Followers

Wednesday, February 23, 2011

மெரினாவின் அலைகளைத் தாண்டுமா திருமா?

கைதா?திரும்ப அனுப்பிட்டானா இலங்கைகாரன்!மைக்ல கீச்சு(கீச்சு வார்த்தை உபயோக உபயம் ஈரோடு.கதிர் மற்றும் வானம்பாடிகள் பதிவுகள்)சத்தமாத்தான் கேட்குது.உங்கள் குரல்கள் மெரினாவின் அலைகளைத் தாண்டுமா?இல்லை அதனோடு போட்டிதான் போடுமா நேற்று காலையில் கீச்சுன திருமா!மாலையில் மத்தளம் ராமதாஸ்!ராத்திரி கோயிந்தா வீரமணி.

கடல்தான் குமுறுவதால் கீச்சறது கேட்காது போனாலும்  காற்றோட காற்றாய் டெல்லி செங்கோட்டைக்காவது கேட்குமா?சான்சே இல்லைங்கிறீங்களா கலா அக்கா!

குழுவாய் நீங்கள் நிற்கும் வரை எதுவுமே சாத்தியமில்லை.

11 comments:

Anonymous said...

ஈழத்தமிழ்களை எப்படி எல்லாம் ஊறுகாய் மாதிரி போதைக்கு நக்கிக் கொள்ளுகிறார்கள் இந்த டாமில் இன டலைவர்ஸ் .... அவர்களுக்கு சுதந்திரமும் வாங்கித் தர மாட்டோம், சும்மாவும் வாழ விட மாட்டோம் எங்கின்றார்கள்......... ராஜ்பக்ஷாவில் டைரிக் குறிப்புகளின் இவர்களின் அக்கவுண்டுக்கு மட்டும் கரிக்டா பணம் அனுப்பி விடுவதாக ஒரு தகவல் கசிகிறது.......

மானம் கெட்டதுகள்....... பணம் கிடைத்தால் பிணத்தோடும் புணரத் தயாராக இருக்கும் ஜென்மங்கள்.......

ஈழத்தமிழர்களுக்கு விடுதலை தமிழ்நாட்டில் கத்துவதால் ஒன்றும் ஆகாது....... நம் தமிழ்நாட்டில் இருக்கும் எத்தனையோ பிரச்சனைகளை தீர்க்க வழி செய்ய வேண்டும்.

ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தை அவர்கள் நிர்ணயிப்பார்கள்..... இதில் மீனவர்களை வைத்து இன்னொரு பிசுக்கோத்து அரசியல். பாவம் அவர்கள்......

vasu balaji said...

இவரே ஃபோன் பண்ணி போலைன்னா ஒரு சீட்டு கூட கிடைக்காது. போய் பங்கெடுத்தாலும் பெருசு சொக்கு சொல்லுச்சுன்னு காயடிக்கலாம். பச்சே எனக்கு போடு பிச்சே. நான் வரா மாதிரி வாரேன். நீ வெரட்றா மாதிரி வெரட்டிக்கோ. சவுண்டு உட்டு அடங்கிடுவேன் நானுன்னு சொல்லி இருக்குமோ இந்த ஜந்து?

ராஜ நடராஜன் said...

//ஈழத்தமிழ்களை எப்படி எல்லாம் ஊறுகாய் மாதிரி போதைக்கு நக்கிக் கொள்ளுகிறார்கள் இந்த டாமில் இன டலைவர்ஸ் .... அவர்களுக்கு சுதந்திரமும் வாங்கித் தர மாட்டோம், சும்மாவும் வாழ விட மாட்டோம் எங்கின்றார்கள்......... ராஜ்பக்ஷாவில் டைரிக் குறிப்புகளின் இவர்களின் அக்கவுண்டுக்கு மட்டும் கரிக்டா பணம் அனுப்பி விடுவதாக ஒரு தகவல் கசிகிறது....... //

இக்பால் செல்வன்!சென்ற பாராளுமன்ற தேர்தலின் தோல்விக்குப் பின் மக்கள் தொலைக்காட்சியைப் பார்த்தீர்களென்றால் ராமதாஸின் நிலை சரியாக புரியும்.

ராஜபக்சே பணம் அனுப்புவதெல்லாம் வதந்தி என்று நம்புவோம்.எல்லோருக்கும் இருக்கும் ஈழ உணர்வு தமிழனாக இவர்களுக்கும் இருக்குமென்றே நினைக்கிறேன்.ஆனால் அதனை வெளிப்படுத்துவதில் இவர்களின் சுயநலங்கள் முந்திக்கொள்கின்றன என்பது வேதனை.

ராஜ நடராஜன் said...

//ஈழத்தமிழர்களுக்கு விடுதலை தமிழ்நாட்டில் கத்துவதால் ஒன்றும் ஆகாது....... நம் தமிழ்நாட்டில் இருக்கும் எத்தனையோ பிரச்சனைகளை தீர்க்க வழி செய்ய வேண்டும்.

ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தை அவர்கள் நிர்ணயிப்பார்கள்..... இதில் மீனவர்களை வைத்து இன்னொரு பிசுக்கோத்து அரசியல். பாவம் அவர்கள்......//

ஈழம் பூகோள ரீதியாகவும்,இந்தியாவின் இரட்டைநிலை வெளியுறுவுக்கொள்கையாலும் அதில் மூக்கை நுழைத்த காரணத்தாலும் இதன் தீர்வு உலக அரசியல் ரீதியில் இந்தியாவையும்,தமிழகத்தையும் சார்ந்தே உள்ளது.அதுவும் போரின் அவலங்களுக்குப் பிறகு குரல் கொடுக்க புலம்பெயர்ந்த தமிழர்களும்,தமிழகத்தின் குரலும் அத்தியாவசியம் தேவை.

மீனவர்கள் குறித்தான உள்நோக்கு அரசியல் மெதுவாக வெளிவருகிறது.முகமூடிகள் இன்னும் கிழியுமென்று நம்புவோம்.

வருகைக்கு நன்றி இக்பால் செல்வன்.

ராஜ நடராஜன் said...

//இவரே ஃபோன் பண்ணி போலைன்னா ஒரு சீட்டு கூட கிடைக்காது. போய் பங்கெடுத்தாலும் பெருசு சொக்கு சொல்லுச்சுன்னு காயடிக்கலாம். பச்சே எனக்கு போடு பிச்சே. நான் வரா மாதிரி வாரேன். நீ வெரட்றா மாதிரி வெரட்டிக்கோ. சவுண்டு உட்டு அடங்கிடுவேன் நானுன்னு சொல்லி இருக்குமோ இந்த ஜந்து?//

பெருசு சம்பந்தப்பட்டதுன்னா எப்படின்னாலும் யோசிக்கத்தோணுதில்ல:)

தட்டி வெச்சு பிரபாகரன் படத்தையும் போட்டுகிட்டு இவரும் ஒரு தொப்பிய மாட்டிகிட்டு போராளி மாதிரி சென்னை முழுவதும் போஸ் கொடுக்கிறாரே திருமா?உள்குத்து வேலையும் செய்வாருன்னா நினைக்கிறீங்க?ஏதோ தேர்தலுக்கு செய்ற சித்துவேலை மாதிரிதான் தெரியுது.

கவனிச்சிகிட்டே வர்றதுல்ல ஒண்ணு மட்டும் உறுதியா தெரியுது.மத்திய அரசு பச்சே கூட கூட்டுக்களவாணித்தனம் பண்ணி தென்னகத்தில் தமிழ்நாட்டை பலிகடா ஆக்குகிறது என்பது மட்டும் தெரிகிறது.

Thekkikattan|தெகா said...

மத்திய அரசு பச்சே கூட கூட்டுக்களவாணித்தனம் பண்ணி தென்னகத்தில் தமிழ்நாட்டை பலிகடா ஆக்குகிறது என்பது மட்டும் தெரிகிறது.//

இதனைத்தான் தனது சவப்பெட்டிக்கு தானே ஆணி அறைந்து கொள்வது என்பதா? அட நாதாரிப் பயலுகளா... த்தூஊஊ.. :((

ஜோதிஜி said...

வானம்பாடிகள் நச்.

நசரேயன் said...

//குழுவாய் நீங்கள் நிற்கும் வரை
எதுவுமே சாத்தியமில்லை. //

அது வாய்ப்பே இல்ல

ராஜ நடராஜன் said...

//மத்திய அரசு பச்சே கூட கூட்டுக்களவாணித்தனம் பண்ணி தென்னகத்தில் தமிழ்நாட்டை பலிகடா ஆக்குகிறது என்பது மட்டும் தெரிகிறது.//

இதனைத்தான் தனது சவப்பெட்டிக்கு தானே ஆணி அறைந்து கொள்வது என்பதா? அட நாதாரிப் பயலுகளா... த்தூஊஊ.. :((//

தெகா!நமக்குத் தெரிவதை விட ராவுக்கும்,உள்பாதுகாப்புத் துறைக்கும் நன்றாகவே தெரியுமென நினைக்கிறேன்.இருந்தாலும் காஷ்மீர் மாதிரி நீண்டதொரு பிரச்சினையை தென்னகம் நோக்கி வலுக்கட்டாயமாக ஏதோ ஒரு காரணத்துக்காக நம்மீது திணிக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.

கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை,தமிழகம் குறித்த உறவு எப்படியிருக்கிறதென்று பாருங்கள்.ராஜபக்சேவும் சரி,மத்திய அரசும் சரி எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றவே செய்கிறார்கள்.

நமது பதிவுகள் வருங்காலத்தை காட்டும் கண்ணாடியாக இருக்குமென நம்புவோம்.

ராஜ நடராஜன் said...

//வானம்பாடிகள் நச்.//

எது?பச்சே எனக்கு போடு பிச்சே யா?

அது பச்சே நீயொரு எச்சன்னு இருக்கணும்.

ராஜ நடராஜன் said...

////குழுவாய் நீங்கள் நிற்கும் வரை
எதுவுமே சாத்தியமில்லை. //

அது வாய்ப்பே இல்ல//

நசரு!போகிற போக்கைப்பார்த்தா நீங்க சொல்றதுதான் பலிக்கும் போல தெரியுது.இருந்தாலும் ஒரு நப்பாசை...எகிப்துக்காரனுக்கு,துனிசியாக்காரனுக்கு இப்ப லிபியாக்காரனுக்கெல்லாம் மாற்றம் வரும்போது நமது குரல்கள் இணையத்திலும்,தமிழகத்திலும் ஒலிக்கும் போது (அந்தரங்கமாக:)) மாற்றம் வராமலா போகப்போவுது!பார்க்கலாம்.

இப்ப அரசியலுக்குள்ள சுத்தற அத்தனை பெருசுகளையும் ஓரம் கட்டி விட்டாலே பாதி கிணறு தாண்டுன மாதிரிதான்னேன்.