Followers

Thursday, February 10, 2011

தமிழக காங்கிரஸ் ரெண்டான்னா பதிவர்களுக்கு கொண்டாட்டம்.

ஜனநாயக ரீதியா காங்கிரசுக்கும் தகுதியிருக்கு தேர்தலில் போட்டியிட.ஆனால் வானம் நிர்மலமாக இல்லாத காலத்திலேயே ஒன்றும் வெட்டி முறிக்க இயலவில்லை தமிழக காங்கிரசுக்கு.இப்போது ஈழத்து கோபம்,ஸ்பெக்ட்ரம் அலையென்ற புயலோடு காங்கிரஸ் தேர்தல் ஐவர் குழுவில் இளங்கோவனை சேர்க்க வில்லையாம்.ஏற்கனவே 1,2,3ன்னு ரிங் நடுவர் சொல்றதுக்குள்ளே பொதக்கடீர்ன்னு கீழே விழுகிற நிலையில் இருக்கிற காங்கிரஸ் இப்ப மல்லாக்கா விழுந்ததுல்ல பதிவர்களெல்லாம் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க பார்ப்போம்.தங்கபாலுவுக்கு இது விட கொண்டாட்டமா இருக்குமே?

இதோட மட்டும் படம் முடிஞ்சிருச்சுன்னு ஒடிட வேண்டாம்.படமே இப்போதுதான் ஆரம்பமாகுது.அவனவன் தான் நம்பும் ஒரு காரணத்துக்காக எதுவுமே செய்ய இயலவில்லையே என்ற சுயபச்சாதபத்தில் மண் எண்ணையை,பெட்ரோலை எடுத்து ஊத்திகிட்டு தீக்குளிச்சா அதை எப்படி   நெடுமாறன், சீமான் சொல்லி  தீக்குளிச்சான்னு கொச்சைப்படுத்துறீங்க இளங்கோவன்? இதோ உங்க கட்சிக்காரரும் கூடத்தான் மண்ணென்னைய ஊத்திகிட்டு கொழுத்திக்கப் பார்த்தாரு.இதையும் நீங்க செஞ்ச செட்டப்புன்னு சொல்லிடலாமா?அதெப்படி தேர்தல் நேரம் பார்த்து கட்சிய கவிழ்க்கிறதுக்கு சரியா ஐடியா கிடைக்குது?

அடப்போய்யா!மனிதன் உணர்வையும்,அன்பையும் புரிஞ்சிக்காத நீயெல்லாம் தலைவன்னுட்டு.நீ மிராசு கட்சிக்கு தலைவனாக்கூட இருந்துட்டுப்போ! ஆனால் தமிழகத்துக்குன்னு கிடைச்ச அந்த வெந்தாடிக்கிழவன் பெயருக்கு களங்கம் கற்பிக்கிறதுக்கு உன்னோட கட்சியே உள் சண்டை கட்சிப்பூசலில்  தமிழகத்தில் தலையெடுக்காம போகட்டும்.

16 comments:

வானம்பாடிகள் said...

அந்த லூச தலைவன்னு சொன்னா காங்கிரஸ்காரனே அடிக்க வருவான்:))

Thekkikattan|தெகா said...

வானம்பாடிகள் said...
அந்த லூச தலைவன்னு சொன்னா காங்கிரஸ்காரனே அடிக்க வருவான்:))//

ஹாஹாஹா... :))

Chitra said...

வானம்பாடிகள் said...

அந்த லூச தலைவன்னு சொன்னா காங்கிரஸ்காரனே அடிக்க வருவான்:))....Super comment, Sir!

குடுகுடுப்பை said...

முத்துக்குமார் இயலாமையில் தீக்குளித்து இறந்துபோன ஒரு முட்டாள்.(தீக்குளிப்பை ஏற்காததால்) அதனை வைகோ,நெடுமாறன் தூண்டிவிட்டார் என்று பேசுபவர் முட்டாள்தனம் அல்ல விஷமத்தனம்.

ராஜ நடராஜன் said...

//அந்த லூச தலைவன்னு சொன்னா காங்கிரஸ்காரனே அடிக்க வருவான்:))//

பாலாண்ணா!எப்படியிருக்கீங்க?

முதல் போணி நச்!

ராஜ நடராஜன் said...

//வானம்பாடிகள் said...
அந்த லூச தலைவன்னு சொன்னா காங்கிரஸ்காரனே அடிக்க வருவான்:))//

ஹாஹாஹா... :))//

தெகா!ரொம்பத்தான் சிரிக்காதீங்க:) இப்பத்தான் ஹோஸ்னி முபாரக் பதிவுக்கு இரண்டாம் பின்னூட்டம் போட்டு விட்டு இங்கு வந்தேன்.

ராஜ நடராஜன் said...

//....Super comment, Sir!//

இது உங்க ஊர்ல.எங்க ஊர்ல அதுக்குப் பேரு நச் ஆம்:)

ராஜ நடராஜன் said...

//முத்துக்குமார் இயலாமையில் தீக்குளித்து இறந்துபோன ஒரு முட்டாள்.(தீக்குளிப்பை ஏற்காததால்) அதனை வைகோ,நெடுமாறன் தூண்டிவிட்டார் என்று பேசுபவர் முட்டாள்தனம் அல்ல விஷமத்தனம்.//

வருங்கால முதலமைச்சரே!எப்படியிருக்கீங்க?

எந்த தீக்குளிப்பும் ஏற்க இயலாத ஒன்றே .ஆனால் திராவிட அரசியல் ஊட்டி வளர்த்த முறைகள்,தமிழனின் இயலாமை, மனோபாவம் போன்றவை மாறும் வரை நான் யதார்த்தத்தின் பக்கம் நிற்கிறேன்.
சிலருக்கு பற்றின் எல்லை தன்னைத்தானே அழித்துக்கொள்ளல்.

நெடுமாறன்,சீமான்,வை.கோ தூண்டிவிட்டு தீக்குளிக்கும் நிலையிலா மனிதர்கள் இருக்கிறார்கள்?இவைகளுக்கு சொந்தக்காரர்கள் காங்கிரசின் தேர்தல் பங்காளி தி.மு.க என்ற அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதவராயிருக்கிறாரே இளங்கோவன்.

நசரேயன் said...

//அந்த லூச தலைவன்னு சொன்னா காங்கிரஸ்காரனே அடிக்க வருவான்:))//

யாருண்ணே அது ?

நசரேயன் said...

//தமிழகத்துக்குன்னு கிடைச்ச அந்த
வெந்தாடிக்கிழவன் //

யாருண்ணே அது?


ரெண்டு கேள்விக்கும் விடை கிடைக்கலை நானும் தீக்குளிப்பேன்

நசரேயன் said...

//பதிவர்களுக்கு கொண்டாட்டம்.//

எப்படின்னு சொன்னா நல்லா இருக்கும்

ராஜ நடராஜன் said...

//ரெண்டு கேள்விக்கும் விடை கிடைக்கலை நானும் தீக்குளிப்பேன்//

நசரு!நான் தெகாவுக்கு அடுத்த பதிவு போட்டுகிட்டிருந்தேன்.அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி?

ராஜ நடராஜன் said...

////அந்த லூச தலைவன்னு சொன்னா காங்கிரஸ்காரனே அடிக்க வருவான்:))//

யாருண்ணே அது ?//

இதுக்குத்தான் பதிவை படிக்கணுமிங்கிறது:)

ராஜ நடராஜன் said...

////பதிவர்களுக்கு கொண்டாட்டம்.//

எப்படின்னு சொன்னா நல்லா இருக்கும்//

ம்....வருதுல்ல!அதனால:)

பட்டாபட்டி.... said...

@நசரேயன் said...

//தமிழகத்துக்குன்னு கிடைச்ச அந்த
வெந்தாடிக்கிழவன் //

யாருண்ணே அது?


ரெண்டு கேள்விக்கும் விடை கிடைக்கலை நானும் தீக்குளிப்பேன்
//

அண்ணே.. நிசமாவே நீங்க பச்ச மண்ணுண்ணே..
:-)

ராஜ நடராஜன் said...

//ரெண்டு கேள்விக்கும் விடை கிடைக்கலை நானும் தீக்குளிப்பேன்
//

அண்ணே.. நிசமாவே நீங்க பச்ச மண்ணுண்ணே..
:-)//

யாரு!நசரு பச்ச மண்ணு!
ரத்தக்காட்டேறிக் காதலன்னு வேணுமின்னா வெச்சுக்கலாம்:)

இப்பவெல்லாம் ஏதாவது ஒரு டெரர் ரத்தக்காட்டேறி படம் கண்ணுல மாட்டிட்டா பயத்தையும் மீறி நசரு வந்து கிச்சு கிச்சு மூட்டுறார்:)