Followers

Saturday, July 3, 2010

திக்....திக்....கணங்கள்

ஒரு மொக்கை ஆட்டத்தையும் திகில்தனமாக்குவது எப்படியென்பதை உருகுவே V கானா ஆட்டக்காரர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.இரு அணிகளுக்கும் 90 நிமிடங்களுக்குள்ளேயே ஆட்டத்தை முடிக்கும் சந்தர்ப்பம் இருந்தும் 1-1 என்ற கோல் 90 நிமிடங்களுக்கு மேல் நீட்டித்து 30 நிமிட அதிக நேரத்துக்கு கொண்டு சென்றார்கள்.

வெற்றிக்கு இறுதி ஒரு வினாடியும் முக்கியம் என்பது கானா 45வது நிமிடத்தில் கோல் போட்டு சமன் செய்ததை பாராட்டியாக வேண்டும்.அதே போல் அதிக நேர ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கோல்கீப்பருக்கு பதிலாக பந்தை தட்டிவிட்ட உருகுவே வீரரால் கிடைத்த பெனால்ட்டியை தவறவிட்ட கானாவின் அணி வீரர் ஜியானின் மன அழுத்தத்தில் துவங்கியது திக்....திக்......கணங்கள்.

கானாவின் கோல் கீப்பர் மேல் நம்பிக்கை வைத்து பெனால்ட்டி பந்துகளை வென்று விடலாமென்று சென்ற கானாவின் பிரார்த்தனையில் கானா கேப்டன் உதைத்த ப்ந்தை உருகுவே கீப்பர் பிடித்து விட்டார். உருகுவே அணியிலிருந்து ஒரு பந்து மேல்நோக்கி வெளியே பறந்து விட்டது.இன்னுமொரு பந்தை உருகுவே கோல்கீப்பர் பிடித்து விட இறுதி பந்தை உருகுவே உள்ளே தள்ளி அரை இறுதி தேர்வுக்குள் நுழைந்து விட்டது.

சந்தர்ப்பமென்பது இப்போதைக்கு உருகுவே பக்கமிருந்தாலும் அரை இறுதியோடு உருகுவே மூட்டை கட்டுமென நினைக்கின்றேன் இப்படி சொதப்பினால்.ஒரு ஆப்பிரிக்க அணி கூட அரை இறுதி வரை செல்லாதது ஆப்பிரிக்க கண்டத்திலுள்ளவர்களுக்க்கு வருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.அந்த வருத்தத்தில் நம்ம ஊர் அக்கா ஒருத்த்ர் நெற்றியில் பொட்டு வச்சிகிட்டு ரசிகர் கூட்டத்தில் இருந்ததை கண்டேன்.அங்கேயே போய் குடியேறிய பரம்பரையோ இல்லை லெமூரியான்னு சொல்ற காலத்திலிருந்தே பரம்பரையா இருக்கிறாங்களோ யாருக்குத் தெரியும்?

7 comments:

vasu balaji said...

டாங்ஸ்ணா. சுட சுட ரெண்டாவது விமரிசனம்.

Karthick Chidambaram said...

எனக்கு என்னமோ இந்த உலக கோப்பை மீது அவ்வளவு ஆர்வம் வரவில்லை.
போன முறையை விட இந்த முறை வேகம் குறைவு என்று நான் நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//டாங்ஸ்ணா. சுட சுட ரெண்டாவது விமரிசனம்.//

தூங்கி எழுந்து பின்னூட்டமிடுகிறேன்:)

ராஜ நடராஜன் said...

//எனக்கு என்னமோ இந்த உலக கோப்பை மீது அவ்வளவு ஆர்வம் வரவில்லை.
போன முறையை விட இந்த முறை வேகம் குறைவு என்று நான் நினைக்கிறேன்.//

கார்த்திக்!முதல் சுற்றுக்கள் எப்பவும் தூங்கி வழியும் ஒன்றுதான் என நினைக்கிறேன்.ஆட்டத்தின் உற்சாகமே கால் இறுதியில் துவங்குவதே வழக்கமென்பதை இப்போதைய ஆட்டங்கள் நிரூபிக்கின்றன.

ஆமா!நீங்க எந்த கட்சி?விளையாட்டைக் கேட்டேன்:)

manjoorraja said...

கானா ஜெயிக்க வேண்டிய ஆட்டத்தை தோற்றது மிகவும் வருத்தமாகவே இருந்தது.

ஆனால் அதைவிட வருத்தம் பிரேசில் அணி தோற்றது. எனது விருப்ப அணியான பிரேசில் தனது அலட்சியமான ஆட்டத்தால் தோல்வியை தழுவியது என்பதே உண்மை. யானைக்கும் அடி சறுக்கும் என நிரூபணமாகிவிட்டது.

இன்றைய ஜெர்மனி, அர்ஜெண்டினா அணிகளுக்கிடையே கடுமையான போட்டி இருக்கும். இதில் வெல்லும் அணியே கோப்பையை வெல்லும் என நம்புகிறேன்.

பார்ப்போம்.

ஹேமா said...

திரும்பவும் உஷாரா விளையாட்டுப் பார்க்கத் தொடங்கீடீங்க.நன்றி நடா உற்சாகமா எங்களுக்கும் தாறதுக்கு.

ஜோதிஜி said...

ரசிக்க கொடுத்து வைத்து மகா ஆத்மாக்கள்.

நடா

ஹேமா ரொம்ப நல்லாயிருக்கே.