Followers

Friday, July 2, 2010

தோல்வி நிரந்தரமில்லை

இன்னும் எட்டு அல்லது 12 வருடங்கள் கழித்து உலக கால் உதைபந்தாட்டம் பார்ப்பவர்கள் நிச்சயமாக இன்றைய போட்டியான பிரேசில் V நெதர்லாந்தின் விளையாட்டு வரலாற்றை பின் நோக்கிப் பார்க்கும் போட்டியில் ஒன்றாக இருக்கும்மென்று நிச்சயமாக நம்பலாம்.

10 நிமிட துவக்க ஆட்டத்தில் ரூபினோவின் கோல் பிரேசிலுக்கு உற்சாகத்தையும் பிரேசில் வீரர்களின் கால் சுழற்றழுக்கும் சரியான பந்து மாற்ற ஆட்டத்திற்கு உதாரணமாகவும் இருந்தது.எந்த விளையாட்டைப் பார்த்தாலும் தோல்வியுறும் அணிக்கான காரணமாக சரியான பந்து மாற்றும் திறனும்,கோல் போடும் செவ்வக இடங்களை கடக்க முடியாததுமாகவே இருக்கும்.நெதர்லாந்தின் துவக்க ஆட்டமும் இதற்கான விதி விலக்கு இல்லை.

இடைவேளை 15 நிமிடத்திற்கு பின் துவங்கிய ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் கோல் தளத்தில் பிரேசில் செய்த குளப்பத்தின் காரணமாக தடுக்க வேண்டிய பந்து தானாகவே போய் வலைக்குள் உட்கார்ந்து கொண்டது.அப்போது பிடித்த தோல்வி மனப்பான்மை பிரேசிலின் முக்கிய முன்னணி வீரர்களான ரூபினோ,காக்கா,பேபினோ மூன்று பேரில் பேபினோவிற்கு சிவப்பு போடா வெளியே அட்டை கிடைத்தது.அதற்கான காரணமாக பந்தை விட்டு விட்டு a deliberate attempt to kick the opponent கோபம் நிச்சயம் பேபினோவை வெளியேற்றியது சரியே.

பத்து வீரர்களை வைத்துக்கொண்டு விளையாடி கோல் போட்ட ஆட்டங்கள் முந்தைய உலக போட்டியில் நிகழ்ந்துள்ளது.பிரேசிலும் துவண்டு விடாமல் தங்கள் பலமான வேகமான ப்நது மாற்றத்தை செய்தது.அதற்கு இணையாக இரண்டாம் பகுதியில் உற்சாகம் கொண்ட நெதர்லாந்து இன்னுமொரு கோலை போட்டு 2-1 என்ற நிலையில் முன்னணியில் விளையாடியது.முந்தைய தங்க வெற்றியை முத்தமிட்ட பிரேசிலின் டுங்காவுக்கு மேலாளர் நிலையிலிருந்து இது ஒரு மறக்க முடியாத தோல்வி.

சற்றும் தளராத இரு அணிகளும் ஆடிய ஆட்டமும் , தோல்வியை எப்படி வெற்றிகரமாக மாற்றுவது என்ற தன்னம்பிக்கைக்கும் சரியான உதாரணமாக பிரேசில் V நெதர்லாந்து ஆட்டத்தை கூறலாம்.இந்த ஆட்டத்தின் தோல்வியை வெற்றியாக மாற்றியதில் நெதர்லாந்தின் ஸ்னைடருக்கு பெரும் பங்கு உண்டு. முன்பெல்லாம் நெதர்லாந்து ஆடீனால் மைதானமே ஆரஞ்சால் நிரப்பி விடுவார்கள்.ஆனாலும் அரை இறுதி வரை விளையாடி டாட்டா சொல்லி விடுவார்கள்.பிரேசிலை தோற்கடித்த உற்சாகம் இறுதி ஆட்டத்திற்குள் நுழையும் உற்சாகத்தை நெதர்லாந்துக்கு கொடுக்கும்.

இன்று அடுத்த போட்டியாக உருகுவே V கானா விளையாடுகிறது.நாளை இன்னுமொரு கடினமான போட்டியான அர்ஜெண்டினா V ஜெர்மனி போட்டி இருக்கிறது.அடுத்து பருகுவே V ஸ்பெயின் விளையாடுகின்றன.அதனைப் பொறுத்தே இறுதியாட்ட தகுதிகள் தீர்மானிக்கப்படும்.அர்ஜெண்டினா ஜெர்மனியை தோற்கடித்தால் மரடோனாவுக்கு விளையாடிய நேரத்து தோல்விக்கு இப்பொழுது மருந்து தடவிய மாதிரி இருக்கும்.எனக்கும் விசிலடித்து குதுகலிக்க இயலும்:)


12 comments:

ராஜ நடராஜன் said...

யாருங்க சிவசங்கர்ன்னு ஒரு புதுமுகம் நமக்கு முன்னாடி பதிவு போட்டு என்னோட ஆட்டத்தை கலைக்கிறது:)

rk guru said...

விமர்சனம் அருமை...

அபி அப்பா said...

நல்ல விமர்சனம் ராஜநடராஜன். ஆமாம் நீங்க சொல்வது மாதிரி நான் முதல்ல சிவசங்கர் பதிவை தான் பார்த்தேன். வீடியோ போட்டு கலக்கியிருக்காரு. நீங்க எழுத்திலே கலக்கிட்டீங்க!

வவ்வால் said...

Raj,

brazil first potta oru goal naduvar cancel seythaar ,aarambathil brazil sema aattam aadiyathu.

15 mins la 2 goals one cancelled.

Neram poga brazil energy level down aanatha naan feel panren.

Brazil red card, appuram game mari pochu.

Brazil out aanathu , feelings ah irukku.

Short pass, smart move ithellam brazil strength.

My two fav team brazil and argentina. Paapom,innum arg, kalathila irukku.

வவ்வால் said...

Team dress colour tournament nadakkum pothe adikkadi yen maathiduranga, brazil yellow dress la aadi iruntha win panni irukkum.

Niraya team ippo tournament naduvila colour maathi dress pottukitanga.

Ithukkum munna ippadi dress colour naduvila maathinatha enakku ninaivillai.

வானம்பாடிகள் said...

விறுவிறுப்பான விமரிசனம்.அர்ஜெண்டினாக்கு பிகிலு ஜெர்மனிக்கு சங்கா:))

ராஜ நடராஜன் said...

பின்னூட்டங்களுக்கு அப்புறம் பதில் சொல்கிறேன்.

உருகுவே V கானா பதிவு போட்டு கானாகாரர்களுக்கு வந்த மன அழுத்தம் இங்கேயும் காற்றடிக்குது:)

ராஜ நடராஜன் said...

//விமர்சனம் அருமை...//

குருவே!

ராஜ நடராஜன் said...

//நல்ல விமர்சனம் ராஜநடராஜன். ஆமாம் நீங்க சொல்வது மாதிரி நான் முதல்ல சிவசங்கர் பதிவை தான் பார்த்தேன். வீடியோ போட்டு கலக்கியிருக்காரு. நீங்க எழுத்திலே கலக்கிட்டீங்க!//

அபி அப்பா!பதிவுலகில் மௌனமாக கவனித்துக்கொண்டிருக்கிறீர்களா அல்லது குழுவோடு மட்டும் கும்மி அடிக்கிறீர்களா முன்பு போல் பெயரை அதிகம் காண இயலவில்லை.

எப்படியோ பெரும் தலைகள் எட்டிப்பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.நன்றி.

ராஜ நடராஜன் said...

//brazil first potta oru goal naduvar cancel seythaar ,aarambathil brazil sema aattam aadiyathu.

15 mins la 2 goals one cancelled.

Neram poga brazil energy level down aanatha naan feel panren.

Brazil red card, appuram game mari pochu.

Brazil out aanathu , feelings ah irukku.

Short pass, smart move ithellam brazil strength.

My two fav team brazil and argentina. Paapom,innum arg, kalathila irukku.//

ஐந்து முறை தா(த்)தாவுக்கா மறுபடியும் ஓட்டு:)அர்ஜெண்டினாவுக்கு வழி விட்டதற்கு பிரேசிலுக்கு நன்றி.

முதல் கோல் போட்டவுடன் பாதுகாப்புக்கு அதிகம் கவனம் செலுத்தியும் கோல் கீப்பர் சொதப்பி விழுந்த முதல் கோல் equalizer ஆனதில் துவங்கியது சறுக்கல் என நினைக்கிறேன்.அதில் அதிக உற்சாகம் நெதர்லாந்துக்குப் பற்றிக் கொண்டது.

சிவப்பு கார்டு ஆட்டத்தின் 75வது நிமிடத்திற்கு மேல் வந்ததால் ஆட்டம் மாறியது என்பதை விட அதற்கு பின்பே பிரேசிலின் தாக்குதல் முயற்சி அதிகரித்தது என்பேன்.

நீங்கள் சொன்ன மாதிரி சிறிய இடைவெளியில் பந்து மாற்றுதல் (even one feet distance short move)
வேற எந்த அணியும் பின்பற்றுவதில்லை.புத்திசாலித்தனமான பந்து நகர்த்தலை எப்படி பிரேசில் தொடர்ந்து விளையாட்டு தலைமுறைகளுக்கு கொண்டு வருகிறதென்பது ஒரூ அதிசயமான விசயமே.

இன்றைக்கு அர்ஜெண்டினா-ஜெர்மனி விளையாட்டை (இந்திய நேரப்படி இரவு 7.30)பார்த்து விட்டு மீண்டும் வருகிறேன்.

ராஜ நடராஜன் said...

//Team dress colour tournament nadakkum pothe adikkadi yen maathiduranga, brazil yellow dress la aadi iruntha win panni irukkum.

Niraya team ippo tournament naduvila colour maathi dress pottukitanga.

Ithukkum munna ippadi dress colour naduvila maathinatha enakku ninaivillai.//

இங்கேயும் மஞ்சள் கலர் செண்டிமெண்ட்டா!ஹா!ஹா!ஹாஆஆ.ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி பிரேசிலுக்கு மஞ்சள் நிறம்தான் மிகப் பொருத்தம்.நீலக்கலர் மரோடானா கேப்டனா இருந்து ஜெர்மனி இறுதி ஆட்டத்திலும் அர்ஜெண்டினாவுக்க்கு ஆப்பு வைத்த்து.

ட்ரெஸ் கோடிங்க் முன்பே உறுதி செய்யப்படுகிறதா அல்லது ஆடும் அணிகளைப் பொறுத்து மாறுகிறதா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை.

ராஜ நடராஜன் said...

//விறுவிறுப்பான விமரிசனம்.அர்ஜெண்டினாக்கு பிகிலு ஜெர்மனிக்கு சங்கா:))//

பாலாண்ணா!மரடோனாவின் வாழ்வில் வரலாறாகப் போகும் களம் ஆப்பிரிக்கா 2010.ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பார்க்கலாமே.கூடவே மெஸ்ஸியின் மெஸ்மரிசம் கண்டுகளிக்கவும் ஒரு சந்தர்ப்பம்.