Followers

Saturday, May 5, 2012

ஈழ,இஸ்லாமிய சகோதரர்களுக்கு!

சகோ.சிராஜ்!நலமாக இருக்கிறீர்களா? இது உங்கள் பதிவின் பின்னூட்டமாக துவங்கியது பின்னூட்டத்தின் நீளம் கருதி பதிவாக்கி விட்டேன்.சூடான பகுதியில் மேலே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்.கீழே கந்தசாமி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.கந்தசாமியின் பதிவிலேயே இந்த பின்னூட்டத்தைப் போடலாமென்றிருந்தேன்.இருந்தாலும் உங்கள் பதிவில் போடுவது நல்லது என்று மனதுக்கு தோன்றியதால் நட்போடு எனது கருத்தை பதிவு செய்கிறேன்.

மதம் சார்ந்தவர்களின்,மதத்திற்கு எதிராக பதிவு போடுபவர்கள் இரு பக்கத்தின் கொட்டம் தாங்க முடியவில்லை.அதிலும் தங்களுக்கான தேவை எதுவென்று அறியாமல் ஈழத்தமிழ் சகோதரர்கள் மதத்திற்கு எதிராக சரியான பதிவுகளைப் போட்டு விட்டு பின்னூட்டத்தில் மதத்திற்கு எதிராக தரம் இறங்கி விடுவது சகிக்கவே இயலவில்லை.விவாதம்  செய்வதாக இருந்தாலும் கூட நாகரீகத்தை கடைப்பிடியுங்கள்.

இறைவன் சார்ந்தோ அல்லது ஆன்மீகம் சார்ந்தோ ஒருவரின் நம்பிக்கைகள் தான் நம்பும் தனக்கும் அப்பால் உள்ள பேரண்டத்தின் மீதான நம்பிக்கையோ அல்லது மனித சக்திக்கும் அப்பாற்பட்ட உள் உணர்வால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று என்று பலரும் நம்புவை மதம் என்றோ அல்லது பேரிறைவன் என்ற நம்பிக்கைகள்  என்ற கட்டமைப்பின் மீதான நம்பிக்கை ஒரு தனிமனிதனின் சுய உரிமைகள்.இதில் இன்னொருவர் தலையிடுவதற்கு உரிமையில்லை.ஆனால் தான் நம்புவதை அடுத்தவன் மீதும் பொது சமூக தளத்தில் திணிக்கும் பரப்புரைகளினால் வந்த தீமையாகவே ஒருவர் மீது ஒருவர் சேறு வாரி பூசிக்கொள்ளும் நிலைக்கு பதிவுலகம் வந்துள்ளது.

மதம் சார்ந்து சிந்தித்தால் சமூகம சார்ந்த அதன் உயர்வுகள் ஒருபுறமிருக்க அதற்கு நிகராக எதிர் விமர்சனம் செய்வதற்கும் ஏராளமான குறைகள் இருக்கவே செய்கின்றன.விமர்சனம் செய்கிறவன் செய்து விட்டுப் போகட்டும் என்று தனக்கு தேவையான நல்லவைகளை மட்டும் எடுத்துக்கொண்டு பயணிக்க வேண்டும். மதங்கள் இப்படியே பயணிக்கின்றன.மாறாக மதம் சார்ந்த மனிதன் விமர்சனங்களை எதிர் கொள்ளும் சக்தியற்று போவதால் மட்டுமே அதற்கான எதிர்ப்புக்கள் பல திசைகளில் எழும்புகின்றன.மிஞ்சுவதென்னமே வெறுப்பே.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னுமொன்று சில சகுனிகள் நெருப்பை தூண்டி விட்டு பெட்ரோலையும் ஊற்றி விட்டு மாயமாக மறைந்து விடுகிறார்கள்.கோப பதிவுகளில் மாட்டிக் கொள்வதென்னவோ உங்களைப் போன்ற நண்பர்களே! 

தொடரும் தூப மூலத்தை ஆராய்ந்தால் அவரவரின் நம்பிக்கையாக பதிவுகள் மட்டும் போட்டுக்கொண்டிருந்தால் பரவாயில்லை.படிப்பவர்கள் படிக்கிறார்கள். பிடிக்காதவர்கள் கடந்து போகப் போகிறார்கள். அதையெல்லாம் விட்டு விட்டு தமிழ்மணத்திற்கு எதிராக இஸ்லாமிய சகோதரர்கள் ஒன்று திரண்ட தவறின் தொடர்ச்சியாகவே பதிவுலக சண்டை தொடர்கிற்து.இது எங்கே போய் முடியும் என்றே தெரியவில்லை.ஒன்று தமிழ்மணத்திற்கு விண்ணப்பித்து இஸ்லாமிய பகுதியை தனியாக சேர்க்க சொல்லுங்கள்.இல்லையென்றால் மதம் சார்ந்த கருத்துக்களை இருவருமே நிறுத்துங்கள்.முன்பே சமாதான உடன்படிக்கைகள் செய்து கொண்டு மௌனமாய்ப் போய்க் கொண்டிருந்தது மறுபடியும் பத்திகிச்சு.

எழுத்தும் பதிவுலகம் சார்ந்த நட்பும் மனதுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வரவேண்டும்.நட்பாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.குறைந்த பட்சம் நிரந்தர வெறுப்பைக் கொண்டு வரக்கூடாது.நிறுத்துங்கள் சண்டையை இரு பக்கமும்.எல்லோரும் நண்பர்களே என்று மீண்டுமொரு முறை சொல்லிக்கொள்கிறேன்.

ஈழ,இஸ்லாமிய முகத்தை தாண்டி தமிழர்கள் என்ற புள்ளியில் இணைவோம்.

22 comments:

சார்வாகன் said...

வணக்கம் சகோ

அருமையாக் எழுதி இருக்கிறீர்கள்.ஆனாலும் சில விடயங்களில் மாறுபடுகிறேன்.இது ஈழ,மற்றும் இஸ்லாமியர் பதிவர் பிரச்சினை அல்ல.

நீங்கள் கூறிய வண்னம் ஒவ்வொரு மதத்திலும் இக்கால வாழ்வுக்கு பொருந்தும் பொருந்தாத விடயங்கள் இருப்பது இயல்பு.

மத பிரசாரகர்கள் தாங்கள்வாழ்வில் கடைபிடிக்காத விடயங்களை பிறருக்கு பரிந்துரைப்பதுதன் பிரச்சினைக்கு சிக்கல்.

மத பிரச்சாரகர்களின் வழிகாட்டுதல் எனக்குத் தேவையில்லை

மத பிரச்சார பதிவுகளை குழுவாக செயல்பட்டு மகுடம் ஏற்றுவது பதிவர்கள் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்க வில்லை.

எனக்கும் பிடிக்கவில்லை என்பதை பதிவு செய்கிறேன்.

இதனால் தகுதியுள்ள எவ்வளவோ பதிவுகள முகுடம் பெறாமல் சென்று இருக்கின்றன.

மதப் பிரச்சார பதிவுகள் மகுடம் ஏற்றாமல் இருந்தல் எந்த பிரச்சினையும் இல்லை.

அவ்வளவுதான்!

Avargal Unmaigal said...

///எழுத்தும் பதிவுலகம் சார்ந்த நட்பும் மனதுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வரவேண்டும்.நட்பாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.குறைந்த பட்சம் நிரந்தர வெறுப்பைக் கொண்டு வரக்கூடாது.////

இதை பதிவு எழுதுபவர்கள் அனைவரும் உணர வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

நடுநிலைமையோடு யாரையும் காயப்படுத்தாமல் எழுதிய பதிவு. வாழ்த்துக்கள்


தமிழ்மணம் என்பது ஒரு பதிவு திரட்டியே......அதை அவர்கள் ஒரு நல்ல எண்ணத்துடன் தொடங்கி லாப நோக்கு இல்லாமல் நடத்திவருகிறார்கள்.அதன் மகுடப்பகுதியில் வருவதால் நாம் உலக சாதனை பண்ணியதாக புதிதாக வரும் பலர் நினைத்து கொள்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை என்பதை புரிந்து ,அந்த நினைப்பை மாற்றி நல்ல கருத்துக்களை அல்லது உங்கள் எண்ணங்களை தொடர்ந்து எழுதி வாருங்கள் கண்டிப்பாக எல்லோர் மனதையும் தொட்டு செல்வீர்கள்.


நீங்கள் உங்கள் மதக்கருத்தை சொல்வதாயினும் மிக பொறுமையாக எடுத்து சொல்லுங்கள். சில நபர்கள் மாற்று கருத்தை சொன்னால் அது தவறாக இருந்தாலும் அதை பொறுமையாக படித்து அவன் அதை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை அதனால் அதை மேலும் எப்படி எளிமையாக சொன்னால் நன்றாக இருக்கும் என்று கருதி விளக்கம் அவருக்கு தாருங்கள் அதைவிட்டு விட்டு அவர்கள் மீது துவேசம் கொள்ள வேண்டாம். அப்படி செய்வதால்தான் வெளியில் இருக்கும் மற்றவர்களும் தங்கள் தளத்திற்கு வந்து படித்து செல்வார்கள். அப்படியில்லையெனில் இது ஒரு சந்தைக்கடை என்று உள்ளே வராமல் சென்றுவிடுவார்கள். அதனால் நீங்கள் சொல்ல வந்த விஷயம் & நோக்கம் நிறைவேறாது என்பது எனது கருத்து.


நல்ல நண்பர்களாக இருந்து ஒருத்தொருக்கொருத்தர் உதவி செய்து சந்தோஷமாக வாழுங்கள்.......வாழ்க வளமுடன்

இங்கு நான் சொன்னதில் தவறு ஏது இருந்தால் அதற்காக இப்பவே இங்கேயே மண்னிப்பு கேட்டு கொள்கிறேன்

THE UFO said...

திரு.ராஜ நடராஜன்,
நல்ல தலைப்பு. நன்றாக ஹிட் ஆகும் என்று நினைக்கிறேன்.

====//==========
இது உங்கள் பதிவின் பின்னூட்டமாக துவங்கியது
======//=================

என்று சொல்லி விட்டு,

========//===========
கந்தசாமியின் பதிவிலேயே இந்த பின்னூட்டத்தைப் போடலாமென்றிருந்தேன்
========//==============
என்றும் சொல்கிறீர்கள்.

அப்புறம்,

========//==========
தங்களுக்கான தேவை எதுவென்று அறியாமல் ஈழத்தமிழ் சகோதரர்கள் மதத்திற்கு எதிராக சரியான பதிவுகளைப் போட்டு விட்டு பின்னூட்டத்தில் மதத்திற்கு எதிராக தரம் இறங்கி விடுவது சகிக்கவே இயலவில்லை.விவாதம் செய்வதாக இருந்தாலும் கூட நாகரீகத்தை கடைப்பிடியுங்கள்.
==========//=============

என்று சகோ.சிராஜ் க்கு ஆரம்பித்தா ஒன்றில் எழுதி இருக்கிறீர்கள்.

சகோ.கந்தசாமி என்று பாராவின் தலைப்பில் போட்டிருக்கலாமே?

அவர்களின் பின்னூட்டங்கள் மட்டுமல்ல பதிவுகளும் ஆபாச எழுத்துக்கள், அருவருப்பு நடை என்றுதான் உள்ளது.

என்றாலும் இந்த அளவுக்காவது உண்மையை யாருக்கும் பயப்படாமல் கூறிய உங்களுக்கு மிகவும் நன்றி.

THE UFO said...

திரு,சார்வாகன்,
===========//==============
மதப் பிரச்சார பதிவுகள் மகுடம் ஏற்றாமல் இருந்தல் எந்த பிரச்சினையும் இல்லை.

அவ்வளவுதான்!
==============//============

அப்போ இஸ்லாமிய மத துவேஷ பதிவுகள் மகுடம் ஏறலாமா? அதைப்பற்றியும் சொல்லி தங்களை நடுநிலைவாதியாக காட்டி இருக்கலாமே?

THE UFO said...

திரு,நடராஜன்,

===========//===========
ஆனால் தான் நம்புவதை அடுத்தவன் மீதும் பொது சமூக தளத்தில் திணிக்கும் பரப்புரைகளினால் வந்த தீமை
==========//============

நம் நாட்டின் சட்டம் தெரியலையே. இந்தியர்களாகிய நாம் எந்த மதத்தையும் தழுவலாம். நமக்கு நல்லது என்று பட்டதை நாம் பெற்ற இன்பம் பெருக மற்ற இந்தியர் என்ற அடிப்படையில் மற்றவருக்கும் பிரச்சாரம் செய்யலாம். இதெல்லாமே தனிமனித உரிமை.

அப்பசி இருக்க,

தனிமனித உரிமையினால் தீமை வருவதாக எழுதி உள்ளீர்கள். இது தவறு அன்பரே. திருத்துங்கள்.

மற்றவரின் உரிமையை தடுக்க முன்வருபவர்க்ளே இங்கே புத்தி சொல்லப்பட வேண்டியவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் அன்பரே.

நன்றி.

மாத்தியோசி - மணி said...

அதிலும் தங்களுக்கான தேவை எதுவென்று அறியாமல் ஈழத்தமிழ் சகோதரர்கள் மதத்திற்கு எதிராக சரியான பதிவுகளைப் போட்டு விட்டு.......//////

நடா, இந்த இடம் எனக்குப் புரியவே இல்லை! ஈழத்தமிழர்களின் தேவை எதுவென்று கருதுகிறீர்கள்?

01. நாம் முள்ளிவாய்க்காலில் செத்தொழிந்தோம் என்பதை மீண்டும் மீண்டும் கூறி, முகாரி வாசிப்பதா?

02. எமது எதிரிகளான சிங்களவர்களைப் பற்றி இடைவிடாது வசை பாடுவதா?

03. இப்போது இலங்கையில் வழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பற்றி திரும்பத் திரும்ப எழுதி, அனுதாபம் தேடுவதா?

04. வெளிநாடுகளில் இருந்துகொண்டு, புலிகள் மீண்டும் வருவார்கள், தமிழீழம் பிறக்கும் என்று நடக்காத ஒன்றுபற்றி கற்பனையாக எழுதிக்கொண்டு இருப்பதா?

05. எந்தத் தீர்வையும் இலங்கை அரசு எமக்குத் தராது என்று தெரிந்தும், வெறுமனே கற்பனைகளில் எமக்கு அந்தத் தீர்வு சரியாக இருக்கும், இந்தத் தீர்வு சரியாக இருக்கும் என்று பரிந்துரைப்பதா?

06. நடந்துமுடிந்த துன்பங்களை கொஞ்சமேனும் மறந்துவிட்டு, ஏதோ மீதிக்காலமாவது நிம்மதியாக இருக்கவிரும்பும் மக்களுக்கு பழசைக் கிண்டிக் கிளறி நினைவூட்டிக்கொண்டு இருப்பதா?

அல்லது இவை அனைத்தையும் தாண்டி வேறொன்றா?

நடா, பொதுவாகவே ஈழத்தமிழன் பாவப்பட்டவன் என்கிற அனுதாபம் நிலவுது! எந்த மீடியாக்காரன் வந்தாலும் முள்ளிவாய்க்கால் பற்றி கேள்விகேட்டே கொல்லுறான்! முதலில் இந்த அனுதாபப் பார்வை எமக்கு ஒரு ஆறுதலாக இருந்தாலும், இப்போதெல்லாம் எரிச்சல் தான் வருகிறது!

புதிதாக ஒருவரைச் சந்திக்கும் போது, நாம் இலங்கையர் என்று தெரிந்தவுடன், வணக்கம் சொன்னதுக்கு அடுத்ததாக நேரே முள்ளிவாய்க்காலுக்குத் தான் சென்றுவிடுகிறார்கள்! யாருடனும் இயல்பாகப் பேசமுடியவில்லை!

இந்த “ அனுதாபப்பார்வை” மோசமான ஒரு பின்விளைவைக் கொண்டுவருகிறது! அதாக்கப்பட்டது எம்மையும் சக தமிழர்களாகப் பார்க்காமல் பாவப்பட்டவர்கள் என்று நோக்குவதால், “ நீ இவ்வளவும் தான் பேசலாம்! இப்படிப் பேசுவது தவறு! நீ அழப் பிறந்தவன்! எப்படி இப்படிச் சிரிக்கலாம்? நீ ஒரு அகதி! உனக்கு நாடில்லை! ஆகவே நீ ஏனைய விஷயங்கள் பற்றிப் பேசுவது தவறு” என்று மறைமுக அழுத்தம் தான் கிடைக்கிறது!

உங்களின் இந்தப் பதிவு மட்டுமல்ல, இன்னும் பல இடங்களில், பலகாலமாக நான் படித்துவரும் பல பதிவுகள், ஈழத்தமிழர்களுக்கு அறிவுரை / உபதேசம் எனும் பேரில்,

“ நீங்கள் ஒரு லிமிட்டுக்கு மேல பேசக் கூடாது” என்பதைச் சொல்லி நிற்கின்றன!

என்ன செய்யலாம் நடா?????????????

ராஜ நடராஜன் said...

சகோ.சார்வாகன்!இந்தப் பதிவுக்கு பின்னூட்ட மறுமொழி சொல்ல வேண்டாமென்றிருந்தேன்.இருந்தாலும் நான் சிந்திப்பதற்கும் மாற்றுக்கருத்துக்களும் இருப்பதால் விளக்கம் அவசியம் என நினைக்கிறேன்.

நான் உங்களோடு இணைந்து பரிணாமத்தின் மூலம் தேடுவதால் உங்களின் கருத்து சார்ந்து ஓ போடுவது சரியாக இருக்காது.

மதப் பிரச்சார பதிவுகள் மகுடம் ஏற்றாமல் இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற ஒற்றைத் தன்மையை விட அனைவரும் விரும்பி மதப் பிரச்சார பதிவுகள் மகுடம் ஏறுவதால் எந்தப் பிரச்சினையுமில்லை என்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன்.ஆனால் நடைமுறை குளறுபடிகளுக்கு ஒருவர் மீது ஒருவர் சேறு பூசிக்கொள்வது சரியெனப்படவில்லை.

பதிவு எந்த திசையில் நின்று கொண்டிருக்கிறது என்பதை விட என்ன சொல்ல வருகிறது என்பதை எடை போட்டு ஏற்றுக்கொள்வதும் புறம் தள்ளி விடுவதுமே சிறந்த வாசிப்பாக கருதுகிறேன்.சூடான பதிவுகள்,மகுடம் போன்ற இடங்களில் பதிவுகள் செல்வதன் காரணம் அதிகம் பேர் பார்வையிட்டுள்ளார்கள் என்ற தகுதிக்காகத்தான்.இதன் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது தமிழ்மணம் மட்டுமே.இந்த பதிவை இட்டு விட்டு காலையில் விழித்தால் தமிழ்மணம் பதிவு நின்று கொண்டிருக்கிறது.

ராஜ நடராஜன் said...

மதுர!உங்களை இப்படி அழைப்பது பிடித்திருக்கிறது:)

தமிழ்மணம் மட்டற்ற கருத்து சுதந்திரம் தந்து எவ்வளவு அரிய சேவை செய்கிறதென்கிற பொறுப்பு உணராமல் வெறுப்பு பதிவுகள் வலம் வருவது வருத்தத்தையே தருகிறது.

பதிவுகளில் மதப் பரப்புரை செய்வது போல் வளைகுடா நாடுகளில் யாரும் தீவிர பரப்புரைகள் கொள்வதில்லை.மதத்துறை என தனியாக இயங்கினாலும் அதற்கென சில பலியாடுகள் விருப்பப் பட்டே செல்லக்கூடும்.

//நீங்கள் உங்கள் மதக்கருத்தை சொல்வதாயினும் மிக பொறுமையாக எடுத்து சொல்லுங்கள். சில நபர்கள் மாற்று கருத்தை சொன்னால் அது தவறாக இருந்தாலும் அதை பொறுமையாக படித்து அவன் அதை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை அதனால் அதை மேலும் எப்படி எளிமையாக சொன்னால் நன்றாக இருக்கும் என்று கருதி விளக்கம் அவருக்கு தாருங்கள் அதைவிட்டு விட்டு அவர்கள் மீது துவேசம் கொள்ள வேண்டாம். அப்படி செய்வதால்தான் வெளியில் இருக்கும் மற்றவர்களும் தங்கள் தளத்திற்கு வந்து படித்து செல்வார்கள். அப்படியில்லையெனில் இது ஒரு சந்தைக்கடை என்று உள்ளே வராமல் சென்றுவிடுவார்கள். அதனால் நீங்கள் சொல்ல வந்த விஷயம் & நோக்கம் நிறைவேறாது என்பது எனது கருத்து.//

உங்களின் அழகான கருத்திற்கு மேலும் விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

சகோ UFO! தேவைப்படும் போது இந்த முகமூடியை அணிந்து கொண்டு வலம் வருகிறீர்கள் என நினைக்கிறேன்.எப்படியிருந்த போதிலும் அது உங்கள் சுய உரிமை:)

ஹிட் கணக்கில் நமக்கு நம்பிக்கை இல்லீங்க!இல்லைன்னா பதிவுகளுக்கு நீண்ட பின்னூட்டங்கள் போடும் நேரத்தில் இன்னுமொரு பதிவு போட்டு தேத்தி விடலாம்:)

நான் எப்படி சிந்திக்கிறேன் என்பதை படம் பிடிக்க புதிதாய் ஏதாவது கண்டுபிடிப்பு வந்தால் நன்றாகயிருக்கும்.நேற்று முதலில் சகோ.சிராஜின் பதிவையும் பின்னூட்டங்களையுமே வாசித்தேன்.பின் சகோ.கந்தசாமியும் கீழே உட்கார்ந்து கொண்டிருந்ததால் அவரும் என்ன சொல்கிறாரென்று பார்ப்போமே என்று அங்கும் சென்றேன்.அவரது பதிவு தரமாகவே இருந்தாலும் பின்னூட்டங்கள் ஒரு மாதிரியாக இருந்தன.எனவே அங்கேயே எனது கருத்தை பதிவு செய்யலாமென்றுதான் நினைத்தேன்.ஆனால் நான் அவ்வப்போது ஈழத்தமிழர்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்துவதால் அங்கே எனது கருத்தை பதிவு செய்வது சரியாக இருக்காது என்பதால் சகோ.சிராஜின் பதிவில் பின்னூட்டம் தட்டச்சிக் கொண்டே வந்தேன்.பார்த்தால் பின்னூட்டம் நீண்டு விட்டது.நான் பல நேரங்களில் நீளமாகப் பின்னூட்டம் போடுகிறேன் என்று கூகிளிடம் பின்னூட்டத்தை வெளியிட முடியாது போ என வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளேன். எனவே பின்னூட்டக் கருத்தை பதிவாக்கி விட்டேன்.

நாகரீகத்தை கடைப்பிடியுங்கள் என்ற வரிகளை சகோ சிராஜ் நலமா என்பதில் துவங்கி சகோ.கந்தசாமி கீழே உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்ற வரிகளோடு இணைத்து வாசித்தால் மட்டுமே புரியும்.சொற்களை வெட்டி ஒட்டிப் போட்டால் சொல்ல வந்த க்ருத்தை தமிழ் பல விதங்களில் பிரதிபலிக்கும்:)

ராஜ நடராஜன் said...

சகோ.UFO!பதிவர் சார்வாகனின் கேள்விக்கான பதிலை அவரின் பின்னூட்ட மறுமொழியில் அவர் சார்பாக பதிவு செய்திருக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

மணி!நலமாக இருக்கிறீர்களா?என்ன பதிவுகளிலிருந்து வனவாசமா?இங்குமங்கும் உங்கள் பின்னூட்டங்களை மட்டும் பார்க்கிறேன்.

உங்களுக்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது.ஆனால் உங்களின் சில சொற்பதங்கள் இப்பொழுது பதிவுலகில் இஸ்லாமிய சகோதரர்களைப் புண்படுத்தும் விதமாக ரொம்ப பிரபலமாகி விட்டது.தமக்கு பிடிக்காத கருத்தை ஒரு முறை வெளிப்படுத்துவதற்கும் பலமுறை கூட்டம் கூட்டி தொடர்ந்து கொண்டிருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.இதனால் பதிவுலகம் சுத்திகரிக்கப்படுகிறதா என்றால் அதுவுமில்லை.மிஞ்சுவது என்னமோ வெறுப்புணர்வுகள் மட்டுமே.

தமது தேவை எதுவென்று அறியாமல் என்பதை நீங்கள் சுட்டிக்காட்டியிருப்பதால் இது குறித்த விளக்கம் கட்டாயம் தேவை.உங்களுக்கான கால அவகாசங்களும் இணைய தொடர்புகளையும் இஸ்லாமிய பதிவுகள் மீது காண்பிப்பதை விட வேறு தளங்களுக்கு முக்கியமாக ஈழத்தமிழர்கள் குறித்த விவாதங்களுக்கு உட்படுத்துவது நல்லது என்றே நினைக்கின்றேன்.

ராஜபக்சே ஒன்று பட்ட இலங்கையில் பெரும்பான்மையான சிங்களவர்களின் உரிமைகள் போக மீதி மிச்சமிருந்தால் வடகிழக்கு தமிழர்களுக்கும்,இஸ்லாமியர்களுக்கும் கொடுக்கப்படும்.அதுவும் எப்போது என்பதையும் இலங்கை அரசே நிர்ணயிக்கும் என்பதோடு LLRC யைக் கூட Home grown reconcilliation என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்.மத்தியஸ்தம் செய்கிறேன் பேர்வழியென இந்திய மத்திய அரசு 13ம் உடன்படிக்கையை நிறைவேற்று என்கிறது.புலம்பெயர் தமிழர்களோ தமிழீழம் என முழக்கமிடுகிறார்கள்.

அதிகாரத்தின் உச்சியில் சரியான காலத்தில் செயற்படாமல் ஓய்ந்த நிலையில் கலைஞர் கருணாநிதி டெசோ என்கிறார்.மே 1ம் தேதி சம்பந்தன் சிங்கக் கொடியை ரணிலுடன் உயர்த்திப் பிடிக்கிறார்.

உங்களுக்கான தேவைதான் என்ன?

அதானே!முகாரி எதற்குப் பாட வேண்டும்?நாட்கள் செல்லச் செல்ல துயரங்களும்,இனப்படுகொலையையும் காலம் மறக்கடிக்கச் செய்யும் என்ற சூத்திரத்தை அறிந்து கொண்டு இலங்கை அரசு காலம் கடத்துவதில் கவனம் செலுத்துகிறது.நமக்கு எதற்கு தொடர்ந்து ஈழ மக்கள் குறித்த சிந்தனை?மே மாதம் வந்ததா நினைவு தினம் கொண்டாடினோமா அன்றாட காரியங்களை கவனித்தோமா,போரடித்தால் இஸ்லாமிய வெறுப்பு பதிவுகள் போட்டோமா என்றில்லாமல் நமக்கெதற்கு முகாரி ராகம்?

சிங்களவர்கள் அனைவரையும் எதிரிகள் என்று நினைப்பதே ஒரு தவறான மனோபாவம்.இன்னும் சொல்லப் போனால் இதுவரையிலான போர்க்குற்றங்களின் உண்மைகளை அரசு கட்டுப்பாட்டுக்கும் அப்பால் வெளிக்கொண்டு வந்ததில் சிங்களவர்கள் சிலரின் பங்கும் உண்டு.கருத்துக்களை நீங்களும் நானும் சொல்லக்கூடும்.காணொளிகளை வெளிக்கொண்டு வந்தது யார்?

உங்களின் கேள்விக்கான பதில் நீளுவதால் அடுத்து தொடர்கிறேன்.

ராஜ நடராஜன் said...

இலஙகையில் தமிழர்களுக்கு நேரிடும் நெருக்கடிகளை வெளிக்கொணர்வதும் அனுதாப்ம் தேடுவதிலும் என்ன தவறு?

போராட்டக்காரனும்,ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்த நிலையில் இப்பொழுது ஜனநாயக ரீதியில் பயணிக்கும் போராட்டத்தை வலுப்படுத்த அனுதாபம் தேடுவதில் தவறேயில்லை.

புலிகள் தமது உயிரையும் பணயம் வைத்து தமது வாழ்வின் அர்த்தத்தை பதிவு செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்.இதுவரையிலும் ஐ.நா மனித உரிமைக் கூட்டம் வரையிலாவது ஈழப்பிரச்சினையைக் கொண்டு சென்றதில் புலம் பெயர் தமிழர்களின் பங்கும் அவர்களின் கனவான தமிழீழம் இருக்கிறது. தமிழீழம் பிறக்கும் என்று நடக்காத ஒன்றுபற்றி கற்பனையாக எழுதிக்கொண்டு இருப்பதாக நீங்கள் கருதினால் நாடற்ற புலம் பெயர்ந்தவர்களாகவும்,ஒன்று பட்ட இலங்கையில் கொடுப்பதை வாங்கிக்கொண்டு வாழ்வை நகர்த்துவதையும் நீங்கள் ஏற்றுக் கொண்டதாகவும் அர்த்தம்.

எந்த தீர்வையும் இலங்கை அரசு தராது என்றும் கூறுகிறீர்கள்.பின் தமிழீழம் கற்பனையென்ற தொனியான கேள்வியையும் எழுப்புகிறீர்கள்.எந்த தீர்வு சரியானது என்ற பரிந்துரையை ஈழத்து தமிழர்களும்,புலம் பெயர் தமிழர்களும் தீர்மானியுங்கள்.கருணா,பிள்ளையான்,டக்ளஸ்,ஆனந்த சங்கரி போன்றோரின் இலங்கை அரசு சார்ந்த தீர்வாக இருந்தாலும்,சிங்கள பேரினவாதத்திற்கும்,இனப்படுகொலைகளுக்கும் அப்பால் தமிழீழமா என்பதையும் மக்கள் தீர்ப்புக்கள் உறுதி செய்யட்டும்.

ஈழத்தமிழனுக்கென்று ஏதாவது ஒரு விதத்தில் தீர்வு ஏற்படாத வரையில் ஈழத்தமிழன் பாவப்பட்டவனே!முள்ளிவாய்க்கால் நிகழ்வல்ல...அது ஒரு ஒரு வரலாற்றுக் கறை.

அனுதாபம் எரிச்சலாக இருக்கிறதென்பதற்காக இஸ்லாமிய துவேசங்களை வெளிப்படுத்துவீர்களாக்கும்?எதைப் பேசுவது எதைப் பேசக்கூடாதென்கிற வரையறைகள் கூட தெரியாமல்,அகதிகள் பற்றிய அக்கறை இருந்தும் அவற்றை சரியாக வெளிப்படுத்த தெரியாமலே இருக்கிறீர்கள்.

சரி!இஸ்லாமிய்த்தின் மீதான கருத்துக்களை கருத்துரிமை என்ற பெயரில் வெளிப்படுத்துகிறீர்கள்.மதம் என்ற ஒன்றைக் கடக்காமல் மதவாதிகளும் குழுவாதம் பேசுகிறார்கள்.அவர்களால் உங்களை அவர்கள் மார்க்கத்திற்கு இழுக்க முடிந்ததா அல்லது அவர்களின் பிற்போக்குத் தனங்களைக் களைவதற்கு உங்கள் பதிவுகள் மாற்றங்களைத் தந்தனவா?ஒருவர் மீது மற்றவர் வெறுப்பை உமிழ்வது மட்டுமே மிச்சம்.

ராஜ நடராஜன் said...

UFO!தொடர் பின்னூட்டத்தில் உங்களது இன்னுமொரு கருத்தைக் கவனிக்க தவறி விட்டேன்.

செய்வதென்னவோ மூளைச் சலவை!அதற்கு இனிப்பு முலாம் பூசிய வார்த்தைகள் யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகமா:)

வீழ்க உங்கள் மூளைச் சலவை தொண்டு.

ஹேமா said...

நடா.....சுகம்தானே.ஓட்டு மட்டுமே இப்போதைக்கு !

மாத்தியோசி - மணி said...

அவர்களால் உங்களை அவர்கள் மார்க்கத்திற்கு இழுக்க முடிந்ததா அல்லது அவர்களின் பிற்போக்குத் தனங்களைக் களைவதற்கு உங்கள் பதிவுகள் மாற்றங்களைத் தந்தனவா?ஒருவர் மீது மற்றவர் வெறுப்பை உமிழ்வது மட்டுமே மிச்சம்.///////

இது உண்மைதான் நடா!

முதலில் எமது ஈழப்பிரச்சனை குறித்த உங்கள் புரிதல்கள் யாவும் சரியானவையே! எமது பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு அதிகம் இருக்கிறது!

ஆனால்,இஸ்லாமியர்களோடு நாம் மோதுவது வீம்புக்கு அல்ல! அவர்களை எந்தவிதத்திலும் திருத்தவோ மாற்றவோ எம்மால் முடியவே முடியாது! அது எமது நோக்கமும் அல்ல!

அப்படியாயின் எதற்காக வெறுப்பை அள்ளிக் கொட்டுகிறீர்கள் எனும் கேள்விக்கு விடை மிகவும் சிம்பிளானது!

அவர்கள் எப்போதுமே எமக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார்கள்! அண்மையில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப் பட்ட போது, இலங்கையில் சிங்களவர்களை விடவும் அதிகம் டென்சன் ஆகியவர்கள் முஸ்லிம்கள் தான்!

நாடு முழுக்க முஸ்லிம்கள் ஐ நா வுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதொன்றும் ரகசியம் அல்ல! இது குறித்து பதிவுலகில் இருந்த முஸ்லிம்களும் கள்ள மௌனம் சாதித்ததை நீங்கள் அறிவீர்கள்!

மேலும் இன்னொருவர் எம்மைப் பார்த்து மிகவும் ஏளனமாக “ உங்களுக்கு வேறு வழியில்லை! சிங்களம் படியுங்கள்! சிங்களவனோடு கை கோர்த்து செயல்படுங்கள்” என்று அறிவுரை சொன்னதையும் அவதானித்திருப்பிர்கள்!

மேலும் சனல் 4 காண்பிக்காத புலிகளின் போர்க்குற்றங்கள் என்ற பெயரில் வலையுலகம் முழுக்க லிங்குகள் உலாவியதையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்!

ஆக எப்படி யோசிச்சாலும் ஈழத்தமிழர்களாகிய எம்மீது இஸ்லாமியர்கள் வெறுப்பையே உமிழ்ந்து வருவதை அவதானிக்கலாம்!

இப்படியெல்லாம் அவர்கள் செய்வதைப் பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்கச் சொல்லி எம்மைக் கேட்டுக்கொள்ள மாட்டீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் நடா!

அதனால் தான் வெறுப்புணர்வு வளர்கிறது என்று தெரிந்தும், சில விஷயங்களில் ஈடுபட நேர்கிறது!

சில சமயங்களில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே யாதொரு வேறுபாட்டையும் நம்மால் அவதானிக்க முடிவதில்லை!

ஆயினும் எமக்கும் அவர்களுக்கும் இடையே மோதல்கள் வருவது எவ்விதத்திலும் ஆரோக்கியம் இல்லை என்பதை நாம் உணர்வதோடு, அவர்களோடு பேசிப் பயனில்லை என்பதை நீங்கள் உணர்வதால் தான் நீங்கள் எம்மோடு பேசுகிறிர்கள் என்பதை உணர்ந்தே இருக்கிறோம்!

பார்க்கலாம் நடா! நாம் அடம்பிடிக்கப் போவதில்லை :-)))

ராஜ நடராஜன் said...

மணி!மதத்திற்கு எதிரான விவாதங்களுக்கு நான் எதிரானவனல்ல.ஆக்கபூர்வமாகவும்,தர்க்க ரீதியாகவும் கூட மாற்றுக்கருத்துக்களை முன் வைக்கலாம்.

இதோ! நீங்கள் மேலே இட்ட பின்னூட்டம் மாதிரி ஏன் நாகரீகத்தைக் கடைப்பிடிக்க மாட்டேன் என்கிறீர்கள் என்பதே கேள்வி.அதன் காரணம் கொண்டு நீங்கள் அனைவரும் சொல்ல வரும் கருத்தின் வலு கூட இழந்து விடுகிறது.மதம் கடந்து மொழியால் இஸ்லாமியர்களை ஏன் உங்களோடு இணைக்க இயலாமல் போகிறது என்பது பெரும் கேள்வி.எந்த சூழலாக இருந்தாலும்,எவ்வளவு நியாயமான காரணமாக இருந்த போதிலும் மசூதிப் படுகொலைகள் ஈழப்போராட்டத்தின் இன்னுமொரு முட்டுக்கட்டையென்றே சொல்வேன்.இதில் பல போராளிக்குழுக்களின் தவறுகள் இருந்த போதும் மொத்த பழியும் விடுதலைப் புலிகளின் மீதே சுமத்துப்படுவது இன்னுமொரு அவலம்.நேற்றைய கருணா,பிள்ளையான்,டக்ளஸ் பற்றியெல்லாம் எவருமே விமர்சனம் செய்வதில்லை.இவர்கள் இன்று புனிதவானாகி விட்டார்கள்.

மக்களின் போராட்டம்,பதிவுலக கருத்துக்கும் அப்பால் இந்தியா,இலங்கை என்ற நிலையைத் தாண்டி உலக அரங்கில் ஐ.நா வாக்கெடுப்பு என்று ஒருவேளை சூழல் உருவாகினால் இஸ்லாமிய நாடுகளின் ஆதரவு அல்லது எதிர் ஓட்டு என்ற நிலை உருவாகும்.தம்புள்ள நிகழ்வு போன்றவற்றால் இஸ்லாமிய ஆதரவை தமிழர்களுக்கான குரலாக மாற்றுவதும் முந்தைய நிலைப்பாட்டை மாற்றி அமைப்பதும் மிகவும் முக்கியம்.சில மத அடிப்படைவாதிகளை தவிர்த்து முள்ளிவாய்க்காலின் துயரத்தில் பங்கு கொள்ளும் இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள் என்றே நம்புகிறேன்.அப்படியில்லா விட்டாலும் கூட பரவாயில்லை.இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை உமிழ்வதின் மூலம் அவர்களை அறியாமலே அவர்கள் சிங்கள அடிப்படைவாதிகளுக்கு உறுதுணையாகும் சூழலை ஏன் நீங்கள் உருவாக்க வேண்டும்?ஐ.நா வாக்கெடுப்பில் இஸ்லாமிய நாடுகளின் ஓட்டு அப்படியே விழுந்தது.

என்னைப் பொறுத்த வரையில் இஸ்லாமிய பதிவுகள் மகுடம் ஏறுவது ஒரு பிரச்சினையே இல்லை.ஆனால் பலரும் தமது எழுத்தின் அங்கீகாரத்துக்காக வேண்டியும் கூட எழுதுவதால் மகுடம் போன்ற் பிரச்சினைகள் பலருக்கு முக்கியமான ஒன்றுதான்.தமிழ்மணம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.பார்க்கலாம் மதப்பதிவுகள் எப்படி வலம் வருகின்றன என.உங்கள் அனைவரிடமும் நான் வேண்டுவது ஒன்றேதான்.மதம் தர்க்கம் செய்யுங்கள்.தரம் தாழ்ந்து விடவேண்டாம் என்பதுதான்.அதுவே இஸ்லாமிய சகோதரர்களை புண்படுத்துகிறது என்பதோடு பார்வையாளர்களையும் உங்கள் அனைவரின் பின்னூட்ட நடை முகம் சுழிக்க வைக்கிறது என்பதை உணருங்கள்.நன்றி.

ராஜ நடராஜன் said...

ஹேமா!நலமே!ஈழத்தமிழர்கள் குறித்த விமர்சனங்களை முன் வைப்பது தமது குறிக்கோள் நோக்கி பயணிக்க வேண்டுமென்பதற்காகவே.மேலே மறுமொழியில் ஈழப்பிரச்சினை குறித்து பேசும் போது மக்கள் பிரச்சினை பல விதங்களில் அலைக்கழிக்கப்படுகிறதென்பது கண்கூடாக தெரிகிறது.மக்கள் சுய விருப்பம் எதுவென்பதை யாரும் உணர இயலாமல் அவரவர் நிலைப்பாட்டையே திணிக்க முயற்சி செய்கிறார்கள்.சில சமயம் தமிழீழம் சாத்தியமாகத் தோன்றுவது அடுத்த கணம் வெறும் கனவே என்ற விமர்சனத்துக்கும் கூட தள்ளப்பட்டு விடுகிறது.பல குரல்கள் பல விதங்களில் ஒலிக்கின்றன.தீர்வு மட்டும் இன்னும் எட்டப்பட வில்லை.ஈழத்தமிழர்கள் பகடைக்காயாக இங்குமங்கும் அலையும் போது இஸ்லாமிய வெறுப்பு தேவையான ஒன்றுதானா?

ஹேமா said...

நடா....புரிதலுக்கு நன்றி.நீங்கள் கேட்டதும் மணி சொன்ன பதிலும் என் மனதில் உள்ளதோடு ஒத்துப்போகிறது.நான் எதுவும் இனி சொல்லத் தேவையில்லை.இது பலரின் கேள்வியும் பதிலுமாக இருக்கும்.தெளிவும் தேவைதானே.நல்லது நடா தொடருங்கள்.எங்களின் மீதான அக்கறைக்கு நன்றி கைகள் பற்றிய நெகிழ்வோடு !

வவ்வால் said...

ராஜ்,

ஈழம், மதம் இரண்டு குறித்தும் நிறைய பேசியாகிவிட்டப்படியால் எதுவும் சொல்லவில்லை, அனைவரது பதிவிலும் எனது கருத்துகளை தயக்கமின்றி பதிவும் செய்துள்ளேன்(ரெண்டுப்பக்கமும் மொத்து கிடைக்கும்), ஆனால் புரிதல் என்பது தானாக வந்தால் தான் உண்டு...

ஒட்டகத்தை தண்ணீர் தொட்டிக்கு ஓட்டி செல்ல தான் இயலும்,தண்ணீர் குடிப்பதும்,குடிக்காததும் ஒட்டகத்தின் மனதை பொறுத்து, கட்டாயமாக தண்ணீர் குடிக்க வைக்க இயலாது.

எது எப்படியோ நாம் ஒட்டகம் மேய்ப்பதை விட கூடாது இல்லையா எனவே அடாது வெயில் /மழை அடிச்சாலும் விடாது மேய்ப்போம் :-))

ராஜ நடராஜன் said...

ஹேமா!இந்த பதிவும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டதாக அறிவித்திருக்கிறார்கள்.கான் என்ற பெயரைக் கண்டவுடன் அமெரிக்க விமான தளத்தில் ஷாருக்கானை நிறுத்துன மாதிரி இருக்குதே:)

தமிழ்மணம் அறிவிப்பு செய்வதற்கும் முன்பே சண்டை போடாதீங்கப்பான்னுதானே நானும் சொன்னேன்!

எப்படியோ உங்கள் இணைய நட்பிற்கும் நெகிழ்விற்கும் நன்றி.

ராஜ நடராஜன் said...

வவ்!அடாது வெயில்/மழையோடு பாலைவன தூசிப்புயலையும் சேர்த்துகிட்டே ஒட்டகம் மேய்க்கலாமென்று பார்த்தால் தமிழ்மணம் எனக்கும் சேர்த்து வச்சிட்டாங்களே ஆப்பு:)

தமிழ்மணத்தில் இரண்டு ஒட்டகங்கள்தான் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன.இப்பொழுது மத ஒட்டகம் நொண்டியாகிப் போனதே:)அவ்வ்வ்வ்வ்வ்!

எனக்கு தடா விதித்தாலும் தமிழ்மணம் புது மாற்றங்களை கொண்டு வருவதை வரவேற்கிறேன்.

வவ்வால் said...

ராஜ்,

ரெண்டு பக்கமும் மொத்துன்னு சொன்னேன்ல அதுல இதுவும் ஒன்று :-))