வு..இங்கு வீடு நிலமெல்லாம் தேவையை தாண்டி மூதலீடாக மாறத்தொடங்கியதிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த வியாபாரம்.

தற்போதைய தலைமுறையின் விவசாய நாட்டமின்மையும் இதற்கு காரணமாக சொல்லலாம்.

அருமையான இடுகையை வெளியிட்ட உங்களுக்கும், இதற்கு காரணமான ஈரோடு கதிருக்கும் பாராட்டுக்கள்

ராஜ நடராஜன் said...

//ம். ஃபாண்ட் சைஸ் பெரிசாக்கியாச்சா..

நல்லாயிருக்கு :)


நல்ல பகிர்வு..இங்கு வீடு நிலமெல்லாம் தேவையை தாண்டி மூதலீடாக மாறத்தொடங்கியதிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த வியாபாரம்.

தற்போதைய தலைமுறையின் விவசாய நாட்டமின்மையும் இதற்கு காரணமாக சொல்லலாம்.

அருமையான இடுகையை வெளியிட்ட உங்களுக்கும், இதற்கு காரணமான ஈரோடு கதிருக்கும் பாராட்டுக்கள்//

கண்ணா!உங்கள் ஆலோசனைக்கு நன்றி.வெளியே போய் அனுபவிக்கும் போதுதான் உண்மையில் நிலங்களின் அருமை,விவசாயிகளின் பெருமையெல்லாம் தெரிகிறது.வெறும் கோமணக்காரன்னு மனோபாவத்தால் அவர்களையெல்லாம் கீழே தள்ளி விட்டு விட்டோம்.பொங்கலோட சேர்த்து விவசாயிகள் தினம் என்று கூட ஒரு நாளை சேர்த்துக்கலாம்.

ஆமா!உங்களுக்கு அரேபிக் தெரியுமா?தெரியாட்டி அடுத்த பதிவு வருது.

மஞ்சூர் ராசா said...

நல்லதொரு பதிவு.

அண்ணே நல்லா இருக்கீகளா

படித்துறை.கணேஷ் said...

நாளைய சமுதாயத்திருக்கு சோற்றுக்கு என்ன வழி என்று யோசிக்காமல் வெள்ளைக்காரன் கொடுக்கும் வெட்கம் கெட்ட டாலர் தரும் வீராப்பில் என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை இடத்தை மடக்குங்கள் என்று புரோக்கர்களிடம் புரட்டல் விடும் இன்றைய இளைய தலைமுறையைக் குற்றம் சொல்லாமல் வயிற்றுக்கு வழியில்லாமல் அரசாங்க, சமூக, தனியார் ஆதரவுகள் எதுவுமே இல்லாமல் வேறு வழியின்றி நிலத்தை விற்கும் அப்பாவி விவசாயிகளை ஏன் குற்றம் சொல்கிறீர்கள்?

ராஜ நடராஜன் said...

//நல்லதொரு பதிவு.

அண்ணே நல்லா இருக்கீகளா//

மீண்டும் சங்கமாகியதற்கு நன்றி மஞ்சூர் ராசா.

ராஜ நடராஜன் said...

//நாளைய சமுதாயத்திருக்கு சோற்றுக்கு என்ன வழி என்று யோசிக்காமல் வெள்ளைக்காரன் கொடுக்கும் வெட்கம் கெட்ட டாலர் தரும் வீராப்பில் என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை இடத்தை மடக்குங்கள் என்று புரோக்கர்களிடம் புரட்டல் விடும் இன்றைய இளைய தலைமுறையைக் குற்றம் சொல்லாமல் வயிற்றுக்கு வழியில்லாமல் அரசாங்க, சமூக, தனியார் ஆதரவுகள் எதுவுமே இல்லாமல் வேறு வழியின்றி நிலத்தை விற்கும் அப்பாவி விவசாயிகளை ஏன் குற்றம் சொல்கிறீர்கள்?//

உங்கள் கோபத்திலும் நியாயம் இருக்கிறது.இந்த பரிணாமம் இடுகையில் விடுபட்டு விட்டது.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

என் அண்ணன் கூட பொள்ளாச்சி பக்கம் நிலம் வாங்கி குத்தகைக்கு விடலாம் என்றார்.உழுதால் நாமே உழவேண்டும்,குத்தகை முறை சரிப்பட்டு வராது என்று நான் மறுத்து விட்டேன்.ஆனால் நான் முதலீடு செய்ய நினைத்த காலகட்டத்தில் விவசாய நிலத்தை வீடுகட்டும் திட்டம் உருவாகவில்லை.

விவசாயிகளை நான் எங்கே குற்றம் சொன்னேன்.விவசாயிகள் விவசாயம் செய்ய இயலாத சூழல்களையும் நீங்கள் குறிப்பிட்ட டாலர்,வளைகுடா காசுகளை வாங்கி நில அபகரிப்பு செய்கிறார்கள் என்பதே இடுகையில் சொல்ல வந்தது.பின்னூட்டங்களிலும் அதையே நண்பர்களுடன் விவாதித்துள்ளேன்.

Pothikai said...

nilam vaangki viRbathu

Pothikai said...

nilam vaangka vikka enbathu laabamaan thililthaan aanaal veedikkai ennavenil thamizakaththil sumaar 12ooo hecter vayalkaL marRum 2500 hecter saathaa nila keeraL maanila makkaLaal vaangkka biitukkiRathu enbathu theriyumaa

ராஜ நடராஜன் said...

//nilam vaangka vikka enbathu laabamaan thililthaan aanaal veedikkai ennavenil thamizakaththil sumaar 12ooo hecter vayalkaL marRum 2500 hecter saathaa nila keeraL maanila makkaLaal vaangkka biitukkiRathu enbathu theriyumaa//

Dear Sir,I am having trouble in reading your comments.If you have trouble in downloading a tamilfont software,there are plenty to choose.Any help you need please drop me a word to my personal email.Thanks.

(I have tried again to grasp your comment content but couldn,t succeed.)

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர்...

ராஜ நடராஜன் said...

//சூப்பர்...//

திரு.ராதாகிருஷ்ணன்!உங்களுக்கும் ஒரு இலவச அரபிக் வடை பார்சல் வருது.