Followers

Thursday, February 17, 2011

வாய் திறந்த பிரதமர் மன்மோகன் சிங்!

பிரதமர் மன்மோகன் முன்பே வாய் திறந்திருந்தாலும் ஊழல் குள்ளநரிகளின் கூட்டத்தில் விவகாரத்தில் மாட்டியிருப்பார் என்றே தெரிகிறது.இப்பொழுது கரை புரண்டு ஓடும் போதும் அதே நிலைதான்.எப்படியோ இப்பவாவது ஊடகவியளாலர்களிடம் வாய் திறந்ததற்கு பாராட்டுக்கள்.

கொஞ்சம் நேர்மை,விட்ட தவறுகள்,சப்பைக்கட்டு,தமிழகத்தில் ஜெயிப்போம் கனவோடு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் சாதனைகளையும் பட்டியலிட்டிருக்கிறார்.இத்தாலி எழுத்துல இருக்கும் சில நையாண்டி தவிர்த்து எல்லாம் அவர் ஆங்கிலத்தில் சொன்னது தமிழில்.பார்வையை பதிக்கலாம் வாங்க!

முகவுரை:

  • பலவிதமான ஊழல்களை பார்வைக்கு கொண்டு வந்ததற்காக ஊடகங்களுக்கு நன்றி.

  • ஸ்பெக்ட்ரம்,காமன்வெல்த்,இஸ்ரோ,ஆதாஷ் ஊழல்களில் தவறு செய்தவர்கள் எந்த விதமான பதவி வகுத்தாலும் தண்டிப்பதில் தீவிரமாக இருக்கிறோம் என்பதை மொத்த இந்தியாவுக்கும் உறுதி கூறுகிறேன்.

  • ஊழல்கள் நிறைந்த நாடு என்று நம்மை உலகிற்கு காட்டுவதன் மூலம் நமது சுயநம்பிக்கைகளை இழக்கிறோம்.

  • நொண்டி வாத்து அரசாங்கம் என்ற விமர்சனப் பார்வை இருந்தாலும் கூட அரசாங்கத்தை நிர்வகிப்பதில் தீவிரமாக இருக்கிறேன்.

  • இந்த வருட வளர்ச்சி விகிதாச்சாரம் 8.5% ஆக இருக்கும்.

  • உலக பொருளாதார சரிவு இருந்தாலும் கூட இந்திய பொருளாதார சரிவை சரிக்கட்ட முயலவேண்டும்.

  • பொருளாதார சரிவு ஒரு பிரச்சினையாக இருந்தாலும் கூட வளர்ச்சியின் ரிதம் மாறாமல் பொருளாதார சரிவை சரி செய்ய வேண்டும்.

  • இந்த வருடம்(2011) இறுதியில் பொருளாதார வீழ்ச்சி விகிதாச்சாரம் 7% க்கும் கீழ் வந்து விடும்

  • உள்நாட்டுப் பாதுகாப்பு மிகவும் கவலைக்குரியதான ஒன்று.

  • நிறைய தீவிரவாத செயல்களை தடுத்திருக்கிறோம்.அரசாங்கம் அதற்கான வரவேற்பை பெறவேண்டும்.

  • உல்பா (ULFA) வுடன் பேச்சு வார்த்தை தொடங்கும்.

  • ஜம்மு-காஷ்மீர் சில பிரச்சினைகளுக்கப்பால் நிலைத்து நிற்கிறது.

  • சென்ற வருடம் ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் அனைவரும் இந்தியா வருகை தந்துள்ளார்கள்.

  • பாராளுமன்றம் நிகழாமல் இருப்பதற்கான காரணங்கள் எனக்கு புரியவில்லை,அடுத்த பாராளுமன்ற கூட்டத்தினை அமைதியாக நிகழ்த்த நேர்மையான முயற்சிகளை எடுக்கின்றோம்.

வந்துடுச்சு 2G கேள்விகள்.

நவம்பர் 2,2007ல் தனது கடிதத்தை குறிப்பிடுகிறார்.

  • டெலிகாம் மற்றும் ஊடகங்களில் நிறைய கவலை தெரிவிக்கப்பட்டது.
  • 2G சமமான,நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும்.
  • ஏலம் விடுவதற்கான சந்தர்ப்பங்களை குறிப்பிட்டிருந்தேன்.
  • மிஸ்டர் ராஜா அதே நாளில் சொன்ன உறுதிமொழிகளின் படி நடப்பதாக பதில் எழுதியிருந்தார்.
  • ஏலம் விட்டால் அனைவருக்கும் சந்தர்ப்பம் கிடைக்காது என்றார் ராஜா.
  • இன்னொரு கடிதத்தில் 3G க்கு ஏலத்திற்கு தயாராக இருப்பதாக கூறினார்.
  • கடிதம் நிதித்துறையின் குறிப்புடன் இருந்தது.
  • நிதி அமைச்சகம் ஸ்பெக்ட்ரம் விலை தீர்மானிப்பின் அங்கமாக இருந்தது.

  • ராஜாவிடம் 2G குறித்த கவலையை தெரிவித்தேன்.ஆனால் ஏலம் குறித்து மேலும் வற்புறுத்தவில்லை,காரணம் டெலிகாம் மற்றும் நிதித்துறை முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற நடைமுறையில் இருந்த திட்டத்திற்கு சம்மதித்தார்கள்.
  • ராஜா முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற திட்டத்தை தொடர்ந்தார்.
  • 2G ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் யாருக்கு அனுமதி என்பது எனது பார்வைக்கோ அல்லது கேபினட்டுக்கோ வரவில்லை.

  • 2009 ல் ஏன் ராஜாவே மீண்டும் டெலிகாம் துறை பதவிக்கு நியமிக்கப்பட்டார்?

  • கேபினட் அமைச்சகம் அமைப்பதில் என்னென்ன நிகழ்ந்தது என்பதை தன்னால் விரிவாக சொல்ல இயலாது.
  • குறிப்பிட்ட கூட்டணிக்கட்சியின் தலைவர் நிர்பந்திப்பதைப் பொறுத்து பதவிகள் வழங்கப்பட்டன.மிஸ்டர் ராஜா தி.மு.கவின் தேர்வு.
  • ராஜாவின் தேர்வை மறுப்பதில் எனக்கு உரிமையில்லை என நினைக்கிறேன்.
  • ராஜாவைப்பற்றிய குற்றச்சாட்டுக்கள் வந்தன.ஆனால் பெரும் தவறுகள் நிகழ்ந்ததா என்று தீர்மானிக்க இயலாத நிலையில் இருந்தேன்.

கூட்டுக்குழுவில் (JPC) நிற்பதின் பயம் பற்றி

  • எந்த குழுவின் முன் நிற்பதற்கும் பயப்படவில்லை.
  • PAC குழுவின் முன் நிற்பதற்கு நான் முன்வந்தேன்.
  • JPC முன் நிற்பதற்கும் பயப்படவில்லை.

இரண்டாம் தலைமுறையின் சீர்திருத்தங்கள்.

  • சீர்திருத்தங்களை நிறுத்தவில்லை.தொடர்வோம்.
  • வரும் பட்ஜெட்டில் சீர்திருத்தங்களுக்கான வரைபடம் இருக்குமென நம்புகிறேன்.
  • GST(Goods and Services Tax) சீர்திருத்தங்களை கொண்டு வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் எங்களுடன் சேர்ந்து உதவாமல் பாராளுமன்ற கூட்டத்தை புறக்கணித்தன.
  • எதிர்க்கட்சிகள்,முக்கியமாக பி.ஜே.பி இதில் மிக தீவிரம் காட்டியது
  • தனியாக என்னிடம் பேசும்போது குஜராத்தில் அமித் ஷா மீது எடுத்த நடவடிக்கையை திரும்ப பெற வேண்டுமென்று வற்புறுத்தினார்கள்.
  • கல்வி உரிமை(Right to Education) குழந்தைகள் வளர்ச்சி திட்டம்(Integrated Child Development Services) மற்றும் தேசிய கிராம சுகாதார திட்டம்(National Rural Health Mission) இப்போது நிதர்சனம் என்பதோடு செயல்படுகிறது,
  • அதேபோல் உணவு பாதுகாப்பு மசோதா (Food Security Bill) பற்றி ஆலோசித்துக்கொண்டுள்ளோம்.
  • அதே மாதிரி PPP உதவியுடன் (Public-Private Partnership)கட்டமைப்பு முதலீட்டிற்கான புதிய அலைகள் துவங்குமென நம்புகிறேன்.

நானாவது ஓடுவதாவது!

  • ஊழல் நிறைந்த மந்திரிகள் சுற்றியிருக்கும் போது, பதவியை விட்டு ஓடிடலாமான்னு எப்பவாவது நினைத்தீர்களா என்ற கேளிவிக்கு (பாதியிலே விட்டு விட எப்பொழுதும் நினைத்ததில்லை என்றும் முழுச்சாப்பாடும் சாப்பிட்டு விட்டே பந்தியிலிருந்து எழுவேன் என்றார்.)
 (Did he at any time feel like quitting, surrounded by corrupt colleagues? No. Never thought about giving up half-way. "I will stay the course" )

  • நான் பதவி விலக எப்பொழுதும் நினைத்ததில்லையென்றும் எனது வேலையை முடித்தாக வேண்டும்,பாதியில் விட்டு விட நினைத்ததில்லை.

இதோ வந்துட்டாரு பூஜ்ய நஷ்டம் கபில் சிபல்

  • CAG கூட குத்துமதிப்பாகத்தான் மதிப்பிட்டிருக்குது.
  • வருமானத்தின் நஷ்டத்தைப் பொறுத்தவரையில் துவக்கப் புள்ளி என்ன என்பதைப் பொறுத்தது.
  • சரியான விலை என்னவென்பதை அதன் முன்பான நிலை கொண்டே கணிக்க வேண்டும்.முந்தைய கொள்கையான ஏலம் விடக்கூடாது என்பதால் நஷ்டத்தின் அளவை சரியாக கணிக்க இயலாது.

  • பல விதங்களில் கணக்கிட இயலும்.80,000 கோடி உணவுக்கு உதவித்தொகையாக,60,000 கோடி உரத்திற்கும் மற்றும் மண்ணெண்னைக்கும் கொடுத்தால் அதனை நஷ்டம் என்று கணக்கிட இயலுமா?

இஸ்ரோ ஊழல்
  • விண்வெளித்துறையின் முடிவுகளை பிரதமரின் அலுவலகம் எதிர்க்கவில்லை.
  • ஆண்ட்ரிக்ஸ்,டேவாஸ் ஒப்பந்தம் பற்றி கமிஷன் அமைக்கப்படும்.
  • ஆண்ட்ரிக்ஸ்,டேவாஸ் ஒப்பந்தத்தின் ஸ்பெக்ட்ரம் அனுமதியை கேபினட் பாதுகாப்பு கமிட்டி எடுத்துக்கொள்ளூம்.

அரசாங்கத்தின் குறைகள்!

  • சில நிகழ்வுகள் அரசாங்க நிர்வாகத்தின் குறைகள் என்பதை மறுக்க முடியாது.
  • நிர்வாகத்தின் தரத்தை உயர்த்த வேண்டும்,அதனால் எனக்கும் மற்ற அமைச்சர்களுக்குள்ளும் பிரிவினை என்று சொல்லி விட முடியாது.
  • காங்கிரஸ் கட்சி தன்னை ஆதரிக்கவில்லையென்று நினைக்க வில்லை.
  • மக்களாட்சியில் விவாதங்களும் மாற்றுக்கருத்துக்களும் உருவாகவே செய்யும்.தீர்மானங்களை எடுக்கும் போது எங்கள் கட்சி முழு ஒத்துழைப்பையும் அரசாங்க நிர்வாகத்திற்கு வழங்கும்.

கூட்டணி கலாட்டாக்கள்!

  • எங்கள் கூட்டணி மிகவும் பலமாக இருக்கிறது.கூட்டணி உடைவதற்கான உள் அழுத்தங்கள் எதுவுமில்லாமல் எங்கள் கூட்டணி மனப்பூர்வமாக எங்களுடன் இருக்கிறார்கள்.
  • எதிர்க்கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடக்கிறது.எந்த வித கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பாராளுமன்ற கூட்டம் நிகழவேண்டும்.
  • பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்திற்கு பின் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும்.
  • பட்ஜெட்டில் சீர்திருத்த கொள்கைகள் இருக்கும்.
  • விலைவாசி உயர்வு ஏழை மக்களை பாதிக்கிறது.ஆனால் அதற்கு மாற்றுவழிகளை முயற்சித்துள்ளோம்.(உதாரணமாக ரூ10க்கு பாகிஸ்தானுக்கு விற்று விட்டு மீண்டும் ரூ40 கொடுத்து அதே வெங்காயத்தை திரும்ப கொண்டு வந்தது.கொள்விலை மட்டுமே ரூ 40/- விற்பனை விலை ரூ 80/- குழப்பிக்கொள்ள வேண்டாம்.)
  • கூட்டணி அரசாங்கத்தில் சில சமரசங்களை செய்ய வேண்டிய நிர்பந்தம்.
  • நான் எந்த தவறும் செய்யவில்லையென்று சொல்ல மாட்டேன்!ஆனால் என்னை பொதுவில் காட்டுவது படி நான் அவ்வளவு பெரிய மோசடிக்காரனுமல்ல.
  • மிக முக்கிய வருத்தம் என்னவென்றால் நிகழ்ந்த தவறான முறைகள் நடந்திருக்கவே கூடாது.

  • ஊடகங்கள் ஊழல் நிறைந்த நாடு என்ற எதிர் பிம்பத்தை (Negative image) வைக்க கூடாது.உண்மைகள் தூய்மையானவை.விமர்சனம் சுதந்திரமானது.உண்மைகளை நலன் பயக்கும் விதமாக முன்வைக்க வேண்டும்.
  • ஊழல் செய்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்படுபவர்கள் இந்த முறை தப்ப இயலாது.

கண்டதும் கேட்டதும்:அவுட்லுக் இந்தியா மற்றும் NDTV.



1 comment:

ராஜ நடராஜன் said...

கடைய சுத்தம் பண்றேன் பேர்வழின்னு சுவத்துல மாட்டி வச்சிருந்த கருத்துரையாளர்களின் பின்னூட்டங்களையும் உடைத்து விட்டேன்.மன்னிக்கவும்.