Followers

Thursday, May 10, 2012

ஒரே உலக ஊடக விருதுகள்.

ஒரே உலகம் என்பது இணையத்தைப் பொறுத்த வரையில் சாத்தியாயிருக்கிறது.பதிவர்கள் அனைவரும் கூட பல தேசங்களில் இருந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.கூடவே சண்டையும் போட்டுக்கொள்கிறோம்:) சண்டை போட்டாலும் இதெல்லாம் பதிவுலகில் சகஜமப்பா என கவுண்டமணி அண்ணனை நினைத்துக் கொள்வோம்.பதிவுலக அரசியலில் நிரந்தர பகைவன் இல்லையென நிரந்தர நண்பர்களாக முயல்வோம்.

திரைப்படத் துறை போன்றவற்றில் அங்கீகாரம் முக்கியமென்பதை ஆஸ்கார் முதற்கொண்டு,பாலிவுட் வரை முக்கியமானது.தமிழ்மணம் கூட சிறந்த பதிவர்களை ஊக்குவிப்பது வரவேற்க தக்கது.!ஐஸ்!ஐஸ்!இன்னுமொரு முறை யார் மாட்டிக்கிறது:)

தலைப்பின் உலக ஊடகங்கள் மாதிரி தொலைக்காட்சிகள் நிறைந்த இந்தியாவும் கூட இணைந்து விருதுகள் அளிப்பது சிறப்பாக இருக்கும்.மொத்த விருதுகளில் சேனல் 4 இலங்கையின் கொலைக்களங்கள் காணொளி சிறந்த தொலைக்காட்சி விருது மற்றும் சிறந்த ஆவணப்படம் என இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.இதன் தாக்கம் வரும் காலகட்டத்தில் உலக அரசியல் சார்ந்து இலங்கை மீது மீண்டுமொரு முறை பிரதிபலிக்குமா அல்லது மேக காற்றாக மறைந்து விடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முன்பு ஜார்ஜ் புஷ் காலத்தில் ஈராக் போரின் கால கட்டத்தில் துவக்கப்பட்ட அல் ஜசிரா தொலைக்காட்சி ஈராக் போரின் உண்மைகளை வெளிக் கொண்டு வருகிறதென்று முடக்க நினைத்தும் முடியாமல் போனது.பின் லேடனின் காணொளிகளை துணிந்து வெளியிட்டும் தனக்கான பார்வையாளர்களை அதிகரித்துக் கொண்டது அல் ஜசிரா.அரேபிய மொழி,ஆங்கில செய்திகளோடு சுமார் 10க்கும் மேற்பட்ட விளையாட்டு தொலைக்காட்சிகளை நிகழ்த்துவது அல்ஜசிராவின் சிறப்பு.

பி.பி.சி பக்க சார்பற்ற தகவலைத் தர முயன்றாலும அதன் அமெரிக்க சார்புடையது என்பதை மறுப்பதற்கில்லை.ரிப்போர்ட்டர்,பனோரமா போன்ற சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் அரசியல் கலப்பு இல்லையென்பது குறிப்பிடத் தக்கது.அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகைக்கு இணையான பத்திரிகை கார்டியன் எனலாம்.சிறந்த செய்திகளை வெளியிடுவது அதன் சிறப்பு..

ஏனைய விருதுகளுக்கான பெயர்கள் நான் அறியாத ஒன்று என்பதால் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை.

 ஊர் உலகமெல்லாம் அலைஞ்சு செய்தி திரட்டிக்கொண்டு வந்து சொன்னா தமிழ்மணம் வாலில் தீ வச்சு விட்டதாலதான் ஒட்டகம் வேக வேகமா ஓடுதுன்னு கூட கமெண்டுறாங்க:)

இன்'றைக்கு கூட எதிர் நீச்சல்ன்னு ஒருத்தர் ஆடு புலி ஆட்டம் ஆடலாம் வான்னு கூப்பிட்டாரு!இந்த மாதிரி பழமையானவற்றையெல்லாம் ஆவணப்படுத்துங்க இணைய தலைமுறையே.

இனி விருது பட்டியல் உங்களுக்காக!

சிறந்த ஊடக நிருபர் - ஜமால் ஒஸ்மான் - சேனல் 4

ரேடியோ விருது

அசைன்மென்ட் - ஹெய்ட்டி காலாரா பரவல் - பி.பி.சி உலகம்

தொலைக்காட்சி விருது - இலங்கையின் கொலைக்களங்கள் - சேனல் 4


பத்திரிகை விருது - ஆண்களின் கற்பளிப்பு - அப்சர்வர் பத்திரிகை

புதிய ஊடக விருது - எங்கள் ஆப்பிரிக்கா - எஸ்.ஓ.எஸ் குழந்தைகள் (SOS Children)


நாடக விருது - ஒடெலோ எரிகிறது - சிங்கா தயாரிப்பு


பிரபலமான நிகழ்ச்சி விருது - கடினமான இடம் பின்மான் - பிபிசி 2


முன்னேற்ற சாத்திய விருது - ஒரு தீவு இருந்தது - டெ ஹெனுவா எ நோகோ -லெவல் தயாரிப்பு


செய்தி விருது - எங்களை மரணிக்க செய்த விமானம் - கார்டியன்

ஹெகடீரா மருத்துவமனை - ஐடிவி செய்தி

சிறந்த ஆவண விருது: சேனல் 4 - இலங்கையின் கொலைக்களங்கள்

மாணவர் விருது: பஹாங் சிலாங் - ஜீனா மெர்டன் - லண்டன் காலேஜ் ஆஃப் கம்யூனிகேசன்

சிறப்பு விருது_ ஜெம் டிவி


குழந்தைகள் உரிமை விருது: ஆப்பிரிக்க புலனாய்வு: ஸ்பெல் ஆஃப் த அல்பினோ - அல் ஜசிரா ஆங்கிலம்

ஆங்கிலம் கீழே!தமிழ் மொழி பெயர்ப்பில் குற்றமிருந்தால் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.கற்றலும் பெற்றலும் நம்பிக்கையோடு.

Journalist of the Year Award
Jamal Osman – Channel 4

Radio Award
Assignment – Haiti Cholera Epidemic – BBC World Service

Television Award
Sri Lanka’s Killing Fields – Channel 4

Press Award
The Rape of Men – Observer Magazine

New Media Award
Our Africa – SOS Children

Drama Award
Otelo Burning – Cinga Productions

Popular Features Award
Toughest Place to be a Binman – BBC Two

Sustainable Development Award
There Once was an Island: Te Henua e Nnoho – On the Level Productions

News Award
Aircraft carrier left us to die, say migrants – The Guardian
Hagadera Hospital – ITV News on ITV1

Documentary Award
Sri Lanka’s Killing Fields – Channel 4

Student Award
Bagong Silang – Zena Merton, London College of Communication

Special Award
Gem TV

Children’s Rights Award
Africa Investigates: Spell of the Albino – Al Jazeera English

டிஸ்கி: தகவல் சேகரித்த தளத்துக்கு தொடுப்பு கொடுக்க இயலவில்லை.காபி பேஸ்ட்டுக்குப் பின் மறந்து விட்டேன்.மன்னிக்கவும்.

5 comments:

கோவி.கண்ணன் said...

//தமிழ்மணம் வாலில் தீ வச்சு விட்டதாலதான் ஒட்டகம் வேக வேகமா ஓடுதுன்னு கூட கமெண்டுறாங்க//

சிரிச்சு மாளவில்லை :)

வவ்வால் said...

ராஜ்,

நல்லாத்தான் கொடுக்கிறாங்க விருது... அத சொன்னதுக்கு நன்றி!

எச்சூஸ்மி எனக்கு ஒரு டவுட்டு பாஸ்...

எல்லாரையும் போட்டு தாக்குறதுக்கு எல்லாம் விருது கொடுக்க மாட்டாங்களா?


என்னை விட போட்டு தாக்க ஆரு இருக்கா இங்கே :-))
(என்ன அப்படி பாக்குறிங்க...எனக்கு விருது கொடுத்தா கூடா வேணாம்னு சொல்லிடுவேன்...அவ்வ்லோ நல்லவன்...நம்புங்கய்யா)

ராஜ நடராஜன் said...

கோவி!நான் ஏற்கனவே சிரிச்சு முடிச்சுட்டேன்.உங்களுக்கு கீழே தரை டிக்கட்டுல மணலைக் சேர்த்து குந்தவச்சிகிட்டு ஒருத்தரு சிரிக்கிறாரே!அவரு பக்கம் ஒரு ரவுண்டு கட்டிட்டு வாங்க.சில ஊர் பெருசுக எல்லாம் அங்கதான் ரவுண்டு கட்டுறாங்க:)

ராஜ நடராஜன் said...

வவ்!அது என்னமோ உண்மைதான்!தன் கடை தானா வளரும்ன்னுட்டு ஊர் ஊரா போய் வத்தி வைக்கிறதுல உங்களை விட்டா யார் இருக்குறா:)

வத்திப்பெட்டின்னு வேணுமின்னா விருது தாரேன்:)பின்ன ஒட்டகத்து வாலுக்கே தீ வைக்கிறீங்களே:)

நீங்க புருசன் வீட்டுல கோவிச்சிகிட்டுப் போன பொண்ணுதான்னு இப்ப நம்பறோம்!விருது கொடுத்தாவது கூட்டிட்டு வருவாங்கன்னு நினைக்கிறீங்களாக்கும்.

நம்ம ப.ரா வை (தெரியாதவங்களுக்காக பன்னிக்குட்டி ராமசாமி) இந்தப் பக்கம் கொஞ்சம் வரச்சொல்லுறது.நான் கொஞ்சம் அவரை பார்க்கனுமே:)

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா இப்பிடியும் கிளம்பியாச்சா....!!!