Followers

Sunday, July 11, 2010

கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நன்றி.

மனித குலத்தின் மகத்தான தருணங்களாக கால் உதைபந்தாட்டத்தை சொல்லலாம்.பிகில்,விசில்,ட்ரம்,சங்கு,மகிழ்ச்சியின் சத்தம்,துக்கத்தின் உச் என்ற உணர்ச்சியின் அத்தனை சப்தங்களையும் தன்னிலிருந்து மொத்தமாக வெளிப்படுத்தும் மைதான வளையத்தில் இருக்கும் ரசிகர்க்ளே கால்பந்தாட்டத்தின் உண்மையான கதாநாயகர்கள்.கடல் அலைகளின் ஆர்ப்பரிப்புக்கும் ஒலிக்கு மாற்று சப்தமே இந்த மனித ஆர்ப்பரிப்பு.என்ன வர்ணங்கள்,முகப்பூச்சுக்கள்,உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வினாடிகள்.

2000 பவுண்ட் வரை ஒரு டிக்கட் விற்பனையிலிருந்தும் அத்தனை டிக்கட்களும் விற்றுத் தீர்ந்துள்ளன.இதற்கிடையில் யார் ஜெயிப்பார்கள் என்ற மிகப்பெரிய சூதாட்டம் இங்கிலாந்தில் நடைபெறுகிறது.இந்தியாவுக்கு கிரிக்கெட் மாதிரி ஐரோப்பிய நாடுகளுக்கு கால்பந்தாட்டம் வாழ்வின் ஒரு அங்கம்.இந்த முறை இரு ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின்,நெதர்லாந்து இறுதி சுற்றுக்கு விளையாடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் முதல் பாதியில் யாரும் கோல் போடவில்லை.இதுவரை எந்த இறுதிச் சுற்றிலும் இல்லாதபடி ஒரே மஞ்சள் நிற தண்டனைகள்.முதல் பகுதியில் ஆட்டம் ஒன்றும் சோபிக்கவில்லை.இருந்தும் பந்து சுழற்றும் நுட்பத்தில் ஸ்பெயின் தனது வழக்கமான பாணியைக் கைப்பற்றியும் நெதர்லாந்தின் பாதுகாப்பு வளையத்தை உடைக்கமுடியவில்லை. அதேபோல் நெதர்லாந்தும் தனது வேகமான ஓட்டத்தை ஓடியும் கோல் எல்லையில் குளறுபடிகள்.

இரண்டாம் பகுதியில் ஆட்டம் தடையில்லாத ஓட்டமாக களைகட்டியது.அப்படியிருந்தும் நெதர்லாந்தின் மஞ்சள் கார்டுகளிலிருந்து கால் இடறும் அழுகுணி ஆட்டத்தின் காரணமாக சிவப்பு கார்டும் கிடைத்தது.மொத்த விளையாட்டில் ஸ்பெயின் சிறப்பாக விளையாடியதில் அதிக நேரமான 30 நிமிடங்களில் 28வது நிமிடத்தில் கோல் போட்டது.2010ன் புதிய அணியாக தங்கத்தை வெல்லும் ஸ்பெயினுக்கு வாழ்த்துக்கள்.

இந்த முறை மூன்றாம் நிலைக்கான போட்டியாக ஜெர்மனி,உருகுவே போட்டியும் சிறப்பாக இருந்தது.நெதர்லாந்து V ஸ்பெயின் முதல் 45 நிமிட விளையாட்டுடன் நோக்கும் போது ஜெர்மனி V உருகுவே விளையாடிய மொத்த விளையாட்டும் சிறப்பாக இருந்தது.பெனால்ட்டியில் போய் படக்...படக்கென்று இதயம் துடிப்பதை விட அதிக நேரத்தில் விளையாட்டு முடிந்தது நல்லதே:)

இந்த வருட ஆட்டத்தில் ஜோசியகாரர் பால் ஆக்டோபஸ் சொன்னது அத்தனையும் பலித்த மாதிரி தெரிகிறது.இந்த ஒரு மாதத்தில் மனதை இலகுவாக்கி மகிழ்ச்சியடையச் செய்த தென் ஆப்பிரிககா மற்றும் கால்பந்தாட்ட வீரர்கள், ரசிக பங்காளிகள்,பின்னூட்டக்காரர்கள் அனைவருக்கும் நன்றி.ஸ்பெயின் கேப்டன் தங்கத்தை முத்தமிடும் தருணத்துடன் கால்பந்தாட்டம் ,இடுகை இறுதி பெறுகிறது.


Wednesday, July 7, 2010

புதியவைகளை வரவேற்போம்

வந்துட்டோமில்ல:) வந்தா நாலு வருசம்,அஞ்சு வருசம் இடத்தைக்காலியே செய்யறதில்லை.சரி ஒரு முறை ஜெயிச்சமா இன்னொருத்தனுக்கு சந்தர்ப்பம் கொடுக்கலாமேங்கிற எண்ணமே இல்லை.ஆள் மாத்தி ஆள் பட்டா போட்டு உட்கார்ந்துக்கிறாங்கப்பா.நான் கால்பந்தாட்டத்தைச் சொன்னேன். அதுக்கு ஒரு முடிவுரை 2010ன் ஜெர்மனி V ஸ்பெயின் 0-1 என்ற கோல் கணக்கு!இப்படி எல்லாவற்றிலும் புதுமை நிகழ்ந்தால் நல்லாயிருக்குமில்ல:)

இரண்டே விதமான ஆட்டம்தான் கால்பந்தாட்டத்தில்.ஒன்று தென் அமெரிக்க அணிகளின் மெல்ல பந்தை நகர்த்தும் நளினம்.இன்னொன்று ஐரோப்பியர்களுக்கே உரித்தான நீண்ட தூரம் ஓடுவது மட்டும் பாதி மைதானத்துக்குப் பக்கத்திலிருந்தே கோல் போட நினைப்பது.தென் அமெரிக்க நளினம்,ஐரோப்பிய ஓட்டம் இரண்டையும் கலந்து கட்டி விளையாடியது ஸ்பெயின்.

துவக்கம் முதலே பந்தை தனது கால்களில் தக்க வைத்துக் கொண்டு ஆடியது.என்னாச்சு ஜெர்மனிக்கு?வேகமா ஓடறீங்கப்பான்னு சொன்னது காதுல விழுந்து விட்டதா அல்லது ஐ.பி.எல் ரகசியங்கள் ஏதாவது!முதல் பகுதியில் ஓட விட்டு அப்புறம் ஜெயிக்கலாமென்று நினைத்தார்களோ அல்லது அணிக்குள் பதிவுலகம் மாதிரி உள்குத்துக்கள் இரண்டு நாட்களில் நிகழ்ந்ததோ தெரியவில்லை.சுரம் இல்லாமலே துவக்கம் முதல் 75 நிமிடங்கள் வரை ஆடியது.

நம்ம ஊர் மக்கள்ன்னா மட்டும் மூடநம்பிக்கைகளை வாட்டி வதக்கி எடுக்க ஆட்கள் இருக்கிறார்கள்.நீலக்கலர் பனியன் போட்டா ஜெயிச்சுடுவோம்ன்னு ஜெர்மனி கோச் ஜோகிம் லுவிக்கு ஒரு நம்பிக்கை.மனுசனுக்கு நீலக்கலர் பனியனை போட்டா அணி ஜெயிச்சுடும்ன்னு ஒரு மட நம்பிக்கை.அணியின் கூட்டு முயற்சியிக்கு வலு கொடுக்காமல் நீலக்கலர் பனியனில் நம்பிக்கை வைத்ததற்காகவே ஜெர்மனி தோற்றதை வரவேற்கலாம்.

இன்னும் 2 கோல்கள் போடுவதற்கான அழகான சந்தர்ப்பங்களை ஸ்பெயின் அம்போன்னு விட்டது.இருந்தாலும் பந்து நகர்த்தும் திறனைப் பாராட்டவே வேண்டும்.வாழ்த்துக்கள் ஸ்பெயின்.

இறுதி சுற்றுக்கு யாரை ஆதரிக்கலாம்?யோசிச்சு சொல்கிறேன்:)

Tuesday, July 6, 2010

ஜெர்மனி தோற்குது 100 மார்க் பந்தயம்:)

நெதர்லாந்து 3-2 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வென்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.இன்னுமொரு தாதா ஜெர்மனியை நாளை ஸ்பெயின் வென்றால் புதுசா விளையாட்டுக்கு ஒரு மாற்றம் இருக்கும்.இறுதி 90 வது நிமிடத்தில் தட்டச்சு செய்யும் போது உருகுவே இரண்டாவது கோலை போட்டது. இந்த வேகத்தை முன்னால காட்டியிருக்கிறது!. எப்படியோ மூஞ்சியில் மண் ஒட்டாமல் உருகுவே தோற்றதற்கு வாழ்த்துக்கள்.

நிறைய பேர் வேகமாக ஓடுற குதிரை ஜெர்மனி ஜெயிக்குமென்றே பந்தயம் கட்டுவார்கள்.நான் மெதுவா ஓடுற ஸ்பெயின் குதிரை மேல் பந்தயம் கட்டுகிறேன்:)

நாளை பார்ப்போம்.

Saturday, July 3, 2010

ஓடி ரசிக்கும் ஒரே ஆள்

எல்லோரும் மைதானம் முழுவதும் மகிழ்ச்சி,சோக அலைகளை எழுப்புகிறார்கள் விளையாட்டு வீரர்கள்,அவர்கள் குழுவினர் உட்பட.ஆனால் ஆட்டத்தை ஓடி ஓடி பக்கத்திலிருந்து ரசித்தும் ரசிக்க இயலா மனநிலையில் இருக்கும் ஒரே ஆள் பாவப்பட்ட ஒரே ஜீவன் ரெஃப்ரிதானுங்க.திட்டும் வாங்கனும்,நாட்டாமை தீர்ப்பு சரியாகவும் இருக்க வேண்டும்.நடுநிலைமை என்ற நாட்டாமை நிலை இவருக்கு சாத்தியம்தானா என்று திடீரென்று ஒரு சந்தேகம்.

கையப்புடிச்சு இழுத்தா தண்டனை இருக்குதுன்னு தெரிந்தும் கையப்புடிச்சு இழுக்குற சில பேர்வழிகள் மாதிரி உதைபந்தாட்டத்திலும் விட்டேனா பார் உன்னை என்று கையப்புடிச்சு இழுத்த ஸ்பெயின் வீரரால் உருகுவேக்கு ஒரு கோல் போட்டு ஆட்டத்தின் வேகத்தை அதிகரிக்கும் சந்தர்ப்பம் இருந்தும் கோல்கீப்பர் பிடிக்கிறமாதிரி பந்தை தள்ளி வெற்றியை சந்திக்க இயலாமல் போனது.அடுத்த சில நிமிடங்களிலேயே ஸ்பெயினுக்கு இன்னொரு பெனால்ட்டி சந்தர்ப்பம் கிடைத்தது.முதல் பந்தில் கோலான பந்தை ரெஃப்ரி என்ன காரணத்தால் போங்காட்டமென்று சொன்னாரோ தெரியவில்லை இன்னுமொரு முறை பந்தை உதைக்க வேண்டுமென்று சொன்னார்.ஒருவரே சில நிமிட வித்தியாசத்தில் பந்தை உதைக்கும் போது கோல் கீப்பர் பந்தை தவறவிடுவதும்,பிடிப்பதுமென்பதில் இருக்கிறது மனநிலைகள் மற்றும் பந்தை சுழற்றும் சூட்சுமங்கள்.இதைத்தான் சிலர் அதிர்ஷ்டமென்று பெயர் வைத்துக் கொள்கிறார்களோ.

டென்னிசில் இரண்டு முறை கேம்பால் போடற மாதிரி இனிமேல் உதைபந்தாட்டத்திலும் இரண்டு முறை பந்தை அடித்து கோல் போட்டால்தான் வெற்றி விசில் ஊதலாம் என்ற புதிய சட்டம் கொண்டு வந்தால் நல்லது மாதிரி தெரிகிறது.

கஷ்டப்படுறது நாங்க,பொருளுதவி,சந்தைப்படுத்துதலும் நாங்க ....நோகாமல் நொங்கு தின்கிறது மட்டும் தென் அமெரிக்க அணிகளா என்று ஐரோப்பிய அணிகள் மனசுக்குள் இதுவரை புலம்பிகிட்டுருந்தாங்க.

The ball is in your court.அடிச்சு ஜமாய்ங்க மக்களா!

தோற்றாலும் ஜோசியம் சொல்ற பழக்கம் விடமாட்டேங்குதே எனக்கு!ஜெர்மனிV நெதர்லாந்து இறுதிப் போட்டிக்கு விளையாடப்போறாங்க:)

பிகிலுக்குப் பதிலா சங்கா?அவ்வ்வ்வ்வ்!

கவித்துப்புட்டீங்களே!அடிக்கிறதுதான்,அதுக்குன்னு இப்படியா நொங்கெடுப்பீங்க அர்ஜெண்டினாவை.பொழச்சி போகட்டுமென்று ஒரு கோல் போட விடலையே.3-0 என்ற நிலையிலேயே இது தேறாதுன்னு 75 வது நிமிடத்துலேயே ஓடி விட்டேன்.இப்ப ஆட்டம் முடிஞ்சு வந்து பார்த்தா இன்னுமொரு கோல் போட்டு ஜெர்மனி 4-0 ன்னு அர்ஜெண்டினாவுக்கு ஊதிடுச்சு சங்கு.

பிரேசிலே பரவாயில்லை போல இருக்குது.தோற்றாலும் வெற்றி மாதிரி விளையாடிப் போனார்கள்.கொஞ்சம் கூட போராட்ட குணமில்லாமல் இப்படியா தோற்கிறது அர்ஜெண்டினா!

தென் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு தங்கம் வந்து விடும் போல தெரியுதே.உருகுவே மற்றும் பருகுவே போராடும் வல்லமையுடைவை மாதிரி தெரியவில்லை.

இந்த வருடத்தின் சிறந்த ஆட்டக்காரர் என்ற மெஸ்ஸிக்கும்,மரடோனாவின் எதிர்காலத்துக்கும் எனது அனுதாபங்கள்.சொல்றதுக்கு வேற ஒன்றும் தெரியவில்லை.

டிஸ்கி! தலைப்பு உதவி வானம்பாடிகள் பின்னூட்டம்!

திக்....திக்....கணங்கள்

ஒரு மொக்கை ஆட்டத்தையும் திகில்தனமாக்குவது எப்படியென்பதை உருகுவே V கானா ஆட்டக்காரர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.இரு அணிகளுக்கும் 90 நிமிடங்களுக்குள்ளேயே ஆட்டத்தை முடிக்கும் சந்தர்ப்பம் இருந்தும் 1-1 என்ற கோல் 90 நிமிடங்களுக்கு மேல் நீட்டித்து 30 நிமிட அதிக நேரத்துக்கு கொண்டு சென்றார்கள்.

வெற்றிக்கு இறுதி ஒரு வினாடியும் முக்கியம் என்பது கானா 45வது நிமிடத்தில் கோல் போட்டு சமன் செய்ததை பாராட்டியாக வேண்டும்.அதே போல் அதிக நேர ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கோல்கீப்பருக்கு பதிலாக பந்தை தட்டிவிட்ட உருகுவே வீரரால் கிடைத்த பெனால்ட்டியை தவறவிட்ட கானாவின் அணி வீரர் ஜியானின் மன அழுத்தத்தில் துவங்கியது திக்....திக்......கணங்கள்.

கானாவின் கோல் கீப்பர் மேல் நம்பிக்கை வைத்து பெனால்ட்டி பந்துகளை வென்று விடலாமென்று சென்ற கானாவின் பிரார்த்தனையில் கானா கேப்டன் உதைத்த ப்ந்தை உருகுவே கீப்பர் பிடித்து விட்டார். உருகுவே அணியிலிருந்து ஒரு பந்து மேல்நோக்கி வெளியே பறந்து விட்டது.இன்னுமொரு பந்தை உருகுவே கோல்கீப்பர் பிடித்து விட இறுதி பந்தை உருகுவே உள்ளே தள்ளி அரை இறுதி தேர்வுக்குள் நுழைந்து விட்டது.

சந்தர்ப்பமென்பது இப்போதைக்கு உருகுவே பக்கமிருந்தாலும் அரை இறுதியோடு உருகுவே மூட்டை கட்டுமென நினைக்கின்றேன் இப்படி சொதப்பினால்.ஒரு ஆப்பிரிக்க அணி கூட அரை இறுதி வரை செல்லாதது ஆப்பிரிக்க கண்டத்திலுள்ளவர்களுக்க்கு வருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.அந்த வருத்தத்தில் நம்ம ஊர் அக்கா ஒருத்த்ர் நெற்றியில் பொட்டு வச்சிகிட்டு ரசிகர் கூட்டத்தில் இருந்ததை கண்டேன்.அங்கேயே போய் குடியேறிய பரம்பரையோ இல்லை லெமூரியான்னு சொல்ற காலத்திலிருந்தே பரம்பரையா இருக்கிறாங்களோ யாருக்குத் தெரியும்?

Friday, July 2, 2010

தோல்வி நிரந்தரமில்லை

இன்னும் எட்டு அல்லது 12 வருடங்கள் கழித்து உலக கால் உதைபந்தாட்டம் பார்ப்பவர்கள் நிச்சயமாக இன்றைய போட்டியான பிரேசில் V நெதர்லாந்தின் விளையாட்டு வரலாற்றை பின் நோக்கிப் பார்க்கும் போட்டியில் ஒன்றாக இருக்கும்மென்று நிச்சயமாக நம்பலாம்.

10 நிமிட துவக்க ஆட்டத்தில் ரூபினோவின் கோல் பிரேசிலுக்கு உற்சாகத்தையும் பிரேசில் வீரர்களின் கால் சுழற்றழுக்கும் சரியான பந்து மாற்ற ஆட்டத்திற்கு உதாரணமாகவும் இருந்தது.எந்த விளையாட்டைப் பார்த்தாலும் தோல்வியுறும் அணிக்கான காரணமாக சரியான பந்து மாற்றும் திறனும்,கோல் போடும் செவ்வக இடங்களை கடக்க முடியாததுமாகவே இருக்கும்.நெதர்லாந்தின் துவக்க ஆட்டமும் இதற்கான விதி விலக்கு இல்லை.

இடைவேளை 15 நிமிடத்திற்கு பின் துவங்கிய ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் கோல் தளத்தில் பிரேசில் செய்த குளப்பத்தின் காரணமாக தடுக்க வேண்டிய பந்து தானாகவே போய் வலைக்குள் உட்கார்ந்து கொண்டது.அப்போது பிடித்த தோல்வி மனப்பான்மை பிரேசிலின் முக்கிய முன்னணி வீரர்களான ரூபினோ,காக்கா,பேபினோ மூன்று பேரில் பேபினோவிற்கு சிவப்பு போடா வெளியே அட்டை கிடைத்தது.அதற்கான காரணமாக பந்தை விட்டு விட்டு a deliberate attempt to kick the opponent கோபம் நிச்சயம் பேபினோவை வெளியேற்றியது சரியே.

பத்து வீரர்களை வைத்துக்கொண்டு விளையாடி கோல் போட்ட ஆட்டங்கள் முந்தைய உலக போட்டியில் நிகழ்ந்துள்ளது.பிரேசிலும் துவண்டு விடாமல் தங்கள் பலமான வேகமான ப்நது மாற்றத்தை செய்தது.அதற்கு இணையாக இரண்டாம் பகுதியில் உற்சாகம் கொண்ட நெதர்லாந்து இன்னுமொரு கோலை போட்டு 2-1 என்ற நிலையில் முன்னணியில் விளையாடியது.முந்தைய தங்க வெற்றியை முத்தமிட்ட பிரேசிலின் டுங்காவுக்கு மேலாளர் நிலையிலிருந்து இது ஒரு மறக்க முடியாத தோல்வி.

சற்றும் தளராத இரு அணிகளும் ஆடிய ஆட்டமும் , தோல்வியை எப்படி வெற்றிகரமாக மாற்றுவது என்ற தன்னம்பிக்கைக்கும் சரியான உதாரணமாக பிரேசில் V நெதர்லாந்து ஆட்டத்தை கூறலாம்.இந்த ஆட்டத்தின் தோல்வியை வெற்றியாக மாற்றியதில் நெதர்லாந்தின் ஸ்னைடருக்கு பெரும் பங்கு உண்டு. முன்பெல்லாம் நெதர்லாந்து ஆடீனால் மைதானமே ஆரஞ்சால் நிரப்பி விடுவார்கள்.ஆனாலும் அரை இறுதி வரை விளையாடி டாட்டா சொல்லி விடுவார்கள்.பிரேசிலை தோற்கடித்த உற்சாகம் இறுதி ஆட்டத்திற்குள் நுழையும் உற்சாகத்தை நெதர்லாந்துக்கு கொடுக்கும்.

இன்று அடுத்த போட்டியாக உருகுவே V கானா விளையாடுகிறது.நாளை இன்னுமொரு கடினமான போட்டியான அர்ஜெண்டினா V ஜெர்மனி போட்டி இருக்கிறது.அடுத்து பருகுவே V ஸ்பெயின் விளையாடுகின்றன.அதனைப் பொறுத்தே இறுதியாட்ட தகுதிகள் தீர்மானிக்கப்படும்.அர்ஜெண்டினா ஜெர்மனியை தோற்கடித்தால் மரடோனாவுக்கு விளையாடிய நேரத்து தோல்விக்கு இப்பொழுது மருந்து தடவிய மாதிரி இருக்கும்.எனக்கும் விசிலடித்து குதுகலிக்க இயலும்:)