Followers

Friday, April 16, 2010

லீனா மணிமேகலை

ஹுசைனின் ஓவியம் பற்றிய ஒட்டிய விவாதங்களூம்,அவருக்கு எதிரான எதிர்வினைகளுக்கான இடுகைகளும்,பின்னூட்டங்களும் எனக்கு ஒரு புரிதலை தந்தது.அதாவது கருத்து விவாதம் என்பதை விட பொருளின் கரு யாரால் சொல்லப்படுகிறதென்பதே முன்னிறுத்தப் படுகிறது.

என்னை மாதிரி நோஞ்சான் பதிவராக இருந்தால் ஒரு பார்வையிட்டு விட்டு ஒதுங்கிப் போகும் மனப்பான்மையோ,பிள்ளைப் பூச்சியையெல்லாம் அடிப்பதா என்ற பரிதாபம் கொண்டோ,நமக்கு நிகரான கருத்துவாதியா என்றோ,மூக்குல ரோசம் வர்றமாதிரி எழுத மாட்டேன்கிறானே என்று அகன்று போவதையும் அவதானித்தேன்.அப்படியும் வந்து விட்டோமே என்று நாகரீக எதிர்வினை மாற்றுக்கருத்து பின்னூட்ட நண்பர்களுக்கும் நன்றி.இதே எதிர்வினைக்காரர்கள் இன்னொரு பிரபல பதிவரின் தளத்திற்கு சென்றால் விவாதத்திற்கான களம் மாறி வார்த்தை சொற்றாடல்கள் மாறிப் போகின்றன.எனவே யார் யார் வாய் எப்பொருள் கேட்பினும் சொல்பவரின் பெயர்ச்சொல் முன் நிற்கும் புதிய மொழியை உணர்ந்து கொண்டேன்.

இப்பொழுது லீனா மணிமேகலை என்ற பெண்ணின் கவிதைகள் விவாதப் பொருளாகியுள்ளது.நிர்வாணம்,உடல் பற்றிய உணர்வுகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் உளவியலாக தனிமனிதனுக்கு ஒரு அதிர்ச்சியை தருகிறது என்ற புரிதலையும் இப்பொழுது ஏற்படுத்துகிறது.ஆனால் தனிமனிதக் கோபங்கள் ஒரு இசத்துக்குள் நுழையும் போது விவாதப் பொருள் ஒரு புதிய வடிவம் பெறுகிறது.

உதாரணம் லீனா மணிமேகலையின் கவிதைக்கு இந்துக்கட்சி என்ற புதுமுக அறிமுகமும்,சித்தாந்தவாதிகளான கம்யூனிஸ்ட்டுகளும் குரல் கொடுப்பது.ஒரே பொருள் இரு விதமாகப் பேசப்படுகிறது.இருவருக்குமான காரண காரியங்களை விளக்க வேண்டிய அவசியமில்லை என்பதை லீனா மணிமேகலை குறித்த விமர்சனங்களை கவனித்து வருபவர்களுக்கு புரியும்.

ஹுசைன் விசயத்தில் இந்துக்கடவுள்களை கொச்சைப்படுத்தும் ஹுசைன் முகமதுவை அப்படி வரைய துணிவாரா என்ற கேள்விக்கு நிகராக லக்கிலுக் யுவகிருஷ்ணா "கம்யூனிஸத் தலைவர்களுக்கு பதிலாக பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பின், வினவுத் தொழர்கள் செய்த கலாட்டாவை விட மிகப்பெரிய கலாட்டாவை திராவிட இயக்கத்தவர் செய்திருப்பார்கள்."

கலாட்டாக்கள் செய்தே கட்சி வளர்த்த பரம்பரைக்காரர்கள் அல்லவா நாம்,எனவே அந்த உணர்வுகள் நமத்துப் போகாது என்பதுடன் குறிப்பிட்ட தலைவர்கள் விவாதத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் என்ற மாயையிலிருந்து விடுபட நாம் விரும்பா விட்டாலும் திராவிட இயக்கத்தில் கூடவே பயணித்த கண்ணதாசன் ஏற்கனவே திராவிட தலைவர்களில் சிலரை துவைத்து காயப்போட்டு விட்டார்.

கண்ணதாசன் பற்றிக் குறிப்பிடும் போது அவரது காலத்தில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் கூட விவாதத்திற்குட்படுத்தாமல் திறந்த புத்தகமாக இருந்து போய் விட்டார்.அப்படியும் அவரது கூந்தல் கருப்பு,குங்குமம் சிவப்பு,எலந்தப்பழம் போன்ற பாடல்கள் பொது மேடைகளில் விவாதங்களுக்குட்பட்டதும் அதனையெல்லாம் பின்னால் தள்ளி விட்டு அவரது சினிமா பாடல்களின் கவிதை வரிகளும்,அர்த்தமுள்ள இந்துமதமும் மக்கள் மனதில் நிரந்தரமாக குடிகொண்டு விட்டது.

அண்ணா,கருணாநிதி போன்றவர்களின் துவக்க கால திராவிட இலக்கியங்களும் கூட காலம் கடந்து எடைபோடும் போது நகைப்புக்குரியதாக இருந்த போதிலும் அந்தக்கால கட்டத்தில் சிலரை கோபப்படுத்தியிருக்கும் என்பதையும் கடந்து அவர்களின் பொது முகங்கள் மாறிப் போயிருக்கின்றன.

எரிக்கா யங்க்(Erica Yong) என்ற 1942ம் ஆண்டு பிறந்த ஜெர்மன் யூத பெண் எழுத்தாளரும்,கவிதாயினியும்,1970,80களின் கால கட்டத்து கேரளத்து எழுத்தாளரும்,கவிதாயினிமாகிய கமலாதாஸின் என்னுடைய கதை,அவரது ஓவியத்துக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்ததும் கூட அந்த அந்த கால கட்டத்தில் ஆணாதிக்க மனோபாவங்களுடன் விவாதங்களை ஏற்படுத்தியது.ஆனால் காலங்கள் கடந்து இவர்களின் கவிதைகள் இன்றும் உயிரோடு நிரந்தரமாகி விட்டன.எனவே லீனா மணிமேகலையின் தொடர்ந்த கவிதைகள் மட்டுமே விமர்சனங்களை கடந்தும் நிலைத்து நிற்கும்.

50 comments:

ராஜ நடராஜன் said...

எரிக்கா யங்கின் கவிதையை ஒட்டியே மடோனாவின் எரோட்டீக் வீடியோ உருவானது.

கபீஷ் said...

//எனவே யார் யார் வாய் எப்பொருள் கேட்பினும் சொல்பவரின் பெயர்ச்சொல் முன் நிற்கும் புதிய மொழியை உணர்ந்து கொண்டேன்.
//

ரொம்ப லேட்டா புரிஞ்சுகிட்டீங்கன்னு சொல்லல :):)

ஏழர said...

லீனாவின் கவிதைகள்(?) நிலைத்து நிற்கும் என்று நீங்கள் ஆருடம் சொல்வதனால் சர்ச்சைக்கு்றிய அந்த இரண்டு கவிதைகளுக்கான விளக்கங்களை நீங்களாவது சொல்வீர்கள் என நம்புகிறேன்..

வானம்பாடிகள் said...

/எரிக்கா யங்க்(Erica Yong) என்ற 1942ம் ஆண்டு பிறந்த ஜெர்மன் யூத பெண் எழுத்தாளரும்,கவிதாயினியும்,1970,80களின் கால கட்டத்து கேரளத்து எழுத்தாளரும்,கவிதாயினிமாகிய கமலாதாஸின் என்னுடைய கதை,அவரது ஓவியத்துக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்ததும் கூட அந்த அந்த கால கட்டத்தில் ஆணாதிக்க மனோபாவங்களுடன் விவாதங்களை ஏற்படுத்தியது.ஆனால் காலங்கள் கடந்து இவர்களின் கவிதைகள் இன்றும் உயிரோடு நிரந்தரமாகி விட்டன.எனவே லீனா மணிமேகலையின் தொடர்ந்த கவிதைகள் மட்டுமே விமர்சனங்களை கடந்தும் நிலைத்து நிற்கும். /

42 ஆனால் என்ன 2010 ஆனால் என்ன? ஆணாதிக்க எதிர்ப்பு மாறத்தான் இல்லை. அதனால் அந்தப் படைப்புகள் அழியவும் இல்லை.
good post:)

ஏழர said...

நடந்த விவரங்களை பற்றித் தெரிந்து கொள்ள அக்கறையில்லாமல் ஒற்றை வரியில் ஆணாதிக்க எதிர்ப்பு என்று தீர்ப்பளிப்பதை அறியாமை என்றும் சொல்லலாம், உள்நோக்கம் என்றும் சொல்லலாம்... உங்களுக்கு உள்நோக்கம் இருக்காது என்று நம்புகிறேன்.

siravanan said...

// கேரளத்து எழுத்தாளரும், கவிதாயினிமாகிய கமலாதாஸின் என்னுடைய கதை,அவரது ஓவியத்துக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்ததும்//

கமலதாஸ் நிர்வாண போஸ் கொடுத்தாரா என்பது சந்தேகமாகவுள்ளது. தயவு செய்து மீண்டும் உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

****************

லீனா மணிமேகலையை கமலாதாஸ் போன்றோருடன் தயவு செய்து ஒப்பிடாதீர். செக்ஸ் குறித்தவற்றில் அவர் தனது எழுத்து மூலம் செய்த புரட்சி வேறுவிதமானது.

வேண்டுமானால், லீனா மணிமேகலை போன்றவர்கள் படைப்பிலக்கியத்தை ஆக்கப்பூர்வமாக அணுகும் பட்சத்திலும், அதற்காக தொடர்ந்து உழைக்கும் பட்சத்திலும் கமலாதாஸ் போன்றவர்கள் போல் சமூகத்தில் வலம் வருவதற்கான வாய்ப்புண்டு என்று வேண்டுமானால் எழுதலாம்.

நன்றி.

padma said...

கமலா தாஸ் ஒரு ஓவியரும் கூட .அவர் கண்ணாடியில் தன்னை பார்த்தே வரைந்து கொண்டார் .அந்த காலத்து illustrated weekly ல கூட வந்தது .எனக்கு ரொம்ப vague ஆ ஞாபகம் இருக்கு .குமுதத்திலும் வந்ததாக ஞாபகம்

யுவகிருஷ்ணா said...

//உதாரணம் லீனா மணிமேகலையின் கவிதைக்கு இந்துக்கட்சி என்ற புதுமுக அறிமுகமும்,சித்தாந்தவாதிகளான கம்யூனிஸ்ட்டுகளும் குரல் கொடுப்பது.ஒரே பொருள் இரு விதமாகப் பேசப்படுகிறது.//

வழக்கம்போல விஷயம் என்னவென்றே தெரியாமல் எழுதியிருக்கிறீர்கள் :-)

1. இந்து மக்கள் கட்சியின் எதிர்ப்புக்குள்ளான கவிதை இது :

//நான் லீனா

நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்

ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்

ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்

வாழ்கிறேன்

என் வேலை

என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்

பரப்பியே வைத்திருப்பது


நாடு கோருபவ்ர்கள்

ஜிகாத் தொடுப்பவர்கள்

புரட்சி வேண்டுபவ்ர்கள்

போர் தொடுப்பவர்கள்

ராஜாங்கம் கேட்பவர்கள்

வணிகம் பரப்புபவர்கள்

காவி உடுப்பவர்கள்

கொள்ளையடிப்பவர்கள்

நோய் பிடித்தவர்கள்

எவன் ஒருவனும்

வன்புணர்வதற்கு ஏதுவாய்

யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு

கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள

சொல்லித் தந்திருக்கிறார்கள்

அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே

அவ்வப்போது

காலக்கெடுவில்

லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை

தூர் வாருவதையும்

படிப்பித்திருக்கிறார்கள்


எனக்கு தெரியும்

அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்

லும்பன் தரகன் மகாராஜா தளபதி

திருடன் கணிப்பொறிக்காரன் போராளி

போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்

கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி

கணவன், தந்தை, சகோதரன், மகன்

எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி

என்ற ரகசியம்

எனக்கு மொழி தெரியாது

நிறம் கிடையாது

நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்

வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்

ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்

என் உதிர வீச்சமடிக்கும்

பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்

யேசு அல்லா இந்திரன் வர்ணன்

சூரியன் கருப்பசாமி அய்யனார்

ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்

யாவும்

கலைக்க முயன்றும்

என் சூலகத்தில்

தங்கிவிட்ட கருக்கள்


அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ

ராக்கெட்டோ கன்னிவெடியோ

எறியப்படும் குண்டுகளுக்கு

உடல் செத்தாலும்

யோனிக்கு சாவில்லை

யோனியிலும் சாவில்லை//


3. ம.க.இ.க. தோழர்களின் எதிர்ப்புக்குள்ளான கவிதை இது :

//ஒரு புணர்தலின் உச்சியில் விலகி

அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி

தோழர் என்றெழுதினாய்

உடலை உதறி கொண்டு எழுந்து

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்

என்று பிதற்றினாய்

கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்

உபரி என யோனி மயிரை விளித்தாய்

உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்

லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்

பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்

முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்

மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்

பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்

இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்

மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்

குறியை சப்ப குடுத்தாய்

பெர்லின் சுவர் இடிந்தது

சோவியத் உடைந்தது

எழுச்சி என்றாய்

அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்

கீழே இழுத்து

உப்பை சுவைக்க சொன்னேன்

கோகோ கோலா என்று முனகினாய்

மயக்கம் வர புணர்ந்தேன்

வார்த்தை வறண்ட

வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்

இது கட்டவிழ்ப்பு என்றேன்
//

ராஜ நடராஜன் said...

//ரொம்ப லேட்டா புரிஞ்சுகிட்டீங்கன்னு சொல்லல :):)//

கபீஷ்!உண்மையிலே வலையுலகில் புரியா புரியவேண்டியவைகள் எனக்கு நிறையவே இருக்கிறது.

ராஜ நடராஜன் said...

//லீனாவின் கவிதைகள்(?) நிலைத்து நிற்கும் என்று நீங்கள் ஆருடம் சொல்வதனால் சர்ச்சைக்கு்றிய அந்த இரண்டு கவிதைகளுக்கான விளக்கங்களை நீங்களாவது சொல்வீர்கள் என நம்புகிறேன்..//

வாங்க ஏழர!பதிவில் சுத்தும் இடங்களையெல்லாம் விட்டு விட்டு தலைப்பின் காரணம் கொண்டு இங்கே வந்ததற்கு நன்றி.

கவிதைகள் என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இது கட்டவிழ்ப்பு என்றேன் என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே கவிதைக்கான எனது புரிதல்.

நான் சொல்ல வந்தது லீனாவின் தொடர்ந்த கவிதைகள் மட்டுமே நிலைத்து நிற்கும் என்றேன்.இந்த இரு கவிதைகள் தற்போதைய சலசலப்புக்கள் மட்டுமே.இந்த இரண்டு கவிதைக்குள்ளேயே முடங்கிப் போவதை விட இன்னும் தன்னுடைய கவிதையின் பரிமாணங்களை அவர் வெளிப்படுத்துவதைப் பொறுத்துமே இனி அவரது கவிதைகள் பற்றி ஆருடம் சொல்ல இயலும்.

ராஜ நடராஜன் said...

//42 ஆனால் என்ன 2010 ஆனால் என்ன? ஆணாதிக்க எதிர்ப்பு மாறத்தான் இல்லை. அதனால் அந்தப் படைப்புகள் அழியவும் இல்லை.
good post:)//

வசிஷ்டர் வாயால்ங்கிற மாதிரி வானம்பாடிகள் கையால் ஒரு குட்டு!நன்றி.

ராஜ நடராஜன் said...

//நடந்த விவரங்களை பற்றித் தெரிந்து கொள்ள அக்கறையில்லாமல் ஒற்றை வரியில் ஆணாதிக்க எதிர்ப்பு என்று தீர்ப்பளிப்பதை அறியாமை என்றும் சொல்லலாம், உள்நோக்கம் என்றும் சொல்லலாம்... உங்களுக்கு உள்நோக்கம் இருக்காது என்று நம்புகிறேன்.//

மீண்டும் நீங்களா ஏழர!உள்நோக்கம் என்ற ஒற்றை வார்த்தைக்காக ஒரு தன்னிலை விளக்கம் தர நினைக்கிறேன்.நான் எந்த இசத்துக்குள்ளும் மாட்டிக்கொள்ளாத ஒரு சுதந்திர விரும்பி.அதன் காரணம் கொண்டே எனது மொக்கைகளை நீக்கி சில விசயங்களை பதிவுகளில் சொல்லியிருப்பதில் நான் எந்த இசங்களை சார்ந்தும் நில்லாதவன் என்ற நம்பிக்கையிலேயே சொல்லியிருக்கிறேன்.காரணம் பொதுமேடையில் விவாதிக்கப் படும் பொருள்களுக்கும் அப்பால் சார்பு நிலைகளற்ற உண்மைகள் இருக்கின்றன என்று நம்புகிறேன்.

நடந்த விவரங்களைத் தெரியாமல் எனும் எனது அறியாமை என்ற சொல்லுக்கு எனது அறியாமை எனும் பட்சத்தில் அதனை அறியாமை என்று ஏற்றுக் கொள்வதில் எனக்கு வெட்கம் கிடையாது.ஆனால் நடந்த விவரங்கள் எனும் போதே கவிதைக்கும் அப்பாலான சில விசுவரூபமெடுக்கிறதென்று நினைக்கிறேன்.

ஏழர said...

@@ஆணாதிக்க எதிர்ப்பு மாறத்தான் இல்லை. அதனால் அந்தப் படைப்புகள் அழியவும் இல்லை.@@

நடப்பதை புரிந்து கொள்ளாமல் ஆணாதிக்க எதிர்ப்பு என்ற கருத்தை சொல்லவது அறியாமை. இதில் உங்களுக்கு என்ன பெருமை ராஜ நடராஜன்

ராஜ நடராஜன் said...

//கமலதாஸ் நிர்வாண போஸ் கொடுத்தாரா என்பது சந்தேகமாகவுள்ளது. தயவு செய்து மீண்டும் உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். //

மதிப்பிற்குரிய சிரவணன் அவர் தன்னையே கண்ணாடியில் பார்த்து வரைந்து கொண்டதை கருத்து குழப்பம் ஆக்கி விட்டேன் என நினைக்கிறேன்.

ஏழர said...

ராஜ நடராஜன்,

http://www.vinavu.com/2010/04/17/pala-rising/

இதை படித்துவிட்டுச் சொல்லுங்கள் நடக்கும் பிரச்சனை ஆணாதிக்க கருத்தியலின் விளைவா?...

ராஜ நடராஜன் said...

//லீனா மணிமேகலையை கமலாதாஸ் போன்றோருடன் தயவு செய்து ஒப்பிடாதீர். செக்ஸ் குறித்தவற்றில் அவர் தனது எழுத்து மூலம் செய்த புரட்சி வேறுவிதமானது.

வேண்டுமானால், லீனா மணிமேகலை போன்றவர்கள் படைப்பிலக்கியத்தை ஆக்கப்பூர்வமாக அணுகும் பட்சத்திலும், அதற்காக தொடர்ந்து உழைக்கும் பட்சத்திலும் கமலாதாஸ் போன்றவர்கள் போல் சமூகத்தில் வலம் வருவதற்கான வாய்ப்புண்டு என்று வேண்டுமானால் எழுதலாம்.

நன்றி.//

இல்லங்க சிரவணன்.கமலாதாஸ் பற்றிய புரிதலை அவரது காலகட்டத்திற்கு அப்பால் யோசிக்கின்ற காரணத்தால் ஒப்பீடு சரியில்லை என்று நீங்கள் கூறுவதாக எனது புரிதல்.அவரது எண்ட கதா வெளியாகிய கால கட்டத்தில் கமலாதாஸ்க்கான அங்கீகாரம் வேறு விதம் என நினைக்கிறேன்.அதனை அவர் ஏசியாநெட்டுக்கு அளித்த நேர்காணலில் காண முடிந்தது.

கவிதைகள் என்பதும்,கவிதாயினி என்பதும் இரண்டு கவிதைகளால் நின்று போகும் செயல்கள் அல்ல.லீனா மணிமேகலை இன்னும் சொல்லும் கவிதைகள் மட்டுமே அவரை நிலை நிறுத்தும் என்பதும் நீங்கள் சொன்ன மாதிரி சமூகத்தில் வலம் வருவதற்கான வாய்ப்புண்டு என்பதும் உண்மை.

ராஜ நடராஜன் said...

//கமலா தாஸ் ஒரு ஓவியரும் கூட .அவர் கண்ணாடியில் தன்னை பார்த்தே வரைந்து கொண்டார் .அந்த காலத்து illustrated weekly ல கூட வந்தது .எனக்கு ரொம்ப vague ஆ ஞாபகம் இருக்கு .குமுதத்திலும் வந்ததாக ஞாபகம்//

வணக்கம் பத்மா மேடம்!பதிவர் சிரவணன் கேட்ட விளக்கத்துக்கு உங்கள் பின்னூட்டம் உதவுகிறது.


எனது சென்ற இடுகையை வாசித்தீர்களா?

Dr.Rudhran said...

கவிதைகள் மட்டுமே விமர்சனங்களை கடந்தும் நிலைத்து நிற்கும். yes, only POETRY will survive not publicity.

ராஜ நடராஜன் said...

//வழக்கம்போல விஷயம் என்னவென்றே தெரியாமல் எழுதியிருக்கிறீர்கள் :-)//

எனக்கு நீங்கள் லக்கிலுக் என்றே பதிவுலகில் அறிமுகம் யுவகிருஷ்ணா!

அதென்ன வழக்கம் போல்:)

நீங்கள் வெட்டி ஒட்டிய கவிதை பற்றிய தீர்ப்பை காலம் தீர்மானிக்கட்டும்.பதிலாக நீங்கள் பின்னூட்டமிட்டதால் ஒரு உண்மையை விளக்க வேண்டி நினைக்கிறேன்.நீங்கள் எழுதிய வினவுத் தோழர்கள் பற்றிய இடுகையின் தாக்கம் கொண்டே லீனா மணிமேகலை பற்றிய இடுகை எழுத தூண்டியது.

இடுகையில் அடைப்பானுக்குள் உங்களைப் பற்றிக் குறிப்பிட்டதும் அதன் காரணம்.நீங்கள் சென்னை சூழலில் வசிப்பதாலும்,தி.மு.க வின் தாக்கம் இருப்பதாலும் உங்கள் கருத்து உங்கள் பார்வையில் சரியாக இருக்கக்கூடும்.ஆனாலும் அதற்கும் மாற்றுப் பார்வைகள் இருக்கின்றன என்பதனை நீண்ட பதிவுலக வரலாறு கொண்ட நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

ஏழர said...

@மாற்றுப் பார்வைகள் இருக்கின்றன @

இதில் ஆணாதிக்கம் எப்படி வந்தது நீங்கள் இன்னமும் விளக்கவில்லையே?

ராஜ நடராஜன் said...

//கவிதைகள் மட்டுமே விமர்சனங்களை கடந்தும் நிலைத்து நிற்கும். yes, only POETRY will survive not publicity.//

Doc!Thanks for your lines.Sometimes publicity too seems to be a catalyst for survival.

I hope the essence of the poem will survive forever instead of the words.

லீனா மணிமேகலையின் விமர்சனத்துக்குரிய தமிழ்க்கவிதைகள் மட்டுமே எங்கும் பேசப்படுகின்றது.அதே கவிதை ஆங்கிலத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.இது வரை ஒரு விமர்சனம் கூட அது பற்றி இல்லை.

ராஜ நடராஜன் said...

//இதில் ஆணாதிக்கம் எப்படி வந்தது நீங்கள் இன்னமும் விளக்கவில்லையே?//

மறுபடியுமா நீங்கள்:)

ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் எரிக்கா யங்க்,கமலாதாஸ்,லீனா மணிமேகலை மூவரின் கால கட்டத்திலுமே விமர்சனக் குரல் எழுப்பியவர்கள் ஆண்கள் மட்டுமே.

ஏழர said...

ஆண்கள் மட்டுமே.@@@

இது என்ன தட்டையான பார்வை, ஆண்கள் எதிர்த்தால் அது ஆணாதிக்க கருத்தா.. அப்போ லீனாவின் கூட்டத்தில் பெண்களும் அவர் கருத்துக்களை எதிர்த்து முழங்கினரே அது என்ன பெண்ணிய கருத்தா??? பிரபல பெண் இலக்கியவாதிகள் கூட லீனாவின் கவிதை தவறானது என்று விமர்சித்த்து எந்த வகை???

ராஜ நடராஜன் said...

//இதை படித்துவிட்டுச் சொல்லுங்கள் நடக்கும் பிரச்சனை ஆணாதிக்க கருத்தியலின் விளைவா?...//

நானும் அவ்வப்போது வினவுதளம் சுற்றுபவனதான்.ஆனால் அனைத்தும் பின்னூட்ட கருத்து கூறலுக்கு உட்பட்டவைதானா?

எனக்கு இடுகையின் லெனின் புகைப்படம் மிகவும் பிடித்திருக்கிறது.

ராஜ நடராஜன் said...

//இது என்ன தட்டையான பார்வை, ஆண்கள் எதிர்த்தால் அது ஆணாதிக்க கருத்தா.. அப்போ லீனாவின் கூட்டத்தில் பெண்களும் அவர் கருத்துக்களை எதிர்த்து முழங்கினரே அது என்ன பெண்ணிய கருத்தா??? பிரபல பெண் இலக்கியவாதிகள் கூட லீனாவின் கவிதை தவறானது என்று விமர்சித்த்து எந்த வகை???//

தட்டையல்ல!உங்கள் கருத்தும் நீங்கள் சொல்லும் இலக்கியம் பேசிய பெண்களும் ஒரு வட்டம் போட்டுக்கொண்டு பேசுகிறீர்கள்.நான் வட்டங்களைத் தாண்டி நின்று பேசுகிறேன்.அதனால் நமது பார்வைகள் வித்தியாசப்படுகின்றன.

ஏழர said...

ஆண்கள் எதிர்த்தால் ஆணாதிக்கம் என்ற வட்டத்திற்குள் நின்று பேசுவது நீங்கள், வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள் என்று அழைக்கிறேன் நான்

ராஜ நடராஜன் said...

//ஆண்கள் எதிர்த்தால் ஆணாதிக்கம் என்ற வட்டத்திற்குள் நின்று பேசுவது நீங்கள், வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள் என்று அழைக்கிறேன் நான்//

மீண்டுமா:)உண்மை தமிழன் தளத்தில் நீங்கள் அதியமானுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்ததை கண்டு விட்டு வருகிறேன்.

யார் வட்டங்களில் நின்று கொண்டு எழுதுகிறார்கள்,யார் வட்டங்கள் போட்டுக் கொண்டே பின்னூட்டமிடுகிறார்கள் என்பதை படிப்பவர்கள் தீர்மானிக்கட்டும் தோழரே!

ஏழர said...

உங்கள் தளத்தில் கேட்டப்பட்ட கேள்விக்கு பக்கத்து தள விவாதத்தில் பதில் தேடுவது நல்ல காமெடி, அதியமான் கம்யூனிசத்தை வெறுப்பவர் முதலாளித்துவ ஆதரவாளர். அவரிடம் மூலதனத்தின் தீங்கை பற்றி பேசுங்கள் அவரது வட்டம் புரியும். நிற்க

ஆண்கள் எதிர்த்தால் ஆணாதிக்கம் என்ற கூற்றை நீங்கள் இந்த பிரச்சனைக்கு பொறுத்தமாக இன்னமும் விளக்க வில்லையே

ராஜ நடராஜன் said...

//உங்கள் தளத்தில் கேட்டப்பட்ட கேள்விக்கு பக்கத்து தள விவாதத்தில் பதில் தேடுவது நல்ல காமெடி, அதியமான் கம்யூனிசத்தை வெறுப்பவர் முதலாளித்துவ ஆதரவாளர். அவரிடம் மூலதனத்தின் தீங்கை பற்றி பேசுங்கள் அவரது வட்டம் புரியும். நிற்க

ஆண்கள் எதிர்த்தால் ஆணாதிக்கம் என்ற கூற்றை நீங்கள் இந்த பிரச்சனைக்கு பொறுத்தமாக இன்னமும் விளக்க வில்லையே//

நான் பின்னூட்டங்களுக்கு பதில் சொன்ன நினைப்பில் மற்ற பதிவர்களின் இடுகையைப் படிக்கும் போது நீங்கள் அதியமானுடன் விவாதித்துக் கொண்டிருந்த காரணத்தால் மீண்டும் திரும்பி வரும் போது நீங்கள் மற்றுமொரு கேள்வியுடன் நின்றிருந்தீர்கள் என்ற பொருளிலே அதியமானுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தீர்கள் என்று குறிப்பிட்டேன்.

அதியமான் கம்யூனிசத்தை வெறுப்பதற்கான காரணத்தையும் முதலாளித்துவம் கம்யூனிசத்தை விட மக்களுக்கு பயன்படுகிறதென்பதையும் ஆணித்தரமாக அவரது தளத்தில் குறிப்பிடுகிறார்.அதற்கான ஏற்றுக்கொள்ளும்படியான எதிர் விவாதங்களை யாரும் அவரது தளத்தில் முன்வைக்கவில்லை என்பதோடு அவரவர் சார்ந்த இசங்களின் நம்பிக்கைகளை முறியடிப்பதும் எளிதான விசயமல்ல.இப்பொழுது நீங்கள் தொடர்ந்து என்னிடம் விவாதிப்பதன் பொருள் கூட உங்களுக்கு இருக்கும் நம்பிக்கைகளுக்கு மாற்றான கருத்தாக கம்யூனிச தலைவர்களின் பெயர் காரணம் கொண்டே.

நமது விவாதம் கம்யூனிசம்,முதலாளித்துவம் பற்றியதல்ல என்பதால் அதற்கான தருணங்கள் ஏற்படும் நேரத்தில் அதுபற்றி விவாதிப்போம்.

ஆணாதிக்கம் பற்றி மூன்று பெண்களுக்கும் ஏற்பட்ட எதிர்ப்புக்களை குறிப்பிட்டும் நீங்கள் புரியாத மாதிரியே கேட்பது எனக்கு வியப்பை அளிக்கிறது:)

உலகம் இயங்கப்படும் தவறுகளின் மொத்தக் கூறுகளில் ஆண்களின் ஆணாதிக்க பங்கே பெரிது என்று கருதுகிறேன்.அதற்கு சான்றாக பெண்கள் விவாதிக்க வேண்டிய ஒரு பொருளை நாம் இருவரும் கூட தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது.பெண்களுக்கான பார்வையும் கூட இருவிதமாக இருந்தாலும் கூட இதுபற்றியெல்லாம் அவர்கள் விவாதிப்பதற்கான அங்கீகாரம் சமூகத்தில் இல்லை என்பதனாலேயும் அவர்கள் இன்னும் முடங்கிக் கிடக்கிறார்கள் என்பதோடு கவிதை பற்றி கூப்பாடு போடுபவர்கள் ஆண்களா அல்லது பெண்களா என்பதையும் பொதுப்பார்வைக்கு விட்டு விடுகிறேன்.

கலகலப்ரியா said...

intha approach enakku pidichirukku... =)

ராஜ நடராஜன் said...

//ntha approach enakku pidichirukku... =)//

பதிவுலக ரௌத்திரமே! வருகைக்கு நன்றி சொல்வதுடன் தமிழில் இரண்டு வார்த்தை சொன்னீங்கன்னா புரியும்:)

கலகலப்ரியா said...

//பதிவுலக ரௌத்திரமே! வருகைக்கு நன்றி சொல்வதுடன் தமிழில் இரண்டு வார்த்தை சொன்னீங்கன்னா புரியும்:)//

ஆகா கெளம்பிட்டாய்ங்கையா கெளம்பிட்டாய்ங்க...

யூ மீன் டமில் வேர்ட்ஸ்.. டூ டமில் வேர்ட்ஸ்..

1. கருணாநிதி
2. கனிமொழி

அம்புட்டுதாம்பா... வர்ட்டா..

கண்ணா.. said...

என்னப்பா இது என்ன மாதிரி பச்சபுள்ளைங்க வர்ர இடம் இன்னைக்கு இரத்த பூமியா இருக்கே...


ஓகே நான் நாளைக்கு வாரேன்

:)

ஏழர said...

@@ஆணாதிக்கம் பற்றி மூன்று பெண்களுக்கும் ஏற்பட்ட எதிர்ப்புக்களை குறிப்பிட்டும் நீங்கள் புரியாத மாதிரியே கேட்பது எனக்கு வியப்பை அளிக்கிறது:)@@

புரியாததை போல நான் கேட்கவில்லை, சத்தியமாக புரியவில்லை. ஏனெனில் லீனாவின் கவிதையை பெண்களும் எதிர்க்கின்றனர், பெண் கவிஞர்கள் உட்பட, அவர்கள் யாரும் கம்யூனிஸ்டும் இல்லை - அப்படியெனில் அதில் ஆணாதிக்க்மோ கம்யூனிச வட்டமோ எப்படி வரும்.


பொதுபுத்தியான ஆண்கள் எதிர்த்தால் ஆணாதிக்கம் என்ற ஒரு கருத்தை கொண்டு இதை பரிசீலிக்க துவங்கினால் ஜெய்லலிதா போன்றவர்கள் எடுக்கும் முடிவை யாரும் கேள்விகேட்கவே முடியாது.
- ஒரு பெண் என்பதால் என்ற பிலிமை அவரும் ஓட்டியவர்தான் -

ஒரு பிரச்சனையை அது எந்த கருத்தியலுக்கு சேவை செய்கிறது என்ற நோக்கில்தான் பரிசீலிக்கப்ப்டவேண்டும், அந்த வகையில் உங்களால் லீனா கவிதைகளடுக்்கான எதிர்ப்பு ஆணாதிக்கம் என்பதை நிறுவ முடியுமா என்ற பாருங்கள். இதை உங்களுக்கு புரியவைக்கவே நான் உங்களுடன் உரையாடியிருக்கிறேன்
இதற்காக அல்ல...

@@இப்பொழுது நீங்கள் தொடர்ந்து என்னிடம் விவாதிப்பதன் பொருள் கூட உங்களுக்கு இருக்கும் நம்பிக்கைகளுக்கு மாற்றான கருத்தாக கம்யூனிச தலைவர்களின் பெயர் காரணம் கொண்டே.@@


அதியமான் அதிமாக விவாதிப்பது வினவு தளத்திலும் அசுரன் தளத்திலும். அங்கே அவருடைய முதலாளித்துவ சார்பு கருத்துக்கள் பலமுறதை முறியடிக்கப்ட்டிருக்கின்றன. வாய்ப்பிருந்தால் சென்று படிக்கவும்

ராஜ நடராஜன் said...

////பதிவுலக ரௌத்திரமே! வருகைக்கு நன்றி சொல்வதுடன் தமிழில் இரண்டு வார்த்தை சொன்னீங்கன்னா புரியும்:)//

ஆகா கெளம்பிட்டாய்ங்கையா கெளம்பிட்டாய்ங்க...

யூ மீன் டமில் வேர்ட்ஸ்.. டூ டமில் வேர்ட்ஸ்..

1. கருணாநிதி
2. கனிமொழி

அம்புட்டுதாம்பா... வர்ட்டா..//

கனிமொழி சரி!கருணாநிதி தப்பு.

ராஜ நடராஜன் said...

//என்னப்பா இது என்ன மாதிரி பச்சபுள்ளைங்க வர்ர இடம் இன்னைக்கு இரத்த பூமியா இருக்கே...


ஓகே நான் நாளைக்கு வாரேன்

:)//

கண்ணா!சரியா சொன்னீங்க போங்க:)சீரியஸான தொடர் நிகழ்வில் உங்கள் பின்னூட்டத்தையும்,கலகலப்ரியா இரண்டு தமிழையும் கவனிக்க மறந்து விட்டேன்.

ராஜ நடராஜன் said...

//@@ஆணாதிக்கம் பற்றி மூன்று பெண்களுக்கும் ஏற்பட்ட எதிர்ப்புக்களை குறிப்பிட்டும் நீங்கள் புரியாத மாதிரியே கேட்பது எனக்கு வியப்பை அளிக்கிறது:)@@

புரியாததை போல நான் கேட்கவில்லை, சத்தியமாக புரியவில்லை. ஏனெனில் லீனாவின் கவிதையை பெண்களும் எதிர்க்கின்றனர், பெண் கவிஞர்கள் உட்பட, அவர்கள் யாரும் கம்யூனிஸ்டும் இல்லை - அப்படியெனில் அதில் ஆணாதிக்க்மோ கம்யூனிச வட்டமோ எப்படி வரும்.


பொதுபுத்தியான ஆண்கள் எதிர்த்தால் ஆணாதிக்கம் என்ற ஒரு கருத்தை கொண்டு இதை பரிசீலிக்க துவங்கினால் ஜெய்லலிதா போன்றவர்கள் எடுக்கும் முடிவை யாரும் கேள்விகேட்கவே முடியாது.
- ஒரு பெண் என்பதால் என்ற பிலிமை அவரும் ஓட்டியவர்தான் -

ஒரு பிரச்சனையை அது எந்த கருத்தியலுக்கு சேவை செய்கிறது என்ற நோக்கில்தான் பரிசீலிக்கப்ப்டவேண்டும், அந்த வகையில் உங்களால் லீனா கவிதைகளடுக்்கான எதிர்ப்பு ஆணாதிக்கம் என்பதை நிறுவ முடியுமா என்ற பாருங்கள். இதை உங்களுக்கு புரியவைக்கவே நான் உங்களுடன் உரையாடியிருக்கிறேன்
இதற்காக அல்ல...

@@இப்பொழுது நீங்கள் தொடர்ந்து என்னிடம் விவாதிப்பதன் பொருள் கூட உங்களுக்கு இருக்கும் நம்பிக்கைகளுக்கு மாற்றான கருத்தாக கம்யூனிச தலைவர்களின் பெயர் காரணம் கொண்டே.@@


அதியமான் அதிமாக விவாதிப்பது வினவு தளத்திலும் அசுரன் தளத்திலும். அங்கே அவருடைய முதலாளித்துவ சார்பு கருத்துக்கள் பலமுறதை முறியடிக்கப்ட்டிருக்கின்றன. வாய்ப்பிருந்தால் சென்று படிக்கவும்//

நான் எப்படி மறுமொழி அளித்தால் உங்களுக்கு மகிழ்வாக இருக்கும் என நினைக்கிறீர்கள்:)

கவிதை,எழுத்து,ஓவியம் போன்றவைகள் சிலருக்கு கட்டுக்கோப்பாகவும்,சிலருக்கு கட்டுடைப்பாகவும் சிலரது பார்வையில் இருக்கும்.அதன் உருவாகும் துவக்கத்தில் அது ஒரு இயல்பான வெளிப்பாடாகவே இருக்கும்.இதன் எதிர்ப்புக்கும்,எதிர்வினைக்கும் யாராவது ஒரு தனிமனித கோபம் கிரியா ஊக்கியாக செயல்பட்டு ஒரு கூட்டு டமார முயற்சியாக எதிர்ப்பாக கிளம்பும் போது மட்டுமே அதன் தாக்கம் விசுவரூபமெடுக்கிறது.

இந்த தியரி நான் சொன்ன மூன்று பெண்களுக்கும்,ஆண்களையும் உள்ளிட்டுக்கொண்டு இன்னும் அகன்று நோக்கினால் சமீபத்திலிருந்து ஹுசைன்,கொஞ்சம் தள்ளி சல்மான் ருஷ்டி,இன்னும் பின்னோக்கி சார்ல்ஸ் டிக்கன்சன் வரைக்கும் ஆணாதிக்கம்(Male Chauvinism) இசங்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு பயணிக்கிறது.

நான் குறிப்பிட்ட இசம் என்ற ஒற்றை வார்த்தையில் எல்லா வட்டங்களும் அடங்குகிறது கம்யூனிசம் உட்பட.நான் என்ன சொல்கிறேன் என்ற உட்புரிதல் எனக்கு இருப்பதாலேயே சர்ச்சைக்குரியதாக்கப்படும் கவிதைக்கும் ஓவியத்துக்கும் எனது கருத்தின் வெளிப்பாடாக இடுகையும்,பின்னூட்ட மறுமொழியும் இடுகிறேன்.பொதுவான ஒரு உரையாடலுக்கே பன்முக கருத்தும் பின்னூட்டங்களும் உள்ளன.இருவரின் மன அலை வரிசை ஒன்றாகப் பயணிக்கும் போது எதிர் விவாதங்கள் உருவாகுவதில்லை.இங்கே எதிர் அலை வரிசை என்பதை விட விவாதத்தை நீட்டிக்கொண்டு போகும் உட்காரணிகள் என்னவென்றும் கொஞ்சம் யோசனை.நான் பதிவிலேயே சொன்னமாதிரி நோஞ்சான் பதிவன்.அப்புறம் வடிவேலு மல்யுத்த மேடையிலிருந்து பரிசு கோப்பையை பிடிங்கிக் கொண்டு போன மாதிரி தோத்தவனுக்குத்தான் பரிசுன்னு சொல்ல வேண்டியிருக்கும்:)

மறுமொழி இறுதிக்கு வந்து விட்டேன் என்று நினைத்தால் அதியமான் படிக்கட்டில் நின்று பயணித்துக்கொண்டிருக்கிறாரா?

வினவு,அதியமான் தளங்களின் உரையாடல்களையும் நான் பார்வையிடுகிறேன்.எனவே இதற்கென்று இன்னொரு பயணம் தேவையில்லை என நினைக்கிறேன்.இரண்டு தளங்களிலும் அதியமானே அதிக சிக்ஸர் இல்ல உலக கால்பந்தாட்டம் வருகிறது அதனால் அதிக கோல் போடுகிறார் என்று வைத்துக் கொள்ளலாம்.அவருடைய காலை தட்டிவிட்டாவது மடக்கலாம் என்ற முனைப்பையும் மீறி அவர் பந்து விளையாடுகிறார்:)The court is on his favour!

ஏழர said...

The court is on his favor!@@@

மிகத் தவறான கணிப்பு காரணம் அதியமான் எதையுமே 60 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவங்களாய் சொல்லப்படுவதை கொண்டு தர்க்கம் புரிகிறார். அது அவருக்கு ஒரு தஞ்சம் போல... இக்கால பிரச்சனைகளின் விவாதங்களில் அவரை நெருக்கி பிடிக்கும் போது உடனடியாக ஸ்டாலின் அராஜகம் என்ற வாதத்தில் புகுந்து கொள்வார்.. இது நடப்பு பிரச்சனையை திசை திருப்புவதோடு இரு தரப்பும் வெல்ல முடியாத விவாத சூழலே மிஞ்சும்..

ஏழர said...

நான் எப்படி மறுமொழி அளித்தால் உங்களுக்கு மகிழ்வாக இருக்கும் என நினைக்கிறீர்கள்:)@@@


நான் எழுதுவதை புரிந்து கொண்டு மறுமொழி அளித்தால் மகிழ்வாக இருக்கும். அடையாள அரசியல் உள்ளிட்ட பின்நவீனத்துவ கருத்துக்களை மறுபசீலனைக்கு உட்படுத்தி மார்க்சிய ஆய்வு என்றால் என்னவென்று நீங்கள் அறிய முயற்சித்தால் மிகவும் மகிழ்ச்சி.

? said...

//...அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்......என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு. source from http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html//

லீணாவின் இந்தக் கருத்து பற்றி ஐயன்மீர் தங்களது கருத்தை அறிய ஆவல்.

? said...

//...அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்......என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு. source from http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html//

லீணாவின் இந்தக் கருத்து பற்றி ஐயன்மீர் தங்களது கருத்தை அறிய ஆவல்.

ராஜ நடராஜன் said...

//he court is on his favor!@@@

மிகத் தவறான கணிப்பு காரணம் அதியமான் எதையுமே 60 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவங்களாய் சொல்லப்படுவதை கொண்டு தர்க்கம் புரிகிறார். அது அவருக்கு ஒரு தஞ்சம் போல... இக்கால பிரச்சனைகளின் விவாதங்களில் அவரை நெருக்கி பிடிக்கும் போது உடனடியாக ஸ்டாலின் அராஜகம் என்ற வாதத்தில் புகுந்து கொள்வார்.. இது நடப்பு பிரச்சனையை திசை திருப்புவதோடு இரு தரப்பும் வெல்ல முடியாத விவாத சூழலே மிஞ்சும்.//

மீண்டும் வணக்கம் ஏழர!தாமத மறுமொழிக்கு மன்னிக்கவும்.தொடர் இடுகைகளின் கவனத்தால் பின்னூட்டம் விட்டுப் போய் விட்டது.அதியமான் 60 வருடங்களுக்குள்ள தொடர் விவாதத்தில்தான் குளோபலிசம் பேசுகிறார்.பின்னூட்டங்கள் விவாதமாக மாறும் போது இரு தரப்பும் தங்கள் நிலையிலேயே நின்று கொண்டிருப்பதையே நேர் விவாதங்களில் கூட கண்டிருக்கிறேன்.நீங்கள் சொன்னபடி நடப்பு பிரச்சினையை விட்டு விட்டு பின்னூட்டமும்,மறுமொழியும் செல்வதால் இத்துடன் தற்போதைக்கு முற்றும் சொல்லலாமே இருவரும்:)

ராஜ நடராஜன் said...

//நான் எழுதுவதை புரிந்து கொண்டு மறுமொழி அளித்தால் மகிழ்வாக இருக்கும். அடையாள அரசியல் உள்ளிட்ட பின்நவீனத்துவ கருத்துக்களை மறுபசீலனைக்கு உட்படுத்தி மார்க்சிய ஆய்வு என்றால் என்னவென்று நீங்கள் அறிய முயற்சித்தால் மிகவும் மகிழ்ச்சி.//

ஏழர!வினவு தளத்தில் உங்கள் முகம் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறதென்று எனக்கு தெரியாது.உங்கள் சமூக உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன்.அவ்வப்போதும் வினவு தளத்தை தொடரவும் செய்கிறேன்.ஆனால் தமிழ் மண்ணுக்கு ஒவ்வாத முகமூடிகளைப் போட்டுக்கொள்ளும் காரணங்களாலே உங்கள் களப்பணிகள் வேறுவிதமாக நோக்கப்படுகின்றன என்று நினைக்கிறேன்.இயல்பாய் எழும் சமூக சிந்தனைகளுக்கும்,கோபங்களுக்கும் மாவோயிசம் போன்ற அயல் சித்தாந்தங்களே உங்களை வேறு முகமாய் சித்தரிக்கின்றது என நினைக்கிறேன்.மார்க்சீய ஆய்வுகள் வினவு தளத்தில் தேடவும் முயற்சிக்கிறேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

////...அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்......என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு. source from http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html//

லீணாவின் இந்தக் கருத்து பற்றி ஐயன்மீர் தங்களது கருத்தை அறிய ஆவல்.//

வணக்கம் பெருந்தேவி!ஜமாலனின் எழுத்துக்களை சில வருடங்களுக்கு முன்பு வாசித்திருக்கிறேன்.இன்ன பிற பக்கங்களில் வந்து விட்டு நோவம் சாம்ஸ்கி பக்கத்துடன் நின்று விட்டேன்.லீனாவின் கடிதம் குறித்தும் வாசித்தேன்.இது உங்களுக்குள்ளான உரையாடல் என்பதால் இதில் நான் என்ன கருத்து கூற இயலும் என தெரியவில்லை.இருந்தும் மீண்டும் ஒரு ஆள்ந்த மீள் வாசிப்புக்குப் பின் எனக்கு புலப்படுவதை சொல்கிறேனே?உங்கள் தளத்திற்கு மீண்டும் வருவேன்.நன்றி.

Perundevi said...

//வணக்கம் பெருந்தேவி!ஜமாலனின் எழுத்துக்களை சில வருடங்களுக்கு முன்பு வாசித்திருக்கிறேன்.இன்ன பிற பக்கங்களில் வந்து விட்டு நோவம் சாம்ஸ்கி பக்கத்துடன் நின்று விட்டேன்.லீனாவின் கடிதம் குறித்தும் வாசித்தேன்.இது உங்களுக்குள்ளான உரையாடல் என்பதால் இதில் நான் என்ன கருத்து கூற இயலும் என தெரியவில்லை.இருந்தும் மீண்டும் ஒரு ஆள்ந்த மீள் வாசிப்புக்குப் பின் எனக்கு புலப்படுவதை சொல்கிறேனே?உங்கள் தளத்திற்கு மீண்டும் வருவேன்.நன்றி.//
Rajanatarajan, I do not know who you are. This is the first time I am visiting your blog and putting this comment. In a previous comment by you, you have unnecessarily addressed someone with my name regarding a feedback comment. Why do you drag my name? I do not understand why you use my name, when I have not posted any comment in your blog hitherto.
Perundevi

ராஜ நடராஜன் said...

//Rajanatarajan, I do not know who you are. This is the first time I am visiting your blog and putting this comment. In a previous comment by you, you have unnecessarily addressed someone with my name regarding a feedback comment. Why do you drag my name? I do not understand why you use my name, when I have not posted any comment in your blog hitherto.
Perundevi//

Sincere regrets for my misunderstanding.

ஜமாலன் said...

நண்பரே தேவையில்லாமல் பின்னூட்டியிருக்கம் எங்கள் பெயரால் இதை எழுத நேர்கிறது.

எழுதுவதற்கு முன்பாக எழுதுபவர் தன்னை நீதிமானாகவும், எதிர்காலத்தை கணிக்கும் ஆருடவாதியாகவும் கருதிக் கொள்வது நாட்டமைத்தனம் மட்டுமில்லை அது ஒரு மதவாதமும்கூட. நாங்கள் (நானும் பெருந்தேவியும்) இதனை உணர்ந்ததால்தான், அக்கவிதைகளை இலக்கிய உரையாடலாக முன்வைத்தோம். “கட்டவிழ்ப்பு“ என்ற ஒற்றை வார்த்தையை கொண்டு கவிதையை கவிழ்க்கும் சாமர்த்தியம் உங்களைப்போல இல்லை என்பது வருத்தமே. :) தீர்ப்புகள் திருத்தப்படலாம் என்கிற தமிழ்சினிமா போன்ற உங்கள் வசனத்தை நினைத்து இறும்பூதெய்கிறோம். :)

ஆணாதிக்கம் போன்ற பூச்சாண்டிகள் பேசி பேசி அலுத்தவை. இப்படி எழுதுவதால் நீங்கள் ஆணாதிக்கத்திற்கு வெளியில் நிற்பதாக நம்புகிறோம். இந்த 'உள்ளே வெளியே' விளையாட்டில் எனக்கு ஆர்வமில்லை. இரண்டு கவிதைகளை எதிர்ப்பதாக சொல்பவர்கள் யாரும் அதை பெண் எழுதினார் என்பதற்காக எதிர்ப்பதாக எனது சிற்றறிவிற்கு தெரியவில்லை. வழக்கில் நிற்காத ஒரு வாதம் இது. இது உரையாடலை வசதியாக திசைதிருப்பும் முயற்சி. கண்டனக்கூட்டம்கூட ஆணாதிக்க எதிர்ப்பிற்காக நடத்தப்படவில்லை. அது நடத்தப்பட்ட எழுத்தாளரின் உரிமை குறித்துதான். புதுசு புதுசா எதாவது சொல்லாதீங்க. :)

அப்புறம், “மலையில் ஏறி நின்றுக்கொண்டு மாங்காய்ப்பால் புளிக்கிறது” என்பதாக பேசுவதில் என்ன பயன்? எந்த உரையாடலையும் உள்வாங்கி எழுதப்பட்டதாக தெரியவில்லை இப்பதிவு. அவர் பெண் உறுப்புகளை பற்றி எழுதியதற்காக அவர் மீது கண்டணம் தெரிவிக்கப்படவில்லை. என்னைப் பொறுத்தவரை கண், வாய், மூக்கு என்பதைப்போல யோனி என்பதும் ஒரு சொல்தான். சொல்லிற்கான மதிப்பீட்டை ஏற்பதிலும், நிராகரி்ப்பதிலும்தான் அரசியல் உள்ளது. அவர் எதை கவிதையாக பேசினார் என்பதுதான் விமர்சனமாக (எங்களால்) முன்வைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் குறைந்தபட்சம் எங்கள் உரையாடலை நேரம் இருந்தால் இறங்கி வந்து வாசித்துப்பாருங்கள். மலைமேல் அமர்ந்து கொண்டு வாசித்தால் புளிக்கத்தான் செய்யும்.

மறுபடியும் ஆரம்பத்திலிருந்தா? ஸ் இப்பவே கண்ண கட்டுது. ))

இதோடு எந்த தொடர்புமில்லாமல் எங்கள் பெயரிட்ட பின்னூட்டத்திற்கான எனது கருத்து முடிந்தது.

ஜமாலன் said...

இனி உங்கள் பதிவு பற்றி “இலக்கிய இம்சையின்“ கருத்துக்கள்....

//என்னை மாதிரி நோஞ்சான் பதிவராக இருந்தால் ஒரு பார்வையிட்டு விட்டு ஒதுங்கிப் போகும் மனப்பான்மையோ,பிள்ளைப் பூச்சியையெல்லாம் அடிப்பதா என்ற பரிதாபம் கொண்டோ,நமக்கு நிகரான கருத்துவாதியா என்றோ,மூக்குல ரோசம் வர்றமாதிரி எழுத மாட்டேன்கிறானே என்று அகன்று போவதையும் அவதானித்தேன்.//

நீங்கள்கூட லீனா-விற்காகத்தான் கருத்து சுதந்திரத்தை காக்க “எம்ஜியார்“ போல பாய்ந்து பதிவு போட்டதாக நினைத்தேன். யாரும் கண்டுகொள்ளவில்லை என்றுதான் பதிவு போட்டீர்களோ.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்... உள்ளேன் ஐயா கொண்டிக் குப்பம் மாரிமுத்து சார்பாக அண்ணாத்த பதிவுக்கு 101 மொய்யி... :)

//இதே எதிர்வினைக்காரர்கள் இன்னொரு பிரபல பதிவரின் தளத்திற்கு சென்றால் விவாதத்திற்கான களம் மாறி வார்த்தை சொற்றாடல்கள் மாறிப் போகின்றன.எனவே யார் யார் வாய் எப்பொருள் கேட்பினும் சொல்பவரின் பெயர்ச்சொல் முன் நிற்கும் புதிய மொழியை உணர்ந்து கொண்டேன்.//

வினைச்சொல் இல்லாத வாக்கியம் எத்தனை பெயர்ச்சொல்கள் இருந்தாலும், பயனற்றது. பெயர்சொல்லின் பொருள் வினைச்சொல்லில்தான் உள்ளது. “ஓடு“ என்கிற வினைச் சொல்லில் பெயரே இல்லைதான், ஆனாலும், சொல்பவர் மற்றும் சொல்லப்படுபவர் பெயரும் அதற்குள் உள்ளது மறைபொருளாக. மெய்ப்பொருள் காண்பதறிவு. மெயப்பொருள் என்பது பெயரும்-வினையும் சேர்ந்ததா? தனியா? என்பதுதான் பிரச்சனை.

//இப்பொழுது லீனா மணிமேகலை என்ற பெண்ணின் கவிதைகள் விவாதப் பொருளாகியுள்ளது.//

மெய்ப்பொருள்காணும் கண்கொண்ட நீங்கள் இரண்டு கவிதைகள் என்றுமட்டும் எழுதாமல் பதிவு தலைப்பிலிருந்து இங்குவரை பெயரை ஏன் பயன்படுத்துகிறீர்கள். பெயரை பயன்படுத்தாமல் எதை குறித்து பேசுவீர்கள்? காற்றுடன் கைகலக்க நாம் என்ன வைரமுத்தா? நீங்களும்கூட கவிதை பற்றி பேசவில்லை. கவிஞரைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இந்த முரணபாட்டை புரிந்துகொள்ள எந்த இஸமும் தேவையில்லை. ஒரு டம்ளர் தக்காளி ரசம் போதும். :)

ஜமாலன் said...

(தொடர்ச்சி... )

//நிர்வாணம்,உடல் பற்றிய உணர்வுகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் உளவியலாக தனிமனிதனுக்கு ஒரு அதிர்ச்சியை தருகிறது என்ற புரிதலையும் இப்பொழுது ஏற்படுத்துகிறது.ஆனால் தனிமனிதக் கோபங்கள் ஒரு இசத்துக்குள் நுழையும் போது விவாதப் பொருள் ஒரு புதிய வடிவம் பெறுகிறது.//

ஐயன்மீர் தாங்கள் கூறவரும் கருத்து? நீங்கள் தனிமனித உளவியலை தாண்டியவர் என்றா? அல்லது மீண்டும் மலை ஏறி பிரசங்கம் செய்பவரான கற்பிதமா? இசத்துக்குள் நுழையும்போது என்றால்? அதென்ன சந்தா பொந்தா? நீங்கள் எல்லா இசத்தையும் தாண்டிய கோப தாபம் அற்ற முற்றும் துறந்தநிலையிலான ஒரு மதிப்பீடு இதில் உள்ளதே, இதை எந்த இஸம் என்று சொல்வது நண்பரே.

சார்.. இந்த ஏரியாவுல இலக்கியவாதின்னு பாஃர்ம் ஆயிட்டேன். என்னையும் ஜீப்ல ஏத்துங்க என்பதைப்பொல உள்ளது. :)

//அவரது சினிமா பாடல்களின் கவிதை வரிகளும்,அர்த்தமுள்ள இந்துமதமும் மக்கள் மனதில் நிரந்தரமாக குடிகொண்டு விட்டது.//

வாடகையில்லாமலா? “குமரி்ப் பெண்ணின் உள்ளத்தில் குடியிருக்கவே வாடகை என்ன“ (இது எழுதினது கண்ணதாசன் இல்லை என்று நினைக்கிறேன். தமிழ்சினிமா எம்ஜியார்-சிவாஜி அரசியல்படி இதனை வாலியோ, புலமைப்பித்தனோதான் எழுதியிருப்பார் என நினைக்கிறேன். இதற்காக யாராவது பதிவு போடாதீர்கள். அப்புறம் அழுதுறவேன். :) ) என்று கேட்டவர்கள் தமிழ் சினமாக்காரர்கள். வாழ்க வளமுடன்!!!

//அண்ணா,கருணாநிதி போன்றவர்களின் துவக்க கால திராவிட இலக்கியங்களும் கூட காலம் கடந்து எடைபோடும் போது நகைப்புக்குரியதாக இருந்த போதிலும் அந்தக்கால கட்டத்தில் சிலரை கோபப்படுத்தியிருக்கும் என்பதையும் கடந்து அவர்களின் பொது முகங்கள் மாறிப் போயிருக்கின்றன.//

சொல்வதற்கு ஒன்றுமில்லை. கண்ணதாசன் எழுத்துக்கள் காலம் கடந்து நிற்கும்போது... இவங்க எழுத்து போய் எங்க நிக்கும்? இடம் வேண்டாமா, அப்புறம் எடைபேட எந்நதிரம் வேண்டும். இதுபோன்ற எண்ணற்ற எழுத்துக்கள் காலம் கடந்து எடைபோட்டபடி நின்றால் இடநெருக்கடி அதிகமாகிவிடாதா? எழுத்திலும் இட ஒதுக்கீடு செய்யவேண்டும் என நினைக்கிறேன். இருந்தாலம் நாமலும் “காலம் என்ற காத்து வீசட்டும் கதவைத் திற“ என்று ஒரு புறம்போக்கு இடத்திலையாவது ஒரு சின்ன குச்சியை நட்டு வைப்போம். :)

ஜமாலன் said...

(தொடர்ச்சி-2)

//நான் எந்த இசத்துக்குள்ளும் மாட்டிக்கொள்ளாத ஒரு சுதந்திர விரும்பி//

இஸமோபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். இஸம் எனறால் ஏனிந்த ஒவ்வாமை. மதம்கூட ஒரு இஸம்தான். இன்று நாம் இஸம் என்கிறோம். அன்று அதை மதம் என்றார்கள். இந்த உலகை பார்ப்பதற்கு ஒரு தத்துவ கோட்பாட்டை அடிப்படையாகக் கொள்வதே இஸம். மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டால், மார்க்சியம். இந்த மதத்தை அடிப்படையாகக் கொண்டால் இந்துயிசம். இஸ்லாமை அடிப்படையாகக் கொண்டால் இஸ்லாமிஸம். இதை அடிப்படையாகக் கொண்டால் இது-யிஸம். அதை அடிப்படையாகக் கொண்டால் அது-யிஸம். குறிப்பாக பேசுபவனைவிட பொதுவாக பேசுபவனாக பாவனை செய்வது மிகவும் ஆபத்தானது.

//பொதுமேடையில் விவாதிக்கப் படும் பொருள்களுக்கும் அப்பால் சார்பு நிலைகளற்ற உண்மைகள் இருக்கின்றன என்று நம்புகிறேன்.//

இந்த நம்பிக்கை இஸம் கடந்ததா? எந்த அடிப்படையில் சார்புநிலைகளற்ற உண்மைகள் சாத்தியமாகும்? ஆக, நீங்களும் ஒரு பொது உண்மையைக் கொண்டுதான் எதையும் அளக்கிறீர்கள். அப்படித்தான் அளக்க முடியும். ஸ்கேல் வேணாமா அளக்க. வாமன அவதாரம் எடுத்து ஒற்றைப்பாதத்தால் உலகை அளக்கலாம். அதெல்லாம் நமக்கு சாத்தியமா? அப்புறம் ஏன் மற்றவர்களை பார்த்து இஸம் என்று ஒவ்வாமையை வெளிப்படுத்துகிறீர்கள். அரசியலை பேசுபவனைவிட அரசியலே இல்லை என்பவன் ஆகப்பெரும் ஆபத்தானவன்.

//நடந்த விவரங்களைத் தெரியாமல் எனும் எனது அறியாமை என்ற சொல்லுக்கு எனது அறியாமை எனும் பட்சத்தில் அதனை அறியாமை என்று ஏற்றுக் கொள்வதில் எனக்கு வெட்கம் கிடையாது.ஆனால் நடந்த விவரங்கள் எனும் போதே கவிதைக்கும் அப்பாலான சில விசுவரூபமெடுக்கிறதென்று நினைக்கிறேன்.//

பார்ரா? நானே பாஃர்ம் ஆயிட்டேன் என்று சொல்வதை. அறியாமை என்பது கண்ணை மூடிக் கொண்டு காண மறுப்புதற்கு பெயரல்ல. கவிதைக்கு அப்பால் விசுவரூபம் எடுத்தாலும் சரி விசு-ரூபம் எடுத்தாலும் சரி (பைத்தியத்திற்கு வைத்தியம் பாக்கும்... என்பதைப்போல அறியாமை பற்றிய வசனங்கள். ) நண்பரே. இந்த பதிவே அந்த விசுவரூபத்தில் ஒன்றுதான். காரணம், நீங்களும் கவிதையை சுற்றி நடந்தவற்றில்தான் ஆர்வம் செலுத்தி எழுதுகிறீர்களே தவிர, கவிதை பற்றி அல்ல. பயனுள்ள பணி அக்கவிதை பற்றிய உங்கள் கருத்தை நீங்கள் எழுதுவதுதான்.
உங்கள் பதிவு எதன் மீது எழுதப்பட்டுள்ளது என்பதை யோசித்துப் பாருங்கள் நான் சொல்லவருவது உங்களுக்கு புரியலாம்.

//லீனா மணிமேகலையின் தொடர்ந்த கவிதைகள் மட்டுமே விமர்சனங்களை கடந்தும் நிலைத்து நிற்கும். //

இந்த வரிகள் மட்டுமே இப்பதிவில் பராட்டுக்குரியவை. அவர் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதற்காகாத்தான் அச்சமூட்டும் இந்த சூழலை கண்டனம் செய்துள்ளோம். மீண்டும் சொல்கிறேன்.. உரிமையும், படைப்பும் வேறவேறு. உரிமையை மதிக்கிறோம், படைப்பை விமர்சிக்கிறோம் இதில் என்ன சிக்கல் உங்களுக்கு.

நீங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதியதால் “காலத்தை கடந்து” நிற்கிறார்கள். (காலம் கடந்து என்பது வழக்கில் பழமையானது என்ற பொருளில் இருப்பதால் அதனை இங்கு அடைப்பில் பயன்படுத்துகிறேன். ) கவிதைகள் மட்டுமல்ல விமர்சனங்களும் அந்தந்த காலத்தில் வந்து நிற்கும். இப்படி பாருங்கள் கமலாதாஸ் கவிதை காலங்கடந்தது என்கிறீர்கள் நீங்கள். சிலர் அவற்றை இன்றும் விமர்சிக்கிறார். இப்பொழுது அந்த சிலருக்கு அது காலங்கடந்தது அல்ல. உங்களுக்கு காலம் கடந்தது. இதையெல்லாம் யார் தீர்மாணிப்பது என்பது முக்கியம். இதை சொன்னால், கருத்தை பார் ஆளைப்பார்க்காதே என்று ”கண்ணைப்பார் சிரி” என்கிற டவுன் பஸ் கண்திருஷ்டி வாசகத்தைப்போல பதிவுகள் எழுதுவீர்கள் அப்புறம். ஏன் வம்பு. :):)

டைல்பீஸாக.. காலங்கடந்து எழுத்தை காப்பாற்ற நாம் அனுகவேண்டியது எதாவது இலக்கிய ஆயுள் காப்பீட்டு கழகங்களைத்தான் (இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளைத்தான்). பதிவுலகில் இப்படி நிறைய காப்பீட்டுக் கழகங்கள் உள்ளன. அப்படியே எங்கள் எழுத்துக்களையும் உங்கள் ஆயுள் காப்பீட்டில் போட்டு வையுங்கள். இது 100 சதமானம் “பின்நவீனத்துவ“-யிஸ.. யிஸ...யிஸ...யிஸ நையாண்டித்தான். :)

அன்புடன்
ஜமாலன்