Followers

Friday, May 25, 2012

லண்டன் மகாராணிக்கு ஒரு மடல் அனுப்புங்க

இந்திய திரைப்பட விழாவில் அமிதாப்பச்சனை இலங்கை போக வேண்டாமென்று உணர்த்தியதிலும்,டைம்ஸ் பத்திரிகையின் வாக்கெடுப்பில் மகிந்த ராஜபக்சேவை பின் தள்ளியதிலும் முக்கியமாக லண்டனில் பல்கலைக்கழக விழாவில் பேசவிடாமல் தங்கியிருந்த ஓட்டலிலிருந்து லண்டனின் இலங்கை தூதரகத்துக்கு ராஜபக்சேயை ஓடவிட்டு திருப்பி அனுப்பியதில் புலம் பெயர் தமிழர்களின் பங்கு முக்கியமானது.

இங்கிலாந்து ராணியின் பவளவிழாவில் ஒரு நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் ஒரு நாட்டின் ஜனாதிபதியென்ற முறையில் நட்பு ரீதியாக அழைப்பது முறையான ஒன்றே.ஆனால் ஏறிகனவே தமிழர்களின் கோபத்துக்குள்ளாகி லண்டனிலிருந்து வெளியேறிய ராஜபக்சேவை விருந்துபசாரத்திற்கு அழைப்பது எந்த விதமான உணர்வுகளை மீண்டும் புலம் பெயர் வாழ் தமிழர்களிடம் உருவாக்குமென்று அறியாமலா ராஜபக்சேவுக்கு அழைப்பு விடப்பட்டது.

இலங்கைக்கு பஞ்சம் பொழக்கப் போன ஆட்களுக்கு எதற்கு தமிழீழம் என்று சிலர் கருத்துக்கள் வெளியிடுவது போலவே இலங்கையின் உள்நாட்டு கலவரத்தில் வெளியேறிய புலம் பெயர் தமிழர்களுக்கு எதற்கு ஒரு மகாராணியின் விழாவில் கலகம் விளைவிக்க வேண்டும் என்பது போலவும் கூட சிலர் நினைக்ககூடும்.இதற்கு சற்றும் குறைவில்லாத தமிழர்கள் மீதான ஈழத்தமிழர்கள் மீதான கோபமும்,வேண்டுமென்றால் தமிழகத்தில் போய் தமிழீழம் அமைத்துக்கொள்,இலங்கையில் முள்ளிவாய்க்கால் மாதிரியான கற்றுக்கொண்ட பாடங்களும் மறுவாழ்வுமே கொடுக்கப்படும் போன்ற பின்னூட்ட எண்ணங்களும் வெளிப்படுகின்றன.புலம்பெயர் தமிழர்கள் இப்பொழுது அந்த அந்த நாட்டின் குடியுரிமையாளர்களாகவும் லண்டன் போன்ற நிலத்தில் ஆட்சியை நிர்ணயிக்கும் ஒரு அங்கமாகவும் செயல்படுகிறார்கள்.எனவே சாத்வீகமாக போராடுவதில் அவர்களுக்கு உரிமை  உண்டு.

இணைய தேடலில் எண்ணற்ற தளங்கள் தமிழர்கள் சார்ந்து இயங்கினாலும் நம்பிக்கைக்குரிய செய்தியாக உறுதிப்படுத்திக் கொள்ளும் படி ஒன்றும் கூட என் கண்ணில் தென்படவில்லைபெரும் தாக்கத்தை உருவாக்காவிட்டாலும் கூட செய்திகளை வெளிக்கொண்டு வருவதால் அனைத்து தளங்களுக்கும் நன்றி..தமிழ் சங்கம் தேடிப்பிடித்து செல்ல வேண்டியுள்ளது.குளோபல் தமிழ் அமைப்பு தமிழர் போராட்டத்தின் முக்கிய பங்கு வகிக்கிறதென்ற போதிலும் தளத்திற்கு சாவியிருந்தால் உள்ளே வா என்கிறார்கள்.நாடு கடந்த தமிழீழ அரசு தளம் தகவல்களையும் நகர்வுகளையும் உடனுக்குடன் வெளிப்படுத்துவதில்லை.

ஆயுதப்போராட்ட கால கட்டம் துவங்கி  உண்மைகளை வெளிக்கொண்டு வந்த தளமாகவும் தேதி வாரியாக நிகழ்வுகளை படம் பிடிக்கும் தளமாகவும் எவருமே ஈழத்தமிழர்கள் சார்ந்த செய்திகளை தெரிந்து கொள்ளவும் உறுதிப்படுத்தவுமான தளமாக விளங்கியது தமிழ்நெட்.இன்றைய கால கட்டத்தில் நிகழும் முக்கிய நிகழ்வுகள் எதனையும் வெளிக்கொணராமல் சம்பந்தமேயில்லாமல் செய்திகள் வெளியிடுகிறார்கள்.எனவே ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடாக இருந்தாலும் சிங்கள சார்புடைய செய்தியாக இருந்தாலும் அதனை உண்மையென்ற மொழிபெயர்ப்பை நாமாகவே செய்துகொள்ள வேண்டியுள்ளது.

எலி ஏன் அம்மணமாக ஓடுகிறதென்று இப்பத்தானே தெரிகிறதென்று சொல்வது போல் ஐ.நாவின் இலங்கை மீதான அமெரிக்க தீர்மான காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு ஐ.நா தீர்மானம் குறித்து வெளியிட்ட இந்திய பத்திரிகைகள் காரியம் சாதித்தவுடன் ஏனைய வழக்கமான செய்திகளுக்குள் நுழைந்து விட்டன. இந்து என்.ராம் என்ற பட்டம் பறிபோன பின் இந்து பத்திரிகையின் பார்வை ஓரளவுக்கு மாறி வருவது போல் உணரமுடிகிறது. இலங்கை குறித்த செய்திகளில் முன்னேற்றம் தெரிகின்றன. நக்கீரன் தொடர்ந்து இலங்கை குறித்த செய்திகள் வெளியிட்டாலும் கூட பிரபாகரன் பத்திரிகை படித்த கணத்திலிருந்து அதன் மீதான நம்பிக்கையை இழந்து விட்டது.விகடன்,தினமணி பத்திரிகைகளின் செய்திகள் பரவாயில்லை. பதிவர்களின் பின்னூட்டங்களுக்கு நிகராக அங்கேயும் போட்டுக் காய்ச்சுகிறார்கள்.பதிவுலகம் சம்பந்தப்பட்ட ஆட்களே அங்கே ஓடுகிறார்களா அல்லது மாற்று கிரகவாசிகளா என்று தெரியவில்லை:)

இவ்வளவும் சொல்லி விட்டு பதிவுலகின் என் ஈழச்சகோதரகள் யாராவது ராஜபக்சேவின் மகாராணி விருந்து பற்றி கருத்து வெளியிடுவார்களா என்று பார்த்தால் அனைவரும் சண்டை போட்ட களைப்பில் மிதமான கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.சரி நாமாவது ஒரு சிறு துரும்பை எடுத்துப் போடலாமேயென்று இந்த பதிவு.விரும்பியவர்கள் வாக்களிக்கலாம். வேண்டாமென்று நினைப்பவர்களும் கருத்து தெரிவிக்க விரும்பாதவர்களும் பதிவைப் படித்து விட்டு சூடா வடை எங்கே கிடைக்குமென்று தேட போய்விடலாம்.எதுவும் அவரவர் விருப்பம்.

‘Sri Lanka’s War Criminal Will Join The Queen At The Taxpayer-Funded Meal’, Make Sure This Doesn’t Happen– Says Sri Lanka Campaign

என்ற தலைப்புடன் கொலம்போ டெலகிராஃப் வாக்கெடுப்புக்கான வசதியை ஏற்படுத்திக்கொடுத்தியுள்ளது.சண்டையை வேடிக்கை பார்ப்பதுன்னா எனக்கு ரெண்டு லட்டு சாப்பிடுவது மாதிரி என்று நினைப்பவர்கள் பின்னூட்டங்களை மேயலாம்.ஓட்டுத்தான் முக்கியமென்பவர்கள் இங்கே செல்லலாம்.

http://www.thediamondjubilee.org/send-message-queen

நமக்குத்தான் காபி பேஸ்ட் இப்ப கைவந்த கலையாச்சே.Sample message: என்பதில் Madam துவங்கி Please Reconsider செய்யுங்க என்பதை மகாராணிக்கான மெசேஜ் பகுதிக்கும் ஒட்ட வைத்து அனுப்பு என்றால் முடிந்தது ஓட்டுப்போடும் வேலை.

டைம்ஸ் பத்திரிகைக்கு பின்பான இரண்டாம் வாக்கு போடுபவர்களுக்கும் ஒளிந்து கொண்டே பார்வையிடுபவர்களுக்கும் தனியாக இன்னுமொரு நன்றி!

முழு விபரங்கள் இங்கே

http://www.colombotelegraph.com/index.php/sri-lankas-war-criminal-will-join-the-queen-at-the-taxpayer-funded-meal-make-sure-this-doesnt-happen-says-sri-lanka-campaign/

விரும்பியவர்கள் முகநூல்,ட்விட்டர் இன்னும் பல சுட்டிகளிலும் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தலாம்

அசலே இதுதான்.

 http://srilankacampaign.org

தேர்தல் நேரத்தில் காலையில் எழுந்து குளிச்சு தனது கடமையென்று ஓட்டுப்போடுபவர்களால் தான் ஜனநாயகமே இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது.அதுபோல் இதுபோன்ற சாத்வீகமான போராட்டங்களும் மூச்சு விடும்.அரசாங்கம் இன்னுமொரு நாள் லீவு விட்டுட்டாங்கன்னு படுத்து தூங்குவது மாதிரி க்ளிக் செய்து ஒட்டவைப்பது சிரமம்ன்னு நினைப்பதும்  எதிர்நிலைப்பாடும் கூட அவரவர்களின் தனி உரிமை.





No comments: