Followers

Thursday, October 8, 2015

விஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்!


  • அரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிறது எனலாம்.சங்கிலி முருகன் யாரென்றும், அவர் வழக்கு தொடர்ந்து காலம் தொட்டு சுமார் 5 வருடங்களுக்கும் மேலாகியும்,குமரிமுத்து,எஸ்.வி.சேகர் போன்றவர்களை வெளியேற்றிய கால கட்டங்களில் புகைய துவங்கி இன்று கோபக்கனல்கள்,எதிர் மறுப்பு என பொது வெளிக்கு  வந்து விட்டதால் கருத்துரிமை பங்காளியாகிறேன்.


சரத்குமார் அணியில் ஓரளவுக்கு தன்மையாக,மென்மையாக பேசும் குரல் சரத்குமாருக்கு மட்டுமே இருக்கிறது.ஆனாலும் அரசியல சாவகாசம்,பொதுப் பிரச்சினைகளை கையாண்ட அனுபவங்களால் கட்டப்பஞ்சாயத்து அரசியல் தொனியில் குற்றங்களை தொடுகிறார்.வாதங்களை வைக்கிறார். 

திரைப்படத்துறையினருக்கு கிடைக்கும் பயணங்கள்,மனித உறவுகளின் உளவியலை நடிப்பு,கதை,வசனம்,முகபாவங்கள் என பல வடிவத்தில் கொண்டு வரும் வாய்ப்பு பெற்றவர்கள்.இதுவே அனுபவங்களாகவும் ,தமிழகத்தின் வாழ்வியலை உணரும் அதிக வாய்ப்புகளும், வரங்களும் பெற்றவர்கள். ஆனாலும் ராதாரவி,சிம்பு,ராதிகா என அனைவரும் ஞான சூன்யங்களாக இருக்கிறார்கள்.

 நண்பர்களிடம் கெட்ட வார்த்தை பேசுவதற்கும்,மைக்கை கையில் ஏந்திக்கொண்டு திட்டுவதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.என்ன வருண் காதில் விழுகிறதா:) பதவிக்கு ஆசை என்பதை விட 29 வருடம் 11 மாதம் குத்தகைக்கு விட்டதில் குளறுபடிகள் இருக்கின்றன என்பதை சங்கிலி முருகன் பேச்ச்சிலும்,சரத்குமாரின் மறுப்பு அறிக்கையிலும் உணர முடிகிறது.

ரஜனி,கமல்,சூர்யா,விஜய்,அஜித் போன்றவர்கள் பேசாமல் இருப்பதில் அர்த்தம் இருக்கிறது.அவர்கள் அமைதியாக இருப்பதை ஆதரிக்கிறேன். 

 சின்னப்பையனிலிருந்து நடிக்கிறேன் என்று ஒருமையில் விஷாலை திட்டி சிம்பு கத்துவதற்கும்,கமலின் சின்ன வயது முதல் நடிப்பிற்கும்  வீணாப்போன சென்னை ஆற்றுக்கும்,,இமயமலை அடிவார அருவிக்குமான வித்தியாசங்கள் உள்ளது.

இரண்டு அணிகளின் மேடைகளின் பக்கவாத்தியமாக நிற்பவர்களின் முகபாவங்களிலேயே தெரிகிறது பஞ்ச பாண்டவர் குழுவின் வெற்றிக்கான அறிகுறியும்,சோர்ந்து போன முகங்களாய் சரத்குமார் அணியும். 

சரத்குமார் அணிக்கு தோல்வி நிச்சயம் என்ற போதிலும் பின்வாங்காது ஜனநாயக தேர்தலுக்கான அடிக்கல்லை அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்லட்டும்.ராதாரவி திரைப்படக்குழுவினர்க்கு ஆற்றிய பணிகள்,சரத்குமார் வங்கியில் பேசி கடனை குறைத்த நல்ல காரியங்கள் ஒரு தராசிலும்,கெட்ட வார்த்தைகள்,ஈகோ போன்றவை மறு தராசிலும் ஒப்பிட்டாலும் பெரும் தவறாக 30 வருட குத்தகை மாபெரும் தவறு. 

எட்டாத,கிட்டாத தூரத்தில் நான் வனவாசம் செய்வதால் திட்டக்குழுவினரான சண்டைக்கோழிகளான சரத்குமார் அணி மைக்கை பிடிக்காமல் மனதுக்குள்ளே என்னை திட்டுமாறு வேண்டுகிறேன்.

முடிக்கிறதுக்கு முன்னாடி சத்யராஜ் கடைசி ரயிலை பிடித்து வந்ததற்கு பாராட்டுகள். சிவக்குமார்,பாக்கியராஜ், பிரகாஷ் ராஜ், போன்றவர்களிடம் பெரும் மெச்சூரிட்டி வெளிப்படுகிறது.

12 comments:

வருண் said...

***என்ன வருண் காதில் விழுகிறதா:) ***

நீங்க இந்த கத்துக் கத்தினால் விழாமல் என்ன செய்யும்?!!! :)))

ராஜ நடராஜன் said...

வருண்@வணக்கம்.நலமா இருக்கீங்களா?

நம்ம சண்டைக்கூட்டமெல்லாம் கலைந்து போன மாதிரி தெரியுதே1 எல்லோரும் ஒப்புக்கு சப்பாணியா தமிழ் மணத்தில் ஆட்டம் ஆடற மாதிரி தெரியுதே.

முகுந்த் அம்மா பதிவில் ஆதிமனிதனை பிராண்டினீர்கள் போல தெரியுதே:) ஆனாலும் நீங்கள் சொல்வது மெய்யாலுமே உண்மைதான்.

வருண் said...

அடடா! நீங்க இன்னும் அப்படியேதான் இருக்கீங்க போல இருக்கு! உங்க புற அழகை வர்ணிக்கவில்லை! மனநிலையைச் சொன்னேன்.

சரத்குமாரை பிராண்டுவதை விட்டுட்டு சம்மந்தா தம்மந்தம் இல்லாமல் செவனேன்னு இருக்க வரணுக்கு கிச்சு கிச்சு காட்டுறது. "கிச்சுக் கிச்சு காட்டினால் வருவது சிரிக்கிறது மரியாதைக்குத்தான், உண்மையில் வருவது எரிச்சல்தான்"னு சொல்லீட்டுப் போகலாம்னு வந்தால். உடனே யாரு பெத்த பிள்ளையோ "ஆதிமனிதன்"க்கு ரத்தக்காயம் ஆயிடுச்சு, டிங்க்சர் வாங்கிட்டு வாங்கனு னு இங்கே உக்காந்து ஒப்பாரி வைக்கிறது!

நீங்க என்ன செய்வீங்க பாவம்..என்ன பேச வந்தோம்னு வந்து பேசிட்டுப்போனால் ஒரு பயகூட கேக்க மாட்டேன்கிறான்னு இப்படி ஆரமுச்சுட்டீங்க போல. :( நடத்துங்க!

ராஜேஷ், திருச்சி said...

Sangili Murugan???????? yepaaa adhu "poochi" Murugan..

ஜோதிஜி திருப்பூர் said...

அப்பாடி மறுபடியும் வந்துட்டீங்க.

ரொம்ப ரொம்ப வாய்ப்பு குறைவு ராஜ நடா. காரணம் நாடக நடிகர்கள் என்ற பெரும்படையை ராதாரவி வைத்துள்ளார். அவர்கள் மனம் மாறினால் இவர்களுக்கு வாய்ப்புண்டு.

ராஜ நடராஜன் said...

வருண்@கடைக்கு மறுபடியும் வரல.எனவே தாமத பின்னூட்ட்டத்திற்கு மன்னிக்கவும்.
அண்ணே! நல்லாத்தான் சொன்னீங்கன்னு சர்டிபிகட் கொடுத்தாலும் அதுக்கும் முறைக்கிறீங்களே:)

ராஜ நடராஜன் said...

திருச்சி ராஜேஸ்/நாந்தான் டச் விட்டுப்போய் தப்பா சொல்றேன்னா நீங்களாவது சொல்றதை ஒழுங்கா சொல்லக்கூடாதா:)

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி! வணக்கம்.நலமா?

வவ்வால் ஒட்டகம் மேய்க்கிற பயல்ன்னு ஓட்டுனதுக்கு பெட்ரோல் வித்திகிட்டிருக்கேன். ஒரு கிடையில இருக்க முடியாம,கணினி,வாகன பயணம்,கஸ்டமர் ஸ்மைல்ன்னு பதிவில் கவனம் செலுத்த முடியல.
இந்த பதிவு போட்டதுக்கும் கூட காரணம் சிலம்பரசன் டாய் மிரட்டல் தாங்காமல் போட்ட வருத்தமுடன்:(

தனிமரம் said...

இந்த கூத்தை எல்லாம் பார்க்க விருப்பம் இல்லை நம்நாட்டு கூத்தே முடியல நடா அண்ணாச்சி! மீண்டும் வலையில் பார்ப்பது சந்தோஸம் நலம் அறிவதிலும்!

ராஜ நடராஜன் said...

தனிமரம்! எல்லோரும் இங்கேதான் ஊர் சுத்துறீங்க போல தெரியுதே:) எல்லோருமே பெவிலியன்ல உட்கார்ந்துகிட்ட ஆட்டம் ஆடுவது யாரு? இப்பவெல்லாம் யாராவது பதிவு போட்டா கூட பின்னூட்டம் சொல்றதுக்கு கூட பல் வலிக்குதுன்னு யாரும் பின்னூட்டம் போடறதில்ல. அப்படியே யாராவது பங்காளி முய் வெச்சாலும் நன்றி@வருகைக்கு நன்றின்னு சொல்லி முடிச்சிடறாங்க:)

காரோடு ஓடிக்கொண்டே இருப்பதால் கணினியில் பதிவில் அதிகம் கை வைக்க முடிவதில்லை.

Amudhavan said...

நேரமில்லாத நேரத்திலும்கூட எப்படியாவது பதிவுப்பக்கம் எட்டிப்பார்க்கும் தங்களின் ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள். நீங்கள் சொல்வதுபோல் விஷால் அணி வெற்றிபெற்றால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் தேர்தல் என்று வந்தாலேயே வாக்காளர்கள் யார் என்பதிலேயே தகிடுதத்தங்கள் ஆரம்பித்துவிடுகின்றன. இந்தமுறை 'அந்த' வாக்காளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதாகப் புதிய அணி அளித்திருக்கும் வாக்குறுதிகளுக்கு அவர்கள் செவிசாய்க்கிறார்களா என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் இருக்கும்.
ஆமாம், வவ்வால், ஒட்டகம் என்று என்னமோ சொல்லியிருக்கிறீர்களே- நம்ம வவ்வால் பற்றிய புதிய செய்தி ஏதேனும் உண்டா?

வேகநரி said...

வளாந்து வரும் ஒரு தொழில் அதிபராகிய நீங்க தென்னிந்திய தமிழ் திரைப்படஉலகோடும் நிறைய தொடர்பில் இருப்பவர் போலும் தெரிகிறது.
பெரியவர் அப்துல் கலாம் பற்றிய உங்க பதிவு,துபாயில் இந்திய உணவகங்கள் பற்றிய தகவல்கள் சுவரசியம். சில மாதங்களுக்கு முன் கனடா செல்வதற்காக உங்க ஊரில் சில மணி தங்கியிருந்தேன். அடுத்த முறை போதுமான நேர இடைவெளியிருந்தா இந்திய உணவகத்துக்கு ஒரு விசிட் பண்ணலாம்.