Followers

Saturday, April 30, 2011

தமிழக முதல்வரே!பகுத்தறிவோடுதான் அறிக்கை விடுறீங்களா?

என்னமோ செய்யுங்க நீங்களாச்சு மக்களாச்சுன்னு நாம் ஒதுங்க நினைத்தாலும் தமிழக முதல்வர் கருணாநிதி எங்கப்பன் குதிருக்குள்ளங்கிற மாதிரியே அறிக்கை விட்டு மனுசனை டென்சன் ஏத்துறார்:.ரஜனி,கமல் கேட்கவேண்டிய கேள்வியை நமக்கெதுக்கு வம்புன்னு அவங்க ஒதுங்கிறதால  காசு கொடுக்காத அப்பாவி வக்கீலா நான் கேட்கிறேன்:)

தமிழக திரைப்படத்துறையில் தனது குடும்பத்தைச் சார்ந்தவர்களின் ஆதிக்கம் தாங்க முடியலைன்னு திரைப்படத்துறையினர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கும் போது என்னோட குடும்பம் மட்டுமா திரைப்படத்துறையில் இருக்கிறது,ரஜனி,கமல் போன்றவர்களின் குடும்பங்கள் அதே தொழிலில் இல்லையா என எதிர்க் கேள்வி போடுகிறார் என NDTV சொல்கிறது.NDTV  ஈழப் படுகொலையைப் பற்றி கவலைப்படுகிறதோ இல்லையோ சர்தார் மாணவன் ஆஸ்திரேலியாவில் அடி வாங்கிட்டான், வெளியுறவுத்துறை கண்டனம் என்பதையோ கருணாநிதி குடும்பத்தைப் பற்றி பொது அறிவு வளர்ப்பதையோ தவற விடுவதேயில்லை. சரி!நம்ம முதல்வர் அறிக்கைக்கு வருவோம்.

எனது நண்பர்களான எம்.ஜி.ஆர்,சிவாஜி உள்பட இதுவரை 75 படங்களுக்கு மேல் நான் கதை வசனம் எழுதியிருக்கிறேன்.நடிகர்களுடனும்,திரைப்பட தொழில் நுட்பக் கலைஞர்களுடனும் நட்புறவோடு பழகி வருகிறேன் என்பது அனைவரும் அறிந்ததே. 

கருணாநிதியை விமர்சிக்கும் ஒரு பத்திரிகைக்கு பதில் அளிக்கும் போதே  எனது குடும்பத்தினர் வளர்ச்சியைப் பொறுக்க இயலாததால் இந்த மாதிரி விமர்சனத்தை வைக்கிறார்கள் என்கிறார்.

கருணாநிதியின் பேரன்கள் உதயநிதி ஸ்டாலின்,தயாநிதி அழகிரி மற்றும் பேரன்கள் மாறன் சகோதரர்கள் பல படங்களைத் தயாரித்துள்ளது அனைவரும் அறிந்துள்ளதே.எனது பேரன்கள் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியிருப்பது எப்படி சாத்தியமென்று கேள்வி கேட்கிறார்கள்.ஏ.வி.மெய்யப்பன் மகன்களும்,பேரன்களும் படத் தயாரிப்பில் இருப்பதை இவர்கள் அறியவில்லையென்பதோடு இவர்களைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் மகன்கள் பிரபுவும் ராம்குமாரும் நடிப்புத்துறையிலும் தயாரிப்பிலும் ஈடுபட்டார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் ரஜனிகாந்தின் மகள் சௌந்தர்யாவும் ஒரு தயாரிப்பாளரே என்பதோடு கமல் ஹாசனின் மகள் ஸ்ருதியும் ஒரு நடிகை என்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் பல கோடி கணக்கில் சலுகைகள் தி.மு.க அரசு அளித்திருக்கும் போது எனது மகன்களும் பேரன்களும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடுவதால் என்ன இதயம் நோகுகிறது?

எனது குடும்பத்தை சார்ந்தவர்கள் அரசியலிலோ திரைப்படத்துறையிலோ நுழையும் போது இதை ஏன் குடும்ப அரசியல் என்று கூறப்படுகிறது?

பேசி முடிச்சிட்டீங்களா முதல்வரே! ஒவ்வொன்றாக அலசுவோம்.

ரஜனி,கமல ஹாசனின் துவக்க காலம் முதல் உழைப்புக்கான காலம் எத்தனை வருடங்கள் துவங்கி எத்தனை வருடங்கள் கழித்து அவர்களின் பெயர்கள் தமிழ் திரைப்படத்துறையில் வலம் வந்தன?

இது வரை படங்களுக்கு கதை வசனம் மட்டுமே எழுதி சினிமாத் துறையில் படம் தயாரிக்கும் நிலைக்கு உயர்ந்தவர்கள் யாராவது பஞ்சு அருணாசலம் மாதிரி ஒரு சிலர் தவிர யாரால் உயரும் சாத்தியமிருக்கிறது திரைப்படத்துறையில்?

மெய்யப்பன் மகன்களும்,பேரன்களும் திரைப்படத் துறை தவிர்த்து எத்தனை துறைகளில் தங்கள் கால் பதித்துள்ளார்கள்?

ரஜனியின் ஒரு படத்துக்கான வருமானம் எவ்வளவு என்பது திரைப்படத்துறை மற்றும் நீங்கள் அறிந்த ஒன்று எனும் போது ஏன் அவர் மகளால் திரைப்படம் தயாரிக்க இயலாது?

இங்கேதான் நீங்கள் மாட்டிக்கொள்கிறீர்கள் முதல்வரே!

உங்கள் பேரப் பிள்ளைகள் திரைப்படம் தயாரிக்குமளவுக்கு எந்த துறையில் அவரவர் பெற்றோர்களின் வருமானம் என்று தமிழக மக்கள் யாருக்காவது தெரியுமா?

கமல ஹாசன் மகள் திரைப்படத்தில் நடிக்கிறார் என்றால் அவரது திறமையினால் மட்டுமே முன்னேற இயலும்.இல்லையென்றால் எம்.ஜி.ஆர் க்கு டூப்ளிகேட் முத்து கதைதான்.

 உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அரசியலில்,திரைப்படத்துறையில், தொலைக் காட்சித் துறையில்,பத்திரிகைத் துறையில், மந்திரி பதவிகளில் என ஆக்டோபஸாக தனது கரங்களை விரிப்பதற்கு, உயர்வதற்கு உங்கள் முதல்வர் பதவி என்ற அதிகாரம் காரணமாக இருக்கின்றது என்பதனாலேயே விமர்சனங்கள் எழுகின்றன என்பதோடு அதுவே உண்மை என்பதை தமிழக வரலாறு பதிவு செய்திருக்கிறது என்பதை பெரியார், அண்ணா போன்றவர்களுடன் பழகிய உங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள்.

வடநாட்டுப் பத்திரிகைகள் உங்களை விழிக்கும் போது aging patriarch என்றே குறிப்பிடுகிறது.ஆங்கிலப் படங்களை அவ்வப்போது பார்த்து தொலைத்தாலும் உங்களை நினைவு படுத்துவது காட் பாதர் டான் விட்டோ கார்லியோன்(Don Vito Corleone).அந்தப் படத்தின் கதையை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால்

The aging patriarch of an organized crime dynasty transfers control of his clandestine empire to his son.

இயக்குநர் மணி ரத்னம் நாயகன் படத்தின் தமிழகமறிந்த வசனம்....

நீஙக நல்லவரா?கெட்டவரா?

Friday, April 29, 2011

சிங்களத்தமிழன் டாக்டர் பிரியன் செனவிரத்னே

பிறப்பால்,மொழியால் தமிழனாக இருப்பதால் தமிழீழம் குறித்த ஆசையும் கனவும் வருவது இயற்கையான ஒன்று.ஆனால் ஒரு மனிதன் சிங்கள மொழியில் பிறந்து மனிதத்தையும் தமிழனையும்,தமிழீழத்தையும் நேசிப்பவனாக இருந்தால் ஆச்சரியமல்லவா?அப்படி ரதியின் இந்த பதிவால் நோம் சாம்ஸ்கியைத் தெரியும்,அருந்ததி ராயைத் தெரியும் இது யார் Brian Senewiratne எனக்கேட்டு அறிமுகமானவர் சிங்கள தமிழ்ப் போராளி டாக்டர் பிரியன் செனவிரத்னே(Dr.Brian Senewiratne).புலம் பெயர் தமிழர்கள் எப்படி இவரை அடையாளம் கண்டு முன்னிறுத்த தவறவிட்டார்கள் எனத் தெரியவில்லை.விடுதலைப் புலிகளின் துவக்க காலம் முதல் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்திருக்கிறார்.ஆஸ்திரேலியாவில் தனது தோட்டத்து செடிகளை அகற்றியதற்காக குற்றம் சாற்றப்பட்டு நிலத்துக்கு அடிமாட்டுக்காசு கொடுத்து விடுகிறோம் என்பதோடு தப்பை ஏற்றுக்கொள் என்று அரசு சொல்ல, நான் தவறு செய்யவில்லையென்று நீதிமன்றத்தில் போராடி தனது மொத்த வருமானத்தையும் ,சேமிப்பையும் இழக்கும் சோக நிலையில் இருக்கிறார் என்று தேடலில் கிடைத்த தகவல்.
 Dr.Brian Senewiratne with Archbishop Desmond Tutu

சாக்ரடிஸ்  சிந்திக்கச் சொல்லி கற்றுக்கொடுத்து இளைஞர்களைக் கெடுக்கிறார் என்று குற்றம் சொன்னது மாதிரி தமிழகத்தில் இவரது அனல் பறக்கும் ஆங்கிலப் பேச்சுக்களைக் கேட்டு அரங்கத்தை விட்டு தனது காருக்குப் போகும்போது கூட புலம்பெயர் தமிழ் இளைய தலைமுறை இவரை மொய்த்துக் கொள்கிறார்கள் என்பது வியப்பாயில்லை!அப்படியென்ன இவர் மீது பற்றுதல் என்றால் இலங்கையின் நல்ல எதிர்காலத்துக்கு கொழும்பில் சிங்கள ஒரு இன அதிகாரக் குவிப்பு இல்லாமல் வன்னியிலும் தமிழீழம் பிறக்க வேண்டுமென்கிறார்.எல்லோரும் பிரபாகரனையும்,விடுதலைப் புலிகளையும் குறை சொல்லும் போது பிரியன் செனவிரத்னே  ஈழப்போராட்டத்தின் பின்னடைவுக்கு புலம்பெயர் தமிழர்களை குற்றம் சுமத்துகிறார்.

ராஜபக்சே அரசை நீதிமன்றத்தில் நிறுத்தவும்,போராடவும் பணம் தேவைப்படும் நேரத்தில் புலம் பெயர்த் தமிழர்கள் உண்டு கழித்து இந்துக் கோயில்களைக் கட்டிகிட்டு ஈழம் அமைவதற்கு தடையாக இருக்கிறார்கள் என்கிறார்.விடுதலைப்புலிகள் போராடும் குணத்தையும் அவர்களால் இயன்றதை செய்து முடித்திருக்கிறார்கள்.இன்னுமொரு ஆயுதப்போர் சாத்தியமில்லை என்கிறார்.சிங்களவர்கள் எல்லாம் முடிந்து விட்டதென்று குதுகலிக்கிறார்கள்.ஆனால் ஒரு போராட்டத்தின் துவக்கமே இனிமேல்தான் என்கிறார்.விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் முத்திரை குத்தியது போல் தன்னையும் தீவிரவாதியென்று மலேசியாவிலிருந்து திருப்பி அனுப்பி விட்டார்கள் என்கிறார்.காங்கிரஸ் ஆட்சியும்,தமிழக தி.மு.க ஆட்சி மத்திய அரசின் நிலைப்பாட்டால் ராஜபக்சே அரசுக்கு ஆதரவு நிலையை எடுக்கும் போது பிரியன் ராஜபக்சேவுக்கு சவுக்கு சுழட்டுகிறார்.

அமெரிக்காவுக்கும்,ரஷ்யாவுக்கும் பூகோள ரீதியாக பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததோ அதே போல் சீனாவுக்கான எண்ணை,ஏனைய பொருளாதார ஏற்றுமதி,இறக்குமதி காரணமாக  இப்பொழுது இலங்கையும் முக்கியத்துவம் வாய்ந்த பூமியாக அமைந்து விட்டது.இந்து மகா சமுத்திரத்தை தமது கட்டுக்குள் கொண்டு வரும் நீர்வள உலக போட்டியாக இலங்கை இப்போது மாறி விட்டது.

மேலே சொன்ன இவரது கருத்துக்களோடு எனது ஆதங்கமாக இந்த பாராவை நான் எடுத்துக்கொள்கிறேன்.தனது முழு ஆதிக்கத்தில் இருந்த பரந்த நீர்பரப்பை தவறான வெளியுறவுக் கொள்கை அமைத்துக் கொண்டது  காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா.இனி வரும் காலங்களில் பேய் முழியோடு திரு திருவென இந்தியா முழிக்கும் என்பதை   நிரூபிக்கும் என்று உள் உணர்வு சொல்கிறது.பார்க்கலாம்.


ஆஸ்திரேலியவில் புலம் பெயர்ந்த டாக்டர் பிரியன் செனவிரத்னே பண்டாரநாயக்கின் உறவினர் என்பதோடு மட்டுமல்லாமல் பண்டாரநாயகா, சந்திரிகா போன்றவர்களையும் இலங்கைப் பிரச்சினைக்கு குற்றம் சுமற்றுகிறார்.மேற்கத்திய நாடுகளில் தமிழர்களிடையே கருத்தரங்கம் நிகழ்த்துவதோடு போர்க் குற்றங்களை காணொளித் தகடுகளாக பலருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கிறார்.
 தென் ஆப்பிரிக்காவில் Apartheid இனப்போராட்டம் வென்றதற்கு இரண்டு காரணங்கள்.முதலாவது பொருளாதாரத் தடை,இரண்டாவது கிரிக்கெட் விளையாட தடை. இந்த இரண்டையும் இலங்கை மீது திணிப்பதன் மூலமே தமிழீழம் வெல்வதற்கு சாத்தியம் என்கிறார்.வயதான காலத்திலும் போராட்டக் குணம் கொண்ட தமிழீழவாதி டாக்டர் செனவிரத்னேக்கு எனது வணக்கங்கள்.

டாக்டர் பிரியன் செனவிரத்னேயின் கருத்தரங்க காணொளி காண

இங்கே http://www.youtube.com/watch?v=3N24uZSW87E

இங்கே http://www.youtube.com/watch?v=fw5b2fcmfgA&NR=1

இங்கே http://www.youtube.com/watch?v=GuB6QDMrDGo&NR=1

இங்கே http://www.youtube.com/watch?v=VoBA72i48D4&NR=1

Friday, April 22, 2011

டைம்ஸ் பத்திரிகைக்கு நன்றி

இன்றைய பெரிய வெள்ளி தினத்தின் சோகத்தோடு கிறுஸ்தவர்களுக்கு இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை போல் உலக தமிழர்களுக்கும் மீண்டும் உயிர்த்தெழும் நம்பிக்கைகளாக உலகளாவிய பார்வையில் ஐ.நா மூவர் குழு அறிக்கை பற்றிய எதிர்பார்ப்பும் அதனோடு கூட டைம்ஸ் இதழின் 100 பேர் பட்டியலில் ராஜபக்சே பெயரும் இருந்தது கண்டு கோபப்பட்டு No ஓட்டுப் போட்டவர்களுக்கும்,விவாதத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் மொத்த தமிழர்களுக்கும் மகிழ்ச்சிகரமான செய்தியாக ராஜபக்சே 100 பேர் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார் என்ற செய்தி
சிறு கல்லை நாமும் தூக்கியெறிந்து நமது கோபத்தைக் காட்டியுள்ளோம் என்பதோடு வாக்கெடுப்பு முறையில் தவறான முறையையும் சுட்டிக்காட்டியதில் நமக்கான பங்காக டைம்ஸ் பத்திரிகையின் முடிவுக்கு நாமும் சிறு காரணம் என்பதில் மகிழ்ச்சியடைவோம்.

2008ம் வருடம் துவங்கி 2009 மே மாதம் 19ம் தேதி வரையிலும் தங்கள் உணர்வுகளைக் கொட்டித் தீர்த்த பல பதிவர்கள் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகளுக்கு அப்பாலும் அதற்கு பின்பும் மெல்ல மெல்ல நம்பிக்கையிழந்த உணர்வுகளை பதிவுலகில் தொடர்ந்து வலம் வருபவர்கள் உணர்வார்கள் என நினைக்கின்றேன்.தமிழகத்திலிருந்தும் புலம் பெயர்ந்தும் குரல் கொடுத்த கட்சி மற்றும் இயக்கம் சார்ந்தவர்களும் கூட அவரவர் ரிதத்திற்கு ஆடியதாலும் கூட சலிப்புத் தன்மை சிலருக்கு வந்திருக்கவும் கூடும்.இதனையெல்லாம் மீறி தமது உணர்வுகளை தொடர்ந்து ஊடகம் மூலமும்,பின் கள ராஜ தந்திரங்களுக்கு உழைத்தவர்களுக்கும்,பதிவுலகில் பதிவு செய்தும்  கூடவே மனதுக்குள் அடைகாத்த பதிவர்கள் அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.
 
தற்போதைய சூழல்கள் மீண்டும் ஒரு சாதக சூழலை நமக்கு உருவாக்குகிறது.எத்தனையோ பதிவுகள் போடுகிறோம். இடையிடையே ஈழ மக்கள் அக்கறை குறித்த கருத்துக்களையும் முன் வைப்போம்.பகிர்தலும், விவாதங்களும் மட்டுமே நம்மால் இயன்ற உணர்வு சார்ந்த உதவிகள் என்பதை நினைவில் கொள்வோம்.

விழித்துக் கொண்ட டைம்ஸ் பத்திரிகைக்கு பதிவுலகம் சார்பாக நமது நன்றியை தெரிவிப்போம்.இயன்றவர்கள் மீண்டுமொரு கடிதம் டைம்ஸ் பத்திரிகைக்கு அனுப்புவோம்.

மீண்டுமொரு முறை புதிதாய் பிறப்போம்.அனைவருக்கும் மீண்டும் நன்றி.

Wednesday, April 20, 2011

2G களவாணிகளும் சிரிப்புத் திருடர்களும்

நம்மூர்ல போலிசுகிட்ட களவாணிக மாட்டிகிட்டா யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ நம்மூர் ஊடகத் துறைக்கு பலாப்பழம் சாப்பிடற மாதிரி.கிடைக்கிற முக்கு சந்து பொந்து,கோர்ட் வாசல்,போலிசு வண்டில ஏறுவது, உட்காருவது, இறங்குவதுன்னு கம்பி வளையம், ஜன்னல்ன்னு ஏகப்பட்ட இடத்துல தங்கள் காமிரா,வீடியோ திறமையைக் காட்டி படம் புடிச்சு செய்தியைக் கொண்டு வந்துடுவாங்க.
இதுல உண்மையான களவாணிகளும்,பொய்க் கேசுல பாதிக்கப்பட்டவங்களும் சேர்த்தி.அதனால் இந்திய சட்டமும்,நீதித்துறையும் ஊடகத்துறை கிட்டேயிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் கையால முகத்தை மறைக்கவும், வசதிப்பட்டவங்களாயிருந்தா கைல கர்சிப்,துண்டு  எதையாவது வைச்சு மூஞ்சிய மறைச்சிக்கிடுவாங்க என்பது உங்களுக்கு எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான்.விசுவலா உங்களுக்கு விளக்கனுமின்னுதான் 2Gல ராசாவுக்கு அடுத்து களி திங்கப் போற இந்திய Corporate Decision makers படம்!
இலங்கையில வெள்ளை வேன் கொலைகாரர்களை கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா நான் இப்போ சொல்லப் போறது உங்களுக்கும், எனக்கும் கூட இது வரை தெரியாது.வெள்ளையுடை களவாணிகளை கேள்விப்பட்டிருக்கிறீங்களா?கலா அக்கா சொல்ற மாதிரி சான்சே இல்லை! அதனால இப்ப பார்த்து தெரிஞ்சுக்குங்க.
 
திருடனுங்க யார்ன்னு மக்களுக்கு தெரிஞ்சுடக் கூடாதாம்.அதனால கால் முதல் தலை முடிவரை பேய்கள் மாதிரி மறைச்சுகிட்டு நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு போறாங்களாம்!இந்த மாதிரி அக்கப்போர் உலகத்துல எங்கேயாவது நடக்குமா?கடைசி படத்துக்கு சிரிப்பு வந்தா மட்டும் கமெண்டுனா போதும்:)

படங்களின் சொந்தக்காரர்கள்:
:1.கூகிள்
2.டெய்லி பயனீர்
3.ஐலண்ட். 

Monday, April 18, 2011

கழக கண்மணியிடம் துண்டு வாங்கிய கதை!

தேர்தல் முடிஞ்சும் கூட அரசியல் பதிவான்னு யாரேனும் முகம் சுழித்தால் இது தேர்தலையொட்டிய பதிவல்ல.முன்னாடியே சொல்லியிருந்தா தேர்தல் பதிவு மாதிரியாத்தான் ஆகியிருக்கும்.திருச்சி ரயில் பயணத்தில் திடீர் நண்பர்களிடம் பேசிக்கொண்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ரயில் திருச்சி ஜங்சனில் நின்றது.நான் ஜன்னலோரம் தனியாக இருந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்திருக்க கோச்சில் முதலில் நான்கு இளைஞர்கள் வந்து மூவர் இருக்கையின் இரு புறமும் ஆளுக்கு இரண்டு பேர் என வந்து உட்கார்ந்து கொண்டார்கள்.அதன் பின் வெண்ணிலா கபடிக்குழுவில் ஐம்பது புரோட்டா சாப்பிடுவர் உருவத்தில் ஒருவரும்,குள்ளநரிக்கூட்டத்தில் வெள்ளந்தியா போனைக் கொடுத்து விட்டு தேடி ஓடும் குண்டான உருவத்தில் ஒருவரும் வந்து ஆளுக்கு ஒரு புறமாக மீதமிருந்த இரு இருக்கையில் எதிரும் புதிருமாக உட்கார்ந்து கொண்டார்கள்.வண்டி கிளம்பியது.

கபடிக்குழு புரோட்டாக்காரர் சில உணவுப் பொட்டலங்களை வெளியே எடுத்தார்.பின் தண்ணீர் பாட்டிலையும் பக்கத்தில் வைத்தார்.அடுத்து கைப்பையைத் தேடி சரக்கு பாதி மில்லியை எடுத்தார்.கைவசம் கொண்டு வந்திருந்த கண்ணாடி கிளாசில் அளவு பார்த்து விட்டு தண்ணீரைக் கலந்து ஒரு கிளாசை குள்ளநரிக்கூட்ட குண்டு நண்பருக்கு கொடுத்து விட்டு தனது சரக்கை ஒரே ஃகல்ப் செய்தார்.அதுவரை மௌனமாக இருந்த நான் என்னங்கண்ணே ஒரே மொடக்குல குடிக்கிறீங்க!உடம்புக்கு நல்லதில்லை என போதைக்கு போதனைக்காரனானேன்.கபடிக்குழு புரோட்டா நண்பர் தனது நண்பரைக் காட்டி இவர்கிட்ட கேட்டுப் பாருங்க ஒரு ரவுண்டுக்கு நான் எவ்வளவு நேரம் எடுப்பேனென்று.நீங்கள் எல்லாம் இருப்பதால்தான் இந்த வேகம் என்றார்.அதற்கு குண்டு நண்பர் அவர் மெல்லத்தான் சாப்பிடுவது வழக்கமென்றார்.

பேச்சு குசலங்கள் விசாரித்த போது புரோட்டாக்காரர் தான் காஞ்சிபுரம் தி.மு.க வட்ட செயலாளர் என்றும் நண்பரும் ஏதோ கழக பதவியில் இருப்பதாகவும்,தேர்தலுக்கு விளம்பர போஸ்டர்கள்(அப்ப அவருக்குத்தான்  தெரியுமா இல்லை நான் தான் கனவு கண்டேனா தேர்தல் ஆணையம் ஆப்பு வைக்குமென்று),கேக் மற்றும் கழக துண்டுகள் ஆர்டர் செய்வதற்காக சிவகாசி போய் விட்டு திருச்சி வந்து சென்னை திரும்புவதாக சொன்னார்.ஆகா!நமக்கு பயணத்துக்கு ஒரு கண்மணி கிடைச்சதேன்னு மனசுக்குள் நினைத்துக் கொண்டு முதல் கணையே ஸ்பெக்ட்ரத்தை எடுத்து விட்டேன்.என்னங்க பத்திரிகைகள் எல்லாம் ஸ்பெக்ட்ரத்தைப் பத்தியே பேசுறாங்க என்றேன்.அதற்கு புரோட்டா கண்மணி ஸ்பெக்ட்ரத்தைப் பற்றி மக்களுக்கு என்னங்க தெரியும்?கலைஞர் மக்களுக்கு நிறைய செஞ்சிருக்காரு.அதனால தி.மு.க மறுபடியும் ஆட்சிக்கு வருமென்றார்.

இந்தக் கதை நடக்கும் போது ராசா ஜெயிலுக்குப் போகலை.அதனால அடுத்த பிரம்மாஸ்திரத்தை விட்டேன்.கலைஞர் ஆயிரம் நல்லது செய்திருக்கட்டும்.ஆனால் ஈழப்பிரச்சினை ஒன்றில் தான் சேர்த்து வைத்திருந்த அத்தனை நல்ல பெயரையும் கெடுத்துக்கொண்டார.நானும் கூட முன்பு தி.மு.க அனுதாபிதான் ஆனால் இப்ப இல்லை என்றேன்.அதற்கும் அவர் விட்டுக்கொடுக்காமல் இதில் கலைஞரை மட்டும் குறை சொல்ல முடியாது,காங்கிரஸ்க்கு இதில் அதிக பங்கு என்றார்.இதற்கிடையில் ஈழப்பிரச்சினை பேச்சில் வந்தவுடன் மற்ற நான்கு பேரில் ஒருவர் என்னிடம் நீங்க சொல்றதுதான் சரி இந்த தேர்தலில் ஈழப்பிரச்சினையும் எதிரொலிக்குமென்றார்.

பேச்சுக்கிடையில் புரோட்டா நண்பரும்,குண்டு நண்பரும் இரண்டாவது ரவுண்டுக்குப் போய் விட்டார்கள்.பேசிக்கொண்டே வறுத்த கோழியை ஒரு கடி கடித்து விட்டு பக்கத்தில் புலிச்சாதம், தயிர்ச் சாதம் சாப்பிட்டுக்கொண்டிருந்த நான்கு நண்பர்களில் தயிர்ச்சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரிடம் நீங்க இந்த பிரியாணியை எடுத்துகிட்டு தயிர்ச் சாதத்தைக் கொடுங்க என்றார்.தயிர்ச்சாதக்காரர் நான் கை வைத்து விட்டேனே என்று கேள்வி எழுப்பினார்.புரோட்டா கண்மணி அதனாலென்ன கொடுங்க என்று இலவசமா பிரியாணிய கொடுத்து விட்டு தயிர்ச்சாதத்தை வாங்கிக் கொண்டு சாப்பிட்டார்.எனக்கோ இது ஒரு புதிய காணல் அனுபவம்.இதென்ன சரக்கோட தயிர்ச்சாதம்!இது கிக் ஏத்துறதுக்கா அல்லது குறைக்கிறதுக்கா?சாப்பாடுன்னு சொன்னவுடன் சொல்ல வந்ததை விட்டு விடுவேனே:)

தயிர்ச்சாதம் கொடுத்து பிரியாணி சாப்பிட்டவர் என்னைப்பார்த்து நீங்க துணிச்சலா உங்க கருத்தை முன் வைக்கிறீங்க.அதுவும் வட்டச் செயலார்கிட்டேயே என்று சிரித்தார். ரயிலின் தடபுட சத்தத்திற்கு இணையாக எங்கள் பேச்சுக்குரலும் இருந்தது.

அப்புறம் என்னாச்சுன்னா ஈழப்பிரச்சினையைத் தொடர்ந்து செயலாளர் கண்மணி...  மக்களுக்கு விழிப்புணர்வு இல்லீங்க.சீரியல் பார்க்குறாங்க,சினிமா பார்க்குறாங்க!.யாராவது டி.வில நியூஸ் பார்க்குறாங்களா?போரில் நிறைய மக்கள் இறந்துட்டாங்கன்னு செய்தி வந்து ரெண்டு நாளா சரியா தூங்கல தெரியுமா என்றார்.இதோ இந்த சரக்கடிக்கறதக் கூட விட்டுடனும்.இதனால குடும்ப வாழ்க்கையே நாசமாப் போவுது என்று வருத்தப்பட்டார்.ஏனைய இருக்கையில் அருகில் இருந்தவர்கள் எல்லாம் கண்மணியையும்,என்னையும் கவனித்துக் கொண்டு தமக்குள் சிரித்துக்கொண்டுமிருந்தார்கள்.இதுவரை அதிகம் பேசாமல் பேச்சில் சிரிப்பை மட்டும் உதிர்த்துக் கொண்டிருந்த குண்டு நண்பர் புரோட்டா நண்பரிடம் ஏதோ கேட்டு விட்டு பைக்குள் கையை விட்டுத் துலாவி நான்கைந்து கழக தோள் துண்டுகளை வெளியே எடுத்தார்.கரை போட்ட துண்டை விரித்து எனக்கு பொன்னாடை போர்த்தி விட்டார்.காஞ்சிபுரம் வந்தால் கட்டாயம் வரும்படி போன் நம்பரெல்லாம் துண்டு நண்பர் கொடுத்தார்.எனக்கு காஞ்சிபுரம் போக நேரமில்லை. அருகில் இருந்தவர்கள் கைதட்ட ஜீன்ஸ்,சர்ட்டோட கரை துண்டு ஒரு புது அனுபவமாக இருந்ததால் நான் நெய்வேலி போய் சேர வரைக்கும் துண்டை தோளிலிருந்து கழட்டவேயில்லை:) 
 
இந்த தேர்தலில் வெற்றி தோல்வியை நான் ஆவலுடன் எதிர்பார்க்கும்  களம் காஞ்சிபுரம்.


Friday, April 15, 2011

டைம்ஸ் இதழின் ராஜபக்சேவின் அங்கீகாரம்

லண்டனில் ராஜபக்சேவை இலங்கைக்கு துரத்திய வேகத்தில் கூட்டு முயற்சியும்,சாத்வீகமான போராட்டமும் இருந்தது.அதன் வேகம் எங்கே போனதென்று தெரியவில்லை. டைம்ஸ் வாக்கெடுப்பின் 100 மாறுதலைக் கொண்டு வரும் மனிதர்கள் பட்டியலில் இடம் பிடிக்க ராஜபக்சேவும் பெயரும் இருந்தது கண்டு பதிவர்கள் ராதாகிருஷ்ணன்,கே.ஆர்.பி.செந்தில்,பட்டாபட்டி போன்றவர்கள் தகவலை தமிழ்மணத்துக்கு கொண்டு வந்தும் கே.ஆர்.பி.செந்திலின் இடுகை நாள் முழுதும் தமிழ்மண மகுடத்தில் இருந்தும் இணையம் மூலமான செய்தி பரவலாக பலருக்கு சென்று இருக்கும் நிலையிலும் டைம்ஸில் ஓட்டுப்போடுபவர்களின் தமிழர்கள் எண்ணிக்கை குறைவாகப் போனது.

தமிழகத்தில் தமிழ் புது வருடப்பிறப்பு என்பதால் விடுமுறை காரணமாகவும்,தேர்தலில் ஓட்டுப் போட்ட களைப்பின் காரணமாகவும் பெரும்பாலோர் இணையம் வந்திருக்க மாட்டார்கள்.லண்டன் மற்றும் புலம்பெயர் வாழ் மக்களுக்கு செய்திகள் கொண்டு போய்ச் சேர்க்கும் தொலைக்காட்சி ஊடகங்கள் தமிழகத்திலிருந்து ரிலே ஆகும் சீரியல்களையும், கலை நிகழ்ச்சிகளையும் மட்டுமே நடத்தி விட்டு டைம்ஸ் வாக்கெடுப்பின் இறுதியில் ராஜபக்சே 6ம் நிலையில் இன்ஃபுலுயன்ஸ் பட்டியலில் இடம் பெற்றார் என்ற தகவலை மட்டும் வெளியிடுகிறார்கள்.


டைம்ஸ் இதழின் ராஜபக்சே பெயரும் இடம் பெற்றதில் ராஜபக்சேவின் போர்க்குற்ற அறிக்கையை ஐ.நா மூவர் குழு சமர்ப்பித்த நேரத்தில் விமர்சனங்களையும்,குற்றங்களிலிருந்து தப்பிக்கும் அரசியல் உள்நோக்கங்களும்,டைம்ஸ் இதழை இன்ஃபுலுயன்ஸ் செய்யும் சக்தியும் இலங்கை அரசுக்கு இருப்பதும் விளங்குகிறது.டைம்ஸ் ஓட்டு வங்கியின் துவக்கத்தில் இருந்து ராஜபக்சே சார்பாளர்களே ஓட்டு எண்ணிக்கையில் அதிகமானவர்களாகவும்,பின்னூட்டப் பகுதியில் தமிழர்கள் சார்பாக பின்னூட்டமிடுபவர்களை விடுதலைப் புலிகள் என்று கேலி செய்தும்,யூடியூப்பின் இலங்கையின் கடந்த கால போரின் அவலங்களை முன்வைத்தும் பிரபாகரனுக்கும், விடுதலைப்புலிகளுக்கும், மொத்த தமிழர்களுக்கு எதிராகவும் அவர்களின் தமிழர்களின் மீதான வெறுப்பின் உச்சத்தோடு பின்னூட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.தமிழன் மட்டுமே இன துவேசத்தை முன்னெடுக்கிறான் என்று சிலர் நினைக்கக் கூடும்.உங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும் விரோதம்,குரோதம் அவர்களிடம் நிறையவே இருக்கிறது. துவக்கம் முதல் ஈழப் பிரச்சினைக்கு இதுவே காரணம் என்ற பொது அறிவு பல அடிகள் பட்டும் இலங்கை அரசு இயந்திரம் இன்னும் இதனைப் புரிந்து கொள்ளவில்லை.


பின்னூட்டப் பகுதிக்கு நான் சென்ற நேரத்தில் எனக்கு முன்பே இதுவரை அடையாளம் தெரியாத சில சகோதர,சகோதரிகள் முடிந்த வரை மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார்கள்.தமிழ் மணம்,இண்டலி மூலமாக தகவல் ஓரளவுக்கு சென்றதன் காரணமாக தமிழர்களின் முகங்கள் எட்டிப்பார்த்ததும் ராஜபக்சே சார்பாளர்களின் பின்னூட்டங்கள் குறைந்து போயின.அதற்குப் பின் முதல் நிலையில் இருந்த ரெய்ன் குறித்தப் பின்னூட்டங்கள் வந்து  மற்றும் ஏனைய பின்னூட்டங்கள் முந்திக் கொண்டன.

ஒருவர் எத்தனை ஓட்டு வேண்டுமானாலும் க்ளிக்கலாமென்று நண்பர்களின் பதிவுப் பின்னூட்டங்கள் கண்டும் நான் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே டைம்ஸில் இணைத்தேன்.மீதமெல்லாம் எனது சார்பான நாகரீகமான பின்னூட்டங்கள் மட்டுமே.மக்கள் தொகையில் அதிகமாய் இருக்கும் தமிழர்கள் ராஜபக்சே சார்பாளர்களின் வாக்குகள் மூலமாக தோற்றுப்போவதின் பரிணாமங்கள் பல கோணங்களில் இருந்தாலும் உலக மக்களின் பார்வையில் டைம்ஸின் ராஜபக்சேவுக்கான அங்கீகாரம் மட்டுமே பார்க்கப்படும்.ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின் அதற்கான சாத்தியங்கள் இல்லாத சம காலத்தில் ஈழத்தமிழருக்கான சம உரிமைக்கான போராடும் களங்கள் என இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் தமிழ் தேசியக் குழுவோடு மக்கள் குரலும்,தமிழகம்,உலகம் சார்ந்த தமிழர்கள் என்று நாடுகடந்த தமிழீழ அரசு என மூன்று களத்தில் ஜனநாயக ரீதியாக போராடும் வாய்ப்புக்கள் இருந்தும் டைம்ஸ் வாக்கெடுப்பில் தமிழன் தோற்றுப் போய்விட்டான்.

தோல்விகளின் சலிப்பு, உட்பூசல்கள், ஆளை விடுங்கய்யா சாமி,நாங்க நல்லாவே இருக்கிறோம் என்ற அடிமை மனோபாவத்தோடு இனப் படுகொலைகளையும் ஏற்றுக் கொண்டு ராஜபக்சேவோடு சமாதானம் செய்து கொள்வது,,தமிழர்களுக்கு எதிரான நாடுகள் என ஒரு பக்கம்,இனப்படுகொலைகளுக்கான கோபம்,உலக அரங்கில் நீதி கிடைக்காமை என்பவற்றிற்குப் ஜனநாயக ரீதியாகப் போராடியே தீருவது என்ற தமிழர்கள் ஒரு பக்கமென தற்போதைய நிகழ்வுகள் சொல்கின்றன.

டைம்ஸின் வாக்கெடுப்பின் அங்கீகாரத்தோடு தொடர்ந்து ராஜபக்சே போர்க்குற்றங்களில் தப்பிக்கும் அரசியல் ரீதியான முன்னெடுப்புக்களை செய்வார்.

Wednesday, April 13, 2011

ரஜனியின் அதிரடி

ஆடுன காலும் பாடின வாயும் சும்மா  இருக்காதுங்கிற மாதிரி  எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா!நம நமங்குது.இந்நேரத்துக்குப் பாதிப் பேர் மை வச்சிருப்பாங்க.ஓட்டு இதுதான்னு தீர்மானம் செய்திருப்பாங்க எல்லோரும்,அதனால் இது தேர்தல் பிரச்சாரமோ அல்லது  நான் சொல்வதனாலோ ரஜனி சொல்வதனாலோ ஒன்றும் மாற்றம் வந்துடப்போறதில்ல:)

ரஜனி என்ன சொல்வார் என்கிற எதிர்பார்ப்பு எல்லா தேர்தலிலும் நிகழும் க்ளைமாக்ஸ்தான்,சில சமயம் அவர் சொல்றது ஊத்திகிட்டாலும் கூட:)இந்த முறை என்ன சொன்னார்ன்னு பதிவு செய்துகிட்டு மே13 ல மக்கள் மனநிலையை ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

நம்மூர் பத்திரிகைகள் செய்திகள் எப்படி வெளியிடுகின்றன என்ற பார்வையில் கீழே...

மக்கள் ஒரு நல்ல ஆட்சியை
எதிர்ப்பார்க்கிறார்கள் : ரஜினி பேட்டி


நடிகர் ரஜினிகாந்த் என்பவர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட போயஸ் தோட்டத்தில் வசித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே:)

இவர் தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி சாவடியில் வாக்களிக்க சென்றார். அதற்கு முன்னதாக அதிமுக என்ற கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்பவரும் இந்த சாவடியில் வாக்களிக்க வந்திருந்தார்.

பின்னர் ரஜனியை வழக்கம்போல் செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர்.  அப்போது அவர்,  ’’விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆகையால் மக்கள் ஒரு நல்ல ஆட்சியை எதிர்ப்பார்க்கின்றனர்’’ என்று கூறினார்.

ரஜினிகாந்த் எப்போதும் வாக்களித்துவிட்டு கைகைளை மட்டும் உயர்த்தி காட்டிவிட்டு போய்விடுவதே வழக்கமாம்.ஆனால் இந்த முறை இலவச அப்பாவி மக்கள் மேல் பரிதாபப்பட்டு அவர் விலைவாசி உயர்வை பற்றி பேசியிருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக பத்திரிகைகளும்,அதிகார வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.மக்கள் வழக்கம் போல் சீரியலிலும்,சாலை நெரிசலிலும்,விலைவாசியிலும் சிக்கித்தவிப்பதாக நமது தேர்தல் நிருபர் செய்தி சேகரித்துள்ளார்.

 ரஜனியின் ஆதரவு யாருக்குன்னு புரியாம இருந்தாலும் யார் மீண்டும் வரக்கூடாதுன்னு இப்ப புரிஞ்சிருக்குமே:)

Sunday, April 10, 2011

ராகுல்!எங்க ஊருக்கும் வந்துட்டுப் போங்க:)

நான் இப்பவெல்லாம் சினிமாவே பார்ப்பதில்லை!வடிவேலு முதல் ராகுல் வரை நீ முந்தி நான் முந்தின்னு சும்மா பொளந்து கட்டுறாங்க:)இப்பத்தானே எங்களுக்கெல்லாம் புரியுது!ராகுல்! நீங்க தமிழகம் வந்தாலும் ஏன் தமிழக முதல்வரை சந்திப்பதில்லையென்று.ஸ்பெக்ட்ரம் கூட உங்களோட உள்வேலைகள்ன்னு வேற பேசிக்கிறாங்க!உண்மையா?

87 வயதாகிவிட்ட அச்சுதானந்தன் மீண்டும் கேரள முதல்வராக வேண்டுமா? என்று மக்கள் யோசிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தந்துள்ள காங்கிரசை ஆதரிக்க வேண்டுமென ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

’சட்டப் பேரவைத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வென்றால், அடுத்த தேர்தலின் போது 93 வயதாகும் முதியவர் (வி.எஸ். அச்சுதானந்தன்) உங்கள் முதல்வராக இருப்பார். இந்த நிலைமை உங்களுக்கு வேண்டுமா?

இன்னுமொரு நாள் தேர்தல்ப் பிரச்சாரத்துக்கு நேரமிருக்கிறது.உங்களுக்குப் பிடிச்சிருந்தா கேரளாவிலிருந்து ஒரு டாக்சி புடிச்சிகிட்டு நீங்க கோவை எக்ஸ்பிரஸ்,சேரன் ரயிலில் கூட சென்னை வரலாம்.இல்லாட்டி விமானமென்றாலும் சரி! கலாநிதி மாறன் புதுசா ஸ்பைஸ்ஜெட் திறந்திருக்காரு.டெல்லி போறதுக்கு முன்னாடி ஒரு எட்டு தமிழகமும் வந்து சொல்லிட்டுப் போங்க:)

Friday, April 8, 2011

வெல்லும் தமிழக கூட்டணி நாடுகடந்த தமீழீழ அரசை அங்கீகரிக்குமா?

இன்னும் ஒரு வாரத்தில் தமிழக தேர்தலுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலையில் தமிழகத்தின் முன்ணணிக் கட்சிகளான தி.மு.கவும்,அ.தி.மு.கவும் ஓட்டுக்கு ஊறுகாய் தொட்டுக்கொள்ள போர் குறித்தான கவலைகள் இரண்டு வருடமும் இல்லாமல் ஈழத்தமிழர்களின் பாசத்தையும்,துரோகங்களையும்  ஒருவருக்கு ஒருவர் மீது தேர்தல்ப் பிரச்சார வாயிலாக வெளிப்படுத்துகிறார்கள்.புதிய குரல் என்று நம்பிய திருமா சோனியா காந்தியின் மேடையில் கருணாநிதிக்கு ஊதுகுழலாய் கருணாநிதியா அல்லது அந்த அம்மையாரா(ஜெ) என்று மனோகரா வீர வசனம் பேசுகிறார்.ஒவ்வொருவருக்கும் அவரவர் சுயநலம் முன்வந்து நின்று கொள்வதால் தமிழக வாக்கு அரசியலில் தமிழர்கள் தோற்றுப்போய் விடுகிறோம்.

பாராளுமன்றத் தேர்தலின் போது ஈழப்பிரச்சினையை மக்கள் தொலைக்காட்சி மூலம் முன்வைத்த ராமதாஸ் அந்த தேர்தல் முடிவில் எதுவும் போணியாகவில்லையென்றவுடன் தொலைக்காட்சிப்பெட்டியை மூட்டை கட்டிவிட்டு அன்புமணிக்கு ஒரு இடம் கிடைத்தால் அதுவே தனது இறுதி காலத்தின் பிறவிபயனாக இந்த முறை தாவும் கிளையில் 31 பழங்கள் இருப்பது கண்டு தாவி விட்டார்.


வை.கோவும்,சீமானும் மிஞ்சி இருந்தாலும் இவர்கள் தற்போதைக்கு குரல் கொடுத்தாலும் இன்னும் வலுவற்றவர்களாகவே இருக்கிறார்கள்.கம்யூனிஸ்ட்டுகளின் முந்தைய நிலைப்பாட்டுக்கும் இப்போதக்கும் மாற்றம் தெரிகிறது.வீரமணியும் தி.மு.கவுக்கு பிரச்சாரம் செய்யப் போய்விட்டதால் மிஞ்சி இருப்பவர்கள் மொழி உணர்வாளர்களும்,சமூகப்பணியில் அர்ப்பணித்துக்கொண்ட பெ.தி.க இன்னும் ஏனைய தமிழ் உணர்வாளர்களும் இவர்களுக்கும் அப்பால் தமிழீழம் குறித்து ம் மனித நேயம் குறித்தும் சிந்திக்கும் எழுத்தாளர்களும், திரைப்படத் துறையினரும்,பதிவுலக கருத்தாளர்களும் இனி வரும் இளைய தலை முறையும்.

 தமிழர்களாய்  தமிழக காங்கிரஸின் அரசியல் நிலைப்பாடுகள் காரணமாகவும்,தமிழ் உணர்வுக்கு எதிரான சோ,சுப்பரமணிசாமி,என்.ராம் போன்ற சிலர் தவிர  தமிழர்கள் எல்லோருக்கும் கட்சி உணர்வுகளுக்கும் அப்பால் மக்கள் நலன் கருதும் தமிழீழம் குறித்த நோக்குகள் அனைவருக்கும் அடிமனதில் இருக்குமென்றே இன்னும் நம்புகிறேன்.

ஐ.நாவில் அங்கீகரிக்கப்பட்ட புதிதாய் பிறந்த தென்சூடான் நாடு கடந்த தமிழீழ அரசை அங்கீகரித்திருக்கிறது.தென் சூடானும் ஈழத்தமிழர்களுக்கு இணையான துயரங்களை அனுபவித்தவர்கள்.தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதிநிதி ராபர்ட் பிளேக் உடனான குளோபல் தமிழ் அமைப்பின் (Global Tamil Forum) பேச்சு வார்த்தை என அரசியல் நகர்வுகள் உருவாகியுள்ளன.

போரில் சரணடைந்த விடுதலைப்புலிகளின்  ரமேஷ் இலங்கைப் படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டு பின் காணாமல் போயுள்ளார் என தற்போது புதிய காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளது.இலங்கை அரசுக்கான போர்க் குற்றங்களுக்கு வலுவான ஆதாரங்கள்,இனப் படுகொலைகள் என இதற்கும் முன்பே மனித உரிமைக் கழகங்கள் மூலமாகவும் இணைய தளம் ஊடேயும் வெளி வந்திருக்கிறது.ஐ.நாவும் அதன் பங்குக்கு   குற்ற விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.அனைத்து உலக நீதிமன்றம் மூலமாக இலங்கையின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் கட்சிகள் எழுப்பும் குரல்களே தமிழகத்தில் தமிழீழம் என்ற சொல் இனி மறக்கவோ மறுக்கவோ இயலாத ஒன்று என்பதை புரிந்து கொண்டும் இனியும் தமிழக கட்சிகள் கண்மூடிக்கொண்டிருக்க வேண்டியது அவசியமா?

ஈழத்தமிழர்கள் வேண்டுவதெல்லாம் தமிழகம் சார்ந்த தார்மீக ஆதரவே.தமிழகத்தின் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான ஆதரவு மூலம் தமிழகத்தின் போர் காலத்தில் உதவாத பழி நீங்கும் சாத்தியங்கள் உருவாவதோடு போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான  தார்மீக ஆதரவாகவும்  வழி வகுக்கும்.அதிகார ரீதியாக அங்கீகாரத்துடன் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நிகழ்த்தவும் உதவும்.

இன்று நாடுகடந்த தமிழீழ அரசின் சார்பாக உருத்திரகுமாரன், தமிழக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கட்சி தங்கள் ஆதரவை நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.உருத்திரகுமாரனின் குரல் அமெரிக்காவையும், லண்டனையும் தாண்டி தமிழகம் வரை உரத்துக் கேட்குமா?

Thursday, April 7, 2011

கடாபியும் கருணாநிதியும்

இந்தப் பதிவுக்கான தலைப்பு லிபியாவில் மக்கள் எழுச்சி துவங்கிய நேரத்திலிருந்து தலையில் குறுகுறுத்துக் கொண்டிருந்த ஒன்று.தேர்தலின் முடிவுகளின் இந்த தருணத்தை விட்டால்,அதுவும் போர்க்குற்றங்களுக்கு நிகரான தவறுகளை இழைத்து விட்டு மக்களிடமே தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஓட்டு கேட்கும் சூழலில் இதனை சொல்லியே தீரவேண்டும்.லிபியாவுக்கும்,தமிழகத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும் தனி மனிதர்களின் ஆளுமை முதன்மையாக இருப்பதால் தலைப்பை ஒட்டிய பார்வை...

கடாபி 40 வருடம் ஆட்சி செய்தேன் என மார் தட்டிக்கொள்கிறார்
கருணாநிதி  40 வருடங்களுக்கும் மேல் அரசியல் மார்தட்டுகிறார்.

கடாபிக்கு லிபியாவை இணைத்ததில் பங்குண்டு
கருணாநிதிக்கும் தமிழகத்தை உருவாக்கியதில் பங்குண்டு

கடாபிக்கு மக்கள் நலத்தை விட தன்மக்கள் முக்கியம்
கருணாநிதிக்கு மக்கள் நலத்தை விட தன்மக்கள் முக்கியம் 

கடாபி பல பழங்குடிகளை பிரித்து ஆண்டார்
க்ருணாநிதி சாதிக்கட்சி என பிரித்து ஆண்டார்


கடாபியும் தனக்குப் பின்  வாரிசு அரசியலை உருவாக்கியவர்
கருணாநிதி  தனக்குப் பின் வாரிசு அரிசியலை உருவாக்கியவர்


கடாபி மன்னராட்சி சர்வாதிகாரி
கருணாநிதி ஜனநாயக ஆட்சி சர்வாதிகாரி

கடாபிக்கு செத்தாலும் அரியணையை விடபிரியமில்லை
கருணாநிதிக்கும் சாகும் வரை நாற்காலியை விடப் பிரியமில்லை

கடாபிக்கு மக்கள் முன் சொல்வது ஒன்று ஆனால் செய்வது ஒன்று
கருணாநிதிக்கும் மக்கள் முன் சொல்வது ஒன்று செய்வது ஒன்று

கடாபிக்கு முன்பு பெரிய அண்ணன் அமெரிக்கா எதிரி
கருணாநிதிக்கும் முன்பு பெரிய அண்ணண் காங்கிரஸ் எதிரி

கடாபியையும் கழட்டி விட்டு நிறைய பேர் ஓடி விட்டார்கள்
கருணாநிதியையும் கழட்டி விட்டு நிறைய பேர் ஓடி விட்டார்கள்

கடாபிக்கு தொப்பி ரொம்ப பிரியம்
கருணாநிதிக்கு மஞ்சத்துண்டு ரொம்ப பிரியம்

கடாபி வீட்டில் ரீகன் குண்டு போட்டார்
கருணாநிதியை ஜெயலலிதா குண்டுக்கட்டா ஜெயிலில் போட்டார்

கடாபியின் மகனே குண்டர் படைத்தலைவன்
கருணாநிதியின் மகனே குண்டர்களுக்குத் தலைவன்

கடாபி ஒபாமாவுக்கு கடிதம் எழுதுகிறார்
கருணாநிதி காங்கிரஸ்க்கு கடிதம் எழுதுகிறார்

கடாபி மழை வராட்டியும் குடைபிடிப்பார்
கருணாநிதி மழை வந்தாலும் விழா எடுப்பார்

கடாபிக்கு போர் வந்தும் ஆதரவாளர்கள் உண்டு
கருணாநிதிக்கு ஈழப்போர் வந்தும் ஆதரவாளர்கள் உண்டு

கடாபி லிபியா மக்களுக்கு கருணை காட்டவில்லை
கருணாநிதி, காங்கிரஸ் ஈழமக்களுக்கு கருணை காட்டவில்லை

கடாபி மீது உலக மக்கள் கோபம்- க்ருணையின்மை  காரணம்
கருணாநிதி மீது உலக தமிழர் கோபம் கருணையின்மை  காரணம்.

Tuesday, April 5, 2011

இது யார் வீட்டுக் காசு?

போன பதிவு போட்டதுல பதிவர் ”மங்கம்மா ஆனந்தி” நான் மதுரைக்காரப் பொண்ணுன்னு சீறிட்டாங்க:)அடுத்து எந்த ஊர்ல என்ன நடக்குதுன்னு பார்த்தா இந்த தடவை திருச்சிக்காரங்க மாட்டிகிட்டாங்க:)

செவ்வாய்க்கிழமை...அட இன்றைக்குத்தானா?ஒரு தனியார் வாகனத்தில் 5.11கோடி பணத்தை மூட்டை கட்டிகிட்டு ஒரு தனியார் பஸ் திருச்சி மேற்கு தொகுதி பொன்நகர்ல நின்னுகிட்டுருந்துச்சாம்.வாகனங்களை,ஆட்களையும் தானே புடிக்கிறாங்கன்னு புத்திசாலி யாரோ ஐடியா கொடுக்க பஸ்ஸுக்கு மேலே சூட்கேஸ்ல கட்டி வச்சிட்டாங்களாம்.நல்ல புத்தி வந்த மகராசன்/மகராசி யாரோ தகவல் கொடுத்தாங்களோ வயிறு எரிஞ்சு தகவல் கொடுத்தாங்களோ தேர்தல் அதிகாரிகளை திருடனைப் புடிக்கும் காலம் போய் இப்ப பணத்தை கப்ன்னு புடிச்சிட்டாங்க.


இதுவரைக்கும் புடிச்ச மீன்ல இதுதான் பெருசாம்.இதுக்கும்கூட வியாபாரம்,கல்யாணம்,காதுகுத்துன்னு செலவுக்கு வச்சிருந்த பொதுமக்கள் பணத்தை புடிச்சு தேர்தல் கமிசன் எவ்வளவு கஷ்டப்படுத்துறாங்க பாருங்கன்னு அறிக்கை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

காலை 2.00 மணிக்கு இந்தப் பணத்தை கையும் களவுமாக பிடித்தவங்க இன்னுமொரு வீராங்கனை வருமானத்துறை அதிகாரி எஸ்.சங்கீதா மற்றும் அவரது அலுவல் சார்ந்த குழுவினர்.உமாசங்கர்,சகாயம்,சங்கீதா என நாட்டின் நலன் காக்கும் அதிகாரிகளை உற்சாகப்படுத்துவதும்,மக்கள் முன்னிலையில் பிரபலப்படுத்துவதுமே ஏனைய அரசு அதிகாரிகளும் நேர்மையான வழியில் செல்வதற்கு வழிவகுக்கும்.

ஒரு கோடியே எழுபத்து ஆறு லட்சத்துக்கு எத்தனை சைபர்ன்னு நாம நிறைய பேர் முழுச்சிகிட்டுருக்கிறதால சின்னதா உங்களுக்கு ஒரு கணக்கு.

5.11கோடியை 500ரூபாய்,1000 ரூபாய் தாளாக 5 சூட்கேஸ்ல வச்சா ஒரு சூட்கேஸ்ல எத்தனை ரூபாய் இருந்திருக்கும்:)

பணம் வருமான வரித்துறைக்கு சேர்க்கப்பட்டு விட்டது.ஆனால் காசுக்கு சொந்தக்காரன் யாருன்னு கண்டுபிடிக்க முடியவில்லையாம். கண்டுபிடிக்கவில்லையாம்ஆனால் பஸ்ஸோட சொந்தக்காரர் பெரம்பலூரைச் சார்ந்தவராம்.எங்கப்பன் குதிருக்குள் இல்லைன்னோ, கடமை தவறாத மந்திரியென்றோ திருச்சி மேற்கில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளரும்,கே.என்.நேருவும் கைப்பற்றப் பட்ட பணம் தங்கள் சொந்தக்காரர்களுடையது அல்ல என்று அறிக்கை உடனே விட்டுட்டாங்க.

சரி திருடன் திருட முயற்சிப்பதுதான் அவனது தொழில்.திருடங்கிட்டேயிருந்து நாம் எப்படி தப்பிப்பது என இப்ப பார்க்கலாம்.அதனால லியோனி மொக்கை கொஞ்சம் சொல்லிட்டு தொடரலாம்.திண்டுக்கல் லியோனி பட்டிமன்றங்கள் பிரபலமான துவக்க காலத்தில் நிறைய இடங்களில் பேசுவதால் எங்கே எந்த ஜோக் சொன்னோமென்று தெரியாமலே  மதுரையில் சொல்றதை திருச்சியிலும்,திருச்சில சொன்னதை வெளிநாடு போனாலும் சொல்லுவதுண்டு.இப்ப தி.மு.க கூட்டத்துக்கும் போகிறார்ன்னு கேள்வி.அதே பார்முலா அரசியல் பேச்சுல வந்தாலும் வரலாம்.அது அவரோட பாடு.

திண்டுக்கல் லியோனி மாதிரித்தான் எனக்கும் சிலசமயம் பின்னூட்ட குழப்பங்கள் வருவதுண்டு.அதனால் இதனை எங்கேயாவது சொன்னேனா நினைவில்லாமலே மறுபடியும் சொல்கிறேன்.

அன்றாட செலவுகளுக்கும்,அவசர தேவைக்கும் கையில் ஓரளவு தொகையை வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று.அதற்கும் அதிகமாக கையில் பணம் வங்கி கணக்கில்லாமல் புழங்கினால் அது வரி ஏய்ப்பு,கறுப்பு பணம்,தவறான வழியில் சம்பாதித்த பணமாக இருக்கவே வாய்ப்புண்டு.எந்த பணமாற்றமும் வங்கி மூலமாகவே என்ற நிலை வரவேண்டும்.மத்திய ரிசர்வ் வங்கியுடன்,ஏனைய வங்கிகளை இணைப்பதும்,வங்கிகளுக்கும் அப்பால் எந்த வியாபாரம் சார்ந்த கொடுக்கல்,வாங்கல் பணபரிவர்த்தனைகள் ATM கார்டின் உதவியுடன Swap செய்யும் இயந்திரங்கள் மூலமாகவே நிகழும் நடைமுறைகள் கள்ளப்பணத்தை தவிர்க்க உதவும்.

கணினி முறை திருடர்கள்,கிரெடிட் கார்டு பிக்பாக்கெட் பக்கவிளைவுகள் நிகழ்ந்தாலும் சைபர் க்ரைமில் அவர்களுக்கு சங்கு ஊதி சரி செய்துவிட இயலும்.வங்கி கணக்கில் பணம் வரவு,செலவு ஆன அந்த ஒரு நொடியிலேயே உங்கள் கைபேசிக்கு தகவல் வந்து விடுவது மாதிரியான வசதிகள் கூட இப்பொழுது நடைமுறைக்கு வந்து விட்டது.

2020ல் இந்தியா வல்லரசாகி விடுமாம்!அப்துல் கலாமின் கனவு.அவரோட கனவுல நான் சொன்ன பணமாற்றமும் வந்துச்சான்னு தெரியலை.  

களவாணிப் படம் உதவி மற்றும் தகவல்: The Hindu: ராஜபக்சேவுக்கு அல்லக்கை வேலை பார்க்காம நாட்டு நலன் பற்றி சொன்னால் நாங்களும் படிக்க வருவோம் Mr.Ram!

மற்ற படங்கள்: கூகிள் அக்காவா?அண்ணனா:)

Friday, April 1, 2011

அழகிரியின் அலறல்

நேற்று மதுரை கலெக்டர் சகாயம் பற்றிய அழகிரியின்  தேர்தல் கருத்துக்கும், எனக்கும் எனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டால் தேர்தல் ஆணையமே பொறுப்பு என்ற அறிக்கைக்கும் எதிராக யாராவது கருத்து சொல்வார்களா என்று பார்த்தேன்.பதிவுலகில் யாரும் சொல்வதாக காணோம்.விகடன் செய்தியின் இணையதள பின்னூட்டங்களாக மட்டும் சிலர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் பதிவர் ஜோதியின் சென்ற வார இடுகையான அரசியல் அதிகாரம்-பயத்தை உருவாக்கு நினைவில் வருவதை தவிர்க்க இயலவில்லை.
தமிழகத்தின் கருப்பு பக்கங்களாய் அவ்வப்போது சிலர் உருவெடுப்பது தமிழகத்தின் சாபமா என்று தெரியவில்லை.அ.தி.மு.கவின் ஆட்சிக்காலத்தில் அடியாளாக சட்டசபை வரை தனது தாதா பிம்பத்துடன் எம்.எல்.ஏ வாக இருந்தவர் தாமரைக்கனி.அந்த விதத்தில் வன்முறைக் கலாச்சாரத்திலும் தமிழகத்தில் பவனி வர இயலும் என்று நிரூபித்திருப்பவர் மு.க.அழகிரி.கூடுதலாக பணம்,மக்கள் ஆதரவு,இதனை விட அப்பா தமிழகத்தின் முதல்வர் என்ற நிலையில் அழகிரி தமிழகத்தில் சட்ட விரோத செயல்களாக திருமங்கலம் பார்முலா,அடியாட்களின் தலைவன் போன்ற பிம்பத்தை உருவாக்க வேண்டிய அவசியமென்ன?குடும்ப ஆட்சியென்ற விமர்சனத்துக்கும் அப்பால் ஸ்டாலின் கட்சியென்ற நிலையில் அரசியல் செய்யும் நாகரீகம் கூட ஏன் அழகிரிக்கு வருவதில்லை?


அழகிரியின் அறிக்கை நியாயமென்று எடுத்துக் கொண்டால் கூட இருப்பவனையெல்லாம் விட்டு விட்டு தேர்தல் ஆணையம் அழகிரி பின் சுற்றுவதன் காரணமென்ன? மடியில் கனம் இருந்தால்தானெ வழியில் பயம்?பணமும்,அதிகாரமும்,படைபலமும் இருந்தும் அழகிரி அலற வேண்டியதன் அவசியமென்ன என்பதை இனியாவது யோசிப்பாரா?முன்பே எங்கோ ஒரு பின்னூட்டத்தில் சொல்லியுள்ளேன்.அழகிரி அவரது மகன் திருமணத்தில் மைக் மோகன் கெட்டப்பில் இயல்பாய் இருந்த பிம்பமே தனி மனித வாழ்க்கைக்கும்,நீண்ட கால அரசியலுக்கும் துணை புரியும்.இல்லையென்றால் எந்த ஒரு தாதாவுக்கும் வரும் பயமே வாழ்க்கை முழுதும் சுற்றி வரும்.

அரசியல் முடிவுகள் எப்படியென்பது மே மாதம் 13ம் தேதியே தெரியும்.ஆனால் தமிழக முதல்வரும்,அழகிரியும் விடுக்கும் அறிக்கைகளாய் எமர்ஜென்சி காலம் போல் தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் என்பதும் எனக்கோ எனது குடும்பத்துக்கோ ஆபத்து என்றால் தேர்தல் ஆணையமே பொறுப்பு என்று அழகிரி அறிக்கை விடுவதும் தேர்தல் ஸ்டண்டா அல்லது இவர்களுக்கு முன் கூட்டியே தேர்தல் முடிவுகள் பற்றிய பயம் வந்து விட்டதா?

எமர்ஜென்சி மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்தார் இந்திரா காந்தி என்ற பார்வையில் உண்மையிருந்தாலும் கூட பொது மக்களின் வாழ்க்கை முறை,ரயில்கள் சரியான நேரத்தில் ஓடின,அரசு அலுவலர்கள் நேரத்துக்கு அலுவலகம் வந்தனர் போன்ற செய்திகளையும் எமர்ஜென்சி பதிவு செய்திருக்கிறது.கூடவே எமர்ஜென்சி பெயர் சொல்லி சிறைச்சாலையில் களி தின்றவர்கள் தங்கள் சுயம் மறந்து நாற்காலி சுகத்தில் கோடிஸ்வரர்களாகி விட்டார்கள் என்பதையும் எமர்ஜென்சி முதல் 2011 தேர்தல் வரை உள்ள இடைக்காலம் திராவிடக் கொள்கைகள் காற்றில் பறக்க விட்டு விட்டதையும்,காங்கிரஸின் துணை நாடி நின்றதையும் அதனையெல்லாம் விட ஈழ மக்களின் இனப்படுகொலைகளை தடுக்க இயலாத வரலாற்று பெரும்பாவத்தையும் சுமந்து கொண்டுள்ளது என்பதையும் மறந்து தமிழக சட்டசபை தேர்தலே ஈழம் குறித்த எந்த வித உணர்வுமில்லாமல் இலவசமே வாழ்க்கை அதுவே எம் வேதம் என தமிழகம் வரலாற்றின் மாற்றுப் பாதையில் பயணித்துக் கொண்டுள்ளது என்பதையும் இடைப்பட்ட காலம் தமிழக வரலாற்று பதிவு செய்திருக்கிறது.