Followers

Sunday, April 18, 2010

பார்வதி அம்மாள்

தாயே!தமிழின் உண்மையான முகவரியே!
கண்ணீரை மட்டும் காணிக்கையாக்குகிறேன்.

நான் உரைநடைக்காரன்
இருந்தும் என்னிடம் சொல்வதற்கு வார்த்தையில்லை.
இருந்த வார்த்தைகளையெல்லாம் எங்கள்
மேடைப்பேச்சாளர்கள் திருடிக் கொண்டு போய் விட்டார்கள்.

தாயே!தமிழின் உண்மையான முகவரியே!
தலைகுனிகிறேன்.


30 comments:

Thekkikattan|தெகா said...

என்ன சாமி நடக்கிது இங்கே... கொடுமையப்போய்ய்ய் பொறுத்திருப்போம் பலன்களை அறுவடை செய்ய :(

அது சரி said...

தறுதலைகளும் கால்நக்கிகளும் தலைவன் என்று அறிவித்துக் கொள்ளும் ஒரு சமூகம் தலைகுனியத் தான் வேண்டும்...என் தலை குனிந்து நீண்ட நாட்களாகிறது...என்று நிமிரும் என்று எனக்கே தெரியவில்லை.

முகிலன் said...

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் என் தந்தையே இந்தத் தருதலைக்கு ஓட்டுப் போடுவதைத் தடுக்க முடியாமல் என் தலை தரை தட்டியது இன்னும் நிமிரவில்லை...

ஆ.ஞானசேகரன் said...

தலைகுனிகிறேன்.

ஆ.ஞானசேகரன்

கண்ணா.. said...

மனசாட்சி இல்லாத முண்டங்கள் அரசாள நடைபிணமாய் வாழும் மக்கள்

:(

காட்சி தளத்தில் ஓரு கண்டன மின்மடல் அனுப்ப சொல்லியிருந்தார்கள் உடனடியாக அனுப்பவும். அந்த மெயிலை நண்பர்களுக்கும் பார்வேர்ட் செய்யவும்

ராஜ நடராஜன் said...

//என்ன சாமி நடக்கிது இங்கே... கொடுமையப்போய்ய்ய் பொறுத்திருப்போம் பலன்களை அறுவடை செய்ய :(//

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்
தர்மம் மீண்டும் வெல்லும்.

ஆனால் சூதே ஜெயித்துக்கொண்டிருக்கிறதே:(

ராஜ நடராஜன் said...

//தறுதலைகளும் கால்நக்கிகளும் தலைவன் என்று அறிவித்துக் கொள்ளும் ஒரு சமூகம் தலைகுனியத் தான் வேண்டும்...என் தலை குனிந்து நீண்ட நாட்களாகிறது...என்று நிமிரும் என்று எனக்கே தெரியவில்லை.//

இந்த பேச்சு அறுவடையாளர்கள் எத்தனை அடித்தாலும் தாங்குகிறார்களே:(

தலைமைப் பண்புகள்..... அவர்களுக்கென்று ஒரு இலக்கணம் வகுத்து வைத்திருக்கிறார்கள்.

ராஜ நடராஜன் said...

//கடந்த பாராளுமன்றத் தேர்தலின் என் தந்தையே இந்தத் தருதலைக்கு ஓட்டுப் போடுவதைத் தடுக்க முடியாமல் என் தலை தரை தட்டியது இன்னும் நிமிரவில்லை...//

நீங்களாவது பரவாயில்லை!உணர்கிறீர்கள்.அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு எவ்வளவு தேறும் என்றும்,இவ்வளவு இலவசங்களை யார் தருவார்கள் என்று அறியாமையிலும் இருப்பவர்களுக்கு யார் சொல்லித் தெளிய வைப்பது?

அரசியல் கோணலின் உச்சம் ஓட்டு லஞ்சம்.

ராஜ நடராஜன் said...

//தலைகுனிகிறேன்.//

இன்னும் ஏராளம்.சொல்ல முடியாமல் எல்லோரும் மனதுக்குள் அழுகை.

ராஜ நடராஜன் said...

//மனசாட்சி இல்லாத முண்டங்கள் அரசாள நடைபிணமாய் வாழும் மக்கள்

:(

காட்சி தளத்தில் ஓரு கண்டன மின்மடல் அனுப்ப சொல்லியிருந்தார்கள் உடனடியாக அனுப்பவும். அந்த மெயிலை நண்பர்களுக்கும் பார்வேர்ட் செய்யவும்//

கண்ணா!காட்சி தளத்தின் கண்டன மின்மடல் இடுகை கண்டேன்.முன்பு இலங்கைப் போரின் மனித உரிமை மீறல்களுக்காக ஐக்கிய தேசங்களின் தூதரகங்களுக்கெல்லாம் மின்மடல் அனுப்பியும் அனைத்தையும் junk mailலில் சேர்த்து விட்டார்கள்.

நம்ம ஊடகங்கள் உள் அஜெண்டாக்களுடன் குரல் கொடுப்பவர்கள் மாதிரி தெரிகிறது.இலங்கைப் போரைக் கூட இறையாண்மை என்ற ஒற்றைச் சொல்லில் நிழலாட்டம் செய்து விட்டார்கள்.

இப்பொழுது மனிதாபிமான செயலுக்கு குரல் கொடுக்க வேண்டியும் கூட ஒற்றை வரியில் prabakaran's mother deported என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்கள்.

நமது வலிகளுக்கு நாமே மருந்து தேடுவதுதான் நம் நோய் தீர்க்கும்.

பக்க சார்பில்லாத உண்மைகளை மட்டும் சொல்லும் ஆங்கில ஊடகம் ஒன்று தமிழகத்திலோ அல்லது புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தோ வருவது மட்டுமே நமது குரலை உலகம் தழுவி கொண்டு சேர்க்கும்.

ராஜ நடராஜன் said...

இதுவரை என்னோடு துயரை பின்னூட்டமாக பகிர்ந்து கொண்ட தெகா,அதுசரி,முகிலன்,ஞானசேகரன்,கண்ணாவுக்கு நன்றி.

வானம்பாடிகள் said...

/நான் உரைநடைக்காரன்
இருந்தும் என்னிடம் சொல்வதற்கு வார்த்தையில்லை./

ஒரே மூச்சுல 15 பக்கம் வசனம் எழுதினவரே வார்த்தையில்லாம இருக்காரு. நீங்க என்னண்ணா. நம்ம சாபக்கேடு.மனிதநேயம் கூட கட்சி வட்டத்துக்குள்ளன்னு ஆனப்புறம் என்ன பண்றது.

ராஜ நடராஜன் said...

//ஒரே மூச்சுல 15 பக்கம் வசனம் எழுதினவரே வார்த்தையில்லாம இருக்காரு. நீங்க என்னண்ணா. நம்ம சாபக்கேடு.மனிதநேயம் கூட கட்சி வட்டத்துக்குள்ளன்னு ஆனப்புறம் என்ன பண்றது.//

அதெப்படிங்க்ண்ணா மனிதநேயத்துல கூட இவர்களால் அரசியல் செய்ய முடிகிறது:(

நீரோ பிடில் வாசிப்பதையெல்லாம் பள்ளியில் மட்டுமே படித்தது.
இங்கேயும் ஒரு நீரோ மானாட மயிலாட.

பதி said...

உரிய அனுமதியுடன் மருத்துவ சேவை பெரும் நோக்கில் வந்த வயது முதிர்ந்தவரை வெளியேற்றிய அவலத்தை வெளியே சொல்லக் கூட நம்மிடம் ஒரு வலுவான ஊடகம் இல்லை என்பது பேரவலம்.

:(

அருள் said...

அன்னைக்கு உதவமுடியாத பிள்ளைகளின் நிலை மரணத்தைவிட கொடியது.

தாயே, நானும் "கையாலாகாத" உன் பிள்ளைகளில் ஒருவன் தான்.

மன்னித்துவிடுங்கள் அம்மா.

பட்டாபட்டி.. said...

வெட்கமாக இருக்கு சார்..
ஒரு 80 வயசு பெரியசர், என்ன பண்ணிவிடுவார்கள்?..

அவர்களுக்கு, இங்கு ஏதாவது ஆகிவிட்டால், பிரச்சனை பெரிதாகும் என நினைக்கிறார்கள் போல..


சுப்ரமணி சாமி என்ன சொன்னாருனு பார்த்தீங்களா?..இந்தியா தர்மசாலையில்லையாம்..

அப்புறம் என்ன ம&^%$க்கு, இத்தாலிகிட்ட நாட்டை அடமானம் வெச்சானுக?..
ஆனா ஒண்ணு சார்.. இவனுக மனுசனுகளே இல்லை..

ராஜ நடராஜன் said...

//உரிய அனுமதியுடன் மருத்துவ சேவை பெரும் நோக்கில் வந்த வயது முதிர்ந்தவரை வெளியேற்றிய அவலத்தை வெளியே சொல்லக் கூட நம்மிடம் ஒரு வலுவான ஊடகம் இல்லை என்பது பேரவலம்.

:(//

வாருங்கள் பதி!மக்கள் தொலைக்காட்சி முன்பு தமிழிலாவது உரத்து சொல்லிக்கொண்டிருந்தார்கள்.இப்பொழுது தேர்தலை அறுவடை செய்ய முடியாத நிலையில் அவர்களும் கூட சோர்ந்து விட்டார்கள் போல் தெரிகிறது.

ஹேமா said...

தமிழின் குமுறல் !

ராஜ நடராஜன் said...

//அன்னைக்கு உதவமுடியாத பிள்ளைகளின் நிலை மரணத்தைவிட கொடியது.

தாயே, நானும் "கையாலாகாத" உன் பிள்ளைகளில் ஒருவன் தான்.

மன்னித்துவிடுங்கள் அம்மா.//

நம்மால் வருத்தங்களை பதிவு செய்ய மட்டுமே முடியும் அருள்.

விமானத்தளம் போகிறேன் என்று இடுகையிட்டு விட்டு சென்ற இயக்குநர் ராம்,ரகசியத் தூதர்கள் வை.கோ,நெடுமாறன் அவர்களாலே கூட ஒன்றும் செய்ய இயலாத இயலாமை.இவர்களையெல்லாம் விஞ்சும் சகுனியின் சாணக்கியத்தனம் மட்டுமே எப்பொழுதும் ஜெயிக்கிறது.

ராஜ நடராஜன் said...

//வெட்கமாக இருக்கு சார்..
ஒரு 80 வயசு பெரியசர், என்ன பண்ணிவிடுவார்கள்?..

அவர்களுக்கு, இங்கு ஏதாவது ஆகிவிட்டால், பிரச்சனை பெரிதாகும் என நினைக்கிறார்கள் போல..


சுப்ரமணி சாமி என்ன சொன்னாருனு பார்த்தீங்களா?..இந்தியா தர்மசாலையில்லையாம்..

அப்புறம் என்ன ம&^%$க்கு, இத்தாலிகிட்ட நாட்டை அடமானம் வெச்சானுக?..
ஆனா ஒண்ணு சார்.. இவனுக மனுசனுகளே இல்லை..//

சுப்ரமணிசாமி வேற வேதம் ஓதிட்டாரா?என்னை சார் போய் அமெரிக்காவுல லெக்சர் செஞ்சீங்க?எங்கேயெல்லாம் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வழி கிடைக்கிறதோ அங்கெல்லாம் போய் முன்னுக்கு நில்லுங்க.

மனிதம் இழக்கும் எவனும் மனிதனில்லை.

ராஜ நடராஜன் said...

இரண்டாவது சுற்றில் துயரத்தில் குரல் கொடுத்த வானம்பாடிகள்,பதி,அருள்,பட்டாபட்டி அனைவருக்கும் நன்றி.

ஜோதிஜி said...

பாசாங்கு இல்லாத உண்மையான அக்கறையான வார்த்தைகள்

ராஜ நடராஜன் said...

//பாசாங்கு இல்லாத உண்மையான அக்கறையான வார்த்தைகள்//

ஜோதிஜி!உங்கள் வருகைக்கு நன்றி.

துபாய் ராஜா said...

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்...

ராஜ நடராஜன் said...

//நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்...//

வாருங்கள் துபாய் அரசரே!

அன்புடன் மலிக்கா said...

என்னசொல்ல என்னசொல்ல
சொல்லவார்த்தை சொல்லில் வரலை..

ராஜ நடராஜன் said...

//என்னசொல்ல என்னசொல்ல
சொல்லவார்த்தை சொல்லில் வரலை..//

வணக்கம் மலிக்கா!நேற்றைய துயரத்தில் இட்ட இடுகை.சொன்ன மாதிரியே இன்று மேடைப்பேச்சாளர்களின் விளக்கங்களும்,விரல் சுட்டும் அரசியலும்....ம்! சொல்ல இயலவில்லை.

க.பாலாசி said...

என் கண்ணீரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்....

பரிதி நிலவன் said...

//சுப்ரமணி சாமி என்ன சொன்னாருனு பார்த்தீங்களா?//

அந்த மயிராண்டியே வந்தேறி நாய்

ராஜ நடராஜன் said...

////சுப்ரமணி சாமி என்ன சொன்னாருனு பார்த்தீங்களா?//

அந்த மயிராண்டியே வந்தேறி நாய்//

பரிதி நிலவன்!அழகான பெயர்!இப்படி உணர்ச்சி வசப்பட்டே நாம் இழந்தவை அதிகம்.

இந்தியனாக சுப்ரமணிய சாமிக்கும் அவரது கருத்துக்களை சொல்லும் உரிமை இருக்கிறது.ஆனால் அவரது கருத்துக்களை எப்படி வெற்றிகரகமாக எதிர்கொள்வது என்பதில் இருக்கிறது வெற்றியின் சூட்சுமம்.