Followers

Sunday, July 3, 2011

லோக்பால் மசோதா

மக்கள் குழு வரைவுத் திட்டம் குறித்த குரல் 2G(ஸ்பெக்ட்ரம்),CWG(காமன்வெல்த் விளையாட்டு),மும்பாய் ஆதர்ஷ் கட்டிட ஊழல் என்ற இந்திய அரசியலின் சூறாவளியில் முதலில் பெரும்பாலோர் அறிந்திராத முகமாய் அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தின் மூலமாக இந்தியாவில் உரத்த குரலாக ஒலித்தது.மக்களும் சரி,ஆட்சியில் இருப்பவர்களும் சரி,ஊழலில் ஈடுபடுபவர்களும் சரி ஊழல் என்ற சொல்லை விரும்பாதவர்களாகவே இருப்பார்கள்.ஆனால் இந்திய கட்டமைப்பில் ஏதாவது ஒரு விதத்தில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஊடுருவியே இருப்பது ஆச்சரியமான விசயம்.தற்போதைய நிலையில் ஆட்சி செய்யும் மத்திய காங்கிரஸ் அரசே இதற்கு எதிர்ப்பு என்கிற மாதிரியான ஒரு பிம்பம் உருவாகி விட்டதற்கு மக்கள் குழு சார்பானவர்களுடனான கருத்து மாறுபாடுகளும்,அன்னா ஹசாரேவுடன் இணைந்து கொண்ட ராம் தேவ் உண்ணாவிரதமும்,அவரது ஆதரவு குழுவை லத்திஜார்ஜ் செய்து கலைத்ததும் ஆளும் அரசை வில்லனாக மாற்றி விட்டது.

இது குறித்து சில தினங்களுக்கு முன்பு குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நேர்காணல் கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங்  என்ன சொல்கிறார் என பார்ப்போம்.

கேள்வி: அரசும் கட்சியும் உறுதியற்ற தன்மை பற்றி?

இவைகள் மிகைப்படுத்தப்பட்டவை.ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சினைகள் இருக்கின்றது.பல கருத்து வெளிப்பாடுகளை வரவேற்கிறேன்.உதாரணத்திற்கு அன்னா ஹசாரே,ராம் தேவ் உண்ணாவிரதமிருப்பதாக பயமுறுத்திய போது அரசு தரப்பில் எனது உண்மையான முயற்சி என்னவென்றால் எங்கிருந்து நல்ல கருத்துக்கள் உருவானாலும் வரவேற்க வேண்டுமென்பதே.எனவே அன்னா ஹசாரேவுடன் பேசுவதற்கு உடன்பட்டேன்.ஒரு மணி நேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அவர் திருப்திகரமாகவே சென்றார்.ஆனால் 2,3 நாட்களில் அவரை பிரச்சினைகள் உருவாக்கும் ஏனைய சக்திகள் இயக்குவதாக உணர்ந்தேன்.அதே போல் ராம் தேவ் எனக்கு கடிதம் எழுதிய போது கருப்பு பணம்,ஊழல் குறித்த அவரது கவலைகளை நானும் கடிதத்தின் வாயிலாக தெரிவித்தேன்.இதனைத் தொடர்ந்து ராம்தேவை சந்திக்க பிரணாப் முகர்ஜி வருமான வரி அதிகாரிகள் சிலரை அனுப்பி வைத்தார்.ராம் தேவ் இணக்கமாகவே செயல்பட்டார்.ஆனால் ராம் தேவ் பெரிய கூட்டத்தை சந்திக்கும் போது அவர் எங்களிடம் பேசியதற்கு மாறாக செயல்பட்டார்.எங்களிடம் 90% தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதாக கூறினாலும்,கபில்சிபல் இதுகுறித்த சட்டத்தை உருவாக்குவதாக கூறியும் பொதுமக்களை சந்தித்த வேளையில் வேறொரு சூழல் கருத்துக்களை வெளியிட்டார்.

கேள்வி: 11 மணிக்கு ஒரு கடிதம் சேர்க்கப்பட்டு 12மணிக்கு லத்திஜார்ஜ் செய்யப்பட்டதை நீங்கள் அறிவீர்களா?

லத்திஜார்ஜ் மற்றும் கண்ணீர்ப்புகை விசயங்கள் துரதிஷ்டவசமானது.அவை நிகழ்ந்திருக்க கூடாது.ஆனால் உண்மையாக நாங்கள் அவர்களை முதல் நாள் அனுமதித்திருந்தால் இரண்டாவது நாள் இன்னும் அதிகமாக கூட்டம் சேர்ந்திருக்கும்.அது எங்களுக்கு கவலையாக இருந்தது.காரணம் ராம்லீலா மைதானம் அமைந்திருந்தது,மத சென்சிடிவ் பிரச்சினை உருவாகியிருக்கும்.சத்வி ரீத்தாம்பரா மற்றும் ஏனையவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாது இவை எங்கே கொண்டு செல்லுமென்று.இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது தவறாக இருந்தாலும் நாங்கள் இருந்த சூழலில் வேறு மாற்று நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

கேள்வி:  பிரதம மந்திரியையும் அவரது அலுவலகத்தையும் லோக்பால் மசோதாவுக்குள் கொண்டு வருவது பற்றி உங்கள் கருத்தென்ன?.
இது குறித்து சென்ன பாராளுமன்றக் கூட்டத்தில் பேசியுள்ளோம்.என்னைப் பொறுத்த வரையில் இந்த மசோதாவுக்குள் கொண்டு வருவதில் எந்தப் பிரச்சினையுமில்லை.ஆனால் எனது பாராளுமன்ற நண்பர்கள் இது உங்களுடைய தனிப்பட்ட விசயமல்ல.நாம் இந்திய மக்களுக்கு இந்த சட்டத்தை உருவாக்குகிறோம்.நிறைய பாராளுமன்ற மெம்பர்கள் பிரதமரை லோக்பால் வரைவுக்குள் கொண்டு வருவது சில சமயங்களில் தனது கட்டுப்பாட்டிற்கும் அப்பால் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும.இது கவனிக்க வேண்டிய ஒன்று.மேலும் பிரதமரை ஊழலுக்கு எதிரான சட்டம் மூலம் நீக்கமுடியும்.தேவையான ஒன்றே நம்பிக்கையில்லாத் தீர்மானம்.ஜெயலலிதா,பதல் போன்ற சில முதல் மந்திரிகள் பேசியிருக்கிறார்கள்.எனவே நிச்சயமாக வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன.இதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தாக வேண்டும்.அதேபோல்,அன்னா ஹசாரே சொல்வது போல் இதனை இன்னும் விரிவாக்கம் செய்தால் இப்போதைக்கு உள்ள புலனாய்வு,சட்ட அமைப்புக்களுக்கு மேல் இன்னும் 15,000 பேர் தனியாகவும் தேவைப்படுவார்கள்.நாம் ஒவ்வொரு தனி மத்திய,மாநில அரசு பணியாளரையும் இந்த சட்டத்திற்குட்படுத்தினால் கட்டமைப்பு இதன் பாரத்தை சுமக்குமா என்று கவலைப்படுகிறேன்.எனவே மேலிடத்தில் நிகழும் ஊழல்களில் கவனம் செலுத்துவோம்.எங்கெங்கு முடிகிறதோ அங்கெல்லாம் உறுதியாக செயல்பட முயல்வோம்.

பிரதமர் மந்திரியின் நேர்காணலுக்கும் அப்பால் லோக்பால் சட்ட வரைவின் கூறுகளையும்,அரசு சார்பாகவும்,மக்கள் சார்பாகவும் உள்ள கூட்டுக்குழுவினரையும் இங்கே பார்த்து விட்டுத் தொடர்ந்தால்  மக்கள் நலனுக்கும்,நாட்டுக்கும் நல்லதான ஒரு சட்டவரைவுக்கு ஏன் கருத்து வேறுபாடுகள் கிளம்புகிறதென்பதை தெகல்கா  பட்டியலிடுகிறது.
 
யார்/என்ன பிரச்சினை
 • பிரதமர்    
 • நீதித்துறை எம்.பிக்கள்
 • குறை தீர்ப்பு
 • சி.பி.ஐ    
 • லோக்பாலின் தேர்வுக்குழு
 • லோக்பால் குழு யாருக்கு பொறுப்பு
 • லோக்பாலின் விசுவாசத்தன்மை
 • அரசுப்பணியாளர்கள்
 • லோகயுக்தா
 • ரகசியம் சொல்பவர்களின் பாதுகாப்பு
 • உயர்நீதிமன்றத்தில் தனி பிரிவு
 • அரசு பணியாளர்கள் வேலைப்பணி நீக்கம்
 • ஊழலுக்கு தண்டனை    
 • சுதந்திர நிதிக் குழு    
 • மேலும் நஷ்டம் ஏற்படாமலிருக்க
 • தொலைபேசி ஒட்டுக்கேட்டல்
 • நிர்வாகப்பங்கீடு   
 • அரசு சாரா நிறுவனங்கள்
 • தவறான குற்ற சுமத்தல்
மக்கள் குழுவின் நிலைப்பாடு
 1. ஊழலுக்கு எதிராக பிரதமரையும் விசாரணை செய்யமுடியும்
 2. நீதிபதிகளையும் லோக்பால் வரைவுக்குள் கொண்டு வரவேண்டும்
 3. பாராளுமன்றத்தில் பேசவும்,ஓட்டுப்போடவும் லஞ்சம் வாங்கும் எம்.பிக்கள் தண்டிக்கப்டவேண்டும்
 4. குறிப்பிட்ட காலவரையறைக்குள் அரசு அதிகாரிகள் செயல்படாவிட்டால் அது ஊழல் என்று கருதப்படும் 
 5. சி.பி.ஐக்குள் இயங்கும் ஊழலுக்கு எதிரான பிரிவு லோக்பாலுக்குள் இணைக்கப்பட வேண்டும்
 6. குறைந்த அளவிளான அரசியல்வாதிகளே மக்கள் குழுவை தேர்ந்தெடுப்பார்கள்
 7. உச்ச நீதிமன்றத்தில் புகார் செய்வதன் மூலம் யார் வேண்டுமானாலும் லோக்பால் அங்கத்தினரை வெளியேற்றலாம்
 8. அங்கத்தினரை வெளியேற்றலாம் விசாரணை செய்ய தனிக்குழு தேவை
 9. அனைத்து அரசு ஊழியர்களும் லோக்பால் சட்டத்துக்குட்பட்டவர்கள்    
 10. லோக்பால் சட்டம் மத்திய அரசிலும் லோகயுக்தா மாநில அரசிலும் தேவை    
 11. ரகசியங்கள் சொல்பவர்கள்,சாட்சிகள் லஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு
 12. லஞ்ச ஊழலை துரிதமாக விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் தனி பிரிவு அமைக்க வேண்டும்
 13. ஊழல் அதிகாரியை லோக்பால் நீக்கும்
 14. 1.10 வருட தண்டனை 2.குற்றம் சாட்டப்பட்டவர் உயர் அதிகாரியாக இருந்தால்அதிக தண்டனை3 வியாபார நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கபடும்4.குற்றம் நிரூபிக்கப்பட்டால் வியாபார நிறுவன லைசென்ஸ் ரத்து
 15. லோக்பால் குழு எவ்வளவு பண்ம தேவையென்பதை நிர்ணயிக்கும்
 16. லோக்பால் குழு ஊழலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்  
 17. போன் ஒட்டுக்கேட்டலுக்கு அதிகாரம் வழங்கும்
 18. லோக்பால் நிர்வாகக் குழு முக்கியமான ஊழல்களை மட்டுமே விசாரிக்கும்,ஏனையவை லோக்பால் அதிகாரிகள் விசாரிப்பார்கள்
 19. அரசால் பணம் தரப்படும் அரசு சாராத நிறுவனங்களை மட்டுமே லோக்பால் குழு விசாரிக்கும் 
 20. தவறான குற்ற சுமத்தலுக்கு பணம் மட்டுமே வசூலிக்கப்படும். சிறை தண்டனை கிடையாது   
காங்கிரஸ் அரசின் நிலைப்பாடு
 1. சி.பி.ஐ பிரதமரை விசாரிக்கும்.லோக்பால் அல்ல
  நீதிபதிகள் ஏற்கனவே உள்ள சட்டபொறுப்பு சட்டம் மூலமாக விசாரிக்கப்படவேண்டும்.
 2. லோக்பாலுக்கு எம்.பிக்களை தண்டிக்கும் அதிகாரமில்லை
 3. குறிப்பிட்ட காலவரையறைக்குள் செயல்படாவிட்டால்  அதிகாரிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள்
 4. அரசின் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ இயங்கவேண்டும்
 5. அதிக எண்ணிக்கையிலான அரசியல்வாதிகள் தேர்வுக்குழுவில் இருப்பார்கள்
 6. அரசு மட்டுமே லோக்பால் குழுவை நீக்கும் அதிகாரமுடையது 
 7. லோக்பால் மட்டுமே இதன் பணியாளர்களை விசாரிக்கும்
 8. A குருப் பணியாளர்கள் மட்டுமே விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள்
 9. லோக்பால் மசோதா மட்டுமே செயல்படுத்தப்படும்  லோகயுக்தா அல்ல
 10. ரகசியம் சொல்பவர்களின் பாதுகாப்பு  வரையறை தேவையில்லை
 11. உயர்நீதிமன்றத்தில் தனி பிரிவு கிடையாது
 12. குறிப்பிட்ட துறை மந்திரி மட்டுமே பதவி நீக்கம் செய்ய முடியும்
 13.  அதிக தண்டனை 10 வருடம்  தவிர ஏனைய பிரிவு  ஏற்றுக்கொள்ள முடியாது.
 14. நிதி அமைச்சர் பட்ஜெட்டை நிர்ணயிப்பார்
 15. லோக்பால் குழுவுக்கு ஊழலைத் தடுக்கும் அதிகாரமில்லை
 16. தொலைபேசி ஒட்டுக்கேட்டல் உள்துறை செக்ரட்டரிக்கு மட்டுமே  அதிகாரம்
 17. நிர்வாகப்பங்கீடு அனைத்தையும் லோக்பால்  நிர்வாகக்குழுவே விசாரிக்கும்  
 18. அனைத்து அரசு சார நிறுவனங்களையும் லோக்பால் விசாரிக்கும்
 19. தவறான குற்ற சுமத்தல்        2 லிருந்து 3 வருட சிறைதண்டனையுடன் பணம் வசூலும் பாதிக்கப்பட்ட அதிகாரிக்கு பணம் வசூலும்
மேலேசொன்னவற்றில் நடைமுறைச்சிக்கல்களையும்,மத்திய அரசின் அதிகாரங்கள் குறைவதையும் காங்கிரஸ் தரப்பு எதிர்ப்பது போன் தெரிகிறது.தற்போதைய சூழலில் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கவிழ்ந்து விடும் சூழல் இருப்பதால் நாம் பதவிக்கு வந்தால் என்ன செய்வது என்று பி.ஜே.பியும் மதில் மேல் பூனையாக தீர்மான முடிவை எடுக்காமல் காங்கிரஸ்க்கு எதிரான அறிக்கைகளே வெளியிடுகிறது.தற்போதுள்ள ஊழல்,லஞ்சம் பெருகிவிட்ட சூழலில் லோக்பால் சட்டமும்,அதனைப் பரிட்சித்துப் பார்ப்பது மட்டுமே தற்போதைய தேவை.சட்ட வரைவுகளுக்கு மாற்றங்கள் எனப்படும் Amendment எதற்காக இருக்கிறது.அதனை பரிட்சித்துப் பார்த்து மேற்கொண்டு பாராளுமன்றத்தில் தீர்மானிப்பதை வருங்காலத்தில் ஆலோசனை செய்யலாம்.இப்போதைக்கு தேவை லோக்பால் மசோதா.சட்ட நிறைவேற்றம்.    

4 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Very detailed post

ராஜ நடராஜன் said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

Very detailed post//

Usual thanks:)

நிறைய பேருக்கு லோக்பால் என்ற வார்த்தை தெரிந்துருக்கும்.அதன் உள்ளே இருக்கும் பிரச்சினைகள் என்னவென்று தெரிந்து கொள்வதும்,சட்ட மசோதா வரைவு என்னவென்று புரிந்து கொள்வதும் ஒவ்வொரு இந்தியனின் கடமை.

முக்கியமாக ஆட்டையப் போடுவதில் உலக சாதனை படைக்கும் தமிழகம் அறிந்திருப்பது அவசியமான ஒன்று:)

செங்கோவி said...

லோக்பால் பற்றி தமிழில் வெளிவந்திருக்கும் தெளிவான பதிவு இது. நீங்கள் சொல்வது போல் முதலில் இது நிறைவேறட்டும். பிறகு அமெண்ட்மெண்ட்ஸ் செய்து கொள்ளலாம்.

ராஜ நடராஜன் said...

//செங்கோவி said...

லோக்பால் பற்றி தமிழில் வெளிவந்திருக்கும் தெளிவான பதிவு இது. நீங்கள் சொல்வது போல் முதலில் இது நிறைவேறட்டும். பிறகு அமெண்ட்மெண்ட்ஸ் செய்து கொள்ளலாம்.//

பாஸ்!நீங்களாவது விடுகதைக்கு விடை கண்டு பிடிச்சீங்களே:)

லோக்பால் குறித்த விபரங்கள் அனைத்தும் ஆங்கில ஊடகங்களில் நிறையவே இருக்கின்றன.ஆனால் தமிழில் இதன் சாரம் குறித்து தேடியதில் ஒன்றுமே கிட்டவில்லை.யாராவது லோக்பால் மசோதா என்று தமிழில் தேடும்போது பயன்படுமே என்ற நோக்கில் பதிவிட்டுள்ளேன்.

பிரதமர் நொண்டி வாததாக இருந்தாலும் பதவியில் இருக்கும் போது லோக் பால் குறித்த நன்மை தீமைகளையும் உணர்ந்தவராகவே இருப்பார் என்பதால் அவரது பத்திரிகையாசிரியர் நேர்காணலின் ஒரு பகுதியையும் சேர்த்துள்ளேன்.

உங்க கடைல புது சரக்கு ஏதாவது போட்டீங்களா?