Followers

Wednesday, February 2, 2011

உண்மைத்தமிழன் பதிவுலக ஞாநியே

இது ஆவுறதில்ல வருண்!பதிவுலக ஞாநி உண்மைத்தமிழன் அண்ணன் பற்றி பின்னூட்டம் போட்டா தும்பை விட்டுட்டு  வாலைப்பிடிக்கிற கதையா நீங்க முதல்வர் கருணாநிதி கூட நல்லா கோர்த்து விடுவீங்க போல தெரியுதே! அவருக்கும் நமக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் வில்லங்கமா என்ன?அவரது சில சறுக்கும் செயல்களின் விமர்சனங்களும்,அரசியல் கண்ணோட்டங்களும் அலசும் போது வெறுப்பு என்ற ஒற்றைக்கோட்டில் நின்று விட்டால் விமர்சிப்பதற்கு நான் தகுதியற்றவனாகி விடுவேன்.சரி!நான் சொல்ல வந்தது அதுவல்ல!உண்மைத்தமிழனைப்பற்றி.

தமிழக பயணித்தின் போது பதிவுலகில் பவனி வரும் பதிவர்களை ஒரே இடத்தில் பதிவர்கள் கருத்தரங்கம் மாதிரி எங்காவது சந்தித்து விட இயலுமா என்று எதிர்ப்பார்த்தேன்.ஆனால் ஈரோடு சங்கமம் பற்றி பதிவர் பழமைபேசி குறிப்பிட்டும் 26 ஜனவரி நிகழ்ந்த நிகழ்வில் கலந்து கொள்ள இயலாதபடி 27ம் தேதி ஜனவரி பயணத்தால் கலந்து கொள்ள இயலவில்லை.இருந்தும் கிடைத்த நேரம்,சமூக பார்வையாளர்கள் என்ற ரீதியில் பதிவர் வானம்பாடிகள் பாலா, செந்தில், கும்மி, உண்மைத்தமிழன், வால்பையன், ஜோதிஜி என சில பேரை சந்திக்க முடிந்தது.

இதில் உண்மைத்தமிழன் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும்.அறை நிறைய பத்திரிகைகள், புத்தகங்கள், ஒரு மேசைக்கணினி, நாற்காலியில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு டொர்ரென்று வீசும் பேன், சரளமாக பேசும் தொனி, திரைப்படத்தில்  இப்போதைக்கு பவனி வரும் கதாநாயகன்களை விட அழகான முகவெட்டு, போலித்தனமில்லாத பேச்சு, இவை அனைத்துக்கும் மேலாக அவரது பதிவிற்கான அர்பணிப்பு (அதுதான் அவரது பதிவிலேயே தெரிகிறதே நான் என்ன தனி ஆவர்த்தனம்) என்று மனிதனின் எழுத்தின் மீதான சுவாசம் பிரமிக்க வைக்கும் ஒன்று.

சென்னைப்பதிவர்கள் ஒன்று கூடலாக சங்கம் அமைக்கவேண்டுமென்று முன்பொரு முறை கூடி பின் கிடப்பில் போடப்பட்டது நினைவுக்கு வருகிறது.சங்கம் ஒன்று உருவாகி இயங்கியிருந்தால் உண்மைத்தமிழனின் முழுநேர உழைப்பிற்கு பதிவுலகிற்கு பயன் இருந்திருக்கும்.இன்னுமொரு முறை கூட முயற்சித்துப்பார்க்கலாம்.

ஆஹா!ஓஹோ என்று உண்மைத்தமிழனுக்கு பின்னூட்டங்கள் போடுவதுடன் கூட அவருக்கு கூட்டு முயற்சியாக பொருளாதார ரீதியாகவோ, நிரந்தரமான பணியாகவோ யாராவது உதவினால் நல்லது.




8 comments:

வருண் said...

நல்ல எதிர் விணை :)

ராஜ நடராஜன் said...

வருண்!இது உங்களுக்கான எதிர் வினையே!வந்து போணி செய்ததற்கு நன்றி:)

வருண் said...

தல!

நான் காலையில் (என் நேரம்) தான் பார்த்தேன். பதிவில் குறையுன்றும் இல்லை! ஏதாவது சொல்லனும்னா அப்புறம் வந்து சொல்றேன் :)

ராஜ நடராஜன் said...

//தல!

நான் காலையில் (என் நேரம்) தான் பார்த்தேன். பதிவில் குறையுன்றும் இல்லை! ஏதாவது சொல்லனும்னா அப்புறம் வந்து சொல்றேன் :)//

காலை எழுந்தவுடன் பதிவு!நல்லாயிருக்கே:)

பழமைபேசி said...

அண்ணன் அண்ணந்தான்!!

ஜோதிஜி said...

"என் கடன் பணி செய்து கிடப்பதே". இந்த வாசகம் தான் உண்மைத்தமிழன் உழைப்பை பார்க்கும் போது எனக்குத் தோன்றுவது.

ராஜ நடராஜன் said...

//அண்ணன் அண்ணந்தான்!!//

பின்னே:)முழு நேர பதிவர்ன்னா அது உண்மைத்தமிழனாகத்தான் இருக்கும்!

இவருக்கு ஏதாவது நல்லது செய்தாகனும்.

ராஜ நடராஜன் said...

//"என் கடன் பணி செய்து கிடப்பதே". இந்த வாசகம் தான் உண்மைத்தமிழன் உழைப்பை பார்க்கும் போது எனக்குத் தோன்றுவது.//

ஜோதிஜி!நீஙகள் சொல்கிறமாதிரி என் தொழில் பதிவு எழுதுவதே என்பது இவருக்கு மிகவும் பொருந்தும்.

அவரோட வேகத்துக்கு பதிவு எழுதும் இன்னொரு பதிவர் என உங்களையும் குறிப்பிடுவேன்.