Followers

Thursday, July 21, 2011

சமச்சீர் கல்வி தீர்ப்புக்கு வாழ்த்துக்கள்

ஜெயலலிதாவின் அடக்கி வாசிக்கும் தன்மையைக் கவனித்து 100 நாள் அடிப்படையில் கருத்து ஏதும் கூறாமல் நிறை குறைகளை எடை போடலாமென்று பார்த்தால்  ஹில்லாரி கிளிண்டன் சந்திப்பு ஆளுமையையும் புறம் தள்ளி சமச்சீர் கல்வியில் சொதப்பியது நன்றாகவே தெரிகிறது.ஹில்லாரி கிளிண்டனையும் அமெரிக்க சார்பு நிலையையும் தமிழகம் வரவேற்க வேண்டுமென்றாலும் தமிழகத்தின் உள்ளீடு அரசியலையும்,வாழ்வியலையும் பற்றியெல்லாம் அறியாத ஹில்லாரி கிளிண்டன் ஒரு நாள் விருந்தினர்.தமிழக மக்கள் வாழ்விலும் தாழ்விலும் உடன் பயணிப்பவர்கள் அல்லவா?

இதனை புரிந்து கொண்டும் எத்தனை முறை நாற்காலியில் அமர்ந்தோம் என்பதல்ல பெரியது.எப்படி ஆட்சி செய்து மறைந்த பின்னும் பெயரை நிலைத்து நிற்கும் என்பதற்கான வரலாற்றை விட்டுச் செல்வதே இனி வரும் தலைமுறையும் பெயர் உச்சரிக்கும்.கருணாநிதிக்கு அந்த தகுதியிருந்தும் அதற்கான யோக்கியவானாக இல்லாமல் போனார்.ஆனாலும் அவரது புகழ்பாடும் பாடப் பக்கங்கள் இல்லாத சமச்சீர் கல்வி வரவேற்க வேண்டிய ஒன்றே.

முதல்வர் ஜெயலலிதா!இதோ இது உங்கள் தருணம்.நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு கொடுத்து பாடத்திட்டத்தின் தேவையற்ற பகுதிகளை நீக்கி சமச்சீர் கல்வியை பள்ளியில் அமல்படுத்துங்கள்.ஹில்லாரி கிளிண்டனின் அமெரிக்க வரவேற்பும்,ஈழத்தமிழர்களின் நல்வாழ்வுக்கு சட்டமன்ற தீர்மானங்களையும் கடந்து செயலாற்றும் திறனும் தமிழக மக்களின் சார்பாக உங்களை இந்திய அரசியலில் முன்னிறுத்தும் என்பதோடு உங்களை எதிர்கால தமிழ் தலைமுறைக்கும் அடையாளம் காட்டும்.


 ஜனநாயகத்தை இன்னும் வாழவைத்துக்கொண்டிருக்கும் அரசியல் சாசன அமைப்பாக நீதிமன்றம் இருப்பது இந்திய ஜனநாயகத்தின் வேர்களை இன்னும் ஆழமாக வேரூன்ற வைக்கும் என்ற நம்பிக்கையை இன்னும் நீரூற்றி வளர்க்கிறது.

நீதிமன்ற தீர்ப்புக்கு வாழ்த்துக்கள்!

3 comments:

http://thavaru.blogspot.com/ said...

எல்லா சொல்லியாச்சு..முதல்வர்...???!!! ராஜநட...

ராஜ நடராஜன் said...

//தவறு said...

எல்லா சொல்லியாச்சு..முதல்வர்...???!!! ராஜநட...//

இன்னும் ஜெயலலிதா கேள்விக்குறிதான் என்பதில் சந்தேகமில்லை.ஏனைய அனைத்து மாற்றங்களுக்கும் நியாயமான காரணத்தை அவரால் சொல்லிவிட முடியும் சமச்சீர் கல்வியில் அவரது நிலைப்பாடு தவிர.

மேலும் பாரம்பரிய பாடத்திட்டங்களுக்கு மாற்றாக கூட புதிய நல்ல வழிகளையுமாவது ஆராய்ந்திருக்கலாம்.மதுரை சரவணன் கற்பனை சார்ந்த அறிவியலைப் புகட்டுவதாகக் கூறியிருந்தார்.அதுமாதிரியான ஒரு பரிந்துரையையாவது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கலாம்.வெறுமனே மதில்மேல் பூனை நிலை கலைஞர் கருணாநிதி சார்ந்த ஆதரவையே மக்களுக்கு உணர்த்துகிறது.

நிரூபன் said...

உங்களுடன் இணைந்து நானும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்கிறேன்.
பல ஏழை மாணவர்களின் உள்ளங்களில் மீண்டும் நம்பிக்கை ஒளியினை ஏற்றி வைத்திருக்கும் அருமையான முயற்சியினை உச்ச நீதிமன்ற முடிவு தந்திருக்கிறது.