Followers

Saturday, October 2, 2010

அயோத்தியா தீர்ப்பு விமர்சனம் எளிது!தீர்வுகள் கடினம்

மழை விட்டும் தூவானம் விடாத மாதிரி அயோத்தியா பற்றி இன்னுமொரு இடுகை எழுத வேண்டியதாகி விட்டது.தீர்ப்பு வந்தும் அதுபற்றிய விவாதம் பலவிதத்திலும் பல இடங்களில் நடக்கின்றன.தீர்ப்புக்கு முன்பான நாட்களில் யாராவது விவாதம் கிளப்புவார்களா என எதிர்பார்த்தேன்.ஆனால் யாரும் அப்படி தொட்டமாதிரி எனது கண்ணில் படவில்லை.ஒரு வேளை நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு வழக்கு பற்றி கருத்து சொல்வது தவறு என்று பலரும் தவிர்த்திருக்கலாம்.தீர்ப்புக்குப் பின்னும் யாரும் தீர்வுகளை சொல்வதாக காணோம்.மாறாக திட்டுக்கள் திட்டேறி சூடான பகுதியில் போய் உட்கார்ந்து கொள்கின்றன.

ஆனால் தீர்ப்பு வந்தும் தீர்ப்பு பற்றிய விமர்சனங்கள் மட்டுமே வெளிப்படுகிறதே ஒழிய தீர்ப்பு எப்படியிருந்தால் நன்றாக இருந்திருக்குமென பலரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக யாரும் விவாதிப்பதாக காணோம்.வழக்காடுபவர்கள் மத்தியில் தீர்வுகள் இல்லை என்கிற போதே நீதிமன்ற படிக்கட்டுகளும்,நீதிபதிகளின் தீர்ப்பும் தேவைப்படுகிறது.தீர்ப்புக்கு முன்பு தீர்ப்பு எப்படியிருந்தாலும் யாரும் கலவரம் செய்யக்கூடாது என்ற பலதரப்பட்ட குழுக்களின் கருத்துக்கள் நிறைவேறியிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

இந்திய நீதிமன்றங்களில் உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புக்களே பெரும்பாலும் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்படுகின்றன.ஒரு சில விதிவிலக்குகள் இருக்க கூடும்.எனவே உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு என்ன வருகிறதோ என்று எதிர்பார்த்து அதனை ஏற்றுக்கொள்கிறோம் என இரு தரப்புமே கூறுகின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறைந்த பட்சம் இன்னும் 10 வருடங்களுக்கு நீடிக்கப்போகிறது.மக்களின் வாழ்க்கை மேம்பாடுகளை சிந்திக்காமல் இதுபோன்ற தேவையற்ற காலதாமதங்களை நாமே ஏற்படுத்தி விட்டு அப்புறம் திட்டவும்,கட்டைப்பஞ்சாயத்து என்று நொள்ளைகள் நிறையவே பேசக் கற்றுக்கொண்டிருக்கிறோம்.
 
தீர்ப்பு எப்படியிருந்தால் விமர்சிப்பவர்கள் மகிழ்வீர்கள்? இந்த சமயத்தில் சமீபத்தில் திண்ணையில் படித்த ஜெயகாந்தனின்  அக்கினி பிரவேசம் நேர்காணல் மட்டுமே நினைவுக்கு வருகிறது.கதையின் கதாநாயகியான கங்காவின் தாய் நீ அறியாமல் நேர்ந்த தவறுக்கு நீ பொறுப்பல்ல என்று இரண்டு செம்பு தண்ணீர் ஊற்றி விட்டு நீ கற்புள்ளவள் என்று ஜெயகாந்தன் கதையை முடிக்க எதிர் விமர்சனங்களை கண்டு கங்காவின் தாயின் தீர்ப்பு அப்படியில்லாமல் இருந்திருந்தால் எப்படியிருக்குமென்று சிலநேரங்களின் சிலமனிதர்கள் எழுதினார்.என்னய்யா!எதையோ பற்றி பேசும்போது புனைவைக் கொண்டு சொருகிறாயே என்று நினைக்காமல் இருக்க மீண்டும் தலைப்பின் சாரத்துக்கு தாண்டி விடுவோம்.
 
தற்போதைய தீர்ப்பாக இல்லாமல் மொத்த நிலமும் பாபர் மசூதிக் குழுவுக்கு சொந்தமென்றோ அல்லது இந்துத்வா குழுக்களுக்கு சொந்தமானது என்று சொல்வதற்கு சான்றுகள்,சாத்தியங்கள் இருக்கிறதா?இந்திய சட்டங்கள் சாட்சிகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.அந்த விதத்தில் Title of deed க்கு சொந்தமானவர்கள் என்று ஏதாவது ஒரு குழுவாவது சாட்சிகளை முழுமையாக சமர்ப்பித்துள்ளார்களா என்றால் அதுவுமில்லை.அழிக்கப்பட்ட பாபர் மசூதி நமது கண்முன் உள்ள சாட்சியென்றாலும் ஒரு காலத்தில் அதுவும் வெளியுலக ஆக்கிரமிப்பின் அடையாளச் சின்னமென்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நேற்றைய தீர்ப்புக்கு பின் இன்று முலாயம் சிங்க்,ப.சிதம்பரம்,மாயாவதி போன்றவர்கள் தீர்ப்பு பற்றிய திரியை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.வரும்நாட்களில் இன்னும் சிலர் நெருப்பு புகைய வைக்கவும் கூடும்.இவர்களது அறிக்கைகளுக்கு பின் தங்கள் சுயநலம் கலந்த அரசியல் நன்மைகள் கருதிய முலாம் பேச்சுக்கள் இருக்கிறது என்பதை அனைவரும் நினைவில் வையுங்கள்.அரசியல்வாதிகளின் கடிவாளம் ஓட்டுப்போடும் அந்தக் கணம் தவிர அரசியல்வாதிகள் எகிறித்திமிறும் குதிரைகளாகவே இருக்கிறார்கள்.இந்த சண்டிக்குதிரைகளை அடக்குவது எப்படி என்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்.இவர்களே இந்திய இறையாண்மைக்கும்,சகோதரத்துவத்துக்கும் முதல் இடையூறுகளாக இருக்கிறார்கள்.அரசியல்,மதம் சார்ந்த கலவையாக அயோத்தி ஆகிப்போனது துரதிஷ்டமானது.


உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படியிருந்தால் நன்றாக இருக்குமென்று பின்னூட்டத்திலோ அல்லது அவரவர் கடைகளிலோ விவாதியுங்கள்.இல்லையென்றால் உயர்நீதி மன்ற தீர்ப்பை ஏற்று எதிர்காலம் நோக்கி நகருவோம்.


நான் சில நிகழ்வுகளை உலாகளாவிய அளவிலே பார்க்கிறேன்.மனித தவறுகளாக இந்துத்வாவின் பாபர் மசூதி இடிப்பு ஒரு வரலாற்று தவறு என்பதில் ஐயமில்லை.இதற்காக வருந்துவதற்கு இந்தியாவில் மனிதர்கள் மதசார்பின்மையற்ற மனிதர்கள் நிறைய இருக்கிறார்கள்.ஆனால் பல நூற்றாண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்த புத்தர் சிலையையும்,இஸ்லாமிய வரலாற்று கலைப்பொருட்களையும் கூட இஸ்லாமிற்கு எதிரானது என அளித்து விட்டார்கள் மதப்பித்தர்கள்.Doesn't contradictory to a doctrine and  religious ethics? இதுபற்றியெல்லாம் மதம் சார்ந்து பேசுபவர்கள் யாரும் எதிர்ப்புக் குரல் கொடுத்த மாதிரி தெரியவில்லை.
 
நான் சொல்ல வருவதெல்லாம் எந்த மதத்தையும் பின் தள்ளி மனிதாபிமானத்தையும் மனிதகுலத்துக்கு நல்லதை மட்டுமே சிந்தியுங்கள்.

வளைகுடாக்களில் ஒரு மசூதி கூட மனிதனுக்கு பாதுகாப்பானதா இல்லையென்றால் இடித்துவிட்டு புதியதாக அதே இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ கட்டி விடுகிறார்கள்.மெக்கா,மதினா கூட ஆண்டாண்டு தோறும் பெருகும் கூட்டத்திற்கு ஏற்ப மக்கள் நலன் கருதி மேம்படுத்துகிறார்கள்

நாம் மட்டுமே கலைப்பொக்கிசம்,வரலாற்று சின்னம் என பாரம்பரியம் காக்கிறோம்.மனிதன் இறந்தால் கூட சிலையை எழுப்பி கொண்டாடவும்,உடைக்கவும் நாமே செய்கிறோம்.சவுதி அரேபியாவின் மன்னர் நம் ஊர் பாடை மாதிரி இரண்டு குச்சிகளில் துணி கட்டி எளிமையாக கொண்டு போய் அடக்கம் செய்தார்கள்.

தமிழக இஸ்லாமிய சகோதரர்களை வேண்டிக்கொள்வேன்.மதம் நம்பிக்கை மட்டுமே என்ற அளவில் மதத்தின் பின் செல்லாமல் மற்றவர்களுடன்  போட்டி போட்டு இந்திய உரிமைகளைப் பெறுவதற்கு தகுதியானவர்களாக கல்வியில் கவனம் செலுத்துங்கள்.கல்வி ஒன்றே உங்களை மேம்படுத்தவும், சமூகத்தில் ஒதுங்கிப் போனவர்களாக இல்லாமல் செய்யவும் துணை புரியும்.தொலைக்காட்சிகளில் நிறைய கூச்சல் ஒலிபெருக்கி சத்தங்களை காண்கிறேன். ஆனால் அவற்றுக்குள்ளும் பிரிவினைகளையும் காண்கிறேன்.இவற்றையெல்லாம் கடந்து வாருங்கள்.பலதரப்பட்ட கலாச்சாரங்களையும் உள்வாங்கிக் கொண்டு துபாய்,குவைத் போன்ற இஸ்லாமிய நாடுகள் எதிர்காலம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன.
 
திறமைகளை வளர்த்துக் கொண்டால் வெளிநாடு போவோர் மத்திய கிழக்கு நாடுகளில் உங்களுக்கென இடங்களைப் பிடிக்க முடியும்.இதுவரை ஒரு தலைமுறை சிறு வியாபாரிகளாக, ஹோட்டல் பணியாளர்களாக, அலுவலங்களில் தேநீர் பரிமாறுபவர்களாக, வாகன ஓட்டிகளாக,வீடுகளில் பணிபுரிபவர்களாக மட்டுமே அதிகம் காட்சியளிப்பதற்கு கல்வியில் கவனம் செலுத்தாமையும் எப்படியாவது வெளிநாடு போனால் போதும் என்ற திட்டமிடல் இன்மையே.உள்ளூருக்குள் உழன்று கொண்டிருக்கும் சகோதரர்களுக்கு மத மைக் ஒலி ஒரு வரப்பிரசாதம் மாதிரி.அரசியல் மைக் ஒலி பிரசாரத்தில் மயங்கி புத்தி தெளிந்தவர்கள்  இங்கே நிறைய உண்டு.இவற்றையெல்லாம் நினைவில் கொள்ளுங்கள் என்று வேண்டிக்கொள்வேன்.


உலகளாவிய அளவில் மிகவும் ஆச்சரியமான உலக அதிசயமான எகிப்து பிரமிடுகள் எகிப்தியர்களுக்கு எந்த பெருமிதத்தையும் தருவதில்லை.உடன் பணிபுரியும் ஒருவரிடம் கேட்டால் அது செத்தவர்களை புதைத்த இடம் என்கிறார்.ராமன், தாஜ்மஹால்,பாபர் மசூதி போன்றவை வரலாற்றுக் கதைகளே!கொண்டாடுவதற்கு அதுவே வாழ்க்கையல்ல சராசரி மனிதர்களான நமக்கு.  

16 comments:

ராஜ நடராஜன் said...

அரசியல் திரிகள் ஒவ்வொன்றாக ஆரம்பித்து வைக்கிறார்கள் அரசியல்வாதிகள்.கவனம்!

smart said...

"அயோத்தியா தீர்ப்பு விமர்சனம் எளிது!தீர்வுகள் கடினம்" mika chari

வானம்பாடிகள் said...

ஏண்ணே. கோவிச்சிக்கப்படாது. 71ல தைரியமா ப்ரைவி பர்ஸ ஒழிச்சி கட்ட இந்திராவால முடிஞ்சதே. ங்கொய்யால போங்கடா. இது கவர்மெண்ட் இடம்னு அங்க ஒரு பல்கலைக் கழகம் கட்டமுடியாதா? இல்லைன்னா மூணு பேருமா சேர்ந்து இத்தன வருஷத்துக்குள்ள ஒரு மருத்துவக் கல்லூரி ஆஸ்பிடல் கட்டிக்கலாம். 70 பெர்ஸண்ட் ஃப்ரீ, மிச்சம் வேணும்னா காசு பார்த்து பங்கு போட்டுக்குங்கன்னு சொல்ல முடியாதா. செக்யூரிட்டிக்கு தண்டமான காசுல எத்தனை உழைப்பு வீண். இன்னும் 60 வருஷம் அப்பீல்ல போகும். என்னமோ தீபாவளி, ரம்ஜான் மாதிரி பாபர் மசூதி தினம்னு முன்ன 4 நாள் பின்ன 4 நாள் செக்யூரிட்டி எழவு, பார்ஸல் தேக்கம்னு சாவடிக்கறானுவ.

ஹூம். இன்னொரு இந்திரா, இன்னோரு எமர்ஜென்ஸி வரணும்.

அருள் said...

அயோத்தி தீர்ப்பு: புளுகும் இந்துத்வ கூட்டம்.

அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் “இராமர் பிறந்த இடம்” என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.

விரிவாக இங்கே:

http://arulgreen.blogspot.com/2010/10/blog-post.html

krubha said...

http://ilakindriorpayanam.blogspot.com/2010/10/blog-post.html

சர்சை ஏற்படுத்தும் இரு சாரரும் விரும்புவது அந்த இடத்தில் வழிபாடு நடத்தவே,

Full article in the Blog

அருள் said...

இடஒதுக்கீட்டு வழக்குகளில் OBC பிரிவினர் எப்படி நடத்தப்படுகின்றனரோ, அப்படியே அயோத்தி வழக்கில் இசுலாமியர்கள் நடத்தப்பட்டுள்ளனர்.

நீதிபதிகளும் நீதிமன்றங்களும் நீதிக்கு ஈடாக மாட்டார்கள் என்பதற்கு அயோத்தி தீர்ப்பு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

http://arulgreen.blogspot.com/2010/10/blog-post.html

ராஜ நடராஜன் said...

//mika chari//

வாங்க ஸ்மார்ட்!பரவாயில்லையே எனக்கெல்லாம் பின்னூட்டம் போடுறீங்க!நீங்க வருண் கடைக்குத்தான் அடிக்கடி போவதைக் கண்டிருக்கிறேன்:)

ராஜ நடராஜன் said...

//71ல தைரியமா ப்ரைவி பர்ஸ ஒழிச்சி கட்ட இந்திராவால முடிஞ்சதே. ங்கொய்யால போங்கடா. இது கவர்மெண்ட் இடம்னு அங்க ஒரு பல்கலைக் கழகம் கட்டமுடியாதா? //

இந்திரா காந்தியோட எமர்ஜென்சி சரியா,தப்பான்னு இன்னும் எனக்குத்தெரியல.ஆனால் கூட்டம் போட்டு கும்மியடிக்காமல்,ரயில்கள் சரியான நேரத்துக்குன்னு ஒரு ஒழுங்கும்,சராசரி மனிதர்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லையென்றே நினைக்கிறேன்.

பல்கலைக் கழகம்,பொதுசேவைன்னு தீர்ப்பு வந்திருந்தாலும் மகிழ்ந்திருப்பேன்.ஆனால் அப்படியான தீர்ப்பு வழக்கின் அடிப்படையை மீறுவது மாதிரியும் இருந்திருக்கும்.ஆனால் வழக்கு இடம் எனக்கு சொந்தமின்னு வழக்குப் போட்டவர்கள் சொன்னதால் அப்பத்தை பிரிச்சுக்கொடுத்தது சரியே என்பேன்.

ராஜ நடராஜன் said...

//அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் “இராமர் பிறந்த இடம்” என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.//

வணக்கம் அருள்!நீங்க மட்டுமே கடை கடையா போய் இதனை சொல்கிறீர்கள்.நீங்கள் சொல்கிறபடி பெரும்பான்மையினர் நம்பிக்கையின் பேரிலேதான் தீர்ப்பு.

Thekkikattan|தெகா said...

//ஆனால் வழக்கு இடம் எனக்கு சொந்தமின்னு வழக்குப் போட்டவர்கள் சொன்னதால் அப்பத்தை பிரிச்சுக்கொடுத்தது சரியே என்பேன்//

இங்கதான் இடிக்கிதுங்க. இத லாஜிக்கலா பார்த்தாவே இடிக்கும். 500 வருஷத்திற்கு முன்பு நாடு பிடிக்க வந்த மக்கா அந்த இடத்தை தனதாக்கிக்கிட்டாங்கன்னே வைச்சிக்குவோம், அதுக்குப் பிறகு வாழ ஆரம்பிச்சு இன்னிக்கு ஒரு நாடு, சகோதரன்னு வாழ்ந்துகிட்டு இருக்கிற மக்கள்கிட்ட போயி நான் 1597 பிரச்சினைய மாடர்ன் டைம்ல 2010ல வந்து தீர்த்துக்கிறேன்னா, இது நாட்டின் ஒருமை பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் இந்த பிச்சாத்து நிலம் என்னாத்தை தருவிச்சுக் கொடுத்திறப் போவுது, சொல்லுங்க ராஜ நட.

My philosophy on this, live in the present! Not yesterday; yesterday does not yield anything unless it is for learning.

இல்லையெனில் தீரன் புஷுன் ஈராக்கின் அணுகுமுறையாகிப் போவும் இந்த நிகழ்வும்; மேலும் வெறுப்பை உமிழும் வாக்கில் - அமைதி வளர்க்கிறேன் பேர்வழி என்பதே என்னுடைய புரிதல் இதனைச் சார்ந்து.

ராஜ நடராஜன் said...

//சர்சை ஏற்படுத்தும் இரு சாரரும் விரும்புவது அந்த இடத்தில் வழிபாடு நடத்தவே, //

உங்கள் கடைப்பக்கம் போய் வந்தேன் கிருபா!பிரச்சினைகளின் மையப்புள்ளியே அரசியல்வாதிகள்தான் என்பதில் உங்களுடன் உடன்படுகிறேன்.

ராஜ நடராஜன் said...

//My philosophy on this, live in the present! Not yesterday//

தெகா!நாம் புராதன நினைவுகளுடன் இப்போதைய நாட்களையும் கழிப்பதால் பழைய நினைவுச்சின்னங்களை பாதுகாக்கிறோம்.அதனால்தானே இந்திய பாரம்பரியம் கல்வெட்டு,கட்டிடங்கள்,ஓவியம்,சிற்பம் என தெரிய வருகிறது.இவைகள் போர்,வாழ்க்கை முறை,அரசாட்சி முறை என்று சரித்திரம் சொல்கிறதே.

நீங்க சொல்கிற மாதிரி நேற்றைய தினத்தை மறக்காமல் தற்காலத்தில் வாழ்வதற்கும் வழிகள் இருக்கிறது.கூடவே நீங்கள் புஷ் பற்றி குறிப்பிட்டதால் அதற்கு ஒரு நேரடி அனுபவ உதாரணமென்றால் வளைகுடா யுத்தத்தில் சதாம் ஹுசேன் கொண்டு வந்த டேங்கர்,மற்றும் ராணுவ ஆயுதங்கள் ஒன்றைக் கூட குவைத்தில் இப்பொழுது பார்க்க இயலாது.அத்தனையும் scrap yardlல போட்டு ஏற்றுமதி செய்துவிட்டார்கள்.நினைவுச்சின்னம் என ஒன்று கூட காண முடியாது.இன்னும் இரண்டு தலைமுறைகள் போனால் வளைகுடா யுத்த வடுக்களே இருக்காது குவைத்தைப் பொறுத்த வரையில்.ஆனால் ஈராக் அப்படியல்ல.ஈராக் இந்தியா மாதிரி.ஈராக்கின் பல நூற்றாண்டு வரலாற்று நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பும்,அழிவும் அயோத்தி மாதிரி எப்பவாவது விசுவரூபம் எடுக்கும் சாத்தியங்கள் உண்டு.

அருள் said...

அயோத்தி: நடந்தது இதுதான்!

http://arulgreen.blogspot.com/

Thekkikattan|தெகா said...

நாம் புராதன நினைவுகளுடன் இப்போதைய நாட்களையும் கழிப்பதால் பழைய நினைவுச்சின்னங்களை பாதுகாக்கிறோம்.//

அதெல்லாம் சரி புரிகிறது. அது எங்கு இது போன்று புது வரலாற்றுடன் சிக்கலில்லாமல் ‘தனியாக’ நிற்கிறதோ அங்கே வைச்சு பாதுகாப்போம் தொல்லியல் துறையைக் கொண்டு. நாட்டின் இதரப் பகுதிகளில் எத்தனையோ வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பகுதிகள் அங்கே அரசாங்கத்தால் நட்டுவைத்திருக்கும் அறிவிப்பு பலகைகளே கழண்டு விழும் நிலையில் இருக்கும் இடங்களில் கொண்டு போயி இந்த செலவீனங்களைப் போடுவோம்.

இன்னும் என்னன்னவோ அடிச்சேன் ஆனா கட் பண்ணிட்டேன் இங்கே, நான் தனிப்பதிவாவே என்னோட பார்வையை வைச்சிடுறேன் அதான் நல்லது, ராஜ நட:)...

ராஜ நடராஜன் said...

//அயோத்தி: நடந்தது இதுதான்!

http://arulgreen.blogspot.com///

அருள்!நீர் பூத்த நெருப்பை அதுவாகவே சாம்பலாகட்டும் என்பது நல்லது.மாறாக தூங்கும் நேரத்தில் ஊதி விட்டால் நெருப்பு பற்றிக்கொள்ளுமே என்பது எனது பயம்.


அயோத்தியா நாம் அலட்டிக்கொள்ள தேவையில்லாத ஒன்று.

ராஜ நடராஜன் said...

//நான் தனிப்பதிவாவே என்னோட பார்வையை வைச்சிடுறேன் அதான் நல்லது,//

தெகா!இடுகைக்காக காத்திருக்கிறேன்.

எந்திரன் பார்த்தீங்களா:)