Followers

Monday, May 7, 2012

இது ஆவுறதில்ல! இது கவிஜ!

சும்மா தூங்கின புலியை தட்டி எழுப்பி விட்டது தமிழ்மணம்!

அலுங்காத குலுங்காத குளம் எதுன்னு பார்த்தால் கவிதையும்
நளபாக சமையலும் ஆன்ட்ராய்டா ஆப்பிளா பட்டிமன்றமே
கவிஜயிலாவது போலிசு என்னைப் பிடிக்காமல் இருக்கட்டும்:)

தொடர்ந்தும் தொடராத நினைவலைகள்.
உழைப்பே மூலதனமான அப்பா,அம்மா

சந்திரனில் வடை சுட்ட பாட்டிக்கு ஏழு ஸ்வரத்தில்
 குரல் கொடுக்கும் அம்மாவின் அம்மா

மெத்தென்று மென்கரத்தை தூக்கி சுமந்த தங்கை

எங்கும் ஒட்டிக்கொள்ளும் நட்புக்கள்
ஆப்ரகாம்,அப்துல்,ஜெயச்சந்திரன்
பெயர்க்காரணங்கள் அறியாத காலம்

எப்படியும் பற்றிக்கொள்ளும் நகைச்சுவை
மருது,தங்கராஜ்,பழனிச்சாமி,ரங்கசாமி,லட்சுமணன்
முந்தா நாள் பேய்க்கதை சொன்ன நசரேயன்
நேற்று ஷகிலா,அசின் ஒப்புமை வவ்வால்
இன்னும் யாரோ மீதி நாட்களுக்கு வந்தாலும்

எப்பவுமே பிடிக்காமல் போன கணக்கு வாத்தியார்

பள்ளிப் பாடத்தை விட சுகமான ஆற்று மீன்களும் காகித கப்பலும்

புத்தக்க படிப்பாய் இல்லாமல் மா,பலா,வாழை சுவைத்த  கணங்கள்
கன்னித்தீவு போதைக்கு தொட்டுக்க ஊறுகாயாக ஆர்ம்ஸ்ட்ராங்க்

சத்திய சோதனை படித்து இது ஆகுற காரியமல்ல
என்று உணரவைத்த மகாத்மா காந்தி

ஓடி விளையாடு பாப்பாதான் அறிமுகமென்றாலும்
கவிஞனென்றால் இவன் கவிஞன் என்றுணர்ந்த பாரதியார்

கிறுஸ்தவ பள்ளியின் தாக்கத்தில் இயேசுவின் மென்மை

என் காதல் அறிந்து நெஞ்சு வலி வந்த
காதலியின் முறைப் பையன்

அண்ணனுக்கு ஐயப்பனும் அத்தனை கடவுளும் பிடித்துப் போக
என்னை சமூக உணர்வுகளோடு கட்டிப் போட்ட பெரியார்

குடும்பஸ்தானாகிய முதிர் நண்பர் படுவான் பாடுவான் பட்டதே போதுமென்பான் பாவி மகன் பெண்குலத்தை படைக்காமல் நிறுத்தி வைப்பான் என  பாடியதை ரசிக்க வைத்த கண்ணதாசன்

மொழி தெரியாமலே சத்யஜித்ரே பதர் பாஞ்சலி படம் சொல்லிய
 கேரளத்து நண்பன் தமிழ் சொல்லிக்கொடுத்த பெங்காளி முகர்ஜி

குத்துச் சண்டையே தெரியாமல் குத்துச்சண்டை வீரன் முகமது அலி

முகவுரையிலேயே மூழ்க வைத்த ஜெயகாந்தன்

புகை பிடிக்காத என்னை புகை விட்டு
அசத்திய நடிப்பரசன் சிவாஜி கணேசன்

பிடித்தும் பிடிக்காமல் போன கலைஞர் கருணாநிதி

பிடிக்காமல் போய் பிடித்துப் போன பிரபாகரன்

இன்னும் எத்தனையோ கற்றுக்கொடுக்கும் பதிவுலகம்

இன்னும் சொல்லாமல் விட்டவைதான் எத்தனையோ

11 comments:

தருமி said...

தூங்கின புலியைத் தட்டி எழுப்பினால் கவுஜ வரணுமோ?

எனக்கு ஒரு மண்ணும் வரமாட்டேங்குதே! :(

ராஜ நடராஜன் said...

தருமி அய்யா! உங்களுக்கு நானும்,எனக்கு நீங்களுமே துணை:)

தருமி said...

அப்டியா சொல்லுதிய ...? பெருங்கூட்டம்னு நினச்சிக்கிட்டு இருக்கேனே ...

வானம்பாடிகள் said...

வடிவேலு ஜோக்கு கவனம் வருதா ராஜண்ணே. நம்மூர்க்காரன் எவன் சொன்னா கேக்குறான்:)))..வாங்க எங்கள மாதிரி துண்டப் போட்டு மூக்க மறைச்சிட்டு பக்கத்துல குந்துங்க:)))))

ராஜ நடராஜன் said...

பாலாண்ணா!குந்திகிட்டுத்தான் இருக்கேளா!

எப்படியிருந்த நான் இப்படியாகிட்டேனா பார்த்தீங்களா:)

ராஜ நடராஜன் said...

தருமி அய்யா!ஓபனிங்க் பேட்ஸ்மேனே ஆட்டத்துவக்கத்திலேயே டக் அவுட் ஆனப்புறம் 12th man நானெல்லாம் என்ன செய்ய?

நமக்கு சேரும் கூட்டத்தை பார்த்தீகளா:)

ஹேமா said...

ஓடி வாங்கோ ஓடி வாங்கோ மணி வாங்கோ,நிரூ வாங்கோ.....நடாவை தமிழ் மணம் கவிதை எழுத வச்சிட்டுது.ஓடி வாங்கோ.நக்கீரர் கவிதை எழுதிட்டார் !

வவ்வால் said...

//எனக்கு ஒரு மண்ணும் வரமாட்டேங்குதே! :(//

மண் தரையில படுத்து எழுந்தா மண்ணு வரும் :-))

உபாத்தியாருக்கு நாம அடிப்படை பாடம் சொல்லி தர வேண்டி இருக்கே :-))

----
ராஜ்,

ஹி..ஹி நானெல்லாம் கவித/கவுஜ எழுதிப்பார்த்துட்டு இது ஆவுறது இல்லனு கட்டுரைக்கு ஒட்டுரை போட்டுக்கிட்டு இருக்கேன், நீர் என்னடா என்றால் கட்டுரை எழுதி கையை சுட்டுக்கொண்டு கவுஜ எழுதி களைப்பாருகிறீர் :-))

ஆறு மனமே ஆறு...@#$%*&* கட்டளை ஆறு..
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான் உள்ளத்தில் உள்ளது அமைதி!

ராஜ நடராஜன் said...

ஹேமா!கவிதையே கவிஜய வரவேற்கிறதா!

ம்க்கும்!கள்ள ஓட்டுப் போடுற காலத்திலெல்லாம் ஆளை அம்போன்னு விட்டுட்டு இப்ப தடா போட்ட நேரத்துல கூப்பிடுங்க மணியையும்,நிரூவையும்:)

ராஜ நடராஜன் said...

வவ்!மேடைப்பேச்சு காலத்துல மண்ணுல உட்காராம இங்கிலிபீஸ் சொல்லிக் கொடுத்துட்டு உபாத்தியார் இப்ப கவிஜ வரலன்னு புலம்பறாரே:)

ராஜ நடராஜன் said...

வவ்!மெய்யாலுமா!என் கண்ணுல ஒரு கவித/கவிஜ கூட தென்படலையே!நான் என்னமோ நீங்க விஞ்ஞானியாக்கும்ன்னு நினைச்சிகிட்டிருந்தேன்!

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்!அருள் மொழி கூறும் வவ்வாலின் குரல் கேட்டேன்:)