நேற்று மெயிலைத் திறந்தால் ஹேமா,வவ்வாலின் பின்னூட்டங்கள் கண்ணில் தெரிய பதில் சொல்லலாமென்று எனது பதிவுக்குப் போகலாமென்று வெளியேற நினைக்க,தமிழ் மணத்தின் கடிதமொன்றும் கண்ணில் பட்டது. ஒரு சில .பதிவுகளில் தேவை கருதி குறிப்பிடுவது தவிர தமிழ்மண நிர்வாகிகளை நலமா என்றோ,இந்தப் பதிவர் ரொம்பவே கிள்ளுறார் சார் என்றோ கூட நான் இதுவரை அவர்களுக்கு ஒரு கடிதம் கூட எழுதியது கிடையாது. ரொம்ப......அமைதியா ஒரு மூலையில் நான் பாட்டுக்கு பேந்தா விளையாடிக்கொண்டிருக்கமூணு சீட்டு விளையாடுகிறேன் என்ற சந்தேகத்தில் ஈழ,இஸ்லாமிய சகோதரர்களுக்கு என்ற பதிவை தமிழ்மணம் நடா! உனக்கு தடா என அறிவித்திருக்கிறார்கள்.
மதம் குறித்தான எனது விமர்சனங்கள் தொட்டுக்க ஊறுகாய் மாதிரிதான்.மத சார்பாளர்களுடன் கூட நான் அதிகம் மல்லுக் கட்டியதேயில்லையே! முன்பு .தமிழக தேர்தல் காலத்து விமர்சனங்களையும்,இப்பொழுது ஈழப் பிரச்சினையை மட்டுமே அதிகம் விமர்சனம் செய்திருக்கிறேன்.ராஜ பக்சே கூட சண்டைக்கு வராத புள்ளப்பூச்சியான எனக்கு தடாவா!அவ்வ்வ்வ்வ்வ்!
20 comments:
ராஜ்,
இது அ.க.இ.பே விளைவு, சரி விடுங்க எப்போவோ பட்டும் படமா தொட்டும் தொடாம பதிவ போடுற உங்களுக்கே இப்படினா ...இதையே மூன்று வேளை போஜனம் போல எழுதி தள்ளும் மதவாதப்பதிவர்களுக்கு மண்டையே வெடிச்சு இருக்கும் இன்னேரம் :-))
ஹி..ஹி இதுக்கு தான் சுதந்திரமா இருக்கணும்னு முன்னரே நானாகவே தமிழ்மணம் விட்டு வெளியேறிட்டேன் ,மேலும் இப்போ இணைக்கும் சில திரட்டிகளிலும் எல்லாப்பதிவும் இணைப்பதில்லை ,எனக்கு புடிச்சா தான் இணைப்பேன், எப்பவும் காலத்துக்கு முன்னர் இருக்கும் நம்ம எண்ணங்கள்(ஹி..ஹி ஒரு சுய விளம்பரம்!)
இப்படி யாரும் படிக்காம ஏன் எழுதனும்னு கேட்கலாம் எல்லாம் கலைஞர் கடிதம் போல தான் , நானும் அந்த பிரச்சினை குறித்து பேசினேன் என ஒரு ஆவணப்படுத்தல் :-))
வவ்!நான் முன்னமே உங்க பதிவின் பின்னூட்டத்தில் கேட்டேன்.பதிவுகளை தமிழ்மணத்தில் ஏன் இணைக்கவில்லையென்று.
சுதந்திரமா இருக்கணும்னு முன்னரே நானாகவே தமிழ்மணம் விட்டு வெளியேறிட்டேன் என்ற தகவல் எனக்கு அதிர்ச்சியான செய்திதான்.ஒரு திரட்டியாக அவர்கள் கடிவாளம் போடுவது சரியானதுதான்.நமது வரம்புகள் என்ன என்று அறிந்து வைத்திருப்பதால் இதுவெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.நானாவது நம்ம நண்பர் வருணுக்கு சந்தேகம் வரும்படி சில சார்புநிலையோடு விமர்சிக்கிறேன் எனலாம்:)நீங்க அனைத்தையும்தான் விமர்சனம் செய்கிறீர்கள்.விவாதமில்லாமல் பின்பு பின்னூட்டப் பெட்டி எதற்கு?ஒரு கருத்தின் விமர்சனத்திற்கும்,தனி மனித தாக்குதலுக்கும் வித்தியாசம் இருக்கிறது.அதனை நாம் செய்வதில்லையே!
நான் உங்கள் பதிவுகளை ஒட்டு மொத்தமாக ஆற அமர வாசிப்பதற்கான காரணம் கூட உங்கள் பதிவுகள் தமிழ்மணத்தில் தட்டுப்படாமல் போவதுதான்.எந்த துறை சார்ந்த கருத்தாக இருந்தாலும் பதிவு செய்யவும்,ஆழ்ந்த பின்னூட்டங்கள் இடும் உங்கள் ஆற்றல் பலருக்கும் போய் சேரவேண்டும்.அதற்கு முக்கியமாக தமிழ்மணத்தின் சேவை தேவை.
கலைஞராவது குறிப்பெடுக்க சண்முகம் அவர்களை அருகில் வைத்துக் கொண்டு தேவைப்பட்ட போது பழைய குறிப்புக்களை தேதிவாரியாக சொல்லி கைதட்டல வாங்கிக் கொள்கிறார்.உங்க ஆவணப்படுத்தல் பதிவாக அதிகம் இல்லாமல் பெரும் பின்னூட்டங்களாக பதிவுலகம் எங்கும் சிதறிக் கிடக்கிறது:)
//இது அ.க.இ.பே விளைவு,//
இதுக்கு கொஞ்சம் கோனார் நோட்ஸ் கொடுத்தால் பிட் அடிக்க வசதியாக இருக்கும்:)
ஓ!!
இது தேவையான்னு திட்டிக்க்கப்போறீங்க உங்களைப் பார்த்து நீங்களே நடா.நல்லது நடக்கட்டும்ன்னு நினைக்கபோய்...!
ஹி .. ஹி ...
:)
ஜெயாம்மா சொன்னா மாதிரி சண்டைன்னு வந்தா பொதுஜனம் சாவறதுதான்னு சொல்லீரப் போறாய்ங்க:))
ராஜ்,
நீங்க கேட்டதுக்கு அப்போவே என் பதிவில் பின்னூட்டத்தில் பதிலும் சொல்லிட்டேன்.
உலகத்திலே இதுவரை சொல்லாத கர்த்தும் இல்லை, சொல்ல வேண்டிய கருத்தும் இல்லை எல்லாம் சொல்லப்பட்டு விட்டது, நாம் செய்வதெல்லாம் அதை தேடி மறு ஆக்கம் செய்வது தான்,மழை நிலத்திலும், கடலிலும் பெய்கிறது கடலில் தான் நிறைய தண்ணீர் இருக்கே என அங்கே மழை பெய்யாமல் போவதில்லை.
பின்னூட்டப்பெட்டி தப்பி தவறி யாராவது வந்தால் எதாவது சொல்லிட்டு போகத்தான்.கடிவாளம் போடுவதை தவறு என்றே சொல்லவில்லை, ஆனால் எது வரையில் கடிவாளம் என தெரியாத நிலையில் நான் அந்த எல்லையில் இருக்கேனா என சுய பரிசோதனை செய்துக்கொண்டு எப்போதும் செயல் பட முடியாதே. சரி விட்டது ஆசை விளாம்பழத்து ஒட்டோடு என விலகிட்டேன்.
//.உங்க ஆவணப்படுத்தல் பதிவாக அதிகம் இல்லாமல் பெரும் பின்னூட்டங்களாக பதிவுலகம் எங்கும் சிதறிக் கிடக்கிறது:)//
ஹி..ஹி எனக்கு பதிவு போட சோம்பலாக இருக்கும் ஆனால் பின்னூட்டம் ஒரு ஃப்ளோல ஓடி வந்திடும், அதுக்கு ரொம்ப மெனெக்கிடவோ ,தேடவோ வேண்டாம் என்பது ஒரு வசதி. நல்லா இருந்தா அன்று எனக்கு வயத்து கோளாறு இல்லைனு நினைச்சுக்குவேன் :-))
2000 வருஷம் முன்னரே வள்ளுவர் சொல்லாததையா நாம சொல்லிட்டோம், இல்லை வள்ளுவர் எழுதின குறள் தான் வ்ழக்கொழிந்து போச்சா, எல்லாத்தையும் படிச்சுட்டு எது செஞ்சா லாபமோ அதைத்தான் நாம் செய்வோம், எனவே கவலைப்பட எதுவும் இல்லை.இழப்பதற்கு எதுவும் இல்லை எழுத பிலாக் இருக்கு ...எனவே போட்டூ தாக்கு என போக வேண்டியது தான் :-))
அடடா என்ன கூட தத்துவமா பேச வச்சுட்டிங்களெ :-))
-----
அறண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சும்மாவா சொன்னாங்க , ரொம்ப அறண்டுப்போய் அதுக்கெல்லாம் கோனார் நோட்ஸ் கேட்கிறிங்க :-))
ஆஹா உங்களுக்கும் இப்படியா நாட்டாமை செய்யப்போய் கடைசியில்!ம்ம்ம்
உங்க பதிவை யாராவது "ரிப்போர்ட்" செய்து இருக்கலாம். என்னதான் நீங்க நடுநிலைமை காக்கிறதா நெனச்சாலும் ஒரு சிலருக்கு உங்க பதிவு / உங்க பார்வை பிடிக்காமல் இருந்து இருக்கலாம். தன் முதுகு தனக்குத் தெரியாது, தன் பதிவின் "தரமும்" அப்படித்தான்னு நெனைக்கிறேன் (தனக்கு தெரியாது)! :)
யூர்கன்!நலமா? உங்கள் பின்னூட்ட ஓ துவங்கி நிறைய பேர் பின்னூட்டம் இட்டதை கவனிக்காமல் போய் விட்டேன்.என் பதிவுகளை நானே திரும்பி பார்க்காமல் ஊர் சுற்றுவதன் விளைவு இது:)
பின்னூட்ட கச்சேரியை துவங்குகிறேன்.நன்றி.
ஹேமா!கடைசில வருண் கூறுவதையும் கவனியுங்கள்:)உங்களுக்கான பதிலை அவரிடம் போகும் போது சொல்கிறேன்.
பாலாண்ணா! Collateral damage க்கு நான் தான் மாட்டுனேனா!அவ்வ்வ்வ்!
கீழ் பெஞ்சுல உட்கார்ந்துகிட்டிருக்கிற வருண் செயாம்மாவை பற்றி ஒன்றுமே நான் சொல்வதில்லையாம்.அதனால் நான் அ.தி.மு.க காரன் என்று கிசு கிசுத்துக்கொண்டிருக்கிறார்.செயாம்மா காதுல வேற போட்டுறாதீங்க.
வவ்வால் இதுவரை சொல்லாத கருத்துமில்லையென்று நீங்கள் சொன்னதும் நாகேஷ் ஒரு முறை இப்படித்தான் சொன்னார்.நடிக்க வேண்டியது அத்தனையும் நடித்தாகி விட்டது.நடிகர்களின் முகங்கள் மட்டுமே மாறுகின்றன என்றது நினைவுக்கு வருகிறது.
வள்ளுவன் சொன்னதையே கண்ணதாசனும்,வைரமுத்துவும் மாற்றிப்போட்டு சொல்றாங்க என்றும் கூட சொல்லலாம்.ஆனால் அரசன் அசோகன் செய்ததை நவீன் அரசர்கள் செய்தும் செய்யவில்லை என்பதால் வரலாறு புதுப்பாடங்களை புதுப்பித்துக்கொண்டு இருப்பதில் மாறுபடுகிறதென நினைக்கிறேன்.
அரண்ட வேகத்துலதான் ஒட்டகம் வேகமாக ஓடுதுன்னு பின்னாடி பின்னூட்டம் போட்டதன் காரணம் இப்பத்தான் புரியுது:)
சகோ.தனிமரம்!நீங்களுமான்னு நீங்க என்கிட்ட புலம்புறீங்க.நான் தமிழ்மணத்துகிட்ட புலம்புறேன்:)
வருண்!வந்தீங்களா!நீங்க சொல்லும் அடைப்பானின் அழுத்தம் இடக்கரக்கலாக இருந்தாலும் உங்கள் பின்னூட்டத்தில் எனக்கு முழு உடன்பாடே.காரணம் பின்னூட்டப் பகுதியை பார்வையிடுபவர்கள் 100ஐத் தாண்டினாலும் கருத்து சொல்லும் நண்பர்களை 5லிருந்து 10க்குள் அடக்கி விடலாம்.தவறுகளையும் உங்களை மாதிரி சொன்னால்தானே திருத்திக் கொள்ள முடியும்.பின்னூட்ட பகுதியே அதற்குத்தானே இருக்கிறது.ஒரு பொருளின் பல பரிமாணங்களில் நான் சரியென நினைப்பதை இன்னுமொருவர் தவறு என்று நினைப்பதில் நியாயம் இருக்கிறது.
ஆனால் எனக்கான தடாவை நினைக்கும் போது எனக்கு சிரிப்பு வருவதோடு பின்னாடி வருபவர்களுக்கான யானைக் கதையே நினைவுக்கு வருகிறது:)
எனது முந்தைய வார்த்தை பிரயோகத்தை நினைவில் வைத்திருப்பதற்கு பிரத்தியேக நன்றி:)
தருமி அய்யா!கூட்டத்துல உங்களை கவனிக்காமல் விட்டு விட்டேன்.ஏன் சிரிக்க மாட்டீங்க:)
ராஜ்,
ஓட்டம் பேயோட்டமா இருக்கே அதான். நீங்க இல்லைனு சொன்னாலும் ஏதோ நெருப்பு பத்தி இருக்குனே தோனுது :-))
எல்லாம் சொல்லப்பட்டு விட்டது, செய்யப்பட்டு விட்டது ஆனால் காலத்துக்கு ஏற்ப வடிவங்கள் மாறுகிறது. இயற்கையா நடக்கிற மறு சுழற்சி, அதில் நம்ம பங்குக்கு கொஞ்சம் சுழற்றி விடுறோம், சில சமயம் ஜோரா சுத்தும், பல சமயம் சொறுகிக்குது :-))
உங்களைப்பார்த்து ஒரு பக்கம் உபாத்தியார் நகைக்கிறார் இன்னொரு பக்கம் ஒரு உபாதையாளர் முதுகு தெரியல்ல, முழங்கால் தெரியலைனு பல்லை கடிக்கிறார் :-))
ஹம் ஆப் கே ஹெயின் கோன் பார்க்க சொல்லுங்க அதுல முகத்தைவிட முதுக தான் அதிகம் காட்டுவாங்க மாதுரி :-))
இந்த காலத்து படத்தை சொல்லலாம்னு பார்த்தா ,எல்லாத்தையும் காட்டுறாங்க , அதுல குறிப்பா முதுக மட்டும் பாருங்கன்னு சொன்னா கேட்கவா போறார் :-))
வவ்!நீங்க இங்கே வந்து குந்திகிட்டிங்க.நான் அங்கே சிவப்பு கலருல சொக்கிட்டேன்:)இதுல வேற ஒருத்தருக்கு சல்மான் மேல பொகைச்சல்.நான் என்னமோ ரசிகன் மோனையெல்லாம் இயல்பாத்தான் வருதாக்கும்ன்னு நினைச்சுகிட்டிருந்தா ரூம் போட்டு யோசிச்சு கதை எழுதறவங்க மாதிரி ப.ராவுக்கு காட்டுன பிலிமை எனக்கு ட்ரெயிலர் காட்டுறிங்களே!
இனிமேல் இங்கே ஒரு பின்னூட்டம் வந்தால் முன்னெச்செரிக்கையாக அங்கேயும் ஒரு பார்வை விடப்படும்:)
நாளைக்கு கண்டுக்குறேன்.பை.பை.
//மதம் குறித்தான எனது விமர்சனங்கள் தொட்டுக்க ஊறுகாய் மாதிரிதான்.மத சார்பாளர்களுடன் கூட நான் அதிகம் மல்லுக் கட்டியதேயில்லையே! //
இராஜீவ் பாணியில் சொல்வதென்றால் 'பெரிய ஆலமரம் சாயும் போது அக்கம் பக்கம் பாதிப்பு இருக்கும்'
:)
Post a Comment