Followers

Thursday, July 14, 2011

கோவை கொலையும் மறுபடியும் மும்பாய் குண்டுவெடிப்பும்

தமிழ் திரைப்படங்களில் வில்லனும் அவனது கூட்டமும் கலாட்டா செய்து ஒருவனைப் போட்டு அடிக்கும் போது வட்டமா சுத்தியிருந்து வேடிக்கை பார்க்கிற மாதிரி காட்சி வரும் போது கேனத்தனமான சண்டைக்காட்சியும்,இயக்குநர் திறனையும் பார்க்கும் போது மொத்த கூட்டமும் எப்படி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கும் என யோசிக்கத்தோன்றும்.தமிழ் திரைப்பட சண்டைப்பயிற்சியாளர்களே!தமிழ் இயக்குநர்களே!இனிமேல் எதிர்க்கேள்வியே போடமாட்டேன். ஏனென்றால் உங்களைப் பார்த்து மக்கள் அனிச்சையாக இயங்குகிறார்களோ அல்லது சமூக சூழலை நீங்கள் படம் பிடித்துக்காட்டுகிறீர்களோ தீயவை கண்முன் நிகழும் போதே வேடிக்கை பார்க்கும் கூட்டத்தை நேற்று தொலைக்காட்சியில் காணநேர்ந்தது.
இந்த பதிவுக்கு பின்னூட்டம் போட்டுக்கூட மனசு கொதிக்கிறது.ஒரு கார் விபத்து நடந்தா உதவுவதற்கு குறைந்தது 10,15 பேர் வந்து உதவும் வளைகுடா அரேபியர்களை மனித உரிமை மீறல்காரர்கள் என எளிதாக  முத்திரை குத்தி விட முடிகிறது.கோயம்புத்தூர் லட்சணத்தையெல்லாம் நினைச்சா எங்கிருந்து வந்து முளைக்கின்றன இந்த மாதிரி புதிய மனோபாவங்கள் என்று தெரியவில்லை.

நேற்று தொலைக்காட்சியில் நான்கு பேர் கூடி அடித்து கீழே தள்ளி உதைத்து அதிலும் ஒருத்தன் தலைமேலே கல்லைத் தூக்கிப் போட்டுக் கொன்ற காட்சியை பார்க்கும் போது ஊருக்கு உபதேசம் செய்யும் நம்ம மக்களின் லட்சணம் பல்லைக்காட்டி சிரிக்கிறது.பஸ்ல சில்லரைத்தகராறு, ஆட்டோக்காரன் கெட்டவார்த்தை என்ற சென்னை நகர் நல்ல பழக்கங்கள் இல்லாத ஊரா கோவை?பஸ்ஸில் கண்டக்டர் முன்னுக்குப் போங்கண்ணே என்று சொல்லி முன்னேறச் சொன்ன நகரமா இது?சைக்கிள்,கார்,ஆட்டோ, பஸ், காவல்துறை தவிர எத்தனை பேர் பைக் ஓட்டிய நகரமிது?வாழ்வில் சொகுசு வந்து விட்டால் மொத்த மக்களுக்கும் மண்ணின் கலாச்சாரம்  ஓரமா படுத்து தூங்குமா என்ன?ஒருத்தனை நான்கு பேர் அடித்து கண்ணெதிரிலேயே தலையில் கல்லைத்தூக்கிப் போடும் போது கோவை வட்டார வழக்காக சொல்லும் மயிரே போச்சு மாரப்பான்னு மொத்தக் கூட்டமும் அருகிலிருந்து டுர்,டுர்ரென்று பைக்கிலிருந்தும்,ஏனைய வாகனத்திலிருந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.கொலை செய்தவர்களோடு கொலைக்கு உடந்தையானவர்களுக்கும் தண்டனைங்கிற மாதிரி வெறுமனே வேடிக்கை பார்த்த சாட்சியாளர்களும் கொலைக்குற்றவாளிகளே.

 கண்முன்னே 10 அடி தூரத்தில் நிகழும் ஒரு கொடூரத்தைக் கண்டும் மரத்துப் போனவர்களாக நமக்கென்ன ஆச்சு என்று இருந்தால்....இதன் பிரதிபலிப்புக்கள் சமூகத்தில் ஏதாவது ஒருவிதத்தில் வந்து அவரவரையே தாக்கும்.

யோவ்!அந்தாளு என்ன செஞ்சான்னு தெரியுமான்னு கூட சிலர் தலையில் கல்லைத் தூக்கிப்போடுபவனுக்கு சார்பாக எதிர்க் கேள்விகள் கேட்கலாம்!

கசாப் என்ன செஞ்சான்னு உங்களுக்குத் தெரியுமா?

கசாப் என்ன செஞ்சான் தட்டச்சி முடித்து விட்டு பின்பு பதிவை இணைக்கலாமென்று நினைத்து கிழடாகிப் போன கிராண்ட் செரோக்கி ஜீப்புக்கு சாவி கொடுத்து எஃப்.எம் 100.1ல் பிபிசியைத் திருப்பினால் மும்பாயில் 3 இடங்களில் தொடர்குண்டு வெடிப்பு என்ற தகவலை சொல்லி வேறு தலைப்புக்கு தாண்டி விட்டது.NDTVயை க்ளிக்கினால் குண்டுவெடிப்பு படங்களோடு தீவிரவாத தாக்குதல்,லஷ்கர் தொய்பாவின் வேலை என்ற பக்க எழுத்துக்கள் ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த முறை நேரடியாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ சார்ந்த தீவிரவாத அமைப்புக்களின் பெயரை குண்டுவெடித்த 10நிமிடங்களில் முன்மொழிந்தால் simply counter protective mechanism and defence system are not working properly in India.

சமூக நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து வருவதால் குண்டுவெடிப்புக்கு பலகாரணிகளை முன் வைக்கலாம்.
  • 1.நேற்று கசாப்பின் பிறந்தநாள் என்பதால் பிறந்தநாள் பரிசா என்று டெய்லிபயணீர் தளம் கேள்வியை முன்வைக்கிறது.
  • 2.சமீபத்தில் தாவுத் இப்ராகிமின் காரில் துப்பாக்கி சூடு நிகழ்ந்ததாகவும் தாவுத் இப்ராகிமின் சகோதரன் காரில் இருந்ததாகவும் பின் இல்லையென்றும் மாறி மாறி தகவல்கள் வந்தன.முந்தைய தொடர்குண்டுவெடிப்பில் தாவுத் இப்ராகிமின் தொடர்பு உள்ளது.
  • 3.அரசியல் சூழல்களில் ஆதாயம் தேட ஆர்.எஸ்.எஸ், சங்க்பரிவார்களின் கைவண்ணத்திற்கான முந்தைய சாட்சிகள் உள்ளன
  • 4.2G,ஆதர்ஷ் கட்டிட ஊழல் போன்றவற்றின் அடிப்படையிலும் கூட அரசியல் காரணங்களோடு குண்டுவெடிப்புக்கள் உண்டாகியிருக்கலாம்.
  • 5.Last but not least,ஒரு கண்ணைக்குத்தி இன்னொரு கண்ணுக்கு ஆதாயம் தேடும் காங்கிரஸையும் கூட சந்தேகக் கண்ணோடு நோக்கலாம்.Mr.Manmohan singh's administration is in a mere mess.
  • நிர்வாக சீர்கேடுகளின் கேள்விகளைத் திசை திருப்பவும் கூட குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்திருந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
IED (Improvised explosive device) எனப்படும் நாட்டு வெடிமருந்துகளைக்கூட நம்மை மாதிரி சராசரி மனிதர்களால் செய்து இயக்கி விடமுடியாது.கச்சாப் பொருட்கள் (Raw materials),அதனைக் கொண்டு சேர்க்கும் துணை(Logistics),தொழில்நுட்பம் போன்றவைக்களுக்கான தேவைகள் எளிதாக கிடைப்பதில் மேலே சொன்ன ஐந்துமே சந்தேக கண்ணோடு பார்க்க வேண்டியவை.

Won't Rule Out Any Angle on Mumbai Blasts:இதனை நான் சொல்லவில்லை...சொன்னது உள்துறை அமைச்சர் சிதம்பரம்.காங்கிரஸையும் சேர்த்து சொன்னாரா என்று தெரியவில்லை.முந்தா நாள்தான் மன்மோகன்சிங் சிதம்பரம் ரொம்பா...... நல்லா உள்துறையை பார்த்துகிறாரென நற்சான்றிதழ் கொடுத்தார்.

ஒரு பக்கம் தீயவைகளுக்கு எதிராக நாம் பதிவுகள் செய்து கொண்டிருக்க இன்னொரு புறம் மனிதம் மெல்ல செத்துக்கொண்டிருக்கிறது.

14 comments:

A.R.ராஜகோபாலன் said...

///ஒரு பக்கம் தீயவைகளுக்கு எதிராக நாம் பதிவுகள் செய்து கொண்டிருக்க இன்னொரு புறம் மனிதம் மெல்ல செத்துக்கொண்டிருக்கிறது.////
அருமையான தீர்க்கமான வரிகள் சார் , ஒண்ணுமே புரியல சார்
இந்த ரா மற்றும் உளவுத்துறை எல்லாம் எண்ண பண்ணுறாங்க , அனேகமா எதிர் கட்சி தலைவர் போனையும் , வீட்டையும் சுத்திகிட்டு இருக்காக
களோ

சார்வாகன் said...

நண்பரே,
தமிழகத்தின் இப்பொதைய நிலையை படம் பிடிக்கிறது.என் மனதில் உள்ளதை அப்படியே எழுதியது போல் இருக்கிறது.கோவை சம்பவத்திற்கும் ,மும்பை சம்பவத்திற்கும் காரணம் ஒன்றுதான்.செய்தவர்களுக்கு ஒரே சிந்த்னை நம்மை யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்பதுதான்.முதலில் எல்லாம் இருவர் சண்டையிட்டால் விலக்கி விடும் வழக்கம் சாதாரணமாக் இருந்தது.இப்போது எல்லோரும் சொல்லும் காரணம் இதுதான்!!!!!!!!!

/யோவ்!அந்தாளு என்ன செஞ்சான்னு தெரியுமான்னு கூட சிலர் தலையில் கல்லைத் தூக்கிப்போடுபவனுக்கு சார்பாக எதிர்க் கேள்விகள் கேட்கலாம்!/

ஒரு பொது இடத்தில் நடக்க கூடாத சம்பவங்களை தடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்பது மறக்கப் பட்டு விட்டது.தான்,தன்னை சார்ந்தவ்ர்கள் பாதிக்கப் பட்டால் மட்டுமே எதிர்ப்பேன் என்பது அனைவரையுமே பாதிக்கும்.

காவல்துறையும் எந்த ஒரு விஷயத்திலும் விரைவாக,வெளிப்படையாக் நடவடிக்கை எடுத்தால் மக்களும் ஒத்துழைக்க முன் வருவார்கள்.காவல் நிலையம் சென்று புகார் கொடுப்பவனையே படுத்தும் பாட்டில் யார் சாட்சி சொல்ல வருவார்கள்?.

இதே போக்கு பதிவுலக்த்திலும் பார்க்கலாம்.கருத்து சொ(இ)ல்லாமல் பலர் விலகி செல்வார்கள். சிலர் தான் பாதிக்கப் படவில்லை என்பதால் இன்னொருவர் செய்த தவறையும் நியாயப் படுத்துவர். மகளின் கணவனக் கூலிப்படை வைத்து கொலை செய்தவ் மாமனார்,பழம் எடுக்க வந்த சிறுவனை சுட்ட இராணுவ அதிகாரி போன்றவர்களையும் நியாயப் படுத்தி சில பதிவுகள் வந்தது.
________________
மும்பை சம்பவங்கள் குறித்து நீங்கள் குறிப்பிட்ட பல வாய்ப்புகளும் உண்மையே. ஊடகங்கள் பரப்ரப்பாக சில நாட்களுக்கு மர்ம செய்தி வெளியிடுவார்கள். காவல்துறை வழக்கம் போல் கையில் சிக்கிய சிலரை கொன்று வழக்கை முடிப்பார்கள். உண்மை எதுவும் வெளி வராது.இதுவரை எந்த வழக்கில் உண்மை வெளிவந்துள்ளது?.

தேவையான பதிவு.நன்றி

ராஜ நடராஜன் said...

ARR!வணக்கம்.

இந்த குண்டுவெடிப்பில் ஐ.எஸ்.ஐயின் கை உள்ளதென்பது உண்மையென்றால் ரா மற்றும் உளவுத்துறைகளையும் மீறிய வலிமை படைத்தது ஐ.எஸ்.ஐ என்பதை தோல்வியுடன் ஏற்றுக்கொள்ளாக வேண்டும்.

இருக்கும் ஆபத்துக்களையெல்லாம் விட்டு விட்டு ரயில் தண்டவாளத்தை உடைத்து அதன் பக்கத்தில் மொட்டைக்கடிதாசி போட்டு புலி ஆதரவாளர்களின் கைங்கரியம் என்று பொய் பரப்புரை பரப்புவதற்குதானே உளவு துறையும்,ராவும் இருக்கிறது.

மக்கள் நெரிசலான இடத்தில் எல்லோரும் எல்லோரையும் கவனித்துக்கொண்டிருக்க முடியாதென்றாலும்,முன்பே குண்டுவெடிப்புக்களில் நிகழ்ந்ததிலிருந்து மக்கள் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற பாலபாடங்கள் ஏதாவது அரசு மக்களுக்கு சொல்லித் தந்திருக்கிறதா?

டாக்சி ஓட்டுபவர்,பொது அரட்டை இடங்கள் முதற்கொண்டு அடிமட்டத்திலிருந்து உளவு வேலைகளை செய்யும் நாடுகள் இருக்கின்றன.

அரசியல்வாதிகள் அடிச்சிகிட்டு பதவி,பணம் என சுயநலமுள்ள நாட்டில் புலம்பல் மட்டுமே மிச்சம்.
என்னையறியாமலே பெருமூச்சுத்தான் வருகிறது.

ராஜ நடராஜன் said...

சார்வகன்!உங்கள் நீண்ட கருத்துரைக்கு நன்றி.

பொதுநலன்களை விட சுயநலன்கள் பெருகிப்போய் விட்டது கண்கூடாகவே தெரிகிறது.இன்னொரு தளத்தில் கோவைக்காரர்கள் மிகவும் சுயநலம் பிடித்தவர்கள் என்று ஒருவர் பின்னூட்டம் போட்டிருந்தார்.நாம் சிறுவர்களாக இருந்த காலங்கள் இப்படியில்லையென்பதை நிச்சயம் கூறலாம்.

பெயரளவில் காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறி விட்டு காவல்துறைக்கும் மக்கள் உறவுக்கும் நீண்ட இடைவெளி இருப்பது நிதர்சனம்.

இணையம் அனைத்தையும் வெளிச்சம் போட்டுக்காண்பிக்கும் போது காக்கி சட்டையின் கௌரவம் கூட இழுக்காகிறது.

பதிவுலகில் மாற்றுக்கருத்துக்கள் என்ற பெயரில் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் நுண்பொருள் மறந்து விடுவதே தவறுகளுக்கும் வக்காலத்து வாங்கும் மனப்பான்மை.

இந்த பதிவால் விரக்தி மட்டுமே மிஞ்சுகிறது.

Anonymous said...

///உங்களைப் பார்த்து மக்கள் அனிச்சையாக இயங்குகிறார்களோ அல்லது சமூக சூழலை நீங்கள் படம் பிடித்துக்காட்டுகிறீர்களோ///என்னமோ உண்மை தான். ஒருவேளை சினிமா சூட்டிங் என்று நினைத்தார்களோ என்னமோ? ஒருத்தனுக்காவது இறங்கி தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை . இத்தனைக்கும் கொலைகாரர்கள் கையிலே பெரிதாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக தெரியவில்லை.

ராஜ நடராஜன் said...

வாங்க கந்தசாமி!வரிசையா பைக்கில் நிற்பவர்களில் ஒருத்தருக்கு கூட பைக்கை விட்டு இறங்க மனமில்லையே!கல்லைத் தூக்கிப் போடுவதற்கும் முன் எவ்வளவோ நிமிடங்கள் இருந்தது.யாராவது ஒருவர் போய் என்ன பிரச்சினையென்று கேட்டிருந்தால் இன்னுமொருவரும் வந்து தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்.கல்லைத்தூக்கிப் போட்டுக் கொல்வது தடுக்கப்பட்டிருக்கும்.

நீங்கள் சொன்னது மாதிரி ஆயுதங்களைக் கையில் வைத்திருந்தாலாவது பயந்து யாரும் காப்பாற்றவில்லையென்றாவது சமாதானம் செய்துகொள்ளலாம்.

செங்கோவி said...

கோவை இப்படி மாறியதில் எனக்கும் வருத்தம் தான்..எவ்வளவு பாசக்கார மக்கள்..இப்போது என்ன ஆயிற்று?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

மனித நேயம் மறித்து பலகாலம் ஆகிவிட்டது

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று எனது வலையில் ...

மூன்று… மூனு… திரி(Three)… தீன்..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

///ஒரு பக்கம் தீயவைகளுக்கு எதிராக நாம் பதிவுகள் செய்து கொண்டிருக்க இன்னொரு புறம் மனிதம் மெல்ல செத்துக்கொண்டிருக்கிறது.////

உண்மைதான் சார்

ஹேமா said...

சுயநலமான அவசர உலகில் மனிதமும் விலைக்கு மாத்திரமே !

ராஜ நடராஜன் said...

//செங்கோவி said...

கோவை இப்படி மாறியதில் எனக்கும் வருத்தம் தான்..எவ்வளவு பாசக்கார மக்கள்..இப்போது என்ன ஆயிற்று?
//

சென்னையில் எனது வாங்க போங்க மொழியைக் கண்டு நீங்க கோயம்புத்தூர்ன்னு அடையாளம் கண்டு பிடிச்ச ஊருக்கு என்ன வந்ததுன்னு தெரியவில்லை.வாழ்க்கை தோல்விகள்,விவாக ரத்து போன்றவைகளும் கூட மெல்ல தமிழகத்தில் அதிகரிப்பது நல்லதாகப் படவில்லை.

ராஜ நடராஜன் said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று எனது வலையில் ...

மூன்று… மூனு… திரி(Three)… தீன்..//

ராஜா!முதலில் நீங்க பிரம்மச்சாரியா அல்லது குடும்ப கட்டையா:)எப்படியிருந்தாலும் ஊறுகாய் செய்வது எப்படின்னு ஒரு பதிவு இப்பத்தான் போட்டுட்டு உங்களுக்கு மறுமொழி சொல்லிகிட்டிருக்கேன்.நீங்க இதைப் படிங்க.நான் உங்க கடைக்கு அப்புறமா வாரேன்.

ராஜ நடராஜன் said...

//ஹேமா said...

சுயநலமான அவசர உலகில் மனிதமும் விலைக்கு மாத்திரமே !//

ஹேமா!விஞ்ஞான மாற்றங்கள் மனிதர்களை அருகில் சேர்க்கும் அதே நேரத்தில் மனிதத்தை தூர கொண்டு செல்வது வருத்தமே.

அம்மணி சாப்பாட்டை வைத்துக்கொண்டு இரண்டு முறை சொல்லிட்டுப் போயிட்டாங்க.இன்னும் இங்கே உட்கார்ந்துகிட்டிருந்தால் அடுத்து முறைப்பும் ”சொல்றது காதுல கேட்கலையா” கேள்வியும் வரும்.எஸ்கேப்:)