சென்ற வாரம் சேனல் 4ன் ஜான் சுனோவின் இலங்கையின் கொலைக்களம் முன்னிலையிலும் அல் ஜசிராவின் மே யிங்க் வெல்ஸின் இருளினில் அலறல் இரண்டாம் நிலையிலும் இருந்தது.தற்போது அல்ஜசிரா முதல் இடத்தில் நிற்கிறது.இரு ஆவணப்படங்கள் BAFTA வின் கருத்து ஓட்டளிப்பில் பி.பி.சி தொலைக்காட்சியின் பனோராமாவின் இரண்டு ஆவணப்படங்களைப் பின் தள்ளி அல்ஜசிரா முன்னிலையிலும்,சேனல் 4 இரண்டாம் இடத்திலும் தற்போது உள்ளது.
ஏனைய அரேபிய நாடுகளான டுனிசியா,எகிப்தின் அரேபிய வசந்தத்திற்கும் மாறாக பஹ்ரைனில் எழும் சுதந்திர குரல் வித்தியாசமானது.காரணம் பெட்ரோலியப் பொருளாதாரத்தின் வளங்களில் முன்னேறிய வளைகுடா நாடுகளில் பஹ்ரைனும் ஒன்று.சுதந்திரம்,கருத்துரிமைகள் கூட சுயநலங்களின் அடிப்படையிலே பரிசளிக்கப்படுகின்றன என்பதற்கு பஹ்ரைனில் எழுந்த மக்களின் போராட்டம் ஒரு மிக சிறந்த உதாரணம். காரணம் போராட்டக்களத்தில் இருப்பவர்கள் ஷியா பிரிவை சார்ந்த இஸ்லாமியர்கள் என்றும் ஈரானின் ஆதரவு இந்தப் போராட்டத்திற்கு உள்ளது என்றும் சொல்லி சவுதி அரேபியாவின் டாங்குகள் பஹ்ரைன் தெருக்களில் நுழைந்து போராட்டத்தை ஒடுக்கி விட்டது.
இதற்கு மறைமுக ஆதரவாக அமெரிக்காவின் பெட்ரோலிய அரசியலும் துணை.தற்போதைய நிலையில் உலக பெட்ரோலியம் சார்ந்த பொருளாதாரம் சுமூகமாக நிகழ்வதற்கு வளைகுடா மாற்றங்கள் தேவையில்லையென்றே அமெரிக்கா கருதுகிறது.சேனல் 4 ஆவணப்படத்தையும் ஆதரிக்கலாம். விரும்பாத பட்சத்தில் அல்ஜசிராவின் இருளின் அலறலுக்கு வாக்களிக்களிக்கலாம்.
யாருக்கு உங்கள் ஓட்டு?
http://www.radiotimes.com/news/2012-04-30/watch-bahrain-shouting-in-the-dark-and-sri-lanka%27s-killing-fields
8 comments:
வணக்கம் சகோ
உலகின் பெரும்பாலான சமூக பிரச்சினைகளையும் பெரும்பானமை,சிறுபானமையினர் அதிகாரப் பகிர்வு என வரயறுக்கலாம்.
இலங்கையில் தமிழர்கள் சிறுபானமை சிங்களர் பெரும்பானமை என்பதால் பிரச்சினை என்றால் பஹ்ரைனில் சிறுபானமை சுன்னி இன்ம் பெரும்பானமை ஷியாவை அடக்கி ஆள நினைக்கிறது.சிரியாவிலும் இதே நிலைதான் ஆனால் சிரியா குற்றம் சாட்டப் படுகிரது.
ஒரே பிரச்சினை வல்லரசுகளின் அரசியல் ஆதிக்கப்போட்டியால் எப்படி வேண்டுமானாலும் திசை திருப்ப படும்.ஊடகங்களின் உதவியோடு பிரச்சாரம் முன்னெடுக்கப்படும்.
இந்த சிறுபான்மை வாதம் ,பெரும்பானமை வாதம் என்பதே செயற்கையான உருவாக்கங்கள் என்பது என் கருத்து.இரண்டும் ஒன்றையொன்று எதிர்ப்பது போல் தோன்றினாலும் உண்மையில் வளர்க்கின்றன.
ஈழம் பற்றி ஆக்கபூர்வமான் விவரங்களை அடிக்கடி பகிருங்கள் சகோ
நன்றி
வாங்க சகோ.சார்வாகன்!சற்று நேரத்திற்கு முன்புதான் பாகிஸ்தானின் சர்தாரி இந்திய வருகை நேரத்து தருமி அய்யாவின் பதிவான சூபியிஸம்,வஹாபியிஸம் பற்றி வாசித்தேன்.தருமி அய்யாவின் பதிவும்,சுவனப்பிரியன் பின்னூட்டங்கள் உட்பட விவாத களத்திற்கு கொண்டு செல்லும் நிலையில் முந்தைய பதிவிற்கான அவசியமே இல்லையென நினைக்கிறேன்.
GCC (Gulf Cooperation Council)என்ற வலையமைப்புக்குள் உள்ள வளைகுடா நாடுகளில் பெரும்பான்மையானவர்கள் சுன்னி பிரிவைச் சார்ந்தவர்களாகவும் சிறுபான்மையானவர்களாக ஷியா பிரிவினர்களாகவும் இருக்கிறார்கள்.இருந்த போதிலும் தொழுவதற்கான தனி மசூதி உரிமைகள் இருந்த போதும் ஷியா பிரிவினருக்கான சிறப்பு நாட்களுக்கு விடுமுறைகள் எதுவும் அரசு பூர்வமாக இல்லை.தமிழ்மணத்தில் ஏற்படும் மத சலசலப்புக்கள் எல்லாம் இங்கே எதையும் காணோம்.இதனை தமிழகம் சார்ந்த அல்லது சவுதியில் பணிபுரியும் வஹாபியிசம் பேசும் இஸ்லாமிய சகோதரர்களே பதிவுகள் இட்டு குழு சேர்த்து பதிவுலக கலவரத்தை உருவாக்குகிறார்கள். எனவே பஹ்ரைனில் எழுந்த போராட்டக் குரல் கருத்துரிமை சார்ந்த மதத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே வெளிப்பட்டது.ஆனால் இதற்கு ஈரானின் ஷியா சாயம் பூசி சவுதியின் ராணுவ அடக்குமுறையில் போராட்டத்தை வலுவிலக்க செய்து விட்டார்கள்.
ஏனைய தேசங்களின் வறுமை,அரசு ஊழல் சார்ந்த ஆட்சிகளோடு ஒப்பிடும் போது பஹ்ரைனின் பொருளாதார நிலையில் போராட்டம் தேவைதானா என்ற கேள்வியும் பலரிடமிருந்து எழுகிறது.
நல்லவேளை சிரியாவை நினைவுபடுத்தினீர்கள்.சிரியாவின் பலம் இஸ்ரேலியர்களுக்கு ஆபத்து என்பதால் அதனை துண்டாடும் விதமாகவும் அமெரிக்காவின் சொற்பேச்சைக் கேட்கும் ஒருவர் தேவையென சிரியாவில் அமெரிக்கா மூக்கை நுழைக்கிறது.அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டு சுதந்திரம் கேள்விக்குரிய ஒன்றே.
நீங்கள் சொல்லும் பெரும்பான்மை,சிறுபான்மை வாதம் ஒருவிதத்தில் அமெரிக்காவின் சுயநலத்திற்கு ஊக்குவிக்கப்படுகிறதென்பதும் உண்மையாக தெரிகிற்து.நம்ம ஊர்ல இதனை ஊர் இரண்டான்னா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
தற்போதைய நிலையில் ஈழம் குறித்த குளறுபடிகள்,ஒற்றுமையற்ற பல வித கருத்துக்கள் கவலை அளிப்பதாகவே தெரிகிறது.ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் அறிக்கை வெளியிடுகிறார்கள்.மொத்த தமிழர்களின் குரலையும் ஒன்றிணைக்க ஒருவருக்கும் வலுவில்லை.
முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்ப எனது கருத்தை தொடர்ந்து பதிவு செய்கிறேன்.நன்றி.
கூடவே குடியுரிமை இல்லாமல் பாஸ்போர்ட் இல்லாதவர்களாகவும் பிதுன் (bedoun) என்றும் சில பழங்குடி இனத்தவர்களை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.இதற்கான சலசலப்புக்களும் மெல்ல எழவே செய்கின்றன.ஆனால் பொது ஊடகங்களில் இவை வருவதில்லை.
சகோ.சார்வாகன்! தட்டச்சில் பாரா குரங்கு தாவல் செய்து விட்டது.இறுதி பாராவை
//ஏனைய தேசங்களின் வறுமை,அரசு ஊழல் சார்ந்த ஆட்சிகளோடு ஒப்பிடும் போது பஹ்ரைனின் பொருளாதார நிலையில் போராட்டம் தேவைதானா என்ற கேள்வியும் பலரிடமிருந்து எழுகிறது.//
என்பதற்கு அடுத்து இணைத்து வாசிக்கவும்.
சகோ ராஜ நடராஜன்!
//ஏனைய தேசங்களின் வறுமை,அரசு ஊழல் சார்ந்த ஆட்சிகளோடு ஒப்பிடும் போது பஹ்ரைனின் பொருளாதார நிலையில் போராட்டம் தேவைதானா என்ற கேள்வியும் பலரிடமிருந்து எழுகிறது.//
உங்களின் பல கேள்விகளுக்கு இந்த ஒரு வரியே பதிலாக அமைந்து விட்டது. பெரும்பான்மையோ சிறுபான்மையோ மக்கள் சுபிட்சமாக இருக்க வேண்டும்.
சகோ.சுவனப்பிரியன்!மதம் என்ற தலையீடு இல்லாமல் பஹ்ரைனில் உருவாகும் போராட்டம் புதிய மாற்றங்களை வளைகுடா நாடுகளில் கொண்டு வரலாம்.பொருளாதார வளங்கள் நிறைந்து சிறந்த கட்டமைப்பை உருவாக்கி வைத்திருந்தாலும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
நம்மையெல்லாம் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டாலும் இந்த மண்ணின் மைந்தர்களில் பழங்குடி மக்களுக்கு கூட குடியுரிமை வழங்குவதில்லை.போராட்டங்களுக்கு அவசியமேயில்லாமல் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வரலாம்.
வளைகுடாவின் பல மொழி,தேச கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஒருமைப்பாட்டையெல்லாம் நீங்கள் யாரும் முன் மொழிவதேயில்லை:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//நம்மையெல்லாம் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டாலும் இந்த மண்ணின் மைந்தர்களில் பழங்குடி மக்களுக்கு கூட குடியுரிமை வழங்குவதில்லை.போராட்டங்களுக்கு அவசியமேயில்லாமல் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வரலாம்.
வளைகுடாவின் பல மொழி,தேச கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஒருமைப்பாட்டையெல்லாம் நீங்கள் யாரும் முன் மொழிவதேயில்லை:) //
ராஜ்,
காமெடி செய்றிங்க, அதெல்லாம் எப்படி சு.பி கேட்பார், அங்கே தான் மானாவாரியா பாலாறு, தேனாறு ஓடுதே தேவைப்பட்டவங்க நக்கியோ ,ஸ்ட்ரா போட்டோ குடிச்சுக்கலாம் அப்புறம் என்னாத்துக்கு சமத்துவம் ,ஒருமைப்பாடு ,குடியுரிமை எல்லாம்.
மன்னராட்சி நடக்கிற நாட்டில் வாழ விடுவதே கொடுப்பினை ஆச்சே. நாட்டின் வளங்கள் மக்களுக்கு அல்ல அது சிலரின் தனிப்பட்ட சொத்து அவர்கள் வேலை போட்டுக்கொடுத்தால் செய்துவிட்டு சம்பளம் வாங்கிக்கொண்டால் போதும்.
வாக்குரிமை,ஜனநாயகம் ,சமூக நீதி, இதெல்லாம் இல்லாத நாட்டில் நீங்கள் அதிகம் எதிர்ப்பார்க்கிறிங்க :-))
கடந்த வெள்ளிக்கிழமை நடிகர் விவேக் குவைத் வந்திருந்தார்.பல மொழி,இனம்,சாதி வேறுபாடுகளுக்குமிடையில் இந்திய இறையாண்மை பற்றி சொன்னார்.வளைகுடா நாடுகளில் சம உரிமையில்லாத போதும் கூட பல நாட்டு மக்களின் கலாச்சாரங்களை உள்வாங்கிக் கொள்கிறது.மொத்த இந்தியர்களிலும் நல்லவர்கள்,கெட்டவர்கள் என்ற கலவை மாதிரி அரேபியர்களிலும் இருக்கிறார்கள்.அதே போலவே மத அடிப்படைவாதிகளிலும் மென்மையானவர்களும்,தீவிரவாத தன்மை கொண்டவர்களும் காணப்படுகிறார்கள்.இதையெல்லாம் தேசங்கள் கடந்தவை என்றே சொல்வேன்.நம்ம இஸ்லாமிய சகோதரர்கள் மதத்தை மட்டுமே முன்னிறுத்துவதால் அரேபிய கலாச்சாரத்தின் மொழி,இசை,கவிதை,உணவு,உடை போன்றவை வெளியே தெரிவதில்லை.உடையைப் பொறுத்த வரையில் பாலைவன தட்ப வெப்ப நிலைக்கான உடையாக இருந்தாலும் நம்ம இஸ்லாமிய சகோதரர்கள் பர்தாவையே உயர்த்திப் பிடிக்கிறார்கள்.எந்த ஒரு நாட்டின் உணவும்,உடையும் அந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கு ஒப்பாகவே அமைகின்றன.நீர் வளம் காரணமாக நமது உணவு கஞ்சி,ரசம்,மோர் உள்ப்ட நீராகரமாக இருக்கிற்து.அதுபோலவே நீர் தட்டுப்பாடான முந்தைய பாலைவன வாழ்க்கையை ஒட்டி காய்ந்த அல்லது சுட்ட ரொட்டியோ அல்லது அரிசி கிடைக்கின்ற போது அரிசி,ஆட்டிறைச்சி,தக்காளியென கலந்து மக்பூஷ் என்ற உணவு இந்திய வாசனை உணவு திரவியங்களுடன் கலந்து பின்பு பிரியாணியாக உருவெடுத்து விட்டது.கரடு முரடான சூழலில்,அதி உஷ்ண தேசத்தில் வெளி உலகின் தாக்கமின்றி வாழ்ந்த காரணத்தால் கலாச்சார முரட்டு சுபாவம் இருந்த போதிலும் இஸ்லாமிய வழிபாடு மென்மையானவர்களாகவும்,தீவிர வஹாபியசமாகவும் உருவாக்கியிருக்கிறது.தற்போதைய நிலையில் 9/11 காலத்திற்கு முந்தைய வரை அமெரிக்க கல்வியும்,மேற்கத்திய கலாச்சாரத்தோடு இணைந்தவர்களாக நிறைய பேர் இருக்கிறார்கள்.அளவீட்டில் ஆசிய நாட்டின் உழைப்பாளர் வர்க்கம் அதிகம் இருப்பதால் வளைகுடாவில் உரிமைகள் மறுக்கப்படுகின்ற சூழல் இருந்தாலும் skilled labour பணியில் இருப்பவர்கள் சுகமான வாழ்வே வாழ்கிறார்கள்.
ஒரு முறை ஒரு போட்டோ ஷூட்டிங்கிற்காக கோல்ஃப் மற்றும் குதிரைப் பந்தய மைதானம் இணைந்த இடத்திற்கு சென்றேன்.வாகனம் கேட்டை தாண்டி விட்டால் அது ஒரு தனி உலகம்.வெளிப்பார்வைக்கு மத ஆட்சி போல தோன்றினாலும் குதிரைப்பந்தய மைதானம் கேபிடலிசம் சார்ந்த இடமாக அனைத்து நாட்டு தூதர்கள்,கார்பரேட் மேலாளார்கள் என நீங்கள் சொல்லும் வாக்குரிமை,ஜனநாயகம்,சமூக நீதிக்கு அப்பாற்பட்ட தனி உலகம்.
துபாய் வளைகுடாவின் வாசல்.க்த்தார் அமெரிக்க பாதுகாப்பு சார்ந்த விமான படைத்தளம்.நாளை பெட்ரோல் தீர்ந்து விட்டாலும் கூட வருங்கால சந்ததியினர் வளமாக வாழ குவைத் சேமிப்பு என்ற பெயரில் உலக நாடுகள் அனைத்திற்கும் நீண்ட கால கடனாக பொருளாதார உதவி செய்கிறது.சவுதி மெக்காவினால் இஸ்லாமிய ஆன்மீகம் வளர்க்கிறது.மற்றபடி நம்ம ஆட்கள்தான் மேற்கத்திய நாடுகள் முழுவதும் இஸ்லாமியம் வளர்கிற்தென்று பீலா விட்டுக்கொண்டிருக்கிறார்கள்:)உலகம் குளோபல் கிராமமாக மாறி விட்டதால் ஏனைய நாடுகளின் தாக்கங்களும் மண்ணின் மைந்தர்களிடம் முணுமுணுப்பை உருவாக்குகிறது.மேலும் நீங்கள் நினைக்கிறபடி வாக்குரிமை,ஜனநாயகம் இல்லாமல் இல்லை.என்ன இந்திய ஜனநாயகம் மாதிரி இரைச்சலாக இல்லாத காரணத்தால் ஜனநாயகம் இல்லாதது போல் தோற்றமளிக்கிறது.
//இஸ்லாமிய ஆன்மீகம் வளர்க்கிறது.மற்றபடி நம்ம ஆட்கள்தான் மேற்கத்திய நாடுகள் முழுவதும் இஸ்லாமியம் வளர்கிற்தென்று பீலா விட்டுக்கொண்டிருக்கிறார்கள்://
என்ன இப்படி ஒண்ணு சொல்லிட்டீங்க!
Post a Comment