நெதர்லாந்து 3-2 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வென்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.இன்னுமொரு தாதா ஜெர்மனியை நாளை ஸ்பெயின் வென்றால் புதுசா விளையாட்டுக்கு ஒரு மாற்றம் இருக்கும்.இறுதி 90 வது நிமிடத்தில் தட்டச்சு செய்யும் போது உருகுவே இரண்டாவது கோலை போட்டது. இந்த வேகத்தை முன்னால காட்டியிருக்கிறது!. எப்படியோ மூஞ்சியில் மண் ஒட்டாமல் உருகுவே தோற்றதற்கு வாழ்த்துக்கள்.
நிறைய பேர் வேகமாக ஓடுற குதிரை ஜெர்மனி ஜெயிக்குமென்றே பந்தயம் கட்டுவார்கள்.நான் மெதுவா ஓடுற ஸ்பெயின் குதிரை மேல் பந்தயம் கட்டுகிறேன்:)
நாளை பார்ப்போம்.
நிறைய பேர் வேகமாக ஓடுற குதிரை ஜெர்மனி ஜெயிக்குமென்றே பந்தயம் கட்டுவார்கள்.நான் மெதுவா ஓடுற ஸ்பெயின் குதிரை மேல் பந்தயம் கட்டுகிறேன்:)
நாளை பார்ப்போம்.
11 comments:
விளையாட்டு முடிய இரண்டு நிமிடம் இருக்கும் போதே தரவு விமல் இரண்டு வரி இடுகை போடுறாங்கப்பா:)
நடா...உண்மையாவா !இல்லை எனக்குன்னா நம்பிக்கை ஜேர்மன் தான்.ஏன் உங்களுக்கு இப்பிடி ஒரு பொறாமை !
ஓஓஓ. நீங்கதான் அந்த ஆக்டபஸ்ஸா:)))
//நடா...உண்மையாவா !இல்லை எனக்குன்னா நம்பிக்கை ஜேர்மன் தான்.ஏன் உங்களுக்கு இப்பிடி ஒரு பொறாமை !//
ஹேமா!இடுகையின் தலைப்பே உங்களுக்காகத்தான்:)பொறாமையே!
ஜெர்மனி ஜெயிக்கும்ன்னு பெரும்பாலோர் நினைக்கிறாங்க.அது உண்மையும் கூட.ஆனா தோற்கும்ங்கிற அணி ஜெயிச்சா அதனோட த்ரில் தனிதான்.கூட ஸ்பெயின் அணியில் இருக்கிறவங்க நிறைய பேர் ஐரோப்பியன் கோப்பைக்கு பார்சலோனா சார்பா விளையாடுனவங்க.மெஸ்ஸிக்கு ஒரு ஸ்பெயின் ஜெர்சி கொடுத்துப் பாருங்க.பார்சலோனா அப்படியே கண் முன் வந்து நிற்கும்.
ஜெர்சின்னு சொன்னதும் கால் இறுதியில் ஸ்பெயின் அணிந்த நீலக்கலர் ஜெர்சி பார்த்தீங்களா?தூள் காம்பினேசன்.
இதுவரைக்கும் ஆடிய அணிகளில் ஸ்மார்ட் மூவ்ங்கிற பெயரை தக்க வைத்துக்கொண்டுள்ள அணி ஸ்பெயின்.
ஜெர்மனி அணியை மராத்தான் ஓட வைக்கலாம்!அந்த மாதிரி ஒரு ஓட்டம்.சில சமயம் அதிகமா ஓடி சக்தியை வீண் செய்யாம களைக்கச் செய்து இறுதி நிமிடங்களில் கோல் போடுவதும் ஒரு விளையாட்டு நுணுக்கம்.விளையாட்டுகளை தொடர்ந்து கவனிச்சுட்டு வர்றீங்கன்னு நினைக்கிறேன்.நான் சொன்னது மாதிரி இறுதி நிமிடக் கோல்கள் நிறைய.நேற்றைய உருகுவே கூட அதையே செய்தது.இருந்தும் நெதர்லாந்தின் விளையாட்டு இறுதி சுற்றுக்கு தகுதியானதே.இல்லைன்னா ஜெர்மனி அரையிறுதியில் ஜெயித்தால் அடிச்சு விளையாட ஆள் வேணுமில்ல:)
//ஓஓஓ. நீங்கதான் அந்த ஆக்டபஸ்ஸா:)))//
நேற்றைய தொலைகாட்சி பிரபலமே அவர்தான்.அவர் பேர் ஆக்டபஸ் இல்ல.பால் என்கிற ஆக்டபஸ்:)பால் சொல்கிற அணிதான் இதுவரைக்கும் ஜெயிச்சிருக்குதாமே.நம்ம ஊர் ஆ சாமிக காதுல விழுந்துடப் போகுது.மீன் எதையாவது தொட்டியில விட்டு கிளிக்குப் பதிலா மீன் ஜோசியம் ஏதாவது சொல்லிடப் போறாங்க.
கற்பனை செய்து பாருங்க!ஒரு பெட்டில ஆம் இன்னொரு பெட்டில இல்லைன்னு எழுதி வச்சிட்டு ஜோசியம் கேட்க வருகிறவர்கள்
1.எனக்கு வேலை கிடைக்குமா?கிடைக்காதா?
2.கல்யாணம் ஆகுமா?ஆகாதா?
3. கோர்ட் கேஸ் சாதகமா அமையுமா?அமையாதா?
4. பரிட்சையில் பாஸ் ஆவேனா?மாட்டேனா?
5.மனசுல ஒண்ணு நினைச்சிருக்கேன்.நடக்குமா?நடக்காதா?
நானும் ஸ்பெயின் ஜெயிக்கும் என்றே நம்புகிறேன்
ஸ்பெயின் தோற்றால் 20 பின்னூட்டங்கள் இடுகிறேன் உங்கள் பதிவிற்கு
//நானும் ஸ்பெயின் ஜெயிக்கும் என்றே நம்புகிறேன்
ஸ்பெயின் தோற்றால் 20 பின்னூட்டங்கள் இடுகிறேன் உங்கள் பதிவிற்கு//
ராம்ஜி!வாங்க!வாங்க!
20 பின்னூட்டமல்ல!ஒன்று சொன்னாலே போதும்:)நன்றி.
பார்த்தீங்களா படிக்கிறவங்களே!நம்ம அணிக்கும் ஆள் இருக்குதுல்ல:)
You got the 100 Mark ;-)
//You got the 100 Mark ;-)//
Thanks:)
கேம்ப்ளிங் தான் ஜெயிக்கும் ...
//கேம்ப்ளிங் தான் ஜெயிக்கும் ...//
செந்தில்!இடுகைகளை பின்னோக்கி பின்னூட்டமிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
கேம்ப்ளிங்க் ஜெயிப்பது கிரிக்கெட்டில்.
கால்பந்தாட்டத்தில் ஜெயிப்பது ஆக்டோபஸ்:)
Post a Comment