Followers

Thursday, April 7, 2011

கடாபியும் கருணாநிதியும்

இந்தப் பதிவுக்கான தலைப்பு லிபியாவில் மக்கள் எழுச்சி துவங்கிய நேரத்திலிருந்து தலையில் குறுகுறுத்துக் கொண்டிருந்த ஒன்று.தேர்தலின் முடிவுகளின் இந்த தருணத்தை விட்டால்,அதுவும் போர்க்குற்றங்களுக்கு நிகரான தவறுகளை இழைத்து விட்டு மக்களிடமே தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஓட்டு கேட்கும் சூழலில் இதனை சொல்லியே தீரவேண்டும்.லிபியாவுக்கும்,தமிழகத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும் தனி மனிதர்களின் ஆளுமை முதன்மையாக இருப்பதால் தலைப்பை ஒட்டிய பார்வை...

கடாபி 40 வருடம் ஆட்சி செய்தேன் என மார் தட்டிக்கொள்கிறார்
கருணாநிதி  40 வருடங்களுக்கும் மேல் அரசியல் மார்தட்டுகிறார்.

கடாபிக்கு லிபியாவை இணைத்ததில் பங்குண்டு
கருணாநிதிக்கும் தமிழகத்தை உருவாக்கியதில் பங்குண்டு

கடாபிக்கு மக்கள் நலத்தை விட தன்மக்கள் முக்கியம்
கருணாநிதிக்கு மக்கள் நலத்தை விட தன்மக்கள் முக்கியம் 

கடாபி பல பழங்குடிகளை பிரித்து ஆண்டார்
க்ருணாநிதி சாதிக்கட்சி என பிரித்து ஆண்டார்


கடாபியும் தனக்குப் பின்  வாரிசு அரசியலை உருவாக்கியவர்
கருணாநிதி  தனக்குப் பின் வாரிசு அரிசியலை உருவாக்கியவர்


கடாபி மன்னராட்சி சர்வாதிகாரி
கருணாநிதி ஜனநாயக ஆட்சி சர்வாதிகாரி

கடாபிக்கு செத்தாலும் அரியணையை விடபிரியமில்லை
கருணாநிதிக்கும் சாகும் வரை நாற்காலியை விடப் பிரியமில்லை

கடாபிக்கு மக்கள் முன் சொல்வது ஒன்று ஆனால் செய்வது ஒன்று
கருணாநிதிக்கும் மக்கள் முன் சொல்வது ஒன்று செய்வது ஒன்று

கடாபிக்கு முன்பு பெரிய அண்ணன் அமெரிக்கா எதிரி
கருணாநிதிக்கும் முன்பு பெரிய அண்ணண் காங்கிரஸ் எதிரி

கடாபியையும் கழட்டி விட்டு நிறைய பேர் ஓடி விட்டார்கள்
கருணாநிதியையும் கழட்டி விட்டு நிறைய பேர் ஓடி விட்டார்கள்

கடாபிக்கு தொப்பி ரொம்ப பிரியம்
கருணாநிதிக்கு மஞ்சத்துண்டு ரொம்ப பிரியம்

கடாபி வீட்டில் ரீகன் குண்டு போட்டார்
கருணாநிதியை ஜெயலலிதா குண்டுக்கட்டா ஜெயிலில் போட்டார்

கடாபியின் மகனே குண்டர் படைத்தலைவன்
கருணாநிதியின் மகனே குண்டர்களுக்குத் தலைவன்

கடாபி ஒபாமாவுக்கு கடிதம் எழுதுகிறார்
கருணாநிதி காங்கிரஸ்க்கு கடிதம் எழுதுகிறார்

கடாபி மழை வராட்டியும் குடைபிடிப்பார்
கருணாநிதி மழை வந்தாலும் விழா எடுப்பார்

கடாபிக்கு போர் வந்தும் ஆதரவாளர்கள் உண்டு
கருணாநிதிக்கு ஈழப்போர் வந்தும் ஆதரவாளர்கள் உண்டு

கடாபி லிபியா மக்களுக்கு கருணை காட்டவில்லை
கருணாநிதி, காங்கிரஸ் ஈழமக்களுக்கு கருணை காட்டவில்லை

கடாபி மீது உலக மக்கள் கோபம்- க்ருணையின்மை  காரணம்
கருணாநிதி மீது உலக தமிழர் கோபம் கருணையின்மை  காரணம்.

46 comments:

பாட்டு ரசிகன் said...

ம்.. சூப்பர்..

நிரூபன் said...

லிபியாவுக்கும்,தமிழகத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும் தனி மனிதர்களின் ஆளுமை முதன்மையாக இருப்பதால் தலைப்பை ஒட்டிய பார்வை...//

வணக்கம் சகோதரம், தமிழகத்தைப் போலவே, லிபியாவிலும் தனிமனித, குடும்ப அரசியலே முதன்மை பெறுகிறது.

இன்னொரு விடயம் லிபியாவில் ஒருவர் தொடர்ச்சியாக முப்பது ஆண்டுகள் ஆட்சி நடத்தியிருக்கிறார். ஆனால் தமிழகத்தில் ஒருவர் மாறி மாறு ஐந்து தடவைகள் மந்திரியாகி மக்களின் அறிவினை இலவசங்களினூடாக மழுங்கடித்து, நாட்டின் முன்னேற்றப் பாதையினைச் சிதைத்து வருகிறார்.

நிரூபன் said...

கடாபி மன்னராட்சி சர்வாதிகாரி
கருணாநிதி ஜனநாயக ஆட்சி சர்வாதிகாரி//

இல்லை பாஸ், கருணாநிதியை ஜனநாயகவாதி என்று சொல்வதிலும் பார்க்க தந்திர வாதி, என்று சொல்வதே சிறந்தது.

உதாரணம்; ஒரு நாள் உண்ணாவிரதமும் அதன் பின்னர் விடப்பட்ட அறிக்கையும்.

நிரூபன் said...

கடாபிக்கு செத்தாலும் அரியணையை விடபிரியமில்லை
கருணாநிதிக்கும் சாகும் வரை நாற்காலியை விடப் பிரியமில்லை//

இருந்து பாருங்க பாஸ், செத்தாலும் கனிமொழி வயித்தில மகனாகப் பிறந்து திரும்பவும் முதல்வர் கதிரையைக் கைப்பற்றிக் கொள்ளுவார்;-)))

நிரூபன் said...

கடாபியின் மகனே குண்டர் படைத்தலைவன்
கருணாநிதியின் மகனே குண்டர்களுக்குத் தலைவன்//

செம அறுவை சகோ...

ராஜ நடராஜன் said...

//ம்.. சூப்பர்..//

சூப்பன்னு பாட்டுப் பாடி விட்டு கடைப் பக்கம் வான்னு கூப்பிடறீங்க போல இருக்குது.

இங்கே கூட்டம் குறைவா இருக்கிறதால அங்கே வந்துட்டாப் போகுது:)

நிரூபன் said...

கடாபி மீது உலக மக்கள் கோபம்- க்ருணையின்மை காரணம்
கருணாநிதி மீது உலக தமிழர் கோபம் கருணையின்மை காரணம். //

மீனவர் விவகாரம், கச்ச தீவு விவகாரத்தையும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம். செம ஹாட்டாக இருக்கும்,

ராஜ நடராஜன் said...

பாட்டு ரசிகன்!நம்ம சகோதரம் நிரூபன் வந்த் விட்டார்.அப்புறமா வாரேன்!

நிரூபன் said...

கவிதை எள்ளல் நடையில் கருணாய்நிதியினதும் கடாபியினதும் முகத்திரையைக் கிழித்து, நிஜத்தை நக்கலாகச் சொல்லி நிற்கிறது..

வித்தியாசமான யோசனை சகோ.!

நிரூபன் said...

கடாபி எண்னெய் வயல்களை சொந்தமாக்கினார்,
கலைஞர் ஸ்பெக்ட்ரம் அலைகளை
சொந்தமாக்கினார்!

இது எப்பூடி))));

நிரூபன் said...

கடாபி பெண்களைப் பாதுகாப்பு படைக்கு வைச்சிருக்கிறார்
கலைஞர் இரண்டு பெண்களைத் தன் பக்கத்தில் வைத்திருக்கிறார்;-))


தப்பாக பொருள் கொள்ளல் தகாது!

இரு பெண்கள்- சோனியா, கனி மொழி!

ராஜ நடராஜன் said...

//வணக்கம் சகோதரம், தமிழகத்தைப் போலவே, லிபியாவிலும் தனிமனித, குடும்ப அரசியலே முதன்மை பெறுகிறது.

இன்னொரு விடயம் லிபியாவில் ஒருவர் தொடர்ச்சியாக முப்பது ஆண்டுகள் ஆட்சி நடத்தியிருக்கிறார். ஆனால் தமிழகத்தில் ஒருவர் மாறி மாறு ஐந்து தடவைகள் மந்திரியாகி மக்களின் அறிவினை இலவசங்களினூடாக மழுங்கடித்து, நாட்டின் முன்னேற்றப் பாதையினைச் சிதைத்து வருகிறார்.//

வாங்க சகோதரம் நிரூபன்!கடாபியின் ஆட்சிக்காலம் இதுவரை 41.நம்ம தலீவரு ஆட்சியில் இல்லாவிட்டாலும் ஒரு நாள் லீவு எடுத்துகிட்டேன்ன்னு சொல்லியதே கிடையாது.அதனால கடாபிக்கான கூட்டுத்தொகை இவருக்கும் பொருந்தும்:)

நிரூபன் said...

கடாபி எண்னெய் வயல்களை வைத்து பிழைப்பு நடாத்துகிறார்,
கருணாய்நிதி கச்சதீவை வைத்து காலத்தை ஓட்டுகிறார்!

நிரூபன் said...

கடபாயின் ஆட்சிக் காலம் 30 ஆண்டுகள் என சரியாகத் தெரியாமல் சொல்லி விட்டேன்..

தவறுகளைப் பொறுத்தருள்க சகோதர்களே!

ராஜ நடராஜன் said...

//இல்லை பாஸ், கருணாநிதியை ஜனநாயகவாதி என்று சொல்வதிலும் பார்க்க தந்திர வாதி, என்று சொல்வதே சிறந்தது.

உதாரணம்; ஒரு நாள் உண்ணாவிரதமும் அதன் பின்னர் விடப்பட்ட அறிக்கையும்.//

தந்திரவாதி தில்லுமுல்லு வேலைகளைத்தான் சாணக்கியன்,ராஜதந்திரின்னு அன்போட கழக கண்மணிகள் கூப்பிடறாங்க.

உண்ணாவிரதத்தை இப்ப நினைச்சாலும் பத்திகிட்டு வருது:(

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அடுத்தது...
கடாபிக்கு மண்டை பூரா முடி..
கலீஞருக்கு மண்டை பூரா கிலி..

ராஜ நடராஜன் said...

//இருந்து பாருங்க பாஸ், செத்தாலும் கனிமொழி வயித்தில மகனாகப் பிறந்து திரும்பவும் முதல்வர் கதிரையைக் கைப்பற்றிக் கொள்ளுவார்;-)))//

இருக்குறதுக பத்தாதுன்னு இன்னுமொன்னா?அவ்வ்வ்வ்வ்வ் சொல்லலாமுன்னு பார்த்தா வடிவேலு கூட கா விட்டுறுக்கேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கடாபி பேரு ‘க’ ல தொடங்குது..
களிஞர் பேரும் ‘க’ ல தொடங்குது..
ஹி..ஹி

ராஜ நடராஜன் said...

//செம அறுவை சகோ...//

கோழி முட்டை போட்டா ஒன்னு அழுகினது மாதிரி இது:)

ராஜ நடராஜன் said...

//கவிதை எள்ளல் நடையில் கருணாய்நிதியினதும் கடாபியினதும் முகத்திரையைக் கிழித்து, நிஜத்தை நக்கலாகச் சொல்லி நிற்கிறது..

வித்தியாசமான யோசனை சகோ.!//

ஒவ்வொரு முறையும் பெவிலியன்ல உட்கார்ந்து வேடிக்கை பார்க்கத்தான் நினைக்கிறேன்.

நேற்று சோனியா கருணாநிதி கூட்டணி
தேர்தல்ப் பிரச்சாரம் மறுபடியும் ஓபனிங்க் பேட்ஸ்மேனாக்கிடுச்சு:)

ராஜ நடராஜன் said...

//மீனவர் விவகாரம், கச்ச தீவு விவகாரத்தையும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம். செம ஹாட்டாக இருக்கும்,//

மெய்யாலுமே கடாபிகிட்டேயிருந்து எதிர்மோனை சொல்ல வரலை.

இவ்வளவு நாளா,மீனவர் பிரச்சினை கச்சத்தீவு பற்றி நாம் சொல்லிகிட்டிருக்கோம்.கருணாநிதி கடிதம் கூடப் போட்டிருக்கார்.அப்பவெல்லாம் வாயை மூடிகிட்டு ஓட்டு வேணுமின்னு தேவைப்படும் போது இதை சொல்ல வேண்டிய அவசியமென்ன?

அப்படியே சொல்லியிருந்தாலும் வடகிழக்கு மாநிலங்களை ஈழம் என்ற புதிய நாடாக அறிவிப்போம்ன்னு சொல்லியிருந்தால் கூட கொஞ்சம் ஓட்டு தேறி இருக்கும்.

ராஜ நடராஜன் said...

//கடாபி எண்னெய் வயல்களை சொந்தமாக்கினார்,
கலைஞர் ஸ்பெக்ட்ரம் அலைகளை
சொந்தமாக்கினார்!

இது எப்பூடி))));//

ஆகா!ஆகா!அருமை.இப்படி தெரியாததை எடுத்துக்கொடுத்தா தானே கச்சேரி களை கட்டும்:)

ராஜ நடராஜன் said...

//கடாபி பெண்களைப் பாதுகாப்பு படைக்கு வைச்சிருக்கிறார்
கலைஞர் இரண்டு பெண்களைத் தன் பக்கத்தில் வைத்திருக்கிறார்;-))


தப்பாக பொருள் கொள்ளல் தகாது!

இரு பெண்கள்- சோனியா, கனி மொழி!//

அவரோட மொழியில் அவரோட திரைக்கதையில் சொல்லனுமுன்னா முன்னாடிப் பெண் வில்லி...அடுத்தது கதாநாயகி:)

ராஜ நடராஜன் said...

//கடாபி பேரு ‘க’ ல தொடங்குது..
களிஞர் பேரும் ‘க’ ல தொடங்குது..
ஹி..ஹி//

ஆகா!ஓகோ!பேஷ்!பேஷ்!

சரணத்தை பல்லவியும்,பக்கவாத்தியமும் சாப்பிட்டுடும் போல தெரியுதே பட்டு:)

ராஜ நடராஜன் said...

//கடாபி எண்னெய் வயல்களை வைத்து பிழைப்பு நடாத்துகிறார்,
கருணாய்நிதி கச்சதீவை வைத்து காலத்தை ஓட்டுகிறார்!//

நாங்கெல்லாம் இந்தக் காலத்து நக்கீரன் பத்திரிகை பரம்பரைன்னு நினைச்சீங்களா?அப்படியே அல்லக்கை வாத்தியம் ஊதறதுக்கு?

முதல் பாதிதான் சரி
இரண்டாம் பாதி தவறு

அதனால பாதி பொற்காசுகளை வாங்கிச் செல்லுங்கள்:)

நிரூபன் said...

/கடாபி எண்னெய் வயல்களை வைத்து பிழைப்பு நடாத்துகிறார்,
கருணாய்நிதி கச்சதீவை வைத்து காலத்தை ஓட்டுகிறார்!//

நாங்கெல்லாம் இந்தக் காலத்து நக்கீரன் பத்திரிகை பரம்பரைன்னு நினைச்சீங்களா?அப்படியே அல்லக்கை வாத்தியம் ஊதறதுக்கு?

முதல் பாதிதான் சரி
இரண்டாம் பாதி தவறு

அதனால பாதி பொற்காசுகளை வாங்கிச் செல்லுங்கள்:)//

பொற் காசிற்குப் பதிலாக இலவச திட்டத்தின் கீழ் ஒரு இலவச ப்ளாக் செஞ்சு தாறது;-))

சி.பி.செந்தில்குமார் said...

அரசியலுக்கு ஆப்பு.. கலைஞருக்கு காப்பா?

ராஜ நடராஜன் said...

//முதல் பாதிதான் சரி
இரண்டாம் பாதி தவறு

அதனால பாதி பொற்காசுகளை வாங்கிச் செல்லுங்கள்:)//

பொற் காசிற்குப் பதிலாக இலவச திட்டத்தின் கீழ் ஒரு இலவச ப்ளாக் செஞ்சு தாறது;-))//

சகோ!திடீர்ன்னு மண்டைல ஒரு பளிச்!

தலீவரு இலவசத் திட்டத்தை கூகிளண்ணன் கிட்டேயிருந்து கத்துக்கிட்டாரோ:)

எப்படியோ இலவச ப்ளாக்ல சில நன்மைகள் இருப்பது மாதிரி ஒரு படி அரிசி,108 வேன்...(இதுவும் வெள்ளை வேன் தான்!ஆனால் நல்ல வேன்)போன்றவை தமிழகத்துக்கு நன்மையே.

சரி! உங்களுக்கு மிக்சி ப்ளாக் வேணுமா?க்ரைண்டர் ப்ளாக் வேணுமா:)

ராஜ நடராஜன் said...

//அரசியலுக்கு ஆப்பு.. கலைஞருக்கு காப்பா?//

அஸ்க்கு!புஸ்க்கு!கலைஞர் தொலைக்காட்சிக்கும் எனக்கும் சம்பந்தேமேயில்லைன்னு அறிக்கை விட்டு ரொம்ப நாளாச்சு.

ஆப்பெல்லாம் வருதுன்னு தெரிஞ்சா தி.மு.கங்கிற பேரையே இன்னைக்குத்தான் கேள்விப்படுறேன்னு உல்ட்டாவானாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.

ஆப்புமில்லாம காப்புமில்லாம பாதுகாப்பு அவருக்கு கைவந்த கலையாக்கும்!

ராஜ நடராஜன் said...

சிபி!இப்பத்தான் பதிவர் பாரத்..பாரதி விஜயகாந்த் கோவையில் ஜெவுடன் ஒரே மேடையில் பேசாதது ஏன் என்று சிபிஐ விசாரணை தேவை என்றார்.

நான் சிபியைக் கூப்பிட்டாலே விசாரணை செய்துவிடுவார்ன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்:)

ஹேமா said...

அட...அட என்னா அலசல்.பதிவும் பின்னூட்டங்களும் நல்லாவே பிரிச்சுப் பிச்செடுக்குது ரெண்டு பேரையும்.

"ந"னவும் ”நி“னவும் கவனமா இருங்கோ.இரண்டு "க"வும் கக்கா வில்லன்கள் !

ராஜ நடராஜன் said...

//அட...அட என்னா அலசல்.பதிவும் பின்னூட்டங்களும் நல்லாவே பிரிச்சுப் பிச்செடுக்குது ரெண்டு பேரையும்.

"ந"னவும் ”நி“னவும் கவனமா இருங்கோ.இரண்டு "க"வும் கக்கா வில்லன்கள் !//

ஹே:) பிச்செடுக்குதுங்கறது சரி.
அதென்ன கக்கா வில்லன்கள்?

ஓ!ரெண்டு கக சேர்ந்தா அப்படித்தான் உச்சரிப்பு வருதுல்ல:)

க க படைபல வீரம்
ந நி தனிப்படை வீரம்.

Chitra said...

வித்தியாசமான சிந்தனையும் ஒப்பீடும். ம்ம்ம்ம்......

ராஜ நடராஜன் said...

//வித்தியாசமான சிந்தனையும் ஒப்பீடும். ம்ம்ம்ம்......//

இந்த முறை நன்றி மட்டும்.பக்கத்துக் கடைல அனல் பறக்குது என்னன்னு பார்த்துட்டு வாரேன்:)

சக்தி கல்வி மையம் said...

தமிழகத்தைப் போலவே, லிபியாவிலும் தனிமனித, குடும்ப அரசியலே முதன்மை பெறுகிறது.

நண்பன் said...

ippadiththan avarum aaramba kalaththil aavesamaga eluthinar
thangali nilai pinnalil eppadiyo? parkkalam.

Unknown said...

ஆஹா...

ஜீவன்சிவம் said...

கடாபியும் கருணாநிதியும் ஒருவருக்கொருவர் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல. சரியான ஒப்பு நோக்கல்

ஜோதிஜி said...

பட்டாபட்டியை இந்த பக்கம் கொஞ்சம் நாடு கடத்துங்ளேன். பயபுள்ள ரவுசு தாங்கமுடியல.

நசரேயன் said...

இசை அமைப்பாளர் பிடிக்கனுமா ?

ராஜ நடராஜன் said...

//தமிழகத்தைப் போலவே, லிபியாவிலும் தனிமனித, குடும்ப அரசியலே முதன்மை பெறுகிறது.//

வாங்க கருன்!கடைகளெல்லாம் சுத்திகிட்டு தாமதமா வந்திருக்கீங்க:)

தனி மனித,குடும்ப அரசியலை விட
மக்களுக்கு கருணை காட்டமாட்டேன் என்று கடாபி சொன்னதும்,ஆட்சியில் இருந்தும் ஈழப்போரின் திசையை மாற்ற இயலாமல் கருணாநிதி உண்ணாவிரத முகமூடி போட்டுக்கொண்டு கருணையற்றுப் போனதும் முக்கியமானது.

ராஜ நடராஜன் said...

//ippadiththan avarum aaramba kalaththil aavesamaga eluthinar
thangali nilai pinnalil eppadiyo? parkkalam.//

வாங்க நண்பன்!இந்த மாதிரி தங்கிலீஷில் பின்னூட்டம் போட்டால் பெரும்பாலும் நான் கடந்து விடுவதுண்டு.சிலருக்கு தமிழில் தட்டச்சும் சந்தர்ப்பங்கள் இருக்காது என்ற புரிதல் இப்போது எனக்கு வந்திருக்கிறது.

எனக்கு ஆவேசமெல்லாம் போதாதுங்க.நான் ஒரு மிதவாதி.மிதவாதின்னா விஜயகாந்த் ஸ்டைல் மிதவாதின்னு எடுத்துக்காதீங்க;)

தி.மு.க ,கருணாநிதி குறித்த எல்லோருக்கும் இருக்கும் கோபத்தின் வெளிப்பாடுகளே என்னுடையதும்.

கருணாநிதியின் அரசியல் ஆண்டுகளுடன் அதுவும் துவக்க கால அரசியலுடன் என்னை ஒப்பிடுறீங்களே.நியாயமா:)

ராஜ நடராஜன் said...

//ஆஹா...//

ஒற்றை வரியா:)

கொஞ்ச நேரம் முன்னாடி உங்க கடைலதான் உட்கார்ந்துகிட்டுருந்தேன்.சூடான விவாதம் தனி மனிதக் கோபங்களாக மாறிய மாதிரி உணர்ந்தேன்.

உங்கள் இடுகையின் கரு என்னவென்று கழக கண்மணிகளுக்குப் புரிகிறதா அல்லது நாங்கள் இப்படித்தான்ப்பா என்ற கட்சிப்பாசமா என்று தெரியவில்லை:(

ராஜ நடராஜன் said...

//கடாபியும் கருணாநிதியும் ஒருவருக்கொருவர் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல. சரியான ஒப்பு நோக்கல்//

வாங்க ஜீவன்சிவம்!இருவருமே பிடிவாதக்காரர்கள்தான் இல்ல?இருவருமே என்ன ஆனாலும் சரியென்ற வில்லத்தனம், முரட்டுத்தனம் அவர்களுக்குள் ஒளிந்து இருக்கிறது.

இருவருக்குமே நமக்கு கிடைத்த அடிமைகள் மிக மிக நல்லவர்கள் என்ற தெம்புதான் இதுவரை அவர்களை அரியணைக் கட்டிலில் உட்கார வைத்திருக்கிறது.

அமெரிக்காவுடன் உள் பேச்சு வார்த்தை மூலமாகவோ,புரட்சியாளர்கள் நெருங்குவதாலோ கடாபியின் நாட்கள் எண்ணப்படுகின்றன.

மே மாதம் 13ம் தேதி முடிவைப் பொறுத்து கருணாநிதியின் அரசியல் நாட்கள் எண்ணப்படுமா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

ராஜ நடராஜன் said...

//இசை அமைப்பாளர் பிடிக்கனுமா ?//

பிடிக்கனுமாவா?

இசை:நசர்ஜி:)

ராஜ நடராஜன் said...

//பட்டாபட்டியை இந்த பக்கம் கொஞ்சம் நாடு கடத்துங்ளேன். பயபுள்ள ரவுசு தாங்கமுடியல.//

ஜோதிஜி! எதுக்கு பட்டாபட்டியை நாடுகடத்தனும்?

இதுக்கா...

கடாபிக்கு மண்டை பூரா முடி..
கலீஞருக்கு மண்டை பூரா கிலி..