Followers

Thursday, September 30, 2010

உண்ணாவிரதம் ஒரு சுயபரிசோதனை

வந்துவிட்டேன் ஆட்டத்துக்கு:) என்னமோ தெரியலை பகிர்தலுக்கான மனநிலை இல்லையென்றாலும்,பதிவுகள் எழுதாவிட்டாலும் அன்றாடம் தமிழ்மணம் அவ்வப்போது எட்டிப்பார்க்கிற பழக்கம் மட்டும் போகவில்லை.இன்றைக்கு இதை சொல்லி வைப்போமே என்ற எண்ணத்தில் மீண்டும் பதிகிறேன்.

பெண்கள் வெள்ளிக்கிழமை விரதம் ,செவ்வாய் என்று ஏதாவது ஒரு காரணம் காட்டி விரதம் இருக்கிறார்கள். ரம்ஜான் காலத்தில் காலை முதல் மாலை வரை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. 40 நாள் விரதமென வெஜிடேரியன் மட்டுமெனவும் கூட கடவுள் சிந்தனைகளோடு உணவை கலக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக 3 மணி நேரம்,2 நாட்கள் என சீன் காட்டுவதும் உண்டு.காந்தி மூன்றுமுறை தனது கோரிக்கைகளுக்காக நீராகாரம் மட்டும் அருந்தி சாகும்வரை உண்ணாவிரதமிருந்தார்.பின்னர் முடித்துக்கொண்டார்.ஆனால் கொண்ட கொள்கைக்காக திலீபன் நீர் கூட அருந்தாமல் இறந்துபோனதும் சுயமாக மனிதனால் இயலாத ஒன்றும் முக்கியமாக என்னைப்பொறுத்தவரையில் இது ஒரு மகத்தான விசயம்.

வாழ்க்கையின் போக்கில் நடந்துகொண்டிருந்த நான் முதல் முறையாக உண்ணாவிரதத்தின் தாக்கம் எப்படி இருக்குமென்று உணர்வதற்காக உணவு உண்ணாமல் சுயபரிசோதனை செய்து பார்த்தேன்.இதில் முக்கியமாக நான் அறிந்து கொள்ள விரும்பியது உண்ணாமை இயலுமா என்பதும்,உடலின் வலுவில்,அன்றாட அலுவல்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துமென்று அறிவதும்,முக்கியமாக எத்தனை நாட்கள் உணவு இல்லாமல் இருக்கமுடியுமென்பதும்.

திங்கட்கிழமை இரவு பால்,பழம்,நீர் என்று ஆரம்பித்து

செவ்வாய் கிழமை காலை வழக்கம் போல் எழுந்து குளித்துவிட்டு அலுவலக வேலை.முந்தைய நாளின் உடல் கழிவுகள் அகற்ற வேண்டி காலை ஒரு முறை நீரும், மாலை ஒரு முறை ஆரஞ்சு ரசமும் அருந்தினேன்.உடலில் தங்கியிருக்கும் உணவு,கொழுப்பு சக்திகள் காரணமாகவோ என்னவோ எந்த விதமான மாற்றங்களும் இல்லை.

புதன் கிழமை காலை எழுந்து காலை மறுபடியும் ஒரு முறை நீர் அருந்தி விட்டு அன்றாட வேலைகளை கவனித்தேன். காலையிலிருந்து மாலை வரை எப்போதும் போல உடல் மாற்றமில்லை.இரவு வயிறு கடிக்க ஆரம்பித்த மாதிரி இருந்தது.ஆலோசனையில்லாத பரிட்சை என்பதால் இரவு ஒரு வாழைப்பழமும் சிறிது நீரும் அருந்தினேன்.

வியாழக்கிழமை வந்து விட்டது.இன்று களைப்பின் அறிகுறி மெல்ல மெல்ல.உண்ணாவிரதத்திற்கான காரண காரியங்கள் இருந்தால் நீராகரம்,பழரசங்களுடன் இன்னும் ஓரிரு நாட்கள் வயிற்றுக்கு ஈயாமல் இருக்கலாம்.இருந்தாலும் முதல் முறையாக இப்போதைக்கு இந்த பரிட்சை போதுமென்று கொஞ்சம் மோர் அருந்திவிட்டு ரசம் சாதம் சாப்பிடலாமென்றிருக்கிறேன்.

இந்த சுயபரிசோதனையில் எனக்கு புரிந்த விசயங்கள்

1. முதல் நாள் உடல்நிலை கெடாமல் நீர் அருந்தியோ அல்லது அருந்தாமலோ ஒரு நாள் உண்ணாமல் இருப்பது சாத்தியமானது
2. இரண்டாம் நாளும் அன்றாட அலுவல்களை சோர்வின்றி நீர் மட்டும் அருந்தி இருக்க இயலும்
3. மூன்றாம் நாள் உடல் சோர்வு ஆரம்பமாகிறது.ஆனாலும் ஆபத்தில்லை
4. உணவுக்கு மனம் யோசிக்கும் ருசி உணர்வும் ஒரு காரணம்.எதை யோசிக்காமல் இருக்கணுமின்னு நினைக்கிறோமோ அதுவே இந்த வார நட்சத்திரம் ஜோதிஜின்னு பேர் சொல்லி உண்டு உறங்கி விடு செரித்து விடும் ன்னு கண் முன்னால் படம் காட்டுது:)
4. நான்காம் நாளே உண்ணாவிரதத்தின் உடல் மாற்றங்கள்.
5. மூன்று நாட்கள் வயிற்றைக் காலியாக வைப்பதால் உடல் மிதப்பது மாதிரி கனமில்லாமல் இருக்கிறது.
6. வயிற்றில் வாய்வு சேர்ந்து கொள்ளாமல் இருக்க சிறிய உடற்பயிற்சி அவசியம்.
6. உணவு பழக்கங்களை மாற்றிக்கொள்ள இயலுமானால் பால்,காய்கறி,பழவகைகளை வாரத்தில் ஓரிருநாள் சேர்த்துக் கொள்ள இயலும்.

இருந்தாலும் மெதுவா எந்திரன் படம் பார்த்து விட்டு அடுத்த வாரம் காய்கறி,பழவகை சோதனை செய்து பார்க்க வேண்டும்!இப்ப எந்திரன் படம் பார்த்துட்டு யார் முதலில் கதை சொல்றாங்கன்னு பார்க்கலாம்:)

22 comments:

நசரேயன் said...

//என்னமோ தெரியலை பகிர்தலுக்கான மனநிலை இல்லையென்றாலும்//

அப்படியா ?

ராஜ நடராஜன் said...

நசரேயன்!நான் ஜாக்கியோட கடையில அயோத்தி தீர்ப்பு வாசித்துகிட்டு இருந்தேன்.கூப்பிட்டேங்களேன்னு ஓடியாந்துட்டேன்:)

பழமைபேசி said...

நல்வரவு ஆகுக!

கொசுறு:

தளபதி நசரேயனின் பின்னூட்டம் செல்லாது; அவர் இடுகையை முழுதும் படிக்கவே இல்லை....

ராஜ நடராஜன் said...

//நல்வரவு ஆகுக!

கொசுறு:

தளபதி நசரேயனின் பின்னூட்டம் செல்லாது; அவர் இடுகையை முழுதும் படிக்கவே இல்லை....//

வாழ்த்துக்கு நன்றி!

நசரு படிக்கலைங்கிறது அவர் போட்ட அடைப்பானுக்குள்ளிருக்கும் முதல் வரிகளைப் பார்த்தா:)

துளசி கோபால் said...

ரெண்டு நாள் ஓக்கேன்னு புரியுது.

ஆனா வீட்டுலே மத்தவங்களுக்குச் சமையல் நாமே செய்யும்போது.... கஷ்டம்தான்.

அதுக்குதான் பெஸ்ட் ஒரு பொழுது:-)))))

ராஜ நடராஜன் said...

//ரெண்டு நாள் ஓக்கேன்னு புரியுது.

ஆனா வீட்டுலே மத்தவங்களுக்குச் சமையல் நாமே செய்யும்போது.... கஷ்டம்தான்.

அதுக்குதான் பெஸ்ட் ஒரு பொழுது:-)))))//

வணக்கம் டீச்சர்!வீட்ல சமையல் செய்யறது கஷ்டமா?எது எப்படியிருந்தாலும் அடுப்படிய பார்க்காட்டி என்னோட மனைவிக்கு ஒரு நாள் போன மாதிரியே இருக்காது.குறைந்த பட்சம் துணியெடுத்து சுவர,பாத்திரத்த தொடச்சிகிட்டாவது இருக்கணும்:)சொன்னாலும் கேட்பதில்லை.

Thekkikattan|தெகா said...

//இருந்தாலும் முதல் முறையாக இப்போதைக்கு இந்த பரிட்சை போதுமென்று கொஞ்சம் மோர் அருந்திவிட்டு ரசம் சாதம் சாப்பிடலாமென்றிருக்கிறேன்.//

ராஜ நட, ‘சாப்பிடலாமென்றிருக்கிறேன்’ நா இது இப்போ செஞ்சு பார்த்த சுயபரிசோதனையா? ஏன்யா, இப்படி ஒரு வீன் பரிட்சை எல்லாம், இப்போ இருக்கிற நீர்த்துப் போன மனித கரிசனை, நேயக் காலங்களில் எல்லாமே ஒன்றுமே இல்லை என்ற நிலையை அடைந்து பல காலங்கள் ஆகிவிட்டது.

What I see already the world is on the move in the direction of Darwin's survival of fittest theory considering the unprecedented population explosion in India in particular; due course wiping out all the reason and unreason alike. This is the time where human preys on fellow human. Sadly we are witnessing it, in different forms :(

ராஜ நடராஜன் said...

தெகா!பின்னூட்டம் போட்டு விவாதத்தை கிளப்புவீங்க போல தெரியுதே:)

தன்னை வருத்திக்கொள்ளும்,சில பொது காரணங்களுக்காக உண்ணாவிரதமிருப்பதென்பது நீர்த்துபோன மனித கரிசனையில்லாத ஒன்று என்பதுடன் ஆசியாவை விட்டு இந்த ஆயுதம் வெளியே பயணபடவில்லை.அப்படி விரிவாக்கம் பெற்றிருந்தால் மனிதகுலம் நகரும் போர் உலகத்துக்கும்,நிரந்தர அமைதிக்கும் இதை விட மாற்று மருந்தாக சாத்வீகமான வேறு ஒரு ஆயுதம் இருக்க முடியாது.

டார்வினின் வலியது வாழும் உடனடி பலன் மாதிரி.ஆனால் டார்வின் தியரிக்கும் மறுப்பு இருக்குதுங்கோ!

கபீஷ் said...

welcome back!

நான் 4 நாள் சாப்டாம இருந்துருக்கேன். வீட்ல எதாவது வாங்கித்தரலைன்னா அடம் பிடிக்க முன்னாடி பயன்பட்டுச்சு. அப்புறம் பசிச்சா சாப்பிடுவான்னு விட்டுட்டாங்க. அவ்ளோ கஷ்டம் இல்ல 4 நாள் தண்ணி மட்டும் குடிச்சேன்.

ராஜ நடராஜன் said...

தெகா!மறுமொழி சொல்லிட்டு போகும் போது தோன்றியது!

உயிர் கொல்லாமைக்கும்,KFC,பிசாக்களுக்கும் மாற்று நிவாரணின்னு பார்த்தா விரதம்தான்.

பெப்சி,சோடாவெல்லாம் சரிப்படாது:)

ராஜ நடராஜன் said...

//welcome back!

நான் 4 நாள் சாப்டாம இருந்துருக்கேன். வீட்ல எதாவது வாங்கித்தரலைன்னா அடம் பிடிக்க முன்னாடி பயன்பட்டுச்சு. அப்புறம் பசிச்சா சாப்பிடுவான்னு விட்டுட்டாங்க. அவ்ளோ கஷ்டம் இல்ல 4 நாள் தண்ணி மட்டும் குடிச்சேன்.//

Thanks கபீஷ்!

4 நாள் சாப்பிடாம இருந்திருக்கீங்கன்னா அது விரதம்தான்.கூடவே பிடிவாதமும்:)

கபீஷ் said...

ச்சே பிடிவாதமா அப்டீன்னா, கொள்கையில் உறுதின்னு சொல்லிகிட்டேன் ஹிஹி :))

ராஜ நடராஜன் said...

//ச்சே பிடிவாதமா அப்டீன்னா, கொள்கையில் உறுதின்னு சொல்லிகிட்டேன் ஹிஹி :))//

கொள்கைக்கு மறுபெயர் பிடிவாதம்.நல்லாயிருக்கே:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பரிசோதனை .. உடல் பத்திரம்......


சாப்பிடாம தண்ணி மட்டும் குடிச்சிக்கிட்டு இருக்கிறதுல அப்பப்ப ப்ராக்டிஸ் உண்டு..சாப்பாடு சாப்படறதே
ஒரு வேலைன்னு
நினைச்சு.. சோம்பேறித்தனத்துல.. :)
ஆனா துளசி சொன்னமாதிரி
இரண்டு மூன்று
வேளைக்குப் பின்ன அடுத்த ஆட்களுக்கு
நம்ம சேவை தேவை ன்னு சாப்பிட்டு வைக்ககறது..
அவங்களுகு சமைச்சு குடுக்க தெம்பு வேணாமா ?

முகிலன் said...

நானும் பரிசோதனை செஞ்சி பாத்திருக்கேன். கல்லூரியில படிக்கிறப்போ புது பில்டிங் கட்ட கோரி பேச் பேச் ஆ உண்ணா விரதம் இருந்திருக்கோம். அதெல்லாம் ஒரு வேளை மட்டும்தான். 

உண்மையில 3 நாள் ஒன்னும் சாப்டாம including வாட்டர் இருந்து மயக்கம் போட்டு விழுந்திருக்கேன். 

வானம்பாடிகள் said...

தேவையா? ஹையாடஸ் ஹெர்னியா வரும். சுகர் கண்ட்ரொல்ல இருந்தா வாரம் ஒரு முறை வெறும் ஃப்ரூட்ஸ் மூணு அல்லது ரெண்டு வேளை சாப்பிடலாம். இது நின்னு அடிக்கிற சனியன். வேணாம்ணே.

ஹேமா said...

நடா....நானும் சிலசமயங்களில் இப்படி இருக்கிறேன்.ஆனால் 4 நாளுக்குத் தாங்காது கடவுளே !

ரொம்ப நாளுக்கப்புறம் பட்டினிப் பதிவு.சுகம்தானே தாங்கள் !

ராஜ நடராஜன் said...

//நல்ல பரிசோதனை .. உடல் பத்திரம்......


சாப்பிடாம தண்ணி மட்டும் குடிச்சிக்கிட்டு இருக்கிறதுல அப்பப்ப ப்ராக்டிஸ் உண்டு..சாப்பாடு சாப்படறதே
ஒரு வேலைன்னு
நினைச்சு.. சோம்பேறித்தனத்துல.. :)
ஆனா துளசி சொன்னமாதிரி
இரண்டு மூன்று
வேளைக்குப் பின்ன அடுத்த ஆட்களுக்கு
நம்ம சேவை தேவை ன்னு சாப்பிட்டு வைக்ககறது..
அவங்களுகு சமைச்சு குடுக்க தெம்பு வேணாமா ?//

வணக்கம் முத்துலட்சுமி மேடம்!

துளசி டீச்சர் பின்னூட்டம் அப்படி போகுதா:)நான் கவனிக்கவே இல்லை.

எப்பவும் சமைக்கிறது அல்லது வித்தியாசமா சமையல் பதிவு ஏதாவது யாராவது போட்டா அதற்கு ஒரு பின்னூட்டம் போடுவது வழக்கம்.
காரணம் விடுமுறைல ஒரு நாள் அல்லது மூடு வந்தா சமைக்கிறது நான்தாங்க.

வீட்ல சமைக்கிறதுல ஒரு என்ன பிரச்சனைன்னா அம்மணி தினமும் சமைக்கிறதால மசலா டப்பாக்கள்,காய்கறி,பிரிட்ஜ் வகையறாக்கள் எங்கே இருக்குதுன்னு அத்துபடி.எனக்கோ இருக்கறது இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டும்.இந்த ஒழுங்கு இல்லைங்கிறதால் அப்பப்ப இரண்டு பேரும் சவுண்டு விட்டுக்கிறதுதான்.

ஆனாலும் என்னதான் சொல்லுங்க,என்னோட சமையல் கைப்பதம் அம்மணிக்கு கிடையாது.ஆனால் வேகமா சமைக்கிறதுல அவங்க கில்லாடி.

ராஜ நடராஜன் said...

//நானும் பரிசோதனை செஞ்சி பாத்திருக்கேன். கல்லூரியில படிக்கிறப்போ புது பில்டிங் கட்ட கோரி பேச் பேச் ஆ உண்ணா விரதம் இருந்திருக்கோம். அதெல்லாம் ஒரு வேளை மட்டும்தான்.

உண்மையில 3 நாள் ஒன்னும் சாப்டாம including வாட்டர் இருந்து மயக்கம் போட்டு விழுந்திருக்கேன். //

பாஸ்!விளையாட்டா வம்புல மாட்டிகிட்டிங்க போல தெரியுதே:(
கருத்து சொல்ல அப்பப்ப கை குறுகுறுத்தாலும் எனது பார்வையில் இது ஒரு விவாதமாக்குமளவுக்கு ஒரு பிரச்சினையே இல்லை.நட்புக்குழுவுக்குள் பேசித்தீர்க்க வேண்டியதை வெளியே இருப்பவர்கள் ஊதி நெருப்பாக்கிட்டிங்கன்னு நினைக்கிறேன்.

3 நாள் தண்ணீர் கூட இல்லாமலா?உங்கள் கல்லூரிக்கால்ங்களை நீங்கள் விவ்ரிக்கும் போது அதற்கான வீரியமும்,ஆற்றலும் நிச்சயம் இருந்திருக்கும்.

ராஜ நடராஜன் said...

பாஸ் முகில்!

நெருப்பாக்கிட்டிங்கன்னு நினைக்கிறேன்.

ஒரு கால் போச்சுன்னா எவ்வளவு விபரீதமான பொருளை தமிழ் தருதுன்னு பாருங்க.நான் முன்பு இகலப்பைல உழுதுகிட்டு இருந்தேன்.இப்ப என்.ஹெச்.எம்.

”வெளியே இருப்பவங்க ஊதி நெருப்பாங்கிட்டாங்கன்னு இருக்கணும்”

ராஜ நடராஜன் said...

//தேவையா? ஹையாடஸ் ஹெர்னியா வரும். சுகர் கண்ட்ரொல்ல இருந்தா வாரம் ஒரு முறை வெறும் ஃப்ரூட்ஸ் மூணு அல்லது ரெண்டு வேளை சாப்பிடலாம். இது நின்னு அடிக்கிற சனியன். வேணாம்ணே.//

பாலாண்ணா!என்னவெல்லாம் தெரிந்து வச்சிரிக்கீங்க!Feel good of you!

சுகர்,பிரஷர்ன்னு எந்த சோதனையும் செய்வதில்லை.இனிப்பு நல்லா முழுங்குவதால் சுகருக்கான சாத்யம் இருக்க வாய்ப்பு உண்டு.இருந்தாலும் இப்ப அப்ப சளி,தலைவலி தவிர உடல் சரியாக உழைக்கும் காரணத்தால் ஒன்றும் கண்டுக்கறதில்லை.

ராஜ நடராஜன் said...

//நடா....நானும் சிலசமயங்களில் இப்படி இருக்கிறேன்.ஆனால் 4 நாளுக்குத் தாங்காது கடவுளே !

ரொம்ப நாளுக்கப்புறம் பட்டினிப் பதிவு.சுகம்தானே தாங்கள் !//

ஹேமா!நலமே!பதிவு போடலையே தவிர தமிழ்மணத்தை அவ்வப்போது சுத்திகிட்டுத்தான் இருந்தேன்.

உங்க பின்னூட்டத்துக்கு முன்னாடி வானம்பாடிகள் என்னமோ சொல்றாரு கவனியுங்க.

காய்கறி,பழம்,சூப்,அவ்வப்போது உணவு,குறைந்த பட்டினில தப்பில்லைன்னுதான் நான் உணர்கிறேன்.