Followers

Friday, February 4, 2011

கபில் சிபல் இன்னுமா திருந்தல?

அரசியல்,சமூக,மக்கள் போராட்ட காரணங்கள் தவிர சிறை செல்லும்  சென்ற எவனும் / எவளும் குற்றவாளிதான்.இது திருட்டு கேஸ் விசாரிப்பு வக்கீல் கபிலுக்கு இன்னும் ஏன் உறைக்க மாட்டேங்குதுன்னு தெரியவில்லை.

ஒரு வியாபாரம் துவங்கும் காலத்தில் Promo techniques,Discount 20%,Buy 1 get one Free,Invest in India slogans போன்றவை வியாபார அறிமுகமாகவும்,வியாபார பெருக்கம் காரணமாகவும் செயல்படும் வியாபார நிர்வாக மந்திரங்கள்.(The business management techniques.) நன்றாக இயங்கும் வியாபாரத்திற்கும்,அறிமுகமான பொருளுக்கும்,விலை போகும் பொருளுக்கும்,வளர்ந்து விட்ட நிறுவனத்திற்கும்,அனாவசிய இலவசங்களும்,அடிமாட்டு விலையும் வைத்து விற்பவன் ஒரு சிறந்த விற்பனை நிபுணனாக இருக்க மாட்டான்.அப்படி விற்பவன் கடத்தல் பொருள்,குற்றப்பிரிவின் விற்பனையாளனாகவே இருப்பான்.You fall into the second catagory of business legal advisor Mr.Kapil Sibal!

பி.ஜே.பியின் ஆட்சிக்காலத்து இணைய, அலைக்கற்றை வரிசையின் நிலை என்ன? இன்றைய நிலை என்ன? 1999ன்பொருளாதார,2008ன்இந்திய சந்தையின் வளர்ச்சி இரண்டையும் ஒன்றாக் இணைத்து விவாதம் செய்கிறார் கபில். முன்னாடி CAG யின் கணக்கே தவறு என்று ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வக்காலத்து வாங்கும் கபில், ஆ.இராசா சி.பி.ஐ காவலில் இருக்கும்  இந்த தினத்திலும் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு ஊதுகுழலாய் பி.ஜே.பி கூட்டணி காலத்திலே ஸ்பெக்ட்ரம் முன்னுரிமை வழங்கப்பட்டதென்று விவாதம் செய்கிறார்.

விவாதத்திற்கு முந்தைய ஆட்சியிலே முன்னுரிமைக்கொள்கை துவங்கியது என்று வைத்துக்கொண்டாலும் இப்போதைய ஸ்பெக்ட்ரம் விவாதம் முன்னுரிமைக்கொள்கையோடு காசை ஆட்டை போட்ட களவாணித்தனம் என்பதும் கபிலுக்கு புரிந்தாலும் கொடுக்குற காசுக்கு நல்லா கூவறது மட்டும் புரிகிறது.

திருடனையும் தேர்தல் வீரனாக்கும் சாதுரியம் வாய்ந்த வாய்த்திறமையையும், எதுவும் தெரியாமல் தொலைக்காட்சிப்பெட்டியில் கிடைப்பதை பருகுகிறோம் என்ற மன நிலை மக்களையும் வாழ்த்துவோம்.

4 comments:

கிணற்றுத் தவளை said...

ம்ம்ம் வாழ்க இந்தியம், மட இந்திய மக்கள் என்று மட்டும்தான் சொல்ல தோன்றுகிறது. நாம் சினிமா மாயை மற்றும் சீரியல் மாயையிலிருந்து விடுபட்டால்தான் விமோச்சனம்

ராஜ நடராஜன் said...

//ம்ம்ம் வாழ்க இந்தியம், மட இந்திய மக்கள் என்று மட்டும்தான் சொல்ல தோன்றுகிறது. நாம் சினிமா மாயை மற்றும் சீரியல் மாயையிலிருந்து விடுபட்டால்தான் விமோச்சனம்//

கண்ணைக்கட்டி விட்டு சுற்றச் சொன்னால் மக்கள் என்ன செய்வார்கள் பாவம்?

நீங்கள் சொல்கிறமாதிரி சினிமா மற்றும் சீரியல் மாயை நிரம்பி பரவிக்கிடக்கிறது.

சீக்கிரமா இணையத்தையும்,தொலைக்காட்சிப்பெட்டியையும் இணைக்கும் நுட்பம் பரவலாகினால் பரவாயில்லை.

Chitra said...

திருடனையும் தேர்தல் வீரனாக்கும் சாதுரியம் வாய்ந்த வாய்த்திறமையையும், எதுவும் தெரியாமல் தொலைக்காட்சிப்பெட்டியில் கிடைப்பதை பருகுகிறோம் என்ற மன நிலை மக்களையும் வாழ்த்துவோம்.


.......http://www.turnoffyourtv.com/
தொலைகாட்சியில் .... எல்லாவற்றையும் sensational நியூஸ் ஆக்கி, மக்களின் பீலிங்க்ஸ் எல்லாவற்றையும் மரத்து போகச் செய்து விடுகிறார்கள். மக்களையும் சுயமாக சிந்திக்க விடாமல் செய்து விடுகிறார்கள் என்று ஒரு ஆய்வு அறிக்கை உள்ளது.....

ராஜ நடராஜன் said...

//திருடனையும் தேர்தல் வீரனாக்கும் சாதுரியம் வாய்ந்த வாய்த்திறமையையும், எதுவும் தெரியாமல் தொலைக்காட்சிப்பெட்டியில் கிடைப்பதை பருகுகிறோம் என்ற மன நிலை மக்களையும் வாழ்த்துவோம்.


.......http://www.turnoffyourtv.com/
தொலைகாட்சியில் .... எல்லாவற்றையும் sensational நியூஸ் ஆக்கி, மக்களின் பீலிங்க்ஸ் எல்லாவற்றையும் மரத்து போகச் செய்து விடுகிறார்கள். மக்களையும் சுயமாக சிந்திக்க விடாமல் செய்து விடுகிறார்கள் என்று ஒரு ஆய்வு அறிக்கை உள்ளது.....//

உண்மைதான் இல்ல! சில் நிகழ்ச்சிகள் போடுறாங்க பாருங்க.திகில் கதை சொல்லும் பின்னணியுடன் ஒரு மலை,காடுன்னு நாலு பேர் சுத்திவிட்டு ஒரு கல்லைகாட்டி இதுதான் அந்த சித்தர் உட்கார்ந்து தியானம் செய்தார் என்று கலைஞர் தொலைக்காட்சியிலும் ஏனைய தொலைக்காட்சிகளில் இதுக்கு நிகராக மந்திர,தந்திர சாகசமென்று.சொல்லிக்கவே வேணாம்.

தொடுப்பைப் பார்த்தேன்.உங்க ஊருலேயும் இதே கதைதானா?ஆனாலும் நம்ம ஊரோட ஒப்பிடும் போது நசரேயனுக்குப் பிடித்த ரத்தக்காட்டேறி படங்களை தவிர்த்து கொஞ்சம் புத்திசாலித்தனமாத்தான் நிகழ்ச்சிகள்,செய்திகள் எனக்குப்படுது.