Followers

Saturday, April 12, 2008

ஏப்ரல் மாதத்தின் தனிமைக் காலை







அனைவருக்கும் வணக்கம்.

நாம கிணற்றுத தவளையா வேலைக்கும் வீட்டிற்கும் வண்டி ஓட்டிகிட்டு இருந்தா பெரிய தலைகளெல்லாம் கூர்க் வண்டி கட்டிகிட்டு போட்டா புடிக்க போறாங்க.இவங்க கூடயெல்லாம் யாரு மல்லுக் கட்டி போட்டி போடறது? போன மாசம் வேற போட்டியில கலந்துக்க முடியாத சோகம்.இந்த மாசமும் அப்படி ஆயிடக் கூடாதுன்னு பேருக்கு ஒரு படம். கடல் பக்கம் போனா மீனு கிடைக்காத சோகத்துல பூனையொன்னு பம்மிகிட்டு நிக்குது.மேக்ரோவில நல்லா இருக்குற மாதிரித் தெரிந்தது.அனுப்பலாமுன்னு ஆட்டத்துக்கு வந்தா நமக்கு முன்னாலேயே ஒரு பூனை சிப்பாயாட்டம் நிக்குது.சரின்னு ஒண்டியா ஒரு புறாவுக்கு நீ போ போட்டிக்குன்னு அனுப்பலாமுன்னு பார்த்தா அதுக்கு முன்னாடி கடலை போடக் கூப்பிட்டுகிட்டு முன்னால ஒரு வாத்து நடந்துகிட்டு இருக்குது.எப்படியோ போட்டிக்குள்ள தலையக் காட்டிடணும்ன்னு ஒரு தல காலையில தனிமையில சூரிய்னைப் பார்த்துகிட்டு நின்னுகிட்டு இருந்ததை அனுப்புறேன். ஒரே படம்ங்கிறதால கொசுறுவா கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலர்ன்னு பாடிகிட்டு நிக்கும் புறாவும் தனிமையில் இனிமை காணும் பூனையும் பார்வைக்கு.