Followers

Saturday, April 30, 2011

தமிழக முதல்வரே!பகுத்தறிவோடுதான் அறிக்கை விடுறீங்களா?

என்னமோ செய்யுங்க நீங்களாச்சு மக்களாச்சுன்னு நாம் ஒதுங்க நினைத்தாலும் தமிழக முதல்வர் கருணாநிதி எங்கப்பன் குதிருக்குள்ளங்கிற மாதிரியே அறிக்கை விட்டு மனுசனை டென்சன் ஏத்துறார்:.ரஜனி,கமல் கேட்கவேண்டிய கேள்வியை நமக்கெதுக்கு வம்புன்னு அவங்க ஒதுங்கிறதால  காசு கொடுக்காத அப்பாவி வக்கீலா நான் கேட்கிறேன்:)

தமிழக திரைப்படத்துறையில் தனது குடும்பத்தைச் சார்ந்தவர்களின் ஆதிக்கம் தாங்க முடியலைன்னு திரைப்படத்துறையினர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கும் போது என்னோட குடும்பம் மட்டுமா திரைப்படத்துறையில் இருக்கிறது,ரஜனி,கமல் போன்றவர்களின் குடும்பங்கள் அதே தொழிலில் இல்லையா என எதிர்க் கேள்வி போடுகிறார் என NDTV சொல்கிறது.NDTV  ஈழப் படுகொலையைப் பற்றி கவலைப்படுகிறதோ இல்லையோ சர்தார் மாணவன் ஆஸ்திரேலியாவில் அடி வாங்கிட்டான், வெளியுறவுத்துறை கண்டனம் என்பதையோ கருணாநிதி குடும்பத்தைப் பற்றி பொது அறிவு வளர்ப்பதையோ தவற விடுவதேயில்லை. சரி!நம்ம முதல்வர் அறிக்கைக்கு வருவோம்.

எனது நண்பர்களான எம்.ஜி.ஆர்,சிவாஜி உள்பட இதுவரை 75 படங்களுக்கு மேல் நான் கதை வசனம் எழுதியிருக்கிறேன்.நடிகர்களுடனும்,திரைப்பட தொழில் நுட்பக் கலைஞர்களுடனும் நட்புறவோடு பழகி வருகிறேன் என்பது அனைவரும் அறிந்ததே. 

கருணாநிதியை விமர்சிக்கும் ஒரு பத்திரிகைக்கு பதில் அளிக்கும் போதே  எனது குடும்பத்தினர் வளர்ச்சியைப் பொறுக்க இயலாததால் இந்த மாதிரி விமர்சனத்தை வைக்கிறார்கள் என்கிறார்.

கருணாநிதியின் பேரன்கள் உதயநிதி ஸ்டாலின்,தயாநிதி அழகிரி மற்றும் பேரன்கள் மாறன் சகோதரர்கள் பல படங்களைத் தயாரித்துள்ளது அனைவரும் அறிந்துள்ளதே.எனது பேரன்கள் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியிருப்பது எப்படி சாத்தியமென்று கேள்வி கேட்கிறார்கள்.ஏ.வி.மெய்யப்பன் மகன்களும்,பேரன்களும் படத் தயாரிப்பில் இருப்பதை இவர்கள் அறியவில்லையென்பதோடு இவர்களைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் மகன்கள் பிரபுவும் ராம்குமாரும் நடிப்புத்துறையிலும் தயாரிப்பிலும் ஈடுபட்டார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் ரஜனிகாந்தின் மகள் சௌந்தர்யாவும் ஒரு தயாரிப்பாளரே என்பதோடு கமல் ஹாசனின் மகள் ஸ்ருதியும் ஒரு நடிகை என்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் பல கோடி கணக்கில் சலுகைகள் தி.மு.க அரசு அளித்திருக்கும் போது எனது மகன்களும் பேரன்களும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடுவதால் என்ன இதயம் நோகுகிறது?

எனது குடும்பத்தை சார்ந்தவர்கள் அரசியலிலோ திரைப்படத்துறையிலோ நுழையும் போது இதை ஏன் குடும்ப அரசியல் என்று கூறப்படுகிறது?

பேசி முடிச்சிட்டீங்களா முதல்வரே! ஒவ்வொன்றாக அலசுவோம்.

ரஜனி,கமல ஹாசனின் துவக்க காலம் முதல் உழைப்புக்கான காலம் எத்தனை வருடங்கள் துவங்கி எத்தனை வருடங்கள் கழித்து அவர்களின் பெயர்கள் தமிழ் திரைப்படத்துறையில் வலம் வந்தன?

இது வரை படங்களுக்கு கதை வசனம் மட்டுமே எழுதி சினிமாத் துறையில் படம் தயாரிக்கும் நிலைக்கு உயர்ந்தவர்கள் யாராவது பஞ்சு அருணாசலம் மாதிரி ஒரு சிலர் தவிர யாரால் உயரும் சாத்தியமிருக்கிறது திரைப்படத்துறையில்?

மெய்யப்பன் மகன்களும்,பேரன்களும் திரைப்படத் துறை தவிர்த்து எத்தனை துறைகளில் தங்கள் கால் பதித்துள்ளார்கள்?

ரஜனியின் ஒரு படத்துக்கான வருமானம் எவ்வளவு என்பது திரைப்படத்துறை மற்றும் நீங்கள் அறிந்த ஒன்று எனும் போது ஏன் அவர் மகளால் திரைப்படம் தயாரிக்க இயலாது?

இங்கேதான் நீங்கள் மாட்டிக்கொள்கிறீர்கள் முதல்வரே!

உங்கள் பேரப் பிள்ளைகள் திரைப்படம் தயாரிக்குமளவுக்கு எந்த துறையில் அவரவர் பெற்றோர்களின் வருமானம் என்று தமிழக மக்கள் யாருக்காவது தெரியுமா?

கமல ஹாசன் மகள் திரைப்படத்தில் நடிக்கிறார் என்றால் அவரது திறமையினால் மட்டுமே முன்னேற இயலும்.இல்லையென்றால் எம்.ஜி.ஆர் க்கு டூப்ளிகேட் முத்து கதைதான்.

 உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அரசியலில்,திரைப்படத்துறையில், தொலைக் காட்சித் துறையில்,பத்திரிகைத் துறையில், மந்திரி பதவிகளில் என ஆக்டோபஸாக தனது கரங்களை விரிப்பதற்கு, உயர்வதற்கு உங்கள் முதல்வர் பதவி என்ற அதிகாரம் காரணமாக இருக்கின்றது என்பதனாலேயே விமர்சனங்கள் எழுகின்றன என்பதோடு அதுவே உண்மை என்பதை தமிழக வரலாறு பதிவு செய்திருக்கிறது என்பதை பெரியார், அண்ணா போன்றவர்களுடன் பழகிய உங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள்.

வடநாட்டுப் பத்திரிகைகள் உங்களை விழிக்கும் போது aging patriarch என்றே குறிப்பிடுகிறது.ஆங்கிலப் படங்களை அவ்வப்போது பார்த்து தொலைத்தாலும் உங்களை நினைவு படுத்துவது காட் பாதர் டான் விட்டோ கார்லியோன்(Don Vito Corleone).அந்தப் படத்தின் கதையை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால்

The aging patriarch of an organized crime dynasty transfers control of his clandestine empire to his son.

இயக்குநர் மணி ரத்னம் நாயகன் படத்தின் தமிழகமறிந்த வசனம்....

நீஙக நல்லவரா?கெட்டவரா?

38 comments:

பாரத்... பாரதி... said...

ஆகா... அலசி ஆராய்ந்து இருக்கிறீர்கள்...

பாரத்... பாரதி... said...

பஞ்சு அருணாச்சலத்திற்கு சாதகமான சூழ்நிலைமை இல்லை என்பது தான் உண்மை. அவரும் சிரமதசையில் தான் வாழ்ந்து வருகிறார்.

பாரத்... பாரதி... said...

//இல்லையென்றால் எம்.ஜி.ஆர் க்கு டூப்ளிகேட் முத்து கதைதான்.//

இந்த கதையெல்லாம் எங்களுக்கு தெரியாதே? விளக்க முடியுமா?

பாரத்... பாரதி... said...

//நீஙக நல்லவரா?கெட்டவரா?//

கலைஞர் நல்லவர் மாதிரி கெட்டவர்...
கெட்டவர் மாதிரி நல்லவர்...
(புரியலைனா ரொம்ப சந்தோஷம்)

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

கலினர் நல்லா சமாளிக்கிறார் ன்னு அவர் நெனைப்பு..

ராஜ நடராஜன் said...

//ஆகா... அலசி ஆராய்ந்து இருக்கிறீர்கள்...//

பாரத்...பாரதி!சூடா வ்டை சாப்பிட்டு போணி செஞ்சதுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//பஞ்சு அருணாச்சலத்திற்கு சாதகமான சூழ்நிலைமை இல்லை என்பது தான் உண்மை. அவரும் சிரமதசையில் தான் வாழ்ந்து வருகிறார்.//

இது வேறயா?அய்யோ பாவமே!கேட்டீங்களா முதல்வரே!

ராஜ நடராஜன் said...

////இல்லையென்றால் எம்.ஜி.ஆர் க்கு டூப்ளிகேட் முத்து கதைதான்.//

இந்த கதையெல்லாம் எங்களுக்கு தெரியாதே? விளக்க முடியுமா?//

இப்ப கலைஞர் தொலைக்காட்சியிலேயே அந்த படங்களைப் போட மாட்டாங்களே!

பழைய படங்கள் டி.வி.டி பார்ப்பதில்லையா நீங்கள்:)

கதை என்னன்னா நண்பர்ன்னு சொல்கிறாரே எம்.ஜி.ஆர்....அவருக்கு செக் வைக்கணுமுன்னு சினிமா கதாநாயகனா அதே எம்.ஜி.ஆர் ஸ்டைல்ல கருணாநிதியால் கொண்டு வரப்பட்டவர் மூத்த மூத்த மகன் மு.க.முத்து.இந்த விபரங்களையெல்லாம் தேடனுமுன்னா உண்மைத் தமிழன் கடைக்குப் போனால்தான் வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கும்:)

ராஜ நடராஜன் said...

////நீஙக நல்லவரா?கெட்டவரா?//

கலைஞர் நல்லவர் மாதிரி கெட்டவர்...
கெட்டவர் மாதிரி நல்லவர்...
(புரியலைனா ரொம்ப சந்தோஷம்)//

பஞ்ச் டயலாக்குக்கு உதவும் போல தெரியுதே.காப்பிரைட் உங்களுக்குத்தான்:)

ராஜ நடராஜன் said...

//கலினர் நல்லா சமாளிக்கிறார் ன்னு அவர் நெனைப்பு..//

அவரது சமீப காலத்து கருத்துக்களை பார்த்தா ஏதாவது கன்வின்ஸ் செய்யற மாதிரி இருக்குதா?

இந்த மாதிரி அறிக்கையெல்லாம் விடுங்கன்னு யாராவது கேட்டாங்களா?ஏதாவது அவசியமா சொல்லனுமின்னா இருக்கவே இருக்கார் வீரமணி! திருவாய் மொழிந்தா தானும் தப்பிச்ச மாதிரி இருக்கும்.இது அவரது சொந்தக் கருத்துன்னு சொல்லி தப்பிக்கவும் வழி கிடைக்குமல்லவா?

மணிப்பக்கம் said...

கருணாநிதி பேசியதை பழைய கிழங்கட்டைகள்தான் முக்கியமாக நினைத்து பகுத்தறிந்து கொண்டிருப்பார்கள், நீங்களுமா?
அவர் இன்னும் ஒட்டு மொத்த தமிழனையும் முட்டாள் என்றே நம்புகிறார்! பூனை கண்ணை மூடினால் ....? அதான் கருணாநிதி!

வானம்பாடிகள் said...

டான் கார்லியோனை இந்தாளுகூட ஒப்பிட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

////கருணாநிதி பேசியதை பழைய கிழங்கட்டைகள்தான் முக்கியமாக நினைத்து பகுத்தறிந்து கொண்டிருப்பார்கள், நீங்களுமா?
அவர் இன்னும் ஒட்டு மொத்த தமிழனையும் முட்டாள் என்றே நம்புகிறார்! பூனை கண்ணை மூடினால் ....? அதான் கருணாநிதி!//

வாங்க மணிப்பக்கம்!நான் நேற்று NDTV யில் மேய்ந்ததில் உணர்ந்தது பதிவு.இன்று கலைஞரின் தமிழ் அறிக்கையை வாசிக்கும் போது இரண்டு காரணங்களுக்காக இந்த அறிக்கையை விடுகிறார் என்று புரிகிறது.

முதலாவதாக... சிலர் எனக்கு நண்பர்களாக இருந்து கொண்டே நச்சுக்கணைகள் பாய்ச்சுவதை நாட்டுக்கு உணர்த்தி பகுத்தாய்ந்து; தெளிந்திடுக எனும் வேண்டுகோளோடு இந்த விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

இரண்டாவதாக... திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் ஒரு மூதாட்டி "கருணாநிதியின் பேரன் பேத்திகள் எல்லாம் சினிமா படம் எடுக்கிறார்களே, எப்படி" என்று கேட்டதாக சொல்கிறார்கள்.

இந்த அறிக்கை நச்சுக்கணை நண்பருக்கா அல்லது ரெட்டியார் சத்திரம் மூதாட்டிக்கு பதிலா என்று தெரியாம பதிவு போட்டிட்டேன்:)

ராஜ நடராஜன் said...

//டான் கார்லியோனை இந்தாளுகூட ஒப்பிட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.//

ஏன் நீங்க மார்லன் பிராண்டோவின் ரசிகராக்கும்:)

எனக்கென்னமோ God fatherக்கும் Made fatherக்கும் அதிக ஒற்றுமையிருக்கிற மாதிரி ஒரு பீலிங்:)

ஆ.ஞானசேகரன் said...

//உங்கள் பேரப் பிள்ளைகள் திரைப்படம் தயாரிக்குமளவுக்கு எந்த துறையில் அவரவர் பெற்றோர்களின் வருமானம் என்று தமிழக மக்கள் யாருக்காவது தெரியுமா?//

இப்படியெல்லாம் கேட்டா நான் அழுதுடுவேன்...ஹ்ங்ங்ங்....

ஆ.ஞானசேகரன் said...

//நீஙக நல்லவரா?கெட்டவரா? //

இந்த கேள்விகெல்லாம் பதில் சொல்லமுடியாது சரியா நண்பா....

ராஜ நடராஜன் said...

////உங்கள் பேரப் பிள்ளைகள் திரைப்படம் தயாரிக்குமளவுக்கு எந்த துறையில் அவரவர் பெற்றோர்களின் வருமானம் என்று தமிழக மக்கள் யாருக்காவது தெரியுமா?//

இப்படியெல்லாம் கேட்டா நான் அழுதுடுவேன்...ஹ்ங்ங்ங்....//

இந்தக் குரலை எங்கோ கேட்டமாதிரி இருக்குதே?ஓ!தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் வடிவேலு இல்ல:)

ஞானசேகரன்!நம்மளும்தான் எத்தனை கதை வசனம் எழுதறோம்.ஒன்னும் பைசா தேறமாட்டேங்குதே!பேசாம அரசியலுக்குப் போனாலாவது திரைப்படம் தயாரிக்க வழி பிறக்கும்:)

ராஜ நடராஜன் said...

////நீஙக நல்லவரா?கெட்டவரா? //

இந்த கேள்விகெல்லாம் பதில் சொல்லமுடியாது சரியா நண்பா....//

அய்யோ!அய்யோ!நீங்க என்ன நேற்று உண்மைத் தமிழன் பரிட்சையெழுதின மாதிரி கேள்விக்கு பதில் தெரியலைங்கிறீங்க?

கேள்வியிலேயே பதிலும் இருக்குறதே!

அப்ப நல்லவர்...இப்ப கெட்டவர்:)

Jayadev Das said...

கருணாநிதி பண்ணுவது அட்டூழியம் என்பது அவருக்கே தெரிந்திருந்தாலும், அவர் போடும் பிக்காலித் தனமான பதில் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நான் முழித்ததுண்டு. இன்று நீங்கள் கிடுக்கிப் பிடியாக மஞ்சள் துண்டை மடக்கி விட்டீர்ர்கள். சூப்பர்.

ராஜ நடராஜன் said...

//கருணாநிதி பண்ணுவது அட்டூழியம் என்பது அவருக்கே தெரிந்திருந்தாலும், அவர் போடும் பிக்காலித் தனமான பதில் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நான் முழித்ததுண்டு. இன்று நீங்கள் கிடுக்கிப் பிடியாக மஞ்சள் துண்டை மடக்கி விட்டீர்ர்கள். சூப்பர்.//

வாங்க ஜெயதேவ்!சொல்வதிலே ஒரு லாஜிக் வேண்டாம்?AVM,ரஜனி குடும்பம் படம் தயாரிப்பதைக்கூடவா எடுத்துக்காட்டு சொல்வது!!!

இருக்கிறவங்களையெல்லாம் மாங்கா மடையன்னு நினைச்சுகிட்டே அறிக்கை விடுறாருங்க.63 சீட்டு இழுபறியில காங்கிரஸ் ஜெயிச்ச அடுத்த நிமிடம் கூட்டணி அறிக்கை விட்டாரு பாருங்க அப்ப இருந்து இவர் கயிறை பாம்பா திரிக்கும் வல்லமை கொண்டவர்ன்னு தெரிஞ்சு போச்சு.பகுத்தறிவை அவர் மறந்துட்டாலும் நாம சிந்திப்பதால ஆதங்கத்தை கொட்ட வேண்டியதா இருக்குது:(

தவறு said...

ஆமா ராஜநட உங்க பதிவு கருணாநிதிக்கு போவுமா...அப்படின்னா நாளைக்கு காத்தால இதுக்கு ஒரு அறிக்கை தயார்பண்ணிருவாரு...அவரு யாரு முதல்வருல்ல...

அஹோரி said...

கருணாநிதி எத பேசுனாலும் மெய்சிலிர்க்கும் அரசாங்க ஊழியனியன் மகன்கள் திருந்தும் நாள் .... தமிழனின் பொன்னாள். நாலறிவு ஜென்மங்கள் எப்போது திருந்தும் ?

karuthu said...

தேடி படிச்சாலும் படிச்சாலும் உருப்படியா நீங்க எந்த பாயிண்ட்டும் சொல்லலியே தலீவா

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

கிழவன் சொல்றது சரியாத்தான் இருக்கு. கமல், ரஜினி பொண்ணுங்களுக்கு அவனுங்க பணம் இருக்கிற மாதிரி இவனுங்களுக்கு இவனுங்க பணம் இருக்கு. ஒரு படம் எடுக்க 300 கோடியா வேணும். அல்லது ஒரே நாள்ல பேரனுங்க 3000 படம் எடுத்துட்டாங்களா? இல்ல சன் டிவி தான் முப்பது நாளில் வளர்ந்துருச்சா? லூசு மாதிரி பேசாமல் பொழப்ப பாருங்கய்யா

கந்தசாமி. said...

///தமிழக திரைப்படத்துறையில் தனது குடும்பத்தைச் சார்ந்தவர்களின் ஆதிக்கம் தாங்க முடியலைன்னு திரைப்படத்துறையினர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கும் போது /// நிதர்சனமான உண்மை நண்பா

ராஜ நடராஜன் said...

//ஆமா ராஜநட உங்க பதிவு கருணாநிதிக்கு போவுமா...அப்படின்னா நாளைக்கு காத்தால இதுக்கு ஒரு அறிக்கை தயார்பண்ணிருவாரு...அவரு யாரு முதல்வருல்ல...//

நாம சொல்றதையே ஜெயலலிதா சொல்லியிருக்கட்டும்.இந்நேரம் அறிக்கை பிச்சுகிட்டு வரும்.பதிவு போனாலும் ஆச்சரியப்படுறதக்கில்லை.கழக கண்மணிகளோ,புலனாய்வுத் துறையோ அரசல் புரசலா போய் சேர்த்தாலும் சேர்த்திடுவாங்க:)

ராஜ நடராஜன் said...

//கருணாநிதி எத பேசுனாலும் மெய்சிலிர்க்கும் அரசாங்க ஊழியனியன் மகன்கள் திருந்தும் நாள் .... தமிழனின் பொன்னாள். நாலறிவு ஜென்மங்கள் எப்போது திருந்தும் ?//

சுயமாய் சிந்திங்கன்னு பதிவர்கள் எவ்வளவு சொல்லியும் பதிவுலக கண்மணிகளே திருந்தாது போது...ம்!
பெருமூச்சுதான் வருது.

ராஜ நடராஜன் said...

//தேடி படிச்சாலும் படிச்சாலும் உருப்படியா நீங்க எந்த பாயிண்ட்டும் சொல்லலியே தலீவா

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

கிழவன் சொல்றது சரியாத்தான் இருக்கு. கமல், ரஜினி பொண்ணுங்களுக்கு அவனுங்க பணம் இருக்கிற மாதிரி இவனுங்களுக்கு இவனுங்க பணம் இருக்கு. ஒரு படம் எடுக்க 300 கோடியா வேணும். அல்லது ஒரே நாள்ல பேரனுங்க 3000 படம் எடுத்துட்டாங்களா? இல்ல சன் டிவி தான் முப்பது நாளில் வளர்ந்துருச்சா? லூசு மாதிரி பேசாமல் பொழப்ப பாருங்கய்யா//


நீங்க என்ன PAC ல தி.மு.க,காங்கிரஸ்க்கு கையத் தூக்கிட்டு நேரா இங்கே பின்னூட்டம் போட வந்திட்டீங்களா தலீவா:)

இந்த மாதிரியெல்லாம் நீங்க கேட்பீங்கன்னுதான் காப்பி பேஸ்ட்ன்னு மக்கள் திட்டினாலும் அசராம உண்மைத்தமிழன் பதிவுகள் செய்து வைத்திருக்கிறார் சன் டி.வி வளர்ச்சி முதற்கொண்டு.

லூசு மாதிரி பேசாம பொழப்ப பார்க்கனுமின்னா ஸ்பெக்ட்ரம் வாழ்கன்னுதான் கோசம் போடனும்:)

ராஜ நடராஜன் said...

/////தமிழக திரைப்படத்துறையில் தனது குடும்பத்தைச் சார்ந்தவர்களின் ஆதிக்கம் தாங்க முடியலைன்னு திரைப்படத்துறையினர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கும் போது /// நிதர்சனமான உண்மை நண்பா//

நீங்க இப்படி சொல்றீங்க!உங்களுக்கு முன்னாடி க்யூல நின்னவர் சொல்றதக் கேளுங்க:)

karuthu said...

எந்த தொழிலும் அப்படித்தானே எந்த தொழில் நியாயமாக வளர்ந்தது? டாடா பிர்லா அம்பானி உள்பட

சன்டிவி வளர்ச்சியை மட்டும் பேசுவது சந்தர்ப்பவாதம்...

ராஜ நடராஜன் said...

//எந்த தொழிலும் அப்படித்தானே எந்த தொழில் நியாயமாக வளர்ந்தது? டாடா பிர்லா அம்பானி உள்பட

சன்டிவி வளர்ச்சியை மட்டும் பேசுவது சந்தர்ப்பவாதம்...//

மறுபடியும் வந்திடீங்களா!குறுகிய காலத்தில் வியாபாரத்தில் ethics இல்லாமல் வளர்ந்தது அம்பானி குழு என்று சொல்லலாம்.

அம்பானி குழு மாதிரியே குறுகிய காலத்தில் புதிய வியாபாரத்தில் காலடி எடுத்து வைத்து தங்களை நிலைநாட்டிக்கொண்டது சன் டி.வி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.ஆனால் அதற்குள் Monopoly யை உருவாக்குவதற்கு அரசியல் அதிகாரம் என்ற ஆயுதம் உதவிகரமாக இருந்தது என்பதாலேயே டாடா முதற்கொண்டு தடம் புரள வேண்டிய அவசியமேற்பட்டது.

எல்லோருமே ஒரு துறையை மட்டுமே எடுத்து அதில் தங்களைப் பலப்படுத்திக் கொண்டார்கள் சன்,கலைஞர் குழுமம் தவிர.The core issue of 2G is misuse of power.

சந்தர்ப்ப வாதம் என்றால் நீங்கள் கோபித்துக்கொள்ள வேண்டியது NDTV செய்திகளை:)

ஈரோடு கதிர் said...

அப்படியே அந்த ஹெட்லைன்ஸ் பேட்டியும் படிச்சு ஜென்ம சாபல்யம் அடைய ஆசிகள்!

ராஜ நடராஜன் said...

//அப்படியே அந்த ஹெட்லைன்ஸ் பேட்டியும் படிச்சு ஜென்ம சாபல்யம் அடைய ஆசிகள்!//

கதிர்!நீங்க எந்த ஹெட்லைன்ஸ் பேட்டிய படிக்க ஆசி அதுவும் ஜென்ம சாபல்யம் அடைய வாழ்த்துகிறீர்கள்?

ஆ.ராசா கூறும் Will reveal all later என்பதாய் இருந்தால் ஜென்ம சாபல்யம் முன்பே அடைந்து விட்டேன்:)

ராஜ நடராஜன் said...

கதிர்!நீங்க வத்தி வச்சதுல ஏற்கனவே பதிவர்கள் செய்தி கொண்டு வந்த ஹெட்லைன்ஸ் கருத்துக்கணிப்பு வீடியோவாக பார்க்க முடிந்தது.

புள்ள பிறக்கட்டும்!பேர் வைக்கலாம்:)

ஹைதர் அலி said...

அருமையான பதிவு

இபோதுதான் உங்களின் பதிவை பார்க்கிறேன்
இபோதுதான் தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுயிருக்கிறேன்

ராஜ நடராஜன் said...

//அருமையான பதிவு

இபோதுதான் உங்களின் பதிவை பார்க்கிறேன்
இபோதுதான் தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுயிருக்கிறேன்//

வாங்க!ஹைதர்!தமிழ் மணத்துல ஓட்டு போட்டது சரி!சட்டமன்றத் தேர்தலுக்கு யாருக்கு ஓட்டுப் போட்டீங்க? நான் யாரையும் வற்புறுத்தாமலே எனது கருத்து சார்ந்து என்னைச் சார்ந்த சிலர் அவர்கள் சுய புத்தியோடு 49 ஓ போட்டுட்டாங்க:)

ராஜ நடராஜன் said...

ஹைதர்!உங்க 7வது ஓட்டு வாசகர் பரிந்துரைக்கு கொண்டு வந்திருச்சு.நன்றி.

arunmullai said...

கவிஞர் கண்ணதாசனின் சிவகங்கைச்
சீமை வசனம்,'மண்டயோட்டில்
நடந்து இம்மண்டலத்தை ஆண்டவர்
பலர்,என்பதாகவரும்.
கலைஞர்அவர்கள், சம்பத்,கண்ண
தாசன், நெடுஞ்செழியன், அன்பழகன்
ஆகியோரின் மண்டையோட்டை மிதித்
கடந்ததுபோல் எம்ஜியார் மண்டை
ஓட்டில் நடக்கமுடியாததுமட்டுமல்ல,
வழுக்கியும் விட்டு விட்டது.

ராஜ நடராஜன் said...

//கவிஞர் கண்ணதாசனின் சிவகங்கைச்
சீமை வசனம்,'மண்டயோட்டில்
நடந்து இம்மண்டலத்தை ஆண்டவர்
பலர்,என்பதாகவரும்.
கலைஞர்அவர்கள், சம்பத்,கண்ண
தாசன், நெடுஞ்செழியன், அன்பழகன்
ஆகியோரின் மண்டையோட்டை மிதித்
கடந்ததுபோல் எம்ஜியார் மண்டை
ஓட்டில் நடக்கமுடியாததுமட்டுமல்ல,
வழுக்கியும் விட்டு விட்டது.//

நீங்க சிவகங்கை சீமை வசனம் கூட நினைவில் வைத்திருப்பவரா?ஆச்சரியமாக இருக்குது.

வித்தியாசமானதும்,யதார்த்தமான பின்னூட்டம் என நினைக்கிறேன்.