Followers

Friday, April 15, 2011

டைம்ஸ் இதழின் ராஜபக்சேவின் அங்கீகாரம்

லண்டனில் ராஜபக்சேவை இலங்கைக்கு துரத்திய வேகத்தில் கூட்டு முயற்சியும்,சாத்வீகமான போராட்டமும் இருந்தது.அதன் வேகம் எங்கே போனதென்று தெரியவில்லை. டைம்ஸ் வாக்கெடுப்பின் 100 மாறுதலைக் கொண்டு வரும் மனிதர்கள் பட்டியலில் இடம் பிடிக்க ராஜபக்சேவும் பெயரும் இருந்தது கண்டு பதிவர்கள் ராதாகிருஷ்ணன்,கே.ஆர்.பி.செந்தில்,பட்டாபட்டி போன்றவர்கள் தகவலை தமிழ்மணத்துக்கு கொண்டு வந்தும் கே.ஆர்.பி.செந்திலின் இடுகை நாள் முழுதும் தமிழ்மண மகுடத்தில் இருந்தும் இணையம் மூலமான செய்தி பரவலாக பலருக்கு சென்று இருக்கும் நிலையிலும் டைம்ஸில் ஓட்டுப்போடுபவர்களின் தமிழர்கள் எண்ணிக்கை குறைவாகப் போனது.

தமிழகத்தில் தமிழ் புது வருடப்பிறப்பு என்பதால் விடுமுறை காரணமாகவும்,தேர்தலில் ஓட்டுப் போட்ட களைப்பின் காரணமாகவும் பெரும்பாலோர் இணையம் வந்திருக்க மாட்டார்கள்.லண்டன் மற்றும் புலம்பெயர் வாழ் மக்களுக்கு செய்திகள் கொண்டு போய்ச் சேர்க்கும் தொலைக்காட்சி ஊடகங்கள் தமிழகத்திலிருந்து ரிலே ஆகும் சீரியல்களையும், கலை நிகழ்ச்சிகளையும் மட்டுமே நடத்தி விட்டு டைம்ஸ் வாக்கெடுப்பின் இறுதியில் ராஜபக்சே 6ம் நிலையில் இன்ஃபுலுயன்ஸ் பட்டியலில் இடம் பெற்றார் என்ற தகவலை மட்டும் வெளியிடுகிறார்கள்.


டைம்ஸ் இதழின் ராஜபக்சே பெயரும் இடம் பெற்றதில் ராஜபக்சேவின் போர்க்குற்ற அறிக்கையை ஐ.நா மூவர் குழு சமர்ப்பித்த நேரத்தில் விமர்சனங்களையும்,குற்றங்களிலிருந்து தப்பிக்கும் அரசியல் உள்நோக்கங்களும்,டைம்ஸ் இதழை இன்ஃபுலுயன்ஸ் செய்யும் சக்தியும் இலங்கை அரசுக்கு இருப்பதும் விளங்குகிறது.டைம்ஸ் ஓட்டு வங்கியின் துவக்கத்தில் இருந்து ராஜபக்சே சார்பாளர்களே ஓட்டு எண்ணிக்கையில் அதிகமானவர்களாகவும்,பின்னூட்டப் பகுதியில் தமிழர்கள் சார்பாக பின்னூட்டமிடுபவர்களை விடுதலைப் புலிகள் என்று கேலி செய்தும்,யூடியூப்பின் இலங்கையின் கடந்த கால போரின் அவலங்களை முன்வைத்தும் பிரபாகரனுக்கும், விடுதலைப்புலிகளுக்கும், மொத்த தமிழர்களுக்கு எதிராகவும் அவர்களின் தமிழர்களின் மீதான வெறுப்பின் உச்சத்தோடு பின்னூட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.தமிழன் மட்டுமே இன துவேசத்தை முன்னெடுக்கிறான் என்று சிலர் நினைக்கக் கூடும்.உங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும் விரோதம்,குரோதம் அவர்களிடம் நிறையவே இருக்கிறது. துவக்கம் முதல் ஈழப் பிரச்சினைக்கு இதுவே காரணம் என்ற பொது அறிவு பல அடிகள் பட்டும் இலங்கை அரசு இயந்திரம் இன்னும் இதனைப் புரிந்து கொள்ளவில்லை.


பின்னூட்டப் பகுதிக்கு நான் சென்ற நேரத்தில் எனக்கு முன்பே இதுவரை அடையாளம் தெரியாத சில சகோதர,சகோதரிகள் முடிந்த வரை மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார்கள்.தமிழ் மணம்,இண்டலி மூலமாக தகவல் ஓரளவுக்கு சென்றதன் காரணமாக தமிழர்களின் முகங்கள் எட்டிப்பார்த்ததும் ராஜபக்சே சார்பாளர்களின் பின்னூட்டங்கள் குறைந்து போயின.அதற்குப் பின் முதல் நிலையில் இருந்த ரெய்ன் குறித்தப் பின்னூட்டங்கள் வந்து  மற்றும் ஏனைய பின்னூட்டங்கள் முந்திக் கொண்டன.

ஒருவர் எத்தனை ஓட்டு வேண்டுமானாலும் க்ளிக்கலாமென்று நண்பர்களின் பதிவுப் பின்னூட்டங்கள் கண்டும் நான் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே டைம்ஸில் இணைத்தேன்.மீதமெல்லாம் எனது சார்பான நாகரீகமான பின்னூட்டங்கள் மட்டுமே.மக்கள் தொகையில் அதிகமாய் இருக்கும் தமிழர்கள் ராஜபக்சே சார்பாளர்களின் வாக்குகள் மூலமாக தோற்றுப்போவதின் பரிணாமங்கள் பல கோணங்களில் இருந்தாலும் உலக மக்களின் பார்வையில் டைம்ஸின் ராஜபக்சேவுக்கான அங்கீகாரம் மட்டுமே பார்க்கப்படும்.ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின் அதற்கான சாத்தியங்கள் இல்லாத சம காலத்தில் ஈழத்தமிழருக்கான சம உரிமைக்கான போராடும் களங்கள் என இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் தமிழ் தேசியக் குழுவோடு மக்கள் குரலும்,தமிழகம்,உலகம் சார்ந்த தமிழர்கள் என்று நாடுகடந்த தமிழீழ அரசு என மூன்று களத்தில் ஜனநாயக ரீதியாக போராடும் வாய்ப்புக்கள் இருந்தும் டைம்ஸ் வாக்கெடுப்பில் தமிழன் தோற்றுப் போய்விட்டான்.

தோல்விகளின் சலிப்பு, உட்பூசல்கள், ஆளை விடுங்கய்யா சாமி,நாங்க நல்லாவே இருக்கிறோம் என்ற அடிமை மனோபாவத்தோடு இனப் படுகொலைகளையும் ஏற்றுக் கொண்டு ராஜபக்சேவோடு சமாதானம் செய்து கொள்வது,,தமிழர்களுக்கு எதிரான நாடுகள் என ஒரு பக்கம்,இனப்படுகொலைகளுக்கான கோபம்,உலக அரங்கில் நீதி கிடைக்காமை என்பவற்றிற்குப் ஜனநாயக ரீதியாகப் போராடியே தீருவது என்ற தமிழர்கள் ஒரு பக்கமென தற்போதைய நிகழ்வுகள் சொல்கின்றன.

டைம்ஸின் வாக்கெடுப்பின் அங்கீகாரத்தோடு தொடர்ந்து ராஜபக்சே போர்க்குற்றங்களில் தப்பிக்கும் அரசியல் ரீதியான முன்னெடுப்புக்களை செய்வார்.

44 comments:

Yoga.s.FR said...

வணக்கம் நண்பரே!ஒரேயடியாக புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஓட்டுப் போடவில்லை,எதிர்க் கருத்து எழுதவில்லையென்று முடிவு கட்டி விடாதீர்கள்!ஓட்டும் போட்டேன்,எதிராக!கருத்தும் உரைத்தேன் எதிராக! இந்த வாக்களிப்பின்"மகத்துவம்" தான் எனக்குப் புரியவில்லை.டைம்ஸ் இல் கடமையாற்றுவோர் தான் பரிந்துரைத்தார்களாம்!இலங்கையில் இருக்கும் பத்திரிகைச் சுதந்திர இலட்சணத்தில் எப்படி அந்த ஊழியர்கள் "இவரை"தேர்வு செய்தார்கள்?விலை போய் விட்டார்களா?அப்படித் தானே இருக்க வேண்டும்?போகட்டும்! நீங்கள் ஒரு ஓட்டுடன் முடித்துக் கொண்டீர்கள்!நான் ஒன்றுக்கு மேலேயே போட்டேன்!அதிசயம் ஆனால் உண்மை!நான் ஒன்று எதிராகப் போட்டால்,நான்கு, ஐந்து என்று ஒரே கணத்தில் சார்பாக ஓட்டு விழுந்து விடுகிறது!இலங்கையில் இருப்போர்(சிங்களவர்)ஏறத்தாழ ஒன்றரைக் கோடி!அதில் இணையம் வைத்திருப்போர் ஓர் இலட்சம் பேர் தான் இருப்பார்கள்!அதிலும் இன்டர் நெட் வசதி எத்தனை பேரிடம் இருக்கும்?///பணமென்றால் பிணமென்ன "டைம்ஸ்" உம் வாய் திறக்கும்போலிருக்கிறது!!!!!!!!!!!!!!!!!!

நிரூபன் said...

இலங்கையில் இருப்பதால் இறுக்கமாக இருக்க வேண்டிய நிலமை.. புரிந்து கொள்க..

Thekkikattan|தெகா said...

ராஜ நட,

நானும் டைம்ஸ் பக்கத்தில்தான் இருந்தேன். எனக்கு மின்னஞ்சலில் செய்தியும் இணைப்பும் கிடைத்தவுடன் சில இடங்களில் பகிர்ந்து கொண்டு ரொம்ப சீரியசாக எடுத்துக் கொண்டேன்.

ஆனால், பின்னால் அந்த பக்கத்திற்கு சென்று பார்த்தால் நீங்க சாதாரணமாக அந்த பக்கத்தை ரிஃப்ரெஷ் செய்தாலே ஓட்டு கணக்காகிறது. அந்த பக்கம் இதுக்கு சம்பளமே கொடுத்து ஆள் வைச்சு செஞ்சிருப்பாய்ங்களா இருக்கும், நாம் போடுகிற ஒவ்வொரு ஓட்டிற்கும் எதிர் தரப்பில 10 ஓட்டுக்கள் ஜம்ப் ஆகிறது. அடப் போங்கடா போக்கத்தவிங்களான்னு ஆகிப் போச்சு.

விடுங்க, விடுங்க முழு பூசணிக்காய எத்தனை நாளக்கி சோத்தில மறைப்பீங்க...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இரு மடி அரசியல் பார்வையில் செயல்படும் ராஜபச்சேவை புரிந்துகொள்வதில் தமிழர்கள் தடுமாறுகின்றார்கள் .அது தான் இப்பொழுது உள்ள பிரச்சனையே .இதிலிருந்து முதலில் மீளவேண்டும் .

ஜோதிஜி said...

தமிழர்கள் தோற்பது இது தான் முதல் முறையா?

நிரூபன் சொன்னதை பார்த்தீகளா?

ஆனால் பிரபாகரன் குறித்து இன்னமும் எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்.

அதில் ஈழத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. மொத்தத்தில் ராஜபக்ஷே அதிகாரம் அரசு குறித்து மட்டும் எவரும் எழுதக்கூடாது... முடியாது...

பாரத்... பாரதி... said...

தமிழர்கள் ஓட்டு குறைவாக விழுந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் ரத்தவெறி ராஜபக்சேவுக்கு எப்படி இவ்வளவு ஓட்டுக்கள் விழுந்தன என்பது தான் கொஞ்சம் கடுப்பாக இருக்கிறது.

பாரத்... பாரதி... said...

தமிழர்கள் ஓட்டு குறைவாக விழுந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் ரத்தவெறி ராஜபக்சேவுக்கு எப்படி இவ்வளவு ஓட்டுக்கள் விழுந்தன என்பது தான் கொஞ்சம் கடுப்பாக இருக்கிறது.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

என்னத்த சொல்லறது..

ஆறாம்பூதம் said...

உங்களது பின்னூட்டப் பதிவுகளை அங்கே கண்டேன் . நன்றி.ஆக்கப் பூர்வமான விவாதத்திற்கு சிங்களர்கள் அங்கே தயாராக இல்லை. பின்னூட்டமிடும் தமிழர்களை புலிகள் என முத்திரை குத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். அதுவுமில்லாமல் நெருப்பு நரி மூலம் கள்ள வாக்கு இட முடியும் என்ற நிலையில், இது சரியான வாக்கெடுப்பாக இருக்க நியாயமில்லை. இதையும் , போர்க் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை செல்வாக்குள்ள நபர்கள் பட்டியல் வாக்கெடுப்பில் சேர்த்ததன் மூலம், Time இதழ் தன்னைக் கறைப்படுத்திக் கொண்டுள்ளது என்பதை அதன் ஆசிரியருக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் ராஜபக்சேவின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கச் செய்வதற்கான முயற்சியை எடுப்போம். குவியட்டும் மின்னஞ்சல்கள் Time ஆசிரியர் குழுவுக்கு.

ஆறாம்பூதம் said...

மாதிரிக் கடிதம்

letters@time.com இந்த மின்னஞ்சல் முகவரியில் அஞ்சல்கள் சென்று சேர்வதில் தாமதமேற்படுகிறது, சில முறை அஞ்சலைச் சேர்க்க இயலவில்லை என பிழைச் செய்தி வருகிறது. ஆனால் டைம் இதழில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிதான் இது. எனவே மாற்று முகவரியையும் தேடி அதற்கும் அனுப்பவும்.letters@time.com

Subject: The 2011 TIME 100 Poll - Mr.Rajabakse should not be on the list !

Dear Editor,

While I respect the decision by Time to select the nominees, it is quite shameful to nominate Sri Lanka's Rajabakse. There are ample evidence on his regime that has committed serious war crimes and crimes against humanity. These allegations do come from reputable human rights organizations including AI, and HRW. Further, UN and ICG among others have also accused Sri Lanka. Then there were prominent people have also expressed concerns on the record of Mahinda Rajabakse and his role as a leader.

In recent days UN SG Mr. Ki-Moon has also received a report produced by his panel on alleged war crimes by Rajabakse. I kindly urge the Time magazine to reconsider the nomination of Mr. Rajabakse from this list.

Sincerely,

ஆறாம்பூதம் said...

இந்த லின்கில் சென்று உங்களது மின்னஞ்சல்களை டைம் ஆசிரியர் குழுவுக்கு அனுப்பலாம்.

http://www.time.com/time/letters/email_letter.html

ராஜ நடராஜன் said...

வணக்கம் யோகா அவர்களுக்கு!துவக்கத்தில் பின்னூட்டப் பகுதியில் இருந்தவர்கள் எனக்கு பெயர் அறிமுகமில்லாதவர்களும்,புலம் பெயர் தமிழர்களாகவே இருப்பார்கள் என நினைக்கின்றேன்.ஆனால் 3 பேர் தமிழர்கள் சார்பாக பின்னூட்டமிட்டால் 10 பேர் ராஜபக்சே சார்பாக தமிழன் racist என்கிற மாதிரியானப் பின்னூட்டங்களை இட்டுக் கொண்டிருந்தார்கள்.

ராஜபக்சே சார்பு ஓட்டுக்கள் நமது ஒரு ஓட்டுக்கு பல மடங்காகிறதென்று பதிவர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.ராஜபக்சேவை 100 பேர் பட்டியலில் சேர்த்ததன் மூலம் பணம் சார்ந்த ராஜபக்சே சார்பாளர்கள் டைம்ஸ் தேர்வுக்குழு வரை இருப்பதும்,தன் பத்திரிகைக்கு ராஜபக்சே பெயரால் டைம்ஸ் இழுக்கை தேடிக்கொண்டது.இதனையே பின்னூட்டத்தில் நாம் பதிவு செய்துள்ளோம்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

இக்பால் செல்வன் said...

என்னப் பாஸ் ! டைம் பத்திரிக்கை என்ன தமிழ்ப் பத்திரிக்கையா ??? அவங்களுக்கு தமிழனும் ஒன்னு தான் சிங்களவனும் ஒன்னு தான். பிரபாகரனும் ஒன்னு தான் ராஜபக்ஷேவும் ஒன்னு தான். ராஜபக்ஷெ யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததைத் தவிர பெரிய மாற்றத்தை ஒன்னும் பிடுங்கவில்லை .......... !!!

தவிர இந்த செய்திகளை இங்குள்ள ஈழத்தமிழ் ஊடகங்கள் சொன்னதாக தெரியவில்லை ... இணையத்தில், தமிழ்மணத்தில் தான் கண்டுக் கொண்டேன் ............ !!!?

ராஜபக்ஷெ பல கோடிகளை செலவழித்து தமக்காக ஆதரவு வாக்குகளை விழச் செய்வதில் வல்லவர். அவரை எதிர்த்து நாம் எதாவது செய்ய வேண்டியது அவசியமே !

ராஜ நடராஜன் said...

//இலங்கையில் இருப்பதால் இறுக்கமாக இருக்க வேண்டிய நிலமை.. புரிந்து கொள்க..//

சகோ நிரூபன்!இலங்கையின் யதார்த்த நிலை நாம் அனைவரும் அறிந்ததே.வாக்கெடுப்பில் ஈழ மண்ணின் மைந்தர்களை குறை சொல்லவே இயலாது.இது ஈழ மண்ணிற்கும் வெளியேயான டைம்ஸ் ஊடகம் சார்ந்த சார்பு நிலையும் அதற்கு எதிரான போராட்டமும்.

ராஜ நடராஜன் said...

தெகா!நான் பின்னூட்டும் நேரத்தில் உங்களைக் காண இயலவில்லை.நீங்கள் சொல்லும் ஜம்ப் பற்றி ஏனைய பதிவர்களும் சொன்னார்கள்.

பார்க்கலாம் மனமகிழ் மன்றம் மூவர் குழு போர்க்குற்ற அறிக்கையை எப்படி கையாள்கிறதென்று.

ராஜ நடராஜன் said...

நண்டு!அழகாய்ச் சொன்னீர்கள்.இருமடி அரசியலில் ராஜபக்சே குழு செயல்படும் விதம்.ஈழத்துக்குள் இருப்பவர்கள் சூழ்நிலைக் கைதிகளாய் இருக்கிறார்கள்.ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழர்களின் ராஜபக்சே சார்பு நிலை மற்றும் பிரபாகரனுக்கு எதிர்ப்பு நிலையென்பதால் ராஜபக்சே சார்புநிலை இதற்கு எதிர் நிலை என்ற இரு நிலைப்பாடுகளில் நீங்கள் சொன்னமாதிரி தமிழர்கள் தடுமாறுகிறார்கள்.இதிலிருந்து மீள்வது எப்படியென்பதே இப்போதைய கேள்வி.

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!நிருபன் கருத்து ஏற்புடையதே.
நீங்கள் சொல்வது போல் பிரபாகரனை எப்படி வேண்டுமானாலும் விமர்சிப்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள்.ஆனால் ராஜபக்சேவை விமர்சித்தால் நாடு காக்க வந்த நாயகன் என்று ராஜபக்சே குழு ரத்தவெறி பற்களுக்கு டூத்பேஸ்ட் பூசி விடுகிறார்கள்.

முன்பு ராஜபக்சேவின் அல்ஜசிரா நேர்காணலைக் கண்டால் ரத்த அழுத்தம் நிறைந்த ஒரு மனிதனின் கோபக்குரல் மட்டுமே ஒலிக்கிறதேயன்றி ஒரு தலைமைக்கு தேவையான சாந்தம் நிலவவில்லை.

நீங்கள் சொல்வது மாதிரி ஈழத்தில் எந்தப் பிரச்சினையுமில்லையென்று சந்தோசப்பட்டுக்கொள்பவர்களும் காணப்படுவது வருத்தம் மட்டுமே தருகிறது.

இவர்களையும் புறம்தள்ளி ஈழப்பிரச்சினை ஒரு முக்கியமான தென் ஆசியப் பிரச்சினை என்ற நிலையிலேயே இலங்கை இப்போது வலம் வருகிறது.

அருள் said...

அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

ராஜ நடராஜன் said...

பாரத்...பாரதி!வணக்கம்.கள்ள ஓட்டுக்கு தமிழகம் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியுமென்ற நிலையை டைம்ஸ் வாக்கெடுப்பு உடைத்து விட்டது:)

டைம்ஸ்க்கு மீண்டும் கண்டன கடிதங்களை அனுப்ப முயற்சி செய்வோம்.நன்றி.

ராஜ நடராஜன் said...

ஆறாம்பூதம்:)டைம்ஸ் பின்னூட்டத்தில் நீங்கள் நின்று ஆடியது கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.

டைம்ஸ் இதழுக்கு கடிதம் எழுதுவது அவசியமான ஒன்று.

மின்னஞ்சல் தகவலுக்கும்,எளிதாக வெட்டி ஒட்ட ஆங்கில வரிகளுக்கும் நன்றி.காரம் வேண்டி எனது கடிதத்திற்கு கூட கொஞ்சம் மசாலா சேர்த்துக்கொள்கிறேன்:) மீண்டும் நன்றி.

ராஜ நடராஜன் said...

கருன்!என்னத்தை சொல்வது என்ற திகைப்பா!எத்தனையோ வாங்கிட்டோம்...இதனையும் வாங்கிக்கொள்வோம்.

ராஜ நடராஜன் said...

வாங்க இக்பால் செல்வன்!டைம்ஸ் இதழில் ராஜபக்சே பெயர் இடம் பெற்றதில் நிச்சயம் உள்குத்து இருக்கிறது.காஷ்மீருக்கு பாகிஸ்தானும்,இந்தியாவும் பங்கு கொள்ளும் நிலையில் Kashmir is a disputed land என்றுதான் ஐ.நா வின் நிலைப்பாடு.

அதேபோல்தான் Srilankan Saviour என்று ஒருபக்கமும் Genocide War Criminal என்று மற்றொரு பக்கமும் உலகப்பார்வையில் பார்க்கப்படும் ராஜபக்சேவும் a disputed person.

ஈழத்தமிழ் ஊடகங்கள் என்ன,தமிழக ஊடகங்களில் கூட டைம்ஸ் தேர்வு பற்றிப் பார்க்க முடியாது.

அது!ராஜபக்சே பலகோடி செலவழித்தாவது தனது பெயருக்கான களங்கத்தை நீக்கப்பார்ப்பார் என்கிறீர்களே அங்கே இருக்கிறது டைம்ஸின் ராஜபக்சே தேர்வு.

ராஜ நடராஜன் said...

அருள்!வணக்கம்.ராஜபக்சே விசயத்திலாவது நாம் கரம் கோர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது:)இதே தோழமை அனைத்துக்கும் இருந்தால் இன்னும் நல்லாயிருக்குமே!

சுட்டிக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

ஆறாம் பூதம்!நீங்கள் கொடுத்த கடிதத்துடன் இன்னுமொன்று http://www.time.com/time/letters/email_letter.html தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தகவலுக்கு மீண்டும் நன்றி.

Dear Editor,

I am a regular reader of Times magazine articles, but it is a first time I am sending an email to the editor.

Respected Times magazine decision to include Mr.Rajapakse into 100 influential person vote list seems to be biased.

It is well known fact that Mr.Rajapakse is viewed both as a Srilankan Saviour and a Genocide War criminal.UN truth finding committee has submitted a report recently on the atrocities happened during the 2008-2009 War between Srilankan army and Liberation Tamil Tigers of Eelam and Rajapakse is responsible to it as a president of Srilanka.

At this crucial time of international dispute of a person,on what curcumstances Mr. Rajapakse was selected one among 100 influential person?

Also while voting it is found that while one vote is clicked against Rajapakse as No nearly 10 votes are poping up simultaniously for Rajapakse to Yes.

Apart from an induvidual standing for vote is on question,the trust on Times voting machine itself is in question.

With my sincere regrets I would like to submit my opposition,Mr.Rajapakse's name is a disputed one among 100 influential persons.

Thanks for giving an opportunity to submit my letter.

With regards
Raja Natarajan

பட்டாபட்டி.... said...

நானும் மெயில் அனுப்பியிருக்கிறேன்..
பார்ப்போம் சார்.. என்னதான் நடக்கும்மென்..

ஆறாம்பூதம் said...

//ஆறாம் பூதம்!நீங்கள் கொடுத்த கடிதத்துடன் இன்னுமொன்று http://www.time.com/time/letters/email_letter.html தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தகவலுக்கு மீண்டும் நன்றி.//

நன்றி ராஜ நடராஜன். நம்மால் இயன்ற ஆகச்சிறந்த முயற்சிகளை எடுப்போம்.

ராஜ நடராஜன் said...

//நானும் மெயில் அனுப்பியிருக்கிறேன்..
பார்ப்போம் சார்.. என்னதான் நடக்கும்மென்..//

பட்டு!மெயில் அனுப்பியதற்கு நன்றி.ஊர் கூடி தேர் இழுத்திருந்தால் இந்தக் கடிதங்களுக்கு அவசியமே இருந்திருக்காது.ஓட்டு வாக்கெடுப்பின் நாளும் காலமும் நமக்கு போதிய அவகாசத்தைக் கொடுக்கவில்லை என்பதில் இன்னும் வருத்தமே.

ராஜ நடராஜன் said...

ஆறாம்பூதம்!தற்போதைய காலகட்டத்தில் இணையதளம் மட்டுமே நம்மை ஒன்று சேர்க்கவும்,விவாதங்களைக் கிளப்பவும் அமைந்த வாய்ப்பாக இருக்கிறது.ஈழ மக்களுக்கான சம உரிமைக்கு தீர்வு கிடைக்கும் வரையில் நம்மால் இயன்ற ஒருங்கிணைப்பு செய்வோம்.நன்றி.

Yoga.s.FR said...

நன்றிகள் "ஆறாம்பூதம்"இன்றே,உடனேயே உங்கள் மாதிரிக் கடிதத்தைப் பிரதி செய்து அதே மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விட்டேன்!சுலபமாக சென்றது.பதிலும் கிடைத்தது.நன்றி மீண்டும்!

Yoga.s.FR said...

உலகெங்கும் அடுத்த வாரம் இலங்கைப் பிரச்சினை பகிரங்கமாகாவிடினும் கூட ராஜதந்திர மட்டத்தில் பாரிய அலைகளைத் தோற்றுவிக்கும்!இணையங்களில் அங்கிருந்தே,அதாவது இலங்கையிலிருந்தே நிபுணர் குழுவின் அறிக்கை வெளியாகி விட்டது!இனி மேல் பான் கி மூன் நினைத்தாலும் கூட மறுக்கவோ,மறைக்கவோ முடியாது!புதிய ஆண்டு விடிவைத் தருமா?பார்க்கலாம்!கொடுங்கோலனை எதிர்த்த,எதிர்க்கும் அத்தனை உறவுகளுக்கும் நன்றி!

ராஜ நடராஜன் said...

யோகா அவர்களுக்கு!உங்கள் மீள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.

நாம் நினைப்பதைப் போல் போர்க்குற்ற விசாரணை நமக்கு சாதகமாக இல்லாமல் ஆகும் அனைத்து தகுடுதத்தங்களையும் இலங்கை அரசு வெளியுறவு ராஜதந்திரத்துடன் முன்னெடுக்கும்.கூடவே இந்தியா,சீனா,ரஷ்யாவை துணைக்கு சேர்த்துக் கொள்ளும்.இருந்தாலும் மனித உரிமைக்குழுக்களோடு நாமும் இணைந்து குரல் கொடுப்போம்.புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பு மிகவும் அவசியமானது.

ராஜ நடராஜன் said...

யோகா அவர்களின் முந்தையப் பின்னூட்ட தகவல்படி டெய்லி மிரரின் சுட்டி

http://www.dailymirror.lk/top-story/10913-summary-of-un-panel-report.html

ராஜ நடராஜன் said...

யோகா அவர்களுக்கு,

ஐ.நாவின் மூவர் குழு அறிக்கையை முழுதும் வாசித்தேன்.ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால்

(i) triumphalism on the part of the Government, expressed through its discourse on having developed the means and will to defeat "terrorism", thus ending Tamil aspirations for political, autonomy and recognition, and its denial regarding the human cost of its military strategy;

இதற்கெல்லாம் முற்றுப் புள்ளியாகவும் மண்ணின் மைந்தர்களின் மனநிலை என்னவென்ற முடிவுக்கும் சரியான தீர்வு ஈழத்தமிழர்கள் ஒன்று பட்ட சம உரிமையோடு இலங்கையில் வாழ்கிறார்களா அல்லது தமது சுய உரிமைகளைத் தாங்களே தீர்மானிக்கும் முழு உரிமையோடு ஐ.நா என்ற அமைப்பின் மூவர் குழு அறிக்கைப் படி அதன் ஆதரவோடு மக்கள் வாக்கெடுப்புக்கு விட்டு விடுவதே வரும் காலத்தில் இதற்கான தீர்வாக அமையும்.

ஆறாம்பூதம் said...

யோக இந்த மாதிரிக் கடிதம் இணைய நண்பர் ஒருவர் கொடுத்த யாழ் கள் இணைப்பில் இருந்தது. நன்றிகள் அவருக்கே.

Thekkikattan|தெகா said...
This comment has been removed by the author.
சுந்தரவடிவேல் said...

please let everyone know that the poll is still on until 21st April. Ask them to vote NO.

Someone said it closed on 14th. That slowed down many of us.

Please hurry up! thanks .

Thekkikattan|தெகா said...

ராஜ நட,

எடிட்டருக்கு எழுதியதின் மூலம், கொஞ்சமாவது பெட்டி மாறியிருந்து இவிங்களும் விலை போயிருந்தால் அந்த குற்ற உணர்ச்சியாவது இந்த கடிதங்கள் ஏற்படுத்தினாலே போதுமென்ற அளவில் நானும் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறேன். நகல் இங்கே...


Dear Editor,

Recently in your magazine I voted for 100 influential person through yes or no option. To my surprise I noticed the list included the Sri Lankan President Mahinda Rajapakse, all along I've been thinking during the last push of 2008 civil war in his country he killed tens of thousands of tamil people.

As you aware of, during the massacre period he had kicked out all the media, human right activists, humanitarian workers etc., which was condemned by the international medias. Behind the closed door, he allegedly buldozed down half alive people to dead and buried them alive also.

I, so far, had a hope that "Time" like media wanting to go in the island and report hands on, what had happened. In spite when no international media or human right activist is allowed till to date to go in and report, shamefully around this time this magazine includes Mr. Mahinda the alleged president to be on the top 100 list. Simply unbelievable!

As I was voting, I realized everytime one refreshes the page by default a vote is added; which meant it was not a legitimate number what we see there too.

Hope that you drop the name from the list until UN inquires the war crime allegation against Mr. Mahinda, in turn that would bring back the legitimacy and lost confidence in your magazine. Thank you!

Sincerely,

ராஜ நடராஜன் said...

//யோக இந்த மாதிரிக் கடிதம் இணைய நண்பர் ஒருவர் கொடுத்த யாழ் கள் இணைப்பில் இருந்தது. நன்றிகள் அவருக்கே.//

பெயர் அறியாத யாழ் கள நண்பருக்கு நன்றி.

வானம்பாடிகள் said...

ம்ம். நானும் மெயில் அனுப்பினேன். வேறென்ன செய்ய:(

ராஜ நடராஜன் said...

//please let everyone know that the poll is still on until 21st April. Ask them to vote NO.

Someone said it closed on 14th. That slowed down many of us.

Please hurry up! thanks .//

It was upto 14th April.From 22 to 21 then 28 and later Rajapakse climbed to 6th position.It looks like they would have extended now.If anybody not voted for No please do so atleast to add some more numbers.Also verify once again the numbers pop up is still going on or not and bring to public view.

It is also good to send induvidual letter to editor.

Thanks for info.

ராஜ நடராஜன் said...

தெகா!இன்னும் தனிக்கடிதங்கள் டைம்ஸ் எடிட்டருக்கு அனுப்புவது குறைந்த பட்சம் அவர்களை யோசிக்க வைக்கும்.

உங்கள் தனிக்கடிதத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//ம்ம். நானும் மெயில் அனுப்பினேன். வேறென்ன செய்ய:(//

பாலாண்ணா!தற்போதைய சூழலில் இணையமும்,கருத்துப் பரிமாறலும் பலமான ஒரு ஆயுதம்.நம்மால் இயன்றதை செய்வோம்.நன்றி.

Rathi said...

ராஜ நட, உங்கள் பதிவைப் படித்த பின் தான் நானும் இதை கவனிக்காத குற்ற உணர்வு உறுத்துகிறது. ஆனால், இலங்கை அரசு இதுபோன்ற வேலைகளுக்கு ஏற்கனவே வேலைக்கு சம்பளம் கொடுத்து ஆட்களை வைத்திருக்கிறார்கள். இனிமேல் அது போன்ற முயற்சிகள் அதிகம் நடக்கும்.

ஒருவேளை Bell Pottinger இன் மில்லியன் டாலர் பிரச்சாரத்தின் வேலையில் இதுவும் ஒன்றோ???

இதை ஏற்கனவே தெரிந்துகொண்டு ஆவன செய்த எல்லோருக்கும் நன்றி. இது போன்ற செய்திகள் ஏதாவது வந்தால் தெகா வழி தான் சரி. எப்போதுமே பத்திரிகையின் ஆசிரியர்/எடிட்டர் போன்றோருக்கும் எழுதி எங்கள் எதிர்ப்பை காட்டவேண்டும்.

ராஜ நடராஜன் said...

ரதி!எங்களை விட தகவல்கள் மற்றும் உண்மையான களநிலைகள்,மேற்கத்திய நாடுகளின் ஊடக நிலைப்பாடும்,உள் நிலைப்பாடும் உங்களைப் போன்றவர்களுக்கு தெரியும் சாத்தியம் இருக்கிறது.தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

முக்கியமாக புலம்பெயர்ந்த நாடுகளிலும்,ஈழத்தில் புனைப்பெயரில் எழுதிக்கொண்டிருப்பவர்களும் ஈழம் குறித்த பிரச்சினைகளை பொதுவில் வைக்க வேண்டியதை விவாதத்திற்கும்,ராஜதந்திர ரீதியாக மறைமுகமாக எடுக்கும் நிலைகளுக்கான குழுவாக செயல்படுவதும் அவசியமானது.

நான் முன்பே உங்களுக்கு சொன்னது போல் நாடு கடந்த தமிழீழ அரசை வலுப்படுத்துவது அவசியமானது.எந்த ஒரு அரசும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு மூலமாகவே பேச்சு வார்த்தைகள்,அறிக்கைகள்,கடிதங்கள்,தங்கள் அரசியல் நிலைப்பாடு போன்றவற்றை பகிர்ந்து கொள்ளும்.

இதற்கு வலுவான அமைப்பாக ஈழத்தில் தமிழ் தேசியக் குழுவும்,புலம் பெயர்ந்த நாடுகளின் சார்பாக நாடுகடந்த தமிழீழ அரசும்,இன்னும் பல அமைப்புக்களும் இணைந்து செயல்படுவதும் மட்டுமே ஈழ மக்களுக்கான தீர்வுக்கு வழிவகுக்கும்.

காலம் கனியும் போது தமிழகமும் புவியியல் ரீதியாக மக்களுக்கான குரலாக உருவாகும் நிலையை ஏற்படுத்தும் என நம்புவோம்.