Followers

Wednesday, April 20, 2011

2G களவாணிகளும் சிரிப்புத் திருடர்களும்

நம்மூர்ல போலிசுகிட்ட களவாணிக மாட்டிகிட்டா யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ நம்மூர் ஊடகத் துறைக்கு பலாப்பழம் சாப்பிடற மாதிரி.கிடைக்கிற முக்கு சந்து பொந்து,கோர்ட் வாசல்,போலிசு வண்டில ஏறுவது, உட்காருவது, இறங்குவதுன்னு கம்பி வளையம், ஜன்னல்ன்னு ஏகப்பட்ட இடத்துல தங்கள் காமிரா,வீடியோ திறமையைக் காட்டி படம் புடிச்சு செய்தியைக் கொண்டு வந்துடுவாங்க.
இதுல உண்மையான களவாணிகளும்,பொய்க் கேசுல பாதிக்கப்பட்டவங்களும் சேர்த்தி.அதனால் இந்திய சட்டமும்,நீதித்துறையும் ஊடகத்துறை கிட்டேயிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் கையால முகத்தை மறைக்கவும், வசதிப்பட்டவங்களாயிருந்தா கைல கர்சிப்,துண்டு  எதையாவது வைச்சு மூஞ்சிய மறைச்சிக்கிடுவாங்க என்பது உங்களுக்கு எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான்.விசுவலா உங்களுக்கு விளக்கனுமின்னுதான் 2Gல ராசாவுக்கு அடுத்து களி திங்கப் போற இந்திய Corporate Decision makers படம்!
இலங்கையில வெள்ளை வேன் கொலைகாரர்களை கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா நான் இப்போ சொல்லப் போறது உங்களுக்கும், எனக்கும் கூட இது வரை தெரியாது.வெள்ளையுடை களவாணிகளை கேள்விப்பட்டிருக்கிறீங்களா?கலா அக்கா சொல்ற மாதிரி சான்சே இல்லை! அதனால இப்ப பார்த்து தெரிஞ்சுக்குங்க.
 
திருடனுங்க யார்ன்னு மக்களுக்கு தெரிஞ்சுடக் கூடாதாம்.அதனால கால் முதல் தலை முடிவரை பேய்கள் மாதிரி மறைச்சுகிட்டு நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு போறாங்களாம்!இந்த மாதிரி அக்கப்போர் உலகத்துல எங்கேயாவது நடக்குமா?கடைசி படத்துக்கு சிரிப்பு வந்தா மட்டும் கமெண்டுனா போதும்:)

படங்களின் சொந்தக்காரர்கள்:
:1.கூகிள்
2.டெய்லி பயனீர்
3.ஐலண்ட். 

48 comments:

தம்பி கூர்மதியன் said...

வந்துட்டன்.. படிச்சிட்டு ரிடர்ன் வர்றேன்..

தம்பி கூர்மதியன் said...

//நம்மூர் ஊடகத் துறைக்கு பலாப்பழம் சாப்பிடற மாதிரி//

ஹி ஹி.. எங்களுக்கு அதானே பொழப்பே.!!

தம்பி கூர்மதியன் said...

//படம் புடிச்சு செய்தியைக் கொண்டு வந்துடுவாங்க.//

அதுல இருக்குற போதையே தனி தான்.. இல்ல.!!

தம்பி கூர்மதியன் said...

//வசதிப்பட்டவங்களாயிருந்தா கைல கர்சிப்,துண்டு எதையாவது வைச்சு மூஞ்சிய மறைச்சிக்கிடுவாங்க//

இது உங்களுக்கே ஓவரா இல்ல.? ஒரு கர்சீப் வாங்க பணக்காரரா இருக்கணுமா.? அப்ப காசு இல்லாதவன் கையை வைத்து மூஞ்சை மறைக்கையில் இடைவெளியில் தெரிந்திடாதா.? அய்யகோ.!! அப்படியானால் வசதி இல்லாதவர் தப்பே செய்யகூடாதா.? என்ன ஜனநாயகம் இது.? ஹி ஹி

தம்பி கூர்மதியன் said...

//கடைசி படத்துக்கு சிரிப்பு வந்தா மட்டும் கமெண்டுனா போதும்:)//

எனக்கு சிரிப்பு வரல.. ஆனா கமண்ட் தட்டிட்டேன்.. என்ன பண்ணலாம்.. என் கமண்ட்டை எச்சி தொட்டு அலைச்சிடங்க.. யாராவது இதுக்கு போயி நான் சிரிச்சேன்னு என்னை தப்பா நினைக்க போறாங்க..

MANO நாஞ்சில் மனோ said...

கடைசி போட்டோ கலக்கல்....

MANO நாஞ்சில் மனோ said...

ஹி ஹி ஹி ஹி நானும் சிரிச்சுட்டேன்....

Yoga.s.FR said...

எனக்கும் சிரிப்பு வரல!இருந்தாலும் கொமண்டுகிறேன்!(தமிழ் சரி தானே?)நியூஸ் பேப்பரையும்(இங்கிலிசுபிசு?)அப்பப்போ யூஸ் பண்ணுவார்கள்!(மூஞ்சியை மறைக்கத் தான்,படிக்க அல்ல!)

ஹேமா said...

நடா...கௌரவப் பிரச்சனையெல்லோ.
அதான் அப்பிடி !

ராஜ நடராஜன் said...

//வந்துட்டன்.. படிச்சிட்டு ரிடர்ன் வர்றேன்..//

கூர்மதியன்!வணக்கம்.இதென்ன மம்மி ரிடர்ன் மாதிரி படிச்ச்ட்டு ரிடர்ன்:)

ராஜ நடராஜன் said...

////நம்மூர் ஊடகத் துறைக்கு பலாப்பழம் சாப்பிடற மாதிரி//

ஹி ஹி.. எங்களுக்கு அதானே பொழப்பே.!!//

பலாப்பழம் சாப்பிடறது எளிதான விசயமின்னா நினைக்கிறீங்க?அது எவ்வளவு கஷ்டமான விசயம்ன்னு சொல்றேன் கேளுங்க.

மரத்துல இருந்தாலும் கடையில இருந்து வாங்கினாலும் கத்தி இல்லாட்டி வலுவான கைகளின் உதவி தேவை.காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரி அப்படியே பிடிங்கினீங்கன்னா பால் கையெல்லாம் ஒட்டிக்கும்.அப்புறம் சுளையை மட்டும் எடுக்கனும்,பலாக்கொட்டைய அகற்றனும்,அப்புறமாத்தான் சாப்பிட முடியும்.அதே மாதிரி காமிரா,வீடியோ,கூட்டத்துல நெரிசல்,சரியான கோணத்துல மூஞ்சி மாட்டனும் இப்படி பல சிரமங்கள் பலாப்பழம் சாப்பிடற மாதிரி கஷ்டம்ன்னு சொல்ல வந்தேன்.

அப்பாடா!எப்படியோ சமாளிச்சாச்சு:)

ராஜ நடராஜன் said...

////படம் புடிச்சு செய்தியைக் கொண்டு வந்துடுவாங்க.//

அதுல இருக்குற போதையே தனி தான்.. இல்ல.!!//

அது!அது!முன்னாடி பின்னூட்டத்துல சொன்ன மாதிரி கஷ்டப்பட்டாலும் பலாப்பழ சுவை இருக்குதே அதே மாதிரி சாதிப்பதிலும் நிருபர்களுக்கு வெற்றியடையும்ன்னு அந்த போதையே தனி.

தம்பி கூர்மதியன் said...

//அப்பாடா!எப்படியோ சமாளிச்சாச்சு:) //

பாஸ்.. நான் பண்ருட்டி பக்கம்.. பலா லாம் எனக்கு அத்துப்படி.. அப்பரம் நிறைய போட்டாகிராபர்கள் போட்டா எடுக்க ஐடியா கொடுக்குற ஆளு நாங்க.. நீங்க மூச்சு விடாம பேசியதெல்லாம்.. ஹி ஹி..

ராஜ நடராஜன் said...

//இது உங்களுக்கே ஓவரா இல்ல.? ஒரு கர்சீப் வாங்க பணக்காரரா இருக்கணுமா.? அப்ப காசு இல்லாதவன் கையை வைத்து மூஞ்சை மறைக்கையில் இடைவெளியில் தெரிந்திடாதா.? அய்யகோ.!! அப்படியானால் வசதி இல்லாதவர் தப்பே செய்யகூடாதா.? என்ன ஜனநாயகம் இது.? ஹி ஹி//

கூர்!போலிசு ஸ்டேசன்ல மாட்டுனா முதல் வேலை உங்க கைவசம் உள்ள சொத்துக்கணக்கு கேட்கறதுதான் தெரியுமில்ல?அதுல இந்த கைக்குட்டையும் அடக்கம்:)

வசதியில்லாதவர்கள் தப்பு கூட செய்யவேண்டாம்.ரோடு நல்லாயில்ல.ரோடு போடுங்கன்னு ஏரியாக்காரங்களை கூட்டி கோசம் போட்டாலும் கூட முதல் தகவல் அறிக்கை(FIR) போட்டு கேஸ் போட்டுறுவாங்க தெரியுமில்ல?

ஜனநாயகத்துக்கும் கூட விலையுண்டு.எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சுன்னுதான் பெரிய தலைகள் கூட இப்ப களி திங்க வைக்கிறாங்க.இல்லாட்டி 10 வருசம்,15 வருசம்ன்னு இழுத்து இப்ப உண்மைத்தமிழன் 70பதுல சர்க்காரியா கமிசன் பற்றி 2011ல பதிவு போடுற மாதிரி இழுத்துடுவாங்க.

ராஜ நடராஜன் said...

//எனக்கு சிரிப்பு வரல.. ஆனா கமண்ட் தட்டிட்டேன்.. என்ன பண்ணலாம்.. என் கமண்ட்டை எச்சி தொட்டு அலைச்சிடங்க.. யாராவது இதுக்கு போயி நான் சிரிச்சேன்னு என்னை தப்பா நினைக்க போறாங்க..//

சிரிப்பு வரலைன்னா வடிவேலுவைக் கூப்பிடச் சொல்லுவேன்னு நினைச்சீங்களாக்கும்:)நீங்க அந்த வெள்ளையுடைக்குள்ள இருந்தா எப்படியிருப்பீங்கன்னு நானா நினைச்சு சிரிச்சுக்குறேன்:)

ராஜ நடராஜன் said...

//கடைசி போட்டோ கலக்கல்....//

கூர்மதியன் சீக்கிரம் ஓடியாங்க.மனோ கூப்பிடறாரு.

தம்பி கூர்மதியன் said...

//நீங்க அந்த வெள்ளையுடைக்குள்ள இருந்தா எப்படியிருப்பீங்கன்னு நானா நினைச்சு சிரிச்சுக்குறேன்:) //

என்ன ஒரு வில்லத்தனம்.. உங்கள தான் முதல்ல கோத்து விடணும்.. தானே தலைவர் அழகிரியை சீண்டியவர் தானே நீங்கள்.!! இருங்க இருங்க அவர்கிட்டயே சொல்லுறன்..

ராஜ நடராஜன் said...

//ஹி ஹி ஹி ஹி நானும் சிரிச்சுட்டேன்....//

நீங்க சிரிக்காம யார் சிரிப்பங்க மனோ!பாருக்குள்ள நல்ல இடம் தேடுறவங்களாச்சே:)

ராஜ நடராஜன் said...

//எனக்கும் சிரிப்பு வரல!இருந்தாலும் கொமண்டுகிறேன்!(தமிழ் சரி தானே?)நியூஸ் பேப்பரையும்(இங்கிலிசுபிசு?)அப்பப்போ யூஸ் பண்ணுவார்கள்!(மூஞ்சியை மறைக்கத் தான்,படிக்க அல்ல!)//

நீங்களும் மைனஸ் சிரிப்பு போட்டுட்டீங்களா!மூஞ்சிய மறைக்க நியுஸ் பேப்பரெல்லாம் கொடுக்குறாங்களா இலங்கையில்?பரவாயில்லையே!இது உண்மையா இருந்தா இலங்கைக்கு பாஸ் மார்க் போடுவேன்.

எங்க ஊர்ல சோகத்தை மறைக்க ஜெயிலில் கும்மிப் பாட்டு பாடுறவங்களுக்கெல்லாம் இந்த சலுகைகள் கிடையாது.ஆனாலும் பாடட்டும்ன்னு சுதந்திரம் கொடுக்கிறதால எங்க ஊர் போலிசுக்கும் இதற்கு பாஸ் மார்க் தருவேன்.

ராஜ நடராஜன் said...

//நடா...கௌரவப் பிரச்சனையெல்லோ.
அதான் அப்பிடி !//

வெள்ளையுடை போட்டுக்கிறதா கௌரவப் பிரச்சினை:)அந்த படம் மறுபடியும் மனசுல ஒரு ஃப்ளாஷ் அடிச்சுட்டு ஓடுது.ஆள விடுங்க ஹேமா!

Chitra said...

நம்மூர்ல போலிசுகிட்ட களவாணிக மாட்டிகிட்டா யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ நம்மூர் ஊடகத் துறைக்கு பலாப்பழம் சாப்பிடற மாதிரி.


..especially the so called, VIP....

ராஜ நடராஜன் said...

//
என்ன ஒரு வில்லத்தனம்.. உங்கள தான் முதல்ல கோத்து விடணும்.. தானே தலைவர் அழகிரியை சீண்டியவர் தானே நீங்கள்.!! இருங்க இருங்க அவர்கிட்டயே சொல்லுறன்..//

கூர்மதியன்!பதிவையும்,அழகிரியையும்இந்நேரம் எல்லோரும் மறந்திருப்பாங்களே!போட்டுக்கொடுக்கிறீங்களே:)இனி கிச்சு கிச்சு மூட்டவும் உங்களுக்கு அந்த வெள்ளையுடை கிடையாது போதுமா!

தம்பி கூர்மதியன் said...

//இனி கிச்சு கிச்சு மூட்டவும் உங்களுக்கு அந்த வெள்ளையுடை கிடையாது போதுமா! //

பலே கூர் பலே.!! ராஜதந்திரங்களை கரைத்து குடித்திருக்காயடா நீ.!!

ராஜ நடராஜன் said...

//நம்மூர்ல போலிசுகிட்ட களவாணிக மாட்டிகிட்டா யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ நம்மூர் ஊடகத் துறைக்கு பலாப்பழம் சாப்பிடற மாதிரி.


..especially the so called, VIP....//

பின்ன!விளம்பரத்துக்கு விளம்பரம்.வியாபாரத்துக்கு வியாபாரம்.பத்திரிகை சர்குலேசன் அதிகரிப்புன்னு எத்தனை உள் விசயங்கள் இருக்குது ஒரு போட்டோவுல.

அப்புறம் ந்ம்மளை மாதிரி ஆளுக உங்க கூகிள் அக்காள்கிட்ட சொல்லாமக் கொள்ளாம ஆட்டையப்போடறதுக்கும் உதவுதே:)

ராஜ நடராஜன் said...

////இனி கிச்சு கிச்சு மூட்டவும் உங்களுக்கு அந்த வெள்ளையுடை கிடையாது போதுமா! //

பலே கூர் பலே.!! ராஜதந்திரங்களை கரைத்து குடித்திருக்காயடா நீ.!!//

நீங்க என்ன 23ம் புலிகேசியின் தம்பி 24ம் கூர்மதியனா:)

தம்பி கூர்மதியன் said...

//நீங்க என்ன 23ம் புலிகேசியின் தம்பி 24ம் கூர்மதியனா:) //

நான் தான் முதல் பாஸ்.. என்னை பாத்து கோடான கோடி ரசிக பெருமக்கள் திரண்டு வருவாங்க..

ராஜ நடராஜன் said...

கூர்மதியன்!நேற்று நீங்க போட்ட கவிதை பரிந்துரைக்கு வரும்ன்னு இன்றைக்குத் தேடிப்பார்த்தேன்.காணோமே!

தம்பி கூர்மதியன் said...

//கூர்மதியன்!நேற்று நீங்க போட்ட கவிதை பரிந்துரைக்கு வரும்ன்னு இன்றைக்குத் தேடிப்பார்த்தேன்.காணோமே! //

அதற்கு நான் என்ன செய்ய முடியும்.? நான் என்ன செய்யணும்.?
நான் என்ன செய்தேன்.?

ராஜ நடராஜன் said...

//அதற்கு நான் என்ன செய்ய முடியும்.? நான் என்ன செய்யணும்.?
நான் என்ன செய்தேன்.?//

கூர்மதியன்!நான் ஆமை வேகத்துல ரெண்டு மூணு வருசமா பதிவுலகத்துல நடந்துகிட்டிருந்தாலும்,பின்னூட்டங்கள்,ஹிட்,அப்புறம் முன்னாடி நிற்கனும்ன்னு நினைச்சு ஒரு பதிவு கூடப் போட்டதில்லை.

உங்க கவிதை நல்லாயிருந்தது.அதைச் சொன்ன விதமும் கருத்தும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.பரிந்துரைக்கு வந்தால் பலருக்கும் போய்ச் சேருமேன்னு எதிர்பார்த்தேன்.அதனால்தான் சொன்னேன்.

எனக்கு முன்னாடிப் போய் உட்காரும் சூனியமெல்லாம் மெய்யாலுமே தெரியாது.இல்லாட்டி உட்கார வச்சிருக்க மாட்டேனா:)

ராஜ நடராஜன் said...

//நான் தான் முதல் பாஸ்.. என்னை பாத்து கோடான கோடி ரசிக பெருமக்கள் திரண்டு வருவாங்க..//

நீங்க பின்னூட்டத்துல முதல்!அதைப்பார்த்து சில பெருமக்கள் வருவாங்க சரிதான்..ஆனால் 23ம் புலிகேசிக்கும் முதல்ன்னு சொன்னா யாராவது பெருமக்கள் திரண்டு வருவாங்களா?அதுவும் தம்பின்னு பேர் வச்சிகிட்டு:)

நசரேயன் said...

நீங்க அடிச்சி ஆடுங்க

நிரூபன் said...

சகோ, இன்னைக்கு இரவு கண்டிப்பா கருத்துக்களோடு வருகிறேன்.

ராஜ நடராஜன் said...

//நீங்க அடிச்சி ஆடுங்க//

என்னதான் இருந்தாலும் நசர்ஜி ”பேட்” ”டை” சுத்தற மாதிரி வருமா:)

ராஜ நடராஜன் said...

//சகோ, இன்னைக்கு இரவு கண்டிப்பா கருத்துக்களோடு வருகிறேன்.//

சகோ!கருத்தோட வாங்க!உங்க ரெசிபி மொளகாய்ப் பொடியோட வந்துடாதீங்க:)

எப்படிங்க கொலும்புத் திருடர்கள் இதுவரைக்கும் யார் கண்ணுலயும் படாம இருந்தாங்க!அதுவும் வெள்ளை வெளேர்ன்னு இருந்துகிட்டு?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சிறையில் சாப்பாடு சரியில்லைன்னு ராசா சொல்றாராம் ...பணத்தை சுருட்டாம இருந்திருந்தா நல்ல சாப்பாடு சாப்பிட்டுகிட்டு வீட்லயே இருந்திருக்கலாம்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

யானைக்கு ஒரு காலம்னா பூனைக்கும் ஒரு காலம் ராசாவே

ராஜ நடராஜன் said...

//சிறையில் சாப்பாடு சரியில்லைன்னு ராசா சொல்றாராம் ...பணத்தை சுருட்டாம இருந்திருந்தா நல்ல சாப்பாடு சாப்பிட்டுகிட்டு வீட்லயே இருந்திருக்கலாம்//

வீட்டுச் சாப்பாடு கொண்டு வர அலுத்துட்டாங்க போல இருக்குதே!ராசா விரும்பினால் வீட்ல சமைச்ச உணவு சாப்பிடலாமுன்னு நீதிமன்றம் அனுமதி தந்திருந்ததே?ஒரு வேலை அதுக்குள்ளும் வில்லங்கமிருந்தா என்ன செய்யறதுன்னு வேண்டாமுன்னு சொல்லிட்டாரோ!

இப்போதைக்கு அவருக்கு பாதுகாப்பு ஜெயில்தான்.

ராஜ நடராஜன் said...

//யானைக்கு ஒரு காலம்னா பூனைக்கும் ஒரு காலம் ராசாவே//

இது எந்தப் படத்துல வரும் பாட்டு ராசாவே:)

Rathi said...

//கடைசி படத்துக்கு சிரிப்பு வந்தா மட்டும் கமெண்டுனா போதும்:)//

:)) I laughed my head off.

ராஜ நடராஜன் said...

//:)) I laughed my head off.//

You were not aware of this garment earlier,dont you:)

தம்பி கூர்மதியன் said...

mail me on vandemataram.ram@gmail.com boss..

செங்கோவி said...

அட, ரொம்ப வித்தியாசமான ட்ரெஸ்ஸா இருக்கே...இனிமே பிரபலங்களைக் கைது பண்ண, இந்த ட்ரெஸ்ஸை அவங்களுக்கு மாட்டிவிட்டுத் தான் பண்ணனும்னு சட்டம் கொண்டுவரணும்!

நிரூபன் said...

நம்மூர்ல போலிசுகிட்ட களவாணிக மாட்டிகிட்டா யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ நம்மூர் ஊடகத் துறைக்கு பலாப்பழம் சாப்பிடற மாதிரி.கிடைக்கிற முக்கு சந்து பொந்து,கோர்ட் வாசல்,போலிசு வண்டில ஏறுவது, உட்காருவது, இறங்குவதுன்னு கம்பி வளையம், ஜன்னல்ன்னு ஏகப்பட்ட இடத்துல தங்கள் காமிரா,வீடியோ திறமையைக் காட்டி படம் புடிச்சு செய்தியைக் கொண்டு வந்துடுவாங்க//

பத்திரிகைக்காரங்களுக்கு வாழ்க்கையை ஓட்ட வேணுமில்ல. அதான் இப்பூடி ஒரு வேர்க்,

நிரூபன் said...

விளக்கனுமின்னுதான் 2Gல ராசாவுக்கு அடுத்து களி திங்கப் போற இந்திய Corporate Decision makers படம்!//


ஆஹா.. இது பரபரப்பு விசயமா இருக்கே, கொட்டை எழுத்தில் போட்டு தலைப்புச் செய்தியாக்கி விளம்பரம் பண்ணவேனுமில்ல.......
இன்றைய மாலை முரசில்....

2G கொள்ளையில் தொடர்புடைய மற்றொரு மர்ம நபர்,
விபரம் அறிய, இன்றே வாங்கிப் படியுங்கள், மாலை மலர் விலை ரூ 2/=

நிரூபன் said...

இலங்கையில வெள்ளை வேன் கொலைகாரர்களை கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா நான் இப்போ சொல்லப் போறது உங்களுக்கும், எனக்கும் கூட இது வரை தெரியாது.வெள்ளையுடை களவாணிகளை கேள்விப்பட்டிருக்கிறீங்களா?கலா அக்கா சொல்ற மாதிரி சான்சே இல்லை! அதனால இப்ப பார்த்து தெரிஞ்சுக்குங்க//


ஹி...ஹி..
வெள்ளை வானில கொள்ளைக்கு வந்தாலும், அவங்க கையில துப்பாக்கியும், ஆயுதங்களும் வைத்திருப்பாங்க, முகத்தையும் கறுப்புத் துணியாலை மூடிக் கட்டியிருப்பாங்க..

ஆனால் இவங்க வெள்ளை உடை எல்லோ போட்டிருக்காங்க.

நிரூபன் said...

திருடனுங்க யார்ன்னு மக்களுக்கு தெரிஞ்சுடக் கூடாதாம்.அதனால கால் முதல் தலை முடிவரை பேய்கள் மாதிரி மறைச்சுகிட்டு நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு போறாங்களாம்!இந்த மாதிரி அக்கப்போர் உலகத்துல எங்கேயாவது நடக்குமா?கடைசி படத்துக்கு சிரிப்பு வந்தா மட்டும் கமெண்டுனா போதும்:)//

கடைசி படத்தில, பின்னாடி வாறவர் ஒரு பெண் என்று நினைக்கிறேன்...

நிரூபன் said...

போலீஸ் கூட, தாங்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறோம் எனும் உண்மையை மறைத்து, ஒரு மாதிரியாகப் பார்க்கிறாங்களே;-))

நிரூபன் said...

ராஜ நடராஜன் said...
//சகோ, இன்னைக்கு இரவு கண்டிப்பா கருத்துக்களோடு வருகிறேன்.//

சகோ!கருத்தோட வாங்க!உங்க ரெசிபி மொளகாய்ப் பொடியோட வந்துடாதீங்க:)

எப்படிங்க கொலும்புத் திருடர்கள் இதுவரைக்கும் யார் கண்ணுலயும் படாம இருந்தாங்க!அதுவும் வெள்ளை வெளேர்ன்னு இருந்துகிட்டு?//

சகோ, கொழும்புத் திருடர்களுக்கு பணம் தான் வேணும், கலர் எல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க, நான் வன்னி, யாழ்ப்பாணத்தில் தான் இருந்தேன்,. கொழும்பில் தலை நகருக்கு ஏதாவது விசேட அலுவல் என்றால் தான் போவேன்.

யார் கிட்ட பணம் சுளையா இருக்கோ, அவன் வீட்டிலை இரவு வெள்ளை வானில வந்து சங்கு ஊதிடுவாங்க..