Followers

Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Saturday, December 26, 2015

இதய நோயா? தேள் கடி வேணுமா?


கூகிளான் வடச்சட்டியை இலவசமா கொடுத்தாலும் கொடுத்தான். ஓட்ட வடை எப்படித்தான் சுடுவதுன்னு விவஸ்தையே இல்லைங்ண்ணா!

வட இந்தியாவிலோ அல்லது ஆந்திராவிலோ ஒரு ஆளு மீன் குஞ்சுகளை வளர்த்து அப்படியே முழுங்கினா ஆஸ்துமா போயிடும்ன்னு கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி பீலா விட்டுகிட்டிருந்தாரு.

இருட்டு வெளிச்சத்திலே ஒரு ஆளை பின் தொடர்ந்து போனா அவர் பில்லி சூனியம் வைப்பவர் என்ற திகிலை கொண்டு வந்த தொலைக்காட்சி புததிசாலிகளை கொஞ்சம் நாட்கள் அரபி போலிஸ்காரன் கிட்ட புடிச்சுக் கொடுக்கனும் இல்லாட்டி வாங்க தேள் கடி ரொம்ப சொகமா இருக்கும்ன்னு பதிவர் சேனு வீட்டுக்கு அனுப்பி வைக்கனும் 

இதய நோய் வந்தா ஆட்டோவையோ,ஆம்புலன்ஸையோ புடிச்சு நேரா சேனுங்கிற பதிவர் வீட்டுக்கு போனீங்கன்னா போதும்.அவர் வளர்க்கும் தேளை விட்டு ரெண்டு கொட்டு கொட்டினால் இதய நோய் போயே போயிந்தி!


Saturday, October 24, 2015

பதிவுலக ராதாரவிக்கு

நண்பரே!ஓடிக்கொண்டிருப்பதாலும்,இணைய தடங்களாலும் உடனடியாக மல்லுக்கு நிற்க முடியாததற்கு முதலில் உங்களுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.இலவச விளம்பரத்துக்கு நன்றி என்று பின்னூட்டம் போட்டால் கூட வெளியிட மறுக்கும் நண்பரே உங்கள் பதிவு பாணியிலேயே பதில் சொல்ல வேண்டி காலம் கடந்து தட்டச்சுகிறேன்.

தமிழ்மணம் இப்பொழுதெல்லாம் சண்டை களமில்லாமல் அழகாய் நகர்கிறது.அதற்கான காரணங்களில் விவாதப் பொருள் உரைப்போரும், முக்கியமாக கருத்தாளர்கள்,சண்டைக்கோழிகள் பெரும்பாலும் ட்விட்ரேன், முகத்தை பார்க்கிறேன்,பஸ் விடறேனாக்கும்,பதிவே போட மாட்டேன்... ஆனால் பின்னூட்டத்தில் கவனிச்சுக்கிறேன் என்று பலர் பிரிந்து போனதாக இருக்கலாம். 

பதிவுகள் எழுதுவதை விட மற்றவர்களின் பார்வைகள் எப்படி என்று கவனிக்கும் எனக்கு முன்பு மாதிரி பதிவுலகமே கிடையா இருக்க முடியவில்லை. இதோ போன வார கோழிச்சண்டைக்கே இப்பத்தான் பதில் சொல்ல முடிகிறது.

திரைப்படங்களை நியூஸ் ரீலில் துவங்கி,டைட்டில் கார்டில் பெயர்கள் பார்த்த படங்கள் முதல்,கதாநாயக,நாயகிகளை பின் தள்ளி இளையராஜாவின் இசை,ஒளிப்பதிவாளர்கள் அசோக் குமார்,ஸ்ரீராம்,எடிட்டிங் லெனின்,விஜயன் இன்னும் பல தொழில் நுட்ப கலைஞர்கள்,கவுண்டமணி,செந்தில்,வடிவேல் காலம் என மாறிய போதும் கூட திரைப்படங்கள் அனைத்தும் பார்க்கும் ஞான பண்டிதம் என்னிடம் இல்லை.நடிகர்,நடிகைகள்,இசை,ஒளிப்பதிவு.கதை நல்லாயிருக்கு என விமர்சனம் படித்தோ,இப்பொழுது பதிவர்கள் பலர் ஆஹா,ஓஹோ என்றால் மட்டுமே சில படங்களை இப்பொழுது இணையத்தில் பார்க்கிறேன்.

முக்கியமாக உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, மேதாவித்தனம் என்ற அகம்பாவம் என்னிடம் இல்லை.அப்படி புரிந்து கொண்டால் அது உங்கள் பார்வை. இணைய தளமும்,கைபேசியும் வராத கால கட்டத்தில் என் குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் கூட இதே பாணியில் தான் நான் கடித பரிபாஷை செய்துள்ளேன். இவன் கடிதம் எழுதுகிறானா இல்ல கதை வசனம் எழுதுகிறானா என்ற கிண்டலை என் அண்ணனிடம் வாங்கி கட்டியுள்ளேன்.

பூச்சி முருகனை நினைத்துத்தான் கருத்து சொன்னேன். ஆனால் சங்கிலி முருகன் பெயரை கை தட்டி விட்டது. பின்னூட்டத்தில் பெயர் குழப்பத்தை லூஸ்ல விட்டுட்டேன்.ஆனாலும் நம்ம நக்கீரன் பொருள் குற்றம் கண்டு இலவச விளம்பரம் தந்து விட்டார்.பதிவின் கருத்துக்கள் எதையும் அடைகாத்து சொல்வதில்லை. அந்த அந்த நேரத்து மன நிலை,நிகழ்வுகளை ஒட்டியே கருத்து சொல்லியிருக்கிறேன். 

கலைஞர கருணாநிதி தமிழகத்துக்கு நிறைய செய்திருக்கிறார்.நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். ஆனால் 2ஜி கால கட்டத்தில் குடும்ப நலனை முன் வைத்து ஈழ பிரச்சினையை திசை திருப்பியதை ஆதங்கத்தோடு சொன்னால் அப்ப நீ அ.தி.மு.கவுக்கு வால் பிடிக்கிறவன் தானே என்று நண்பர் பிராண்டுவார். எந்த கட்சிக்கும் வாக்க படாததால் நேர்,எதிர் கருத்துக்களை மட்டுமே முன் வைக்கிறேன். எங்கோ யோகா பற்றி சொல்லியிருக்க கூடும்.அல்லது இஸ்லாமிய சகோதரர்கள் பிரச்சாரம் பண்ணுறேன் பேர்வழிகள் என பதிவுகள் இட்ட கால கட்டத்தில் அரசல் புரசலாக பின்னூட்டங்களும்,பதிவும் வந்திருக்கலாம். உடனே நீ இந்துத்வா என்று இவர் பல்லிளிக்க நான் பல்லை எனக்குள்ளே நற நறக்க... இதோ இப்பொழுது மோடியின் தேனிலவு முடிந்து விட்டது.மாட்டுக்கறி,அப்பாவி இஸலாமியரை கொலை செய்த பஜ்ரங்க பலிகள் பற்றி சொன்னால் எனக்கு பச்சை வர்ணம் பூசுவீரோ?  

எங்கடா சந்து கிடைக்கும்,பேந்தா ஆடலாம்ன்னு பின்னூட்ட நாயகன் வவ்வால் ஏதாவது சொன்னால் நம்ம நண்பர் மாற்று கருத்தை முன் வைப்பார். அவர் ஒன்றை சொல்ல,இவர் ஒன்றை சொல்ல நான் பேன்னு பேய் முழி முழிப்பேன். ஒரு கட்டத்தில் வரம்புகள் மீறி அண்ணன் ராதாரவியின் அங்குசத்தை வீசுவார் நண்பர். நீங்க பதிவுலகில் சொன்னதை விட,சண்டை தவிர... வவ்வால் நிறையவே சொல்லியிருக்கிறார் என நான் பிராண்ட இவருக்கு அமெரிக்காவில் எகிறுவதை எழுத்திலேயே உணர முடியும்.ஏற்கனவே வவ்வால்,ஜெயதேவ் போன்றவர்கள் உங்களை துவைத்து காயப்போட்டு விட்டார்கள். இனி புதிதாக நான் என்ன சொல்ல! உங்கள் பதிவுலக உறவுகள் முறிந்து போனாலும் கூட நான் நட்போடுதானே உங்களை கிண்டல் செய்திருக்கிறேன். உங்கள் தமிழ்,ஆங்கில மொழி நடைக்கு இதை விட இலக்கண,இலக்கிய லட்சணமாய் யாரும் சண்டை போட முடியாது.

பதிவுலகம் நல்ல பாடங்களைத்தான் நிறைய கற்றுத்தந்திருக்கிறது. ஒரு கருத்துக்கு பல பரிமாணங்கள் இருக்கிறது என்பதை நண்பர் மற்றும் வவ்வால் போன்றவர்களின் கருத்து மோதல்களில் கற்றுக்கொண்டிருக்கிறேன்.. எனக்கு பிடிக்கும் கருத்துக்கள் இன்னொருவருக்கு பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை புரிந்து கொண்டுள்ளேன். எதற்காக பதிவிடுகிறேன்? எனக்காகவா!பிறரின் கவனம் ஈர்க்கவா என்ற புரிதல் கூட இன்று வரை என்னிடமில்லை.

எத்தனை பேர் பொது வெளியில் இருக்கிறார்கள் என்று கருத்துரிமை காரணம் காட்டி விமர்சனம் செய்திருப்பேன். அதே போல் நானும் விமர்சனத்துக்கு உட்பட்டவனே. ஆனாலும் இன்னும் என்னை மற்றவர்கள் விமர்சிக்கும் தகுதி நிலைக்கு வளரவில்லையென்பதையும் அறிவேன். ஏதோ உங்களைப் போன்றவர்கள் அருள் பார்வை கிடைக்கிறது.

பதிவுகளில் கருத்து சொல்வதற்கும் தமிழக அரசு இயந்திரங்களும்,மனிதர்கள் இயங்குவதற்கும் நிறைய வித்தியாசங்களை சமீபத்தில் அனுபவ பூர்வமாக கண்டேன்.பதிவுலகம் தீவு மாதிரி.வழி தவறி வந்து விட்டவர்கள் எப்படியோ வழி தேடி ஓடி விட்டார்கள். ஏதோ சிலர் இன்னும் ஓடிக்கொண்டும் தேடிக்கொண்டுமிருக்கிறோம்.

பூச்சி முருகனும் சங்கிலி முருகனும் பெயர் குழப்பத்திற்கு என்னை மன்னிப்பார்களாக!மூளை பதிவு செய்ததை கணினி சரியாக கொண்டு வரவில்லை.மீள் பார்வை பார்க்காத குற்றத்தால் தவறு தவறாகவே போய் விட்டது.

அய்யே! இந்த பதிவை பதிவேற்றும் முன் நண்பர் நம்ம பின்னூட்ட கருத்து வெளியிட்டிருக்கிறாரா என்று பார்த்தேன்.ம்ஹும்! பதிலா பதிவுலகம் போரடிக்கிற மாதிரியிருக்குதே தோரணையில் ஏதோ புலம்பிகிட்டிருக்கார். இதோ! ஏதோ என்னால் ஆன உதவி:)

Thursday, September 20, 2012

(பதுமை) புதுமை ஹிஜாப் (பர்தா) பெண்!

சி.என்.என் தற்போதைய சூழலுக்கேற்றவாறு கொஞ்சம் மசாலா சேர்த்துடுச்சான்னு தெரியல.ஆனால் ஈரானின் கிராமம் ஒன்றில் கலாச்சாரப் போலிஸ் பணி செய்யும் மத போதகர் ஒருவர் மயக்கமாகி மருத்துவ மனைக்குப் போனது மட்டும் உண்மை.நடந்தது என்ன?இதைப்படிப்பவர்களுக்கு ஒன்று சிரிப்பு வரவேண்டும்.இல்லாட்டி எரிச்சல் வரவேண்டும்

கிளரிக் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஈரானிய போதகர் ஹஜடோலிஸ்லாம் அலி பிகெஸ்டி (Hojatoleslam Ali Beheshti) வழிபாட்டுக்கு செல்லும் வழியில் கண்ட இரு பெண்களை முழுக்க முகத்தை மூட சொல்லி நமது ஊரில் விண்ணப்ப படிவத்தில் போடும் சொல்லான மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொண்டும் கூட இரண்டு பெண்களில் ஒருவர் வேணுமின்னா நீங்க உங்க கண்ணை மூடிக்கொள்ளுங்கள் என்று சொல்ல இதனால் தான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்த ஹெஸ்ட்டி மறுபடியும் முகத்தை மூடச்சொல்லி அருகில் செல்ல கோபமடைந்த பெண்கள் போதகரின் ஆடையைப் பற்றி இழுக்க நிலை தடுமாறி கீழே விழுந்த போதகருக்கு அப்புறம் என்ன ஆனோம் என்று தெரியவில்லையாம்.பாதி மயக்கத்தில் பெண்கள் உதை கொடுத்து அவரை திட்டுவது மட்டுமே கேட்டதாம்.

மூன்று நாட்கள் கழித்து மருத்துவமனையிலிருந்து திரும்பிய ஹெஸ்ட்டி இதுவரை காவல்நிலையத்தில் குற்றம் சுமத்தவில்லையாம்.ஆனால் இஸ்லாமிய ஹிஜாப் மரபைக் காக்க வேண்டி கிராமத்து நாட்டாமை இது பற்றி விசாரணை செய்தாலும் தனக்கு ஆட்சேபனையில்லை என்கிறார் ஹெஸ்ட்டி.
பெரும்பாலும் நகர்ப்புறங்களில்தான் இந்த மூடு வேலைகள் நிகழுமென்றும் கிராமப்புறங்களில் இது போன்று யாரும் அறிவுறுத்துவதில்லையென்றும் அரசு சார்பு மெகர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

Sunday, May 27, 2012

நடிகர் விவேக்குடன் ஒரு நேர்காணல்!

தெரியாமல் கணக்கு பத்தி சொல்லிட்டேனா!ஆளாளுக்கு கணக்குல தப்புக்கண்டு பிடிக்கிறததுக்குன்னே சுத்துறாங்க.அதனால் வடை தீர்ந்து போச்சுன்னு அவசர அவசரமா இங்கே வந்துட்டேன்.முன்னாடியே வவ்வால் தமிழ்மணம் வாலில் தீ வைச்சதால ஒட்டகம் வேகமா ஓடுதேன்னு சிரிச்சார்.இந்த மாதம் 14 பதிவு போட்டுட்டேங்களேன்னு சகோ.ரியாஸ் சொல்லித்தான் எனக்கே ஒட்டகம் வேகமாய் ஓடுவதை உணர முடிஞ்சது.14 உடன் 15 சேர்த்தி இந்தப் பதிவையும் ஒட்ட வச்சிடலாம்.வேகம் பற்றி சொன்னவுடன் சி.பி தமிழ்மணத்துல இல்லைன்னு இந்த மாதம் தான் அறிந்தேன்..என்னாச்சு?எனது வருத்தங்களை இதன் மூலம் தெரிவித்துக்     கொள்கிறேன். சி.பி.

நடிகர் விவேக்கை அதிக படங்களில் காண முடியவில்லையே என்று பார்த்தால் பள்ளிகள்,கல்லூரிகள்,குடியிருப்புக்கள் போன்ற இடங்களில் மரக்கன்றுகளை நடப் போய் விட்டார் என்பதனை குவைத் ப்ரண்ட்லைனர் நிகழ்ச்சியின் போது அறிய நேர்ந்தது.பெரும்பாலும் தமிழர்கள் திரைப்படங்கள் மீதான காதலும்,நடிகர்கள் மீதான அளவிற்கு மீதான பற்றுதலும் கொண்டவர்களாக உள்ளார்கள் என்ற பொது விமர்சனம் நம்மிடையே உண்டு.முன்னாள் தேர்தல் கமிசனர் வை.கோபாலசாமி,விஞ்ஞானியும்,டாக்டர் அப்துல் கலாமின் ஆலோசகருமான வி.பொன்ராஜ் மற்றும் நடிகர் விவேக்கின் பேச்சைக் கேட்டேன்.அவரவர் பணியில் மூவரும் சிறப்பாக செயல்பட்டாலும் மக்களைக் கவரும் விதமாக ஸ்பாண்டினியஸாக நகைச்சுவையும், நகைச்சுவைக்கு ஈடாக சிந்தனைகளை கேள்வி பதிலாக விவேக்கின் பேச்சே முந்திக்கொண்டது.

தமிழீழக் கனவு போலவே 2020ல் இந்தியா வல்லரசாகி விடும் என்ற கலாமின் கனவையே பொன்ராஜ் வெளிப்படுத்தினார்.குவைத்தின் ப்ரண்ட்லைனர்ஸ் தொடர்ந்து தமிழகத்தின் முன்ணனியாளர்கள் யாரையாவது வரவழைத்து கௌரவப்படுத்திக் கொண்டிருக்கிறது.தமிழகத்தில் தொடர்ந்து 100 பள்ளி மாணவர்களுக்கான செலவையும் ஏற்றுக்கொண்டு வருகிறது.இந்த முறை சென்னை கேன்சர் அமைப்புக்கு 15 லட்சம் தருவதற்கான முயற்சியை தொடர்ந்திருக்கிறார்கள்.ப்ரண்ட்லைனர்ஸ் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவரான மோகன் தாஸ் ஒரு எழுத்தாளர்.திரை கடல் ஓடியும் திரவியம் தேடு பழமொழியோடு உதவியும் செய் என்ற புதுமொழியை சேர்த்துக் கொண்ட குழுவின் அமைப்பாளர்.

நடன நிகழ்ச்சிகள்,பங்களிப்பாளர்களின் அறிமுகம் என்று துவங்கி பொன்ராஜ்,வை.கோபாலசாமி,அறிமுகப்படலத்துடன் அவர்களின் உரைகள்
அடுத்து நேருக்கு நேர் கேள்வி பதில் என  கோட் சூட் போட்ட ஒருவர் விவேக்கிடம் பொதுவுடமை பற்றி நிறைய சொல்லியிருக்கீங்க ஏன் என்று கேள்வி கேட்க  பார்வையாளர்களைப் பார்த்து  உங்களுக்கு போரடிக்குதா என்ற கேட்க பார்வையாளர்கள் பக்கமிருந்து ஆமாம் ஆமாம் என்று குரல் எழும்ப ஜாலியா சிரிக்க வச்சோமா கிளம்புனோமான்னு இல்லாம முடியமாட்டாங்குதே என்றார்.எப்படியிருந்த நீங்க இப்படியாகிட்டீங்க இந்த டயலாக்கை எங்கிருந்து புடிச்சீங்க? என கோட் சூட் தொடர இவரு வேற! இந்த சூட்டிலும் சூட் போடுறீங்களேன்னு ,கேள்வியின் சுருதி குறைவதையும் கலாய்த்தார்.

யாராவது கேள்வி கேட்க விரும்புறீங்களா என்று விவேக் வினவ கூட்டம் ஆமாம்!ஆமாம் போட  பார்வையாளர்களுக்கு ஒரு மைக் கொடுங்க கண்டிப்பா திருப்பிக்கொடுத்து விடுவாங்கன்னு சொல்லி கேள்விக்காக மைக் பார்வையாளர்களின் பகுதிக்கு விடப்பட

கேள்வி பதில்களில் சில....

முதல் கேள்வி: சார் உங்களை கோயம்புத்தூர்ல பாப்பநாயக்கன் பாளையத்தில் சூட்டிங்கில் பார்த்திருக்கிறேன்.மறுபடியும் பி.எஸ்.ஜி கல்லூரியில பார்த்திருக்கிறேன.ரொம்ப சந்தோசம்.தேங்க் யூ சார் என்று கேள்வியை முடிக்க

விவேக் இது ஒரு கேள்வியா?

இன்னுமொருவர்:சார்!சன் டிவியில் பகுத்தறிவு கேள்விகளாய் ஒலிபரப்புகிறார்க்ள்.விஜய் டிவியில் மக்களுக்கான கருத்தாக சொல்லுகிறார்கள். சன் டிவி பெஸ்ட்டா இல்ல விஜய் டிவி பெஸ்ட்டா சார்?

விவேக்: என்னை ஒழுங்கா தமிழ்நாடு போய் சேர விட மாட்டீங்க போல தெரியுதே!

அடுத்தவர்:  ஒரு பஞ்சு டயலாக் சொல்லுங்க சார்.

விவேக்:ஓகே! என் மேல் அன்பு வைத்து ,என்னை இங்கே வரவழைத்து, என்னை தங்க வைத்து,எனக்கு உணவளித்து,என் மேல் பாசம் வைத்து,என ரசிகர்களோடு பேச வைத்து....வைத்து வைத்துன்னு வருதே அப்பவே தெரிய வேண்டாம்....குவைத்து

அடுத்து ஒரு பெண் சிநேகிதனை!சிநேகிதனை!ரகசிய சிநேகிதனை  பாடி நீங்களும் பாடுங்க என்று விவேக்கிடம் சொல்ல சின்ன சின்னதாய் மழைத்துளிகள் என்று பாட துணிச்சலாக பாடிய பெண்னுக்கு ஒரு ஓ போடுங்க என்று கைதட்டலை வாங்கி தந்தார்.

இன்னுமொரு பெண்: நீங்க நல்லவரா!கெட்டவரா என்று கலாய்த்தார்.

இன்னுமொரு பெண்: சார் உங்களுக்குப் பிடித்த நடிகை யார் என எல்லோரையும் பிடிக்கும் என்று விவேக் சொல்ல ரொம்பவும் பிடித்தவர் என்று அந்தப் பெண் மறுபடியும் கொக்கி போட்டார்.பார்வையாளர் பகுதியிலிருந்து மும்தாஜ் என்று ஒரு குரல் எழும்பியது.

ஒருவர்:திரைப்படங்களில் மதங்களை கலாய்க்கிறீர்களே! நீங்கள் ஆத்திகவாதியா அல்லது நாத்திகவாதியா?

விவேக; நான் படங்களில் பாவாடைச் சாமியார் போன்றும்,மூடநம்பிக்கைகளையே கலாய்க்கிறேன். செல்லாத்தா எங்க மாரியாத்தா, அல்லா அல்லா. ஜிங்குசிக்கு ஜிங் ஜிங்க்,இயேச ஜீவிக்கிறார் என்று பல பாடல்களைப் பாடி இறைவன் உண்டு என்ற தான் ஆத்திகவாதியென்றார்.

இடையே நீ சிக்குன்னு இருக்குறீயே!எனக்கு பக்குன்னு இருக்குதேமா! நீ டக்கரா இருக்குறீயே!எனக்கு டார்ச்சரா இருக்குதேமா என்று பாடினார்.

இன்னுமொருவர் மைக்கைப் பிடித்து என் பெயர் சேகர் என்றார்.நீங்க நாய் சேகரா? என்றார்.மைக்காரர் குவைத் சேகர் என குவைத் சேகர்!குவைத் சேகர் என்றார் விவேக்.

கேள்வி:நீங்கள் அப்துல் கலாமை எப்பொழுது முதன் முதலாக சந்தித்தீர்கள்?
விவேக்: நான் படப்பிடிப்புக்காக கூவம் ஆற்றில் முங்கி எழுந்த நிலையில் அப்துல் கலாமிடமிருந்து போன் வந்தது.உடனடியாக குளித்து விட்டு அவருடன் பேசி போட்டோவும் எடுத்துக்கொண்டேன்.

இந்தியா பற்றி சொல்ல நிறையா இருக்குதுங்க

பல மொழி,இனம்,சாதிகளுக்கிடையிலும்,ஊழல்களுக்கு மத்தியிலும் இந்தியா என்ற தேசம் உயர்ந்து நிற்கிறது.இந்தியா இஸ் கிரேட் என்றார்.யோகா என்ற அற்புதமான விஞ்ஞானத்தை உலகத்துக்கு தந்தது இந்தியா என கூட்டத்தில் ஒருவர் பெருமை என கூவ பெருமையில்ல ராஜா கம்ப்யூட்டரக் கண்டு பிடிச்சது அமெரிக்காவாக இருக்கலாம்.ஆனால் அந்தக் கம்ப்யூட்டரை இயக்கும் மூளை இந்தியர்களுடையது.

வீட்டை,உறவினர்களை,தமிழ்நாட்டை விட்டு வந்து இங்கே உழைக்கும் நீ தெய்வண்டா என்று பார்வையாளர்களை குளிர்வித்தார்.நான் இங்கே வருவதற்கு முன்பு தயங்கியதுண்டு.ஆனால் தமது பணிகளுக்கு அப்பாலும் இப்படியொரு அசோசியசனை நிகழ்த்துவது பெரிய விசயம் என்று ப்ரண்ட்லைனர்களைப் பாராட்டினார்.

ஒரு பெண் நீங்கள் அரசியல்வாதியாகி முதல் அமைச்சர் ஆக விரும்புகிறீர்களா என்றார்.அதற்கு வேற ஆளைப்பார் என்று அழுத்தி சொன்னார்.

சில நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு சத்தம் போடவும் அதில் ஒரு இளசு
 குவைத் சரக்கடிங்க சார் என்றும் குரல் எழுப்பினார்.அது விவேக்கின் காதுக்கு கேட்டதோ இல்லையோ தொடர்ந்த சத்தத்தைக் கேட்ட விவேக் அந்த மூலையில் ஏதோ கொஞ்சம் சத்தம் வருகிற மாதிரி தெரிகி|றதே!குவைத்துல ட்ரைன்னு கேள்விப்பட்டேனே என்றார்.

செல்போனால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விளக்கினார்.விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆவதைப் பற்றி அழகான கவிதை ஒன்று சொன்னார்.

இவ்வளவெல்லாம் விவேக் பற்றி சொல்லிட்டு பதிவில் ஒரு மெசேஜ் வைக்கலைன்னா நல்லாயிருக்காது.

இலங்கையிலும் ஒரு மைக் டைசன்:)

கோதாவுல தோத்துடுவோம்ன்னா என்ன செய்யனும்?வடிவேல் மாதிரி தோத்தவனுக்குத்தான் பரிசுன்னு கோப்பையை தூக்கிட்டு வந்துடனும்.இல்லைன்னா மைக் டைசன் மாதிரி சண்டை போடுறவர் காதையாவது புடிச்சி கடிச்சு விடனும்.இது கோதாவெல்லாம் இல்ல.சும்மா பேசிகிட்டிருந்திருக்காரு போல தெரியுது.பேச்சோட பேச்சா துனேஷ் கன்கண்டா என்ற இலங்கை பாராளுமன்ற எம்.பி ஒருத்தரோட மூக்கை கடிச்சு வெச்சுட்டாராம்.மூக்கை இழந்தவருக்கு வயசு 40.பிசினஸ்மேனாம்.கொடுக்கல் வாங்கல்ங்கிறது இதுதானோ!

மூக்கை கடிக்கும் இலங்கை எம்.பி பற்றி படிக்கும் போது மைக் கீழே விழுந்துடுச்சுன்னு சாக்காட்டுல வேட்பாளரை மோதிரக்கையால் கொட்டிய நம்ம விஜயகாந்த் எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணல!

Tuesday, May 22, 2012

பின்னூட்டங்கள் கூட இல்லாமல் சூடா வடையா:)

தமிழ்மணமே!இது நியாயமா!இது அடுக்குமா! நேரமிருந்தால் என் கடைல வந்து ஒரு வடை சாப்பிட்டு போங்களேன். நானும் வர்றவங்க நேர விரயம்ன்னு ஓடுமளவுக்கு மாங்கு மாங்குன்னு ஊர் மொக்கையல்லாம் சொல்றேன். எனக்கு ஒரு சூடான நாற்காலி கூட வேண்டாம்.கொஞ்சம் நேரம் கூட்டத்தோடு கூட்டமா நடுத்துண்டு கூட வேண்டாம்.வலது பக்கம் ஒண்ணு ரெண்டு தேறும் பின்னூட்ட ரசிகர்கள் கூட வேண்டாம்.

ஆனால் பேருக்காவது ஒரு மைக் டெஸ்டிங்,நமக்கு நாமே திட்ட பின்னூட்டம் கூட இல்லாமல் ஒரு பதிவு சுடு சுடு சூடான தோசை சாப்பிடுவது சரியா! மீண்டும் ஒரு முறை அவ்வ்வ்வ்வ்வ்...

என்னை பஸ்ல கூப்பிட்டாக
பேஸ்புக்குல விசிலடிச்சாக
டிவிட்டர்ல கூவ சொன்னாக
இமெயிலுல தூது விட்டாக
அட எல்லாம் உன்னால
வேண்டாமுன்னு சொன்னேன்
பின்னூட்டத்தால!

டிஸ்கி: இதுக்குப் பேர்தான் கிள்ளி விடறது:)

Monday, May 7, 2012

தமிழ்மணமே! நானுமா!அவ்வ்வ்வ்வ்வ்வ்.

நேற்று மெயிலைத் திறந்தால் ஹேமா,வவ்வாலின் பின்னூட்டங்கள் கண்ணில் தெரிய பதில் சொல்லலாமென்று எனது பதிவுக்குப் போகலாமென்று வெளியேற நினைக்க,தமிழ் மணத்தின் கடிதமொன்றும் கண்ணில் பட்டது. ஒரு சில .பதிவுகளில் தேவை கருதி குறிப்பிடுவது தவிர தமிழ்மண நிர்வாகிகளை நலமா என்றோ,இந்தப் பதிவர் ரொம்பவே கிள்ளுறார் சார் என்றோ கூட நான் இதுவரை அவர்களுக்கு ஒரு கடிதம் கூட எழுதியது கிடையாது. ரொம்ப......அமைதியா ஒரு மூலையில் நான் பாட்டுக்கு பேந்தா விளையாடிக்கொண்டிருக்கமூணு சீட்டு விளையாடுகிறேன் என்ற சந்தேகத்தில் ஈழ,இஸ்லாமிய சகோதரர்களுக்கு என்ற பதிவை தமிழ்மணம் நடா! உனக்கு தடா என அறிவித்திருக்கிறார்கள்.

மதம் குறித்தான எனது விமர்சனங்கள் தொட்டுக்க ஊறுகாய் மாதிரிதான்.மத சார்பாளர்களுடன் கூட நான் அதிகம் மல்லுக் கட்டியதேயில்லையே! முன்பு .தமிழக தேர்தல் காலத்து விமர்சனங்களையும்,இப்பொழுது ஈழப் பிரச்சினையை மட்டுமே அதிகம் விமர்சனம் செய்திருக்கிறேன்.ராஜ பக்சே கூட சண்டைக்கு வராத புள்ளப்பூச்சியான எனக்கு தடாவா!அவ்வ்வ்வ்வ்வ்!

Thursday, January 12, 2012

என்னய்யா தனித்தனியா கூத்து கட்டுறீங்க!

ஆட்டம் நல்லாத்தேன் துவங்குச்சு.இடையில ஒருத்தர் பேசி வச்சிகிட்டு செஞ்சாரோ இல்ல கூட்டத்துல கல்லெறிஞ்சுதான் பார்ப்போமேன்னு கூட்டத்தைக் கலைச்சு விட்டுட்டாரு.

துவக்குதுல விவாதம் மாதிரி துவங்க அப்புறம் நீ அப்புடியாக்கும்ன்னு  இவர் சொல்ல இல்ல நீதான் இப்படியாக்கும்ன்னு அவர் சொல்ல,இன்னொருத்தர் நடுவுல பூந்து யோவ் அந்தாளு என் நண்பேண்டான்னு கத்த போய்யா உங்க வண்டவாளமெல்லாம் எனக்குத் தெரியும்ன்னு இவர் திரும்ப கத்த இதப் பார்த்துகிட்டு கம்முன்னு கிடந்த இன்னுமொரு மூணாவது மனுசனும் சேர்ந்து வந்த கத்த இப்ப ஊரே ரெண்டாகிப் போச்சு.

இப்ப இவருக்கு பத்து பேரு!அவருக்கு எட்டுப்பேர்ன்னு தனித்தனியாத்தான் உள்குத்து வேலைகள்.ஆளுக நேருக்கு நேராப் பார்த்துகிட்டாத்தான் கத்தியும்,கம்பும்,அரிவாளும் தூக்குவீங்கன்னுதானே இந்தக் கரையில நீ உட்கார்ந்துக்கோ அந்தக்கரையில நீ உட்கார்ந்துக்கோன்னு இடத்தப் பட்டாப் போட்டுக்கொடுத்தா இக்கரைக்கும்,அக்கரைக்கும் ஏனய்யா இன்னும் சவுண்டு உட்டுப் பார்க்கிறீங்க!

கரையில உட்கார்ந்துகிட்டு அலையப் பாருங்க!அதோ அங்கே ஒரு படகுக்காரன் போறான் அதை ரசிங்க!இதோ அங்கே ஒரு பொண்ணு தெம்மாங்கு ராகத்துல என்னமோ பாடுது அதைக் கேளுங்க.இன்னொருக்கா காமிரா ஓவியம் வரைஞ்சா இப்படித்தான் இருக்கும்ங்குது.ரஜனி சுத்தறாரு,கமலு மெர்சலாராரு!திண்ண காலின்னாலும் விடுவேனாக்கும் உங்களைன்னு தாத்தா வேற தள்ளாத வயசுல ஓடியாராரு.கொடிக்கம்பத்த கட்டிப்பிடிச்சிட்டு பிறவிப் பயனடையுங்க!இல்ல ஜெ போடுங்க!கும்மிக்கா உங்களுக்கு பஞ்சம்?

ஒன்னுமே புடிக்கல சண்டைதான் பிடிக்குதுன்னா எப்பூடி சார்?

Sunday, January 8, 2012

கொலவெறி அரபி

ஐ.நாவின் அறிக்கைகளும்,மனித உரிமைக் கழகங்களும் செய்ய இயலாததை நகைச்சுவையாக அரபிக் கொலை வெறிப் பாடல் சாதிக்கிறது.சவுதி அரேபியாவில் இந்தப் பாடல் அரேபியர்களிடம் வலம் வருவதாகக் கேள்வி.
கொலவெறி அரபிக்கு சொந்தக்காரர் பய்ஸ் சவுத்ரி - பாகிஸ்தானியர் யூ ட்யூப்பில் இது வரையிலான ஹிட்டுக்கள் 791222.

காணொளிக்கு க்ளிக்

படிச்சிகிட்டே படம் பார்க்க புரிந்த வரையில் சொற்பதங்கள்....

அய்வா சதிக் அன பி  வன்னி சாங் அரபி சாங்
மாபி கொய்ஸ் சாங்

வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி கல்லி வல்லி

வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி கல்லி வல்லி

வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி கல்லி வல்லி

ஏ அத கபிலு இல்பசு அபியது
கல்பு குல்லு அசுவது
உவா குல்யூம் கிரு கிரு கிரு
அத கபிலு

பிலுசு மாபி மாபி அக்கலு
அன முஷ்கினு இபுக்கி
மாபி ராகா மாபி நூமு
லேசு அதா அபிபீ

வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி கல்லி வல்லி

பாபா பாபா பாபா பாபா அத கபிலு முஸ்கிலா
பாபா அத கபில் மாபி சவி நகல் கபாலா
அத சவி குருஷ் ந ஆயி..இ.இ.ஈஈஈ

ம்ம்ம்ம் காமு ஜாதா....லாஸிம் அரபிக்

ம்ம்ம்ம் சுகுலு ஜாதா ராத்து மாபி
ராத்து குல்லு வெயினு
சவ்வி சாயா கசல் சயாரா
நவ்வி குல்லு பெய்த்து
இன்சான் இன்சான் அன இன்சான்
மாபி அய்வான் எ ய முதிர்

மாமா மாமா அன மாமா தபான் யெ கபிர்
அத நபரு மாபி கொயசு
லேசு சவ்வி கூலு
மாபி இத்துகா சவ சவ சுகுலு

அன இரு சபலு
வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி
வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி

லேஸ் அதா கல்லி வல்லி கல்லி வல்லி


மேலே சொன்னதுக்கு கிட்டத்தட்ட அரபி கோனார் நோட்ஸ்...


கபிலு உடுத்தறது வெள்ளை
இதயமோ ரொம்ப கருப்பு
எல்லா நாளும் கிர் கிர் கிரு
இந்தாளு பேராசைக்காரன்
காசுமில்ல,சாப்பாடுமில்ல
நானும் ஒரு ஏழை அழறேனே

ஓய்வுமில்ல உறக்கமில்ல
என்ன இது அபிபி
வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி கல்லி வல்லி

பாபா பாபா பாபா பாபா இந்தாளு ரொம்ப பேஜாரு
சம்பளமில்ல...எல்லா சம்பளமும் எங்கே
டீ போடறேன்,காரு கழுவிறேன்,வீட்டையெல்லாம் சுத்தம் செய்றேன்
நானும் மனுசந்தான் மிருகமில்லை ஓ!முதிர்
மாமா மாமா (என்னோட அம்மா) ரொம்பவே வருத்தப்படுது
இந்தாளு ரொம்ப மோசம் என்ன செய்றது?


வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி

வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி

கபிலு; இன்னொருவரின் பாஸ்போர்ட்டுக்கு சொந்தம் கொண்டாடுபவர்

கல்லி வல்லி ; இடத்துக்கு தகுந்த மாதிரி பொருள்..ஒன்றை உதாசினப்படுத்துவதற்கு கல்லி வல்லி எனப் பொருள்.
இங்கே சுருக்கமா பெரிய பேஜாரப்பா

முதிர் : மேலாளர்

Saturday, August 20, 2011

ரோடியோ குதிரையும் ப.சிதம்பரமும்!

தமிழ்நாட்டுல இருந்து ஒருத்தன் பிரதமராகும் தகுதியுண்டு என்ற முந்தைய காலத்து எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டதுமல்லாமல் நிஜ வில்லனாகவே ப.சிதம்பரம் மாறிப்போனது காலத்தின் கோலம்.இந்த லட்சணத்துல முன்பொரு முறை ஜோதிஜி ப.சிதம்பரம் படைசூழ பந்தாவெல்லாம் காட்ட மாட்டாரே என்ற சந்தேக தொனியை வேறு ஒரு பின்னூட்டத்தில் காண்பித்திருந்தார்.அவர் விரும்பாவிட்டாலும் அவரோட பதவிக்கு படைசூழ பாதுகாப்பு அவசியம்.சரி அதை விடுங்க!

நேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் அன்னாஹசரே எங்களுடன் பேசமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்.எது ஜனநாயக கட்டமைப்பு என்று அன்னா ஹசாரே நினைக்கிறார்?இந்த கட்டிடமா!இந்த மேசையா!இந்த இருக்கையா! ஜனநாயக தேர்தல் முறைப்படி தேர்ந்தெடுத்து வந்த நாங்கள் அல்லவா ஜனநாயகத் தூண்கள் என்ற பொருள்படும்படியான விவாதத்தை முன் வைத்து தாங்களே பாராளுமன்ற பிரபுக்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.அஃறிணைப் பொருட்கள் அசையாமல் நின்றாலும் அவை எப்பொழுதுமே பாராளுமன்ற பாரம்பரியத்துக்கு சொந்தமானவை. எத்தனை தில்லாலங்கடிகளை நீங்கள் உட்பட கண்கூடப் பார்த்திருக்கும் இவைகள்! அசைபவர்களாய் இருந்த நீங்கள் அசையாத ஒரு கிழவனிடம் தோற்றுப் போனீர்களே!துவக்கம் முதல் காங்கிரஸ் செய்தியாளர் மனிஷ் திவாரியின் குரலும்,பேச்சுத்தோரணையுமே காங்கிரஸ்க்கு முதல் ஆப்பு.அதற்குப் பின் கபில் சிபல் என்ற கிரிமினல்(மூளை)லாயர்!கூடவே நம்ம அண்ணாத்தே ப.சிதம்பரம் நாந்தான் ஜெயிப்பேனாக்கும் கோதாவில்.

Entertainment City என்ற ராட்சத ரங்கராட்டினம் போன்ற பொழுதுபோக்கு பூங்கா ஒன்றுக்கு குடும்பதோடு சென்றிருந்தோம்.அங்கே ஒரு மரத்தாலான மின்சாரத்தால் இயங்கும் குதிரை ஒன்று உள்ளது.அமெரிக்காவின் டெக்ஸாஸ் போன்ற இடங்களில் நிகழும் ரோடியோ(Rodeo) குதிரை விளையாட்டு என்ற குதிரை மாடல் அது.மரக்குதிரையை இயக்குபவர் ஒரு பெங்களாதேசி.அது ஒன்றும் பெரிய விசயமில்லை.மெதுவான வேகம்,மிதமான வேகம்,தள்ளி விடும் வேகம் என்ற மூன்று பட்டன்கள் உள்ளன.டிக்கட் எடுத்து ரோடியோ மரக்குதிரையில் அமரந்தால் முதலில் மெதுவான வேக பட்டனையே பெங்களாதேசி தொடுவார்.ஒரு நிமிடம்தான்.மறுநிமிடம் மிதவேக பட்டனை தொடுவார்.தாக்குப்பிடிக்க இயலாதவர்கள் மித வேகத்திலேயே பாதுகாப்பான பிளாஸ்டிக் தரையில் விழுந்து விடுவார்.இதற்கும் மசியாத விடாக்கண்டன்கள் சிலர் இருக்க கூடும்.குதிரையின் கழுத்தைப் பிடித்தால் ரோடியோ குதிரை எந்த குதி குதித்தாலும் கீழே விழாமல் இருக்க முயல்வார்கள்.
கபில் சிபல் ஓட சிதம்பரம்  குதிரையிலிருந்து விழும் கணங்கள்.
நீங்கள் சில ஆங்கிலப்படங்களிலோ ரோடியோ ரைடர்ஸ்களைப் பார்த்திருக்கலாம்.குதிரை குதிக்கிற வேகத்தில் கும்மியடிக்கப்போனவன் கீழே விழுந்தே போவான்.இப்படித்தான் கபில்சிபலும், ப.சிதம்பரமும் அன்னாஹசாரே என்ற சண்டிக்குதிரையை அடக்குவது நீயா?நானா என்ற போட்டியில் குதிரையிலிருந்து குப்புற விழுந்ததுமல்லாமல் குதிரை இருவரையும் குழி தோண்டிப் புதைச்சு விட்டு எங்கய்யா ரோடியோ ஓனர் மன்மோகன் சிங்ன்னு கனைச்சுகிட்டு நிக்குது:) அவரோ ஆளை விட்டா போதும்ன்னு அரக்க பரக்க மைதானத்தை விட்டே ஓடுகிட்டிருக்கார்.இந்தக் குதிரை எப்படியும் உங்களை உதைக்கும்ன்னு தெரிஞ்சும் அதற்கு கடிவாளம் போடப் போக எதிர்பார்க்காமல் எட்டியே உதைத்து விட்டது.சுத்தட்டும் இரண்டு ரவுண்டு ஜெ.பி மைதானத்துலன்னு விட்டிருக்கலமோன்னு இப்ப கவலைப்பட்டு என்ன பலன்?குதிரை காட்டுன வேகத்துல  குதிரைக்கு நிறையவே ரசிகர்கள் கூடிவிட்டார்கள். இனி நீங்களாச்சு!குதிரையாச்சு.

Friday, August 19, 2011

நிருபனுக்கு கடிதம்

நிருபன்!நலமா?நலமறிய ஆவல்
இங்கே தாத்தா கருணாநிதியும்
அம்மாவும் நலமே!
இரண்டு பேருக்கும் எப்பவுமே சண்டை
அது மட்டுமே இங்கே பிரச்சினை
அண்ணன்,அக்கா,தம்பி,தங்கை அனைவரும்
உங்களை கேட்டதா சொல்லச் சொன்னாங்க

அண்ணன் பிரபாகரன் செய்தி
கேட்டு வருத்தமடைந்தேன்
நிழலோடு அருமை வெயிலில்
தெரியும் பழமொழி தெரியும்தானே!

நிருபன்! நிலத்தில் சூடு அதிகம்
என உறவொன்று சொல்லக்கேட்டேன்
உங்களுக்கு தலை சுற்றி உள்ளதாக சொன்னார்

நிருபன்! உடலை பார்த்துக்கொள்ளவும்
கனடாவிலிருந்து ரதி அனுப்பிய மருந்து கிடைச்சதா?
ஒருவேளை பதிவு மருந்தையும் மறுவேளை
பின்னூட்ட மாத்திரைகளையும் கலந்து குடிச்சா
இரண்டு நாட்களில் சரியாகி விடும்


பக்கத்து வீட்டுக்காரன் என்ன சொல்கிறான்?
ராணுவக்காரன் சண்டைக்கு வந்தானா?
உறவினர்கள் கஷ்டத்தில் இருப்பதாக
ஊர் முழுக்க பேசிக்கொள்கிறார்கள்
லண்டனிலிருந்து அனுப்பும் பணத்தையெல்லாம்
பாவிகள் புடுங்கி கொள்வதாக பேச்சு!மெய்யாலுமா?

டக்ளஸு மேலே கேஸ் இருக்குது
தமிழ்நாடு பக்கம் வந்தா
களி திங்கனும்ன்னு சொல்லி வையுங்கோ

பிள்ளையானும்,கருணாவும்
இன்னும் சண்டை போடுறாங்களா?
நல்லதுக்கில்லைன்னு சொல்லி வையுங்கோ

உறவுகள் நிலத்தை ராணுவக்காரன்
பிடுங்கி கொண்டதாகவும் தகவல் வந்தது
கோர்ட்டில் கேஸ் போட்டிருக்கோம்
தீர்ப்பு நமக்கு சாதகமா வருமென்று
அம்மா சொல்றா!பொறுத்திருப்போம்

உறவுகளை கேட்டதா சொல்லுங்கோ
நட்பா இருக்கும் சிங்களக் குட்டி பசங்களையும்
கேட்டதா சொல்லுங்கோ
மற்றவை பதில் கண்டு பதில்

இப்படிக்கு
அன்புள்ள
சகோ.

Wednesday, April 20, 2011

2G களவாணிகளும் சிரிப்புத் திருடர்களும்

நம்மூர்ல போலிசுகிட்ட களவாணிக மாட்டிகிட்டா யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ நம்மூர் ஊடகத் துறைக்கு பலாப்பழம் சாப்பிடற மாதிரி.கிடைக்கிற முக்கு சந்து பொந்து,கோர்ட் வாசல்,போலிசு வண்டில ஏறுவது, உட்காருவது, இறங்குவதுன்னு கம்பி வளையம், ஜன்னல்ன்னு ஏகப்பட்ட இடத்துல தங்கள் காமிரா,வீடியோ திறமையைக் காட்டி படம் புடிச்சு செய்தியைக் கொண்டு வந்துடுவாங்க.
இதுல உண்மையான களவாணிகளும்,பொய்க் கேசுல பாதிக்கப்பட்டவங்களும் சேர்த்தி.அதனால் இந்திய சட்டமும்,நீதித்துறையும் ஊடகத்துறை கிட்டேயிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் கையால முகத்தை மறைக்கவும், வசதிப்பட்டவங்களாயிருந்தா கைல கர்சிப்,துண்டு  எதையாவது வைச்சு மூஞ்சிய மறைச்சிக்கிடுவாங்க என்பது உங்களுக்கு எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான்.விசுவலா உங்களுக்கு விளக்கனுமின்னுதான் 2Gல ராசாவுக்கு அடுத்து களி திங்கப் போற இந்திய Corporate Decision makers படம்!
இலங்கையில வெள்ளை வேன் கொலைகாரர்களை கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா நான் இப்போ சொல்லப் போறது உங்களுக்கும், எனக்கும் கூட இது வரை தெரியாது.வெள்ளையுடை களவாணிகளை கேள்விப்பட்டிருக்கிறீங்களா?கலா அக்கா சொல்ற மாதிரி சான்சே இல்லை! அதனால இப்ப பார்த்து தெரிஞ்சுக்குங்க.
 
திருடனுங்க யார்ன்னு மக்களுக்கு தெரிஞ்சுடக் கூடாதாம்.அதனால கால் முதல் தலை முடிவரை பேய்கள் மாதிரி மறைச்சுகிட்டு நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு போறாங்களாம்!இந்த மாதிரி அக்கப்போர் உலகத்துல எங்கேயாவது நடக்குமா?கடைசி படத்துக்கு சிரிப்பு வந்தா மட்டும் கமெண்டுனா போதும்:)

படங்களின் சொந்தக்காரர்கள்:
:1.கூகிள்
2.டெய்லி பயனீர்
3.ஐலண்ட். 

Wednesday, April 13, 2011

ரஜனியின் அதிரடி

ஆடுன காலும் பாடின வாயும் சும்மா  இருக்காதுங்கிற மாதிரி  எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா!நம நமங்குது.இந்நேரத்துக்குப் பாதிப் பேர் மை வச்சிருப்பாங்க.ஓட்டு இதுதான்னு தீர்மானம் செய்திருப்பாங்க எல்லோரும்,அதனால் இது தேர்தல் பிரச்சாரமோ அல்லது  நான் சொல்வதனாலோ ரஜனி சொல்வதனாலோ ஒன்றும் மாற்றம் வந்துடப்போறதில்ல:)

ரஜனி என்ன சொல்வார் என்கிற எதிர்பார்ப்பு எல்லா தேர்தலிலும் நிகழும் க்ளைமாக்ஸ்தான்,சில சமயம் அவர் சொல்றது ஊத்திகிட்டாலும் கூட:)இந்த முறை என்ன சொன்னார்ன்னு பதிவு செய்துகிட்டு மே13 ல மக்கள் மனநிலையை ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

நம்மூர் பத்திரிகைகள் செய்திகள் எப்படி வெளியிடுகின்றன என்ற பார்வையில் கீழே...

மக்கள் ஒரு நல்ல ஆட்சியை
எதிர்ப்பார்க்கிறார்கள் : ரஜினி பேட்டி


நடிகர் ரஜினிகாந்த் என்பவர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட போயஸ் தோட்டத்தில் வசித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே:)

இவர் தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி சாவடியில் வாக்களிக்க சென்றார். அதற்கு முன்னதாக அதிமுக என்ற கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்பவரும் இந்த சாவடியில் வாக்களிக்க வந்திருந்தார்.

பின்னர் ரஜனியை வழக்கம்போல் செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர்.  அப்போது அவர்,  ’’விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆகையால் மக்கள் ஒரு நல்ல ஆட்சியை எதிர்ப்பார்க்கின்றனர்’’ என்று கூறினார்.

ரஜினிகாந்த் எப்போதும் வாக்களித்துவிட்டு கைகைளை மட்டும் உயர்த்தி காட்டிவிட்டு போய்விடுவதே வழக்கமாம்.ஆனால் இந்த முறை இலவச அப்பாவி மக்கள் மேல் பரிதாபப்பட்டு அவர் விலைவாசி உயர்வை பற்றி பேசியிருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக பத்திரிகைகளும்,அதிகார வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.மக்கள் வழக்கம் போல் சீரியலிலும்,சாலை நெரிசலிலும்,விலைவாசியிலும் சிக்கித்தவிப்பதாக நமது தேர்தல் நிருபர் செய்தி சேகரித்துள்ளார்.

 ரஜனியின் ஆதரவு யாருக்குன்னு புரியாம இருந்தாலும் யார் மீண்டும் வரக்கூடாதுன்னு இப்ப புரிஞ்சிருக்குமே:)

Sunday, April 10, 2011

ராகுல்!எங்க ஊருக்கும் வந்துட்டுப் போங்க:)

நான் இப்பவெல்லாம் சினிமாவே பார்ப்பதில்லை!வடிவேலு முதல் ராகுல் வரை நீ முந்தி நான் முந்தின்னு சும்மா பொளந்து கட்டுறாங்க:)இப்பத்தானே எங்களுக்கெல்லாம் புரியுது!ராகுல்! நீங்க தமிழகம் வந்தாலும் ஏன் தமிழக முதல்வரை சந்திப்பதில்லையென்று.ஸ்பெக்ட்ரம் கூட உங்களோட உள்வேலைகள்ன்னு வேற பேசிக்கிறாங்க!உண்மையா?

87 வயதாகிவிட்ட அச்சுதானந்தன் மீண்டும் கேரள முதல்வராக வேண்டுமா? என்று மக்கள் யோசிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தந்துள்ள காங்கிரசை ஆதரிக்க வேண்டுமென ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

’சட்டப் பேரவைத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வென்றால், அடுத்த தேர்தலின் போது 93 வயதாகும் முதியவர் (வி.எஸ். அச்சுதானந்தன்) உங்கள் முதல்வராக இருப்பார். இந்த நிலைமை உங்களுக்கு வேண்டுமா?

இன்னுமொரு நாள் தேர்தல்ப் பிரச்சாரத்துக்கு நேரமிருக்கிறது.உங்களுக்குப் பிடிச்சிருந்தா கேரளாவிலிருந்து ஒரு டாக்சி புடிச்சிகிட்டு நீங்க கோவை எக்ஸ்பிரஸ்,சேரன் ரயிலில் கூட சென்னை வரலாம்.இல்லாட்டி விமானமென்றாலும் சரி! கலாநிதி மாறன் புதுசா ஸ்பைஸ்ஜெட் திறந்திருக்காரு.டெல்லி போறதுக்கு முன்னாடி ஒரு எட்டு தமிழகமும் வந்து சொல்லிட்டுப் போங்க:)

Wednesday, March 9, 2011

இந்த ஆள திருத்தவே முடியாது:)

ஒரு மனுசன் எப்படியெல்லாம் நாக்கை திருப்பலாமுன்னு படிக்கும் போது வரும் சிரிப்புக்கு அளவேயில்லை.நகைச்சுவை பதிவு போடும் பதிவர்கள்,பின்னூட்டத்துல பின்னுற ரிதமிக் டைமிங்காரர்களுக்கு கொண்டு வந்து கொட்டுறார் கருணாநிதி.சிரிப்பா சிரிக்கும் பொழப்ப நினச்சு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் இந்த பதிவு நகைச்சுவை பதிவில் இடம் பெறுகிறது:)

இனியும் கேட்கிறவன் கேனயன்ங்கிற நினப்புல உதிர்த்த முத்துக்கள்....

தி.மு.க கூட்டணியில் கட்சிகள் இணையும் போது நடக்கும் சில சாதாரண நிகழ்வுகளை வேண்டுமென்றே சில பத்திரிகைகள் திசை திருப்பி விட்டன. கூட்டணி அமைப்பதிலே இழுபறி, தயக்கம் என்றெல்லாம் நிலை இருப்பதாக நம்முடைய அன்பிற்குரிய பத்திரிகையாளர்கள் சில பேர் மிகமிக கேவலமாக ஆத்திரத்தோடு, பொறமையோடு, அசூயையோடு இந்த அணி உருவாக கூடாது, உறவு ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தால் தவறான செய்திகளை திசைதிருப்பல்களை செய்தார்கள். அவர்களுக்கு எல்லாம் நல்ல பதிலாக இன்றைய நாள் (காங்கிரஸ் உடன் கூட்டணி) அமைந்திருக்கிறது.

திராவிட முன்னேற்ற கழகம் இன்று இந்த அணியிலே இருக்கின்ற கட்சிகள் இவைகள் எல்லாம் எந்த அளவுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடு, தோழமையோடு, நேசம் நட்பு இவைகளிலே நீங்காத பற்றுமு கொண்டவை என்பதற்கு எடுத்துக்காட்டாக தி.மு.கழகம் 121 இடங்களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்ற இடங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக்கட்சிகள் போட்டியிடுகின்ற வாய்ப்பை வழங்கியிருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

பாட்டாளி  மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்களை கேட்டுக் கொண்டதற்கிணங்க 31 இடத்திலே ஒரு இடத்தை விட்டு தந்து 30 இடங்களாக பா.ம.க தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதைப் போலவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் தான் இருந்தன. அவர்கள் ஒரு இடத்தை விட்டுக் கொடுத்து இரண்டு இடங்களை தக்க வைத்துக் கொண்டனர். இவைகளை எல்லாம் கூட்டினால் தான் காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் வந்துள்ளன.
 
வடிவேலு தோற்றார் போங்க:)

Friday, November 26, 2010

நிஜமாகவே சமீபத்திய மறுமொழிகள்:)

டோண்டு பெரியவர் மேல இருக்குற கடுப்புல அவர் பக்கம் போவதேயில்லை.அப்படியும் தப்பி தவறி சில நல்ல தலைப்பை வைத்து விடுவதால் என்னதான் சொல்கிறாரென்று பார்த்ததில் கண்ணுல பட்டது என்னோட தலைப்பு:)

சிலேடை புரிந்தவர்கள் ஜமாய்ங்க மக்கா!நான் கொஞ்சம் சிரிச்சிட்டு வருகிறேன்:)

Wednesday, October 20, 2010

வடிவேலுவும் எந்திரன் மகன் சிந்திரனும்

சரக்கொன்னும் இல்லியான்னு நசரேயன் கேட்டதால இது நசரேயன் ஸ்பெஷல்:)இப்ப காட்சிகள் ம்யூசிக்குடன் ஸ்டார்ட்..
எல்லா பய புள்ளகளும் போகுதேன்னு எந்திரனின் பாகங்களை கழட்டி வைத்த ம்யூசத்துக்கு ஒரு நாள் வடிவேல் போகிறார்.ஆகா!எந்திரனத்தான் கருணாசும்,சந்தானமும் ஆட்டையப் போட்டுட்டாங்க எந்திரன் 2ல எப்படியாவது கலக்கிடணுமுன்னு அங்குமிங்கும் இயக்குநர் ஷங்கரைத் தேடி நோட்டம் விடுகிறார்.
 
அப்ப ச்சிட்டி மாதிரி ஒரு பையன் ஸ்கூலுக்குப் போறதப்  பார்த்துட்டு பாவம் யாரு பெத்த புள்ளையோ தனியா புலம்பிகிட்டு இருக்குன்னு வடிவேல் பையன்கிட்ட் மெதுவாப் பேச்சைத் துவக்குகிறார்!
 
வடிவேல்: யாருப்பா நீ?உன் பேரென்ன?
 
பையன்: என் பேர் சிந்திரன்.எந்திரனின் மகன் 4 மொக்கரா பைட் 8 ஜிகிட்டா பைட்.நான் ச்சிட்டியப்பா மாதிரி சண்டையல்லாம் போட மாட்டேன்.காமெடி மட்டும்தான் சொல்லிக்கொடுத்திருக்காங்க

வடிவேல்: எனக்குப் போட்டியா கிளம்பிடங்காய கிளம்பிடங்கா.
 
சிந்திரன்:  என்னாதிது இப்பவே கண்ண கட்டுதா?இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கு

வடிவேல்:ஓபநிங் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிஷிங் சரி இல்லையேப்பா
 
சிந்திரன்: ம்க்கும்!உனக்கும்தான்  பில்டிங் ஸ்ட்ராங்கு ஆனா பேஸ்மென்ட் வீக்கு!ஆனா நாங்க ஏதாவது கோட்டோமா?
 
வடிவேல்: தம்பி!எதையுமே பிளான் பண்ணாம பண்ணபடாது.ஆமா
why blood same no blood?

சிந்திரன் எங்கப்பன்கிட்ட கேட்க வேண்டிய கேள்விய என்கிட்ட கேட்டா?சரி
 இந்தப் பக்கம் 2ஈ வருமா?

வடிவேல்:வரும் ஆனா வராது.ஆமா!இத்தனை ஆளு இருக்கறப்ப ஏன் என்கிட்ட வந்து கேக்குற ?என்ன வைச்சு காமெடி கீமெடி பண்ணலையே

சிந்திரன்:அண்ணே!ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு நீங்கதானே சொன்னீங்க

வடிவேல்(மனதுக்குள்)என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லீடான்யா என்று வடிவேல் மகிழ

வழக்கம் போல்  என்ன நடந்திருக்கும்?


இந்த கோட்டை தாண்டி நீயும் வரகூடாது நானும் வரமாட்டேன் பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்

வேணா வலிக்குது அழுதுடுவேன்

மாப்பு வெச்சிட்டான்யா ஆப்பு....

ஷங்கர் சார் ! சீக்கிரம் கொஞ்சம் ஓடியாங்க. நீங்க எனக்கு சான்ஸ் கொடுக்காட்டியும் பரவாயில்லை.என்னை இந்த ஜந்திரன்ங்க கிட்டருந்து காப்பாத்துங்கஅப்படியே இந்த மொண்ணையா மொக்கை போடுறவன்கிட்டயிருந்து நசரேயனையும் காப்பாத்துங்க....

படங்கள் அசல்: தொஷிபா கணினி விளம்பரம்.

Monday, October 4, 2010

ரஜனி சொன்ன ஜோக்

ரஜனி முகப்பூச்சு இல்லாமல் அவர் அவராகவே மைக்கின் முன் அமிதாப், ஐஸ்வர்யராய் கலந்துகொண்ட எந்திரன் பட விழாவில் ஏற்ற இறக்கங்களுடனான முகபாவனைகளுடன் சொன்னது அமர்ந்திருந்த அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.

ஒருவர்  ரஜனியிடம் வந்து இந்தியில் பேசி படத்தின் பெயரைக்கேட்டாராம்.ரஜனி படத்தின் பெயரை சொல்ல கதாநாயகி யார் என்று வந்தவர் கேட்க ஐஸ்வர்யராய் என்றாராம் ரஜனி.அடுத்து கதாநாயகன் யார் என்று ரஜனியிடமே கேட்கவும் தான்தான் கதாநாயகன் என்று சொல்லி சில வினாடிகள் தாமதத்திற்கு பிறகு ரஜனி தொடர்ந்தார்.

வந்தவர் ரஜனியைப் பார்த்துவிட்டு அமிதாப் பச்சனுக்கு என்ன ஆச்சு!,ஐஸ்வர்யராய்க்கும் என்ன ஆச்சு? என்று அருகில் இருந்தவரிடம் புலம்பினாராம்:) 

திரைப்படத்துக்கு வெளியே நடிக்காத ஒரே ஆள் ரஜனி என்று இயக்குநர் பாலசந்தர் ஒரு முறை ரஜனி பற்றிக் குறிப்பிட்டார்.கவியரசு வைரமுத்து அவர்களே!இது ரஜனியே சொன்ன நிகழ்ச்சி.எனவே அமிதாப்,போப் குட்டிக்கதையெல்லாம் இனிமேல் யார்கிட்டயும் சொல்லாதீங்க.

Jokes apart, ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிப்பதற்கு முதல் நாள்,இரண்டு,மூன்றாம் நாட்களின் வசூல் கணக்கை சொல்லி விடுவது வழக்கம்.ரஜனி விசிறி ஒருவர் அவதார் வசூலை எந்திரன் மிஞ்சப்போகிறது பாருங்கள் என்று முகம் மலர்ந்தார்.அவதார் படத்தின் முதல் நாள் வசூலைக் கூட அறிவிச்சாங்க.ஆனால் எந்திரன் வசூல் பற்றி மூன்று நாள் ஆகியும் கணக்கு சொல்றதுக்கு  ஆள் இல்லை.உங்களுக்கு தெரியுமா?பட்டு!நீங்கள் சொல்லுங்களேன்!

எத்தனை பஞ்சாயத்து செய்தும் எந்திரன் காய்ச்சலை நிறுத்தவே முடியவில்லை.மெய் உலகத்துக்கும் மெய் நிகர் உலகத்துக்கும் வித்தியாசம் இருக்குதுன்னு இப்பவாவது புரியுதுங்க்ளாண்ணா:)

Wednesday, April 7, 2010

பதிவர்கள் அரபி கத்துகிட்டாங்க:)

இப்ப அரபிக் வகுப்பில சில பேர் சேர்ந்து புத்தகமெல்லாம் வாங்கிட்டாங்க.இந்த புத்தகம் கொடுக்க காரணம் முன்னாடி ஹிந்து கத்துக்கொடுக்கிறேன்னு பதிவர் ஆடுமாடு இடுகையா போட்டார்.நன்றாகவே வகுப்புகள் போய்க் கொண்டிருந்தது.நானும் மலையாளம் கற்றுக்கொடுங்கள் என்று கலாய்த்து மலையாளமும், ஹிந்தியும் கரையேறவில்லை.சரி இப்ப புத்தகம் வாங்கின மாணவர்களில் நம்ம பதிவர்கள் அரபிக் பேசினா எப்படியிருக்கும்ன்னு ஒரு சின்ன கற்பனை:)

நசரேயன்:சலாம் மாலிக்கும்!ஸ்லோனக் பழம?

பழம: சலாம் மாலிக்கூம் ரகமத்துல்லா பரகாத்.ஸ்லோனக் என்த?
பக்கத்திலிருந்த வானம்பாடிகள் பாலா மனசுக்குள்ளே(இரண்டு பேரும் ஸ்லோனைப்பற்றி பேசிக்கிறாங்க போல இருக்குது)

நசரேயன்: சுனோ சவி இலீன்?
பழம: அன இக்துப் வாகித் அரபிக் கவிதா?
நசரேயன்:கலம் வாகித்!அன சுஃப்!

பழம:வாகித் யூம் பிலில் காளமேகப் புலவர் ஈஜி அன கனவு
உவா குல்,வலித் பழம எந்த அரஃப் செம்மொழி
அன கலம் அன ரோ இத்னீன் சார் பாதன் செம்மொழி கோவை
அன சுஃப் சுனோ குல் குல்லு நபர் இனி செம்மொழி
அன சுஃப் சுனோ கலைஞர் கலம் செம்மொழி
பாதன் காளமேகப்புலவர் குல் மினோ குல் பதிலி குல்லு தமிழ்?
அன குல் பாபா!அன மா அரஃப் அத குல்லு கருணாநிதி சரிக்கா பதிலி
ஹுவா(காளமேகப் புலவர்) வாஜித் ஜலான் பாதென் அன நூம் கராப்.

நசரேயன்:வொல்லா!எந்த வாஜித் அரஃப் அரபி.அன கனவு குல்லு குர்மா ஈஜி சைத்தான்

அது சரி:எந்த மும்கின் வாகித் பெக் தாகில் அனி வாகித் கொய்ஸ் குர்மா ஈஜி.

நசரேயன்: லா சதிக்!அன பி பெர்க்கின்சன் பீர்.அத காபி.

வானம்பாடிகள் பாலா:(இதென்னய்யா புதுசா பீரோட காபி!அமெரிக்கா இல்ல,கலந்து குடிச்சாலும் குடிப்பாங்க.எப்படியாவது இந்த பாசைய கத்துக்கனும்)

நசரேயன்:ஓகே குல்லு சதிக்.அன பி வாகித் பதிவு.அன சுஃப் புக்ரா.

அதுசரி: மா சலாம்.

பழம:அதுசரி!வெயின் ரோ எந்தா?மும்கின் வாகித் லிப்ட் லண்டன் ஏர்போர்ட்?
அது சரி: மூ முஸ்கில்!வானம்பாடி தால் என்த,நஃப்ஸ் தரிக் மத்தார் மதராஸ்

வானம்பாடி மறுபடியும் மனதுக்குள்,இருங்கய்யா!எனக்கு அரபி தெரியாதுன்னுதானே இந்த தாளிப்பு தாளிக்கிறீங்க?நீங்க பேசுனதெல்லாம் உங்களுக்கு தெரியாம டேப் செஞ்சிருக்கேன்.நடராஜன் குவைத்துலதான் ஊரச்சுத்திகிட்டு இருக்காரு.கொடுத்து விளக்கம் கேட்டுட மாட்டேன்.

ஒலிப்பதிவு நடராஜனிடம் வந்தவுடன் நடராஜன் வானம்பாடிக்கு சொன்னது

நடராஜன்:அது ஒண்ணுமில்லீங்ண்ணா,நானூம் அரைகுறைதான்,தெரிஞ்சத சொல்றேன்,அச்சுப்பிசகாம உங்களுக்கு தெரியணுமுன்னா துபாய்ல குசும்பன்கிட்ட கேட்டீங்க்கன்னா பேசுனதை இலக்கண சுத்தமா பிரிண்ட் அடிச்சே கொடுத்துருவாரு:)

பேசுனது இதுதானுங்ண்ணா:

நசரேயன்:சலாம் மாலிக்கும்!ஸ்லோனக் பழம?(வணக்கம்!எப்படியிருக்கீங்க பழம?)

பழம: சலாம் மாலிக்கூம் ரகமத்துல்லா பரகாத்.ஸ்லோனக் என்த? (வணக்கம்!நீங்க எப்படியிருக்கீங்க?)
பக்கத்திலிருந்த வானம்பாடிகள் பாலா மனசுக்குள்ளே(இரண்டு பேரும் ஸ்லோனைப்பற்றி பேசிக்கிறாங்க போல இருக்குது)

நசரேயன்: சுனோ சவி இலீன்? (இப்ப நீங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க?)
பழம: அன இக்துப் வாகித் அரபிக் கவிதா? (நான் இப்ப அரபி கவிதை எழுதிகிட்டு இருக்கிறேன்)

நசரேயன்:கலம் வாகித்!அன சுஃப்! (ஒண்ணூ சொல்லுங்க பார்க்கலாம்!நான் பார்க்கிறேன்)

பழம:வாகித் யூம் பிலில் காளமேகப் புலவர் ஈஜி அன கனவு ( ஒரு நாள் காளமேகப் புலவர் என் கனவில் வந்தார்)
உவா குல்,வலித் பழம எந்த அரஃப் செம்மொழி (அவர் சொன்னார்,பழம பையா உனக்கு செம்மொழி தெரியுமா?)
அன கலம் அன ரோ இத்னீன் சார் பாதன் செம்மொழி கோவை (நான் சொன்னேன் இரண்டு மாதம் கழித்து செம்மொழிக்கு கோவை போகிறேன்)
அன சுஃப் சுனோ குல் குல்லு நபர் இனி செம்மொழி ( எல்லோரும் என்ன சொல்கிறார்கள் இங்கே என்று கேட்கப் போகிறேன்)
அன சுஃப் சுனோ கலைஞர் கலம் செம்மொழி (கலைஞர் செம்மொழி பற்றி என்ன சொல்கிறார் என பார்க்கிறேன்)
பாதன் காளமேகப்புலவர் குல் மினோ குல் பதிலி குல்லு தமிழ்? (அப்புறம் காளமேகப் புலவர் கேட்டார் யார் தமிழை எல்லாம் மாற்றச் சொன்னது?)
அன குல் பாபா!அன மா அரஃப் அத குல்லு கருணாநிதி சரிக்கா பதிலி (ஐயா!எனக்கு ஒன்றும் தெரியாது,எல்லாம் கருணாநிதி நிறுவனத்தோட வேலை)
ஹுவா(காளமேகப் புலவர்) வாஜித் ஜலான் பாதென் அன நூம் கராப். (அவருக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது அப்புறம் எனது தூக்கம் கலைந்து விட்டது)

நசரேயன்:வொல்லா!எந்த வாஜித் அரஃப் அரபி.அன கனவு குல்லு குர்மா ஈஜி சைத்தான் (அப்படியா?உங்க கனவுல நிறைய அரபி கவிதை வருகிறதே,எனக்கு பேய்க பொண்ணுகளா வர்றாங்க)

அது சரி:எந்த மும்கின் வாகித் பெக் தாகில் அனி வாகித் கொய்ஸ் குர்மா ஈஜி.(நீங்க ஒரு பெக் அடிச்சீங்கன்னா இன்னும் அழகான பொண்ணுகளா வருவாங்க)

நசரேயன்: லா சதிக்!அன பி பெர்க்கின்சன் பீர்.அத காபி.(இல்ல தல!என்கிட்ட பெர்க்கின்ங்கிற பீர் இருக்குது.அது போதும்)

வானம்பாடிகள் பாலா:(இதென்னய்யா புதுசா பீரோட காபி!அமெரிக்கா இல்ல,கலந்து குடிச்சாலும் குடிப்பாங்க.எப்படியாவது இந்த பாசைய கத்துக்கனும்)

நசரேயன்:ஓகே குல்லு சதிக்.அன பி வாகித் பதிவு.அன சுஃப் புக்ரா.(சரி நண்பர்களே!எனக்கு ஒரு பதிவு இருக்குது,நாளை பார்க்கிறேன்)

அதுசரி: மா சலாம். (வணக்கம்.போயிட்டு வாங்க)

பழம:அதுசரி!வெயின் ரோ எந்தா?மும்கின் வாகித் லிப்ட் லண்டன் ஏர்போர்ட்?(அதுசரி!நீங்க எங்க போறீங்க? லண்டன் ஏர்போர்ட்டுக்கு ஒரு லிப்ட் கொடுக்க முடியுமா)
அது சரி: மூ முஸ்கில்!வானம்பாடி தால் என்த,நஃப்ஸ் தரிக் மத்தார் மதராஸ் (ஒண்ணும் பிரச்சினையில்ல!வானம்பாடி நீங்களும் வாங்க அதே வழிதான் சென்னை விமான நிலையத்துக்கும்)

Wednesday, May 13, 2009

நீங்க மட்டும்தான் யோசிப்பீங்களோ

கூட்டமா கூடிகிட்டேமிங்கிறாங்க!பேசிகிட்டோமிங்கிறாங்க!அதுவும் யோசிக்கிற மாதிரி படமும் புடிச்சிகிட்டேங்கிறாங்க.உங்களுக்கு மட்டும்தான் யோசிக்க (போஸ்) வருமா என்ன:)


Sunday, March 29, 2009

சில பதிவுகள் மற்றும் மறுமொழிகள்

மீ த பர்ஸ்ட்,ரிபீட்டே,சிரிப்பான் போன்ற வாக்கியங்கள் பதிவுகளில் மறுமொழியாளர்களின் யாருக்கும் சொந்தமில்லாத லோகோ மாதிரி ஆகி விட்டது.பதிவர்கள் பெரும்பாலும் தங்களது நையாண்டித்தனத்தால் பின்னூட்டமிடுவது பல நேரங்களில் மனதுக்குள் சிரிக்கவும்,புன்முறுவல் பூக்க வைக்கவும் செய்கிறது.சில சமயங்களில் முதலுக்கே மோசமாகி விடுமோன்னு இஃகி!கி என்ற வாய்விட்டு சிரிக்க வைத்து விடும் பதிவுகளும் பின்னூட்டங்களும் உண்டு.அப்படி ரசித்தவை, சிரித்தவை சில!

பதிவர் வருணின் ஸ்லம்டாக் மில்லியனரும் நான் கடவுளும் (http://timeforsomelove.blogspot.com/2009/02/blog-post_10.html ) பதிவில்

துளசி டீச்சரின் அசத்தல் பின்னூட்டம் ஒன்று .

// எதுக்கு இப்படி வேண்டாத சந்தேகம் உங்களுக்கு வந்துருக்கு.

எதா இருந்தாலும் நம்மைக் கேவலப்படுத்தும்/கேவலப்படுத்திக்கும் உரிமை நமக்கு மட்டும்தான்.

அதென்ன மத்த ஆளுங்க அந்த உரிமை எடுத்துக்கறது?

நானும் இன்னும் கடவுள் பார்க்கலை.

சேரிநாயைப் பார்த்துட்டேன்.

நாயைக் கண்டால் கடவுளைக் காணோம்:-))))

மற்றொன்று பதிவர் கவிதாவின் நாமக்கல் சிபியைக் கிண்டலடிக்கும் நானெல்லாம் ஊர்ப் பெயரை கூடவே வச்சு சுத்துவதில்லை என்றது.

பதிவர் கவிதாவின் நின்று போன என் நிச்சயதார்த்தம் ( http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/03/blog-post_24.html ) சீரியசான பதிவில் பதிவர் நாமக்கல் சிபியின் பின்னூட்டம் இப்படிப் போகிறது....

நாமக்கல் சிபி: //விழுப்புரம் கவிதா! உங்களுக்கு பிடிச்சு இருந்தா வச்சுக்க வேண்டியது தானே, யாரு தடுக்க போறா?//

இப்படிக்கு

'நாமக்கல்' சிபி!

பதிவர் கவிதாவின் மறுமொழி பாருங்கள்:)

கவிதா: //விழுப்புரம் கவிதா! உங்களுக்கு பிடிச்சு இருந்தா வச்சுக்க வேண்டியது தானே, யாரு தடுக்க போறா?
//

கவிதா கெஜானனன் னே போதும்.. நான் என்ன சில பேரு மாதிரி ****** ஆ?? ஊர் பேரை கூடவே எடுத்துக்கிட்ட சுத்தறத்துக்கு... :)

(உங்களுக்கு என்ன வார்த்தை பிடிக்கிறதோ அந்த வார்த்தையை பில் பண்ணிக்கவும்..)

சிபி உங்களுக்கும் தான்... :))

எனது துண்டு போட்டுக்கவா பதிவில் வருங்கால முதல்வர்

"தஞ்சாவூர்லயும் உண்டு, கிராமத்துக்கு போகிற அனைத்து பஸ்ஸிலும் துண்டு போடும் பழக்கம்.

நானெல்லாம் வாசப்படியே கதின்னு இருக்கிற ஆளு."

ஆஸ்கர் நடிகையை பார்ட்டியில் சந்திக்கும் விக்கிரமாதித்தன் கதைகள் பதிவரின் வேதாளத்தின் நையாண்டித்தனம்.

வேதாளத்துக்குப் போட்டியா ஆவிகள் இருப்பது உண்மை எழுதும் கனவுலகப் பதிவர்

செய்யறதுக்கு வேலை இல்லேன்னா வரக்கூடிய பிரச்சினைகள்...ன்னு சக்கர நாற்காலியை சுழற்றி விட்டு சுற்றி சுற்றி வந்தேங்க பாடும்:)

இப்படி பதிவிலும் பின்னூட்டத்திலும் முத்து மாதிரி சில கிடைத்தால் பரவாயில்லை.ஆனால் பதிவும் பின்னூட்டமும் கும்மியும் குசும்புத்தனமாகவே இருக்கும் குசும்பனின் குசும்பு பற்றி என்ன சொல்ல? அக்கம் பக்கம் பார்த்துப் படி:)))

டிஸ்கி: வெண்ணிலா கபடிக்குழு 50 புரோட்டா போட்டியாளர் மாதிரி தேறும் பதிவர் யாராவது இருக்கிறீங்களா?