Followers

Monday, July 25, 2011

முகமது அலி vs ஜார்ஜ் ஃபோர்மென்

சில தினங்களுக்கு முன்பு கொபா அர்ஜெண்டினா கால்பந்து போட்டியைத் தேடிக்கொண்டு போய் ESPN தொலைக்காட்சியில் ஜார்ஜ் ஃபோர்மென் என்பவருடன் முகமது அலி சண்டையிட்ட(Rumble in the Juncle) என்ற கிளாசிக்கல் வரிசை குத்துச்சண்டைப் போட்டியை காண நேர்ந்தது.கிரிக்கெட்டுக்கு சச்சின்,கால் பந்தாட்டத்துக்கு மரடோனா மாதிரி குத்துசண்டைக்கு முகமது அலி எனலாம்.சிம்சன்,கோலியாத் பழைய பைபிள் கதை மாதிரி முகமது அலியை விட அதிக உயரமும்,உடல் வலுவும் ஹெவி வெயிட் சேம்பியனுமான ஜார்ஜ் ஃபோர்மெனிடம் சண்டையிட்டவர்கள்.... டாஸ்மாக்ல இரண்டாவது பெக் அல்லது அதிகமாப் போனா மூன்றாவது பெக்ல மட்டையப்போடற மாதிரி நாக் அவுட் ஆனவர்களே.முகமது அலிக்கோ வாய் ரொம்பவே நீளம்.உதாரணத்துக்கு சில...

எல்லோரையும் வியட்நாமுக்கு சண்டைக்குப் போங்கடான்னு அமெரிக்க அதிபர் கட்டளையிட்டால் சண்டைக்கும் போகாமல் வாயையும் மூடாமல் "எனக்கு வியட்நாமிடம் சண்டையொன்றுமில்லை.ஒரு வியட்நாமியும் என்னை நீக்ரோ என்று கூறியதேயில்லை"
  • உலகம் முழுதுமிருக்கும் கருப்பு மக்களை அடிமைப்படுத்தும் வெள்ளைக்கார அநீதி புத்திக்கு இதோடு ஒரு முடிவு ஏற்படவேண்டும்.10,000 மைல்களைக் கடந்து மனிதர்களைக் கொல்லவும்,எரிக்கவும் நான் போகமாட்டேன்
  • நீக்ரோக்கள் என்றழைக்கப்படுவர்களுக்கு மனித உரிமையில்லாமல் நாய்கள் மாதிரி நடத்தப்படும் அமெரிக்காவிலிருந்து 10000 மைல் கடந்து போய் மாநிற மக்கள் மீது குண்டுகளையும்,புல்லட்களையும் போடுவதற்காக நான் ஏன் யூனிபார்ம் அணிய வேண்டும்?
சும்மா இருக்குமா அமெரிக்க அரசு? நீ வியட்நாமில் மட்டுமல்ல அமெரிக்காவிலேயே கூட குத்துச்சண்டை போடாதே என்று லைசென்சை ரத்து செய்து விட்டதால் ஜார்ஜ் ஃபோர்மெனுடனான போட்டி காங்கோ நாட்டில் நிகழ்ந்தது.

பிலிப்பைன்ஸ் நாட்டு மணிலாவில் ஜோ ஃப்ராசியர் என்பவருடன் சண்டையிடுவதற்கு முன்பு முகமது அலி சொன்னது ""It will be a killa... and a chilla... and a thrilla... when I get the gorilla in Manila." (செங்கோவி!இதை நான் பீட்டர் விடாம தமிழில் எனக்கு சொல்லத்தெரியலை:))

இப்படி ராப் பாட்டு பாடுவதுமில்லாமல் ஜார்ஜ் ஃபோர்மெனுடன் குத்துச்சண்டை ரிங் வளையத்துக்கு செல்வதற்கு முன்பு வழக்கமாக குத்துச்சண்டை வீரர்கள் இடது,வலது புறமாக நடனமாடுவது மாதிரியே சண்டை போடும் ஸ்டைலில் தன்னைக்காத்துக்கொள்ளப்போவதாக சொல்லி விட்டு முதல் சுற்றில் ஒன்பது குத்துக்களை போர்மனுக்கு விட்டும் நாக் அவுட் செய்ய முடியாமல் இந்த டெக்னிக் வேலைக்கு ஆகாது என்று எண்ணி இரண்டாம் சுற்றில் தன் வாயே தனக்குதவியென்று ஜார்ஜ் ஃபோர்மெனைக் கோபப்படுத்தும் விதமாக வாய்ச்சொல் வீரராக ஜார்ஜ் விடும் குத்துக்கள் தனது முகத்தில் மட்டும் படாமல் அடிமேல் அடி வாங்கிக்கொண்டு தனது உடல் பலத்தை வளையத்தின் கயிறோடு சாய்ந்து கொண்டு அடிவாங்கிக் கொண்டும் திட்டிக்கொண்டும் ஏழு சுற்று வரை நின்றதைப் பார்த்த எனக்கு அலி தேறாத கேஸ் என்றே தோன்றியது.

இரண்டு அல்லது மூன்று சுற்றில் நாக் அவுட் செய்யும் ஜார்ஜ் ஃபோர்மெனால் 7 சுற்றுக்குள் தொடர் குத்து விட்டும் முகமது அலியை வீழ்த்த முடியவில்லை.இப்பொழுது எட்டாவது சுற்று.ஜார்ஜ் ஃபோர்மென் களைத்துப் போன நிலை.எட்டாவது சுற்று துவங்கிய சில நிமிடங்களிலே முகமது அலி விட்ட குத்து ஜார்ஜ் ஃபோர்மெனை நிலைகுலையச் செய்து கீழே விழ வைக்கிறது.எதிரியைக் களைக்க வைத்து கயிற்றில் தனது பலத்தை தற்காத்துக்கொண்ட அலியின் குத்துச்சண்டை நுட்பம்  "The Rope-A-Dope" என குத்துச்சண்டையில் அழைக்கப்படுகிறது.
 விடுதலைப்புலிகள் கிளிநொச்சியை விட்டு இலங்கை ராணுவ வீரர்களை உள்வாங்கும் திட்டம் கூட இப்படியான ஒரு போர்த்தந்திரமாக இருந்திருக்கலாம்.2008ம் வருட இறுதி கால 2009ம் வருட துவக்க காலத்தின் மழைச்சூழலும் கூட இலங்கையின் ஸ்டாலின்கிராடை உருவாக்கியிருக்க வேண்டியவை.போர் தந்திரங்களையும் முந்தைய வெற்றிகளையும் கடந்து இப்பொழுது பெருமூச்சு மட்டுமே மிச்சம்.போரின் தார்மீக நெறிகளை ராஜபக்சே குழு சீர்குலைத்த மாதிரி குத்துச்சண்டையின் முகத்தை மைக் டைசன் எதிரியின் காதைக்கடித்து உருமாற்றிவிட்டார்.

குத்துச்சண்டையின் உச்சத்தில் "I am the greatest" என்று சொல்லிக்கொண்டிருந்த முகமது அலி பிற்காலத்தில் சமாதான தூதுவனாக சதாம் உசேனிடம் போய் அமெரிக்க போர் வீரர்களை மீட்டுக்கொண்டு வந்ததும் தன்னை சமூக சேவகனாக மாற்றிக்கொண்டதும் வியப்பானாவை.பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு முகமது அலியும் கூட இப்பொழுது பழைய நினைவுகளில் வசந்த காலங்களை எண்ணிக்கொண்டிருக்க கூடும்.

13 comments:

rajamelaiyur said...

Super post . .

rajamelaiyur said...

Indle la enaithuviden

ஹேமா said...

முகமது அலியும் விடுதலைப்புலிகளும் !

Anonymous said...

அந்த ஒப்பீடு பொருத்தமாக உள்ளது !

செங்கோவி said...

முகமது அலியின் மாற்றம் ஆச்சரியப்படத் தக்கது தான், அமெரிக்காவில் ஆரம்பித்து வியட்நாம் போய் ஈழத்தைத் தொடும் உங்கள் எழுத்தும்!!

idroos said...

"it will be killa..and a chilla..and a thrilla..."...

TAMIL Translation:

"வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி.ஒன் உடம்ப பிச்சி போட்டுடுவன் பஜ்ஜி.டன்டன்னகா......."

MANO நாஞ்சில் மனோ said...

உங்க ஒப்பீடு ஆச்சர்யமா இருக்கு மக்கா...!!!!

ராஜ நடராஜன் said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super post . .//

//Blogger "என் ராஜபாட்டை"- ராஜா said...

Indle la enaithuviden//

Raja Sir!Thanks.

இணைய வருட சந்தா நேற்று முடிந்து விட்டதால் இண்ட்லியில் இணைக்க இயலவில்லை.நேரம் பார்த்து செய்த உதவி.நன்றி.

ராஜ நடராஜன் said...

//ஹேமா said...

முகமது அலியும் விடுதலைப்புலிகளும் !//

ஹேமா!இப்படியும் தலைப்பு வச்சிருக்கலாம்தானே!பதிவு எழுதும் போது விடுதலைப்புலிகள் பற்றி எந்த ஒப்பீட்டு நினைவும் இல்லாமல்தான் துவங்கினேன்.அடிமேல் அடி வாங்கிக்கொண்டு தனது பலத்தையெல்லாம் சேமித்து விட்ட குத்துச்சண்டை நுட்பம் திடீரென அனிச்சையாக விடுதலைப்புலிகளுடன் ஒப்பிட வைத்தது.நீங்கள் சொன்னமாதிரியே தலைப்பு வைத்திருந்தாலும் தகும்.நன்றி.

ராஜ நடராஜன் said...

//Blogger கந்தசாமி. said...

அந்த ஒப்பீடு பொருத்தமாக உள்ளது !//

வாங்க ஐயா!உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்.முந்தைய உங்க பின்னூட்டத்துக்கு பதில் அப்பொழுதே சொல்லி விடலாமென்று பார்த்தேன்.ஆனால் உங்கள் பதிவின் சாரமாக பதிவு போட்டவர்(அருளெழியன்?)செம கடுப்புல இருந்ததால் மெல்ல சொல்லலாமேயென்று விட்டு விட்டேன்.

ஆனா காபி பேஸ்ட் படம் நீங்களா கூகிளண்ணனா என இப்பவும் உறுதியா எனக்குத்தெரியல:)

ராஜ நடராஜன் said...

//செங்கோவி said...

முகமது அலியின் மாற்றம் ஆச்சரியப்படத் தக்கது தான், அமெரிக்காவில் ஆரம்பித்து வியட்நாம் போய் ஈழத்தைத் தொடும் உங்கள் எழுத்தும்!!//

ஹேமாவுக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும் பாஸ்!ஈழம் ஒப்பீடு அனிச்சையாக யதார்த்தமாக வந்த ஒன்று.வியட்நாம் போர் குறித்த பில் கிளிண்டன் விமர்சனமெல்லாம் அவர் அமெரிக்க ஜனாதிபதியாக வந்தபின்பே பிரபலம்.ஆனால் முகமது அலியின் வியட்நாம் வாய்மொழிகள் வியட்நாம் போர் காலத்திலேயே பிரபலமாக இருந்திருக்க கூடும்.காரணம் அலி புகழின் உச்சத்திலிருந்த காலத்தில் அவரது ஐம் த கிரேட்டஸ்ட் போன்ற வசனங்கள் சேகுவரா பனியன் மாதிரி மிகப்பிரபலமானவை.

ராஜ நடராஜன் said...

//ஐத்ருஸ் said...

"it will be killa..and a chilla..and a thrilla..."...

TAMIL Translation:

"வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி.ஒன் உடம்ப பிச்சி போட்டுடுவன் பஜ்ஜி.டன்டன்னகா......."//

ராப்!ராப்!செம ராப் ராப்:)
இணையாத இட்லி வடை கூட "பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா" இந்த மாதிரி நிரந்தர ராப் ஒன்னு வச்சிருக்காருல்ல?

சரி உங்களுக்கு எசப்பாட்டு பாடவா!

"விட்டா எகிரும்!உட்டா குளிரும்!பட்டா தெரியும்"

ராஜ நடராஜன் said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said...

உங்க ஒப்பீடு ஆச்சர்யமா இருக்கு மக்கா...!!!!//

மனோ!வந்துட்டேளா இல்ல இன்னும் குளிச்சிட்டிருக்கேளா:)