Followers

Friday, July 15, 2011

ஊறுகாய் செய்வது எப்படி?

கொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தாளிக்கிறாங்க,இந்த பசங்க சுத்த மோசம்ன்னு சுகாசினி அக்கா எங்கேயே சொல்லி வைக்க அதை ஒட்டுக் கேட்டுட்டிருந்த பதிவர் ஓசை, பதிவர்களை எப்படி திட்டலாமென்று சுகாசினி அக்கா மேல் ஒரே கோபம்.அவங்களுக்கு கருத்து சுதந்திரமிருக்கிறதென்று பின்னூட்டத்துல சொல்லும் போது நானும் கடை திறந்து வச்சிருக்கேன் பேர்வழின்னு அருண் என்ற பேர்ல ஒருத்தர் ஒரு பதிவு கூட போடாம தான் சவுதியில இருப்பதாகவும்,பதிவுலகைப் பார்த்துதான் சமையலே கத்துகிட்டேன் என்று சொல்லியிருந்தார்.சுகாசினி அக்காவுக்கு குறைதீர்த்த மாதிரியும் ஆச்சு அப்படியே ஊறுகாய் சமையல் சொல்லிக் கொடுத்தமாதிரியும் ஆச்சுன்னு இந்த பதிவு.

அதோட ஊறுகாய் போன்ற பொருட்களின் அருமை நாக்கு செத்த வளைகுடா போன்ற நாடுகளில் வாழ்பவர்களுக்கே நன்கு தெரியும்.ஊறுகாய் மட்டுமல்ல இப்பொழுதெல்லாம் எங்காவது இந்திய கடைகளில் அபூர்வமாய் கிடைக்கும் கருப்பட்டி,பனங்கற்கண்டு போன்ற பொருட்களையெல்லாம் தேடிப்பிடித்து வாங்குவது எனது வழக்கம்.இதே மாதிரி நம்மூர் மசாலான்னு சக்தி மசாலா பாக்கெட் வாங்கியதில் கோழிக்கே குசியாகி ருசியாகி விட்டதிலிருந்து சக்தி ம்சாலாக்களையும்,ரசப்பொடி,சாம்பார் பொடியையும் கண்டால் விடுவதில்லை.இப்படி நற்பெயர் சக்திமசாலா காரணமாக இரு வாரங்களுக்கு முன்பு ஒரு சக்தி மசாலா மாங்காய் மற்றும் பூண்டு ஊறுகாயை வீட்டுக்கு கொண்டு வந்து அம்மணியிடம் வாங்கி கட்டிக்கொண்டேன்.காரணம் ஊறுகாய் ஒரே உப்பு மற்றும் ருசியில்லை.சில நிறுவனங்கள் வளர்கின்ற நிலையில் நன்றாக செயல்படுவார்கள்.வளர்ந்த பின் நிறுவனத்தின் தடுமாற்றம் நிறுவன உழைப்பாளிகளின் செயல்பாடுகளில் தெரியும்.முக்கியமாக ஊறுகாய் போன்ற உணவுப்பொருட்களில் உப்பு,ருசியின்மைக்கு தொழிலாளர் ஊதியம்,பணி திருப்தியின்மை போன்ற காரணங்களாகக் கூட இருக்ககூடும். ஈரோட்டுக்காரர்கள் சக்தி மசாலாவுக்கு தகவல் சொல்லி அனுப்பினால் நல்லது.

பெரும்பாலும் ஊறுகாயெல்லாம் நம்ம கைவண்ணத்திலேயே செய்து கொள்வது வழக்கம்.நம்ம கைப்பதத்துக்கு ஊறுகாய் சீக்கிரம் சீக்கிரமா காணாமல் போகுதேயென்று சில சமயம் சோம்பேறி பட்டுகிட்டு மீண்டும் செய்து வைப்பதுமில்லை.கடைகளில் வடுமாங்காய் பாட்டில்காரர்களும் கூட சரியான ருசியைக் கொண்டு வருவதில்லை.முன்பெல்லாம் வாழை மட்டையில் தாளித்து வைத்த ஊறுகாய்கள் கடைகளில் கிடைக்கும்.இவை முக்கியமாக கோவை மாவட்டத்தில் மிக பிரசித்தம்.இதே ஊறுகாய்கள் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் இப்பொழுது மறு அவதாரம் எடுத்திருக்க கூடும்.மலரும் நினைவுகளை விட்டு இப்ப வீட்டுல ஊறுகாய் செய்வதைப் பார்க்கலாம்.

எனக்குப் பிடிச்சது மாங்காய் ஊறுகாய்ங்கிறதால மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.இளம் மாங்காய்கள் தேவைக்கு தக்கபடி அரைக்கிலோ அல்லது ஒரு கிலோ வாங்கி தொலைக்காட்சி சேனல் ஏதாவதை
ஓடவிட்டுக்கொண்டே மாங்காயை சின்னதா அரிந்து வைச்சு கொஞ்சமா உப்பு போட்டு 10நிமிசம் ஊறவச்சிடனும்.அப்படியே கொஞ்சம் பூண்டு,இஞ்சி விழுதா மிக்சியில் போட்டு பதமா அரைச்சு வச்சிக்கிடலாம்.நளபாக பிரம்மச்சாரிகள் மாங்காய் மாதிரியே அரிஞ்சும் கூட வச்சுக்கலாம்.(அரைச்சு,அரிஞ்சு தமிழ் மோனைகள் அழகாயிருக்குதில்ல)கொஞ்சம் பெருஞ்சீரகம்,குருமிளகு பவுடர் செய்து வைத்துக்கொள்ளலாம்.இதற்கு மிக்சிதான் தேவையென்று கிடையாது.நம்ம பாட்டிகள் வெத்தலை பாக்கை தையா தையத்தக்குன்னு இடிக்கிற பழைய காலத்து சின்ன இரும்பு உரலும் கூட போதுமானது.அம்மாக்களும்,பாட்டிகளும் இரும்பு உரலோடு முதியோர் இல்லத்துக்குப் போயிட்டாங்களேன்னு வருத்தப்படுறவங்க பட்டியலில் நானும் கூட சேர்ந்திருப்பேன்.பெண் பிள்ளை பெற்ற புண்ணியத்துல எங்கண்ணன் கிட்டேயிருந்து அம்மா தப்பிச்சிட்டாங்க.சரி சமையல் நேரத்துல செண்டிமெண்ட் வேணாம்.

மாங்காய்,இஞ்சி,பூண்டு முதல் கட்டமாய் சேர்த்திட்டோம்.

அடுப்படி மகாராணிகளுக்கு எந்த இடத்தில் என்ன பொருட்கள் இருக்குமென்பது அத்துபடியாக இருக்கும்.சிவபூசை கரடியாக நானும் ஊறுகாய் செய்வேனாக்கும்ன்னு சமையல் கட்டுக்குள் நுழைந்தால் அடுப்பை பற்ற வைத்துக்கொண்டு பொருளை தேடுவது சமையலின் ருசியை திசை திருப்பி விடும் என்பதால் ஒரு தட்டுல கடுகு,கடுகுக்கு துணையா உளுந்தம் பருப்பு, குண்டு மிளகாய்,கருவேப்பிலை,பெருங்காயம் தயாரா வைத்துக்கொள்ள வேண்டும்.மிளகாய்ப்பொடி,மல்லிப்பொடி,சீரகப்பொடி,குருமிளகுபொடி, கொஞ்சமா ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போன்றவை கலந்து வைத்துக் கொள்வோம்.

கடுகு,உளுந்துப்பருப்பு,குண்டு மிளகாய்,கருவேப்பிலை, பெருங்காயம் ,மசாலாப் பொடிகள் சேமிப்பு இரண்டாம் கட்டமாய் தயார் செய்திட்டோம்.

ஊறுகாய் நிறைய நாட்கள் இருப்பதற்கும் தமிழ்ச்சுவை வருவதற்கும் நல்லெண்ணெய் அவசியம்.கேரளாக்காரர்களுக்கு தேங்காய் எண்ணெயும்,பெங்காளிகளுக்கு கடுகெண்ணையும் விருப்பம் ங்கிறதால இந்த விளக்கம்.சித்திரம் மாதிரி சமையலும்கூட கலை என்பதால் எந்த பொருளுக்கு எவ்வளவு விகிதாச்சாரம் தேவை ங்கிறதெல்லாம் அனுபவத்தில்தான் வரும்.எனவே நாம் முதல் கட்ட பொருளுக்கு தகுந்த மாதிரி நல்லெண்ணெய் சேர்ப்பது எப்படி என்பது அவசியம்.500 கிராம் மாங்காய்,50 கிராம் பூண்டு,50 கிராம் இஞ்சிக்கும் கிட்டத்தட்ட 100கிராம் மசாலாப் பொடிக்கும் 150 -200 மில்லி எண்ணெய் சரியாக இருக்குமென  நினைக்கின்றேன்.

இதுவரைக்கும் சொன்னதெல்லாம் ட்ரெய்லர்.இப்பத்தானே ஊறுகாய் தயாரிப்புக்கு வருகிறோம்.அடுப்பை பத்த வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு,உளுந்து கலவையை போட்டு பட்டாசு மாதிரி வெடிக்க ஆரம்பிச்சா எண்ணெய் தயாராக இருக்குதென்று அர்த்தம்.அடுத்து கருவேப்பிலை,குண்டு மொளகாய்,இஞ்சி பூண்டை கலந்து,பெருங்காயம் மசாலாப் பொடிகளைப் போட்டு நுரை மாதிரி எண்ணெய்ப் பதம் இருக்கும் போது அடுப்பை விட்டு இறக்கி வைத்து அரிஞ்ச மாங்காயை கலக்கி உப்பு பார்த்து ஆறவைச்சிட்டா ஊறுகாய் தயார்.சில தினங்களில் ஊறுகாய் கமகம வாசத்துடன்.


இதுவரைக்கும் சொன்னது ஊறுகாய் எப்படி செய்வது எப்படியென்பதும் சுகாசினி அக்காவுக்கு பதிவுலகில் அனைத்தும்  பதிவு செய்யப்படுகின்றன என்பதும்.சக்தி மசாலா ஊறுகாயில் ருசியுமில்லை,உப்பு அதிகமாகப் போச்சேன்னு  சொல்லியிருந்தேன்.ருசியும்,உப்புமில்லைன்னு வாங்கின ஊறுகாயை அப்படியே விட்டு விட முடியுமா என்ன?பதிவில் சொன்ன அதே பொருட்களுடன் உப்பு மட்டுமில்லாமல் படத்துல இருக்கும் ஊறுகாயை கலந்து விட்டேன்.இந்தப் படம் க்ளிக்கும் போது ஊறுகாய் காலி:)

26 comments:

Anonymous said...

தேசிக்காயிலும் ஊறுகாய் செய்வார்களே , மிகவும் சுவையாக இருக்கும்... அப்புறம் சுகாசினி அக்காவை யாரோ பதிவுலகத்தில கலாச்சு போட்டங்கள் போல , அது தான் பார்த்து கடுப்பாகிட்டா !!

சார்வாகன் said...

/சுகாசினி அக்காவுக்கு குறைதீர்த்த மாதிரியும் ஆச்சு/

அருமை சகோ.பதிவுலகம் ஒரு சூப்பர் மார்கெட் மாதிரி யாருக்கு எது வேணுமோ கிடைக்கும்.சுஹாசினி அக்கா தீர்ப்பை மாத்தி சொல்லுங்க.
/ஊறுகாய் நிறைய நாட்கள் இருப்பதற்கும் தமிழ்ச்சுவை வருவதற்கும் நல்லெண்ணெய் அவசியம்./
ஆஹா அபாரம்!!!!!,தமிழ் வாழ்க,த்மிழர்கள் வாழ்க,தமிழ்சுவை ஊறுகாயும் வாழ்க!!!!!!!!

நிரூபன் said...

ஊறுகாய் செய்வது எப்படி?//

வணக்கம் பாஸ், நான் ஏதோ நம்ம சீனியர் அண்ணாச்சியும் சமையலில் இறங்கிட்டார் என்று நினைச்சு வந்தால். ஒராளையெல்லே ஊறுகாயாக்கியிருக்கிறீங்க.

ராஜ நடராஜன் said...

//கந்தசாமி. said...

தேசிக்காயிலும் ஊறுகாய் செய்வார்களே , மிகவும் சுவையாக இருக்கும்... அப்புறம் சுகாசினி அக்காவை யாரோ பதிவுலகத்தில கலாச்சு போட்டங்கள் போல , அது தான் பார்த்து கடுப்பாகிட்டா !!//

வாங்க கந்தசாமி!தேசிக்காயிலும் ஊறுகாயா!புதுத்தகவல் எனக்கு.நெல்லிக்காயில் ஊறுகாய் செய்தால் உடலுக்கு நல்லதென படித்தேன்.நெல்லிக்காயைக் கண்ணில் காண்பது அபூர்வமாக இருக்கிறது.இந்தியன் கடைகளுக்குப் போகும் போது தேடிப்பார்க்க வேண்டும்.

சுகாசினி அக்கா செக்குமாடு மாதிரி தொலைக்காட்சியில் வலம் வருபவர்கள் கூட்டத்தில்.அவரே எடை போட்டுப்பார்க்கட்டும் தொலைகாட்சிகள் தரும் தகவல்களுக்கும் பதிவுகள் தரும் தகவல்களுக்கும் உள்ள வித்தியாசங்களை.

நிரூபன் said...

ஒரு கிலோ வாங்கி தொலைக்காட்சி சேனல் ஏதாவதை
ஓடவிட்டுக்கொண்டே//

அவ்...குசும்புக்கு குறைச்சலில்லை.

நிரூபன் said...

பாஸ், ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிச்சிருக்கிறீங்க.

பதிவோடு பதிவாக சமையல் குறிப்பையும்- ஊறுகாய் செய்வது எப்படி என்பதையும்,
சுகாசினியையும் ஊறுகாயாக்கியிருக்கிறீங்க.

கலக்கல்.

ராஜ நடராஜன் said...

//சார்வாகன் said...

/சுகாசினி அக்காவுக்கு குறைதீர்த்த மாதிரியும் ஆச்சு/

அருமை சகோ.பதிவுலகம் ஒரு சூப்பர் மார்கெட் மாதிரி யாருக்கு எது வேணுமோ கிடைக்கும்.சுஹாசினி அக்கா தீர்ப்பை மாத்தி சொல்லுங்க.
/ஊறுகாய் நிறைய நாட்கள் இருப்பதற்கும் தமிழ்ச்சுவை வருவதற்கும் நல்லெண்ணெய் அவசியம்./
ஆஹா அபாரம்!!!!!,தமிழ் வாழ்க,த்மிழர்கள் வாழ்க,தமிழ்சுவை ஊறுகாயும் வாழ்க!!!!!!!//

உங்களின் பதிவுலகம் சூப்பர் மார்க்கெட் ஒப்பீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அதானே!அத்தனை பொருட்கள் இருந்தாலும் நமக்கு விருப்பமானதைத்தானே தேர்ந்தெடுக்கிறோம் சூப்பர் மார்க்கெட்டிலும்?

கந்தசாமி பின்னூட்டத்தில் சொன்னது மாதிரி யாராவத் கலாய்ச்சிருப்பாங்களோ:)

தமிழ் வாழ்க,த்மிழர்கள் வாழ்க,தமிழ்சுவை ஊறுகாயும் வாழ்க!
வரிகள் உங்கள் பின்னூட்டத்தின் உச்சம்!நன்றி.

செங்கோவி said...

ஹா..ஹா..உப்பு மட்டும் சேர்த்தால் சுவையான ஊறுகாய் ரெடியா? இது நல்லா இருக்கே பாஸ்.

ராஜ நடராஜன் said...

////Blogger நிரூபன் said...

ஊறுகாய் செய்வது எப்படி?//

வணக்கம் பாஸ், நான் ஏதோ நம்ம சீனியர் அண்ணாச்சியும் சமையலில் இறங்கிட்டார் என்று நினைச்சு வந்தால். ஒராளையெல்லே ஊறுகாயாக்கியிருக்கிறீங்க.////

நிரூபன்!உங்கள் மிளகாய் பதிவு பற்றி பதிவில் இணைக்கலாமென்று பார்த்தேன்.படம் எடுக்கும் அவசரத்தில் மறந்து போய் விட்டது.நீங்க மிளகாய்ப் பொடி பதிவு போட்டு விட்டு இன்னும் நிறைய சொல்வீங்கன்னு நினைத்தேன்.நீங்க கவிதை,இலங்கை,அரசுமரத்தடிப்பேச்சு என்று எஸ்கேப் ஆயீட்டீங்க!

ஊறுகாயைத் தொட்டுக்க சின்னதா ஓராள் ஊறுகாய்:)

ராஜ நடராஜன் said...

//நிரூபன் said...

ஒரு கிலோ வாங்கி தொலைக்காட்சி சேனல் ஏதாவதை
ஓடவிட்டுக்கொண்டே//

அவ்...குசும்புக்கு குறைச்சலில்லை.//

சமையலை தனியா செய்தா ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்கிறோமே என்ற அலுப்பு வரும்.முன்பெல்லாம் பெண்கள் நிறைய ஊர்க் கதை பேசிகிட்டே நெல்லு குத்துவதும்,குழாயடியில் தண்ணீர் பிடிப்பதும்,துவைப்பதும் மாதிரி தொலைக்காட்சி இந்த காலத்துக்கு:)

ராஜ நடராஜன் said...

//நிரூபன் said...

பாஸ், ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிச்சிருக்கிறீங்க.

பதிவோடு பதிவாக சமையல் குறிப்பையும்- ஊறுகாய் செய்வது எப்படி என்பதையும்,
சுகாசினியையும் ஊறுகாயாக்கியிருக்கிறீங்க.

கலக்கல்.//

நான் வாங்கினது 12-15 மாங்காய் இருந்திருக்குமே!

சகோ!உங்கப் பின்னூட்டம் பார்த்து விட்டு இந்தப் பதிவுக்கு சுகாசினி ஊறுகாய்ன்னு பெயர் வச்சிருக்கலாம் போல தெரியுதே:)

Anonymous said...

http://www.yarl.com/forum/lofiversion/index.php/t4316.html ///இதிலே தேசிக்காய் ஊறுகாய் செய்யும் விளக்கம் உள்ளது...

அது சரி, யார் என் தகவலை பதிவு செய்ததாக சொன்னீர்களே லிங்கை கொடுங்கள் பார்க்கலாம்...

தவறு said...

ராஜநட மாங்காய் தொக்கு ரொம்பவும் பிடிக்கும் ஆனா செய்முறை இப்பதான் தெரிஞ்சிகிட்டேன் ...ம்ம்ம்...ஜமாயங்க...

ராஜ நடராஜன் said...

//செங்கோவி said...

ஹா..ஹா..உப்பு மட்டும் சேர்த்தால் சுவையான ஊறுகாய் ரெடியா? இது நல்லா இருக்கே பாஸ்.//

இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பை தாதர்ல குண்டு வெடிப்பு செய்தி வந்ததே,மிகவும் ஜனநெருக்கடியான பகுதிகளில் தாதரும் ஒன்று.எதை விற்றாலும் காசு பார்த்து விடும் சந்தை.இந்த தாதர் ரயில் நிலையத்துல பச்சை மாங்காயை உப்பு,கொஞ்சம் மிளகாய் பொடி மட்டும் தூவி விற்கிறாங்க.மெரீனாவிலும் இந்த மாதிரி வியாபாரம் இருந்துச்சு.இது அப்படியே சாப்பிடுவேனாக்கும் விசயம்.இதையே கொஞ்சம் நல்லெண்ணெய்,மசாலா கலந்து ஊறவச்சுட்டா ஊறுகாய்:)

ராஜ நடராஜன் said...

//Blogger கந்தசாமி. said...

http://www.yarl.com/forum/lofiversion/index.php/t4316.html ///இதிலே தேசிக்காய் ஊறுகாய் செய்யும் விளக்கம் உள்ளது...

அது சரி, யார் என் தகவலை பதிவு செய்ததாக சொன்னீர்களே லிங்கை கொடுங்கள் பார்க்கலாம்...//

நாங்க சொல்லும் நார்த்தங்காயைத்தான் நீங்க தேசிக்காய்ன்னு கதைக்கிறீங்களோ?தமிழினி அட்சர சுத்தமா நம்ம ரெசிபிதான் கொடுக்கிறாங்க!ஆனா சுகாசினி மிஸ்ஸிங்:)

காப்பி பேஸ்ட் ( Ctrl C + Ctrl V ) படம்கூட நினைவிருக்கிறெதே!பதிவர் யார்ன்னு நினைவில்லையே!ஒருவேளை நீங்களேதானோ அது?இல்லையே!எழுத்து நடை வித்தியாசமாக இருந்ததே.ஒரே தகவலை வேறு ஒருவரும் சொல்லலாமல்லவா?காப்பி பேஸ்ட்தான் கூடாது.இங்கேதானே சுத்திகிட்டிருக்கிறோம்.ஆள் யார்ன்னு கண்டுபிடிச்சிடலாம்.லூஸ்ல விடுங்க.

ராஜ நடராஜன் said...

//தவறு said...

ராஜநட மாங்காய் தொக்கு ரொம்பவும் பிடிக்கும் ஆனா செய்முறை இப்பதான் தெரிஞ்சிகிட்டேன் ...ம்ம்ம்...ஜமாயங்க...//

இதுலருந்து நீங்க சமையல் கட்டுப்பக்கமே போறதில்லைன்னு தெரிஞ்சுகிட்டேன்:)
உங்களுக்காக ஒரு புது விதமான இனிப்பு ஒன்று தயார் செய்துகிட்டிருக்கிறேன்:)

சிவானந்தம் said...

என்ன அரசியல் போரடிச்சு போச்சா?

இருந்தாலும் இதுவும் ஒரு சுவையான, அதாவது சுவையை பற்றிய, பதிவு.

Anonymous said...

///காப்பி பேஸ்ட் ( Ctrl C + Ctrl V ) படம்கூட நினைவிருக்கிறெதே!பதிவர் யார்ன்னு நினைவில்லையே!ஒருவேளை நீங்களேதானோ அது?இல்லையே!எழுத்து நடை வித்தியாசமாக இருந்ததே.//ஐயா பெரியவரே ,உறுதியான தகவல் இல்லாமல் தானா வந்து அவ்வாறு கமென்ட் போட்டீர்கள் ,எதற்காக இப்படி குழப்பங்கள் .......!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல பதிவு

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில் ....

மிக சிறந்த பல்சுவை வலைத்தளம் விருது

HajasreeN said...

யாரு என்ன சொன்னளுமுங்கோ எனக்கு தேசிக்காய் ஊறுகா தான் பிடிக்கும்

ராஜ நடராஜன் said...

//சிவானந்தம் said...

என்ன அரசியல் போரடிச்சு போச்சா?

இருந்தாலும் இதுவும் ஒரு சுவையான, அதாவது சுவையை பற்றிய, பதிவு.//

அரசியல் பதிவுகள் போன ஆட்சியினால் வந்த விளைவுகள்.நம்ம ரூட்டே இப்படி மொக்கை போட்டுகிட்டிருந்ததுதான்:)

ராஜ நடராஜன் said...

//கந்தசாமி. said...

///காப்பி பேஸ்ட் ( Ctrl C + Ctrl V ) படம்கூட நினைவிருக்கிறெதே!பதிவர் யார்ன்னு நினைவில்லையே!ஒருவேளை நீங்களேதானோ அது?இல்லையே!எழுத்து நடை வித்தியாசமாக இருந்ததே.//ஐயா பெரியவரே ,உறுதியான தகவல் இல்லாமல் தானா வந்து அவ்வாறு கமென்ட் போட்டீர்கள் ,எதற்காக இப்படி குழப்பங்கள் .......!//

ரொம்பவே படித்தீட்டினோ உஙகளை:)
நானெல்லாம் யாராவது என்னோட பதிவை திருட மாட்டாங்களான்னு நினைச்சிகிட்டிருக்கேன்.ஒரு ஆளு பக்கத்துல வர்றதில்ல!

குழப்பத்தை அடுத்த முறை உங்களுக்கு பின்னூட்டம் போடறதுக்குள்ள கண்டு பிடிச்சிடறேன்.போதுமா?

ராஜ நடராஜன் said...

//HajasreeN said...

யாரு என்ன சொன்னளுமுங்கோ எனக்கு தேசிக்காய் ஊறுகா தான் பிடிக்கும்//

கந்தசாமி!சீக்கிரமா ஓடிவாங்க...தேசிக்காய் ரசிகர் ஒருத்தர் உங்களுக்கு மாட்டிகிட்டார்:)

தமிழ்நாட்டிலெயெல்லாம் இந்த தேசிக்காய் ஊறுகாய்ங்கிற எலுமிச்சைங்காய் ஊறுகாய்க்கான வேலையே வேற:)

மசாலா மசாலா said...

ஊறுகாயை நினைச்சாலே வாயூறுது. வேற என்ன செய்முறைகள் எல்லாம் வைத்திருக்கிறியள்? அவற்றையும் கொஞ்சம் சொன்னால் நல்லாயிருக்கும்

ராஜ நடராஜன் said...

//ஊறுகாயை நினைச்சாலே வாயூறுது. வேற என்ன செய்முறைகள் எல்லாம் வைத்திருக்கிறியள்? அவற்றையும் கொஞ்சம் சொன்னால் நல்லாயிருக்கும் //

ஊறுகாய் போட்டு சாப்பிட்ட பின்னாடி வாரீகளே:)
எலுமிச்சை,காய்கறி,நெல்லிக்காய்ன்னு ஏகமானதாக இருக்குதே.எல்லாவற்றிற்கும் அடிப்படை ஒன்றேதான்.