Followers

Sunday, July 11, 2010

கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நன்றி.

மனித குலத்தின் மகத்தான தருணங்களாக கால் உதைபந்தாட்டத்தை சொல்லலாம்.பிகில்,விசில்,ட்ரம்,சங்கு,மகிழ்ச்சியின் சத்தம்,துக்கத்தின் உச் என்ற உணர்ச்சியின் அத்தனை சப்தங்களையும் தன்னிலிருந்து மொத்தமாக வெளிப்படுத்தும் மைதான வளையத்தில் இருக்கும் ரசிகர்க்ளே கால்பந்தாட்டத்தின் உண்மையான கதாநாயகர்கள்.கடல் அலைகளின் ஆர்ப்பரிப்புக்கும் ஒலிக்கு மாற்று சப்தமே இந்த மனித ஆர்ப்பரிப்பு.என்ன வர்ணங்கள்,முகப்பூச்சுக்கள்,உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வினாடிகள்.

2000 பவுண்ட் வரை ஒரு டிக்கட் விற்பனையிலிருந்தும் அத்தனை டிக்கட்களும் விற்றுத் தீர்ந்துள்ளன.இதற்கிடையில் யார் ஜெயிப்பார்கள் என்ற மிகப்பெரிய சூதாட்டம் இங்கிலாந்தில் நடைபெறுகிறது.இந்தியாவுக்கு கிரிக்கெட் மாதிரி ஐரோப்பிய நாடுகளுக்கு கால்பந்தாட்டம் வாழ்வின் ஒரு அங்கம்.இந்த முறை இரு ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின்,நெதர்லாந்து இறுதி சுற்றுக்கு விளையாடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் முதல் பாதியில் யாரும் கோல் போடவில்லை.இதுவரை எந்த இறுதிச் சுற்றிலும் இல்லாதபடி ஒரே மஞ்சள் நிற தண்டனைகள்.முதல் பகுதியில் ஆட்டம் ஒன்றும் சோபிக்கவில்லை.இருந்தும் பந்து சுழற்றும் நுட்பத்தில் ஸ்பெயின் தனது வழக்கமான பாணியைக் கைப்பற்றியும் நெதர்லாந்தின் பாதுகாப்பு வளையத்தை உடைக்கமுடியவில்லை. அதேபோல் நெதர்லாந்தும் தனது வேகமான ஓட்டத்தை ஓடியும் கோல் எல்லையில் குளறுபடிகள்.

இரண்டாம் பகுதியில் ஆட்டம் தடையில்லாத ஓட்டமாக களைகட்டியது.அப்படியிருந்தும் நெதர்லாந்தின் மஞ்சள் கார்டுகளிலிருந்து கால் இடறும் அழுகுணி ஆட்டத்தின் காரணமாக சிவப்பு கார்டும் கிடைத்தது.மொத்த விளையாட்டில் ஸ்பெயின் சிறப்பாக விளையாடியதில் அதிக நேரமான 30 நிமிடங்களில் 28வது நிமிடத்தில் கோல் போட்டது.2010ன் புதிய அணியாக தங்கத்தை வெல்லும் ஸ்பெயினுக்கு வாழ்த்துக்கள்.

இந்த முறை மூன்றாம் நிலைக்கான போட்டியாக ஜெர்மனி,உருகுவே போட்டியும் சிறப்பாக இருந்தது.நெதர்லாந்து V ஸ்பெயின் முதல் 45 நிமிட விளையாட்டுடன் நோக்கும் போது ஜெர்மனி V உருகுவே விளையாடிய மொத்த விளையாட்டும் சிறப்பாக இருந்தது.பெனால்ட்டியில் போய் படக்...படக்கென்று இதயம் துடிப்பதை விட அதிக நேரத்தில் விளையாட்டு முடிந்தது நல்லதே:)

இந்த வருட ஆட்டத்தில் ஜோசியகாரர் பால் ஆக்டோபஸ் சொன்னது அத்தனையும் பலித்த மாதிரி தெரிகிறது.இந்த ஒரு மாதத்தில் மனதை இலகுவாக்கி மகிழ்ச்சியடையச் செய்த தென் ஆப்பிரிககா மற்றும் கால்பந்தாட்ட வீரர்கள், ரசிக பங்காளிகள்,பின்னூட்டக்காரர்கள் அனைவருக்கும் நன்றி.ஸ்பெயின் கேப்டன் தங்கத்தை முத்தமிடும் தருணத்துடன் கால்பந்தாட்டம் ,இடுகை இறுதி பெறுகிறது.


8 comments:

ராஜ நடராஜன் said...

வகா!வகா சகிரா பற்றி மொத்த இடுகையிலும் சொல்ல மறந்து விட்டது:)

Karthick Chidambaram said...

வாழ்த்துக்கள் ஸ்பெயின் அணிக்கு.

ஹேமா said...

ஸ்பெயினுக்கு வாழ்த்தும்,அப்பப்போ உடனுக்குடன் எங்களுக்கு அறியத்தந்த நடாவுக்கு நன்றியும்.

vasu balaji said...

ஆக்டபஸ் எதிர்காலத்தை அதுகிட்டயே கேப்பாய்ங்களா? ஜெர்மனில இருக்கியா ஸ்பெயின் போறியான்னு:))

ராஜ நடராஜன் said...

//வாழ்த்துக்கள் ஸ்பெயின் அணிக்கு.//

கார்த்திக்!ஒரே ஆணி!தாமத மறுமொழிக்கு மன்னிக்கவும்.

ராஜ நடராஜன் said...

//ஸ்பெயினுக்கு வாழ்த்தும்,அப்பப்போ உடனுக்குடன் எங்களுக்கு அறியத்தந்த நடாவுக்கு நன்றியும்.//

ஹேமா!உங்களுக்கும் நன்றி!தொடர் பின்னூட்டத்திற்கு.

ராஜ நடராஜன் said...

//ஆக்டபஸ் எதிர்காலத்தை அதுகிட்டயே கேப்பாய்ங்களா? ஜெர்மனில இருக்கியா ஸ்பெயின் போறியான்னு:))//

எட்டுக்கால்ப் பூச்சிய என்னமோ பெரிசா பேசுறாங்களேன்னுதான் துவக்கத்தில் நான் கவனிக்காமல் இருந்தேன்.உங்கள் ஆக்டோபஸ் பின்னூட்டமே இவரை உற்றுக்கவனிக்க வைத்தது.அந்த விதத்தில் பால் ஆக்டோபஸை எனக்கு அறிமுகப்படுத்தியது நீங்கள்தான்:)

அடுத்து தேர்தலில் களமிறக்கலாமுன்னு யோசனையாம்:)
ஜெர்மன் அணி கோச் ஜோக்கிம் லூவ் மூன்றாம் நிலை ஆட்டத்துக்கு நீலக்கலருக்குப் பதிலா கருப்புக்கலர் டீ சர்ட் அணிந்ததற்கு பால் ஆக்டோபஸ்தான் காரணம்:)

மேலும் காளைக்கு ஊசி குத்தும் Matador ,தக்காளி வீச்சு,காளை துரத்துரதுன்னு ஸ்பெய்ன்ல ஏகப்பட்ட விளையாட்டு இருப்பதாலும்,ஸ்பெய்னுக்கு சாதகமா ஜோசியம் சொன்னதாலும் ஆக்டோபஸை ஸ்பெயினுக்கு நாடு கடத்துவதே நல்லது.

ஜோதிஜி said...

ஒரே ஆணி!தாமத மொழிக்கு மன்னிக்க.>>>>>>>>>???????>>>>>>>