Followers

Wednesday, May 9, 2012

பின்னூட்டத்துக்கு வெரிபிகேசனை நீக்குவது எப்படி V 2.o


முன்பே ஒரு முறை ஓராயிரம் தினங்களுக்கும் அப்பால் வேர்ட் வெரிபிகேசனை நீக்குவது எப்படி என்று சொன்னதாக ஞாபகம்.பல பதிவுகளிலும் பின்னூட்டம் இடப்போனால் இணைக்க வேர்ட் வெரிபிகேசன் பெரும் தடங்கல்.,புதிதாக இணைந்து கொண்ட நண்பர்கள் ஒரு சிலர் இது பற்றி தெரிந்து கொள்ளவும் பதிவு மேடைக்குப் பின்னால் தொட்டால் என்னாகுமோ என்று பயப்படும் நண்பர்களுக்கும் மீண்டுமொரு முறை வேர்ட் வெரிபிகேசன் நீக்குவது எப்படி என்று பார்க்கலாம்.நமக்கு பின்னூட்டம் போடாவிட்டாலும் பரவாயில்லை.நமக்கு பிடிச்ச பின்னூட்டம் போட தாவு தீருகிறது.அப்படியும் வேர்ட் வெரிபிகேசன் வைச்சாலும் பரவாயில்லை.அதை வேற ரயில் தண்டவாளத்துல போற அழகை படம் பிடிக்கிற புகைப்படக் கலைஞன் மாதிரி கோணலாக கோழி கிறுக்கல்ன்னு வாத்தியார் திட்டுற மாதிரி கூகுளுக்கே கையெழுத்து சரியில்ல:) சரி!இனியும் மோடி மஸ்தான் வேலை காட்டாமல் பாடத்துக்கு போகலாம்....

1. Design
2. Settings
3. Post and Comments
4. Show word verification Yes என்பதை No என்று மாற்றவும்.
5. Save Settings

இவ்வளவுதாங்க!

டிஸ்கி: ஹி....ஹி.... இப்ப நாங்க அந்த தெருப்பக்கமே போறதில்லையே:)


5 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அய்யா தெய்வமே..

இப்பொழுதுதான், எனக்கு இந்த அனுபவம் நேர்ந்தது..

புது ப்ளாக்..கரண்ஸி பற்றி எழுதியிருந்தார்.. நன்றாக உள்ளதே என கமென்ஸ் போட முயன்றேன்...


உஷ்..

கமெண்ஸ் போட்டு முடிப்பதற்க்குள். கண்களில் தண்ணீர்..

ஹிஹி..

அவருக்கு சொல்லிட்டு.. அப்படியே வந்தா நீங்க அதைப்பற்றீ...


அண்ணே.. உங்களுக்கு ஆதினம் ஆக தகுதி வந்திருச்சு...

:-))))

ராஜ நடராஜன் said...

பட்டு! எங்கே போயிட்டீங்க? ஆதினம் வரை சத்தமில்லாமல் கவனிச்சுகிட்டுத்தான் இருக்குறீங்களா:)

வவ்வால் said...

ராஜ்,

என்ன ஒட்டகம் வேகமா ஓடுறாப்போல தெரியுதே ..வரிசையா பதிவுகள்...வாலில் நெருப்ப பத்த வச்சிடுச்சு போல த.ம தடை ...

எவ்வளவோ செய்திட்டோம் இதை செய்ய மாட்டோமானு தொழில்நுட்ப பதிவா பலே... ஆனாலும் சில தொழில்நுட்ப பதிவுகள படிச்சா ...யானைக்காலில் இடற செய்யணும் போல இருக்கும்... உங்கள் பதிவில் வீடியோ இணைக்க அப்படினு எல்லாம் இருக்கும் ...இன்னும் சிலர் லேப் டாப் பேட்டரியில் இருக்கும் சார்ஜ் அளவை காட்ட அரிய மென் பொருள் இலவசமாகனு போடுறாங்கய்ய்யா :-))

இந்த வேர்டு வெரிபிகேஷன் எடுக்க சொன்னாலும் சிலர் எடுக்க மாட்டேன்கிறார்கள் ,ஸ்பாம் தடுக்கவாம், சரி எப்படியோ போகட்டும் அவங்க சட்டை ... பச்சை கலரில் இருந்தா என்ன மஞ்ச கலரில் இருந்தா என்ன பார்க்காம கண்ணை மூடிக்க வேண்டியது தான் :-))
-----

ஆதீனமா ... உள்ள தள்ள பட்டாப்பட்டி ஏதோ குழிப்பறிக்கிறாப்போல இருக்கே :-))

ராஜ நடராஜன் said...

வவ்வால்!சீரியசாய்த்தான் பின்னூட்டம் போடுவீங்கன்னு நினைச்சால் இந்தப் பின்னூட்டம் சிரிச்சு முடிச்சும் தாளல:) பின்னூட்டத்துக்கு ப்தில் போட்டுக்கொண்டே சிரிக்கின்றேன்.முடியல சாமி:)

எந்த வம்புக்கும் போகாமல் இருக்குற ரொம்ப நல்ல பதிவர்களையும் விடலையா!

ரஞ்சிதாவை வானத்துல பறக்க விட்டதுமில்லாம இப்ப ஆதீனமும் தமிழ்நாட்டுல பிரபலமாயிடும் போல இருக்குதே!நல்லா ஆன்மீக சேவை செய்றாங்க போங்க:)

பட்டு!ஆதினமாக நான் ரெடி!மகுடம் சூட்ட நீங்க ரெடியா?

ராஜ நடராஜன் said...

வவ்வால்!பின்னூட்ட நயத்தில் மீண்டும் ஒரு முறை படித்தேன்.உண்மைதான் இல்ல!ஒட்டகம் கொஞ்சம் வேகமாப் போறதை நானே இப்பத்தான் கவனிச்சேன்.அதுக்குன்னு த.ம வாலில் பத்த வச்சதாலதால் ஓடுதுங்கிறது கொஞ்சமும் சரியில்ல:)