Followers

Wednesday, April 13, 2011

ரஜனியின் அதிரடி

ஆடுன காலும் பாடின வாயும் சும்மா  இருக்காதுங்கிற மாதிரி  எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா!நம நமங்குது.இந்நேரத்துக்குப் பாதிப் பேர் மை வச்சிருப்பாங்க.ஓட்டு இதுதான்னு தீர்மானம் செய்திருப்பாங்க எல்லோரும்,அதனால் இது தேர்தல் பிரச்சாரமோ அல்லது  நான் சொல்வதனாலோ ரஜனி சொல்வதனாலோ ஒன்றும் மாற்றம் வந்துடப்போறதில்ல:)

ரஜனி என்ன சொல்வார் என்கிற எதிர்பார்ப்பு எல்லா தேர்தலிலும் நிகழும் க்ளைமாக்ஸ்தான்,சில சமயம் அவர் சொல்றது ஊத்திகிட்டாலும் கூட:)இந்த முறை என்ன சொன்னார்ன்னு பதிவு செய்துகிட்டு மே13 ல மக்கள் மனநிலையை ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

நம்மூர் பத்திரிகைகள் செய்திகள் எப்படி வெளியிடுகின்றன என்ற பார்வையில் கீழே...

மக்கள் ஒரு நல்ல ஆட்சியை
எதிர்ப்பார்க்கிறார்கள் : ரஜினி பேட்டி


நடிகர் ரஜினிகாந்த் என்பவர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட போயஸ் தோட்டத்தில் வசித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே:)

இவர் தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி சாவடியில் வாக்களிக்க சென்றார். அதற்கு முன்னதாக அதிமுக என்ற கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்பவரும் இந்த சாவடியில் வாக்களிக்க வந்திருந்தார்.

பின்னர் ரஜனியை வழக்கம்போல் செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர்.  அப்போது அவர்,  ’’விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆகையால் மக்கள் ஒரு நல்ல ஆட்சியை எதிர்ப்பார்க்கின்றனர்’’ என்று கூறினார்.

ரஜினிகாந்த் எப்போதும் வாக்களித்துவிட்டு கைகைளை மட்டும் உயர்த்தி காட்டிவிட்டு போய்விடுவதே வழக்கமாம்.ஆனால் இந்த முறை இலவச அப்பாவி மக்கள் மேல் பரிதாபப்பட்டு அவர் விலைவாசி உயர்வை பற்றி பேசியிருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக பத்திரிகைகளும்,அதிகார வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.மக்கள் வழக்கம் போல் சீரியலிலும்,சாலை நெரிசலிலும்,விலைவாசியிலும் சிக்கித்தவிப்பதாக நமது தேர்தல் நிருபர் செய்தி சேகரித்துள்ளார்.

 ரஜனியின் ஆதரவு யாருக்குன்னு புரியாம இருந்தாலும் யார் மீண்டும் வரக்கூடாதுன்னு இப்ப புரிஞ்சிருக்குமே:)

40 comments:

ஆர்.கே.சதீஷ்குமார் said...

விலைவாசி உயர்வுக்கு யார் காரணமோ ,யார் அதை தடுக்க முயற்சி செய்யலையோ,அவங்க வராம இருந்தா போதும் ஹிஹி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ரஜினி நேற்று இதை சொல்லியிருந்தால் எல்லோருக்கும் போய் சேர்ந்திருக்கும்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நானும் இதையே போஸ்டா போட்டுட்டேன்

ராஜ நடராஜன் said...

//விலைவாசி உயர்வுக்கு யார் காரணமோ ,யார் அதை தடுக்க முயற்சி செய்யலையோ,அவங்க வராம இருந்தா போதும் ஹிஹி//

ஆகா!பெரிய தல கூட வடை கேட்குது:)

நீங்க சொல்றது மிகவும் சரியே!நேற்று இதனை சொல்லியிருந்தா ரஜனியின் தாக்கம் இந்த தேர்தலில் இறுதி நேரத்தில் ஒலித்திருக்கும்.

எப்படியோ பாதிக்கு பாதி பழுதுல்ல.பார்க்கலாம்.

கே.ஆர்.பி.செந்தில் said...

//ரஜினி நேற்று இதை சொல்லியிருந்தால் எல்லோருக்கும் போய் சேர்ந்திருக்கும்//

அவருக்கும் என்ன மாதிரி நெருக்கடிகள் இருந்துச்சோ...

அருள் said...

பதிவுலகப் போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_13.html

ராஜ நடராஜன் said...

//அவருக்கும் என்ன மாதிரி நெருக்கடிகள் இருந்துச்சோ...//

செந்திலண்ணே!யாருக்கு நெருக்கடி இருக்குதோ இல்லையோ ரஜனிக்கு கட்டாயம் நெருக்கடிகள் இருக்கும்.

அதனாலதான் மெல்லவும் முடியாம,முழுங்கவும் முடியாம கடைசி நேரத்துல அதிரடி.ஓட்டுப்போடுற நேரத்துல யாரும் குற்றமும் சொல்ல முடியாதுல்ல.

ராஜ நடராஜன் said...

//பதிவுலகப் போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள்.//

தோழர் அருள்!இணைய போராளி என்பதெல்லாம் டோண்டுவுடன் மல்லுக்கட்டும் உங்களைப் போன்ற பெரியவர்களுக்கு:)

நாங்க சும்மா ஜுஜிபி!முன்னாடி டீக்கடையிலும்,சலூனிலும் உட்கார்ந்துகிட்டு அரட்டை அடிச்சதை தொழில் நுட்ப வசதியால இங்கே கும்மி அடிக்கிறோம்.அவ்வளவுதான்.

சி.பி.செந்தில்குமார் said...

ரஜினி பயந்த சுபாவம் உள்ளவர்.. நேற்றே சொல்லித்தொலைத்திருந்தால் தி மு க எதிர்ப்பு ஓட்டுக்கள் 5 % கூடி இருக்கும்

ராஜ நடராஜன் said...

//ரஜினி பயந்த சுபாவம் உள்ளவர்.. நேற்றே சொல்லித்தொலைத்திருந்தால் தி மு க எதிர்ப்பு ஓட்டுக்கள் 5 % கூடி இருக்கும்//

நேற்றே வாய் திறந்திருந்தா 60 வருசமா அரசியல் செய்தும் வடிவேலை நம்பி ஓட்டுப்போடுங்க சொன்னவங்களுக்கு வெல வெலத்திருக்கும்.

சிபி!அதான் செந்திலண்ணன் சொல்றாரே நெருக்கடின்னு.தில்லாலங்கடி மலைமுழுங்கி மகாதேவன்களை தொழில் ரீதியா கோவிச்சுக்கவும் முடியாதுல்ல.

Nesan said...

இப்படி கமடிபண்ணுவதா  யார் ஓட்டுப்போடுவது பாவம் ஏழைகள்

ராஜ நடராஜன் said...

//இப்படி கமடிபண்ணுவதா யார் ஓட்டுப்போடுவது பாவம் ஏழைகள்//

வாங்க சகோ நேசன்!மக்கள் அப்பாவிகளாகவும் இருக்காங்க.சில சமயம் போங்கய்யா நீங்களும் உங்க ஜோஸ்யங்களும்ன்னு எல்லோருடைய முகத்திலும் கரியும் பூசிடறாங்க.

ஏழைகள் படிக்காத மேதைகள் அதில் சிலர் புடிச்ச முசலுக்கு...மக்குகளும் கூட.இருந்தாலும் தங்கள் கடமையை செய்யும் ஜனநாயகவாதிகள்.

நிரூபன் said...

ஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா!நம நமங்குது.//

சகோ, வணக்கம், வணக்கம், நலமா?
ஜனநாயக கடமைகளை நிறைவேற்றியாச்சா?

கையினை விட உள் மனம் தான் சகோ எழுதச் சொல்லி அதிக தூண்டுதல்களைத் தரும். இல்லையா?

நிரூபன் said...

மக்கள் ஒரு நல்ல ஆட்சியை
எதிர்ப்பார்க்கிறார்கள் : ரஜினி பேட்டி//

ரஜினி சகோ, கழுவுற தண்ணீரிலை நழுவுகிற மீனைப் போல ஒட்டியும், ஒட்டாமலும் பதில் சொல்லியிருக்கிறார்.

இதனைக் கொஞ்சம் முன்னாடி சொல்லுறது.

நிரூபன் said...

உங்கள் பதிவின் சாராம்சத்தின் படி, ரஜினி ஏழைகளை மையப்படுத்தி, விலை வாசி உயர்வினைக் கருத்திற் கொண்டு வோட்டுப் போடச் சொல்லியிருக்கிறார் என்று சொல்லுறீங்க. இதனைக் கொஞ்சம் முன்னாடி சொல்லியிருந்தா, இலவசத்திற்கும் ஆப்பாக இருந்திருக்கும், ஏழைகள் வாழ்விற்கும் சிறப்பாக இருந்திருக்குமல்லவா?

நிரூபன் said...

சகோ, ரஜினி சொன்ன சீரியஸ்ஸான மேட்டரையும், அவர் சொன்ன நேரத்தை வைத்து நகைச்சுவை பதிவினுள் சேர்த்து வீட்டீங்களே.. நீங்க ரொம்ப பெரியாள் தான். ஒத்துக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//சகோ, வணக்கம், வணக்கம், நலமா?
ஜனநாயக கடமைகளை நிறைவேற்றியாச்சா?

கையினை விட உள் மனம் தான் சகோ எழுதச் சொல்லி அதிக தூண்டுதல்களைத் தரும். இல்லையா?//

சகோ!நலம்!நலமறிய ஆவல்.

உள்மனம் படுத்துவதை புதுசா ஏதாவது இயந்திரம் கண்டுபிடிச்சாத்தான் விவரிக்க முடியும்!

கூர்மதியான் கிட்ட கேட்டுப்பார்க்கணும்:)

ராஜ நடராஜன் said...

//ரஜினி சகோ, கழுவுற தண்ணீரிலை நழுவுகிற மீனைப் போல ஒட்டியும், ஒட்டாமலும் பதில் சொல்லியிருக்கிறார்.

இதனைக் கொஞ்சம் முன்னாடி சொல்லுறது.//

சகோ!ரஜனியின் நிலைப்பாடு சரியானதுதான்.அவர் கருணாநிதி விழாவுக்கும் போகிறார்.பக்கத்து தெருவுல ஜெயலலிதாவும் குடியிருக்கிறார்.சில சமயம் அவர் சொல்வதற்கு எதிராவும் முடிவுகள் வந்துடுது.

இதை விட அவருக்கு தொழில் சார்ந்த மற்றும் கருணாநிதி நட்பு சார்ந்த நெருக்கடிகள் எனலாம்.

ராஜ நடராஜன் said...

//உங்கள் பதிவின் சாராம்சத்தின் படி, ரஜினி ஏழைகளை மையப்படுத்தி, விலை வாசி உயர்வினைக் கருத்திற் கொண்டு வோட்டுப் போடச் சொல்லியிருக்கிறார் என்று சொல்லுறீங்க. இதனைக் கொஞ்சம் முன்னாடி சொல்லியிருந்தா, இலவசத்திற்கும் ஆப்பாக இருந்திருக்கும், ஏழைகள் வாழ்விற்கும் சிறப்பாக இருந்திருக்குமல்லவா?//

நேற்று சொல்லியிருந்தா தேர்தல் முடிவு இன்றைக்கே வந்துருக்கும்தான்.
அப்புறம் இலவசத்துக்கு எங்கே ஆப்பு?அதுதான் ஜெ ரெண்டு மடங்கா கொடுக்குறேன்னு சொல்லுதே.

யார் வென்றாலும் ஏழைகள் வாழ்வில் எதுவும் மாற்றம் வராது சகோ!அதுக்கெல்லாம் தமிழனுக்கு கொடுப்பினையில்லை.

ராஜ நடராஜன் said...

//சகோ, ரஜினி சொன்ன சீரியஸ்ஸான மேட்டரையும், அவர் சொன்ன நேரத்தை வைத்து நகைச்சுவை பதிவினுள் சேர்த்து வீட்டீங்களே.. நீங்க ரொம்ப பெரியாள் தான். ஒத்துக்கிறேன்.//

அய்யே!நீங்க வேற!பெருசுகள் எல்லாம் அங்கே கட்டம் போட்டு ஆடிகிட்டுருக்காங்க.நாம ஏதோ கூட்டத்தோட கோவிந்தா! கோவிந்தா:)

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

கலக்கல் பதிவு.. எலக்ஷன் டூட்டியில் இருப்பதால் கருத்து அவ்வளவுதான்..

தவறு said...

காலம் கடந்து வந்த செய்தி உண்மையாக பிரார்த்தனை.......ராஜநட

ராஜ நடராஜன் said...

//கலக்கல் பதிவு.. எலக்ஷன் டூட்டியில் இருப்பதால் கருத்து அவ்வளவுதான்..//

கருன்!சொல்லவேயில்லை!!வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

//காலம் கடந்து வந்த செய்தி உண்மையாக பிரார்த்தனை.......ராஜநட//

மேட்ச் முடிந்தபின் விக்கெட் எடுத்தாருங்கீறீங்களா:)

ரெண்டு பேருமே நாங்கதான் ஜெயிப்போம்ன்னு அறிக்கை விடறாங்க!பார்க்கலாம்.

பட்டாபட்டி.... said...

எப்பண்ணே தேர்தலு?.. தங்கபாலு அண்னனுக்கு ஓட்டு சேகரிச்சு..சேகரிச்சு.. தலை கிறுகிறுத்துப்போய் இருக்கேன்..

ஹி..ஹி ஆணி அதிகம்.. மலேசியா தொறத்திவிட்டுட்டானுக..
அடுத்த வாரம்..மீண்டும் சிங்கை return..

தேர்தல்தான் முடிஞசதே.. அப்படியே ஒரு டிரிப் வாங்கண்ணே.. இங்கே...

ராஜ நடராஜன் said...

//எப்பண்ணே தேர்தலு?.. தங்கபாலு அண்னனுக்கு ஓட்டு சேகரிச்சு..சேகரிச்சு.. தலை கிறுகிறுத்துப்போய் இருக்கேன்..

ஹி..ஹி ஆணி அதிகம்.. மலேசியா தொறத்திவிட்டுட்டானுக..
அடுத்த வாரம்..மீண்டும் சிங்கை return..

தேர்தல்தான் முடிஞசதே.. அப்படியே ஒரு டிரிப் வாங்கண்ணே.. இங்கே...//

பட்டு!நீங்க தங்கபாலுக்கு,வெளியூர்க்காரன் உதயசூரியனுக்கு மாங்கு ஓல்டு மாங்குன்னு வாக்கு கேட்டதப் பார்த்தா
புல் அரிக்குது:)

மறுபடியும் சிங்கையா?வந்தா ரெமி மார்ட்டின் கொடுப்பீங்களா:)

பட்டாபட்டி.... said...

மறுபடியும் சிங்கையா?வந்தா ரெமி மார்ட்டின் கொடுப்பீங்களா:)
//

நம்ம இனம்ண்ணே.. உங்களுக்கு இல்லாததா?.. எப்ப வரீங்கனு சொல்லுங்க.. கொண்டாடிலாம்..

ஹேமா said...

இதுதான் ரஜனி ஸ்டைலோ...இதுவும் ஸ்டைலோ !

ராஜ நடராஜன் said...

//மறுபடியும் சிங்கையா?வந்தா ரெமி மார்ட்டின் கொடுப்பீங்களா:)
//

நம்ம இனம்ண்ணே.. உங்களுக்கு இல்லாததா?.. எப்ப வரீங்கனு சொல்லுங்க.. கொண்டாடிலாம்..////

அப்ப சரி!இன்னொரு டூர் போடும் போது கடிதாசி போடுறேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

//இதுதான் ரஜனி ஸ்டைலோ...இதுவும் ஸ்டைலோ !//

ஹேமா!ஸ்டைல் சினிமாவுல மட்டும்தான்.மேக்கப் களைஞ்சா ரொம்பவே யோசனை செய்கிறார்.இருந்தாலும் தமிழகத்தில் ரஜனி ஒரு ஆளுமையே!

bandhu said...

ரஜினி அரசியல் பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ளலாம். ஒரு அரசியல் வெற்றிடம் இருக்கும்போது அதை உபயோகப்படுத்தக்கூடிய செல்வாக்கு உள்ளவர் அதை செய்திருக்க வேண்டும். அதை செய்யாமல் இந்த மாதிரி வெட்டி தர்ம ஞாயம் பேசுவது, நம் அளவிற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ரஜினிக்கு சரியில்லை!

Rathi said...

லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக ரஜனிகாந்த், வழக்கம்போல்.

பூங்குழலி said...

ரஜினி இரட்டை இலைக்கு ஓட்டு
போட்டதாக இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டிருகிறது .அவர் ஓட்டு
போட்டதை பல ஊடகங்கள் படம் பிடித்து விட்டதாகவும் ,தேர்தல் ஆணையரின் எச்சரிக்கைக்கு பின்னால் அவை ஒளிபரப்பாமல் விட்டதாகவும் செய்தி வந்திருக்கிறது .இதனால் அவர் மீண்டும் வாக்களித்தாராம் .பின்னர் மாலையில் அய்யாவுடனான விழாவில் பங்கேற்ற அவர் ,டென்ஷனில் கை மாறியதாக சொல்லி சமாளித்ததாகவும் செய்தி

ராஜ நடராஜன் said...

//ரஜினி அரசியல் பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ளலாம். ஒரு அரசியல் வெற்றிடம் இருக்கும்போது அதை உபயோகப்படுத்தக்கூடிய செல்வாக்கு உள்ளவர் அதை செய்திருக்க வேண்டும். அதை செய்யாமல் இந்த மாதிரி வெட்டி தர்ம ஞாயம் பேசுவது, நம் அளவிற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ரஜினிக்கு சரியில்லை!//

வாங்க பந்து!அவர் எங்கே அரசியல் பேசுகிறார்.சும்மா இருந்தாலும் ரஜனியை நிருபர்களும்,ரசிகர்களும் சும்மா விடுவதில்லை.

வலிமையிருந்தும் தனது முயற்சியாக மாற்ற்ங்களுக்காக முயற்சி செய்யலாம். தடுமாறுகிறார் என்பதும் ஆக்டோபஸ் குடும்பத்தைப் பற்றி பயப்படுகிறார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

ராஜ நடராஜன் said...

//லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக ரஜனிகாந்த், வழக்கம்போல்.//

இல்லீங்க!லேட்டஸ்டா சொல்லி லேட்டாக வந்துட்டார்:)

ஹசாரேவுக்கு ஆதரவுன்னு உண்ணாவிரத நேரத்தில் சொல்லியாவது ஒரு அறிக்கை விட்டிருக்கலாம்.பத்திகிட்டிருக்கும்.

ராஜ நடராஜன் said...

//ரஜினி இரட்டை இலைக்கு ஓட்டு
போட்டதாக இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டிருகிறது .அவர் ஓட்டு
போட்டதை பல ஊடகங்கள் படம் பிடித்து விட்டதாகவும் ,தேர்தல் ஆணையரின் எச்சரிக்கைக்கு பின்னால் அவை ஒளிபரப்பாமல் விட்டதாகவும் செய்தி வந்திருக்கிறது .இதனால் அவர் மீண்டும் வாக்களித்தாராம் .பின்னர் மாலையில் அய்யாவுடனான விழாவில் பங்கேற்ற அவர் ,டென்ஷனில் கை மாறியதாக சொல்லி சமாளித்ததாகவும் செய்தி//

என்னங்க பூங்குழலி!ரஜனியை விட பெரிய குண்டைத் தூக்கிப் போடுறீங்க?
தலீவருக கூட தலைவர் பொன்னர் சங்கரர் சினிமா பார்த்ததுதான் தெரியும்.

ரஜனி நடந்தாலும்,பெப்சி குடிச்சாலும் கூட கவனிக்க ஆளுக இருக்காங்க:)

arivuindia said...

raji voted for amma!!!

http://timesofindia.indiatimes.com/assembly-elections-2011/tamil-nadu/Superstar-Rajinikanth-bares-ballot-votes-for-2-leaves/articleshow/7976720.cms

ராஜ நடராஜன் said...

//raji voted for amma!!!//

Hi,Thanks for the link.Looks like it is going to be a controversy in forth coming days.Let's see.

Suresh Kumar said...

ரஜினி ரெம்ப லேட் ...........

ராஜ நடராஜன் said...

//ரஜினி ரெம்ப லேட் ...........//

நானும் கூட பின்னூட்டம் ரொம்ப லேட் சதிஷ்குமார்:)