Followers

Tuesday, May 22, 2012

பின்னூட்டங்கள் கூட இல்லாமல் சூடா வடையா:)

தமிழ்மணமே!இது நியாயமா!இது அடுக்குமா! நேரமிருந்தால் என் கடைல வந்து ஒரு வடை சாப்பிட்டு போங்களேன். நானும் வர்றவங்க நேர விரயம்ன்னு ஓடுமளவுக்கு மாங்கு மாங்குன்னு ஊர் மொக்கையல்லாம் சொல்றேன். எனக்கு ஒரு சூடான நாற்காலி கூட வேண்டாம்.கொஞ்சம் நேரம் கூட்டத்தோடு கூட்டமா நடுத்துண்டு கூட வேண்டாம்.வலது பக்கம் ஒண்ணு ரெண்டு தேறும் பின்னூட்ட ரசிகர்கள் கூட வேண்டாம்.

ஆனால் பேருக்காவது ஒரு மைக் டெஸ்டிங்,நமக்கு நாமே திட்ட பின்னூட்டம் கூட இல்லாமல் ஒரு பதிவு சுடு சுடு சூடான தோசை சாப்பிடுவது சரியா! மீண்டும் ஒரு முறை அவ்வ்வ்வ்வ்வ்...

என்னை பஸ்ல கூப்பிட்டாக
பேஸ்புக்குல விசிலடிச்சாக
டிவிட்டர்ல கூவ சொன்னாக
இமெயிலுல தூது விட்டாக
அட எல்லாம் உன்னால
வேண்டாமுன்னு சொன்னேன்
பின்னூட்டத்தால!

டிஸ்கி: இதுக்குப் பேர்தான் கிள்ளி விடறது:)

47 comments:

துளசி கோபால் said...

சூடா ஒரு மசால்வடை பார்ஸேல்............

Amudhavan said...

எனக்கு சரியாய்ப்புரியலை. என்னமோ நடக்குதுன்னு வேடிக்கைப் பார்க்கவேண்டியதுதான்.

ராஜ நடராஜன் said...

டீச்சர்!நலமா இருக்கீங்களா!நேற்றைய சல்லிக்காசுகள் இன்னும் என் கண்ணுக்குள்ளேயே உருளுதுங்க டீச்சர்:)

இருபது டாலருக்கு வாங்கி கையை காசு கடிச்சா இபேயில 20 இலட்சத்துக்கு விற்கனுமின்னுதான் நான் ஆலோசனை சொல்வேன்.ஆனால் ராஜாவின் அப்பா யோகாசனத்துல மிதக்கிறதப் பார்த்ததால ஆலோசனையை கைவிட்டுடறேன்.

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்!நீங்க அடிக்கடி காணமல் போயிடறீங்க:)தொடர்ந்து சுத்திகிட்டிருந்தால் உள்குத்து உங்களுக்கே புரியும்.இதோ தப்பி தவறி பின்னூட்ட பழக்க தோசத்திலாயாவது நீங்க வந்து என்னமோ ஏதோன்னு குசலம் விசாரிக்கிறீங்க.ஒரு பின்னூட்டம் கூட காணோம் சார்.பதிவு நச்சுன்னு போய் சூடான பகுதியில் போய் உட்கார்ந்துகிட்டா நொய் நொய்ன்னு எதையாவது பின்னூட்டத்துல பினாத்துற எனக்கு எப்படியிருக்கும்:)

வவ்வால் said...

ராஜ்,

மதப்பதிவுகளை தூக்குவோம் என்றார்கள்,மகுடத்தினை நீக்குவோம் என நீக்கினார்கள், ஆனால் எல்லாம் பிரசவ வைராக்கியம் போல ஒரு சில நாட்களில் போய் மீண்டும் மதம்,மகுடம்! :-))

பல்லு இருக்கவன் பட்டாணி சாப்பிடுறான் உமக்கு ஏன் ஓய் வகுத்தெரிச்சல் , கடைய தொறந்தமா,கதைய போட்டோமா,கல்லாவ கட்டினோமானு வேலைய பார்க்கணும்யா :-))

நான் இந்த லோகாதாய விஷயங்களுக்கு வெளியில் போய் ரொம்ப நாளாச்சு, என்னோட கவலை எல்லாம் ஏன் பீர் கூலீங்கா கிடைக்க மாட்டேங்குது என்ற அளவுக்கு சுருங்கிப்போச்சு! அவங்க அவங்க கவலை அவங்களுக்கு :-))

ராஜ நடராஜன் said...

வவ்!எங்க ஆளையே காணோமேன்னு பார்த்தேன்.பல்லு இருக்கிறவங்க பட்டாணி சாப்பிட்டா எனக்கு ஆச்சேபனையே இல்ல.ஆனால் பல்லே இல்லாமல் பட்டாணிக்கு ஆசைப்படுறாங்களேன்னுதான் பல்லு கெட்டியா இருக்கும் என்னோட வருத்தம்:)

நானே இங்கே காஞ்சு போய் கிடக்கிறேன்.பீரு மோருன்னுட்டு.அவங்க அவங்க கவலை அவங்களுக்கு:)

ஒட்ட வைக்காமலே ஏதாவது ஒட்டி வச்சிருக்கீங்களா இல்ல இன்னும் செவப்பு சிங்காரிலதான் பதிவு நிற்குதா?

உங்களுக்கு எதுக்கு சிரமம்,நானே அங்கே வந்துடறேனே.

ராஜ நடராஜன் said...

வவ்!சந்தானத்துக்கு அப்பால நிறையவே கதைக்கிறீங்க போல.

கடை இப்ப லஞ்ச் பிரேக்.வவ்வாலுடன் கதைச்சுட்டு அப்புறமா வாரேன்.

அது ஒரு கனாக் காலம் said...

பின்னோட்டம் தானே ...இதோ சம்மந்தா சம்மந்தம் இல்லாம ஒன்னு

சத்யமேவ ஜெயதே -

நானும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தேன் – கண்ணில் நீர் வராமல் இதை பார்க்க முடியாது – இது டிவி தான் / கணணி தான் என்று நன்கு தெரிந்தும் அழாமல் இருக்க முடியவில்லை – அதற்காகவே அவருக்கு வாழ்த்துக்கள்.

இதை பற்றி நண்பரிடம் பேசிய பொழுது – வேறு ஒரு பரிணாமம் அறிந்தேன்… அதாவது இது வரை நடந்த உலகப்போர் , பேரழிவு ..போன்றவற்றில் நிறைய ஆண்கள் அழிந்தாலும் , இயற்க்கை தானாகவே அந்த விகிதாசாரத்தை சமன் படுத்தி விடும் என்று வரலாறு சொல்கிறது . ( ஒரு நீண்ட கால கட்டத்தில் ) …

அடுத்த நிகழ்ச்சி சிறார் பாலியல் பற்றியது… கொஞ்சம் நிறைய பயபடுத்தி விட்டாரோ என்று தோன்றியது, இது போன்ற தவறுகள் இப்போ கொஞ்சம் கூடி விட்டாலும், அவர் கூறுவது போல் 50% அதாவது ஒன்றில் இரண்டு குழந்தை பாதிப்பு உண்டாகும் என்பது கொஞ்சம் கூடுதல் தான், ..ஆனால் அவர் குழந்தைகளுடன் நடத்திய அந்த workshop அருமை

மூன்றாவது நிகழ்ச்சி தான் கொஞ்சம் நெருடல் … பெண்களை போலவே இப்போது 498 a மூலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் ஏராளம். எனக்கு தெரிந்து கேரளாவில் முஸ்லிம் சமூகத்தில் இந்த கொடுமை ( வரதட்சனை ) நிறைய உண்டு – அதனால் அவர்கள் மாப்பிளை கிடைக்காமல் வாணியம் பாடி / வேலூர் போன்ற ஊர்களில் உள்ள வேலை ( விலை) வெட்டி இல்லாத தமிழ் பசங்களுக்கு கட்டி கொடுத்து அதனால் வரும் கொடுமை இத்தியாதி …. நான் தமிழ் வார இதழ்களில் வாசித்ததுண்டு… ஆனால் நிகழ்ச்சியில் , இது போன்ற கொடுமை முஸ்லிம் சமூகத்தில் இல்லை அல்லது வெகுவாக குறைந்து விட்டது போன்ற ஒரு தோற்றத்தை உண்டாக்கினார்.

எனக்கு தெரிந்து இது ப்ராமின சமுதாயத்தில் வெகுவாக குறைவு. இருந்தாலும் போக வேண்டிய பயணம் வெகு தூரம் ( காஞ்சி பெரியவர் – பட்டு புடவை கல்யாணத்தில் உண்டென்றால் மடத்தில் பத்திரிக்கை வைக்க கூடாது என்று சொன்னதாக ஒரு தகவல் உண்டு …அதெல்லாம் அந்த காலம் )

பழமைபேசி said...

என்ன பிரச்சினை? என்ன பிரச்சினை??

Unknown said...

எதுவும் புரியவில்லை! ஆனால்
ஏதோ இருப்பது புரிகிறது.

சா இராமாநுசம்

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

என்ன பிரச்னை அப்படீன்னு ஓபனா பேசினா நானும் கலந்துரையாடலில் கலந்துக்குவேன்ல :-(. என்ன வவ்வால் நான் சொலறது சரிதானே!

//பல்லு இருக்கவன் பட்டாணி சாப்பிடுறான் உமக்கு ஏன் ஓய் வகுத்தெரிச்சல் , கடைய தொறந்தமா,கதைய போட்டோமா,கல்லாவ கட்டினோமானு வேலைய பார்க்கணும்யா :-))//

வவ்வால் போட்ட பின்னூட்டங்களிலேயே நான் ரொம்பவும் ரசிச்சு படிப்ப பின்னூட்டம் இதுதான்.

//என்னோட கவலை எல்லாம் ஏன் பீர் கூலீங்கா கிடைக்க மாட்டேங்குது என்ற அளவுக்கு சுருங்கிப்போச்சு! அவங்க அவங்க கவலை அவங்களுக்கு :-))//

ஹலால் பீர் சவுதியில சும்மா ஜில்லுன்னு கிடைக்கும். பார்சல் பண்ணட்டுமா? :-).

வருண் said...

***ஆனால் பேருக்காவது ஒரு மைக் டெஸ்டிங்,நமக்கு நாமே திட்ட பின்னூட்டம் கூட இல்லாமல் ஒரு பதிவு சுடு சுடு சூடான தோசை சாப்பிடுவது சரியா! ****

"உனக்கு வயித்தெரிச்சல்"னு சொல்லுவாங்க!

"உன் பதிவில் அல்லது தலைப்பில் சரக்கு இல்லை! அதுக்கு நான் என்ன செய்ய?"னும் சொல்லுவாங்க!

எனக்கு மூடி மறைச்சு பேச எல்லாம் பிடிக்காது, "iamsuch&such" னு பிரபல புண்ணாக்குப் பதிவர் இருக்காரு. எந்தப்புடுங்கினா என்னக்கென்ன?

தலைப்பு எல்லாம் படுகேவலமாக, ரொம்ப கவர்ச்சியாத்தான் இருக்கும். அதைவிட அவரு தளத்தில் காசு சம்பாரிக்க நெறையா கமர்ஷியலும் எரிச்சலைக்கிளப்பும். ஆனால் இதுவரை ஒரு பின்னூட்டம் (அர்த்தமுள்ளதாக)ப் பார்க்கவில்லை!!! சண்டையோ, கெட்டவார்த்தை திட்டலோ எதுவா இருக்கட்டும், ஒரு பின்னூட்டம்கூட இருக்காது!!!

உளறலோ, மொக்கையோ, சரக்கு இல்லையோ இருக்கோ, மதமோ, சாதியோ, பதிவில் ஒருவர் தன் கருத்தை சொல்லனும், அதை விவாதிக்கனும் என்பதுதான் தமிழ்மணத்தின் ஆவலாயிருக்கும், இருக்கனும்.

சும்மா, இந்த நடிகை பாவாடையை இவன் தூக்கினான், இவனை இவன் கடுப்பை கிளப்பினான், அந்தமாரிப் படத்துல இவன் ஆத்தாளுக்கு நடிக்க ஆசையா இருக்குனு பொறுக்கி ஏழுமலையான் எழுதறதையெல்லாம் தமிழ்மணம் குப்பையில் போடனும்!

ஆமா, கேபிள் சங்கருக்கு இங்கே அரிக்குதாம்னு ஒரு பதிவுகூட வந்தது. எங்கேயிருந்து வருதுகள்னு தெரியலை இதுகஎல்லாம்!

Anonymous said...

"பின்னூட்டங்கள் கூட இல்லாமல் சூடா வடையா:)"

யார தாக்குரீங்கனு தெரியுது ... அப்படி அவுகள தாக்கும் போது விவேகமா தாக்கனும்[ விவாதம் செய்யணும் ] நாகரிமான வார்த்தையில்... இல்லாட்டி உங்களுக்கு பின்நூட்டம் வராது... அப்புறம் உங்க கடையும் வடையும் சூடா ஆகாது ... எப்படி !!!

நாகரிகமான வார்த்தையையும் , அறிவுப்பூர்வமான யோசித்தால் உங்க வடை நல்ல்லா சூடாகும் ...


அப்ப நீங்களும் வேகமா famous தான் ...

Anonymous said...

//"பின்னூட்டங்கள் கூட இல்லாமல் சூடா வடையா:)"//

இந்த பதிவின் தலைப்பு யாருக்காம் ???சொன்னா நல்லா இருக்கும் ...

ஆரம்பிச்சாச்சா ...!!!

ராஜ நடராஜன் said...

அது ஒரு கனாக்காலம்!நலமாக இருக்கிறீர்களா?எங்கே போயிட்டீங்க.முன்னாடி துபாய் நண்பர்களுக்கு வடை கொடுத்த போது பதிவுல பார்த்தது.எத்தனை வருசமாச்சு.இப்ப அப்ப ஏதாவது பதிவுகளில் சொல்லலாமே!

சத்யமேவ ஜெயதே பற்றி சில வாரங்களுக்கு முன்பு சூடான பகுதியில் அறிந்தேன்.அமீர்கான் அப்பொழுது ஆவலை தூண்டினார்.நான் ஆங்கில படங்கள் பக்கம் திரும்பி விட்டதால் சத்யெமேவ ஜெயதே உட்பட பல இந்திய நிகழ்ச்சிகளை தவறவிட்டு விடுகிறேன்.உங்கள் பின்னூட்டத்துக்காக வேண்டியும் அமீரின் வித்தியாசமான முயற்சிக்காக வேண்டியும் காணொளியை கண்டு விட்டு பின்பு இந்த பதிவில் எனது கருத்தை உங்கள் பின்னூட்டத்துடன் ஒப்பிட்டு வெளியிடுகிறேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

காளமேக புலவரோட பேராண்டி பழமை!விமானத்துல உட்காரும் நேரத்துல கூட ஒரு பதிவு தேத்திகிட்டிருந்தீங்க.இப்ப தேத்தண்ணி குடிக்கிற நேரத்துக்கு கூட ஒரு பதிவும் போட மாட்டீங்கிறீங்களே!

வருவோர் வர போவோர் போக நான் மட்டும் ஆமை நட வேகத்தில்:)

ராஜ நடராஜன் said...

புலவரய்யா!யூத் பதிவர் கூட்டம் மகிழ்வாகப் போனதுக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

இந்தப் பதிவே சும்மா நகைச்சுவையாகத்தான் பொதுவாக சொல்ல நினைத்தேன்.ஆனால் பின்னூட்டங்கள் தொடர்வதால் கீழே மெல்ல பகிர்கிறேன்.

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!இந்த பதிவே கிண்டலாக நகைச்சுவையாக பொதுவாக சொல்ல நினைத்துதான்.தனிம்னிதர்கள் யாரையும் குறிப்பாக கொண்டு அல்ல.எந்த பின்னூட்டங்களும்,பதிவின் முழுப் பொருளும் கூட இல்லாமல் தலைப்பு ஒன்றை சார்ந்து மட்டுமே ஒரு பதிவு சூடான பகுதியில் போக முடியுமா?நீங்கள் கோவி.கண்ணனிடம் துவக்க காலம் முதற்கொண்டு நேரெதிர் விவாதம் செய்பவர் என்பதால் உங்கள் இருவரின் பதிவுகள் பற்றிய புரிதல் எனக்குண்டு.ஆனால் இந்த பதிவின் பொருளில் உங்களை நான் எந்த விதத்திலும் உட்படுத்தக் கூட இல்லை.காரணம் சூடான பகுதியில் உங்கள் பதிவுகள் வந்தாலும் வெட்டியோ அல்லது ஒட்டியோ பின்னூட்டங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.நான் பொதுவாக பதிவுகள் மேய்வதால் எந்த ஒரு பின்னூட்ட அடிப்படையும் இல்லாமல் பதிவுகள் எப்படி சூடான இடத்தில் இடம்பிடிக்கின்றன என்று எழுந்த பொதுவான கருத்து கிண்டலே இந்த பதிவு.

நேற்று நான் முதல் அறிமுகமாக குமரன் என்பவரின் ரயில்பயணங்கள் பற்றிய அனுபவங்களை நகைச்சுவையுடன் காணநேரிட்டது.நாளைக்கோ அல்லது இன்னும் பல நாட்கள் கழித்து ரயில் பயணம் செய்தாலும் கூட மெதுவாக அசைபோட்டு நகைக்கும்படியான அபூர்வமான எழுத்து நடை.சமீப காலமாகவே அவர் துவங்குவதால் மேலிருந்து கீழாக அவர் பதிவுகள் மொத்தமாக மேய்ந்து விட்டேன்.அதன் தாக்கமாக கூட இருக்கலாம் இந்த பதிவு.

மற்றபடி சூடான இருக்கை பொன்றவற்றில் பதிவில் அங்கலாய்ப்பது போல் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும் பக்கத்து இலைக்கு பாயாசம் ஊத்துங்கன்னு சொல்லி அப்படியே இங்கேயும் கொஞ்சம் ஊத்துங்கன்னு சொல்ற மாதிரி தப்பித்தவறி எப்பவாவது அத்திபூத்தாற் போல சூடான இடுகைக்குள் நுழைந்து விட்டாலும் மகிழ்ச்சிதான்:)

ராஜ நடராஜன் said...

வ்ருண்!உங்க நண்பர் வவ்வால் கடைக்குப் போய் மருத்துவம்,பொருளாதாரம்,அரசியல் என்று மூன்று விதமான பதிவுகளை மேய்ந்து விட்டு சில பின்னூட்டங்களும் சொல்லி விட்டு வந்தால் அது ஒரு கனாக்காலம் மற்றும் உங்கள் பின்னூட்டங்களை மேய்ந்ததில் எனக்கு இரு வேறு விதமான உணர்வுகள்.காரணம் நான் இந்த பதிவை நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்த போதும் கூட கருத்து பகிர்வு சீரியசான இரண்டு மனநிலையை உருவாக்கியது.

நீங்க யாரைப்பற்றி நெற்றிக்கண் திறக்கிறீர்கள் என்பது கூட எனக்கு மெய்யாலுமே புரியவில்லை.காரணம் நான் எப்பொழுதும் முகப்பக்க பதிவுகள் மேய்வதோடு ஈழம் பகுதியை பெரும்பாலும் மேய்வது வழக்கம்.இப்ப அப்ப சினிமா பக்கம் போவதுண்டு என்பதால் திரைப்படம் குறித்து யார் என்ன சொல்கிறார்கள் என்பதில் நான் அறிவு சூன்யமே.

கேபிளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டதால் அவரது பதிவுகளுக்கு நான் மிக மிக அரிதாகவே கருத்து வெளியிட்டிருப்பேன்.அதற்கான முதலாவது காரணம் சினிமா.இரண்டாவது காரணம் அவர் சொல்லும் சாப்பாட்டுக் கடை.அவருக்கென்ன பதிவு போட்டு விட்டு கம்பி நீட்டி விடுவார்.சாப்பாட்டையெல்லாம் படிச்சாலும் கூட ருசிக்கனுமென்று நினைப்பவன்.சில சமயம் சமையல் பதிவுகள் படித்து விட்டு பின்னூட்ட்டம் போடுவதோடு சமையல் பாத்திரங்களோடும்,செய்முறையோடும் கூட சண்டை போடுகிற ஆள் நான்.முடியாதபட்சத்துக்கு என் மனைவியோட கூட சண்டை பிடிப்பவன்:)எனவே கேபிள் சாப்பாட்டுக்கடையை காட்டி விட்டுட்டு நாக்குல எச்சில் ஊற வைப்பதை விரும்பாமல் அவரது சாப்பாட்டுக்கடைக்கும் கூட நான் போவதேயில்லை.

கதாகாலட்சேபம் செய்ற ஆளையெல்லாம் பதிவுலகில் விட்டா இப்படித்தான் ஏதாவது லொட லொட என்பதால் இத்தோடு சொல்லிகிட்டு.....

கோபம் தணிக!

ராஜ நடராஜன் said...

வழிப்போக்கன்!பின்னூட்டம் பக்கம் குறிஞ்சி பூத்தமாதிரிதான் வருவீகளாக்கும்:)ஆனால் உங்க பெயர் எனக்கு பரிட்சையமான ஒன்றாயிற்றே!

சீரியசா சொல்வதை சிரிக்காமல் கூட போய்விடுவதும் சிரிப்பானைப் போட்டும் சீரியசான விவாதமாக பின்னூட்ட தளம் போவதும் முரண்நகை.

அதென்ன ஆரம்பிச்சாச்சா!நாமெல்லாம் சண்டைய விலக்குற பார்ட்டியாக்கும்.உங்களுக்கு நம்பிக்கையில்லைன்னா மேலே பின்னூட்டத்தில் குறிப்பிட்ட புது அறிமுகம் குமரன் அவர்களின் ரயில் பிரயாணத்தில் சட்னிக்கும் சட்டைக்கும் எப்படி சண்டை வந்தது.நாட்டாமை நிலைமை என்னாச்சு பார்த்துட்டு வாங்க.மனுசன் அவர் பாட்டுக்கு பன்னீர் சோடா குடிச்சிட்டு ஒரு பின்னூட்டம் கூட போடாமல் போய்விட்டார்.நான் எங்கே தொடுப்பு கொடுக்க.நீங்களாச்சு!கூகிளாச்சு:)

வருண் said...

***கோபம் தணிக!***

நான் கோபப்பட்டு என்ன ஆகப்போகுது? நீங்க செய்வது ஒருவகையில் தமிழ்மணத்திற்கும் தமிழுக்கும் செய்யும் உதவி. நீங்க சொல்ல வந்த விசயத்தை என் பார்வையில், என் அனுபவத்தை சொன்னேன். இது உதவியோ உபத்திரமோ எனக்குத் தெரியாது.
You are noway responsible for my actions or reactions here.

கேபிள் இது சின்ன சப்ஜக்ட்தான் இங்கே. He has been used by the blogger as well- as a "hot subject"! நான் கேபிளையோ, அவர் பதிவையோ இங்கே விமர்சிக்கவில்லை. அவரு எப்போவும் பின்னூட்ட பெட்டியை அவர் தளத்தில் திறந்துதான் வச்சிருப்பாரு. திட்டுறதுனா நேரிடையாப் போயி திட்டிப் புடுவேன். :)

சினிமா செய்திகள் சொல்றதுல கூட தப்பில்லை. அதுலயும் உங்க கருத்தை எடுத்து வைக்கனும். பலருக்கு அது தவறாக்கூடத் தோணலாம்.

ஆனால், இதுபோல் வரும் கில்லாடிகளுடைய ஒரே முயற்சி, தளத்தில் விசிட்டர்களை அதிகமாக்கி, தளத்தில் வைத்திருக்க, கமர்சியல்ல எப்படியாவது வர்றவனை கை வைக்க வைத்து சம்பாரிக்கனும் என்பது மட்டுமே! It bothers me because the CHEAP blogger' s aim is ONLY using Tamilmanam for making couple of bucks! He does not care what he shares, neither he cares what anybody about his posts! TRULY business-minded bastard he is! It is obvious.

I am sure TM is also observing this for now. May be they will let him go for a while.

Anyway, I just wanted to share this to the world, and you gave me an opportunity! Thanks. :)))

பழமைபேசி said...

அது என்னாச்சுங்ணா, இப்ப பொட்டி தூக்குற வேலை அல்லங்க... ஒரே ஊர்ல ஒரே வேலை... அதான்.... இஃகி

வவ்வால் said...

ராஜ்,

பல்லு இல்லாங்க்காட்டியும் பல் செல் set வச்சிருப்பாங்கோ, நமக்கு பல்லு மட்டும் இருக்குனு ஏன் பட்டாணி கிடைக்கலைனு கவலைப்படணும், அப்படியே கவலைப்பட்டாலும் அதப்பார்த்துட்டு போனாப்போவுதுனு நாலு பட்டாணிக்கொடுப்பாங்கன்னு மட்டும் நினைச்சுடாதிங்க, அசந்த நேரமா பார்த்து பாட்டாணி தின்னுட்டு மிச்சம் இருக்க தோளை கண்ணுல தூவி நம்மக்கிட்டேவே ஆட்டைய போடப்பாக்கும் பய புள்ளைக ,பொல்லாததுங்க!

பக்கோட இருக்கு வேணுமா,வாயிலப்போட்டு அதக்கிட்டே அடுத்த கதைய ஆரம்பிக்கலாம்.உங்க பங்காளி வேற ஆர்வமா இருக்காப்போல தெரியுது :-))

ஒரு மாசத்துக்கு எட்டிப்பார்க்காதிங்க,அப்புறம் வந்து ஒரே நாளில் நாலைஞ்சு பின்னூட்டம் போட்டு ஒரு வழிப்பண்ணுங்க, இதுல எதாவது புதுவரவு இருக்காண்ணு என்னையே கேட்கிறது,என்ன கொடுமை சாமி இது :-))

ஒரு ஸ்கூப் சொல்றேன்,இப்போ புதுசா
தீப்பிடிக்க தீப்பிடிக்க நானோ காருடானு போட்டு இருக்கேன் .

--------
சு.பி,

குத்துமதிப்பா நான் பேசலையா,அதே போல பேசுங்க,அவரா என்னனு ஓப்பன் செய்துடுவார் :-))

ஆகா ரசிக்க எல்லாம் ஆரம்பிச்சுட்டிங்களே நல்ல முன்னேற்றம் தான்.

பீர் வாங்கி தரிங்களோ இல்லையோ,சொன்னதே வயித்துள்ள ஜில்லுனு நாலு பீர வார்த்தாப்போல இருக்கு.இதுக்காகவே உங்களுக்கு பீர்க்காத்த பிரியன்னு பட்டமே கொடுக்கலாம்.

அது என்ன ஹலால் பீர், பாட்டுல்ல தொறக்கும் போது பிஸ்மி சொல்லணுமோ?

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//அது என்ன ஹலால் பீர், பாட்டுல்ல தொறக்கும் போது பிஸ்மி சொல்லணுமோ?//

ஹி..ஹி..பிஸ்மி சொல்லி தடுக்கப்பட்ட ஒரு பொருளை சாப்பிடுவதும் ஹராம்தான். நான் சொல்ல வந்தது போதை நீக்கப்பட்ட பீர். இங்கு சவுதியில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும். பீருக்குரிய அதே டேஸ்டுடன் ஆனால் போதை நீக்கப்பட்டு உங்களுக்கு தருகிறார்கள். வெயில் நேரங்களில் அவ்வப்போது நானும் குடிப்பதுண்டு. ஆல்கஹால் நீக்கப்பட்ட அந்த பீரைப் பற்றி மேலதிக விபரத்தை இந்த சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

http://en.islamtoday.net/artshow-409-3342.htm

வவ்வால் said...

சு.பி,

// நான் சொல்ல வந்தது போதை நீக்கப்பட்ட பீர். இங்கு சவுதியில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும். பீருக்குரிய அதே டேஸ்டுடன் ஆனால் போதை நீக்கப்பட்டு உங்களுக்கு தருகிறார்கள். வெயில் நேரங்களில் அவ்வப்போது நானும் குடிப்பதுண்டு. ஆல்கஹால் நீக்கப்பட்ட அந்த பீரைப் பற்றி மேலதிக விபரத்தை இந்த சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

http://en.islamtoday.net/artshow-409-3342.htm//

என்னடா எலி அம்மணமா ஓடுதேனுப்பார்த்தேன் ,நீங்க சொன்னத குடிக்கிறதுக்கு நான் நன்னாரி ஷர்பத் குடிச்சுட்டு போவேன், அப்படியாகப்பட்ட பீர் ஒரு கேஸ் கொடுத்தாக்கூட எனக்கு வேணாங்கோ, நாம பீரை நாடுவதே குளிர்ச்சியா ,அதே சமயம் கிக்கா இருக்கும்னு தான், ஆல்கஹால் நீக்கப்பட்ட பச்ச தண்ணி குடிக்க நான் என்ன பாலகனா :-))

உங்கள் தகவலுக்கு நன்றி!(என்னா ஒரு வில்லத்தனம் ம்ம்)

Avargal Unmaigal said...

துளசி கோபால் முதல்ல வந்ததுனால .. சூடா ஒரு மசால்வடை பார்ஸேல்............னு சொல்லிட்டாங்க என்னப்பபோல லேட்டா கடைசியில வரவங்க சூடா ஒரு மசால்வடை ஆர்டர் பண்ண முடியாது அதுனால எனக்கு ஒரு தயிர்வரை பார்சல்,,,,,,,,,,,,மறக்காம அனுப்பிடுங்க

வவ்வால் said...

வருண்,

// இதுபோல் வரும் கில்லாடிகளுடைய ஒரே முயற்சி, தளத்தில் விசிட்டர்களை அதிகமாக்கி, தளத்தில் வைத்திருக்க, கமர்சியல்ல எப்படியாவது வர்றவனை கை வைக்க வைத்து சம்பாரிக்கனும் என்பது மட்டுமே! It bothers me because the CHEAP blogger' s aim is ONLY using Tamilmanam for making couple of bucks! He does not care what he shares, neither he cares what anybody about his posts! !TRULY business-minded bastard he is It is obvious. //

இப்போ யாரை திட்டுறிங்க, கேபிள் சங்கரையா? அப்படி இல்லை போல சொல்லிட்டு ,"TRULY business-minded bastard he is"' னு ரொம்ப குறிப்பிட்டு சொல்கிறாப்போல சொல்லுறிங்க.

எனக்கு ஒரு சந்தேகம், உங்க வீட்டுல பொண்டாட்டி ,பிள்ளைகள், அப்பா,அம்மா இருக்கும் போதும் கோவத்தை காட்ட இதே போல சொற்களைப்பயன்படுத்துவிங்களா? அந்த தைரியம் இருக்கா? ஏன்னா நானெல்லாம் செம்மையாக பேசுவது ரொம்ப சகஜம்,ஆனால் இடம்,பொருள்,சூழல் கருதி அடக்கிப்பேன்.

சும்மா பொதுவெளியில் பீட்டர்ல நாலு கெட்ட வார்த்தை பேசினா பெரிய பருப்பு என நினைப்பாங்க என நான் பேசுவதில்லை.

அப்புறம் நான் ராஜ நடராஜன்கிட்டே தான் பேசுறேன் ஊடால ஏன் வர்ரனு கேட்டாலும் கேட்பிங்க, உங்க "மொழி" என் விழியில் படுது அதானால சொன்னேன், கண்ணுக்கு மறைவா போய் பேசினா நான் ஏன் கேட்க போறேன் :-))

ஹேமா said...

நடா....நானும் இருக்கிறன்.சூடா வடை இந்த நேரத்தில கிடைக்குமோ....ஒரு நல்ல சீனி போட்ட பிளேன் டீயும்....ப்ளீஸ் !

வருண் said...

***இப்போ யாரை திட்டுறிங்க, கேபிள் சங்கரையா? ***

இல்லை! மூடிக்கிட்டு உன் வேலையை பார்க்கிறயா இப்போ?

***எனக்கு ஒரு சந்தேகம், உங்க வீட்டுல பொண்டாட்டி ,பிள்ளைகள், அப்பா,அம்மா இருக்கும் போதும் கோவத்தை காட்ட இதே போல சொற்களைப்பயன்படுத்துவிங்களா? ***

ஆமானு சொன்னா என்ன செய்யப்போற? அது எனக்கு நான் பேசுறவங்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை. நீ ஏண்டா துள்ளுற, ஊர்ல் உள்ளவன் வீட்டுப் பிரச்சினைக்கெல்லாம்??

நீ என்ன மெண்டலாடா, வவ்வாலு? எத்தனை தடவை சொல்றது உன் வேலையைப்பாருனு?

அப்புரம், தள உரிமையாளருக்கு என் "அநாகரிக"பின்னூட்டங்களை எடுக்க/அழிக்க உரிமை இருக்கு!

நீ சும்மா மூடிக்கிட்டு இரு. புரியுதா? வந்துட்டான் அறிவுரை சொல்ல!

வருண் said...

***சும்மா பொதுவெளியில் பீட்டர்ல நாலு கெட்ட வார்த்தை பேசினா பெரிய பருப்பு என நினைப்பாங்க என நான் பேசுவதில்லை.***

நீ தமிழ்லயே நீ பெரிய பருப்புனு தான் போற இடமெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க!

இங்கேயும் பெரிய வெண்ணைனுதான் இப்போ, கேபிள் சங்கரை இழுத்து உன் "நாரதர் மாமா வேலைய" காட்டிக்கிட்டு இருக்க!

நீ பெரிய பருப்புதான். இப்போ யாரு இல்லைனு சொன்னா???

வருண் said...

***அப்படி இல்லை போல சொல்லிட்டு ,"TRULY business-minded bastard he is"' னு ரொம்ப குறிப்பிட்டு சொல்கிறாப்போல சொல்லுறிங்க.**

உனக்கு ஏதாவது கேபிள் சங்கரை பத்தி எதுவும் சொல்லனும்னா, உன் வார்த்தையில் சொல்லு. என் பின்னூட்டத்தை வச்சு இது மாதிரி "வேசித்தனம்" எல்லாம் பண்ணாதே!!

வருண் said...

***அப்புறம் நான் ராஜ நடராஜன்கிட்டே தான் பேசுறேன் ஊடால ஏன் வர்ரனு கேட்டாலும் கேட்பிங்க***,

அதெல்லாம் தேவையில்லை! இதுபோல் "வலையுலக மாமா வேலை" (யாருக்கோ உதவுறமாரி கவுத்திக்கிட்டு) எல்லாம் செய்யாமல் மூடிக்கிட்டு இருடா வவ்வாலு!

நான் ஏன் உன் வம்புக்கு வர்றேன்னா, நீ இங்கே என் பின்னூட்டத்தை வச்சி, "மாமா வேலை" பாக்கிற! அதனாலதா சொல்றேன்.

BTW, Just because you brought up my family, I am not going to do same for you! Because your filthy actions have nothing to do with your family!

வருண் said...

நடராஜன்: நீங்க என் பின்னூட்டத்தை அழிக்க உங்களுக்கு என்றுமே உரிமை இருக்கு.

நான் கேபிள் சங்கரை பத்தி பேசவில்லை, "கேபிள் சங்கர்" இங்கே ஒரு "சப்ஜெக்ட்"தான்னு சொல்லியிருக்கேன். நான் சொல்ல வந்த அந்தப் பின்னூட்டமே இல்லாமல் தளம் நடத்தும் பதிவர், கேபிள் சங்கரை யும் பயன்படுத்திக்கிறார்னும் தெளிவா சொன்னதுக்கப்புறமும் ஒரு ஈனப்பிறவி வந்து எல்லாத்தையும் குழப்பி, உளறித்தள்ளுறான். நான் அவன் வம்புக்கே போறது இல்லைனு உங்களுக்கு நல்லாவே தெரியும்! Dont blame me for this mess. Some venomous guys has started this! Not me!!

வவ்வால் said...

வருண்,

இது ராஜ் பதிவு என்பதாலேயே பொழச்சு போற, இன்னொரு தடவை இந்த கருணைக்கிடைக்காது, அதுல ஏன் "நான் தான் உன் வழிக்கே வரலியே என்னை ஏன் கலாய்க்கிறண்ணு "ஒரு அழுவாச்சி டயலாக்கு :-))

வேற எங்காவது மாட்டும் போது மிச்சம் மீதி பேசிக்கிறேன் , அது வரைக்கும் பீ ஹேப்பி!(ஒரு அடிமை சிக்கிட்டான் ,இனிமே பொழுது நல்லாப்போகும்)

ராஜ நடராஜன் said...

வருண்!உங்கள் கோபம் தணிக என்று சொல்லி விட்டு நான் அது ஒரு கனாக்காலம் சொன்ன அமீர்கானின் சத்யமேவ ஜெயதே பார்க்கப் போயிட்டேன்.இடையில் கமர்சியல் பிரேக்ன்னு பின்னூட்டம் வந்துட்டு மெல்ல பதில் சொல்லிக்கலாமென்று வவ்வால் தொடுப்பு கொடுக்க மாம்பழம் கடிச்சுகிட்டே வவ்வாலின் நானோ காருக்குப் போய்விட்டேன்.இங்கேயே நின்று பின்னூட்டம் சொல்லியிருந்தால் ஒரு வேளை உங்களுக்கும் வவ்வாலுக்குமான மோதல் தவிர்க்கப்பட்டிருக்க கூடும்.

உங்கள் சொல்லின் கடினத்துக்கு தாமதமாக நான் பதில் தருவதால் வவ்வாலுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்பது மாதிரி உங்களுக்கு தோன்றும்.இன்றல்ல முன்பும்,ஆண்டுகளுக்கு முன்பும் கூட உங்களுடைய கோபமான பின்னூட்டங்களையும் கூட உங்கள் தளத்திலேயே விமர்சனம் செய்திருக்கிறேன்.நமக்கு சிலரை பிடிக்காமல் போகலாம்.அதற்கென்று அவரை கொச்சையாக திட்டுவதற்கான உரிமை பொதுதளத்தில் யாருக்குமே கிடையாது.உங்களையும் தாழ்த்திக்கொண்டு எனது கருத்துக்களுக்கு மதிப்பளித்து பின்னூட்டமிடுபவர்களையும் என்னையும் நீங்கள் அவமதிக்கிறீர்கள்.இதற்கும் மேல் நீங்கள் யாரைப்பற்றி கூவம் தெளிக்கிறீர்கள் என்பது கூட இந்த கணம் வரை எனக்குத் தெரியவில்லை.

மேலும் நான் வவ்வாலுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நீங்கள் மறுபடியும் நினைத்துக்கொண்டால் கூட அதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை.காரணம் நீங்கள் என்னை விட பதிவுலகில் மூத்தவராக இருந்தாலும் வவ்வாலின் கருத்துக்கு முன்னால் நீங்களும்,நானும் நுனிப்புல் மேய்பவர்கள் என்றே உணர்கிறேன்.இதில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் கூட இருக்கலாம்.இருவரும் கருத்து ரீதியாக மோதிக்கொள்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.நான் முன்பே சொல்லியிருக்கிறேன்.உங்கள் கருத்துக்கு பின்னூட்டமிட வேண்டுமென்று தோன்றினால் உங்கள் தளத்திற்கு மீண்டும் வருவேன்.அதே நேரத்தில் தனிமனித தாக்குதல்கள்,கருத்துக்கு இடமில்லையென்கிற பட்சத்தில் மௌனமாக இருந்து விடுவேன்.எதிர்நிலையில் நின்றாலும் கூட தொடர்வோம் பயணத்தை.நன்றி என்ற சொல் வழக்கமாக பின்னூட்டத்தின் இறுதியில் வந்து விடுகிறது.நன்றி சொல்ல விருப்பமின்றியும் கூட சீட்டைக் கலைத்துப்போட்டதற்கு நன்றி.

Chill out! I hope this is the right phrase instead of chill down:)

ராஜ நடராஜன் said...

வருண்!நான் ஒரு பின்னூட்டத்துடனே நிறுத்திக்கொள்ளலாமென்று பார்த்தால் யாரையோ பின்னூட்டத்தில் குறிப்பிட்டு விட்டு வவ்வால் மீதான தாக்குதலையும் தொடுக்கிறீர்கள்.

My objection to you once again.

நாம் விரும்பினாலோ அல்லது விரும்பாவிட்டாலொ நாம் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக் கொள்ளாவிட்டாலும் கூட நமது எழுத்துக்கள் நமக்கான பிம்பத்தை தரும்.

யார் மென்டல் என்பதை பதிவுலக பொதுப்பார்வை முடிவு செய்யும்.

My regrets to you buddy!

ராஜ நடராஜன் said...

வவ்வால்!நானோவுக்கு வந்து விட்டதால் நானே வருணின் சொல்லாடலுக்கு பதில் சொல்லும் சந்தர்ப்பத்தை தராமல் செய்து விட்டீர்கள்.

நகைச்சுவையாய் சொல்லியது இவ்வளவு சீரியசாகும் என எதிர்பார்க்கவில்லை.பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கானதாக இதைத்தான் சொல்கிறார்களோ:)

இதுல இன்னொரு நுண்ணரசியல் என்னன்னா நம்மூர்ல அரசியல் கூட இப்படித்தான் திசை மாறிப்போகிறது.பிரச்சினை ஏதாவது ஒரு புள்ளியில் துவங்கும்.அப்புறமா பார்த்தா பிரச்சினை அதுபாட்டுக்கு ஒரு மூலையில் படுத்து தூங்கும்.இரண்டு ஊர்க்காரர்கள் அடித்துக்கொள்கிற மாதிரி போயிடுச்சு இந்த பதிவு:(

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!மன்னிக்கவும் வரிசையிலிருந்து வருணும்,வவ்வாலும் எகிறிகிட்டு வந்துட்டாங்க.

நம்மூர்ல சொல்லும் பழக்கமான ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவைன்னு சொல்கிற மாதிரி எப்பவாவது நான் பெப்சி,செவன் அப் மட்டும் அருந்துவது வழக்கம்.அதுவும்
பியர் என்பது கூட ஒவ்வொரு பொட்டிக்கடையிலேயும் இருந்தாலும் கூட நான் தொடுவதேயில்லை.

அதென்ன போதையே இல்லாமல் மால்ட் தண்ணிக்கு பியர்ன்னு பெயர் வச்சுகிட்டு:)அதுக்கு பதிலா நல்லா பிரியாணி,தயிர் வெங்காய பச்சடியோ அல்லது சாதம்,சாம்பார்,ரசம்,தயிர் இந்த வரிசையிலே மதிய உணவாக ஒரு வெட்டு வெட்டுனாலே கண்ணு ஜிவ்வுங்கும்:)இதுக்கு பயந்துகிட்டே நான் வீட்டுலருந்து ஏதாவது பொட்டலம் கட்டிகிட்டு வந்து விடுகிறேன்.இல்லாவிட்டால் இருக்கவே இருக்குது ஒரு பிலாபில் சான்ட்விச்சும் அல்மராய் சூஸ்.அதுவுமில்லாட்டி உடன் பணிபுரியும் மண்ணின் மைந்திகள் பத்தாயர் வாங்கி கொடுத்தா வாங்கி முழுங்கி விடுவேன்.

உங்கள் சொற்பதமான சவுதியில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா என்பது தெரியவில்லை.ஆனால் அல்மராய் தயாரிப்புக்கள்,எந்தக் கலப்படமும் இல்லாத பழரசங்களோடு ஒப்பிடும் போது நிச்சயம் சவுதியின் பாலாறும் தேனாறும் சொற்பதம் பாலுக்கும்,பழரசங்களுக்கும் பொருந்தும்.

நீங்க என்னோட முன்னாடியே கூத்துக்கட்டியிருந்தா பதிவுலக மக்களை உண்டு இல்லைன்னு ஒரு வழி செய்திருக்கலாம்:)

ராஜ நடராஜன் said...

மதுர!நல்ல வேளை தப்பிச்சீங்க.கடை கலவர பூமி ஆகுறதுக்குள்ளேயே பார்சலுக்கு ஆர்டர் சொல்லிட்டு வண்டியை கிளப்பிட்டீங்க:)

ராஜ நடராஜன் said...

ஹேமா!உங்க ஊர்ப்பக்கமா...இந்த சொல்லில் கூட ஒரு துக்கம் ஒளிந்து நிற்பது பின்னூட்டக் கொடுமை:(

முக்கியமாக லண்டன் பக்கமெல்லாம் எப்ப வெயிலடிக்கும் எப்ப மழை பெய்யுமென்று தெரியாத காலசூழல் மாதிரி நகைச்சுவையாக வடை சுடத்தான் நினைத்தேன்.வடை முறுக்காகி விட்டது:)

ஒருவர் இடும் பின்னூட்டம் எத்தனை விதமான மன உணர்வுகளை கொண்டு வருகிறதென்பதற்கு இந்த பதிவின் மொத்த பின்னூட்டங்களும் சாட்சி.

ராஜ நடராஜன் said...

பழமை!கூட்டத்துல நீங்க காணாமல் போயிட்டீங்க!மீண்டும் திரும்பி வரும்போது உங்க தொப்பி தெரிந்தது:)

நசரு!ஊருக்குப் போறேன்னார்.வந்தாரா திரும்பி அல்லது போன மச்சான் போனவர்தானா?இதுல ஒரு கொடுமை என்னன்னா எழுதுற கை சும்மா இருக்காதுங்கிற மாதிரி அவ்வளவு பெரிய பொன்னியின் செல்வன் கதையை மொபைலில் சொல்வேனாக்கும் என்று கதைசுருக்கம் போடுகிறார்:)

வவ்வால் said...

ராஜ்,

மன்னிக்கவும், வழக்கம் போல நான் ஒன்று நினைக்க வேறொன்று ஆகிவிட்டது. நீங்க சொன்ன பொது வெளியில் திட்டுவது சரியல்ல என்ற கருத்தின் அடிப்படையிலே நானாக கேட்டுவிட்டேன். மேலும் இவருக்கு இதே வேலையாப்போச்சு நாம ஒன்றைக்கேட்டா நீ அவன் ஆளா என்பது போல போயிடுறார்(உங்களுக்கு அதிமுக கொப.செ போல)

நீங்க அவரோட பதிவ எல்லாம் படிக்கிறதது இல்லையோ, பின்னூட்டத்தில பாருங்க, வர்ரவன்,போறவனை எல்லாம் ****&****** போல திட்டிக்கிட்டே இருக்கார், அது அவர் பதிவு போனதுக்கு பரிசா திட்டுறார்னு விட்டா ,இங்கேயும் அதே கதை :-))

அட திட்டுறது தான் திட்டுறார் புதுசா கிரியேட்டிவா திட்டுறாரானா அதுவும் இல்லை கீறல்ல் விழுந்த ரெக்கார்டு போல ஒரு நாலைந்து வார்த்தைகளே திரும்பப்போட்டுக்கிட்டு ,கொடுமையா இருக்கு சாமி :-))

இப்போ உங்களுக்கு எதாவது புதுசா பட்டம் கிட்டம் கொடுப்பார் வாங்கி வச்சுக்கோங்க ;-))

நாங்க எல்லாம் ரியல் லைப்பில்லவே கண்ணாப்பின்னானு பேசிக்கிட்டு அலையற பயலுங்க, இணையத்தில எதுக்கு அதெல்லாம்ன்னு நல்லப்பிள்ளை வேஷம் கட்டினா ...அதையும் கலைச்சு விட இவர் வரார் :-))

நுனிப்புல் சுவையா இருக்கும்னு நீங்க மட்டும் நுனிப்புல்ல மேயலாம்னு பார்க்கிறிங்க, நான் மட்டும் என்ன அடிப்புல்லா மேயுறேன் ,நானும் நுனிப்புல் தான் மேயுறேன் :-))

ஆனாலும் நீங்க கில்லாடித்தான் பதிவ விட பெருசா பின்னூட்டம் போகுது :-))

எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போயிடுச்சு ...எங்கே போகும் இந்த பாதை...யாரோ யாரோ அறிவாரோ.......

-------------

//அதென்ன போதையே இல்லாமல் மால்ட் தண்ணிக்கு பியர்ன்னு பெயர் வச்சுகிட்டு:)//

அதானே பச்ச தண்ணிக்கு பீருனு பேரா? பீரே ஏற மாட்டேங்குதுனு மிக்சிங்க்கு குவார்ட்டர் ஊத்துறோம் இங்கே ,சு.பி என்னமோ சின்னப்புள்ளத்தனமா சொல்லிக்கிட்டு இருக்கார் :-))

Bibiliobibuli said...

இவ்ளோ இருக்கா.

வருண் said...

***இதற்கும் மேல் நீங்கள் யாரைப்பற்றி கூவம் தெளிக்கிறீர்கள் என்பது கூட இந்த கணம் வரை எனக்குத் தெரியவில்லை.***

உங்களுக்கு யாருனு புரியலைனு 100 தர சொல்வதால், அந்தப் பின்னூட்டமே இல்லாமல் பதிவு எழுதும் பதிவரின் சில தலைப்புகள்.



//கேபிள்சங்கருக்கு வலை வீசும் இயக்குநர்கள்//

//கேபிள் சங்கரின் ‘ஈகோ’//

//‘அதை’ படிக்கிறவன் வௌங்கின மாதிரிதான்...//

//அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசைப்படாத...//

//பெண்களின் விழிப்புணர்வுக்காக ஒரு நான்வெஜ் படம்//

//அந்த மாதிரி காட்சியில் சரண்யா - அதிரவைக்கும் பின்ன...//

//தாயையும் மகளையும் ஆடவிட்டு வேடிக்கை பார்க்கும்...///

//ஆபாச படத்தில் நடித்தேனா...? அதிர்ச்சியில் நடிகை பூ...?//

------------

* நான் "கேபிள் சங்கரை" பற்றி ஆரம்பிச்சதுக்கு காரணம், இந்த தலைப்புகளைப் பார்த்தால் புரியும்.

* நான் பலதடவை என் டெம்பெரெமெண்ட் க்கு ஒரு சிலர் ஒத்து வரமாட்டாங்கனு புரிந்து ஒதுங்கிப் போயிட்டேன். போயிக்கிட்டே இருந்தேன். I tried my level best. But you guys dont understand that at all.

* நாகரிகமாக, நான் சொல்லாததையும், நான் சொன்னதை குதற்க்கமாக அர்த்தம் கொண்டும், என் கும்பத்தை எல்லாம் தேவையே இழுத்து வந்து, நான் எப்படி நடந்துக்கனும் னு எனக்கு சக பதிவரென்ன, கடவுளே அறிவுரை சொன்னாலும், கடவுளுக்கும் இதே கதிதான். நான் யாரிடமும் அறிவுரை பெற்றுக்க வரவில்லை.

இது உங்க தளம். என் பின்னூட்டம் அநாகரிகமா இருந்துச்சுனா அதை தூக்கிட்டு எனக்கு குட் பை சொல்லிடுங்கனு 10 தர சொல்லீட்டேன். அதை விட்டுப்புட்டு எதுக்கு இதெல்லாம், மறுபடியும்?

என்னை பொறுத்தவரையில் கூவத்தில் கூவத்தை தெளிப்பதில் எனக்கு தப்பா தோனலை. You can behave decently but please dont make rules for me or advise me. மறுபடியும் அறிவுரைகள் எதுவும் வேண்டாம்!

அம்புட்டுத்தான்.

I wrote this response in order to clarify that I never talked about cable sankar and he always get lots of responses for his posts. So he is out of the question here.

Also, I wanted show who I am talking about if it is not cable sankar!

That is all!

ராஜ நடராஜன் said...

வவ்வால்!இந்தப் படம் இன்னுமா இங்கே ஓடுது:) மெயில் பார்க்கப் போனபோதுதான் சில பின்னூட்டங்கள் தவற விட்டது கண்ணுல பட்டது.

நம்மோட மன அலைகள் ஒரே ரிதத்திலேயே பயணிக்கிறது.நீங்க முட்டிக்காமல் இருந்திருந்தா நானே வருணுக்கு பதில் சொல்லியிருப்பேன்.

வருண் கூப்பிடறார்.நாம் அப்புறமா பேசுவோம்.

ராஜ நடராஜன் said...

வருண்!நான் உங்கள் பின்னூட்டத்தை இப்பொழுதுதான் பார்க்கிறேன்.இரண்டு பதிவுகள் நான் கடந்து போய் விட்டேன்.

நான் எங்கும் பத்தரை மாற்று தங்கமென்று எங்கும் பறைசாற்றிக்கொள்ளவில்லை.

But I have learned by mixing with bloggers with various dimensions of opinions how to ethics in public.

உங்க ரசனையும் என் ரசனையும் வேறுபடுகிறதென்பதற்கு நீங்க பதிவுகளின் பெயர்கள் சொல்லியும் கூட என்னால் பதிவர் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லையென்பதே உண்மை.இந்தப் பின்னூட்டம் போட்டு விட்டு கூகிள் செய்து பார்க்கிறேன்.

நட்பாக உங்ககிட்ட சொன்னாலும் நீங்க புடிச்ச முயலே அட்வைஸ் மாதிரி தெரிந்தா நான் என்ன செய்ய முடியும்?

நீங்க சொன்னதால அம்புட்டுத்தான் போட்டுக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

வருண்!மன்னிக்கவும் இன்னுமொரு மறுமொழி சொல்லிக்கிறேன்.

நீங்க சொன்ன தலைப்புக்களை கூகிள் செய்தேன்.இப்படியும் ஒரு பதிவர் இருப்பதே நீங்க இப்ப சொல்லித்தான் தெரியும்.நான் பெயர் யார் என்று கூட ஆராயமல் வந்து விட்டேன்.நான் சினிமா ஞான சூன்யம் ஆளை விடுங்க.