முந்தைய பதிவில் சுகாசினி அக்கா கோபிச்சிட்டாங்களேன்னு ஊறுகாய் செய்வது எப்படின்னு பார்த்தோம்.சிரிக்கிறது எப்படின்னு பாலுமகேந்திரா படத்துக்கே கற்றுக்கொடுத்த எனக்கேவான்னு சுகாசினி அக்கா சொல்ற சிரிப்பை விட Anu got a natural smile on her face always... சுகாசினி அக்கா மாதிரி பதிவர்களை சிடுசிடுக்காம எப்பொழுதும் சிரிப்பாகவே இருக்கும் அனுவுக்காக சின்னதா ஒரு டிப்ஸ் கொடுத்துட்டு பதிவுக்கு போகலாம்.காபி வித் அனு மாதிரியே இந்தி சினிமா பிரபலங்களுக்காக கரன் ஜோகர் Koffee with karan என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார்.காபி வித் கரன் எதுகை மோனை சரியாக வருகிற மாதிரி ஐஸ்கிரிம் வித் அனு பெயர் பொருத்தமாயிருக்குமே!எதுக்கு ஈயடிச்சான் காபி:)
சரி பதிவுக்கு வருவோம்!இப்ப சர்க்கரையோடு சண்டை போட்டுகிட்டவங்க,டயட்ன்னு வயிற்றைக் காயப்போடுறவங்க அடுத்த கடைல என்ன கிடைக்குமென்று பாருங்க.ஏன்னா இனிப்பா,குளுமையா,புரோட்டின்,கொழுப்பு சத்துடன் ஐஸ்கிரிமைப் பற்றி கதைக்கப் போகிறோம்.இனிமையாய் இருப்பதாலேயே குழந்தைகள் இனிப்பாய் இருக்கிறார்கள்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்புக்களில் ஒன்று ஐஸ்கிரிம் என்பதோடு ஐஸ்கிரிமை அப்படியே சாப்பிடுவேனாக்கும் வசனம் பேசுறவங்கதான் அனைவருமே.ஆனால் ஐஸ்கிரிம் ருசிக்கே ருசி ஏத்தினா எப்படியிருக்கும்ன்னு யதேச்சையா சாப்பிட்டதுதான் ஐஸ்கிரிம் வித் கிரிம் காரமல்!

சவுதி அரேபியா மனித உரிமைகளிலும்,மத விசயத்தில் மட்டுமே அப்படி இப்படி.ஆனால் உணவு தரக்கட்டுப்பாட்டில் அட்சர சுத்தம்.சவுதி அரேபியா பால்,தயிர்,பழரசங்கள்,பிராய்லர் கோழி போன்றவைகளை அல்மராய்,ராணி,சவுதியா போன்ற லேபிளை பார்த்தவுடன் வாங்கி விடலாம்.முன்பொரு முறை பதிவர் KVR சவுதியிலிருந்து அல்மராய் என்ற பால் நிறுவனத்தைப் பற்றி பதிவு போட்டிருந்தார்.மாடு மடியிலிருந்து உபயோகிப்பாளர் வாங்கி உபயோகிக்கும் வரை பால் மனித கரங்களில் படாது என்பது பெட்ரோலியப் பொருளாதாரம் நிகழ்த்தும் சாதனைகளில் ஒன்று.நாம் கூட தமிழகத்தில் சென்னை மாதாவரம் பால்பண்ணையில் இதனைப் பரிட்சித்துப்பார்க்கலாம்.அல்மராய் நிறுவனம் பால்,தயிர்,பழரசங்கள் போன்ற தயாரிப்புகளோடு பாலிலிருந்து தயாரிக்கும் கிரிம் காரமலை தயாரிக்கிறார்கள்.

Texture என்ற சொல் துணி,போட்டோஷாப்,இசை,ஓவியம் என்று பலதுறைகளில் உபயோகப்படுத்துவது போலவே உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.உதாரணமாக டெக்ஸரைப் பொறுத்தே ரொட்டி,கேக் போன்ற பொருட்களின் மிருதுதன்மை காணப்படும்.அதே போல்தான் ஐஸ்கிரிமின் மிருதுதன்மையும்,கிரிம் காரமலின் மெதுமெதுப்பும் ஐஸ்கிரிமின் மிருதுதன்மையை விட சிறந்தது.சிலருக்கு ரஜனியின் நடிப்பு பிடிக்கும்.இன்னும் சிலருக்கு கமலஹாசன் நடிப்பு பிடிக்கும்.ஐஸ்கிரிமும்,கிரிம் காரமலும் ரஜனி,கமல் நடிப்பு மாதிரி.தனித்தனியாக இருந்தாலே பிடிக்கும்.அதுவும் ரஜனியும்,கமலும் சேர்ந்து நடிச்சா எல்லோருக்குமே பிடிக்கும்ங்கிற மாதிரிதான் ஐஸ்கிரிமுடன் கிரிம் காரமலைக் கலந்து கட்டி சாப்பிடுவது.கிரிம் காரமலை வீட்டில் கூட எளிதாக செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்:
500 மில்லி பால்
125 கிராம் சர்க்கரை
125 கிராம் சர்க்கரை (பொன்னிற சர்க்கரை பாகு)
2 தேக்கரண்டி நீர்
3 முழு முட்டை
2 முட்டையின் மஞ்சள் கரு
3 அல்லது 4 துளி வெனிலா சாறு
வேணுமின்னா கிள்ளின மாதிரி உப்பு
2 தேக்கரண்டி நீரில் 125 கிராம் சர்க்கரையைக் கலந்து மெதுவான சூட்டில் சர்க்கரையை இளக்கி பொன்னிறமாக கெட்டியான பாகு வரும் வரை சர்க்கரையை தேக்கரண்டில கிண்டி எடுத்து இன்னொரு பாத்திரத்தில் ஊத்தி வச்சிட்டு பாலைக் காய்ச்சி சர்க்கரை கலந்து முட்டையைக் கலக்கி கூழ் மாதிரியான பதம் வரும் வரை கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.அடுப்பு சூடு 140 டிகிரி பாரன்ஹீட் என்று கூகிள் அனுபவங்கள் சொல்கின்றன.பின் சில துளிகள்(3-4 துளிகள்) வெனிலாவைக் கலந்து பொன்னிறப் பாகு கலக்கிய பாத்திரத்தில் ஆற வைத்து ஊற்றி பிரிட்ஜில் வைத்து குளிர வைத்தால் கிரிம் காரமல் தயார்.
டிப்ஸ்: பால் காய்ச்சும் போது இதனை Simmering point எனப்படும் மெல்லிய நெருப்பில் செய்வதை விட கொஞ்சம் அதிக நேரமெடுத்துக்கொண்டாலும் பரவாயில்லையென பால் கலவைப் பாத்திரத்தை ஒரு சுடுதண்ணிப் பாத்திரத்திற்குள் வைத்து கிண்டினால் முட்டை திரியாமல் இருக்கும்.
இதையெல்லாம் யாரு போய் உட்கார்ந்து கலக்கிகிட்டிருப்பது என்று சலிப்பவர்களுக்கு உடனடி நிவாரணம் என்னவென்றால் ஐஸ்கிரிமையும்,கிரிம் காரமலும் சூப்பர் மார்க்கெட்டில் கிடைத்தால் வாங்கி ஐஸ்கிரிம் கப்பில் ஐஸ்கிரிமையும்,கிரிம் காரமலையும் குப்புற விழ வைச்சு கரண்டியில் அப்படியே சாப்பிடுவது நோகாமல் நொங்கு தின்னும் கலை.
(கூகிளிடம் சுடாமல் நானே சுட்ட நோகாத ஐஸ்கிரிமுடன் கிரிம் காரமல்)
Dessert should be consumed prior to the last course of coffee என்று பிரெஞ்சு உணவு இலக்கணம் சொல்கிறது.அதாவது டாஸ்மாக்,ஸ்காட்ச்,வைன் என்று எந்த மதுவை அருந்தினாலும் உணவு அருந்திய பின் நம்ம பதிவில் இருக்குற மாதிரி ஒரு இனிப்பு சாப்பிட்டு பின் பால் கலக்காத காபியைக் குடித்து உணவை முடிக்க வேண்டுமாம்.
இப்பத்தானே புரியுது நம்ம ஆளுக மட்டையப்போட்டு காலையில் ஏன் ஹேங்ஓவராகிங்கிறான்னு.தலைப்பை விட்டு பதிவு தலைதெறிக்க ஓடுறமாதிரி தெரியறதால இதோட முடிச்சிடலாம்! அதற்கும் முன்னதாக சமையல் பதிவுகளும் ருசியா இருக்குற மாதிரி தோணுறதால புதுசு கண்ணா புதுசா ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கிறேன்.
16 comments:
//சுகாசினி அக்கா சொல்ற சிரிப்பை விட Anu got a natural smile on her face always...//
எதுக்கு சார் திடீர்னு இங்லிபீசுக்கு மாறுதாரு? ஒருவேளை அனுவுக்கு தமிழ் படிக்கத் தெரியாதோ?
சமையல் குறிப்பெல்லாம் எழுதாதீங்க சார்..வீட்ல படிச்சிட்டு என்னை வைச்சு டெஸ்ட் பண்ணுவாங்க..
அந்த காரமலா.அது பார்க்க நல்லாத் தான் இருக்கு.ஆனாலும்...
//உடனடி நிவாரணம் என்னவென்றால் ஐஸ்கிரிமையும்,கிரிம் காரமலும் சூப்பர் மார்க்கெட்டில் கிடைத்தால் வாங்கி ஐஸ்கிரிம் கப்பில் ஐஸ்கிரிமையும்,கிரிம் காரமலையும் குப்புற விழ வைச்சு கரண்டியில் அப்படியே சாப்பிடுவது நோகாமல் நொங்கு தின்னும் கலை.//
I like it..like it very much.
good post... vaalththukkal
//Blogger செங்கோவி said...
//சுகாசினி அக்கா சொல்ற சிரிப்பை விட Anu got a natural smile on her face always...//
எதுக்கு சார் திடீர்னு இங்லிபீசுக்கு மாறுதாரு? ஒருவேளை அனுவுக்கு தமிழ் படிக்கத் தெரியாதோ?//
பாஸ்!பீட்டரு விடுவது சில சமயம் தமிழ் வார்த்தை தடுமாற்றம்,இன்னும் சில சமயம் மென்மையாக இருக்குமே என்பதாலும்,சிலரை புகழ்வது தமிழில் சிறப்பாக இருக்கும்,ஆனால் திட்டனும்ன்னா பீட்டருதான் வசதியென பல காரணங்களால் அப்பப்ப பீட்டரு வந்து விழுந்துடும்.என்னை பதிவர்களிடம் போட்டுக்கொடுக்காம கண்டுக்காம படிச்சிகிட்டே வாங்க:)
நேற்று பெல்ட்டு பதிவில பதிவர்களை மூன்று விதமா பிரிச்சீங்க!எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காத என்னை மாதிரி பதிவர்களும் இருக்காங்கன்னு அங்கே சொல்ல மறந்ததை இங்கே சொல்லிக்கிறேன்:)
//செங்கோவி said...
சமையல் குறிப்பெல்லாம் எழுதாதீங்க சார்..வீட்ல படிச்சிட்டு என்னை வைச்சு டெஸ்ட் பண்ணுவாங்க..
அந்த காரமலா.அது பார்க்க நல்லாத் தான் இருக்கு.ஆனாலும்...//
எனக்குத் தெரிந்த சமையல் காலையில் மனைவிக்கு டீ போட்டுக்கொடுப்பதுதான்,அதையும் மனநிறைவாய் செய்கிறேன் என்று தமிழ்மணியன் இமயம் நேர்காணலில் சொல்லியிருந்தார்.மனைவிக்கு சமையல்கட்டில் உதவி செய்வது ஒரு பெரும் மனோதத்துவம் பாஸ்:)
காரமல் நல்லாத்தான் இருக்குது.ஆனாலும்....இழுவை சரியா இல்லையே:)
//செங்கோவி said...
//உடனடி நிவாரணம் என்னவென்றால் ஐஸ்கிரிமையும்,கிரிம் காரமலும் சூப்பர் மார்க்கெட்டில் கிடைத்தால் வாங்கி ஐஸ்கிரிம் கப்பில் ஐஸ்கிரிமையும்,கிரிம் காரமலையும் குப்புற விழ வைச்சு கரண்டியில் அப்படியே சாப்பிடுவது நோகாமல் நொங்கு தின்னும் கலை.//
I like it..like it very much.//
அதானே!வங்கி ஏ.டி.எம் இயந்திரமிருக்க வரிசையில் நின்னு காசாளர்கிட்ட காசு வாங்க கால்கடுக்க நிற்பானேன்!
//மதுரை சரவணன் said...
good post... vaalththukkal//
சரவணன் சார்!கடைல என்ன ஸ்பெசல்?
பதிவுலகில் நிறைய சரவணனைப் பார்க்கிறேன். நேற்று பர்கா தத் நான்கு பேரை கூப்பிட்டு வச்சு பகவத்கீதை,குரான்,இஸ்லாத்தையெல்லாம் பாட திட்டங்களாக வைக்கனும்ன்னு விவாதம் நடத்திகிட்டிருந்ததைப் பார்த்த போது தமிழ்க் கடவுள்களும் பாசுரங்களும் நிறைய இருக்கும் தமிழகமும் இந்தியாவுலதான் இருக்குதுங்கிற நினைப்பு வந்து போனாலும் இருக்குற இந்திய பிரச்சினைகள் போதாதென்று பாகிஸ்தான் தலிபான் ஸ்டைலில் மதபோதனைகள் வந்து விட்டா இன்னும் இந்தியா உருப்பட்டுடும்.
வாழ்த்து சொல்ல வந்ததற்கு இந்த ராவு ராவுறீங்களேன்னு சொல்லுவீங்களோன்னு நினைச்சு இத்தோட விட்டுடறேன்:)
இப்பத்தானே புரியுது நம்ம ஆளுக மட்டையப்போட்டு காலையில் ஏன் ஹேங்ஓவராகிங்கிறான்னு//
ஏதொ சூடான அரசியல் பதிவுன்னு நினைச்சேன் குளு குளு மேட்டரா
ஐயோ...ஐயோ நடா...இது ஐஸ்கிறீம் இல்ல.கரமல் புடிங் !
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
இப்பத்தானே புரியுது நம்ம ஆளுக மட்டையப்போட்டு காலையில் ஏன் ஹேங்ஓவராகிங்கிறான்னு//
ஏதொ சூடான அரசியல் பதிவுன்னு நினைச்சேன் குளு குளு மேட்டரா//
சதீஷ் அண்ணே!செத்த பாம்பு தி.மு.கவை இன்னுமா துவைக்கிறதுன்னு அரசியல் பதிவு போடத்தோணல.ஜெயலலிதா பற்றி சொல்லனுமின்னா 100 நாள் கெடு வச்சிருக்கேன்.சமச்சீர் கல்வி ஒன்றைத் தவிர அதிகமாக விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லையென்பதால் அதுவும் போர்.
கடந்த சில தினங்களாக நித்யானந்தா ராஜசேகரன் தலைப்பா கட்டோட வந்து எரிச்சல் செய்துகிட்டே இருக்கிறான்.பார்க்கலாம் பயபுள்ள மாட்டுறானான்னு!நேரம் கிடைச்சா கலாய்ச்சுடலாம்:)
//ஹேமா said...
ஐயோ...ஐயோ நடா...இது ஐஸ்கிறீம் இல்ல.கரமல் புடிங் !//
அய்யே ஹேமா!காரமல் புடிங் படத்தைப்போட்டு ரெசிபியும் சொன்ன எனக்குத் தெரியாதாக்கும்:)
நான் சொல்றது ஒரு ஸ்கூப் ஐஸ்கிரிமோட கிரிம் காரமல் புடிங்கை கலந்து கட்டி சாப்பிட ரெசிப்பியாக்கும்.நானே கண்டுபிடிச்ச ரெசிப்பிங்கிறதால புதுசா ஏதாவது பேர் வச்சு காப்பிரைட் வாங்கி வச்சிக்கிடலமான்னு இருக்கிறேன்:)
எங்க வீட்ல இப்ப இதுதான் புது ரெசிபி தெரியுமா?
சுடுதண்ணிப் பாத்திரத்துக்குப் பதிலா ஒரு மில்க் குக்கர்லே வச்சு சூடாக்குங்க. டபுள் பாய்லர்!
ராஜ நட வாழ்த்துகள்...கத்துகிட்டது க.மு., க.பி யாங்க...
//சுடுதண்ணிப் பாத்திரத்துக்குப் பதிலா ஒரு மில்க் குக்கர்லே வச்சு சூடாக்குங்க. டபுள் பாய்லர்! //
டீச்சர்!தாமதமாக பின்னூட்டம் பார்த்தேன்.நீங்க சொல்ற டெக்னிக்கும் நல்லாயிருக்குதே!நன்றி.
//தவறு said...
ராஜ நட வாழ்த்துகள்...கத்துகிட்டது க.மு., க.பி யாங்க...//
கொஞ்சம் க.மு!அதிகம் க.பி:)
Post a Comment