ரஜனி முகப்பூச்சு இல்லாமல் அவர் அவராகவே மைக்கின் முன் அமிதாப், ஐஸ்வர்யராய் கலந்துகொண்ட எந்திரன் பட விழாவில் ஏற்ற இறக்கங்களுடனான முகபாவனைகளுடன் சொன்னது அமர்ந்திருந்த அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.
ஒருவர் ரஜனியிடம் வந்து இந்தியில் பேசி படத்தின் பெயரைக்கேட்டாராம்.ரஜனி படத்தின் பெயரை சொல்ல கதாநாயகி யார் என்று வந்தவர் கேட்க ஐஸ்வர்யராய் என்றாராம் ரஜனி.அடுத்து கதாநாயகன் யார் என்று ரஜனியிடமே கேட்கவும் தான்தான் கதாநாயகன் என்று சொல்லி சில வினாடிகள் தாமதத்திற்கு பிறகு ரஜனி தொடர்ந்தார்.
வந்தவர் ரஜனியைப் பார்த்துவிட்டு அமிதாப் பச்சனுக்கு என்ன ஆச்சு!,ஐஸ்வர்யராய்க்கும் என்ன ஆச்சு? என்று அருகில் இருந்தவரிடம் புலம்பினாராம்:)
திரைப்படத்துக்கு வெளியே நடிக்காத ஒரே ஆள் ரஜனி என்று இயக்குநர் பாலசந்தர் ஒரு முறை ரஜனி பற்றிக் குறிப்பிட்டார்.கவியரசு வைரமுத்து அவர்களே!இது ரஜனியே சொன்ன நிகழ்ச்சி.எனவே அமிதாப்,போப் குட்டிக்கதையெல்லாம் இனிமேல் யார்கிட்டயும் சொல்லாதீங்க.
Jokes apart, ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிப்பதற்கு முதல் நாள்,இரண்டு,மூன்றாம் நாட்களின் வசூல் கணக்கை சொல்லி விடுவது வழக்கம்.ரஜனி விசிறி ஒருவர் அவதார் வசூலை எந்திரன் மிஞ்சப்போகிறது பாருங்கள் என்று முகம் மலர்ந்தார்.அவதார் படத்தின் முதல் நாள் வசூலைக் கூட அறிவிச்சாங்க.ஆனால் எந்திரன் வசூல் பற்றி மூன்று நாள் ஆகியும் கணக்கு சொல்றதுக்கு ஆள் இல்லை.உங்களுக்கு தெரியுமா?பட்டு!நீங்கள் சொல்லுங்களேன்!
எத்தனை பஞ்சாயத்து செய்தும் எந்திரன் காய்ச்சலை நிறுத்தவே முடியவில்லை.மெய் உலகத்துக்கும் மெய் நிகர் உலகத்துக்கும் வித்தியாசம் இருக்குதுன்னு இப்பவாவது புரியுதுங்க்ளாண்ணா:)
1 comment:
hi hi.ஒருத்தரும் விமரிசனம்னு உருப்படியா போடக்காணமே ஏன்? போட்டவங்களும் இது விமரிசனம் அல்லன்னு டிஸ்கி போடுறாங்களே, ஏன்? முழுசா நல்ல படம்னு சொல்ல மாட்டாம, வில்லன் ரஜனிக்கு பார்க்கலாம், பாட்டுக்கு பாக்கலாம், காமெடிக்கு பார்க்கலாம்னு சப்ப கட்டுறாங்களே ஏன். இதெல்லாம் விட சன் குடும்பத்துல இருந்து வருமானம் கணக்கு வரலையேன்னு கேக்குறது ஏன்:))
Post a Comment