Followers

Sunday, May 27, 2012

நடிகர் விவேக்குடன் ஒரு நேர்காணல்!

தெரியாமல் கணக்கு பத்தி சொல்லிட்டேனா!ஆளாளுக்கு கணக்குல தப்புக்கண்டு பிடிக்கிறததுக்குன்னே சுத்துறாங்க.அதனால் வடை தீர்ந்து போச்சுன்னு அவசர அவசரமா இங்கே வந்துட்டேன்.முன்னாடியே வவ்வால் தமிழ்மணம் வாலில் தீ வைச்சதால ஒட்டகம் வேகமா ஓடுதேன்னு சிரிச்சார்.இந்த மாதம் 14 பதிவு போட்டுட்டேங்களேன்னு சகோ.ரியாஸ் சொல்லித்தான் எனக்கே ஒட்டகம் வேகமாய் ஓடுவதை உணர முடிஞ்சது.14 உடன் 15 சேர்த்தி இந்தப் பதிவையும் ஒட்ட வச்சிடலாம்.வேகம் பற்றி சொன்னவுடன் சி.பி தமிழ்மணத்துல இல்லைன்னு இந்த மாதம் தான் அறிந்தேன்..என்னாச்சு?எனது வருத்தங்களை இதன் மூலம் தெரிவித்துக்     கொள்கிறேன். சி.பி.

நடிகர் விவேக்கை அதிக படங்களில் காண முடியவில்லையே என்று பார்த்தால் பள்ளிகள்,கல்லூரிகள்,குடியிருப்புக்கள் போன்ற இடங்களில் மரக்கன்றுகளை நடப் போய் விட்டார் என்பதனை குவைத் ப்ரண்ட்லைனர் நிகழ்ச்சியின் போது அறிய நேர்ந்தது.பெரும்பாலும் தமிழர்கள் திரைப்படங்கள் மீதான காதலும்,நடிகர்கள் மீதான அளவிற்கு மீதான பற்றுதலும் கொண்டவர்களாக உள்ளார்கள் என்ற பொது விமர்சனம் நம்மிடையே உண்டு.முன்னாள் தேர்தல் கமிசனர் வை.கோபாலசாமி,விஞ்ஞானியும்,டாக்டர் அப்துல் கலாமின் ஆலோசகருமான வி.பொன்ராஜ் மற்றும் நடிகர் விவேக்கின் பேச்சைக் கேட்டேன்.அவரவர் பணியில் மூவரும் சிறப்பாக செயல்பட்டாலும் மக்களைக் கவரும் விதமாக ஸ்பாண்டினியஸாக நகைச்சுவையும், நகைச்சுவைக்கு ஈடாக சிந்தனைகளை கேள்வி பதிலாக விவேக்கின் பேச்சே முந்திக்கொண்டது.

தமிழீழக் கனவு போலவே 2020ல் இந்தியா வல்லரசாகி விடும் என்ற கலாமின் கனவையே பொன்ராஜ் வெளிப்படுத்தினார்.குவைத்தின் ப்ரண்ட்லைனர்ஸ் தொடர்ந்து தமிழகத்தின் முன்ணனியாளர்கள் யாரையாவது வரவழைத்து கௌரவப்படுத்திக் கொண்டிருக்கிறது.தமிழகத்தில் தொடர்ந்து 100 பள்ளி மாணவர்களுக்கான செலவையும் ஏற்றுக்கொண்டு வருகிறது.இந்த முறை சென்னை கேன்சர் அமைப்புக்கு 15 லட்சம் தருவதற்கான முயற்சியை தொடர்ந்திருக்கிறார்கள்.ப்ரண்ட்லைனர்ஸ் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவரான மோகன் தாஸ் ஒரு எழுத்தாளர்.திரை கடல் ஓடியும் திரவியம் தேடு பழமொழியோடு உதவியும் செய் என்ற புதுமொழியை சேர்த்துக் கொண்ட குழுவின் அமைப்பாளர்.

நடன நிகழ்ச்சிகள்,பங்களிப்பாளர்களின் அறிமுகம் என்று துவங்கி பொன்ராஜ்,வை.கோபாலசாமி,அறிமுகப்படலத்துடன் அவர்களின் உரைகள்
அடுத்து நேருக்கு நேர் கேள்வி பதில் என  கோட் சூட் போட்ட ஒருவர் விவேக்கிடம் பொதுவுடமை பற்றி நிறைய சொல்லியிருக்கீங்க ஏன் என்று கேள்வி கேட்க  பார்வையாளர்களைப் பார்த்து  உங்களுக்கு போரடிக்குதா என்ற கேட்க பார்வையாளர்கள் பக்கமிருந்து ஆமாம் ஆமாம் என்று குரல் எழும்ப ஜாலியா சிரிக்க வச்சோமா கிளம்புனோமான்னு இல்லாம முடியமாட்டாங்குதே என்றார்.எப்படியிருந்த நீங்க இப்படியாகிட்டீங்க இந்த டயலாக்கை எங்கிருந்து புடிச்சீங்க? என கோட் சூட் தொடர இவரு வேற! இந்த சூட்டிலும் சூட் போடுறீங்களேன்னு ,கேள்வியின் சுருதி குறைவதையும் கலாய்த்தார்.

யாராவது கேள்வி கேட்க விரும்புறீங்களா என்று விவேக் வினவ கூட்டம் ஆமாம்!ஆமாம் போட  பார்வையாளர்களுக்கு ஒரு மைக் கொடுங்க கண்டிப்பா திருப்பிக்கொடுத்து விடுவாங்கன்னு சொல்லி கேள்விக்காக மைக் பார்வையாளர்களின் பகுதிக்கு விடப்பட

கேள்வி பதில்களில் சில....

முதல் கேள்வி: சார் உங்களை கோயம்புத்தூர்ல பாப்பநாயக்கன் பாளையத்தில் சூட்டிங்கில் பார்த்திருக்கிறேன்.மறுபடியும் பி.எஸ்.ஜி கல்லூரியில பார்த்திருக்கிறேன.ரொம்ப சந்தோசம்.தேங்க் யூ சார் என்று கேள்வியை முடிக்க

விவேக் இது ஒரு கேள்வியா?

இன்னுமொருவர்:சார்!சன் டிவியில் பகுத்தறிவு கேள்விகளாய் ஒலிபரப்புகிறார்க்ள்.விஜய் டிவியில் மக்களுக்கான கருத்தாக சொல்லுகிறார்கள். சன் டிவி பெஸ்ட்டா இல்ல விஜய் டிவி பெஸ்ட்டா சார்?

விவேக்: என்னை ஒழுங்கா தமிழ்நாடு போய் சேர விட மாட்டீங்க போல தெரியுதே!

அடுத்தவர்:  ஒரு பஞ்சு டயலாக் சொல்லுங்க சார்.

விவேக்:ஓகே! என் மேல் அன்பு வைத்து ,என்னை இங்கே வரவழைத்து, என்னை தங்க வைத்து,எனக்கு உணவளித்து,என் மேல் பாசம் வைத்து,என ரசிகர்களோடு பேச வைத்து....வைத்து வைத்துன்னு வருதே அப்பவே தெரிய வேண்டாம்....குவைத்து

அடுத்து ஒரு பெண் சிநேகிதனை!சிநேகிதனை!ரகசிய சிநேகிதனை  பாடி நீங்களும் பாடுங்க என்று விவேக்கிடம் சொல்ல சின்ன சின்னதாய் மழைத்துளிகள் என்று பாட துணிச்சலாக பாடிய பெண்னுக்கு ஒரு ஓ போடுங்க என்று கைதட்டலை வாங்கி தந்தார்.

இன்னுமொரு பெண்: நீங்க நல்லவரா!கெட்டவரா என்று கலாய்த்தார்.

இன்னுமொரு பெண்: சார் உங்களுக்குப் பிடித்த நடிகை யார் என எல்லோரையும் பிடிக்கும் என்று விவேக் சொல்ல ரொம்பவும் பிடித்தவர் என்று அந்தப் பெண் மறுபடியும் கொக்கி போட்டார்.பார்வையாளர் பகுதியிலிருந்து மும்தாஜ் என்று ஒரு குரல் எழும்பியது.

ஒருவர்:திரைப்படங்களில் மதங்களை கலாய்க்கிறீர்களே! நீங்கள் ஆத்திகவாதியா அல்லது நாத்திகவாதியா?

விவேக; நான் படங்களில் பாவாடைச் சாமியார் போன்றும்,மூடநம்பிக்கைகளையே கலாய்க்கிறேன். செல்லாத்தா எங்க மாரியாத்தா, அல்லா அல்லா. ஜிங்குசிக்கு ஜிங் ஜிங்க்,இயேச ஜீவிக்கிறார் என்று பல பாடல்களைப் பாடி இறைவன் உண்டு என்ற தான் ஆத்திகவாதியென்றார்.

இடையே நீ சிக்குன்னு இருக்குறீயே!எனக்கு பக்குன்னு இருக்குதேமா! நீ டக்கரா இருக்குறீயே!எனக்கு டார்ச்சரா இருக்குதேமா என்று பாடினார்.

இன்னுமொருவர் மைக்கைப் பிடித்து என் பெயர் சேகர் என்றார்.நீங்க நாய் சேகரா? என்றார்.மைக்காரர் குவைத் சேகர் என குவைத் சேகர்!குவைத் சேகர் என்றார் விவேக்.

கேள்வி:நீங்கள் அப்துல் கலாமை எப்பொழுது முதன் முதலாக சந்தித்தீர்கள்?
விவேக்: நான் படப்பிடிப்புக்காக கூவம் ஆற்றில் முங்கி எழுந்த நிலையில் அப்துல் கலாமிடமிருந்து போன் வந்தது.உடனடியாக குளித்து விட்டு அவருடன் பேசி போட்டோவும் எடுத்துக்கொண்டேன்.

இந்தியா பற்றி சொல்ல நிறையா இருக்குதுங்க

பல மொழி,இனம்,சாதிகளுக்கிடையிலும்,ஊழல்களுக்கு மத்தியிலும் இந்தியா என்ற தேசம் உயர்ந்து நிற்கிறது.இந்தியா இஸ் கிரேட் என்றார்.யோகா என்ற அற்புதமான விஞ்ஞானத்தை உலகத்துக்கு தந்தது இந்தியா என கூட்டத்தில் ஒருவர் பெருமை என கூவ பெருமையில்ல ராஜா கம்ப்யூட்டரக் கண்டு பிடிச்சது அமெரிக்காவாக இருக்கலாம்.ஆனால் அந்தக் கம்ப்யூட்டரை இயக்கும் மூளை இந்தியர்களுடையது.

வீட்டை,உறவினர்களை,தமிழ்நாட்டை விட்டு வந்து இங்கே உழைக்கும் நீ தெய்வண்டா என்று பார்வையாளர்களை குளிர்வித்தார்.நான் இங்கே வருவதற்கு முன்பு தயங்கியதுண்டு.ஆனால் தமது பணிகளுக்கு அப்பாலும் இப்படியொரு அசோசியசனை நிகழ்த்துவது பெரிய விசயம் என்று ப்ரண்ட்லைனர்களைப் பாராட்டினார்.

ஒரு பெண் நீங்கள் அரசியல்வாதியாகி முதல் அமைச்சர் ஆக விரும்புகிறீர்களா என்றார்.அதற்கு வேற ஆளைப்பார் என்று அழுத்தி சொன்னார்.

சில நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு சத்தம் போடவும் அதில் ஒரு இளசு
 குவைத் சரக்கடிங்க சார் என்றும் குரல் எழுப்பினார்.அது விவேக்கின் காதுக்கு கேட்டதோ இல்லையோ தொடர்ந்த சத்தத்தைக் கேட்ட விவேக் அந்த மூலையில் ஏதோ கொஞ்சம் சத்தம் வருகிற மாதிரி தெரிகி|றதே!குவைத்துல ட்ரைன்னு கேள்விப்பட்டேனே என்றார்.

செல்போனால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விளக்கினார்.விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆவதைப் பற்றி அழகான கவிதை ஒன்று சொன்னார்.

இவ்வளவெல்லாம் விவேக் பற்றி சொல்லிட்டு பதிவில் ஒரு மெசேஜ் வைக்கலைன்னா நல்லாயிருக்காது.

இலங்கையிலும் ஒரு மைக் டைசன்:)

கோதாவுல தோத்துடுவோம்ன்னா என்ன செய்யனும்?வடிவேல் மாதிரி தோத்தவனுக்குத்தான் பரிசுன்னு கோப்பையை தூக்கிட்டு வந்துடனும்.இல்லைன்னா மைக் டைசன் மாதிரி சண்டை போடுறவர் காதையாவது புடிச்சி கடிச்சு விடனும்.இது கோதாவெல்லாம் இல்ல.சும்மா பேசிகிட்டிருந்திருக்காரு போல தெரியுது.பேச்சோட பேச்சா துனேஷ் கன்கண்டா என்ற இலங்கை பாராளுமன்ற எம்.பி ஒருத்தரோட மூக்கை கடிச்சு வெச்சுட்டாராம்.மூக்கை இழந்தவருக்கு வயசு 40.பிசினஸ்மேனாம்.கொடுக்கல் வாங்கல்ங்கிறது இதுதானோ!

மூக்கை கடிக்கும் இலங்கை எம்.பி பற்றி படிக்கும் போது மைக் கீழே விழுந்துடுச்சுன்னு சாக்காட்டுல வேட்பாளரை மோதிரக்கையால் கொட்டிய நம்ம விஜயகாந்த் எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணல!

ஜூனியர் நியூட்டன்!

சில தினங்களுக்கு முன்புதான் கழுகு தளம் இந்திய கல்வி முறையைப் பற்றி பதிவிட்டிருந்தது.அதென்னவென்று தெரியவில்லை இந்தியாவுக்குள் ஆராய்சிக்கு ஸ்காலர்ஷிப் கூட கிடைக்காமல் அமெரிக்கா போய் தாவரஙகளும் சுவாசிக்கின்றன என்ற தியரிக்கு நோபல் பரிசு வாங்கிய ஜெகதீஷ் சந்திர போஸ்,கடல் ஏன் நீலமாக இருக்கிறதென்பது சொன்ன சர்.சி.வி ராமன் என்று பலரில் துவங்கி ஹாட் மெயில் கண்டுபிடித்த சபீர் பாட்டியா,வேதியியலில் சமீபத்தில் நோபல் வாங்கிய வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்,நாசா வரையிலும் கூட தனது முத்திரை பறித்த இன்னும் பலரும் இந்திய கல்வியோடு வெளியே போனால் ஜொலிக்கிறார்கள்.கூடவே அமெரிக்கா போயும் கூட திட்டுவதில் டாக்டரேட் வாங்குவது இந்திய கல்வி முறையிலா அல்லது சமூகம் சார்ந்த அழுத்தங்களா என்பதை அவரவர் பார்வைக்கு விட்டு விடுகிறேன்.

எப்படியோ இந்திய திறனை வெளிப்படுத்தும் வரிசையில் சூர்யா ரே எனும் 16 வயது மாணவர்  ஜெர்மனியின் ட்ரெஸ்டன் என்ற பகுதியில் 350 வருடமாக இருந்த நியுட்டன் கணக்கின் குழப்பத்துக்கு விடை கண்டு பிடித்து விட்டாராம்.இதன் மூலம் நியுட்டன் ஏன் ஆப்பிள் கீழே விழுகிறதென்று கண்டுபிடித்த மாதிரி  சுவற்றில் வீசப்படும் பந்தின் பாதையையும் பந்து சுவற்றில் பட்டு திரும்பி வரும் வழியையும் தீர்மானிக்க முடியுமாம்.

நான் கணக்குல ரொம்ப....வீக்.கூடவே எத்தனை கூட்டாளிகள் இங்கே இருப்பாங்கன்னும்  தெரியல எனவே நியுட்டனின் முடிச்சான 350 வருட தியரி பற்றியெல்லாம் விளக்காமல் பேட்டையில் ஜெயபரதன்,வவ்வால் போன்றவர்கள் யாராவது விளக்கம் தரும்படி சொல்லி விட்டு சூர்யாவின் படப் போஸ்டரை மட்டும் ஒட்டிவிட்டு அமர்கிறேன்.

Friday, May 25, 2012

லண்டன் மகாராணிக்கு ஒரு மடல் அனுப்புங்க

இந்திய திரைப்பட விழாவில் அமிதாப்பச்சனை இலங்கை போக வேண்டாமென்று உணர்த்தியதிலும்,டைம்ஸ் பத்திரிகையின் வாக்கெடுப்பில் மகிந்த ராஜபக்சேவை பின் தள்ளியதிலும் முக்கியமாக லண்டனில் பல்கலைக்கழக விழாவில் பேசவிடாமல் தங்கியிருந்த ஓட்டலிலிருந்து லண்டனின் இலங்கை தூதரகத்துக்கு ராஜபக்சேயை ஓடவிட்டு திருப்பி அனுப்பியதில் புலம் பெயர் தமிழர்களின் பங்கு முக்கியமானது.

இங்கிலாந்து ராணியின் பவளவிழாவில் ஒரு நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் ஒரு நாட்டின் ஜனாதிபதியென்ற முறையில் நட்பு ரீதியாக அழைப்பது முறையான ஒன்றே.ஆனால் ஏறிகனவே தமிழர்களின் கோபத்துக்குள்ளாகி லண்டனிலிருந்து வெளியேறிய ராஜபக்சேவை விருந்துபசாரத்திற்கு அழைப்பது எந்த விதமான உணர்வுகளை மீண்டும் புலம் பெயர் வாழ் தமிழர்களிடம் உருவாக்குமென்று அறியாமலா ராஜபக்சேவுக்கு அழைப்பு விடப்பட்டது.

இலங்கைக்கு பஞ்சம் பொழக்கப் போன ஆட்களுக்கு எதற்கு தமிழீழம் என்று சிலர் கருத்துக்கள் வெளியிடுவது போலவே இலங்கையின் உள்நாட்டு கலவரத்தில் வெளியேறிய புலம் பெயர் தமிழர்களுக்கு எதற்கு ஒரு மகாராணியின் விழாவில் கலகம் விளைவிக்க வேண்டும் என்பது போலவும் கூட சிலர் நினைக்ககூடும்.இதற்கு சற்றும் குறைவில்லாத தமிழர்கள் மீதான ஈழத்தமிழர்கள் மீதான கோபமும்,வேண்டுமென்றால் தமிழகத்தில் போய் தமிழீழம் அமைத்துக்கொள்,இலங்கையில் முள்ளிவாய்க்கால் மாதிரியான கற்றுக்கொண்ட பாடங்களும் மறுவாழ்வுமே கொடுக்கப்படும் போன்ற பின்னூட்ட எண்ணங்களும் வெளிப்படுகின்றன.புலம்பெயர் தமிழர்கள் இப்பொழுது அந்த அந்த நாட்டின் குடியுரிமையாளர்களாகவும் லண்டன் போன்ற நிலத்தில் ஆட்சியை நிர்ணயிக்கும் ஒரு அங்கமாகவும் செயல்படுகிறார்கள்.எனவே சாத்வீகமாக போராடுவதில் அவர்களுக்கு உரிமை  உண்டு.

இணைய தேடலில் எண்ணற்ற தளங்கள் தமிழர்கள் சார்ந்து இயங்கினாலும் நம்பிக்கைக்குரிய செய்தியாக உறுதிப்படுத்திக் கொள்ளும் படி ஒன்றும் கூட என் கண்ணில் தென்படவில்லைபெரும் தாக்கத்தை உருவாக்காவிட்டாலும் கூட செய்திகளை வெளிக்கொண்டு வருவதால் அனைத்து தளங்களுக்கும் நன்றி..தமிழ் சங்கம் தேடிப்பிடித்து செல்ல வேண்டியுள்ளது.குளோபல் தமிழ் அமைப்பு தமிழர் போராட்டத்தின் முக்கிய பங்கு வகிக்கிறதென்ற போதிலும் தளத்திற்கு சாவியிருந்தால் உள்ளே வா என்கிறார்கள்.நாடு கடந்த தமிழீழ அரசு தளம் தகவல்களையும் நகர்வுகளையும் உடனுக்குடன் வெளிப்படுத்துவதில்லை.

ஆயுதப்போராட்ட கால கட்டம் துவங்கி  உண்மைகளை வெளிக்கொண்டு வந்த தளமாகவும் தேதி வாரியாக நிகழ்வுகளை படம் பிடிக்கும் தளமாகவும் எவருமே ஈழத்தமிழர்கள் சார்ந்த செய்திகளை தெரிந்து கொள்ளவும் உறுதிப்படுத்தவுமான தளமாக விளங்கியது தமிழ்நெட்.இன்றைய கால கட்டத்தில் நிகழும் முக்கிய நிகழ்வுகள் எதனையும் வெளிக்கொணராமல் சம்பந்தமேயில்லாமல் செய்திகள் வெளியிடுகிறார்கள்.எனவே ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடாக இருந்தாலும் சிங்கள சார்புடைய செய்தியாக இருந்தாலும் அதனை உண்மையென்ற மொழிபெயர்ப்பை நாமாகவே செய்துகொள்ள வேண்டியுள்ளது.

எலி ஏன் அம்மணமாக ஓடுகிறதென்று இப்பத்தானே தெரிகிறதென்று சொல்வது போல் ஐ.நாவின் இலங்கை மீதான அமெரிக்க தீர்மான காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு ஐ.நா தீர்மானம் குறித்து வெளியிட்ட இந்திய பத்திரிகைகள் காரியம் சாதித்தவுடன் ஏனைய வழக்கமான செய்திகளுக்குள் நுழைந்து விட்டன. இந்து என்.ராம் என்ற பட்டம் பறிபோன பின் இந்து பத்திரிகையின் பார்வை ஓரளவுக்கு மாறி வருவது போல் உணரமுடிகிறது. இலங்கை குறித்த செய்திகளில் முன்னேற்றம் தெரிகின்றன. நக்கீரன் தொடர்ந்து இலங்கை குறித்த செய்திகள் வெளியிட்டாலும் கூட பிரபாகரன் பத்திரிகை படித்த கணத்திலிருந்து அதன் மீதான நம்பிக்கையை இழந்து விட்டது.விகடன்,தினமணி பத்திரிகைகளின் செய்திகள் பரவாயில்லை. பதிவர்களின் பின்னூட்டங்களுக்கு நிகராக அங்கேயும் போட்டுக் காய்ச்சுகிறார்கள்.பதிவுலகம் சம்பந்தப்பட்ட ஆட்களே அங்கே ஓடுகிறார்களா அல்லது மாற்று கிரகவாசிகளா என்று தெரியவில்லை:)

இவ்வளவும் சொல்லி விட்டு பதிவுலகின் என் ஈழச்சகோதரகள் யாராவது ராஜபக்சேவின் மகாராணி விருந்து பற்றி கருத்து வெளியிடுவார்களா என்று பார்த்தால் அனைவரும் சண்டை போட்ட களைப்பில் மிதமான கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.சரி நாமாவது ஒரு சிறு துரும்பை எடுத்துப் போடலாமேயென்று இந்த பதிவு.விரும்பியவர்கள் வாக்களிக்கலாம். வேண்டாமென்று நினைப்பவர்களும் கருத்து தெரிவிக்க விரும்பாதவர்களும் பதிவைப் படித்து விட்டு சூடா வடை எங்கே கிடைக்குமென்று தேட போய்விடலாம்.எதுவும் அவரவர் விருப்பம்.

‘Sri Lanka’s War Criminal Will Join The Queen At The Taxpayer-Funded Meal’, Make Sure This Doesn’t Happen– Says Sri Lanka Campaign

என்ற தலைப்புடன் கொலம்போ டெலகிராஃப் வாக்கெடுப்புக்கான வசதியை ஏற்படுத்திக்கொடுத்தியுள்ளது.சண்டையை வேடிக்கை பார்ப்பதுன்னா எனக்கு ரெண்டு லட்டு சாப்பிடுவது மாதிரி என்று நினைப்பவர்கள் பின்னூட்டங்களை மேயலாம்.ஓட்டுத்தான் முக்கியமென்பவர்கள் இங்கே செல்லலாம்.

http://www.thediamondjubilee.org/send-message-queen

நமக்குத்தான் காபி பேஸ்ட் இப்ப கைவந்த கலையாச்சே.Sample message: என்பதில் Madam துவங்கி Please Reconsider செய்யுங்க என்பதை மகாராணிக்கான மெசேஜ் பகுதிக்கும் ஒட்ட வைத்து அனுப்பு என்றால் முடிந்தது ஓட்டுப்போடும் வேலை.

டைம்ஸ் பத்திரிகைக்கு பின்பான இரண்டாம் வாக்கு போடுபவர்களுக்கும் ஒளிந்து கொண்டே பார்வையிடுபவர்களுக்கும் தனியாக இன்னுமொரு நன்றி!

முழு விபரங்கள் இங்கே

http://www.colombotelegraph.com/index.php/sri-lankas-war-criminal-will-join-the-queen-at-the-taxpayer-funded-meal-make-sure-this-doesnt-happen-says-sri-lanka-campaign/

விரும்பியவர்கள் முகநூல்,ட்விட்டர் இன்னும் பல சுட்டிகளிலும் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தலாம்

அசலே இதுதான்.

 http://srilankacampaign.org

தேர்தல் நேரத்தில் காலையில் எழுந்து குளிச்சு தனது கடமையென்று ஓட்டுப்போடுபவர்களால் தான் ஜனநாயகமே இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது.அதுபோல் இதுபோன்ற சாத்வீகமான போராட்டங்களும் மூச்சு விடும்.அரசாங்கம் இன்னுமொரு நாள் லீவு விட்டுட்டாங்கன்னு படுத்து தூங்குவது மாதிரி க்ளிக் செய்து ஒட்டவைப்பது சிரமம்ன்னு நினைப்பதும்  எதிர்நிலைப்பாடும் கூட அவரவர்களின் தனி உரிமை.

Thursday, May 24, 2012

அம்னெஸ்டியின் 2012 / 50ம் உலக மனித உரிமை அறிக்கை

அடக்கியாளும் சக்தியும் நீதி மறுப்பும் மோதிக்கொள்வதால் உலக மனித உரிமைகள் வழக்கமான ஒன்றானதாக இல்லையென்ற தலைப்போடு அம்னெஸ்டி இன்டர்நேஷனல் 2012ம் ஆண்டுக்கான 50ம் உலக மனித உரிமை அறிக்கை துவங்குகிறது.

 கடந்த 12 மாதங்களாக எழுந்த உலகளாவிய போராட்டங்களும் அதற்கு சற்றும் குறையாத தோல்விகளடைந்த அரசு தலைமையும் ஐ.நா பாதுகாப்பு சபையை களைப்படைய செய்யவும் அதன் நோக்கத்தை தோல்வியடையவும் செய்கிறது.இதனை சீரமைக்க உலக ஆயுத வியாபார உடன்படிக்கையை வலுவானதாக்க வேண்டும்.

தோல்வியடைந்த உலகளாவிய தலைமைகளாய் ஜனாதிபதிகள். பிரதமர்கள், அரசியல்வாதிகள் மிருகத்தனமான வன்முறைகளை போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.அரசாங்கம் சட்டபூர்வமான தலைமையாகவும் அநீதிகளை மறுப்பதாகவும் சக்தியற்ற மனித போராட்டங்களை தாங்கிக்கொள்ளும் அதிகாரமுடையதாக இருக்க வேண்டும்.கார்பரேட்களுக்கு பதிலாக மக்களையும்,வியாபார நலன்களுக்கு பதிலாக உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது என்கிறார் அம்னெஸ்டியின் பொது செயலாளர் சலீல் ஷெட்டி.

மனித உரிமைப் போராட்டக்குழுக்களுக்கு வாயளவில் காட்டிய ஆர்வத்தை வட்டார அதிகார நாடுகள் செயலில் நடைமுறைப் படுத்த தவறி விட்டன. புதிய மாற்றங்களை விரும்பிய எகிப்திய போராட்டக்காரர்கள் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதில் தலையீடுகளும் அழுத்தங்களும் உருவாகின்றன.

மனித உரிமைகளை விட சந்தர்ப்பவாத பொருளாதர நலன்களோடு மட்டுமே உலக வல்லரசுகள் கூட்டணி அமைத்தன என்பது மத்திய கிழக்கு நாடுகளிலும்,தென் ஆப்பிரிக்க பிரச்சினைகளிலும் வெளிப்பட்டது. அரசியல், கார்பரேட் நலன்களுக்கு சாதகமான சூழலில் மனித உரிமைக் கொள்கைகளை ஆதரிக்கவும் தமது நலன்களுக்கு எதிரான சூழலில் மனித உரிமைகளை குப்பைத் தொட்டியில் போட்டுவிடும் சூழலே உருவாகியுள்ளது.

இலங்கையில் தலையீடு செய்ய தவறியதும் மனித உரிமைகளுக்கு எதிராக சிரியாவில் செயல்படாமையும் (வார்த்தை பிரயோகம் கவனிக்க A failure to intervene in Sri Lanka and inaction over crimes against humanity in Syria) ரஷ்யாவின் முக்கிய வியாபார வாடிக்கையாளர்களாக இலங்கை,சிரியா இருந்த காரணம் கொண்டு ஐ.நா பாதுகாப்பு சபையை உலக சமாதான பாதுகாவலன் என்ற அவநம்பிக்கையை உருவாக்கியுள்ளது.உலக வல்லரசுகளாக வளரும் இந்தியா,பிரேசில்,தென் ஆப்பிரிக்கா பெரும்பாலும் குரல் கொடுக்காமல் மௌனம் மட்டுமே காத்தன.

சிரியாவை உலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு தேவையான அனைத்து காரணிகளும் இருந்த போதிலும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் சில அங்கத்தினர்களால் பாதுகாக்கப்படுவதால் குற்றவாளிகள் தப்பிக்கவும் சிரியாவின் மக்களுக்கு துரோகம் மட்டுமே மிஞ்சுகிறது.

91 நாடுகளில் சுதந்திரமான கருத்துரிமை இல்லையென்றும் 101 நாடுகளில் கொடுரமாக மக்கள் தாக்கப்படுவதாகவும் அல்லது போராட்டங்களில் கலந்து கொண்டதால் மோசமாக நடத்தப்படுவதாகவும் அம்னெஸ்டியின் 2012ன் அறிக்கை கூறுகிறது.

 கொடுமையான அரச தலைவர்களை பதவியிலிருந்து நீக்குவது மட்டும்  நீண்ட கால மாற்றங்களுக்கு உதவாது.அரசாங்கங்கள் கருத்துரிமை வெளிப்படுத்தலை உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் அங்கீகரிக்கவும் தமது உலகளாவிய பொறுப்புக்களை உணரவும் நீதி,சுதந்திரம் மற்றும் சட்டத்துக்கு முன்னால அனைவரும் சமம் என்ற நிலையை அரசுகள் உருவாக்க பாடுபடவேண்டும்.

ஐ.நாவில் ஜூலையில் துவங்கும் ஆயுத வியாபார உடன்படிக்கை அரசியல்வாதிகளுக்கு சுயநலங்கள்,லாபங்களுக்கு முன்பு உரிமைகளை முக்கியம் என்பதை உணர்வது ஒரு திராவக பரிட்சையே.

அம்னெஸ்டியின் உலகளாவிய மாற்றங்கள் குறித்த சில:

பாதுகாப்பு கருவி கொண்டு மனித உரிமைகளை மூச்சடைக்கும் படி அடக்கியவை சீனா மற்றும் வட கொரியா

சகாரா ஆப்பிரிக்கா,மத்திய கிழக்கு நாடுகள்,வட ஆப்பிரிக்காவில் மக்களின் எழுச்சி குரல் எழுந்தது.போராட்டக்காரர்கள் மீது அதிக பலத்தை உபயோகித்த நாடுகள் அங்கோலா முதல் செனிகல் மற்றும் உகாண்டா

பிரேசில்,கொலம்பியா,மெக்சிகோ நாடுகளில் மனித உரிமை ஆர்வலர்கள் கொல்லப்பட்டார்கள்

சோவியத் யூனியன் வீழ்ந்த பின் முதன் முறையாக ரஷ்யாவில் சமூக போராட்டங்கள் வளர்ந்தன.ஆனால் எதிர்ப்புக் குரல்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டன.

டர்க்மேனிஸ்தான்,உஜிபெக்ஸ்தானில் எந்த முன்னேற்றமும் இல்லை.

தென் சூடானில் சுதந்திரத்திற்கான வாக்குரிமையில் வன்முறைகள் ஏற்பட்டன.ஐ.நா,தென் ஆப்பிரிக்க யூனியன் மற்றும் பாதுகாப்பு சபை சூடான் ராணுவம் வரைமுறையற்று மக்கள் மீது குண்டுகள் பொழிந்ததையும் மனித நலன் அமைப்புக்கள் மூடியதையும் தடுக்க தவறி விட்டது.

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்பிரிக்காவின் மக்கள் எழுச்சியை உலக நாடுகள் உற்றுநோக்கின. ஈரான் தனிமைப்படுத்தப் பட்டது. மரண தண்டனைகளை மிக உற்சாகமாக நிறைவேற்றியது. சவுதி அரேபியா மக்கள் போராட்டங்களை அடக்கியது.

இஸ்ரேல் பாலஸ்தீனிய காசாவில் தடுப்புக்களை உருவாக்குவது தொடர்வதும் சட்டத்துக்கு புறம்பாக வெஸ்ட் பேங் நிலத்தில் மக்களை குடியமர்த்தவும் செய்கிறது.இஸ்ரேலிய ராணுவமும் பாலஸ்தீனிய ஆயுத குழுக்களும் பழிக்குப் பழி தாக்குதல்களை தொடர்கின்றன.

மியான்மர் அரசு 300 அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் ஆங்க் சான் சூ கி தேர்தலில் போட்டியிடவும் அனுமதித்தது.ஆனால் சிறுபான்மையினர் பகுதியில் மனித உரிமை மீறல்களும்,மனித உரிமை ஆர்வலர்களை கைது செய்ததால் சீர்திருத்தங்களுக்கான முயற்சிகள் குறைக்கப்பட்டன.

ஆதிவாசி குடிமக்கள் மீதான மனித உரிமை மீறல்களாய் வளங்களை சுரண்டுவது அமெரிக்க நாடுகளில் ஆக்கிரமிக்கிறது.

ஆப்பிரிக்காவில் பாலியல் பலாத்காரங்களும் ஐரோப்பிய நாட்டு அரசியல்வாதிகள் சிலரால இன வெறுப்பு குற்றங்கள் தூண்டப்படுகின்றன. ஆப்பிரிக்க இஸ்லாமிய ஆயுத குழுக்களால் தீவிரவாதம் தூண்டப்படுகின்றன.

முன்னேற்றங்களாக மரண தண்டனைக்கு எதிரான உலகளாவிய விழிப்புணர்வும்,அமெரிக்க நாடுகளின் கடந்த கால குற்றங்களுக்கு மன்னிப்பும்,குறிப்பிடும் படியான நீதியாக ஐரோப்பாவில் ஜெனரல் ரட்கோ மியாடிக் மற்றும் குரேசியன் செர்ப் கோரன் ஹஸ்டிக் 1990ம் ஆண்டில் யூகோஸ்லியாவின் போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


மேலே சொன்ன அனைத்தும் அம்னெஸ்டியின் 2012ம் ஆண்டு அறிக்கையின் மொத்த தொகுப்பு.இவ்வளவு மொழி பெயர்ப்புக்கு ஊதியமாக என்னோட பக்க வாத்தியமாகவும் சிலவற்றை இணைத்துக் கொள்கிறேன்.

இத்தனையும் அம்னெஸ்டி சொல்லி விட்டு பெரியண்ணாத்தே அமெரிக்காவின் ஈராக் தலையீடு பற்றியும் இப்ப நிலைமை என்ன என்றும் குறிப்பிட மறந்து விட்டதே!Why?

ஒரு புறம் கட்டற்ற அதிகாரங்கள் கொண்ட ஆள்பவர்களாக உலக நாடுகளின் அரசு இயந்திரம் மறுபுறம் போராட்ட குணம் கொண்ட மக்கள் இயக்கங்கள்.இவைகளை மேலோட்டமாக ஊடகங்கள் வாயிலாக பார்த்தோமானால் போராட்டக்காரர்களே வன்முறைகளை தூண்டுவது போலவும் தீ வைத்து பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடுவது போலவும் தோன்றும்.ஆனல் இந்த வன்முறைகளுக்குப் பின்னால் முகமூடி போட்டுக்கொண்ட அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளும் மொத்த போராட்டங்களின் பிரச்சினையை ஊதி விடுவபவர்களாக ஆளும் இயந்திரமே செயல்படுகிறது.;மொத்த நாடுகளின் செயல்பாட்டில்  நம்மைச் சுற்றி எத்தனை நாடுகள் இருக்கின்றன நமக்கென்ன ஆகிவிடப்போகிறதென்று ராஜபக்சே குழுக்கள் மனதுக்குள் மகிழ்ந்து கொள்ளலாம்..உலகின் பெரிய ஜனநாயக நாட்டு கவசத்துக்குள் இந்தியா இன்னும் தொடர்ந்து மௌனியாக இருந்து விடலாம்.

அரச பாராளுமன்ற கட்டமைப்புக்கும் அப்பால் செயல்பட்டு இந்தியா சார்பில் 3 பேர் இலங்கை சார்பில் 3 பேர் என்று திட்டமிட்டு போரை நிகழ்த்தி மக்களை கொன்றோம் என்று துணிந்து சொல்லும் கோத்தபயவும்,ராஜபக்சே முன்னால் கூனிக் குறுகி உட்கார்ந்திருநந்த சிவசங்கர மேனன், எம்.கே.நாரயணன் போன்றவர்கள் சிக்கலான நடைமுறைகள் கொண்ட சுயநல வியாபார அரசியல் வலைக்குள் தப்பித்துக்கொள்ளும் சாத்தியங்கள் இன்று வரை பிரகாசமாகவே இருக்கிறது.காரணங்களாய் ரஷ்யா,சீனாவின் வீடோக்கள் கவசங்களாகவும் பேருக்கு பெரியப்பா ஊருக்கு உமை இந்தியாவும் உள்ளன.(நானே கண்டு பிடிச்ச புதுமொழி இது) ஆனாலும் உலகளாவிய உண்மைகள் வெளிப்படுவதற்கு மனித உரிமைக் குழுக்க|ளை ஆதரிப்போம்.


http://www.amnesty.org/en/news/report-2012-no-longer-business-usual-tyranny-and-injustice-2012-05-24

Wednesday, May 23, 2012

சத்யமேவ ஜெயதே-சிசுக்கொலை பகுதி 1

அமீர்கானின் சத்யமேவ ஜெயதே பற்றி இப்பொழுது ஊடகங்கள் வாயிலாக பேசப்படுகிறது.துபாய் தோழர்களின் பூங்கா சந்திப்பின் காலத்தில் முன்பு வடைகொடுத்த வள்ளல் அது ஒரு கனாக் காலம் பின்பு என் நினைவிலிருந்து அகன்று மீண்டும் சத்யமேவ ஜெயதே பின்னூட்டம் மூலம் தன்னை நினைவுபடுத்தினார்.

இந்தியாவின் பொக்ரான் அணு பரிசோதனை,அமெரிக்க இந்திய அணு கிடங்குகள் ஒப்பந்தம் போன்றவைகளை விட இந்தியாவைப் பற்றியும் தமிழகத்தைப்பற்றியும்  தன்னம்பிக்கையை பிம்பங்களாய் தோற்றுவித்தவை  மூன்று.

1. தமிழ்,இந்தியில் இந்தியன் திரைப்படம்

2. சன் தொலைக்காட்சியில் விசுவின் அரட்டை அரங்கம்

3. டாக்டர் அப்துல் கலாமின் இந்தியா 2020

இந்தியன் திரைப்படத்தின் தாக்கம் இந்தியா முழுவதும் புது தாக்கத்தை உருவாக்குமென்று எதிர்பார்த்து ஏனைய திரைபடங்களின் வருகைகள் தொடர்ந்து கால ஓட்டத்தில் இதுவும் களிப்பு கலாச்சாரமே என்று புஸ்வானமாகிப் போனது

சன் தொலைக்காட்சியில் விசுவின் அரட்டை அரங்கம் தமிழகத்தில் இவ்வளவு பேச்சுத்திறமையாளர்களா என்று வியக்க வைத்து இன்னும் புதிய விழிப்புணர்வு தமிழகத்தில் பரவும் என்று நம்பி ஏமாந்து போன அரசியல் நிகழ்வுகள்

இந்தியனும்,அரட்டை அரங்கமும் சமூக கருத்து என்ற முகப்பூச்சுக்கு பின்னால் வியாபார நலன்கள் என்ற முகம் ஒளிந்து கொண்டிருந்ததை பின்னால் உணர முடிந்தது.ஆனால் என்றும் நிலையாக நிற்கும் ஒரு புத்தகம்,அதன் ஆய்வுகள்,நம்பிக்கைகள்,எதிர்கால இந்தியா எப்படி பொய்த்துப் போகமுடியும் என்ற கேள்வியை 2G வரையிலான அரசியல் சதுரங்கம கூடங்குளம்,முல்லைப்பெரியாறு இன்ன பிற இந்திய நிகழ்வுகளின் கூட்டு கலவைகள் சேர்ந்து புருவங்களை உயர வைக்கிறது.1998ல் இந்திய வல்லரசு சாத்தியமே என்ற நம்பிக்கை 2012ல் நொண்டத் துவங்குகிறது.இன்னும் 8 வருடங்களில் இவை சாத்தியம் தானா என்ற கேள்வியின் பதிலை 2020 ல் மதிப்பீடு செய்வோம்.

இனி தொலைப்பார்வை விடுத்து சத்யமேவ ஜெயதே தொலைக்காட்சி பக்கம் நகர்வோம்.தமிழக அரசு முத்திரையில் வாய்மையே வெல்லும் சொல் புரிந்தும் கூட சத்யெமேவ ஜெயதே என்ற சொல் நெஞ்சாங்கூட்டில் சிம்மாசனம் போட்டுக்கொண்டது.வடக்கில் சத்யமேவ ஜெயதே புதிய அலைகளை உருவாக்கி விட்டு ராமயாண தொடர் போல் மறைந்து விடுமென்றே நம்புகிறேன்.இயக்குநர் பாரதிராஜாவின் கருத்தம்மாவை விடவா சிசுக்கொலையை பட்டி தொட்டியெல்லாம் இன்னுமொரு ஊடகம் கொண்டு சென்று விட முடியும்?முன்பு ஜெயலலிதா பெண் சிசுக்கொலைகளை தவிர்க்க தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்தும் கூட நேற்று அமீர்கான் இந்திய வரைபடத்தில் பெண் உதிர சிவப்புக் கோட்டு புள்ளி விபரமாக தமிழகத்தையும் சுட்டிக்காடடுகிவது அதிர்வை உண்டாக்குகிறது.

மதம்,மொழி,தேசம் கடந்த என்னைப் போன்றவனுக்கு தெற்கென்ன வடக்கென்ன! சிசுக் கொலைகளுக்கான சாட்சியமாக பெண்கள் சொல்லும் கதைகள் அதிர்ச்சியை தந்தாலும் கூட அவர்கள் குறை கூறும் குடும்பத்தினர்களின் எதிர் நியாயங்களை கேட்க முடியாதது காட்சிப்பிழையே.

பெண் குழந்தை வேண்டமென்று பொருளாதார அடிமட்டத்தில் இருப்பவர்களை விட படித்தவர்களாக எஞ்சினியர்,டாக்டர்,கார்பரேட் பணியாளர்கள் என்று சமூகத்தின் நீண்ட வரிசையாக நீள்கிறது பட்டியல். விஞ்ஞான வளர்ச்சியென்று பெருமிதம் கொள்ள முடியாமல் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று கர்பத்தின் துவக்கதிலேயே அறிந்து கொள்ளும் சோனோகிராபி மருத்துவ தொழில் நுட்பம் இந்தியாவின் இரண்டு கோடி பெண்குழந்தைகளை சிசுவதை செய்திருக்கிறதென்கிறது புள்ளி விபரம். கருத்தடைகளால் புதிய இந்தியாவை படைப்போமென்று நம்பியும் கூட இன்னும் பிரச்சினைகளில் தள்ளாடிக்கொண்டிருக்கிறோம்.காசு கொடுத்தால் போதும் கருத்தடை செய்து விடுகிறோம் என்கிற மருத்துவர்கள் மீதான ஸ்கூப்பில் கால சூழல்களாய் கருத்தடை செய்ய வேண்டிய திருமணமாகாத பெண்களை விட குடும்ப சகிதமாக பெண் சிசுவை கலைத்து விடுங்கள் என்று மருத்துவர்களை நாடுபவர்களே அதிகமென்கிறது புள்ளி விபரம்.

இதில் சிசுக்கொலையை நிறுத்த வேண்டுமென்று ஸ்டிங் ஆபரேசன் செய்த ஊடகவியளாலர்களை மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றங்கள் சுற்றவிடுகிறார்கள் கருத்தடை செய்த மருத்துவர்கள் மற்றும் கருத்தடை சம்பந்தப்பட்டவர்களும்.அவர்களாகவே தானே கருத்தடை செய்துகொள்கிறார்கள் இதில் உங்களுக்கு என்ன பிரச்சினையென்று நீதிபதியே திருப்பி கேட்கிறார்.கர்நாடகாவின் பெல்லாரி போன்ற இடங்களிலிருந்து பெண்களை திருமணம் செய்து பின் சந்தைப்பொருளாக்கி விடுகிறார்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர்கள்.அதே ராஜஸ்தானில் திருமணம் செய்வதற்கு பெண்கள் இல்லாமல் நிறைய வாலிபர்களும் முதிர் வாலிபர்களும் எங்கள் சங்கத்துக்கு சல்மான் கானை தலைவராக்கி விடுகிறோம் என்று அமீர்கானிடம் நகைக்கிறார்கள்.                                                

சோனோகிராபி தடைசெய்யப்படவேண்டுமென்று பிரதமர் மன்மோகன் சிங் சொன்னதாகவும் நீள்கிறது தொலைக்காட்சி.கருத்தடை மருத்துவர்களின் முகத்திரையைக் கிழித்த ஊடகவியளாலர்களின் எட்டு வருட நீதிமன்ற வழக்கை துரிதப்படுத்த மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதுகிறேன் உங்கள் ஆதரவும் தேவை என்கிறார் அமீர்கான்.மீதமுள்ள இந்திய வழக்குகளை துரிதப்படுத்துவது யார்?

இந்தியன்,அரட்டை அரங்கம்,அப்துல் கலாம்,சத்யமேவ ஜெயதே வரை நல்லெண்ணங்களுக்கும்,விழிப்புணர்வுகளுக்கும் இந்தியாவில் பஞ்சமேயில்லை.இவற்றையெல்லாம் திமிறிக்கொண்டு நகரும் அரசியல், நீதித்துறை,காவல்துறை,பொருளாதாரம்,மதம்,சமூக கட்டமைப்புக்களின் மனமாற்றங்கள் நேர்படும் காலத்தில் இந்தியா ஒளிரும்.

Tuesday, May 22, 2012

பின்னூட்டங்கள் கூட இல்லாமல் சூடா வடையா:)

தமிழ்மணமே!இது நியாயமா!இது அடுக்குமா! நேரமிருந்தால் என் கடைல வந்து ஒரு வடை சாப்பிட்டு போங்களேன். நானும் வர்றவங்க நேர விரயம்ன்னு ஓடுமளவுக்கு மாங்கு மாங்குன்னு ஊர் மொக்கையல்லாம் சொல்றேன். எனக்கு ஒரு சூடான நாற்காலி கூட வேண்டாம்.கொஞ்சம் நேரம் கூட்டத்தோடு கூட்டமா நடுத்துண்டு கூட வேண்டாம்.வலது பக்கம் ஒண்ணு ரெண்டு தேறும் பின்னூட்ட ரசிகர்கள் கூட வேண்டாம்.

ஆனால் பேருக்காவது ஒரு மைக் டெஸ்டிங்,நமக்கு நாமே திட்ட பின்னூட்டம் கூட இல்லாமல் ஒரு பதிவு சுடு சுடு சூடான தோசை சாப்பிடுவது சரியா! மீண்டும் ஒரு முறை அவ்வ்வ்வ்வ்வ்...

என்னை பஸ்ல கூப்பிட்டாக
பேஸ்புக்குல விசிலடிச்சாக
டிவிட்டர்ல கூவ சொன்னாக
இமெயிலுல தூது விட்டாக
அட எல்லாம் உன்னால
வேண்டாமுன்னு சொன்னேன்
பின்னூட்டத்தால!

டிஸ்கி: இதுக்குப் பேர்தான் கிள்ளி விடறது:)

Monday, May 21, 2012

வருண்!வாங்க சங்மாவை ஆதரிப்போம்!

ஒரு திரைப்படத்தின் கதையின் முடிச்சை முன்னாடியே சொல்லி விட்டு பின் தொடர்ந்து கொண்டு போவது ஒரு வகையான கதை சொல்லும் நுட்பம்.இன்னுமொன்று கதையை மெல்ல நகர்த்தி விட்டு க்ளைமாக்ஸில் சொல்வது இன்னுமொரு வகை.மற்றுமொரு வகை கதை தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் போது ஒரு விதமாகவும் பின் படம் எடுக்கும் கால அவகாசத்தில் கால்ஷீட்,பட்ஜெட் இன்னும் பல காரணங்களால் கதை மதுரை தெருக்கள் மாதிரி நீண்ட வரிசையில் இல்லாமல் சென்னையின் அவரவர் கற்பனைக்கு தகுந்த மாதிரியான குறுக்கு சந்தில் புகுந்து விட்டாப் போதுமடா சாமின்னு படத்தோட கதையை சொல்லி முடிப்பது.இந்த பதிவின் தலைப்பும் கூட  மூன்றாவதாக சொன்ன மாதிரிதான்..

சங்மா பற்றி நேரா சொல்லாமல் வருணை ஏன் வம்புக்கு இழுக்குறேன் என்று சிலருக்கு தோன்றும்.ஆனால் நம்ம வருண் எனக்கு அ.தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை ஜெயலலிதாவிடம் கேட்காமலே சிபாரிசு செய்வதற்கென்றே நான் அரசியல் பதிவு போடாவிட்டாலும் கூட ஓடி வருவதாலும் நேர் கொண்ட பார்வையும்,,நிமிர்ந்த நன்னடையும் கொண்ட எமக்கு ஓ.பன்னீர்செல்வம் கோணல் முதுகெல்லாம் சரிப்பட்டு வராது என்பதாலும் தலைப்புக்கான விளக்கம் சொல்லி இப்ப பதிவுக்குள்ளே போகலாம்.

என்னை தொடர்பவர்களுக்கும் அல்லது தொடராமலே பின்னோக்கி சில பதிவுகளை மேய்பவர்களுக்கும் ஓரளவுக்கு அனுமானம் வந்து விடுமென்பதால் பொருளாதார அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் செய்தி நோட்டம் பார்க்கும் போதே எனக்கு திக் என்றது.அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சண்டையிருக்க முடியும் என்பது போலவே கலைஞர் கருணாநிதிக்கும் அப்துல்காதருக்கும் என்ன சண்டையிருக்க முடியும் என்பதும் கூட இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.விஞ்ஞானி,முன்னாள் ஜனாதிபதி,அனுபவஸ்தன் இவற்றை விட நம்மூர்க்காரனாச்சே என்ற உணர்வும் கூட இல்லாமல் பிரணாப்புக்குத்தான் தி.மு.க ஓட்டு என்றதும் பஜகவும் வாய் மூடிய நிலையில்  ஜனாதிபதி மாளிகை வெளிகேட்டு வரை பிரணாப் நடந்து வந்து விட்டாரென்றே நினைத்தேன்.

ஜெயலலிதாவும்,ஒடிஸா முதல்வர் ஜூனியர் பிஜு பட்நாயக் இருவரும் இணைந்து சேர்ந்து அறிக்கை விடும்போதே முன்பு சபாநாயகராக இருந்த பின் இருந்த இடமே தெரியாமலிருந்த சங்மாவை முன்னிறுத்தும் அரசியல் தந்திரம் கூட புரியாமலே இருந்தேன்.அன்சாரியும்,அப்துல் கலாமும் இல்லாத சூழலில் பிரணாப் முகர்ஜி என்ற ஹெவி வெயிட் சேம்பியனை வீழ்த்துவதற்கு நோஞ்சான் பயில்வான் சங்மாவை நிறுத்தியதன் பின்ணணியில் இந்தியா சார்ந்த நலன்கள் உள்ளதால் சங்மாவை ஆதரிப்பது சரியான முடிவு என கருதுகிறேன்.

அது என்ன இந்தியா சார்ந்த நலன் என்றால் பல நொள்ளை நொட்டைகளை நாம் இந்தியனாக விமர்சித்தாலும் கூட அந்தப் பக்கம் ராணுவ ஆட்சி பூட்ட கேசு நிலை தோற்று ஜனநாயகத்துக்கு தத்தளிக்கும் பாகிஸ்தான்,இந்தப் பக்கம் உலகமே கண்டுக்காமல் இருந்து இப்ப நானும்தான் ரவுடியாக்கும் என ஒரு புறம் சிவுப்பா கழுத்துல சுருக்கு ஜனநாயக முகமூடி மறுபுறம் ராணுவத்தின் பலத்தால் மட்டுமே ஆட்சி செய்யும் இலங்கை,இன்னும் கொஞ்சம் தள்ளிப் போனால் ராணுவ ஆட்சியிலிருந்து விடுபட்ட மியான்மார்,கருத்துரிமைக்கும் பிளாக்கரையும் விட ஒரு பார்வையற்றவருக்கே தடை போடும் சீனாவின் சித்தாந்தம்,மதம் என்ற சுழற்சிக்குள் சிக்கிக்கொண்ட ஈரான் மற்றும் வளைகுடாக்கள்,மால தீவு என்ற குட்டி தீவையும் கூட நிர்வாகிக்க முடியாத கூ என்ற பெரும்வட்டத்துக்குள் இந்தியாவை நோக்கினால் இரைச்சலான ஜனநாயகம் என்ற ஆணிவேரை வேருன்று இருக்கிறது.ஊழல்கள்,மனித உரிமை மீறல்கள்,காவல்துறை நண்பன ஆனால் சீர்கேட்டு நண்பன் என்ற குறைபாடுகள் உள்ளதை மறுப்பதற்கில்லை.ஆனால் பல இன,மத,கலாச்சார பண்புகளுக்குள் சண்டையும் போட்டுக்கொண்டு தீவிரவாதத்தையும் தாங்கிக்கொண்டு இந்தியா என்ற பெரும் பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது இந்திய ஜனநாயகம்.

தொடர்ந்து அரசியல் பதிவுகள் போட்டு கலக்கிக் கொண்டிருக்கும் பதிவர் காவிரி மைந்தன் பதிவொன்றுக்கு நண்பர் ஒருவர் இந்த ஜனாதிபதி பதவியில் ஏதாவது பயன் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.இந்திரா காந்தி ஜனாதிபதி ஆட்சி,கமிசன் போன்ற பூச்சாண்டியைக் காட்டியே தன் சொல் நயத்தால் தமிழகத்தை வளைத்துப் போட்ட கலைஞர் கருணாநிதிக்கு மூக்கணாங்கயிறு போட்டார். மேலோட்டமாக பார்த்தால் ஏதோ இங்கிலாந்து மகாராணிக்கான கௌரவ பதவி மாதிரி தோன்றினாலும் கூட மரணதண்டனையின் விநாடிகளை அணு அணுவாய் சந்திக்கும் ஒரு மரணதண்டனைக் கைதியின் உயிரை திரும்ப வரமளிக்கும் வல்லமை கொண்டது ஜனாதிபதி பதவி.

ஏதோ கொசு கடிச்ச மாதிரி இருந்ததே என்று தட்டிவிட்டு நகர்கிறது 2G இன்று.இந்தியாவின் பண மதிப்பு குறைந்து விட்டது கவலைக்குரியது என்கிறார் பிரணாப் இன்று.அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று நாளை ஒரு 10 G ராகுல் காந்தி காலத்திலோ அல்லது ஏதோ ஒரு நிதியின் காலத்திலோ நிகழ்ந்து விட்டதென வைத்துக்கொள்வோம்.மத்திய அரசுக்கும்,மாநில அரசுக்கும் கொடுக்கல் வாங்கலில் இழுபறின்னு வச்சுக்கலாம்.மத்திய அரசு ஜனாதிபதியை கிள்ளினால் மாநில அரசில் ஜனாதிபதி ஆட்சி வந்து விடும் பவர்புல் மனிதன்/மனுஷி ஜனாதிபதி. அங்குசம் யார் கையில் இருக்கிறதென்பதைப் பொறுத்தே ஜனாதிபதி யானை மிரளுமா தூங்குமா என்பது. DD என்ற தொலைக்காட்சி விஞ்ஞான வளர்ச்சியையும் இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தை இரைச்சலுடன் பறை சாற்றிக்கொண்ட கால கட்டங்களில் எமபி குதிக்கும் எம்.பி மாணவர்களுக்கு கடிவாளம் போடுவது எப்படியென்ற கலையை நன்கு கற்று வைத்திருந்தார் சங்மா.

இந்தியா பலவிதமான ஜனாதிபதிகளை பரிட்சித்துப் பார்த்து விட்டது.சங்மாவின் தேர்வு இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்களாகவும், மாவோயிஸ்ட்டுகளாகவும் விரும்பும் அடிப்படை வசதிகளற்ற மனிதர்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும்.

சுருக்கமாக சொன்னால் பிஜேபியின் அப்துல் கலாம் போல சங்மா ஜெயலலிதாவின் இந்திய ஜனநாயகத்தின் புதிய ஜனாதிபதிக்கான பரிட்சையாக இருக்க முடியும்.

இரண்டு வரிதான் சொன்னேன்!அதுக்குள்ள இவ்வளவு பெரிய ஜவ்வு மிட்டாயா?முடிச்சுடறேன்.

Thursday, May 10, 2012

ஒரே உலக ஊடக விருதுகள்.

ஒரே உலகம் என்பது இணையத்தைப் பொறுத்த வரையில் சாத்தியாயிருக்கிறது.பதிவர்கள் அனைவரும் கூட பல தேசங்களில் இருந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.கூடவே சண்டையும் போட்டுக்கொள்கிறோம்:) சண்டை போட்டாலும் இதெல்லாம் பதிவுலகில் சகஜமப்பா என கவுண்டமணி அண்ணனை நினைத்துக் கொள்வோம்.பதிவுலக அரசியலில் நிரந்தர பகைவன் இல்லையென நிரந்தர நண்பர்களாக முயல்வோம்.

திரைப்படத் துறை போன்றவற்றில் அங்கீகாரம் முக்கியமென்பதை ஆஸ்கார் முதற்கொண்டு,பாலிவுட் வரை முக்கியமானது.தமிழ்மணம் கூட சிறந்த பதிவர்களை ஊக்குவிப்பது வரவேற்க தக்கது.!ஐஸ்!ஐஸ்!இன்னுமொரு முறை யார் மாட்டிக்கிறது:)

தலைப்பின் உலக ஊடகங்கள் மாதிரி தொலைக்காட்சிகள் நிறைந்த இந்தியாவும் கூட இணைந்து விருதுகள் அளிப்பது சிறப்பாக இருக்கும்.மொத்த விருதுகளில் சேனல் 4 இலங்கையின் கொலைக்களங்கள் காணொளி சிறந்த தொலைக்காட்சி விருது மற்றும் சிறந்த ஆவணப்படம் என இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.இதன் தாக்கம் வரும் காலகட்டத்தில் உலக அரசியல் சார்ந்து இலங்கை மீது மீண்டுமொரு முறை பிரதிபலிக்குமா அல்லது மேக காற்றாக மறைந்து விடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முன்பு ஜார்ஜ் புஷ் காலத்தில் ஈராக் போரின் கால கட்டத்தில் துவக்கப்பட்ட அல் ஜசிரா தொலைக்காட்சி ஈராக் போரின் உண்மைகளை வெளிக் கொண்டு வருகிறதென்று முடக்க நினைத்தும் முடியாமல் போனது.பின் லேடனின் காணொளிகளை துணிந்து வெளியிட்டும் தனக்கான பார்வையாளர்களை அதிகரித்துக் கொண்டது அல் ஜசிரா.அரேபிய மொழி,ஆங்கில செய்திகளோடு சுமார் 10க்கும் மேற்பட்ட விளையாட்டு தொலைக்காட்சிகளை நிகழ்த்துவது அல்ஜசிராவின் சிறப்பு.

பி.பி.சி பக்க சார்பற்ற தகவலைத் தர முயன்றாலும அதன் அமெரிக்க சார்புடையது என்பதை மறுப்பதற்கில்லை.ரிப்போர்ட்டர்,பனோரமா போன்ற சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் அரசியல் கலப்பு இல்லையென்பது குறிப்பிடத் தக்கது.அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகைக்கு இணையான பத்திரிகை கார்டியன் எனலாம்.சிறந்த செய்திகளை வெளியிடுவது அதன் சிறப்பு..

ஏனைய விருதுகளுக்கான பெயர்கள் நான் அறியாத ஒன்று என்பதால் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை.

 ஊர் உலகமெல்லாம் அலைஞ்சு செய்தி திரட்டிக்கொண்டு வந்து சொன்னா தமிழ்மணம் வாலில் தீ வச்சு விட்டதாலதான் ஒட்டகம் வேக வேகமா ஓடுதுன்னு கூட கமெண்டுறாங்க:)

இன்'றைக்கு கூட எதிர் நீச்சல்ன்னு ஒருத்தர் ஆடு புலி ஆட்டம் ஆடலாம் வான்னு கூப்பிட்டாரு!இந்த மாதிரி பழமையானவற்றையெல்லாம் ஆவணப்படுத்துங்க இணைய தலைமுறையே.

இனி விருது பட்டியல் உங்களுக்காக!

சிறந்த ஊடக நிருபர் - ஜமால் ஒஸ்மான் - சேனல் 4

ரேடியோ விருது

அசைன்மென்ட் - ஹெய்ட்டி காலாரா பரவல் - பி.பி.சி உலகம்

தொலைக்காட்சி விருது - இலங்கையின் கொலைக்களங்கள் - சேனல் 4


பத்திரிகை விருது - ஆண்களின் கற்பளிப்பு - அப்சர்வர் பத்திரிகை

புதிய ஊடக விருது - எங்கள் ஆப்பிரிக்கா - எஸ்.ஓ.எஸ் குழந்தைகள் (SOS Children)


நாடக விருது - ஒடெலோ எரிகிறது - சிங்கா தயாரிப்பு


பிரபலமான நிகழ்ச்சி விருது - கடினமான இடம் பின்மான் - பிபிசி 2


முன்னேற்ற சாத்திய விருது - ஒரு தீவு இருந்தது - டெ ஹெனுவா எ நோகோ -லெவல் தயாரிப்பு


செய்தி விருது - எங்களை மரணிக்க செய்த விமானம் - கார்டியன்

ஹெகடீரா மருத்துவமனை - ஐடிவி செய்தி

சிறந்த ஆவண விருது: சேனல் 4 - இலங்கையின் கொலைக்களங்கள்

மாணவர் விருது: பஹாங் சிலாங் - ஜீனா மெர்டன் - லண்டன் காலேஜ் ஆஃப் கம்யூனிகேசன்

சிறப்பு விருது_ ஜெம் டிவி


குழந்தைகள் உரிமை விருது: ஆப்பிரிக்க புலனாய்வு: ஸ்பெல் ஆஃப் த அல்பினோ - அல் ஜசிரா ஆங்கிலம்

ஆங்கிலம் கீழே!தமிழ் மொழி பெயர்ப்பில் குற்றமிருந்தால் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.கற்றலும் பெற்றலும் நம்பிக்கையோடு.

Journalist of the Year Award
Jamal Osman – Channel 4

Radio Award
Assignment – Haiti Cholera Epidemic – BBC World Service

Television Award
Sri Lanka’s Killing Fields – Channel 4

Press Award
The Rape of Men – Observer Magazine

New Media Award
Our Africa – SOS Children

Drama Award
Otelo Burning – Cinga Productions

Popular Features Award
Toughest Place to be a Binman – BBC Two

Sustainable Development Award
There Once was an Island: Te Henua e Nnoho – On the Level Productions

News Award
Aircraft carrier left us to die, say migrants – The Guardian
Hagadera Hospital – ITV News on ITV1

Documentary Award
Sri Lanka’s Killing Fields – Channel 4

Student Award
Bagong Silang – Zena Merton, London College of Communication

Special Award
Gem TV

Children’s Rights Award
Africa Investigates: Spell of the Albino – Al Jazeera English

டிஸ்கி: தகவல் சேகரித்த தளத்துக்கு தொடுப்பு கொடுக்க இயலவில்லை.காபி பேஸ்ட்டுக்குப் பின் மறந்து விட்டேன்.மன்னிக்கவும்.

Wednesday, May 9, 2012

வளைகுடாவில் பணிபுரிவோர் பிரச்சினைகள்!

 வளைகுடா நாடுகளில் அரேபியர்களின் வீடுகளில் பணிபுரியும் பணிப்பெண்கள்,மற்றும் வாகன ஓட்டுநர்கள்,ஏனைய பணியாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரேபிய நாடுகளுக்கான மனித உரிமை பற்றிய விமர்சனங்களும் அரேபிய நாடுகளின் விமர்சனங்களில் ஒன்றாக  எழுகிறதென நினைக்கிறேன்.

இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக பணிப்பெண்களும் அதிலும் குறிப்பாக இலங்கை,பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்கள் எனலாம்.அனைத்தும் உடல் ரீதியான அத்துமீறல்களா என்றால் இல்லையெனலாம்.பிரச்சினைகளுக்கான முக்கிய காரணமாக விளங்குவது மொழி எனலாம்.கடந்த மாதம் உடன் பணி புரியும் செக்ரட்டரி புதிதாக தனது வீட்டுப்பணிக்கு சேர்த்த பெண்னுக்கு மொழி தெரியவில்லையென்றும் சொல்வதையும் விளங்கிக் கொள்வதில்லை யென்றும் சொல்லி திலானா என்ற பெண்ணிடம் பேச சொல்ல,திலானா தான் சிங்களப்பெண் என்றும் தமிழ் கதைக்கத் தெரியுமென்றும் தமிழில் சொல்லியது அந்தப் பெண்.தான் இலங்கையிலிருந்து வந்தே சில தினங்கள் என்றும் சிங்களம்,தமிழ் தவிர எந்த மொழியும் தெரியாது என்றும் செக்ரட்டரி வீட்டில் சொல்வதை புரிந்து கொள்ள முடியவில்லை என செக்ரட்டரி அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகள் என்ன என்பதை திலானாவிடம் சொல்ல சொல்ல நான் மொழி பெயர்த்து சொன்னேன்.

இரண்டு நாள் கழித்து செக்ரட்டரி அந்தப் பெண்ணுக்கு சொல்வதும் புரிவதில்லை,வேலையும் திரும்ப திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது வாங்கின இடத்துலேயே கொண்டு போய் விட்டு விடுகிறேன் என்று சொல்ல மொழி பிரச்சினையென்றால் ஏன் பிலிப்பைன்ஸ் பெண்ணை வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது என்று நான் கேட்க பிலிப்பினோவுக்கு காசு சம்பளம் அதிகமாக தரனுமில்ல என்று செக்ரட்டரி சொல்ல மேற்கொண்டு நான் ஒன்றும் சொல்ல வில்லை.அதன் பின் என்னிடம் மொழி பெயர்க்க உதவிக்கு வராத காரணத்தால் திலானா இன்னுமொரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக விற்கப்பட்டிருக்க கூடும். என நினைக்கிறேன்.

எனவே சிங்கள மொழி மட்டும் பிரச்சினையல்ல.பிலிப்பைன்ஸ் பெண்ணுக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் அரபிக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும் பிரச்சினைதான்.சில வீடுகளில் தமது கலாச்சாரத்தோடு மேற்கத்திய நடை,உடை,பாவனைகளை கடைப்பிடிப்பவர்கள் ஆங்கில அறிவு கொண்டவர்களாக இருப்பதால் பிலிப்பைன்ஸ் பெண்களின் பணி புரியும் முறை பிடித்துப்போவதாலும் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாத பெண்களும் பணிபுரிகிறார்கள்.இன்னும் சிலருக்கு மொழி பிரச்சினையில்லையென்றாலும் கூட வாகன ஓட்டுநர்,பணிப்பெண்களுக்கு நீண்ட நேர பணிநேரம் என்ற குறைகளும் உண்டு.

எனவே உடல் ரீதியான அத்துமீறல்கள்,மொழிப் பிரச்சினை,நீண்ட வேலை நேரம்,குறித்த தேதியில் சம்பளம் கிட்டாமை மற்றும் குறைந்த சம்பளம்,ஓரிரு வருடங்கள் பணிபுரிந்தாலும் சம்பள உயர்வு இன்மை என்ற பல காரணங்களால் பணிப்பெண்கள் தனது பாஸ்போர்ட்டைக் கூட அரபிகளிடமிருந்து வாங்க முடியாமல் வீட்டை விட்டு ஓடிவிடுவதோ அல்லது தமது தூதரகத்தில் தஞ்சம் புகுவதோ அல்லது சரியான டாகுமென்டேசன் இல்லாமல் போலிசிடம் சிக்கிக்கொள்வதோ தொடர்ந்து நிகழும் ஒரு சம்பவமாக உள்ளது.இதில் இந்திய தூதரகமும் விதி விலக்கு அல்ல.

வீடுகளில் வேலை செய்பவர்கள் தவிர நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் கூட விசாவை புதுப்பிக்காமல் தங்குவதும்,நிறுவனத்தில் பணிபுரியாமல் சுயமாக சில அரபிகளுக்கு பணம் தந்து விசா வைத்துக்கொண்டு சட்டத்துக்கு விரோதமாக டாக்சி ஓட்டுவதும் போன்றவை நிகழ்கின்றன.மேலும் வளைகுடா நாடுகளுக்கு பணிக்குப் போனால் அந்த நாட்டு சட்ட திட்டங்களை கடைப்பிடிக்காமல் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவது,தாய்லாந்து லாட்டரி,அங்கீகாரமில்லாமல் துணிமணிகள்,வாட்ச்,பெர்ஃப்யூம்,திருட்டு டிவிடி விறபனை செய்து போலிஸில் மாட்டிக்கொள்பவர்களும் உண்டு.

ஒரு புறம் ஆசிய நாடுகளிலிருந்து வளைகுடாவில் பணிபுரிபவர்களின் குறைபாடுகள்,இன்னுமொரு பக்கம் பெண்களுக்கான மனித உரிமை மீறல்கள் என ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகவே வ்ளைகுடாவின் உழைப்பாளர் வர்க்கத்தின் பிரச்சினைகள் உள்ளது.முன்பே  ஆசிய நாடுகளின் தூதரகங்கள் செய்ய தவறும் கடமைகள் பற்றியெல்லாம் பதிவாகவோ பின்னூட்டமாகவோ கருத்து வெளியிடூ செய்தாகி விட்டது.அம்னெஸ்டி போன்ற மனித உரிமை கழகங்கள் ஐ.நாவுக்கான ஆண்டு அறிக்கை தந்தாலும் கூட வளைகுடா மாற்றங்கள் ஆமை வேகத்திலோ அல்லது உறக்க நிலையிலேயே காணப்படுகின்றது.

சரி பிரச்சினைகள் இருந்தும் ஏன் தமது நாட்டுக்குப் போக மறுக்கிறார்கள் என்றால் முதலாவதாக பொருளாதார ரீதியாக அனைத்து ஆசிய நாடுகளும் கவிழ்ந்து விடுகின்றன.மேலும் நம்மூரில் செய்யத் தயங்கும் துப்புரவு வேலைகளை இங்கே செய்து விட முடிகிறது.ஆடு,ஒட்டகத்தை மேய்த்தாலும் உழைப்புக்கான ஊதியம் ஆசிய நாடுகளின் விகிதாச்சாரத்தை விட அதிகம்.ஒப்பீட்டளவில் சிறந்த திறந்த சந்தைப் பொருளாதாரம், நிர்வாகம், கட்டமைப்புக்கள்  போன்றவைகள் முக்கிய காரணங்கள்.

மேலும் புரிதலுக்கு...

இந்த பதிவுக்கான கரு இங்கே

http://news.kuwaittimes.net/2012/05/08/govt-repatriates-240-sri-lankan-domestic-workers-domestic-labor-law-key-to-resolving-issues-in-kuwait/

பின்னூட்டத்துக்கு வெரிபிகேசனை நீக்குவது எப்படி V 2.o


முன்பே ஒரு முறை ஓராயிரம் தினங்களுக்கும் அப்பால் வேர்ட் வெரிபிகேசனை நீக்குவது எப்படி என்று சொன்னதாக ஞாபகம்.பல பதிவுகளிலும் பின்னூட்டம் இடப்போனால் இணைக்க வேர்ட் வெரிபிகேசன் பெரும் தடங்கல்.,புதிதாக இணைந்து கொண்ட நண்பர்கள் ஒரு சிலர் இது பற்றி தெரிந்து கொள்ளவும் பதிவு மேடைக்குப் பின்னால் தொட்டால் என்னாகுமோ என்று பயப்படும் நண்பர்களுக்கும் மீண்டுமொரு முறை வேர்ட் வெரிபிகேசன் நீக்குவது எப்படி என்று பார்க்கலாம்.நமக்கு பின்னூட்டம் போடாவிட்டாலும் பரவாயில்லை.நமக்கு பிடிச்ச பின்னூட்டம் போட தாவு தீருகிறது.அப்படியும் வேர்ட் வெரிபிகேசன் வைச்சாலும் பரவாயில்லை.அதை வேற ரயில் தண்டவாளத்துல போற அழகை படம் பிடிக்கிற புகைப்படக் கலைஞன் மாதிரி கோணலாக கோழி கிறுக்கல்ன்னு வாத்தியார் திட்டுற மாதிரி கூகுளுக்கே கையெழுத்து சரியில்ல:) சரி!இனியும் மோடி மஸ்தான் வேலை காட்டாமல் பாடத்துக்கு போகலாம்....

1. Design
2. Settings
3. Post and Comments
4. Show word verification Yes என்பதை No என்று மாற்றவும்.
5. Save Settings

இவ்வளவுதாங்க!

டிஸ்கி: ஹி....ஹி.... இப்ப நாங்க அந்த தெருப்பக்கமே போறதில்லையே:)


Tuesday, May 8, 2012

எனக்குப் பிடித்த ஜர்னலிஸத்துக்கும் தடா!

முன்பு இரண்டு பதிவுகளில் கொலம்போ டெலகிராஃப் பற்றி சொல்லியிருந்தேன்.ஒன்று கவிஞர் தாமரையின் காணொளி. இன்னொன்று IPKF காலத்தில் ராஜபக்சேவின் கருத்து.யாராவது படிச்சீங்களான்னு தெரியல.முன்பு ராஜபக்சே அரசை விமர்சித்த லசந்த விக்ரமசிங்கேயின் சண்டே லீடர மாதிரி  இலங்கையின் உண்மையான செய்திகளை வெளிக்கொண்டு வரும் ஜர்னலிஸ்டிக் கண்ணோட்டம் கொண்ட இன்னுமொரு தளம் கொலம்போ டெலகிராஃப் இலங்கையில் தடா!

ஐ.நா மனித உரிமைக் குழுவின் அமெரிக்க தீர்மானத்தில் இலங்கை தோல்வியடைந்ததை தொடர்ந்து நம்மூர்ல தண்ணியில்லாத காட்டுக்கு பதவி புரொமோசன் செய்கிற மாதிரி தாமராவுக்கு கியுபாவா? பிரேசிலா என்ற பெருசின் கேள்விக்கு போக மாட்டேன் போ என்ற  தாமராவின் மறுப்பு, நம்மூர் நித்யானந்தா மாதிரி பாலியல் குற்றத்துக்கு தண்டனை பெற்ற புத்த பிக்கு தேரா போன்ற செய்திகளையெல்லாம் கொலம்போ டெலகிராஃப் வெளிக்கொண்டு வருகிறது.இதையெல்லாம் விட பின்னூட்டங்களின் பரிமாணம் இன்னும் பல உண்மைகளையும்,விவாதங்களையும் துணிவுடன் முன் வைக்கிறது.

ஆட்சி பீடத்தில் இருப்பவர்களுக்குத்தான் விமர்சனங்கள் பிடிக்காத ஒன்றாயிற்றே!இலங்கை மக்கள் கிணற்று தவளையாக இருக்க வேண்டும், கூடவே பத்திரிகைகள் அரசு ஊதுகுழலாக செய்திக|ள் வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் ஜி.எல்.பெருசு! நாட்டில் மும்மாரி பொழிகிறதல்லவா என கேட்க இயலும்.

முந்தைய தொடுப்புக்கள்.

http://www.colombotelegraph.com/index.php/thamarai-on-un-resolution-against-sri-lanka/.


http://www.parvaiyil.blogspot.com/2012/04/blog-post.html


Monday, May 7, 2012

இது ஆவுறதில்ல! இது கவிஜ!

சும்மா தூங்கின புலியை தட்டி எழுப்பி விட்டது தமிழ்மணம்!

அலுங்காத குலுங்காத குளம் எதுன்னு பார்த்தால் கவிதையும்
நளபாக சமையலும் ஆன்ட்ராய்டா ஆப்பிளா பட்டிமன்றமே
கவிஜயிலாவது போலிசு என்னைப் பிடிக்காமல் இருக்கட்டும்:)

தொடர்ந்தும் தொடராத நினைவலைகள்.
உழைப்பே மூலதனமான அப்பா,அம்மா

சந்திரனில் வடை சுட்ட பாட்டிக்கு ஏழு ஸ்வரத்தில்
 குரல் கொடுக்கும் அம்மாவின் அம்மா

மெத்தென்று மென்கரத்தை தூக்கி சுமந்த தங்கை

எங்கும் ஒட்டிக்கொள்ளும் நட்புக்கள்
ஆப்ரகாம்,அப்துல்,ஜெயச்சந்திரன்
பெயர்க்காரணங்கள் அறியாத காலம்

எப்படியும் பற்றிக்கொள்ளும் நகைச்சுவை
மருது,தங்கராஜ்,பழனிச்சாமி,ரங்கசாமி,லட்சுமணன்
முந்தா நாள் பேய்க்கதை சொன்ன நசரேயன்
நேற்று ஷகிலா,அசின் ஒப்புமை வவ்வால்
இன்னும் யாரோ மீதி நாட்களுக்கு வந்தாலும்

எப்பவுமே பிடிக்காமல் போன கணக்கு வாத்தியார்

பள்ளிப் பாடத்தை விட சுகமான ஆற்று மீன்களும் காகித கப்பலும்

புத்தக்க படிப்பாய் இல்லாமல் மா,பலா,வாழை சுவைத்த  கணங்கள்
கன்னித்தீவு போதைக்கு தொட்டுக்க ஊறுகாயாக ஆர்ம்ஸ்ட்ராங்க்

சத்திய சோதனை படித்து இது ஆகுற காரியமல்ல
என்று உணரவைத்த மகாத்மா காந்தி

ஓடி விளையாடு பாப்பாதான் அறிமுகமென்றாலும்
கவிஞனென்றால் இவன் கவிஞன் என்றுணர்ந்த பாரதியார்

கிறுஸ்தவ பள்ளியின் தாக்கத்தில் இயேசுவின் மென்மை

என் காதல் அறிந்து நெஞ்சு வலி வந்த
காதலியின் முறைப் பையன்

அண்ணனுக்கு ஐயப்பனும் அத்தனை கடவுளும் பிடித்துப் போக
என்னை சமூக உணர்வுகளோடு கட்டிப் போட்ட பெரியார்

குடும்பஸ்தானாகிய முதிர் நண்பர் படுவான் பாடுவான் பட்டதே போதுமென்பான் பாவி மகன் பெண்குலத்தை படைக்காமல் நிறுத்தி வைப்பான் என  பாடியதை ரசிக்க வைத்த கண்ணதாசன்

மொழி தெரியாமலே சத்யஜித்ரே பதர் பாஞ்சலி படம் சொல்லிய
 கேரளத்து நண்பன் தமிழ் சொல்லிக்கொடுத்த பெங்காளி முகர்ஜி

குத்துச் சண்டையே தெரியாமல் குத்துச்சண்டை வீரன் முகமது அலி

முகவுரையிலேயே மூழ்க வைத்த ஜெயகாந்தன்

புகை பிடிக்காத என்னை புகை விட்டு
அசத்திய நடிப்பரசன் சிவாஜி கணேசன்

பிடித்தும் பிடிக்காமல் போன கலைஞர் கருணாநிதி

பிடிக்காமல் போய் பிடித்துப் போன பிரபாகரன்

இன்னும் எத்தனையோ கற்றுக்கொடுக்கும் பதிவுலகம்

இன்னும் சொல்லாமல் விட்டவைதான் எத்தனையோ

தமிழ்மணமே! நானுமா!அவ்வ்வ்வ்வ்வ்வ்.

நேற்று மெயிலைத் திறந்தால் ஹேமா,வவ்வாலின் பின்னூட்டங்கள் கண்ணில் தெரிய பதில் சொல்லலாமென்று எனது பதிவுக்குப் போகலாமென்று வெளியேற நினைக்க,தமிழ் மணத்தின் கடிதமொன்றும் கண்ணில் பட்டது. ஒரு சில .பதிவுகளில் தேவை கருதி குறிப்பிடுவது தவிர தமிழ்மண நிர்வாகிகளை நலமா என்றோ,இந்தப் பதிவர் ரொம்பவே கிள்ளுறார் சார் என்றோ கூட நான் இதுவரை அவர்களுக்கு ஒரு கடிதம் கூட எழுதியது கிடையாது. ரொம்ப......அமைதியா ஒரு மூலையில் நான் பாட்டுக்கு பேந்தா விளையாடிக்கொண்டிருக்கமூணு சீட்டு விளையாடுகிறேன் என்ற சந்தேகத்தில் ஈழ,இஸ்லாமிய சகோதரர்களுக்கு என்ற பதிவை தமிழ்மணம் நடா! உனக்கு தடா என அறிவித்திருக்கிறார்கள்.

மதம் குறித்தான எனது விமர்சனங்கள் தொட்டுக்க ஊறுகாய் மாதிரிதான்.மத சார்பாளர்களுடன் கூட நான் அதிகம் மல்லுக் கட்டியதேயில்லையே! முன்பு .தமிழக தேர்தல் காலத்து விமர்சனங்களையும்,இப்பொழுது ஈழப் பிரச்சினையை மட்டுமே அதிகம் விமர்சனம் செய்திருக்கிறேன்.ராஜ பக்சே கூட சண்டைக்கு வராத புள்ளப்பூச்சியான எனக்கு தடாவா!அவ்வ்வ்வ்வ்வ்!

Saturday, May 5, 2012

இலங்கையின் கொலைக்களமா?பஹ்ரைனின் சுதந்திரக் குரலா?

சென்ற வாரம் சேனல் 4ன் ஜான் சுனோவின் இலங்கையின் கொலைக்களம் முன்னிலையிலும் அல் ஜசிராவின் மே யிங்க் வெல்ஸின் இருளினில் அலறல் இரண்டாம் நிலையிலும் இருந்தது.தற்போது அல்ஜசிரா முதல் இடத்தில் நிற்கிறது.இரு ஆவணப்படங்கள் BAFTA வின் கருத்து ஓட்டளிப்பில் பி.பி.சி தொலைக்காட்சியின் பனோராமாவின் இரண்டு ஆவணப்படங்களைப் பின் தள்ளி அல்ஜசிரா முன்னிலையிலும்,சேனல் 4 இரண்டாம் இடத்திலும் தற்போது உள்ளது.

ஏனைய அரேபிய நாடுகளான டுனிசியா,எகிப்தின் அரேபிய வசந்தத்திற்கும் மாறாக பஹ்ரைனில் எழும் சுதந்திர குரல் வித்தியாசமானது.காரணம் பெட்ரோலியப் பொருளாதாரத்தின் வளங்களில் முன்னேறிய வளைகுடா நாடுகளில் பஹ்ரைனும் ஒன்று.சுதந்திரம்,கருத்துரிமைகள் கூட சுயநலங்களின் அடிப்படையிலே பரிசளிக்கப்படுகின்றன என்பதற்கு பஹ்ரைனில் எழுந்த மக்களின் போராட்டம் ஒரு மிக சிறந்த உதாரணம். காரணம் போராட்டக்களத்தில் இருப்பவர்கள் ஷியா பிரிவை சார்ந்த இஸ்லாமியர்கள் என்றும் ஈரானின் ஆதரவு இந்தப் போராட்டத்திற்கு உள்ளது என்றும் சொல்லி சவுதி அரேபியாவின் டாங்குகள் பஹ்ரைன் தெருக்களில் நுழைந்து போராட்டத்தை ஒடுக்கி விட்டது.

இதற்கு மறைமுக ஆதரவாக அமெரிக்காவின் பெட்ரோலிய அரசியலும் துணை.தற்போதைய நிலையில் உலக பெட்ரோலியம் சார்ந்த பொருளாதாரம் சுமூகமாக நிகழ்வதற்கு வளைகுடா மாற்றங்கள் தேவையில்லையென்றே அமெரிக்கா கருதுகிறது.சேனல் 4 ஆவணப்படத்தையும் ஆதரிக்கலாம். விரும்பாத பட்சத்தில் அல்ஜசிராவின் இருளின் அலறலுக்கு வாக்களிக்களிக்கலாம்.

யாருக்கு உங்கள் ஓட்டு?

 http://www.radiotimes.com/news/2012-04-30/watch-bahrain-shouting-in-the-dark-and-sri-lanka%27s-killing-fields

ஈழ,இஸ்லாமிய சகோதரர்களுக்கு!

சகோ.சிராஜ்!நலமாக இருக்கிறீர்களா? இது உங்கள் பதிவின் பின்னூட்டமாக துவங்கியது பின்னூட்டத்தின் நீளம் கருதி பதிவாக்கி விட்டேன்.சூடான பகுதியில் மேலே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்.கீழே கந்தசாமி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.கந்தசாமியின் பதிவிலேயே இந்த பின்னூட்டத்தைப் போடலாமென்றிருந்தேன்.இருந்தாலும் உங்கள் பதிவில் போடுவது நல்லது என்று மனதுக்கு தோன்றியதால் நட்போடு எனது கருத்தை பதிவு செய்கிறேன்.

மதம் சார்ந்தவர்களின்,மதத்திற்கு எதிராக பதிவு போடுபவர்கள் இரு பக்கத்தின் கொட்டம் தாங்க முடியவில்லை.அதிலும் தங்களுக்கான தேவை எதுவென்று அறியாமல் ஈழத்தமிழ் சகோதரர்கள் மதத்திற்கு எதிராக சரியான பதிவுகளைப் போட்டு விட்டு பின்னூட்டத்தில் மதத்திற்கு எதிராக தரம் இறங்கி விடுவது சகிக்கவே இயலவில்லை.விவாதம்  செய்வதாக இருந்தாலும் கூட நாகரீகத்தை கடைப்பிடியுங்கள்.

இறைவன் சார்ந்தோ அல்லது ஆன்மீகம் சார்ந்தோ ஒருவரின் நம்பிக்கைகள் தான் நம்பும் தனக்கும் அப்பால் உள்ள பேரண்டத்தின் மீதான நம்பிக்கையோ அல்லது மனித சக்திக்கும் அப்பாற்பட்ட உள் உணர்வால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று என்று பலரும் நம்புவை மதம் என்றோ அல்லது பேரிறைவன் என்ற நம்பிக்கைகள்  என்ற கட்டமைப்பின் மீதான நம்பிக்கை ஒரு தனிமனிதனின் சுய உரிமைகள்.இதில் இன்னொருவர் தலையிடுவதற்கு உரிமையில்லை.ஆனால் தான் நம்புவதை அடுத்தவன் மீதும் பொது சமூக தளத்தில் திணிக்கும் பரப்புரைகளினால் வந்த தீமையாகவே ஒருவர் மீது ஒருவர் சேறு வாரி பூசிக்கொள்ளும் நிலைக்கு பதிவுலகம் வந்துள்ளது.

மதம் சார்ந்து சிந்தித்தால் சமூகம சார்ந்த அதன் உயர்வுகள் ஒருபுறமிருக்க அதற்கு நிகராக எதிர் விமர்சனம் செய்வதற்கும் ஏராளமான குறைகள் இருக்கவே செய்கின்றன.விமர்சனம் செய்கிறவன் செய்து விட்டுப் போகட்டும் என்று தனக்கு தேவையான நல்லவைகளை மட்டும் எடுத்துக்கொண்டு பயணிக்க வேண்டும். மதங்கள் இப்படியே பயணிக்கின்றன.மாறாக மதம் சார்ந்த மனிதன் விமர்சனங்களை எதிர் கொள்ளும் சக்தியற்று போவதால் மட்டுமே அதற்கான எதிர்ப்புக்கள் பல திசைகளில் எழும்புகின்றன.மிஞ்சுவதென்னமே வெறுப்பே.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னுமொன்று சில சகுனிகள் நெருப்பை தூண்டி விட்டு பெட்ரோலையும் ஊற்றி விட்டு மாயமாக மறைந்து விடுகிறார்கள்.கோப பதிவுகளில் மாட்டிக் கொள்வதென்னவோ உங்களைப் போன்ற நண்பர்களே! 

தொடரும் தூப மூலத்தை ஆராய்ந்தால் அவரவரின் நம்பிக்கையாக பதிவுகள் மட்டும் போட்டுக்கொண்டிருந்தால் பரவாயில்லை.படிப்பவர்கள் படிக்கிறார்கள். பிடிக்காதவர்கள் கடந்து போகப் போகிறார்கள். அதையெல்லாம் விட்டு விட்டு தமிழ்மணத்திற்கு எதிராக இஸ்லாமிய சகோதரர்கள் ஒன்று திரண்ட தவறின் தொடர்ச்சியாகவே பதிவுலக சண்டை தொடர்கிற்து.இது எங்கே போய் முடியும் என்றே தெரியவில்லை.ஒன்று தமிழ்மணத்திற்கு விண்ணப்பித்து இஸ்லாமிய பகுதியை தனியாக சேர்க்க சொல்லுங்கள்.இல்லையென்றால் மதம் சார்ந்த கருத்துக்களை இருவருமே நிறுத்துங்கள்.முன்பே சமாதான உடன்படிக்கைகள் செய்து கொண்டு மௌனமாய்ப் போய்க் கொண்டிருந்தது மறுபடியும் பத்திகிச்சு.

எழுத்தும் பதிவுலகம் சார்ந்த நட்பும் மனதுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வரவேண்டும்.நட்பாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.குறைந்த பட்சம் நிரந்தர வெறுப்பைக் கொண்டு வரக்கூடாது.நிறுத்துங்கள் சண்டையை இரு பக்கமும்.எல்லோரும் நண்பர்களே என்று மீண்டுமொரு முறை சொல்லிக்கொள்கிறேன்.

ஈழ,இஸ்லாமிய முகத்தை தாண்டி தமிழர்கள் என்ற புள்ளியில் இணைவோம்.