Followers

Monday, November 25, 2013

துபாய் - தனித்திறமை வேலை வாய்ப்பு

வளைகுடா நாடுகளில் திறமைகளையும்,வணிக ஊக்கப்படுத்தலையும் உள் வாங்கிக்கொள்வதில் துபாய்க்கு முதலிடம் தரலாம்.நாம் ஊர் சுற்றும் குவைத் கொஞ்சம் மிராசு மனப்பான்மையுடனும்,திறமைகளை பார்வையிடுவதிலும் சமர்த்து.வளைகுடா நாடுகளின் எண்ணெய் பொருளாதார வருமானத்தை முதலீடு செய்வதில் ரியல் எஸ்டேட்க்கு முக்கிய பங்குண்டு.

சில தினங்களுக்கு முன்பு பன்னாட்டு நிறுவனங்கள் நிகழ்த்திய உயர் அடுக்கு மாடி கட்டிடங்களின் கண்காட்சியில் துபாயிலிருந்து வந்த ஒரு நிறுவனத்தின் காட்சிப்படுத்தல் மனதைக் கவர்ந்தது.மெரினா கடற்கரை மணலில் சிலர் வீடு கட்டி உடைத்து விடுகிற மாதிரியான ஒன்று. அகர்லிக் எனப்படும் பொருளில் துண்டு துண்டாக மிக நுணுக்கமான வேலைப்பாடு கொண்டு மின்சார இணைப்புடன் கூடிய பல மாடிக்கட்டிடம்.

உதாரணத்திற்கு இங்கே ஒன்று மட்டும் இணைக்கிறேன்.மொத்த நிர்மாண கட்டமைப்புகளை இணைய தொடுப்பில் காணவும்.

http://www.3drmodels.com/gallery/exhibit/exhibit1.html

பல துறைகளாக நிறுவனம் இணைந்து வேலை செய்தாலும் இன்னும் வேலை வாய்ப்புக்கள் இருப்பதாக காட்சியமைப்பை நிர்மாணித்த இந்தியர் சொன்னார்.

கட்டிட வல்லுநர்கள்,அலங்கார ஒளி அமைப்பு திறமை கொண்டவர்கள் விண்ணப்பித்து பார்க்கலாமே!

http://www.3drmodels.com/contact/contact1.html


Saturday, November 2, 2013

கொசுக்கடியா? இனி பயமே வேண்டாம்

எந்த ஊரில் என்ன பொருள் விற்கனும்ன்னு தெரியாமல் சில தாய்வான் நிறுவனங்கள் ஷெராட்டன் ஓட்டலில் டேரா போட்டு பல பொருட்களை விற்றதில் ஒரு பொருள் இந்தியாவை நினைவு படுத்தியது.முதலாவது வளைகுடா சூட்டுக்கு மனிதனே மதிய வெயிலுக்கு தாங்க முடியாது.அப்புறம் கொசு எங்கே தாங்க போகுது. இங்கே வந்து ஒரு நிறுவனம் கொசுவத்தி வேணுமான்னு விற்குது.  இந்தியா டார்ட்டாய்ஸ் மாதிரியெல்லாம் புகை விடாது. டார்ட்டாய்ஸ் விலை என்ன என்பதை கொசு விரட்டியர்கள் யாராவது சொன்னா இந்தியாவில் விற்க முடியுமான்னு யோசிக்கலாம்.

கொசுவத்தியின் விசேசம் என்னன்னா கையில் வாட்ச் மாதிரி கட்டிக்கிறது ஒன்று இன்னொன்று சுவற்றிலோ டேபிளிலோ உட்கார வைக்கிற மாதிரி...நிறுவனம் 10000 + 10000 மொத்தம் 20000 வாங்கினாத்தான் ஆகும் என்கிறது. விலை விபரமெல்லாம் துண்டு போட்டுத்தான் சொல்வேன்:)

வாங்கி விற்க யாராவது இருக்கிறீர்களா? இல்லைன்னா கூகிளிட்டு நீங்களே தேடிக்கண்டு பிடிக்க வச்சுடுவேன்:)

தொலைக்காட்சியில் பார்க்கிற மாதிரியே இன்னும் நிறைய பொருட்களை அறிமுகப்படுத்தலாம்.

இந்தியாவிலிருந்து யாராவது ஏற்றுமதி பொருட்கள் அனுப்ப விரும்பினால் அணுகவும்.

என்ன இது! மறுபடியும் அனுமார் வால் மாதிரி மறுபடியும் பதிவுகள் நீளும் போல தெரியுதே!ஒரு வேளை இதே ட்ரெண்டை புடிக்கனுமோ:)

Friday, November 1, 2013

படம் காட்டி விளக்கு

முந்தைய பதிவில் சில படங்களை ஒட்ட வைத்திருக்கலாம்.சொன்ன கருத்துக்கு ஏதுவாக இருந்திருக்கும்.பதிவு போட்டதற்கு குறைந்த பட்சம் மேலதிக தகவல் தர முடியுமா என்று வெளங்காதவன் கேட்டதற்காக வேண்டி இந்த படம் காட்டி விளக்கு.

Model: Foton FL468-II
Year of Manufacture-2011
Made in China

வெளங்காதவன்!இங்கேயான விற்பனை விலையை மட்டுமே குறிப்பிட்டிருந்தேன்.இதனை இந்தியா அல்லது வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் கப்பல் போக்குவரத்து செலவுகள் கோணத்தில் சிந்திக்க வில்லை.எனவே அசல் நிறுவனமான Foton ல் இந்த உபகரணங்கள் விலை,உதிரி பாகங்கள்,தொழில் நுட்ப உதவிகள்,இறக்குமதி செலவு போன்றவைகளை விசாரிக்கவும்.குவைத்தின் விற்பனை விலை,ஏற்றுமதி செலவு,(கஸ்டம்ஸ் வரி) போன்றவற்றையும் ஒப்பிடவும்.இரண்டில் குவைத்திலிருந்து கொண்டு வருவது லாபகரமாக இருந்தால் வாங்கும் முயற்சியை தொடரவும்.
Model: Foton FL958G-II
Year of Manufacture-2011
Made in China

வாங்கும் இறுதி முடிவு இருந்தால் இங்குள்ள எஞ்சினியரிங் நிறுவனத்துடன் நீங்களே நேரடி தொடர்பு கொண்டு வங்கி தொடர்பு ,கப்பல் ஏற்றுமதி முதற்கொண்டு வியாபாரத்தை மேற்கொள்ள உதவி செய்கிறேன்.A transparent and genuine deal.