கவித்துப்புட்டீங்களே!அடிக்கிறதுதான்,அதுக்குன்னு இப்படியா நொங்கெடுப்பீங்க அர்ஜெண்டினாவை.பொழச்சி போகட்டுமென்று ஒரு கோல் போட விடலையே.3-0 என்ற நிலையிலேயே இது தேறாதுன்னு 75 வது நிமிடத்துலேயே ஓடி விட்டேன்.இப்ப ஆட்டம் முடிஞ்சு வந்து பார்த்தா இன்னுமொரு கோல் போட்டு ஜெர்மனி 4-0 ன்னு அர்ஜெண்டினாவுக்கு ஊதிடுச்சு சங்கு.
பிரேசிலே பரவாயில்லை போல இருக்குது.தோற்றாலும் வெற்றி மாதிரி விளையாடிப் போனார்கள்.கொஞ்சம் கூட போராட்ட குணமில்லாமல் இப்படியா தோற்கிறது அர்ஜெண்டினா!
தென் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு தங்கம் வந்து விடும் போல தெரியுதே.உருகுவே மற்றும் பருகுவே போராடும் வல்லமையுடைவை மாதிரி தெரியவில்லை.
இந்த வருடத்தின் சிறந்த ஆட்டக்காரர் என்ற மெஸ்ஸிக்கும்,மரடோனாவின் எதிர்காலத்துக்கும் எனது அனுதாபங்கள்.சொல்றதுக்கு வேற ஒன்றும் தெரியவில்லை.
டிஸ்கி! தலைப்பு உதவி வானம்பாடிகள் பின்னூட்டம்!
6 comments:
நானும் உங்களை மாதிரியே மூன்றாவது கோல் அடித்த பிறகு
ரிமோட்டிற்கு வேலை கொடுத்து வேறு சேனல் வந்து விட்டேன்.
பின்பு செய்தி பார்த்த போதுதான் சவப்பெட்டியின் நாலாவது
மூலையிலும் ஆணி அடித்து விட்டார்கள் என்று.
வாவ்....நான் நிறைய
சந்தோஷமா இருக்கேன் !
Raj,
argentinavukum aappu!
Enna kodumai naan nambina rendu teamum puttukichu.
Pora pokka paartha netherland cup adikkum pola theriyuthu.
Ipl kathai ingayum repeat aavathai kavanichingala,
club matchesla dhool kilapina costly players world cupla sathikkave illai.
Eg.
Rooney,ronaldo,messi
//நானும் உங்களை மாதிரியே மூன்றாவது கோல் அடித்த பிறகு
ரிமோட்டிற்கு வேலை கொடுத்து வேறு சேனல் வந்து விட்டேன்.
பின்பு செய்தி பார்த்த போதுதான் சவப்பெட்டியின் நாலாவது
மூலையிலும் ஆணி அடித்து விட்டார்கள் என்று.//
சங்கு ஊதுனதுமில்லாமல் நாலாவது மூலையில் ஆணியுமா:)அவ்வ்வ்வ்வ்!
//வாவ்....நான் நிறைய
சந்தோஷமா இருக்கேன் !//
ஹேமா!இதுக்குத்தான் பதிவெங்கேன்னு கேட்டீங்களா:)
இப்படி அடிச்சு காயப்போடக்கூடாது!
//argentinavukum aappu!
Enna kodumai naan nambina rendu teamum puttukichu.
Pora pokka paartha netherland cup adikkum pola theriyuthu.
Ipl kathai ingayum repeat aavathai kavanichingala,
club matchesla dhool kilapina costly players world cupla sathikkave illai.
Eg.
Rooney,ronaldo,messi//
நம்ம இரண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்கிற மாதிரி இருக்குதே!மெஸ்ஸி,,ரூனியெல்லாம் தங்கள் முத்திரையை கொஞ்சம் கூட பதிக்கவில்லை.மெஸ்ஸி பார்சலோனாவில் ஒரே ஆட்டத்தில் 4 கோல் போட்டு விட்டு இப்ப 4 கோல் வாங்கும் போதே எனக்கும் ஐ.பி.எல் நினைவுக்கு வந்தது.
உங்களுக்கு பின்னூட்டமிடும் இந்த நேரத்தில் ஸ்பெயின் உருகுவேயை 1-0 என்ற வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
இறுதி சுற்றுக்கு ஜெர்மனியும்,நெதர்லாந்தும் போவதற்கு சாத்தியமிருக்கிறது.
Post a Comment