வார இறுதியில் கடற்கரை போகலாம் என புறப்பட்ட வேலையில் நண்பர் ஜேம்ஸ் நல்ல வெள்ளிக்கிழமைக்காக தேவாலயம் போக வேண்டும் கூட்டிச் சென்று திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டியதால் ஒரு மணி நேரம் நடை போட்டு விட்டு நண்பர் வந்து விடுவார் என்று காத்துக் கொண்டிருந்தேன்.அவர் திரும்ப வராத 15 நிமிடங்களுக்குப் பின் தேவாலயத்திற்குள் ஒரு பார்வையிடலாமே என்று உள்ளே போனேன்.உள்ளே போனால் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.
சுவரின் ஒரே வளாகத்துக்குள் பல விசாலமான அறைகள்,பூங்காடுகள் கொண்ட மைதானம் போன்ற இடங்களில் தனித்தனியாக ஒவ்வொரு மொழிக்கும் தகுந்த வாறு சிலர் பிரார்த்தனை செய்து கொண்டும்,சிலர் சங்கம் கலையும் முன் வடை,டீ சாப்பிடுவது மாதிரி கேக்,சாண்ட்விச்,பெப்சி பானங்களுடன் காணப்பட்டார்கள்.இந்த கூட்டுப் பிரார்த்தனைகளுக்கு வந்தவர்கள் தனித்தனி குழுக்களாக மலையாளம்,தெலுங்கு,தமிழ்,அரேபிய,ஆப்பிரிக்க,ஆங்கில மொழிகளை சார்ந்தவர்கள் என்பது பேச்சு சத்தங்களாலும்,முக உருவங்களிலும் தெரிந்தது.
உருவ வழிபாடுகளில் நம்பிக்கை கொண்ட கத்தோலிக்க திருச்சபையும்,உருவ வழிபாடுகளில் நம்பிக்கையற்ற புரொட்டஸ்டண்ட்,இசைவடிவங்களால் இறைவனை தேடும் பெந்தகொஸ்தே போன்ற பிரிவுகள் இருந்தாலும்,பல நாட்டு கலாச்சார, மொழிகள் கொண்ட இவர்கள் அனைவரும் கிறுஸ்துவர்கள் என்ற ஒரே குடையின் கீழ் இணைகிறார்கள்.
19ம் நூற்றாண்டின் காலனி ஆதிக்கத்தில் பிரிட்டிஷ்காரர்கள்,ஏனைய மேற்கத்தியர்கள் தங்கள் தொழுகைக்கான இடமாக தேர்ந்தெடுத்த இடங்கள்,கட்டிட மாறுபாடுகளுக்கிடையிலும் இன்றும் நிலைத்திருக்கின்றன.இரு ஆலய இடத்தையும் சுற்றி நகரை மேம்படுத்தும் நோக்கில் அகண்ட, நீண்ட ரோடுகளுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.இந்த இரு ஆலயங்களும் மாற்று இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று அரசாங்க தீர்மானங்கள் ஏனோ ஒத்தி வைக்கப்பட்டு நீண்ட ரோடுகளுக்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது.காலனி ஆதிக்கக்காரர்கள் நாட்டை விட்டு செல்லும் முன் கத்தோலிக்க ஆலயத்தை ரோம் போப்பின் டயாசிஸில் இணைத்த காரணம் கொண்டோ பின் ஏனைய நாட்டவர்களின் கிறுஸ்தவ நம்பிக்கைகளுக்கு குவைத் அரசாங்கம் மதிப்பு கொடுத்தோ இந்த இரு வழிபாட்டு இடங்களும் இன்றும் நின்று கொண்டிருக்கின்றன.இந்த இடத்தை வழிபாட்டு நிலமாக உருவாக்கியவர்கள் மேற்கத்திய நாட்டவர்களாக இருந்தாலும் இதன் வழிபாட்டு பலனை அனுபவிப்பவர்கள் பெரும்பான்மையாக ஆசிய நாட்டைச் சார்ந்தவர்களே. தலைப்பில் சொல்ல வந்தது விதை விதைத்தவர்கள் சில பேர்.அதனை அறுவடை செய்து பலன் அடைபவர்கள் ஏனையோர்.
சென்ற வார சென்னை பதிவர்கள் சங்கம் அமைக்கும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்த பதிவர்களின் கருத்துக்களும்,எதிர் வினைகளும்,கும்மிகளும் எதிர்காலத்துக்கான விதை விதைக்கிறோம் என்ற தூரப் பார்வையில்லாமல் இப்பொழுதே விதைத்து சில மாதங்களில் அறுவடை செய்யும் பார்வையும்,கூடவே சிலருக்கு அதன் பலன்கள் போய் சேர்ந்து விடுமோ என்ற ஐயங்களும்,கட்சிகள் சார்ந்த அமைப்பாக ஆகி விடுமோ என்ற அச்சமும் கும்மிகள் அடித்து ஒரு விவாதக்களத்தை நீர்த்துப் போவ செய்வதும் பதிவுகளில் தெரிகிற்து.கூடவே பதிவர் குழுவுக்கான அக்கறையும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
சில நேரங்களில் இணைய தளங்களில் சலசலப்புகள் ஏற்பட்டாலும்,தொலைக்காட்சிகள் ஆற்ற இயலாத விவாதங்களை இடுகைகளின் கருத்துகளும்,பின்னூட்டங்களும் மாற்று ஊடகமாக இணைய எழுத்துகள் செயல்படுகின்றன.எனவே முதல் கூட்டம் பிசுபிசுத்து விட்டதென்று சோர்ந்து போகாமல் சென்னை பதிவர்கள் மொத்த தமிழ் பதிவர்களின் சார்பாக தமிழ் பதிவர்கள் சங்கம் என செயல்படாமல் சென்னையின் சுற்றுப் புறத்தில் உள்ளவர்களை துவக்கமாக கொண்டு செயல்படலாம்.இயலுமென்றால் தற்போது குழுவாக இயங்கும் மதுரை,திருச்சி,நெல்லை,கோவை,ஈரோடு மற்றும் ஏனைய குழுக்களுடன் இணையும் பாலமாக அமையலாம்.
துபாய்,சிங்கப்பூர்,அமெரிக்க பதிவர்கள் அவ்வப்போது ஒன்று கூடுகிறார்கள்.இலண்டன்,ஆஸ்திரேலியா,கனடா போன்ற இடங்களிலும்,இலங்கையிலும் பதிவர்கள் இணைகிறார்கள்.இவர்களையெல்லாம் மொத்த குழுவாக தமிழ்மணம் போன்ற இணைப்புக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளலாம்.தனித் தனியாக தீவுகளாய் இருப்பதை விட மொத்த கருத்துக்களின் தளமாக ஒருமுகப் படுத்துவது அவசியம்.பிரச்சினைகளாக தனி மனித விமர்சனங்கள்,கோபங்கள்,சட்டம்,பொருளாதாரம்,தற்போதுள்ள சூழலிலும்,எதிர்காலத்திலும் தமிழக அரசோ, மத்திய அரசோ,இலங்கை அரசோ குழுவாக செயல்படுவதற்கு முட்டுக்கட்டை போட முன் வரலாம்.இவைகள் தன்னம்பிக்கையை குலைக்கும் எதிர்விளைவுகள்.சரியான வழிகாட்டுதலும்,சட்டபூர்வமான ஆலோசனைக்குழுக்களும்,தலைமை அமைப்புகளும் அமையும் பட்சத்தில் எதிர்விளைவுகளை எதிர்கொள்வது கடினமானதாக இருக்காது.ஆனாலும் அடுத்த கால் நூற்றாண்டில்,அரை நூற்றாண்டில் இணையம் ஒரு வலிமை மிக்க ஏனைய இசங்களை பின் தள்ளக்கூடும் சாத்தியம் இருக்கிறது.அதற்கான விதையாக மட்டும் இப்போதைய பதிவர்கள் நன்மை,தீமைகளை அலசுவதும்,விவாதிக்க மட்டுமாவது செய்வது அவசியம்.
நண்பரை மறந்து விட்டேனே!கருத்துகளிலும்,கொள்கைகளிலும் இருவரும் மாறுபட்டு இருந்தாலும் நட்பு இருவரையும் இணைக்கிறது.கண்டு பிடித்து விட்டேன் அத்தனை கூட்டத்துக்குள்ளும்.
22 comments:
நல்லா எழுதியிருக்கீங்க.
கடைசி பத்தி விக்ரமன் படம் :-):-)
அருமையான கருத்துக்கள்.
ஊர் கூடி தேரிழுத்தால் வந்து சேரும்.
அண்ணே...வணக்கம். நண்பரையும் கேட்டதாச் சொல்லுங்க...
அப்படி ஆரம்பிக்கப் போய் எங்கயோ இழுபட்டு இப்போ குழுமம்னு இருக்கு. பார்க்கலாம். ;)
யாதார்த்தமும் கூர்மையும் கலந்த பார்வையை பதிவு செய்ததற்கு நன்றி.
//அடுத்த கால் நூற்றாண்டில்,அரை நூற்றாண்டில் இணையம் ஒரு வலிமை மிக்க ஏனைய இசங்களை பின் தள்ளக்கூடும் சாத்தியம் இருக்கிறது.அதற்கான விதையாக மட்டும் இப்போதைய பதிவர்கள் நன்மை,தீமைகளை அலசுவதும்,விவாதிக்க மட்டுமாவது செய்வது அவசியம்.//
இதுகுறித்து விரிவான தனி இடுகையை எதிர்பார்க்கி
றேன்.
நன்றி.
//தலைப்பில் சொல்ல வந்தது விதை விதைத்தவர்கள் சில பேர்.அதனை அறுவடை செய்து பலன் அடைபவர்கள் ஏனையோர்.//
ஆகா.... அழகு
//நண்பரை மறந்து விட்டேனே!கருத்துகளிலும்,கொள்கைகளிலும் இருவரும் மாறுபட்டு இருந்தாலும் நட்பு இருவரையும் இணைக்கிறது.கண்டு பிடித்து விட்டேன் அத்தனை கூட்டத்துக்குள்ளும். //
ம்ம்ம்ம்ம்ம்.....
நீரோடை போன்ற எழுத்து நடை.
அருமை.
கலக்கல் நடை நண்பா..
பாண்ட் சைஸ் கொஞ்சம் பெரிது பண்ணினால் இன்னும் எளிதாக படிக்க இயலும் நண்பா..
//நல்லா எழுதியிருக்கீங்க.
கடைசி பத்தி விக்ரமன் படம் :-):-)//
யாரு அந்த செண்டிமெண்ட் இயக்குநரா?அவரோட படங்களை விட சாந்த சொருபீயான அவர் முகம் கவர்கிறது:)
//அருமையான கருத்துக்கள்.
ஊர் கூடி தேரிழுத்தால் வந்து சேரும்.//
தேர் இழுக்க மூச்சு கட்டி இழுக்க வேண்டும்.ஆனால் அங்கேயும் கூட பாருங்க ஒற்றுமைங்கிற புரிந்துணர்வு.அதிலும் சில தினங்களுக்கு முன் பெண்கள் மட்டுமே சேர்ந்து ஒரு தேர் இழுத்துட்டாங்க.
துபாய் ராஜா!மறுபடியும் கேட்கிறேன் நீங்க துபாய் ராஜாவா?அலெக்சாண்டரா:)
//அண்ணே...வணக்கம். நண்பரையும் கேட்டதாச் சொல்லுங்க...//
அவர் இன்றைக்கு ஈஸ்டருக்கு போயிருப்பாரு.ஆமா!அமெரிக்கா முழுவதும் சுத்தற மாதிரி தெரியுது.இடுகைகளும் குறைவதில்லை.அதென்ன ரகசியம்.ஐபேட் கூட நேற்றுதானே அங்கே வெளியிட்டாங்க!
//அப்படி ஆரம்பிக்கப் போய் எங்கயோ இழுபட்டு இப்போ குழுமம்னு இருக்கு. பார்க்கலாம். ;)//
எண்ணங்கள் சரியானவையாக இருந்தாலும் இடுகைகளில் பொது விவாதத்திற்கு கொண்டு வந்து பின் கலந்துரையாடலுக்கு கொண்டு வந்திருந்தால் இந்த சறுக்கல் இருந்திருக்காதுங்க.
இது பற்றிய வெண்பூ,நர்சிம் போன்றவர்களின் இடுகைகளை படிக்கும் போதுதான் இதன் வேறு பரிமாணங்கள் கூட தெரிய வருது.இன்னும் விவாதத்திற்கு கொண்டு வருவதும் தேவையான ஒன்றாகவே தெரிகிறது.கலந்துரையாடல்கள் கட்டாயம் அவசியம்.
////தலைப்பில் சொல்ல வந்தது விதை விதைத்தவர்கள் சில பேர்.அதனை அறுவடை செய்து பலன் அடைபவர்கள் ஏனையோர்.//
ஆகா.... அழகு//
வாங்க ஞானசேகரன்!ஆமாங்க!தேவாலயத்துக்கு இடம் அமைத்ததுமில்லாமல் அதிகார பூர்வமாக உடன்படிக்கை எழுதிகிட்டாங்க போல தெரிகிறது.வளைகுடா யுத்தத்துக்குப் பிறகு சில அமெரிக்கர்கள் பிரார்த்தனைக்கு வந்து போகிறார்கள் போல தெரியுது.ஆனால் வெள்ளிக்கிழமை,ஞாயிறு தினங்களில் திருவிழாக்கூட்டம் மாதிரி நகரின் மத்தியிலும்,ஆலயத்திலும் கூடுகிறவர்கள் ஆசிய மக்களே.
//யாதார்த்தமும் கூர்மையும் கலந்த பார்வையை பதிவு செய்ததற்கு நன்றி.
//அடுத்த கால் நூற்றாண்டில்,அரை நூற்றாண்டில் இணையம் ஒரு வலிமை மிக்க ஏனைய இசங்களை பின் தள்ளக்கூடும் சாத்தியம் இருக்கிறது.அதற்கான விதையாக மட்டும் இப்போதைய பதிவர்கள் நன்மை,தீமைகளை அலசுவதும்,விவாதிக்க மட்டுமாவது செய்வது அவசியம்.//
இதுகுறித்து விரிவான தனி இடுகையை எதிர்பார்க்கி
றேன்.
நன்றி.//
சிரவணன்!கூர்மையாக கவனிக்கிறதும்,விவாதிப்பதும் நீங்கள் என்பது எனது கணிப்பு.அதிலும் வலையுலக பின்னூட்ட மேதாவிகளுக்கென்ற இடுகையில் உங்கள் பின்னூட்ட விவாதம் மிகவும் சிறப்பாக இருந்தது.
//இதுகுறித்து விரிவான தனி இடுகையை எதிர்பார்க்கி
றேன். //
இடுகைகள் இயல்பாக அந்த நேரத்து மனநிலைக்கேறப வருவது.உங்கள் எதிர்பார்ப்புக்களுடன் சொல்ல வேண்டுமென்றால் நிச்சயம் தலைக்கு கொஞ்சம் வேலை தரவேண்டும்.பார்க்கலாம் கால ஓட்டத்தில் சொற்கள் வந்து விழுகிறதா என்று.உங்கள் கருத்துக்கு நன்றி.
//நீரோடை போன்ற எழுத்து நடை.
அருமை.//
எனக்கே ஒரு சந்தேகம்.அண்ணன் அப்துல்லாவா என்று!
சரி உறுதிப்படுத்திக்கலாமென்று வண்டிய எடுத்தா அங்கே குசும்பன் ஏரோபிளேன் வாங்கிட்டு இருக்கிறார்:)உங்க பின்னூட்டத்தால குசும்பனின் விமான குசும்புகளை ரசிக்க முடிந்தது.நன்றி:)
//கலக்கல் நடை நண்பா..
பாண்ட் சைஸ் கொஞ்சம் பெரிது பண்ணினால் இன்னும் எளிதாக படிக்க இயலும் நண்பா..//
கண்ணா!சொன்னாத்தானே தெரியும்.செஞ்சிட்டா போச்சு.நன்றி.
கண்ணா!கலரவே மாத்திட்டேன் போங்க.இப்ப மங்கலா தெரிஞ்சா நான் பொறுப்பில்ல:)
உங்க காதுல மட்டும் ஒரு ரகசியம்.முன்னாடி கணினி முன்னாடி உட்காரனமுன்னா கண்ணாடி கட்டாயம் தேவை.இப்ப கண்ணாடிய தூர வச்சிட்டு மட்டுமே டைப்பதால் வாசிப்பாளருக்கு படிக்கும் வாகு எப்படியிருக்கும் என்பதை இதுவரை யோசிக்கவில்லை.
இஃகிஃகி!
அடுத்த வாரம் ச்சட்டனூகால பதிவர் சந்திப்பு...வர்றீங்களா??
//இஃகிஃகி!
அடுத்த வாரம் ச்சட்டனூகால பதிவர் சந்திப்பு...வர்றீங்களா??//
ச்சட்டனூகால!இந்தப் பேரையே இப்பத்தான் முதன் முறையா கேள்விப்படுகிறேன்.
அங்க வரணுமா என்ன?அதுதான் படமும் இடுகையும் போடறீங்களே.
Post a Comment