Followers

Wednesday, February 23, 2011

மெரினாவின் அலைகளைத் தாண்டுமா திருமா?

கைதா?திரும்ப அனுப்பிட்டானா இலங்கைகாரன்!மைக்ல கீச்சு(கீச்சு வார்த்தை உபயோக உபயம் ஈரோடு.கதிர் மற்றும் வானம்பாடிகள் பதிவுகள்)சத்தமாத்தான் கேட்குது.உங்கள் குரல்கள் மெரினாவின் அலைகளைத் தாண்டுமா?இல்லை அதனோடு போட்டிதான் போடுமா நேற்று காலையில் கீச்சுன திருமா!மாலையில் மத்தளம் ராமதாஸ்!ராத்திரி கோயிந்தா வீரமணி.

கடல்தான் குமுறுவதால் கீச்சறது கேட்காது போனாலும்  காற்றோட காற்றாய் டெல்லி செங்கோட்டைக்காவது கேட்குமா?சான்சே இல்லைங்கிறீங்களா கலா அக்கா!

குழுவாய் நீங்கள் நிற்கும் வரை எதுவுமே சாத்தியமில்லை.

Tuesday, February 22, 2011

லிபியாவின் சுதந்திரத்திற்கும் குரல் கொடுப்பேன்!

லிபியா பற்றி பழைய குப்பைகளை நோண்டினால் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் வில்லன் உருவகப்படுத்தலில் ஈராக்கின் சதாம்,ஈரானின் அயோத்துல்லா கோமினி, அகமது தினேஜாத்,பாலஸ்தீனிய ஷேக் அகமது யாசின்,யாசர் அராபத்,லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தின் சையத் ஹசன் நசரல்லா உலகம் அறிந்த சவுதி அரேபியாவின் பின்லாடன் இன்னும் பல அமெரிக்காவின் வில்லன்களுக்கும் வில்லன் முன்னோடியென்றால் அது மும்மர் கடாபிதான்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கென்று ஒரு கலாச்சாரம்,மக்கள் பழகுவதில் இனிமை,இஸ்லாமியத்தின் எளிமை என்பவைகளுக்கும் அப்பால் தனி மனித சர்வாதிகாரம்,மக்கள் உரிமை ஒடுக்குமுறை,சுயலாபங்கள்,வாரிசு அரசியல், சூடான பூமி போன்றவைகள் மக்களை முரடர்களாகவும், உலகளாவிய மனித உரிமைகளில் பின் தங்கியவர்களாகவும் வைத்துள்ளன.  

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரீகனின் ஆட்சிக்காலத்தில் ரீகன் முன்பே சினிமா கதாநாயகன் என்பதால் கடாபியை வில்லனாக்கி விட்டார்கள்.அந்தாளோட நடை,உடை,பாவனைகள் வித்தியாசமாக இருந்ததாலும், பயணிகள் விமானம் பறக்கும் போதே குண்டு வைப்பது போன்றவற்றாலும் வேடம் அரசியலுக்கும்,ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் சரியாகவே பொருந்தியது.

கடாபியின் அமெரிக்காவிற்கு எதிரான கொள்கையால் அமெரிக்கா ஏவுகணைப்பரிசோதனை செய்வதற்கு நமக்கு ஒரு அடிமை சிக்கினான் என கடாபியின் அரண்மனை மீதே ஒரு குண்டு போட கடாபியின் நல்ல காலமும் லிபியாவின் கெட்ட காலமும் கடாபியின் குழந்தை ஒன்றின் சாவோடு வில்லன் தப்பித்து விட்டார்.அதுல வாயை மூடின ஆளுதான் கடாபி தும்முவது கூட அமெரிக்காவிற்கு கேட்காதபடி அடங்கிப்போனார்.சரி அமெரிக்கா கூடத்தான் சண்டை போடுற வா நாமெல்லாம் கூட்டம் போட்டு மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு அமைப்பை ஏற்படுத்துவோம் வான்னு கூப்பிட்டா இருக்குற ஷேக்கையெல்லாம் முதுகெலும்பில்லாத ஆளுகன்னு சண்டை போடுவதால் அவர்களும் ஓரம் கட்டி வைத்து விட்டார்கள்.சதாமுக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்து விட்டு அமெரிக்காவோடு சமாதானம் செய்து கொண்டு 40 வருடங்களுக்கும் மேலான சர்வாதிகாரியாக இருக்கிறார்.

கடாபி பற்றி செய்திகள் மூலமா தெரிந்ததை விட நேரடி அனுபவமா நம்மூரு அரசியல்வாதிகள் மாதிரி இந்தாளு வில்லாதி வில்லன் என்பது ஒரு சமயம் தெரிய வந்தது.பேட்ரிக் டோவர் என்ற அயர்லாந்துக்காரர் காஞ்சு போன நாடுகளாய் பார்த்து (ஆப்கானிஸ்தான்,வியட்நாம்,லிபியா)கேடரிங்,பெட்ரோல் வாங்கி விற்கிற பிரெஞ்சு நிறுவனத்தில் பணிபுரிந்தார்.இவர் லிபியாவில் வாங்கிய  Portable 120GB HDD யின் விலை 5 அமெரிக்க டாலர் புதிதாக சந்தைக்கு வந்த காலத்தில்.(இந்திய மதிப்பில் சுமார் ரூ 250 வெச்சுக்கலாம்).பெட்ரோல் மூல வருமானமாக இருந்தாலும் ஏனைய வளைகுடா நாடுகள் போல் வளர்ச்சியடையாத நாடு லிபியா.

கடாபி என்ன செய்தார்ன்னா 40 வருடமானாலும் நீங்கள் செய்யும் கலகம் நீடிக்கும் என்று நேற்று அறிக்கை விட்ட வாரிசு அரசியல் மகன் சய்ஃப் அல் இஸ்லாம் என்பவரை விட்டு பெட்ரோலிய வருமானம் அனைத்து லிபிய மக்களுக்கும் பிரித்துக்கொடுக்கப்படுமென்று அறிக்கை கொடுக்க விட்டு சுற்றி இருக்கும் அல்லக்கைகளுடன் அறிக்கை பற்றி நானாவது வருமானம் பங்கீடு செய்வதாவது என்று கடாபி சிரித்தாராம். இதே தில்லுமுல்லு புத்தியோட நான் லிபியாவில்தான் இருக்கிறேன்,வெனிசுலாவும் போகல,எங்கேயும் ஓடிப்போகலைன்னு சின்னதா ஒரு பிலிம் காட்டுகிறார்.கூடவே ராஜபக்சே ஸ்டைலில் லிபியாவின் போராடும் மக்கள் மீது விமானம் மூலம் குண்டு விழவும் செய்கிறது.லிபியாவின் முக்கிய நகரங்கள் லிபியாவின் போராட்ட மக்களின் கைவசப்பட்டுள்ளது.லிபியாவின் தூதர்கள் பலர் பதவி விலகியுள்ளனர்.

இன்னுமொரு மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! கோசம் போடும் பழக்கதோசத்தில் கடாபியும் ஒழிக!       

பார்வதி அம்மாளுக்கு மலர் அஞ்சலி

மொழியால் இயல்பாய் வந்து ஒட்டிக்கொண்ட உறவே!
                       மலர் அஞ்சலி.

Thursday, February 17, 2011

வாய் திறந்த பிரதமர் மன்மோகன் சிங்!

பிரதமர் மன்மோகன் முன்பே வாய் திறந்திருந்தாலும் ஊழல் குள்ளநரிகளின் கூட்டத்தில் விவகாரத்தில் மாட்டியிருப்பார் என்றே தெரிகிறது.இப்பொழுது கரை புரண்டு ஓடும் போதும் அதே நிலைதான்.எப்படியோ இப்பவாவது ஊடகவியளாலர்களிடம் வாய் திறந்ததற்கு பாராட்டுக்கள்.

கொஞ்சம் நேர்மை,விட்ட தவறுகள்,சப்பைக்கட்டு,தமிழகத்தில் ஜெயிப்போம் கனவோடு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் சாதனைகளையும் பட்டியலிட்டிருக்கிறார்.இத்தாலி எழுத்துல இருக்கும் சில நையாண்டி தவிர்த்து எல்லாம் அவர் ஆங்கிலத்தில் சொன்னது தமிழில்.பார்வையை பதிக்கலாம் வாங்க!

முகவுரை:

  • பலவிதமான ஊழல்களை பார்வைக்கு கொண்டு வந்ததற்காக ஊடகங்களுக்கு நன்றி.

  • ஸ்பெக்ட்ரம்,காமன்வெல்த்,இஸ்ரோ,ஆதாஷ் ஊழல்களில் தவறு செய்தவர்கள் எந்த விதமான பதவி வகுத்தாலும் தண்டிப்பதில் தீவிரமாக இருக்கிறோம் என்பதை மொத்த இந்தியாவுக்கும் உறுதி கூறுகிறேன்.

  • ஊழல்கள் நிறைந்த நாடு என்று நம்மை உலகிற்கு காட்டுவதன் மூலம் நமது சுயநம்பிக்கைகளை இழக்கிறோம்.

  • நொண்டி வாத்து அரசாங்கம் என்ற விமர்சனப் பார்வை இருந்தாலும் கூட அரசாங்கத்தை நிர்வகிப்பதில் தீவிரமாக இருக்கிறேன்.

  • இந்த வருட வளர்ச்சி விகிதாச்சாரம் 8.5% ஆக இருக்கும்.

  • உலக பொருளாதார சரிவு இருந்தாலும் கூட இந்திய பொருளாதார சரிவை சரிக்கட்ட முயலவேண்டும்.

  • பொருளாதார சரிவு ஒரு பிரச்சினையாக இருந்தாலும் கூட வளர்ச்சியின் ரிதம் மாறாமல் பொருளாதார சரிவை சரி செய்ய வேண்டும்.

  • இந்த வருடம்(2011) இறுதியில் பொருளாதார வீழ்ச்சி விகிதாச்சாரம் 7% க்கும் கீழ் வந்து விடும்

  • உள்நாட்டுப் பாதுகாப்பு மிகவும் கவலைக்குரியதான ஒன்று.

  • நிறைய தீவிரவாத செயல்களை தடுத்திருக்கிறோம்.அரசாங்கம் அதற்கான வரவேற்பை பெறவேண்டும்.

  • உல்பா (ULFA) வுடன் பேச்சு வார்த்தை தொடங்கும்.

  • ஜம்மு-காஷ்மீர் சில பிரச்சினைகளுக்கப்பால் நிலைத்து நிற்கிறது.

  • சென்ற வருடம் ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் அனைவரும் இந்தியா வருகை தந்துள்ளார்கள்.

  • பாராளுமன்றம் நிகழாமல் இருப்பதற்கான காரணங்கள் எனக்கு புரியவில்லை,அடுத்த பாராளுமன்ற கூட்டத்தினை அமைதியாக நிகழ்த்த நேர்மையான முயற்சிகளை எடுக்கின்றோம்.

வந்துடுச்சு 2G கேள்விகள்.

நவம்பர் 2,2007ல் தனது கடிதத்தை குறிப்பிடுகிறார்.

  • டெலிகாம் மற்றும் ஊடகங்களில் நிறைய கவலை தெரிவிக்கப்பட்டது.
  • 2G சமமான,நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும்.
  • ஏலம் விடுவதற்கான சந்தர்ப்பங்களை குறிப்பிட்டிருந்தேன்.
  • மிஸ்டர் ராஜா அதே நாளில் சொன்ன உறுதிமொழிகளின் படி நடப்பதாக பதில் எழுதியிருந்தார்.
  • ஏலம் விட்டால் அனைவருக்கும் சந்தர்ப்பம் கிடைக்காது என்றார் ராஜா.
  • இன்னொரு கடிதத்தில் 3G க்கு ஏலத்திற்கு தயாராக இருப்பதாக கூறினார்.
  • கடிதம் நிதித்துறையின் குறிப்புடன் இருந்தது.
  • நிதி அமைச்சகம் ஸ்பெக்ட்ரம் விலை தீர்மானிப்பின் அங்கமாக இருந்தது.

  • ராஜாவிடம் 2G குறித்த கவலையை தெரிவித்தேன்.ஆனால் ஏலம் குறித்து மேலும் வற்புறுத்தவில்லை,காரணம் டெலிகாம் மற்றும் நிதித்துறை முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற நடைமுறையில் இருந்த திட்டத்திற்கு சம்மதித்தார்கள்.
  • ராஜா முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற திட்டத்தை தொடர்ந்தார்.
  • 2G ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் யாருக்கு அனுமதி என்பது எனது பார்வைக்கோ அல்லது கேபினட்டுக்கோ வரவில்லை.

  • 2009 ல் ஏன் ராஜாவே மீண்டும் டெலிகாம் துறை பதவிக்கு நியமிக்கப்பட்டார்?

  • கேபினட் அமைச்சகம் அமைப்பதில் என்னென்ன நிகழ்ந்தது என்பதை தன்னால் விரிவாக சொல்ல இயலாது.
  • குறிப்பிட்ட கூட்டணிக்கட்சியின் தலைவர் நிர்பந்திப்பதைப் பொறுத்து பதவிகள் வழங்கப்பட்டன.மிஸ்டர் ராஜா தி.மு.கவின் தேர்வு.
  • ராஜாவின் தேர்வை மறுப்பதில் எனக்கு உரிமையில்லை என நினைக்கிறேன்.
  • ராஜாவைப்பற்றிய குற்றச்சாட்டுக்கள் வந்தன.ஆனால் பெரும் தவறுகள் நிகழ்ந்ததா என்று தீர்மானிக்க இயலாத நிலையில் இருந்தேன்.

கூட்டுக்குழுவில் (JPC) நிற்பதின் பயம் பற்றி

  • எந்த குழுவின் முன் நிற்பதற்கும் பயப்படவில்லை.
  • PAC குழுவின் முன் நிற்பதற்கு நான் முன்வந்தேன்.
  • JPC முன் நிற்பதற்கும் பயப்படவில்லை.

இரண்டாம் தலைமுறையின் சீர்திருத்தங்கள்.

  • சீர்திருத்தங்களை நிறுத்தவில்லை.தொடர்வோம்.
  • வரும் பட்ஜெட்டில் சீர்திருத்தங்களுக்கான வரைபடம் இருக்குமென நம்புகிறேன்.
  • GST(Goods and Services Tax) சீர்திருத்தங்களை கொண்டு வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் எங்களுடன் சேர்ந்து உதவாமல் பாராளுமன்ற கூட்டத்தை புறக்கணித்தன.
  • எதிர்க்கட்சிகள்,முக்கியமாக பி.ஜே.பி இதில் மிக தீவிரம் காட்டியது
  • தனியாக என்னிடம் பேசும்போது குஜராத்தில் அமித் ஷா மீது எடுத்த நடவடிக்கையை திரும்ப பெற வேண்டுமென்று வற்புறுத்தினார்கள்.
  • கல்வி உரிமை(Right to Education) குழந்தைகள் வளர்ச்சி திட்டம்(Integrated Child Development Services) மற்றும் தேசிய கிராம சுகாதார திட்டம்(National Rural Health Mission) இப்போது நிதர்சனம் என்பதோடு செயல்படுகிறது,
  • அதேபோல் உணவு பாதுகாப்பு மசோதா (Food Security Bill) பற்றி ஆலோசித்துக்கொண்டுள்ளோம்.
  • அதே மாதிரி PPP உதவியுடன் (Public-Private Partnership)கட்டமைப்பு முதலீட்டிற்கான புதிய அலைகள் துவங்குமென நம்புகிறேன்.

நானாவது ஓடுவதாவது!

  • ஊழல் நிறைந்த மந்திரிகள் சுற்றியிருக்கும் போது, பதவியை விட்டு ஓடிடலாமான்னு எப்பவாவது நினைத்தீர்களா என்ற கேளிவிக்கு (பாதியிலே விட்டு விட எப்பொழுதும் நினைத்ததில்லை என்றும் முழுச்சாப்பாடும் சாப்பிட்டு விட்டே பந்தியிலிருந்து எழுவேன் என்றார்.)
 (Did he at any time feel like quitting, surrounded by corrupt colleagues? No. Never thought about giving up half-way. "I will stay the course" )

  • நான் பதவி விலக எப்பொழுதும் நினைத்ததில்லையென்றும் எனது வேலையை முடித்தாக வேண்டும்,பாதியில் விட்டு விட நினைத்ததில்லை.

இதோ வந்துட்டாரு பூஜ்ய நஷ்டம் கபில் சிபல்

  • CAG கூட குத்துமதிப்பாகத்தான் மதிப்பிட்டிருக்குது.
  • வருமானத்தின் நஷ்டத்தைப் பொறுத்தவரையில் துவக்கப் புள்ளி என்ன என்பதைப் பொறுத்தது.
  • சரியான விலை என்னவென்பதை அதன் முன்பான நிலை கொண்டே கணிக்க வேண்டும்.முந்தைய கொள்கையான ஏலம் விடக்கூடாது என்பதால் நஷ்டத்தின் அளவை சரியாக கணிக்க இயலாது.

  • பல விதங்களில் கணக்கிட இயலும்.80,000 கோடி உணவுக்கு உதவித்தொகையாக,60,000 கோடி உரத்திற்கும் மற்றும் மண்ணெண்னைக்கும் கொடுத்தால் அதனை நஷ்டம் என்று கணக்கிட இயலுமா?

இஸ்ரோ ஊழல்
  • விண்வெளித்துறையின் முடிவுகளை பிரதமரின் அலுவலகம் எதிர்க்கவில்லை.
  • ஆண்ட்ரிக்ஸ்,டேவாஸ் ஒப்பந்தம் பற்றி கமிஷன் அமைக்கப்படும்.
  • ஆண்ட்ரிக்ஸ்,டேவாஸ் ஒப்பந்தத்தின் ஸ்பெக்ட்ரம் அனுமதியை கேபினட் பாதுகாப்பு கமிட்டி எடுத்துக்கொள்ளூம்.

அரசாங்கத்தின் குறைகள்!

  • சில நிகழ்வுகள் அரசாங்க நிர்வாகத்தின் குறைகள் என்பதை மறுக்க முடியாது.
  • நிர்வாகத்தின் தரத்தை உயர்த்த வேண்டும்,அதனால் எனக்கும் மற்ற அமைச்சர்களுக்குள்ளும் பிரிவினை என்று சொல்லி விட முடியாது.
  • காங்கிரஸ் கட்சி தன்னை ஆதரிக்கவில்லையென்று நினைக்க வில்லை.
  • மக்களாட்சியில் விவாதங்களும் மாற்றுக்கருத்துக்களும் உருவாகவே செய்யும்.தீர்மானங்களை எடுக்கும் போது எங்கள் கட்சி முழு ஒத்துழைப்பையும் அரசாங்க நிர்வாகத்திற்கு வழங்கும்.

கூட்டணி கலாட்டாக்கள்!

  • எங்கள் கூட்டணி மிகவும் பலமாக இருக்கிறது.கூட்டணி உடைவதற்கான உள் அழுத்தங்கள் எதுவுமில்லாமல் எங்கள் கூட்டணி மனப்பூர்வமாக எங்களுடன் இருக்கிறார்கள்.
  • எதிர்க்கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடக்கிறது.எந்த வித கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பாராளுமன்ற கூட்டம் நிகழவேண்டும்.
  • பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்திற்கு பின் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும்.
  • பட்ஜெட்டில் சீர்திருத்த கொள்கைகள் இருக்கும்.
  • விலைவாசி உயர்வு ஏழை மக்களை பாதிக்கிறது.ஆனால் அதற்கு மாற்றுவழிகளை முயற்சித்துள்ளோம்.(உதாரணமாக ரூ10க்கு பாகிஸ்தானுக்கு விற்று விட்டு மீண்டும் ரூ40 கொடுத்து அதே வெங்காயத்தை திரும்ப கொண்டு வந்தது.கொள்விலை மட்டுமே ரூ 40/- விற்பனை விலை ரூ 80/- குழப்பிக்கொள்ள வேண்டாம்.)
  • கூட்டணி அரசாங்கத்தில் சில சமரசங்களை செய்ய வேண்டிய நிர்பந்தம்.
  • நான் எந்த தவறும் செய்யவில்லையென்று சொல்ல மாட்டேன்!ஆனால் என்னை பொதுவில் காட்டுவது படி நான் அவ்வளவு பெரிய மோசடிக்காரனுமல்ல.
  • மிக முக்கிய வருத்தம் என்னவென்றால் நிகழ்ந்த தவறான முறைகள் நடந்திருக்கவே கூடாது.

  • ஊடகங்கள் ஊழல் நிறைந்த நாடு என்ற எதிர் பிம்பத்தை (Negative image) வைக்க கூடாது.உண்மைகள் தூய்மையானவை.விமர்சனம் சுதந்திரமானது.உண்மைகளை நலன் பயக்கும் விதமாக முன்வைக்க வேண்டும்.
  • ஊழல் செய்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்படுபவர்கள் இந்த முறை தப்ப இயலாது.

கண்டதும் கேட்டதும்:அவுட்லுக் இந்தியா மற்றும் NDTV.



Wednesday, February 16, 2011

மீனவர் துயரமும் கச்சத்தீவு வரைபடமும்.

 பூகோளமும்,வரலாறும் சரியாக கற்றுக்கொடுக்கப்படாமையும், சோசலிச காலத்து அரசியல் இழுபறிகளும் இன்றைய மீனவர் துயரங்களுக்கான காரணங்களுக்கான காரணிகளில் ஒன்று என்பேன்.நம் குழந்தைகள் ஐ.க்யூவில் சிறந்தவர்கள்.வரலாற்றுத்தளங்ள்,பயணங்கள் என்று கொண்டு சென்று இனி மேலாவது வரலாறும்,பூகோளமும் கற்க வைப்போம்.அதுவே பாடங்கள் புரிதலுக்கும்,எதிர்காலத்தில் மனித நல் உணர்வுகளை வளர்க்கவும் பயன்படும்.

முந்தைய காலகட்டங்களில் கச்சத்தீவு பற்றிய தொலைநோக்குப்பார்வை இல்லாமல் இலங்கைக்கு தாரை வார்த்துக்கொடுத்தது இந்தியாவின் பலவீனத்தையே காட்டுகிறது.வெறுமனே கருத்துக்கள் சொல்லாமல் கூகிள் பூமியண்ணனிடம் என்னைக்கூட்டிச்செல் என்று கட்டளையிட்டால் நீலக்கலரில் ஏதோ ஒரு திட்டு மாதிரி இடத்துக்கு கொண்டு சென்று விட்டு விட்டது.இதென்ன பேரும் இல்லாமல் ஊருமில்லாமல் என்று வரைபடம் தேடினால் இதுதானப்பா நீ தேடுற விலாசம் என்று இவர் துணைக்கு வந்தார்.இதனை விட கூகிள் பூமியண்ணன் சொன்ன ஒரு ருசிகர தகவல் என்னவென்றால் இந்தியாவிலிருந்து ஏழுகடல் தூரமிருக்கும் தாய்லாந்தில் பாங்காக் பக்கத்திலிருக்கும் அந்தமான் தீவு இந்தியாவுக்கு சொந்தமானதாம்.படகை ஓட்டி நடுக்கடலில் மீன்பிடிக்கும் தூரத்திலிருக்கும் கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமில்லையாம்.கச்சத்தீவின் கூகிள் படம் பார்த்தால் அடப்போங்கப்பா நான் நடுநிலைவாதிங்கிற மாதிரி இந்தியாவுக்கும்,இலங்கைக்கும் மத்தியில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டுள்ளது.(வெள்ளைச் சதுரம்)

இலங்கை இந்திய அரசியல் காரணங்கள் மூக்கை நுழைக்காவிட்டால் தமிழக மீனவனும்,தமிழீழ மீனவனும் சிங்கள மீனவனும் ஓய்வு எடுத்துக்கொள்ளவும்,வலைகள் காயப்போடவும் மீண்டும் தமது நாட்டுக்கரைகளை நோக்கி பயணிக்கவும் சிறந்த இடமாகவே இருக்கிறது.ஆனால் நிகழும் துப்பாக்கி சூடுகள்,மீனவர் படுகொலைகள் என்பன இலங்கை இந்தியாவின் தென்னக இறையாண்மைக்கு குழி வெட்டுகிறதோ என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.பூகோள அமைப்பை நன்றாக ஊன்றிக்கவனித்தால் இலங்கை தன் சுயபாதுகாப்புக்கான அத்தனை நில அமைப்பு,கடல் அமைப்பைக்கொண்டிருக்கும் பட்சத்தில் தேவையற்ற துப்பாக்கி சூடுகள்,மீனவர் துயரங்கள் போன்றவை இலங்கை அரசின் இன்னொரு முகத்தை இந்தியாவுக்கு அடையாளம் காட்டுகிறது என்றே தெரிகிறது.கூடவே இலங்கையின் பெயரால் கண்ணுக்கு இதுவரைப் புலப்படாத பின்புலங்களும் மறைந்து நிற்கின்றனவா என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.
பெங்களூரில் மென்பொருள் நிறுவனம் அமைத்து,ஆப்கானிஸ்தானின் கந்தகார் நிகழ்வுகளில் அடிப்பட்ட சீனாக்காரன் இப்பொழுது கொள்ளைப்புற வழியாக ஸ்பெக்ட்ரம் அலைவரிசையிலும் பங்கு போட்டுகொண்டுள்ளான் என்கிற செய்திகள் கசிகின்றன.எங்கள் தேசப்பிதாக்கள் நாற்காலி கனவுகளிலேயே மிதக்கிறார்கள்.இணைய தகவல்கள் நிருபமா ராவின் நகர்வுகளை மட்டுமல்ல,இலங்கைப்பயணத்தின் பேச்சுவார்த்தைகள்,அதன் விளைவுகள் எதிர்காலத்தில் மாற்றங்களை உருவாக்குமா என்ற கேள்விகளை முன்வைப்பதோடு பயணம் தமிழக தேர்தலுக்கான முகப்பூச்சா என்பதையும் எதிர்காலம் காட்டிக்கொடுத்து விடும்.

Sunday, February 13, 2011

வெட்கமே படாதீங்க எஸ்.எம்.கிருஷ்ணா!

எல்லோரும் கோபாலபுரத்து தாத்தாவை கும்முறதுலேயே குறியா இருங்க! மீனவர்களை சுடுவதை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்றும்,கடல் எல்லை கடந்து மீன் ஓடிப்போகுது,அதனால மீனவர்கள் மீனை துரத்திகிட்டே போயிடுறாங்க,இதுல நாம் என்ன செய்ய இயலுமென்றும் அறிக்கை விடும் நம்மை நிர்வகிப்பவர்களின் லட்சணம் ஐ.நா சபை வரை சிரிப்பா சிரிக்குது.இந்தியாவின் மானம் போகுது:(

யார் எதைப் பேச வேண்டுமென்று மொத்தமான அச்சடித்த பிரதிகளை ஒவ்வொரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் கொடுக்கும் போது போர்ச்சுகீசிய நாட்டுக்காரர் பேச வேண்டிய அறிக்கையை நம்ம எஸ்.எம்.கிருஷ்ணா கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பிச்சிருக்கார்.அட!நம்ம பள்ளிக்குழந்தைகள் கூட பரவாயில்லை போல இருக்குதே!யாராவது புதுசா ஐந்து நட்சத்திர ஓட்டல் செமினாருக்கும் Buffet க்கும் போகும் போது திரு திருன்னு முழிக்கிற மாதிரி Forign minister SM Krishna would have got nervous when he climbed the steps of U.N. I am sure of that!

இனி தாத்தாக்களை வீட்டில் உட்கார வைக்க வேண்டிய தருணம்.இளைய தலைமுறைகளுக்குப் பயிற்சி கொடுத்து இந்திய நிர்வாகத்திலும்,வெளியுறவுக்கொள்கையிலும்,ஐ.நா சபைக்குள்ளும் நுழைய வைக்க வேண்டும்.அட!கொறஞ்சது சசி தரூரையாவது ஐ.நா உரையை வாசித்துட்டு வாய்யா ன்னு அனுப்பியிருக்கலாம் இப்போதைக்கு.

இந்தியாவின் மானத்தை ஊழல்.லஞ்சம் என்ற பெயரில் உள்நாட்டுக்குள்ளும், நாலு வரி ஒழுங்கா இந்தியா பற்றி ஆங்கிலம் பேசத்தெரியாம அடுத்தவன் நாட்டு உரையை ஐ.நாவிலும் ஒப்பிச்சுட்டு வரும் எஸ்.எம்.கிருஷ்ணாவை நினைக்கும் போது எனக்குத் தோன்றுவது

A bunch of idiots are governing us!

மேலும் ரத்த நாளங்களை சூடாக்கிக்க ஆசைபடறவங்க இங்கே போய் கட்டிங் போடுங்க!

Friday, February 11, 2011

ஹோஸ்னி முபாரக்! எத்தல பர்ரா(வெளியேறு)

தெகா! ஹோஸ்னி முபாரக் பற்றி சற்று முன் நீங்கள் பதிவு போட்டவுடன் நான் அடக்கி வாசிக்கிறதால என்ன சொன்னேன்? சி.என்.என்.பி.பி.சின்னு உர்ருன்னு நோக்கிட்டு இருக்கிறேன்.நீங்கள் எகிப்தின் மாற்றம் குறித்து மகிழ்ச்சியில் திளைத்தீர்கள்.சி.ஐ.ஏ சொன்ன இன்றைக்கு முபாரக் பதவி விலகிடுவார்ன்னு சொன்னதைக் கேட்டு ஒபாமாவும் நாம் ஒன்று பட்ட நாடுகளில் வாழ்கிறோம்.உலகின் எந்த ஒரு பகுதியில் எது நடந்தாலும் அது நம்மையும் பாதிக்கிறது என்பதோடு அமெரிக்காவுக்கு புதிய சந்தைகள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறதென்று  திருவாய் மொழி அருள்ந்தார்.எகிப்திய ராணுவ அதிகாரிகள் கூட முபாரக் இல்லாமலே கூட்டம் போட்டு மக்களின் ஆசைகள் நிறைவேற்றப்படுமென்று அறிக்கை விட்டார்கள்.இரவு ,குளிர் என்றும் பாராமல் மாற்றத்துக்கு காத்திருக்கிறார்கள்.


முப்பது வருசமா எகிப்தில் சர்வாதிகாரம் செய்தும், யதார்த்தம் என்ன என்று தெரியாமல் பதவி,பணம் காக்கும் பூதமாக வேண்டி ஒரு நீண்ட அறிக்கை விட்டு தெகா, சி.ஐ.ஏ. ஒபாமா, மனித உரிமை நல விரும்பிகள், இவர்களையெல்லாம் தாண்டி எகிப்திய மக்களின் போராட்டத்தின் மையப்புள்ளி என்ன என்று அறியாமல் நடுஇரவில் ஒரே ஒரு அறிக்கை விட்டு எல்லோருக்கும் பெப்பே காட்டி என்னதான் சொல்ல வருகிறாரென்று யாருக்கும் தெரியாமல் அனைவரையும் குழப்பி நீண்ட பிரச்சாரம் செய்து விட்டு  இந்த மண்ணில்தான் சாவேன்,வெளிநாடுகளின் சூழ்ச்சிகளுக்கு அடிபணிய மாட்டேன் என்று தொண்டர்களுக்கு உள்குத்து வேலையும் செய்து விட்டு தான் பதவி விலகப்போவதில்லை என்பதை நாசுக்காக சொல்லாமல் சொல்லி மைக்கையும்,தொலைக்காட்சி கேமராவையும் நிறுத்தி விட்டார் முபாரக்.ஒபாமா அவசரமா அறிக்கை விட்டு விட்டு வாஷிங்டன் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்.இயற்கையாய் உதித்த மக்கள் எழுச்சியை ஏனைய மொத்த தூர,அண்டை நாடுகளும் தமது சுயந்ல தேவைக்கேற்ப வரவேற்றும், எதிர்த்தும் பயன்படுத்திக்கொள்வது அப்பட்டமாகத் தெரிகிறது.ஊடகங்கள் செய்தியென்ற கடமையை செய்கின்றன

வளைகுடாப்போரில் சதாமின் சார்பாகவும்,குவைத் நாட்டிற்கு சார்பாகவும் கலந்து கொண்ட ஆட்சியாளர்களுக்கு நாட்டமை மாதிரியான நிலையில்  சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேச்சுவார்த்தையில் ஹோஸ்னி முபாரக் நாட்டாமை பார்த்து It's a summer cloud என்று சொல்லி இரு நாடுகளுக்கும் சண்டை மூட்டி விட்டதில் ஒரு பங்கு ஹோஸ்னி முபாரக்குக்கும் உண்டு என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

பார்வையாளர்கள் எகிப்து குறித்து தற்போது ஊர்ந்தும்,கூர்ந்தும் கவனித்தாலும் கூட பணி புரியும் எகிப்தியக்காரனை ஐந்து வருடமாக ஹோஸ்னி முபாரக்கை விட்டால் உங்களை ஆட்சி செய்வதற்கு வேறு ஆட்கள் இல்லையா என்று கிண்டல் செய்துகிட்டு இருந்தேன்.இவ்வளவு மக்கள் ஜனநாயக ரீதியாகப் போராடியும்,ஜனவரி 25ம் தேதியிலிருந்து இன்று வரையிலான போராட்டக்குரல்கள் எழுப்பியும் தில்லாலங்கடி வேலை செய்யும் ஹோஸ்னி முபாரக்கை பதவி விலக வைப்பது எவ்வளவு கடினம் என்பது புரிகிறது.

எனினும்,எகிப்தின் மக்கள் எழுச்சி இன்னும் முற்றுப்பெறாத ஒன்று.அமைதியான முறையில் மாற்றங்களை கொண்டு வரும் அத்தனை வழிகளையும் முபாரக் அடைப்பதால் வரும் நாட்கள் எந்த மாதிரி நகரும் என்பதை யாரும் கணிக்க இயலாத நிலை.நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் மக்களின் கோபம் அலை பாயும் என எதிர்பார்க்கலாம்.

ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும் என்பது எகிப்தியர்களுக்கு இப்போதைய எழுச்சி.எனக்கோ எத்தல பர்ரா என்று குவைத் மொழியில் வெளியே போ என்ற குரல் எனக்குள்ளே நீண்ட நாட்கள் ஒலிக்கும் குரல்.


Thursday, February 10, 2011

தமிழக காங்கிரஸ் ரெண்டான்னா பதிவர்களுக்கு கொண்டாட்டம்.

ஜனநாயக ரீதியா காங்கிரசுக்கும் தகுதியிருக்கு தேர்தலில் போட்டியிட.ஆனால் வானம் நிர்மலமாக இல்லாத காலத்திலேயே ஒன்றும் வெட்டி முறிக்க இயலவில்லை தமிழக காங்கிரசுக்கு.இப்போது ஈழத்து கோபம்,ஸ்பெக்ட்ரம் அலையென்ற புயலோடு காங்கிரஸ் தேர்தல் ஐவர் குழுவில் இளங்கோவனை சேர்க்க வில்லையாம்.ஏற்கனவே 1,2,3ன்னு ரிங் நடுவர் சொல்றதுக்குள்ளே பொதக்கடீர்ன்னு கீழே விழுகிற நிலையில் இருக்கிற காங்கிரஸ் இப்ப மல்லாக்கா விழுந்ததுல்ல பதிவர்களெல்லாம் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க பார்ப்போம்.தங்கபாலுவுக்கு இது விட கொண்டாட்டமா இருக்குமே?

இதோட மட்டும் படம் முடிஞ்சிருச்சுன்னு ஒடிட வேண்டாம்.படமே இப்போதுதான் ஆரம்பமாகுது.அவனவன் தான் நம்பும் ஒரு காரணத்துக்காக எதுவுமே செய்ய இயலவில்லையே என்ற சுயபச்சாதபத்தில் மண் எண்ணையை,பெட்ரோலை எடுத்து ஊத்திகிட்டு தீக்குளிச்சா அதை எப்படி   நெடுமாறன், சீமான் சொல்லி  தீக்குளிச்சான்னு கொச்சைப்படுத்துறீங்க இளங்கோவன்? இதோ உங்க கட்சிக்காரரும் கூடத்தான் மண்ணென்னைய ஊத்திகிட்டு கொழுத்திக்கப் பார்த்தாரு.இதையும் நீங்க செஞ்ச செட்டப்புன்னு சொல்லிடலாமா?அதெப்படி தேர்தல் நேரம் பார்த்து கட்சிய கவிழ்க்கிறதுக்கு சரியா ஐடியா கிடைக்குது?

அடப்போய்யா!மனிதன் உணர்வையும்,அன்பையும் புரிஞ்சிக்காத நீயெல்லாம் தலைவன்னுட்டு.நீ மிராசு கட்சிக்கு தலைவனாக்கூட இருந்துட்டுப்போ! ஆனால் தமிழகத்துக்குன்னு கிடைச்ச அந்த வெந்தாடிக்கிழவன் பெயருக்கு களங்கம் கற்பிக்கிறதுக்கு உன்னோட கட்சியே உள் சண்டை கட்சிப்பூசலில்  தமிழகத்தில் தலையெடுக்காம போகட்டும்.

Friday, February 4, 2011

கே.சுப்ரமணியம்- முந்தைய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்.

கே.சுப்ரமணியத்தின் அறிமுகம் கார்கில் போரின் காலத்தில் சி.என்.என் தொலைக்காட்சி மூலம் எனக்கு அறிமுகம்.சி.என்.என் நிகழ்ச்சியாளர் ஒரு இடது பக்கம் பாகிஸ்தானின் அரசியல் கருத்துரையாளரையும்,வலது பக்கம் கே.சுப்ரமணியத்தையும் காட்டிவிட்டு பேச்சு சிண்டு முடிந்து விட்டுக்கொண்டிருந்தார்.கார்கில் கோபம்,சரளமாக வந்து விழும் ஆங்கிலம்,கூடவே யாரிது என்று நோக்க வைக்கும் தர்க்கம் என கே.சுப்ரமணியம் பாகிஸ்தானிய விமர்சகரை வாங்கிக்கொண்டிருந்தார்.


யாரிந்த மனிதர் என்று துருவியதில் இந்திரா காந்தி ஆட்சிக்காலம் முதல் இந்திய உளவுத்துறையிலும்,ரா விலும் பணியாற்றி கார்கில் போரின் காரணங்களை அலசும் குழுவின் தலைவராக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் சுப்ரமணியத்தை நியமித்தார்.அரசியல்வாதிகளுக்கும் அப்பால் இந்திய அரசு நிர்வாகத்தில் பாகிஸ்தானை எதிர்த்த குரல் கே.சுப்ரமணியம் என்பேன்.உளவுத்துறையிலும்,ரா அமைப்பிலும் பின் புலத்தின் நின்று பணி செய்யும் அதிகாரிகளுக்கு மாறாக கட்டுரைகள்,கருத்தரங்கள்,தொலைக்காட்சி விவாதங்கள் என கலந்து கொண்ட உளவுத்துறை மனிதர் கே.சுப்ரமணியம்.அரசு நிர்வாகிகளும்,அவர்களது திறமைகளும் வெளி உலகத்துக்கு வராமலே மறைந்து போய் விடுவது இந்திய சூழலின் குறை என்பேன்.எம்.கே.நாரயணன் போல் அதிகார வர்க்கம் சொல்வதே இதிகாசம் என்றில்லாமல் ஆட்சியாளர்களை முகத்துக்கு நேர் வைக்கும் விமர்சனங்களும் கூட கே.சுப்ரமணியத்தை பின்கட்டுக்குள் தள்ளியிருக்கலாம்.சென்னையில் இருந்து கொண்டு மக்கள் நாடி பிடிக்கும் திறமையில்,உளவுத்துறையின் பங்காளியாக ஈழம் குறித்த இவரது பார்வை என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

நேரு காலத்து இந்திய சரித்திரத்தை குறித்து வைக்கும் பகுதியாகவும்,சீன ஆக்கிரமிப்பின் ஆதாரமாகவும் கே.சுப்ரமணியம் பதிவு செய்யும் வரலாற்று நிகழ்ச்சி இங்கே உங்கள் பார்வைக்காக.

That night of November 19
On Nehru’s correspondence with JFK during the chinese aggression

I am perhaps one of the very few surviving people who came to know about Jawaharlal Nehru’s appeal to John F Kennedy on the night of November 19, 1962. I have already written about it in the Centenary History of The Indian National Congress (Volume IV, 1990). Commenting on Nehru’s failures in 1962, I had written: “At the highest level Jawaharlal Nehru chose to appeal to the US President for aerial support without first ordering the Indian Air Force into battle.”

In November 1962, I shared a room with my senior colleague S Soundararajan, from whom I had taken over as deputy secretary (JIO) [in the Ministry of Defence]. It was 9 pm on November 19, and a visibly shaken Soundararajan came and told me of this telegram which he had seen with [Vincent] Coelho [then joint secretary (Americas) in the External Affairs Ministry]. I did not see the text of the telegram and what Soundararajan told me at that time confirms Inder Malhotra’s (‘Letters from the darkest hour’, IE, November 17) rather than Sudhir Ghosh’s account. Nehru did not ask for an aircraft carrier. But the Americans did have an aircraft carrier (USS Enterprise) in the Indian Ocean and it did move into the Bay of Bengal.

This particular incident and what happened subsequently have very valuable lessons to non-alignment cultists on Nehru’s use of the concept as a strategy to safeguard India’s security and not as a third-worldist ideology.
(Courtesy: Indian Express)



இந்த பதிவு கார்கிலால் என்னை இழுத்த,பிப்ரவரி 2ம் தேதி மறைந்து போன கே.சுப்ரமணியம் அவர்களுக்கு அர்பணிப்பு.  

கபில் சிபல் இன்னுமா திருந்தல?

அரசியல்,சமூக,மக்கள் போராட்ட காரணங்கள் தவிர சிறை செல்லும்  சென்ற எவனும் / எவளும் குற்றவாளிதான்.இது திருட்டு கேஸ் விசாரிப்பு வக்கீல் கபிலுக்கு இன்னும் ஏன் உறைக்க மாட்டேங்குதுன்னு தெரியவில்லை.

ஒரு வியாபாரம் துவங்கும் காலத்தில் Promo techniques,Discount 20%,Buy 1 get one Free,Invest in India slogans போன்றவை வியாபார அறிமுகமாகவும்,வியாபார பெருக்கம் காரணமாகவும் செயல்படும் வியாபார நிர்வாக மந்திரங்கள்.(The business management techniques.) நன்றாக இயங்கும் வியாபாரத்திற்கும்,அறிமுகமான பொருளுக்கும்,விலை போகும் பொருளுக்கும்,வளர்ந்து விட்ட நிறுவனத்திற்கும்,அனாவசிய இலவசங்களும்,அடிமாட்டு விலையும் வைத்து விற்பவன் ஒரு சிறந்த விற்பனை நிபுணனாக இருக்க மாட்டான்.அப்படி விற்பவன் கடத்தல் பொருள்,குற்றப்பிரிவின் விற்பனையாளனாகவே இருப்பான்.You fall into the second catagory of business legal advisor Mr.Kapil Sibal!

பி.ஜே.பியின் ஆட்சிக்காலத்து இணைய, அலைக்கற்றை வரிசையின் நிலை என்ன? இன்றைய நிலை என்ன? 1999ன்பொருளாதார,2008ன்இந்திய சந்தையின் வளர்ச்சி இரண்டையும் ஒன்றாக் இணைத்து விவாதம் செய்கிறார் கபில். முன்னாடி CAG யின் கணக்கே தவறு என்று ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வக்காலத்து வாங்கும் கபில், ஆ.இராசா சி.பி.ஐ காவலில் இருக்கும்  இந்த தினத்திலும் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு ஊதுகுழலாய் பி.ஜே.பி கூட்டணி காலத்திலே ஸ்பெக்ட்ரம் முன்னுரிமை வழங்கப்பட்டதென்று விவாதம் செய்கிறார்.

விவாதத்திற்கு முந்தைய ஆட்சியிலே முன்னுரிமைக்கொள்கை துவங்கியது என்று வைத்துக்கொண்டாலும் இப்போதைய ஸ்பெக்ட்ரம் விவாதம் முன்னுரிமைக்கொள்கையோடு காசை ஆட்டை போட்ட களவாணித்தனம் என்பதும் கபிலுக்கு புரிந்தாலும் கொடுக்குற காசுக்கு நல்லா கூவறது மட்டும் புரிகிறது.

திருடனையும் தேர்தல் வீரனாக்கும் சாதுரியம் வாய்ந்த வாய்த்திறமையையும், எதுவும் தெரியாமல் தொலைக்காட்சிப்பெட்டியில் கிடைப்பதை பருகுகிறோம் என்ற மன நிலை மக்களையும் வாழ்த்துவோம்.

வால்பையனுக்கு ருசிகர சிபாரிசுகள்.

வால்பையன்!உணவக நிர்வாகம் எப்படி இருக்குது? ஆர்.எஸ்.புரத்துல இருப்பதால் பஸ்,ஆட்டோ புடிச்சு கோவை ரயில் நிலையம் பக்கம் ஒரு பொடி நடை போய் வந்து விடுங்க.அப்படியே ரயில் நிலையத்துக்கு எதிர்த்தாப்புல இருக்குற குறுக்கு சந்துல போய் இடதுபக்கம் திரும்பி மறுபடியும் வலது பக்கம் திரும்பினா சுப்பு மெஸ்.நான் கோவையை அளந்து திரிந்த காலத்தில் எதிர்த்தாப்புல கீதாபவன் சைவ உணவகம்,அதுக்குப் பக்கத்துல ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்கள்,கலைக்கல்லூரி மாணவர்கள் வழக்கமா டேரா போட்டு சிகரெட்,டீ மிஞ்சிப்போனா இட்லி,தோசை கிட்டும் சுப்பு மெஸ்,இளைஞர் காங்கிரஸ் அணி,சந்தின் அந்தக்கடைசிக்குப் போனா உட்லண்ட்ஸ் ஹோட்டல்,கல்லூரி மதிலில் உட்கார்ந்து கொண்டு டாவடிக்கும் கல்லூரி மாணவர்கள் என்பது தவிர பெருசா சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை.ஆனால் இன்று நிறைய கட்டிடங்கள்,தங்கிம் விடுதிகள்,ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் என அந்த சந்த நிரம்பி வழிகிறது.

பொட்டிக்கடையா இருந்த சுப்பு மெஸ் தனது இருப்பிடத்தின் நீள அகலங்களைப் பெருக்கி ஒரு பெரும் உணவக முதலாளியாக உயர வளர்ந்திருக்கிறது.சுப்பு மெஸ்ஸின் உயர்வுக்கு ஒரே தாரக மந்திரம் ருசி.இயற்கையாகவே கோவையின் சிறுவாணித் தண்ணீருக்கு ருசி அதிகம்.கூடவே சுற்றுவட்டாரத்தில் கிடைக்கும் காரம்,மணம் நிறைந்த இந்திய சமையலின் மூலப்பொருட்கள்,கோழி,ஆடு,குடல் வரை எதுவும் வாசம் மிகுந்த ருசியான உணவாக மாறிப்போகும்.முன்பு நஞ்சப்பா ரோட்டில் முனியாண்டி விலாஸ் பிரியாணிக் கடை ஒன்று இருந்தது.பிரியாணி மட்டுமே ஸ்பெஷல்.கீதாபவனில் சைவ உணவு,மேம்பாலம் அருகில்  சில சைவ உணவுக்கடைகளில் தோசை,ரவா தோசை,இட்லி,பொங்கல் என்ற அன்றாட மெனுக்களும், இவைகளுக்குப் பின் தலையெடுத்த காந்திபுரம் கௌரி சங்கர்,ஆர்.எஸ்.புரம் அன்னாபூர்ணா என இத்தனை வருடங்களாகியும் இவற்றைக்குறிப்பிடக் காரணம் ருசி என்ற தாரக மந்திரம்.

Catering business basic rule is  "Dont compromise on taste" plus service.இட அலங்காரம்,நிலம் இருப்பிடம் என்பவை வியாபாரத்துக்கு அழகும்,மக்கள் கூட்டம் கூட்டும் அதிக காரணிகள் மட்டுமே.

அப்புறம் ஒரு கிலோ எறா மீன் தோல் உரிச்சா உங்களுக்கு 600 கிராம் சதையாக மிஞ்சும்.வெறுமனே வதக்கி எடுத்தால் 400 கிராம் மட்டுமே கிட்டும்.முள் மீன் Fillet செய்தால் 550 கிராம் கிட்டும்.கோழியை எலும்போட 4 பகுதியாக,எட்டுப்பகுதியாக வெட்டலாம்.எலும்பில்லாத கறியாக இதுவும் 550 கிராம் தேறலாம்.

நீங்கள் ஐந்து நட்சத்திர ஓட்டல் அனுபவம் உள்ளவர் என்பதை சமீபத்தில் அறிந்தேன்.Red meat will go with Redwine and White meat will go with White wine தெரியும்தானே!

சேர்க்கும் சமையல் பொருட்களை நான்கு பேர்,10 பேர் கணக்கில் கூட்டி வகுத்தால் தேர்வது Food cost.லாபகரமான வியாபாரத்திற்கு 30 முதல் 35% க்கும் மேல் உணவுப்பொருட்களின் விலை போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.அப்படி போகும் பட்சத்தில் சமையல், பரிமாறுபவர்கள் உழைப்பிற்கான ஊதியம், மின்சாரம், தண்ணீர், இதர செலவுகள்,நிகர வருமானம் எத்தனை சதம் தேவை என சேர்த்து கணக்கிட்டு உணவுப் பொருளின் சதவீகத்தால் வகுத்தால் நீங்கள் விற்க வேண்டிய விலை அதிகரிக்கும்.வாடிக்கையாளரை திருப்திபடுத்த விலை குறைத்தால் உங்கள் நிகர லாபம் அடிபடும்.

வழக்கமாக உணவகங்களில் உணவு ருசியாக இருந்தால் பரிமாறுபவருக்கு டிப்ஸ் அளிப்பது வழக்கம்.இதனை சமையல் திறனாளிகளுடன் பங்கிடுவது பின்கட்டுக்காரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதோடு நன்றாக சமைக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்தும்.

கொட்டிக்கொள்ளப்போகும் வாடிக்கையாளர்கள் அடுத்த முறை உணவு ருசியாக இருந்தால் பரிமாறுபவருக்கு டிப்ஸ் அளிப்பதோடு சமையல்காரரையும் கூப்பிட்டு டிப்ஸ் வழங்குகிறீர்களோ இல்லையோ சமையல் பிரமாதம் என்ற சொல்லை புன்முறுவலாக்கி விட்டு வாருங்கள்.

வால் பையன் வளர வாழ்த்துக்களுடன் .....

Wednesday, February 2, 2011

உண்மைத்தமிழன் பதிவுலக ஞாநியே

இது ஆவுறதில்ல வருண்!பதிவுலக ஞாநி உண்மைத்தமிழன் அண்ணன் பற்றி பின்னூட்டம் போட்டா தும்பை விட்டுட்டு  வாலைப்பிடிக்கிற கதையா நீங்க முதல்வர் கருணாநிதி கூட நல்லா கோர்த்து விடுவீங்க போல தெரியுதே! அவருக்கும் நமக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் வில்லங்கமா என்ன?அவரது சில சறுக்கும் செயல்களின் விமர்சனங்களும்,அரசியல் கண்ணோட்டங்களும் அலசும் போது வெறுப்பு என்ற ஒற்றைக்கோட்டில் நின்று விட்டால் விமர்சிப்பதற்கு நான் தகுதியற்றவனாகி விடுவேன்.சரி!நான் சொல்ல வந்தது அதுவல்ல!உண்மைத்தமிழனைப்பற்றி.

தமிழக பயணித்தின் போது பதிவுலகில் பவனி வரும் பதிவர்களை ஒரே இடத்தில் பதிவர்கள் கருத்தரங்கம் மாதிரி எங்காவது சந்தித்து விட இயலுமா என்று எதிர்ப்பார்த்தேன்.ஆனால் ஈரோடு சங்கமம் பற்றி பதிவர் பழமைபேசி குறிப்பிட்டும் 26 ஜனவரி நிகழ்ந்த நிகழ்வில் கலந்து கொள்ள இயலாதபடி 27ம் தேதி ஜனவரி பயணத்தால் கலந்து கொள்ள இயலவில்லை.இருந்தும் கிடைத்த நேரம்,சமூக பார்வையாளர்கள் என்ற ரீதியில் பதிவர் வானம்பாடிகள் பாலா, செந்தில், கும்மி, உண்மைத்தமிழன், வால்பையன், ஜோதிஜி என சில பேரை சந்திக்க முடிந்தது.

இதில் உண்மைத்தமிழன் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும்.அறை நிறைய பத்திரிகைகள், புத்தகங்கள், ஒரு மேசைக்கணினி, நாற்காலியில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு டொர்ரென்று வீசும் பேன், சரளமாக பேசும் தொனி, திரைப்படத்தில்  இப்போதைக்கு பவனி வரும் கதாநாயகன்களை விட அழகான முகவெட்டு, போலித்தனமில்லாத பேச்சு, இவை அனைத்துக்கும் மேலாக அவரது பதிவிற்கான அர்பணிப்பு (அதுதான் அவரது பதிவிலேயே தெரிகிறதே நான் என்ன தனி ஆவர்த்தனம்) என்று மனிதனின் எழுத்தின் மீதான சுவாசம் பிரமிக்க வைக்கும் ஒன்று.

சென்னைப்பதிவர்கள் ஒன்று கூடலாக சங்கம் அமைக்கவேண்டுமென்று முன்பொரு முறை கூடி பின் கிடப்பில் போடப்பட்டது நினைவுக்கு வருகிறது.சங்கம் ஒன்று உருவாகி இயங்கியிருந்தால் உண்மைத்தமிழனின் முழுநேர உழைப்பிற்கு பதிவுலகிற்கு பயன் இருந்திருக்கும்.இன்னுமொரு முறை கூட முயற்சித்துப்பார்க்கலாம்.

ஆஹா!ஓஹோ என்று உண்மைத்தமிழனுக்கு பின்னூட்டங்கள் போடுவதுடன் கூட அவருக்கு கூட்டு முயற்சியாக பொருளாதார ரீதியாகவோ, நிரந்தரமான பணியாகவோ யாராவது உதவினால் நல்லது.