Followers

Friday, April 22, 2011

டைம்ஸ் பத்திரிகைக்கு நன்றி

இன்றைய பெரிய வெள்ளி தினத்தின் சோகத்தோடு கிறுஸ்தவர்களுக்கு இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை போல் உலக தமிழர்களுக்கும் மீண்டும் உயிர்த்தெழும் நம்பிக்கைகளாக உலகளாவிய பார்வையில் ஐ.நா மூவர் குழு அறிக்கை பற்றிய எதிர்பார்ப்பும் அதனோடு கூட டைம்ஸ் இதழின் 100 பேர் பட்டியலில் ராஜபக்சே பெயரும் இருந்தது கண்டு கோபப்பட்டு No ஓட்டுப் போட்டவர்களுக்கும்,விவாதத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் மொத்த தமிழர்களுக்கும் மகிழ்ச்சிகரமான செய்தியாக ராஜபக்சே 100 பேர் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார் என்ற செய்தி
சிறு கல்லை நாமும் தூக்கியெறிந்து நமது கோபத்தைக் காட்டியுள்ளோம் என்பதோடு வாக்கெடுப்பு முறையில் தவறான முறையையும் சுட்டிக்காட்டியதில் நமக்கான பங்காக டைம்ஸ் பத்திரிகையின் முடிவுக்கு நாமும் சிறு காரணம் என்பதில் மகிழ்ச்சியடைவோம்.

2008ம் வருடம் துவங்கி 2009 மே மாதம் 19ம் தேதி வரையிலும் தங்கள் உணர்வுகளைக் கொட்டித் தீர்த்த பல பதிவர்கள் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகளுக்கு அப்பாலும் அதற்கு பின்பும் மெல்ல மெல்ல நம்பிக்கையிழந்த உணர்வுகளை பதிவுலகில் தொடர்ந்து வலம் வருபவர்கள் உணர்வார்கள் என நினைக்கின்றேன்.தமிழகத்திலிருந்தும் புலம் பெயர்ந்தும் குரல் கொடுத்த கட்சி மற்றும் இயக்கம் சார்ந்தவர்களும் கூட அவரவர் ரிதத்திற்கு ஆடியதாலும் கூட சலிப்புத் தன்மை சிலருக்கு வந்திருக்கவும் கூடும்.இதனையெல்லாம் மீறி தமது உணர்வுகளை தொடர்ந்து ஊடகம் மூலமும்,பின் கள ராஜ தந்திரங்களுக்கு உழைத்தவர்களுக்கும்,பதிவுலகில் பதிவு செய்தும்  கூடவே மனதுக்குள் அடைகாத்த பதிவர்கள் அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.
 
தற்போதைய சூழல்கள் மீண்டும் ஒரு சாதக சூழலை நமக்கு உருவாக்குகிறது.எத்தனையோ பதிவுகள் போடுகிறோம். இடையிடையே ஈழ மக்கள் அக்கறை குறித்த கருத்துக்களையும் முன் வைப்போம்.பகிர்தலும், விவாதங்களும் மட்டுமே நம்மால் இயன்ற உணர்வு சார்ந்த உதவிகள் என்பதை நினைவில் கொள்வோம்.

விழித்துக் கொண்ட டைம்ஸ் பத்திரிகைக்கு பதிவுலகம் சார்பாக நமது நன்றியை தெரிவிப்போம்.இயன்றவர்கள் மீண்டுமொரு கடிதம் டைம்ஸ் பத்திரிகைக்கு அனுப்புவோம்.

மீண்டுமொரு முறை புதிதாய் பிறப்போம்.அனைவருக்கும் மீண்டும் நன்றி.

59 comments:

ஆறாம்பூதம் said...

வாக்கெடுப்பில் உள்ள தவறான முறையைச் சுட்டிக் காட்டியதும் பாரம்பரிய டைம் இதழின் டாப் 100 பட்டியலில் ஒரு போர்க் குற்றவாளியா என அதன் ஆசிரியர்குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பியதும் நிச்சயம் டைம் இதழாசிரியர் குழுவை சிந்திக்க வைத்திருக்கும். இதனோடு நாம் செய்ய வேண்டிய பணி தமிழ் இனப்படுகொலை குறித்தும் , தமிழர்கள் சிங்களர்களோடு ஏன் இணைந்து வாழ முடியாது என்பதற்கான காரணங்களையும் அதற்கு வலுச் சேர்க்கும் ஆதாரங்களையும் அவர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். நியாயத்தின் குரலை சார்பற்று எடுத்துச் சொல்ல ஊடகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும். இன்னொரு Channel 4 போல.

ராஜ நடராஜன் said...

வாங்க ஆறாம்பூதம்!நேற்று இரவு சானல் 4ன் கருத்துக்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்.உண்மைகளை வெளி உலகுக்கு கொண்டு வருவதில் சானல் 4ன் பங்கு அதிகம்.

டைம்ஸ் பத்திரிகைக்கு நமது கருத்துக்களை சேர்த்ததிலும்,தற்போதைய மூவர் குழு அறிக்கையின் முக்கியத்துவமும் ஆசிரியர் குழுவின் முடிவுக்கு காரணமென நினைக்கின்றேன்.

சீனா,ரஷ்யா,இந்தியாவின் பின்நகர்வுகள் தமிழருக்கு எதிராகவும் ராஜபக்சேவுக்கு சாதகமாகவும் இருக்கும் சூழல் இப்போதும்.முதலில் ஐ.நாவின் நிலைப்பாடு என்னவென்பதை அறிவோம்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

தம்பி கூர்மதியன் said...

//100 பேர் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்//

அப்படி போடு..

//விழித்துக் கொண்ட டைம்ஸ் பத்திரிகைக்கு பதிவுலகம் சார்பாக நமது நன்றியை தெரிவிப்போம்//

கண்டிப்பாக.. நன்றி டைம்ஸ்..

அருமையான விசயம் பகிர்ந்துகிட்டீங்க..

ஜோதிஜி said...

ராஜநடா ஆறாம்பூதம் தெகா ரதி போன்றவர்கள் இதைச் இப்போதே செய்யலாம். தொடர வேண்டுகின்றேன்.

ஹேமா said...

சனல் 4 மற்றும் டைம்ஸ் பத்திரிகைக்கு ஈழத்தமிழர்கள் நாம் மிகவும் நன்றியோடு கடமைப்பட்டிருக்கிறோம்.இதுவும் கடந்து போகும் என்கிற நம்பிக்கையோடு அகதி வாழ்வு தொடர்கிறது.நன்றி நடா !

பட்டாபட்டி.... said...

Finally.... Wow.

MANO நாஞ்சில் மனோ said...

// ராஜபக்சே 100 பேர் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார் ///

போடாங்............

MANO நாஞ்சில் மனோ said...

//தற்போதைய சூழல்கள் மீண்டும் ஒரு சாதக சூழலை நமக்கு உருவாக்குகிறது.எத்தனையோ பதிவுகள் போடுகிறோம். இடையிடையே ஈழ மக்கள் அக்கறை குறித்த கருத்துக்களையும் முன் வைப்போம்.பகிர்தலும், விவாதங்களும் மட்டுமே நம்மால் இயன்ற உணர்வு சார்ந்த உதவிகள் என்பதை நினைவில் கொள்வோம்.//

சரியாக சொன்னீர்கள் நடராஜன் கண்டிப்பாக செய்வோம்....

நிரூபன் said...

ராஜபக்சே 100 பேர் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார் என்ற செய்தி//

ஆஹா.. வாயில அள்ளிப் போடுங்கய்யா சர்க்கரையை.

நிரூபன் said...

விழித்துக் கொண்ட டைம்ஸ் பத்திரிகைக்கு பதிவுலகம் சார்பாக நமது நன்றியை தெரிவிப்போம்.இயன்றவர்கள் மீண்டுமொரு கடிதம் டைம்ஸ் பத்திரிகைக்கு அனுப்புவோம்.//

எல்லோருடைய உணர்விற்கும், ஆதரவிற்கும் நன்றிகள் சகோ.

ஆனா ஒரு விடயம், நம்ம சிகப்பு சால்வை மீது ஏகப்பட்ட கேஸ் பதிவாகியிருக்கு, போன மாதம் கூட அமெரிக்க லாயர் புரூஸ் பெயின் பல மில்லியன் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரி வழக்குத் தாக்கல் செய்திருந்தாரே, பதினைந்து நாட்களுக்குள் இவரைக் கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் பிடி விராந்து பிறப்பித்தார்களே,
ஆனால் சால்வை இப்பவும் பறந்து கொண்டு தானே இருக்கிறது.

யூர்கன் க்ருகியர் said...

Great step from Times.

நன்றிகள் பல "டைம்ஸ்" க்கு !!

Thekkikattan|தெகா said...

ராஜ நட,

நேற்று முழுக்க எனக்கு ஏதோ ஒரு மகிழ்சி மனசுக்குள்ளர, ஒரு கல்லை நாமும் நகர்த்தினதிலே பங்களிச்சிருக்கோமய்யான்னு. நீங்க சொன்ன மாதிரி 2008-09 நிகழ்வுகளுக்கு பிறகு என்னாத்தைன்னு மனசு விட்டு போனது என்னவோ உண்மைதான். ஆனால், நீங்க சொன்ன அந்த துளிர் மனசிக்குள்ளர இது போன்ற சிறு சிறு நிகழ்வுகளின் மூலமாக முளைவிடுங்கிறதை மறுக்க முடியாது.

இந்த பதிவில ரொம்ப பாசிடிவ் வைப் இருக்குவோய். You keep up your spirit, we will keep rocking man... :) goodus on people who sweat on this effort!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நான் 10 எதிர்ப்பு ஓட்டு போட்டேன்..சிங்களர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியலை...டைம்ஸ் இவனுக கள்ள ஓட்டை கண்டுபிடிச்சதுக்கும்,இவன் போன்ற அரக்கர்கள் தலைவர் இல்லை என உணர்ந்ததுக்கும் நன்றி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

முதலில் ஐ.நாவின் நிலைப்பாடு என்னவென்பதை அறிவோம்.//
இந்தியாவிற்காகத்தான் ஐநா பம்முகிறது என்பது என் சந்தேகம்.காங்கிரஸ்க்கு பல மாநிலங்களிலும் தோல்வி முகம் காட்டினால் கொஞ்சம் நடுநிலையாய் நடக்குமோ என்னவோ

ஆர்.கே.சதீஷ்குமார் said...

டைம்ஸ் பற்றி தவறாக நினைத்தேன்..இறுதியில் தங்கள் நடுநிலையை காட்டிவிட்டார்கள்

ராஜ நடராஜன் said...

வாங்க உணர்ச்சிக் கவிஞர் கூர்மதியன்!

பின்னூட்ட மகிழ்ச்சிக்கு நன்றி.

அப்படியே இது சார்ந்த இன்னுமொரு கவிதை சொல்லுங்க பார்க்கலாம்.

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!எனது பங்காக மீண்டும் டைம்ஸ் தளத்தில் எனது கருத்துரையை பதிவு செய்கிறேன்.நன்றி.

Rathi said...

//நான் 10 எதிர்ப்பு ஓட்டு போட்டேன்..சிங்களர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியலை//

சதீஸ்குமார், இப்படித்தான் ஐ.நாவின் மூன்று பேர் கொண்ட குழுவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் விவரங்களை தெரிவியுங்கள் என்று பெரும்பாலும் இளையோரால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளில் எம்மவர்கள் தங்கள் கதைகளை ஆங்கிலத்தில் எழுதியனுப்பினார்கள். இதைப்பார்த்த சிங்களர்களுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஒரே கனனனியில் இருந்தே புலிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று பல கடிதங்களை அனுப்பி மாட்டிக்கொண்டதாக செய்தியில் சொன்னார்கள்.

இதுக்கெல்லாம் சோர்ந்து போகாதீங்க

ராஜ நடராஜன் said...

ஹேமா!நீங்கள் அனைவரும் இழந்தவைகள் மிக அதிகம்:(

நான் முன்பே சொல்லியிருக்கிறேன்.நமக்கு நீதி வேண்டிப் போராட மூன்று களங்களாக தமிழ் தேசிய அமைப்புடனான மண்ணின் மக்களின் குரல்,புலம்பெயர்ந்த தமிழர்கள்,இந்திய தமிழர்கள் என்ற இணைப்புக்கான பாலம் மட்டும் அமைந்து விட்டால் போதும் மனித உரிமை அமைப்புகள்,மற்றும் ஏனைய நாடுகளின் உதவியோடு ஏதாவது ஒரு தீர்வுக்கான வழியைக் கண்டு பிடித்து விடலாம்.

சிலர் புலம் பெயர்ந்த நாடுகளின் அகதி வாழ்வு சுகம் என்ற விமர்சனக்கண்ணோடு பார்ப்பார்கள்.பாலஸ்தீனிய அகதிகள் சிலருடன் பணி செய்ததால் அகதி என்ற சொல்லின் தாக்கத்தை நான் அறிவேன்.

இதுவும் கடந்து போகுமென்றாலும் ஐ.நா சார்ந்த பிரச்சினை என்பதாலும்,மனித உரிமை அமைப்புகள் இதனை கூர்ந்து கவனித்து வருவதாலும் எதிர்காலத்தில் காய்நகர்த்தும் உலக அரசியலில் நன்மைகளும் விழையக்கூடுமென்று நம்புவோம்.நன்றி.

Rathi said...

Times இன் இந்த முடிவுக்கு வேறேதோ காரணங்கள் இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

அது போக உண்மையிலேயே இதில் பங்கெடுத்த எல்லா தமிழர்களுக்கும் நன்றிகள்.

இதேபோல் எல்லா ஊடகங்களுக்கும் சர்வதேச ரீதியில் எழுதி எங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். குறிப்பா இந்த ஐ. நா. அறிக்கை, போர்க்குற்றங்கள் சம்பந்தமாக.

2009 May த்திற்குப் பிறகு கனேடிய ஊடகத்துறையினர் சொன்னார்களாம் ஊடகங்களை எப்படி கையாள்வதென்று மிக குறுகிய காலத்தில் உங்கள் மக்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிரீர்கள் என்று. இன்று இதையேதான் Al Jazeera - English said, "Tamils are winning the media war" என்று சொல்கிறது.

இதுவும் முக்கியம் மக்களே விட்டுடாதீங்க.

ராஜ நடராஜன் said...

பட்டு!கே.ஆர்.பி.செந்தில்,நீங்க,ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் பதிவுகள் மூலம் பலருக்கும் டைம்ஸ் வாக்கெடுப்பை பதிவு மூலமாக கொண்டு சேர்த்ததில் பெரும் பங்களிப்பு உண்டு.

நாம் வெறும் கும்மிகள் என்று இல்லாமல் நமது குரல்களும் டைம்ஸ் வரை கேட்கப்பட்டதில் நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

Really a good vow!Thanks.

ராஜ நடராஜன் said...

மனோ!டீ,போண்டா விற்றுகிட்டே ஆதரவு குரலுக்கும் நன்றி:)

நமது குரல்களும் கேட்கப்படுகின்றன என்பதில் நம்பிக்கை கொள்வோம்.

நீங்களும் அடிச்சு ஆடுங்க.

ராஜ நடராஜன் said...

சகோ!நிருபன்!சர்க்கரை நாங்கதான் உங்களுக்கு கொட்ட வேண்டும்.

புருஸ் பெயின் அமெரிக்க சட்டதிட்டங்களுக்குட்பட்டு வழக்கு தொடரலாம்.கருத்தும் சொல்லலாம்.ஆனால் ராஜபக்சே Diplomatic immunity என்ற பாதுகாப்பில் உலகை வலம் வருவதற்கு சுதந்திரமும் பாதுகாப்பும் கொண்டவர்.இதுல பெரியண்ணன் அமெரிக்கா கண் வைக்காத வரைக்கும் ராஜபக்சே இன்னும் உலகம் சுத்திகிட்டுத்தான் இருப்பார்.

ஆனாம் மீண்டுமொரு முறை அல்ஜசிரா போன்ற ஊடகங்கள் அவரை நேர்காணல் செய்யுமா?பயப்படாமல் ஊர் சுற்றுவாரா என்பதெல்லாம் இப்போதைக்கு கேள்விக்குறிகள்.

ராஜ நடராஜன் said...

யூர்கன் க்ருகியர்!எப்படியிருக்கீங்க?ரொம்ப நாளா உங்களை பதிவுலகம் பக்கம் காணவில்லையே!

நன்றியை டைம்ஸ்க்கு நேரடியாக தெரிவிப்போம்.

உங்கள் வருகைக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

தெகா!உங்களின் டைம்ஸ் பங்களிப்புக்கு பதிவுலகம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.தெம்பு ஊட்டுவதற்கு நன்றி. இது பலருக்கும் உணர்வாய் பற்றிக்கொள்ளட்டும்.

guidos to you!Keep rocking.

ராஜ நடராஜன் said...

ஆர்.கே.சதீஷ் அண்ணே!நீங்க நம்ம தலீவர தனியா விட்டுட்டு அங்கே போயிட்டீங்களா:)

போனதுமில்லாம கள்ள ஓட்டு வேற போட்டீங்களா?ஆனா இந்த முறை சிலர் கள்ள ஓட்டுப் போட்டதால்தால் நம்பர் அதிகரிக்கும் தகிடுதத்ததை நம்மால் கண்டு பிடிக்க முடிந்தது.அந்த விதத்தில் கள்ள ஓட்டுக்கு பாராட்டுக்கள்.

அடுத்த தடவை டைம்ஸ் வாக்கெடுப்பு நடத்துனா நம்ம தேர்தல் கமிசனையும்,ராணுவத்தையும் துணைக்கு கூப்பிட வேண்டியதுதான்:)

ராஜ நடராஜன் said...

ஆர்.கே சதீஷ் அண்ணே!டைம்ஸ் மாதிரி தனது தவறை தவறென்று உணர்ந்து கொள்ளும் ஜனநாயகம் மட்டுமே இன்னும் அமெரிக்கர்களை நம்மிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறதா?

இதே நம்ம ஊரா இருந்தா என்ன செய்கிறோம்.அஜெண்டா வெச்சுகிட்டு வாக்கெடுப்பு நடத்த வேண்டியது,அப்புறமா பத்திரிகை அலுவலகத்துக்கு தீ வச்சுக் கொழுத்தி விட்டுட வேண்டியது.

அட!நீ தப்பு செய்யறப்பான்னா யாராவது கூவினா ஆட்டோ அனுப்பிடறது.வெளங்குமா நாடும் ஜனநாயகமும்?

டைம்ஸ் தனது நடுநிலையை தக்க வைத்துக்கொண்டதற்கு பெருமைப்படுவோம்.

ராஜ நடராஜன் said...

சதீஷ் அண்ணே!ரதி என்னமோ சொல்றாங்க கேளுங்க.நாமெல்லாம் கள்ள ஓட்டுப் போட்டு ராஜபக்சே சார்பாளர்களை வெல்ல வேண்டிய அவசியமென்ன?முதலாவதாக ஈழம் குறித்தும்,உலகியல் அரசியல் குறித்தும் இன்னும் நம்மர்வளுக்கு முக்கியமாக தமிழகத்தில் புரியாத வண்ணம் கண்கள் கட்டப்பட்டிருக்கிறார்கள்.வாக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு இருந்திருந்தால் நமக்கு கள்ள ஓட்டுப் போட வேண்டிய அவசியமுமில்லை.நமது எண்ணிக்கையோடு அவர்கள் போட்டி போடவும் இயலாது என்ற புவியியல் நிலையில்.

Thekkikattan|தெகா said...

//2009 May த்திற்குப் பிறகு கனேடிய ஊடகத்துறையினர் சொன்னார்களாம் ஊடகங்களை எப்படி கையாள்வதென்று மிக குறுகிய காலத்தில் உங்கள் மக்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிரீர்கள் என்று. இன்று இதையேதான் Al Jazeera - English said, "Tamils are winning the media war" என்று சொல்கிறது. //

அப்படிங்களா ரதி! இது ரொம்ப ரொம்ப முக்கியமான வார்த்தைகளாச்சே!

உண்மை வெல்லணுங்கிற அந்த ஒற்றை நம்பிக்கையை கொண்டு தொடர்ந்து முயற்சித்திட்டே இருக்கணும். ரெண்டாவது, உலகம் தழுவிய முறையில் இந்த வலையுலகம் மிக்க சாத்தியங்களை உருவாக்கி தந்திருக்கிறது.

முறையாக பயன்படுத்திக் கொள்வதென்பது பயன் படுத்திக் கொள்பவர்களின் கைகளிலேயே இருக்கிறது.

//Times இன் இந்த முடிவுக்கு வேறேதோ காரணங்கள் இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.//

நிச்சயமாக! டைம் பத்திரிக்கை மூன்று காரணங்களால் பட்டியலிலிருந்து பக்கியை நீக்கி இருக்கக் கூடும்.

1. ஐ. நா_வின் போர்குற்ற அறிக்கை.

2. அவர்களின் கள்ள ஓட்டே நெகடிவாக அமைந்தது.

3. நம்மிடமிருந்து கிளம்பிய முறையான கடிதங்கள்.

தவறு said...

ரொம்ப சந்தோசமா இருக்கு ராஜநட....ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு .
வாழ்த்துகள்...

Rathi said...

தெகா, நேற்று Al Jazeera - People & Power Video Clip பார்த்தேன், இலங்கை பற்றியது. அதில் தான் குறிப்பிட்டார்கள்.

ஜோதிஜி அதை Google Buzz இல் பகிர்ந்துகொண்டதாக அறிந்துகொண்டேன். அந்த காணொளியை தயவு செய்து தவறவிடாமல் பாருங்க. ஒரு மேற்குலக Reuters இற்கும் Al Jazeera வுக்கும் இடையே செய்திகளை படங்களாய், காட்சிகளாய் மக்களிடம் எடுத்து செல்லும், சொல்லும் தந்திரோபாயங்கள் வியக்க கூட வைக்கிறது.

ராஜ நடராஜன் said...

ரதி!டைம்ஸின் மனமாற்றத்துக்கு நமது எதிர்ப்பு கருத்துக்களை விட தற்போதைய மூவர் குழுவின் அறிக்கையே முக்கியமான காரணமாக இருக்கலாம்.கூடவே நமது விமர்சனங்களும் இரண்டாம் பட்சத்தில் இருக்கலாம்.இது தவிர பின்புல காரணங்கள் இருந்தாலும் டைம்ஸின் முடிவு நமக்கு மகிழ்ச்சியென்ற பார்வையில் மட்டும் இதனைப் பார்ப்போம்.

// Al Jazeera - English said, "Tamils are winning the media war" //

நீங்கள் சொன்ன அல்ஜசிரா தகவல் நமக்கு முக்கியமான ஒன்று.மேலும் ஈழம் சார்ந்த வளைகுடா உலக அரசியலில் ஈரான் இலங்கை அரசு சார்ந்த நிலையில் இருப்பதால் தமிழீழ அரசு சார்ந்தவர்கள் தங்கள் டிப்ளமோட்டிக் முன்னெடுப்புக்களை வளைகுடா நாடுகள் மீது கவனம் செலுத்துவது பயனளிக்கும்.

ராஜ நடராஜன் said...

//அப்படிங்களா ரதி! இது ரொம்ப ரொம்ப முக்கியமான வார்த்தைகளாச்சே!//

தெகா!முன்பு ஒரு முறை நீங்க நினைப்பதைத்தான் நான் சொல்வேன் என்று பின்னூட்டம் போட்டிருந்தீர்கள்.ஒரே மன அலையில் பயணிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அடைப்பானில் நீங்கள் சொன்னதைப் பார்க்காமலேயே ரதிக்கு சொன்னது முந்தைய பின்னூட்டம்:)

ராஜ நடராஜன் said...

Vow!தெகா!1,2,3 கூட அதே பிரதிபலிப்பு:)

Rathi said...

//ஈழம் குறித்தும்,உலகியல் அரசியல் குறித்தும் இன்னும் நம்மர்வளுக்கு முக்கியமாக தமிழகத்தில் புரியாத வண்ணம் கண்கள் கட்டப்பட்டிருக்கிறார்கள்.வாக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு இருந்திருந்தால் நமக்கு கள்ள ஓட்டுப் போட வேண்டிய அவசியமுமில்லை.நமது எண்ணிக்கையோடு அவர்கள் போட்டி போடவும் இயலாது என்ற புவியியல் நிலையில்.//

Well said.

அவர்கள் பணத்தால், அதிகாரத்தால் எங்களை அடிக்கப்பார்க்கிறார்கள். தமிழகத்தில் இருந்து குறைந்தது ஒரு ஒரு லட்சம் பேரிடமிருந்தாவது இது போன்ற கடிதங்கள், வேண்டுகோள்கள் சர்வதேச ஊகங்களுக்கு கிடைத்தாலே அவர்கள் உங்கள் பங்கை, அக்கறையை யோசிப்பார்கள். ஈழப்போற்குற்றங்களில் ஊடகப் போர் என்பது இப்போது ஓர் முக்கியமான விடயம். தயவு செய்து உங்கள் பங்களிப்பு முக்கியம், அதுக்குரிய பலன் நிச்சயம் கிடைக்கும் தொடருங்கள்.

ராஜ நட, இன்று நீங்க விமர்சனத்துக்கு பதில் எழுதியே களைக்கப் போறீங்க.

ராஜ நடராஜன் said...

//ரொம்ப சந்தோசமா இருக்கு ராஜநட....ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு .
வாழ்த்துகள்...//

வாங்க! எப்பவும் சரி சொல்லும் தவறே:)

ஒன்றுபடுதலில் மட்டுமே நாம் வதங்கிப் போகிறோம்.அந்த மந்திரக்கோல் மட்டும் கையில் கிடைத்து விட்டால் நந்தியாய் நிற்கும் மத்திய,இப்போது இழுத்துக்கிட்டு கிடக்கும் மாநில அரசின் நிலைப்பாடுகளையெல்லாம் புரட்டிப் போடவும் இத்துணூண்டு இலங்கை நமக்கு தண்ணி காட்டுவதற்கு பாடம் புகட்டி விடவும் முடியும்.

சுந்தரவடிவேல் said...

நன்றியை இங்கேயே சொல்லிக்கிட்டிருந்தா டைமுக்கு எப்பிடி கேக்கும் :) கீழே இருக்க டைம் முகவரிக்கு எல்லாரும் நன்றி சொல்லி ஒரு வரி தட்டிவிட்டா அருமையா இருக்கும்!
http://timemediakit.com/asia/contacts/index.html

ராஜ நடராஜன் said...

//ராஜ நட, இன்று நீங்க விமர்சனத்துக்கு பதில் எழுதியே களைக்கப் போறீங்க..//

ரதி!பரவாயில்லை.இன்றைக்கும் நாளைக்கும் எனக்கு வார விடுமுறை.இந்த உணர்வை முடிந்த அளவுக்கு தக்க வைக்க முயற்சி செய்கிறேன்.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் பொதுவாக மக்களிடம் போய்ச் சேரும் இரு ஊடகங்களான சன்,கலைஞர் தொலைகாட்சிகள் நிகழ்வுகளை இருட்டடிப்பு செய்து விடுகிறார்கள்.மேலும் செய்தி நேரங்களில் வேறு நிகழ்ச்சிக்கு பட்டனை தட்டி விடும் மக்களும் இருக்கிறார்கள்.முந்தைய காலம் மாதிரி பத்திரிகைகள் படிப்பவர்கள் ரொம்பவும் குறைவு போன்ற காரணங்களால் டைம்ஸ் வாக்கெடுப்பு போன்றவை பரவலாக மக்களுக்குப் போய்ச் சேரவில்லை.

மேலும் கணினி உலகத்துக்குள் சில அலைகள் வீசுவது வெளி உலகின் பார்வைக்கு இன்னும் போய்ச் சேரவில்லை.ஒரு சுனாமி வேண்டாம்... தூரத்தில் ஏதோ தீ ஜுவாலை எரிகிறதே என்பதும் கூட இன்னும் தெரியாத காரணத்தால் இன்னும் கொஞ்சம் ஓங்கி குரல் கொடுக்க வேண்டியுள்ளது.

பார்க்கலாம்!நம்மால் முடிந்த வரை டமாரம் செய்வோம்.

ராஜ நடராஜன் said...

ரதி!இன்னுமொன்று தெகா சொன்னதை கவனித்தீர்களா!ஊடகத்தின் தாக்கத்தையும்,இணையத்தையும் நாம் எப்படி உபயோகிக்கப் போகிறோம் என்பது முக்கியமான ஒன்று.

ராஜ நடராஜன் said...

//http://timemediakit.com/asia/contacts/index.html//

வாங்க!சுந்தரவடிவேல் அவர்களே!இதில் கருத்துக்கள் சொல்பவர்கள் பெரும்பாலோனோர் முன்பே டைம்ஸ் விவாதத்திலும்,வாக்கெடுப்பிலும் பங்கு கொண்டவர்கள் என்பதால் அவரவர் கடமையைச் செய்வார்கள் என நம்புகிறேன்.

இருந்த போதிலும் சீக்கிரமா பயணிப்பதற்கு ரிசர்வ் டிக்கெட் செய்கிற மாதிரி சுட்டி பலருக்கும் பயன்படும்.

கூடவே இங்கே யாராவது டெம்ப்ளேட் கடிதம் இணைத்தாலும் பலருக்கு உதவியாக இருக்கும்.

உங்கள் சுட்டிக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

http://www.time.com/time/specials/packages/completelist/0,29569,2066367,00.html.

டைம்ஸ் பத்திரிகையின் புதிய பெயர்ப்பட்டியல் பதிவர் வசந்தசேனன் தளத்தில் இருந்து பெறப்பட்டது.

Thekkikattan|தெகா said...

சுந்தரா,

நீ சொன்னதும் சரிதான். உடனே எல்லாரும் எடிட்டருக்கு ஒரு நன்றி சொல்லிட்டு ஐ. நா அறிக்கையை வெளியிடச் சொல்லி டைம் ஐ எழுதச் சொல்லி கோரிக்கை வைச்சு ஒரு கடிதம் எழுதணும்...

என்னோட எடிட்டருக்கான கடிதத்தின் நகல்... :)

***************

Dear Editor,

Thank you so much for dropping the name of Mr. Mahinda Rajapakse from the 100 influential list. The island president Mr. Rajapakse has all the reason to be excluded from the list. As you see, around this time also, the UN report clearly stated how the island Govt had insidiously inflicted the suffering upon hundreds of thousands innocent lives through war crimes.

I hope following the UN report, the time magazine will bring up a detailed report on the history and the tragic end of the unheard voices of minority Tamils who happened still save their only wealth which is breathing but not dying tomorrow by simply getting disappeared.

Again my sincere thanks to Time, to be standing by the unheard voices... at this time where media behave a mere hearsay of what the 'powerful' wanted to propagate.

Sincerely,

Thekkikattan|தெகா said...

அதே எடிட்டருக்கான கடிதத்தை மற்ற முக்கியமான மூன்று பேருக்கும் ஃபார்வேர்டும் பண்ணியாச்சு...

john_griffin@timeinc.com
steve_cambron@timeinc.com
kim_kelleher@timeinc.com

சீக்கிரமா ஒரு மெயின் ஆர்டிகில் வரணும். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா... நல்லபடியா டச்சிங்கா எழுதி. எவன் மனசிலயாவது கொஞ்சமாவது பத்திரிக்கை தர்மம், மனித நேயம், இரக்கம் இல்லாமயா போயிடும். Lets keep knocking on the doors of individuals who sits atop!

சுடுதண்ணி said...

வாழ்த்துக்கள் :D. எதிர்ப்பு ஓட்டுக்களை நேர்மையான முறையில் செலுத்தியதின் வெற்றி. இணையத்தில் கள்ள ஓட்டு என்பது பட்டப் பகல் திருட்டு மாதிரி மறைக்க முடியாது.

//But according to an investigation done by the Time magazine has found that Sri Lankan government has paid millions of dollars to a public relations company to generate bogus votes.//

ராஜபக்சேவிற்கு யாராவது "internet for dummies' முடிந்தால் அனுப்பி வைக்கவும் :).

ஆறாம்பூதம் said...

பல பல ஆக்கப்பூர்வமான கருத்துகளை அனைவரும் தெரிவிக்கின்றனர். ஆனால் இப்படியே தேங்கிவிடக் கூடாது . ஊடக அழுத்தம் என்பது மிக வலிமையானது. அன்னா ஹசாரேவுக்கு இந்திய அதிகாரவர்க்கம் வளைந்ததாக நாம் கருதுவது பிழை, அதிகாரம் கூழைக் கும்பிடு போட்டது , அன்னாவின் பின் நின்ற பலமான ஊடகப் பிரச்சாரத்திற்கே. இதைப் போன்ற ஒரு ஊடக அழுத்தத்தை அய் நாவுக்குத் தர தமிழர் தரப்பு கடும் முயற்சிகள் எடுக்க வேண்டும். இன்று பணிச்சுமை அதிகம். நாளை எனது பிற கருத்துகளையும் பகிர்ந்து கொள்கிறேன்.

ராஜ நடராஜன் said...

தெகா!உங்க கடிதம் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி.

கூடவே இணைப்பு விலாசங்களுக்கும் நன்றி.

பதிவர்களே கடமையைச் செய்யுங்கள்.பதிவுக் கிணற்றுக்கும் வெளியே குரல் கொடுப்போம்.நன்றி.

ராஜ நடராஜன் said...

சுடுதண்ணி எப்படியிருக்கீங்க?பதிவுலக விக்கிலீக்ஸ் கோனார் நோட்ஸ் நீங்கதான்:)

//ராஜபக்சேவிற்கு யாராவது "internet for dummies' முடிந்தால் அனுப்பி வைக்கவும் :).//

அவருக்கு மட்டும்தானா?பதிவுலக மக்களைக் கேட்டால் இன்னுமொரு ஆளுக்கு சிபாரிசு செய்வாங்களே:)

ராஜ நடராஜன் said...

ஆறாம் பூதம் நீங்கள் சொல்வது போல் //பல பல ஆக்கப்பூர்வமான கருத்துகளை அனைவரும் தெரிவிக்கின்றனர். ஆனால் இப்படியே தேங்கிவிடக் கூடாது . ஊடக அழுத்தம் என்பது மிக வலிமையானது.//

நமது அழுத்தங்களை தமிழ் மொழி கடந்தும் ஆங்கிலத்துக்கு கொண்டு செல்வது அவசியம் என்பதை சில வருடங்களுக்கு முன்பே சிலர் கருத்து தெரிவித்திருந்தார்கள்.இதற்கான ஒருமுகத் தன்மையும்,திரட்டியும் நமக்கு இல்லை.

//அன்னா ஹசாரேவுக்கு இந்திய அதிகாரவர்க்கம் வளைந்ததாக நாம் கருதுவது பிழை, அதிகாரம் கூழைக் கும்பிடு போட்டது , அன்னாவின் பின் நின்ற பலமான ஊடகப் பிரச்சாரத்திற்கே. இதைப் போன்ற ஒரு ஊடக அழுத்தத்தை அய் நாவுக்குத் தர தமிழர் தரப்பு கடும் முயற்சிகள் எடுக்க வேண்டும்.//

லண்டனில் GTV ஓரளவுக்கு ஊடகப் பணி செய்கிறார்கள்.பத்திரிகை சார்ந்த அமைப்பும் தேவையான ஒன்று.

//இன்று பணிச்சுமை அதிகம். நாளை எனது பிற கருத்துகளையும் பகிர்ந்து கொள்கிறேன்.//

மேலும் கருத்துக்களையும் ஆக்கபூர்வமான முயற்சிகளையும் எதிர்பார்க்கிறேன்.

ராஜ நடராஜன் said...

டைம்ஸ் பத்திரிகைக்கு எனது கடிதம்
letters@time.com

மற்றும் Cc to:

john_griffin@timeinc.com

kim_kelleher@timeinc.com

steve_cambron@timeinc.com

michael_safran@timeinc.com

justin_oborne@timeinc.com
---------------------------------

Dear Editor,

After my first letter of expressing my sincere regrets on, Mr.Rajapakse was selected among the 100 influential persons and climbed to 6rh rank among others I am writting this letter again to you.

Times Vote of Yes and No on Mr.Rajapakse were quite controversial and it was quite a shocking news to somebody and happy moment for Yes clickers as Mr.Rajapakse was raised to top 10.

Channel 4 television has brought many evidence of war crimes to public view, for example an authentic chilling video clip of atrocites done by Sri lankan solders on Tamilians hand tied,blind folded and shotdown point blank range and many more evidences of war crimes done by Rajapakse's government.
The leaked version of UN Panel report on Mr.Rajapakse's government showing the glimpse of inhuman ways of killing children,ladies and elderly peoples and also of shelling on hospital etc.against vienna convention.

At this critical time the world media reports again saying that a controversial person,Mr.Rajapakse's name is removed from the list is quite right decision and I welcome the Time's spirit of keeping journalistic ethics in the right direction.

I would also request you to publish a detailed article of root causes and truth behind the decades of war which will go hand in hand with UN panels report on Sri lanka.

Thanking you once again for your journalistic justice.

With regards

Raja Natarajan.

கே.ஆர்.பி.செந்தில் said...

சனல் 4 மற்றும் டைம்ஸ் பத்திரிகைக்கு ஈழத்தமிழர்கள் நாம் மிகவும் நன்றியோடு கடமைப்பட்டிருக்கிறோம்.

ஆனந்தி.. said...

தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_23.html

ராஜ நடராஜன் said...

//சனல் 4 மற்றும் டைம்ஸ் பத்திரிகைக்கு ஈழத்தமிழர்கள் நாம் மிகவும் நன்றியோடு கடமைப்பட்டிருக்கிறோம்.//

செந்திலண்ணே!டைம்ஸின் உங்களின் பங்கு மகத்தானது.

சானல் 4 தொலைக்காட்சியோடும் இணைய முயற்சி செய்வதும்,
இன்னும் ஆங்கில ஊடகங்களின் கருத்து பரிமாற்றம் நமது நிலைப்பாட்டையும் ஊடக உலகத்துக்கு கொண்டு செல்லும்.இது குறித்த பார்வையை இன்னும் விரிவாக்குவோம்.நன்றி.

ராஜ நடராஜன் said...

//தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_23.html//

உங்கள் பின்னூட்டத்துக்கும் முன்பே நான் உங்கள் தளத்துக்கு வந்து விட்டேன்.

சுட்டிக்கு நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

//100 பேர் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார் என்ற செய்தி//

பகிர்வுக்கு நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//100 பேர் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார் என்ற செய்தி//

பகிர்வுக்கு நன்றிங்க

ராஜ நடராஜன் said...

////100 பேர் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார் என்ற செய்தி//

பகிர்வுக்கு நன்றிங்க//

ஞானசேகரன்!எப்படியிருக்கீங்க?பதிவுகளையே அதிகம் காணவில்லையே!

Rathi said...

http://www.independent.co.uk/opinion/leading-articles/leading-article-sri-lankan-war-crimes-must-be-prosecuted-2275023.html

EVERYBODY,

please don't miss this. tell them the need for international independent investigation in srilankan war crimes

if you don't have much time to write or your english writing skills are inadequate, just read the comments. if the comments seem acceptable/agreeable to you click "like".

ராஜ நடராஜன் said...

Rathi!I am just going through the link you have posted here.I will get involved with the discussion.Thanks.

நிரூபன் said...

http://tamilnattu.blogspot.com/2011/04/blog-post_28.html

இது ஒரு சுவையான காமெடிப் பதிவு,
டைம் இருந்தா, எட்டிப் பாருங்க சகோ.