முன்பு Beyond 2000 என்ற அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்வு ஒன்று காணும் போது 2000 வருடத்திற்கு பிறகு என்னவெல்லாம் மாற்றங்கள் வரும் என்று சொல்லும்போது நிகழ்ச்சியாளர் ரீல் விடுகிறாரோ என்று சந்தேகம் வரும்.ஆனால் 2000க்குப் பிறகான கணினி தொழில் நுட்ப மாற்றங்களைக் காணும் போது பிரமிக்க வைக்கின்றன.இன்னும் வரும் காலங்களில் எதுவெல்லாமோ நிகழும் என்ற கற்பனைக்கு அளவேயில்லை.முதல் தலைமுறை,இரண்டாம் தலைமுறை போய் இப்பொழுது 3G ,4G என்ற மூன்றாம்,நான்காம் தலைமுறைக்கு தொழில்நுட்பம் வந்துவிட்டது.
Samsung Galaxy S
இதை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் முன்பு மேஜையில் இடத்தைக் காத்துக் கொண்டிருந்த மேசை மேல் கணினிப் பெட்டிகள் போய் மடிக்கணினி(Laptop) என்றும் புத்தக கணினி என்றும்(Notebook) வந்தவுடன் அட!இது நல்லாயிருக்குதே என்று மனம் குதுகலித்தது.நசரேயன் எல்லோருக்கும் பின்னூட்டம் போடுவது மாதிரி ம்ம்ம் என்றோ அல்லது கடின தட்டுக்கு (Hard Disk) பிடித்த உர்ர்ரென்ற சத்தமோ வந்தாலும் கூட தட்டச்சும் வசதியால் இதனைப் பெரிது படுத்தாமல் நாம் இருந்தோம்.ஆனால் எந்திரன் ரஜனி மாதிரி ஆராய்ச்சியாளர்களுக்கு புதிய மனிதா பாட்டுப்பாடாவிட்டால் தூக்கம் வராது.அப்படி தொஷிபா மடிக்கணினிக்காரர்கள் கண்டு பிடித்த புதிய 3G கணினி லிப்ரட்டோ மாடல் 7 இன்ஞ் குள்ளன்.
Toshiba Notebook Libretto
நாம் வழக்கமாய் தட்டச்சும் கீ போர்டை காணோம்.பதிலாக அங்கேயும் பிலிம் காட்டும் Display.தட்டச்ச வேண்டுமென்றால் virtual Keyboard and Touch Screen மட்டுமே.இப்பொழுது ஐபோன்,சாம்சங்க் கேலக்சி போன்ற கைபேசிகளும் கூட இதே தொழில்நுட்பத்துடன் கடைகளில் கிடைக்கின்றன.சென்னையில் டிராபிக் சிக்னல்களில் காமிரா பொறுத்துவதாக கேள்விப்பட்டேன்.எப்பொழுதோ செய்திருக்க வேண்டியது.பயண ஊர்திகளில் கேமரா பொறுத்துவது ஆண்களின் சில்மிஷங்களையும்,பிக்பாக்கெட் குற்றங்களை குறைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.கேமிரா பொறுத்துவதை விட அதை எப்படி இயங்காமல் செய்வது என்பதில் நமது ஒழுக்கங்கள் பல்லைக்காட்டும் என எண்ணுகிறேன்.
தொழில் நுட்ப வசதிகளால் பதிவுகள் போன்ற கருத்து பரிமாற்றங்கள் நேரடி பலன்கள் எனலாம்.கூடவே பன்முக கருத்துக்களும் ஒரு பொருள் பல பரிமாணங்களை தோற்றுவிப்பதும் மகிழ்ச்சிக்குரியது.புதிய தேடல்கள் ஒரு புறம் ஆரோக்கியமானதென்றாலும் இதற்கான பக்கவிளைவுகளும் நிகழாமல் இல்லை.உதாரணத்திற்கு ஒன்று.முன்பு கணினியைத் தொடாத எகிப்தியன் சொல்லும் நகைச்சுவைகள் சிரிக்க வைக்கும்.குட் மானிங்க் என்பதை மார்னிங் குத் என்பான்.கூட பணி புரியும் ஒருவன் சப்பாத்தி தின்பதை அவனைப் போலவே மோனோஆக்டிங்க் செய்து அவனுக்கு ஸப்பாத்தியென்றே பெயர் வைத்து விட்டான்:).மெல்ல அரபி மொழியில் கணினையைத் தட்டக் கற்றுக்கொண்டு இப்பொழுது பெரும்பாலும் கணினி விளையாட்டில் ஈடுபடுகிறான்.முந்தைய சிரிப்பு போய் விட்டது.
இது ஒருபுறமிருக்க வளைகுடாவைப் பொறுத்த வரையில் அரபி பையன்களின் போக்கிரித்தனம் குறைந்த மாதிரி தெரிகிறது.இணையத் தொடர்புகள் ஓரளவுக்கு உலகப் புரிதலை கொண்டு வந்து சேர்த்திருக்கிறதெனவும் நினைக்கிறேன்.அதற்கான கலந்துரையாடல்கள் நிகழ்வதைக் காண்கிறேன்.
எட்டாம் வகுப்பு,ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பரிட்சையில் வாங்கும் மார்க் 15 போனா போகுதுன்னு 20 மட்டும் உச்சம்.கணக்கில் முட்டை மட்டும் மிச்சம்.ஆனால் கணினி விளையாட்டில் அள்ளும் மார்க் ஆயிரங்கள், பத்தாயிரங்களை காட்டுகின்றன. நேற்று கணினி,தொலைக்காட்சிக்கு குழந்தைகள் மொழியில் கட்டி சொல்லிவிட்டு மேக்ரோனி பேஸ்தா செய்யும் மனைவிக்கு உதவி செய்யப் போனது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் சமைத்துக்கொண்டே பேசும் உரையாடலுக்கு உறுதுணையாகவும் இருந்தது.
தொழில் நுட்பமும் வேண்டும்.நம்மையும் தொலைத்து விடாதிருக்க வேண்டும்.கூடவே பசியில்லாத,அமைதியான,போரில்லாத சமூகம், உலகம் உருவாகும் வரை தொழில் நுட்ப வளர்ச்சிகளின் வெற்றிக்கு அர்த்தமில்லை.
Love Thy People
அதன் காரணம் கொண்டே அவரவர் சார்ந்த சமூகத்தையும்,பொதுவாகவே மக்கள்: வாழ்க்கையை பாதிப்பவர்களையும் குறித்த விமர்சனம் தேவைப்படுகிறது.இல்லையென்றால் பதிவுலகத்துக்கும் விமர்சன முன்ணனி மனிதர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் சண்டையா என்ன?
விட்டவை தொட்டவை பின்னூட்டத்தில்.....
Photo courtesy : Google images.
16 comments:
வரும்காலத்தில் இன்னும் என்னென்ன மாற்றங்கள் வரப்போகுதோ !..
//அதன் காரணம் கொண்டே அவரவர் சார்ந்த சமூகத்தையும்,பொதுவாகவே மக்கள்: வாழ்க்கையை பாதிப்பவர்களையும் குறித்த விமர்சனம் தேவைப்படுகிறது.இல்லையென்றால் பதிவுலகத்துக்கும் விமர்சன முன்ணனி மனிதர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் சண்டையா என்ன?//
அந்த கடைசி வரிகள் சூப்பர் ...
தொழில் நுட்பமும் வேண்டும்.நம்மையும் தொலைத்து விடாதிருக்க வேண்டும்.கூடவே பசியில்லாத,அமைதியான,போரில்லாத சமூகம், உலகம் உருவாகும் வரை தொழில் நுட்ப வளர்ச்சிகளின் வெற்றிக்கு அர்த்தமில்லை.
..... Thought for the day!
//வரும்காலத்தில் இன்னும் என்னென்ன மாற்றங்கள் வரப்போகுதோ !..
//அதன் காரணம் கொண்டே அவரவர் சார்ந்த சமூகத்தையும்,பொதுவாகவே மக்கள்: வாழ்க்கையை பாதிப்பவர்களையும் குறித்த விமர்சனம் தேவைப்படுகிறது.இல்லையென்றால் பதிவுலகத்துக்கும் விமர்சன முன்ணனி மனிதர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் சண்டையா என்ன?//
அந்த கடைசி வரிகள் சூப்பர் ...//
முதல் போணிக்கு நன்றிங்ண்ணா:)
//..... Thought for the day!//
Simple but nice.Thanks.
பல விசயங்களை சுட்டிக் கொண்டு செல்கிறது............ புரிந்தவர்கள் பாக்யவானகள்.
உங்களைப் போன்றவர்கள் வாழும் இடத்தில் நடக்கும் இது போன்ற முன்னேற்றங்களை மனதில் வைத்துக் கொண்டு 2 4 ஜீ என்று நம்ம சிங்கை ரவி போலவே சொல்லியிருக்கீங்க.
அவனாசி சாலை முதல் கோவை உள்ளே நுழையும் சாலை வரைக்கும் இந்த வந்த ஜி வகையராக்கள் எதுவும் எடுக்காது. அப்புறம் எங்கே நாலு அஞ்சுன்னு எண்ணிப் பார்பபது.
நிறைய விசயங்கள் எழுத மனம் துடிக்கிறது. ஆனால் இந்தியாவின் ராஜாதி ராஜாக்களின்
செயல்பாடுகளால் தொழில் நகரங்களில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் அவஸ்த்தைகள் சொல்லி மாளாது.
எப்போதும் போல உங்கள் படங்களைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டு என்னுடைய குழந்தைகள் இந்த வசதிகளை அனுபவிப்பார்கள் என்று கடந்து செல்கின்றேன்.
//பல விசயங்களை சுட்டிக் கொண்டு செல்கிறது............ புரிந்தவர்கள் பாக்யவானகள்.
உங்களைப் போன்றவர்கள் வாழும் இடத்தில் நடக்கும் இது போன்ற முன்னேற்றங்களை மனதில் வைத்துக் கொண்டு 2 4 ஜீ என்று நம்ம சிங்கை ரவி போலவே சொல்லியிருக்கீங்க.
அவனாசி சாலை முதல் கோவை உள்ளே நுழையும் சாலை வரைக்கும் இந்த வந்த ஜி வகையராக்கள் எதுவும் எடுக்காது. அப்புறம் எங்கே நாலு அஞ்சுன்னு எண்ணிப் பார்பபது.
நிறைய விசயங்கள் எழுத மனம் துடிக்கிறது. ஆனால் இந்தியாவின் ராஜாதி ராஜாக்களின்
செயல்பாடுகளால் தொழில் நகரங்களில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் அவஸ்த்தைகள் சொல்லி மாளாது.
எப்போதும் போல உங்கள் படங்களைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டு என்னுடைய குழந்தைகள் இந்த வசதிகளை அனுபவிப்பார்கள் என்று கடந்து செல்கின்றேன்.//
ஜோதிஜி!உங்களின் நீண்ட பின்னூட்டம்,மற்றும் மனக்குமுறல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
கைபேசியைப் பொறுத்த வரையில் சென்னை நோக்கியா தயாரிப்பாளர்களாயிருந்தும் நமது மக்களின் வாங்கும் திறன் குறித்து நோக்கினால் நாம் பின் தங்கியுள்ளோம் என்பது புரியும்.அதே நேரத்தில் கைபேசி கவர்ச்சியும் நம்மவர்களுக்கே அதிகம்.
நான் அப்புறமா வாரேன்.மணியடிச்சிட்டாங்க.
//கேமிரா பொறுத்துவதை விட அதை எப்படி இயங்காமல் செய்வது என்பதில் நமது ஒழுக்கங்கள் பல்லைக்காட்டும் என எண்ணுகிறேன்.//
சரியாக சொல்லி விட்டீர்கள்.
நல்ல அருமையான பதிவு. ஆங்காங்கே அருமையான வசனங்கள். :)
நான் நட்பா? உறவா? :)
//நசரேயன் எல்லோருக்கும் பின்னூட்டம் போடுவது மாதிரி ம்ம்ம் என்றோ //
அஃகஃகா... அவரு இதையும் படிக்காமலே வந்து ம்ம்ம் சொல்வாரு பாருங்க....
love... என்னோட இடுகையில பாலாண்ணன் எதோ சொல்ல வர்றாரு...
பழமைபேசி said...
love... என்னோட இடுகையில பாலாண்ணன் எதோ சொல்ல வர்றாரு...//
mkkum.அந்த கத்து கத்தியும் ஏதோவாம்ல.:)). அடுத்த பத்து வருசத்துல சென்னைக்கு தனியா ஒரு இ.என்.டி ஜி.எச், தனியா ஒரு முடநீக்கு இயல் ஜி.எச்.தேவை. சொக்காயில்லாம போனாலும் போராய்ங்க செல்லில்லாம போறதில்லை.
//கேமிரா பொறுத்துவதை விட அதை எப்படி இயங்காமல் செய்வது என்பதில் நமது ஒழுக்கங்கள் பல்லைக்காட்டும் என எண்ணுகிறேன்.//
indha vaarthai en manadhai migavum thaakkiyadhu.. ippadiyum manidhargal irukirargal... varutham alikiradhu..
//சரியாக சொல்லி விட்டீர்கள்.
நல்ல அருமையான பதிவு. ஆங்காங்கே அருமையான வசனங்கள். :)
நான் நட்பா? உறவா? :)//
ராதாகிருஷ்ணன் சார்!நான் வெறுமனே நன்றியென மட்டும் பின்னூட்டமிடுவதில்லை.கருத்து பரிமாறல்களை விரும்புகிறேன்.அதனால் இந்த இடுகைக்கு சம்பந்தமில்லாத ஆனால் உங்கள் இடுகையில் இந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் என்ற இடுகையில் வெளிநாடு போவோர் திரும்ப தாயகம் திரும்புவதில்லை என்பதற்கான காரணங்களை விரிவாக்கியிருக்கலாம் என சொல்லியிருந்தேன்.தனி இடுகையை எதிர்பார்க்கிறேன்.
நட்பா!உறவா!கேள்விக்கு ஸ்மைலியும் போட்டு பின்னூட்டமும் போட்டதால் இரண்டுமே:)
////நசரேயன் எல்லோருக்கும் பின்னூட்டம் போடுவது மாதிரி ம்ம்ம் என்றோ //
அஃகஃகா... அவரு இதையும் படிக்காமலே வந்து ம்ம்ம் சொல்வாரு பாருங்க....//
மறுபடியும் ஒரு முறை கேட்கிறேன் பழமையண்ணா!அவரை சீண்டுவது ஒரு புறமிருக்கட்டும்.அவர் இடுகைகளைப் படிப்பதில்லை என்பது எப்படி உங்களுக்குத் தெரியும் என்பதை பொதுவில் சொல்லுங்க:)
//love... என்னோட இடுகையில பாலாண்ணன் எதோ சொல்ல வர்றாரு...//
தமிழ்மணத்தை திறக்கும் போது கண்ணில் என்ன படுகிறதோ அதுக்கு மட்டுமே பார்வையும் சில சமயம் பின்னூட்டமும்.அமெரிக்க,குவைத்,இந்திய நேரக்கோளாறால் சில சமயம் நல்ல இடுகைகளை விட்டு விடுகிறேன். பார்க்கிறேன் பாலாண்ணா என்ன சொல்றாருன்னு.
ம்க்கும்!விமானத்துல இருக்கும் போது ஒரு இடுகை.வீட்டுக்கு வந்த பின் ஒரு இடுகை.அலுவலகம் புறப்படும் முன் ஒரு இடுகைன்னா எங்கே போய் தேடுவது?தொடுப்பு கொடுத்திருக்கலாமில்ல?
ஒருவேளை Because love don't count days பற்றிக் குறிப்பிடுகிறீர்களோ!
//பழமைபேசி said...
love... என்னோட இடுகையில பாலாண்ணன் எதோ சொல்ல வர்றாரு...//
mkkum.அந்த கத்து கத்தியும் ஏதோவாம்ல.:)). அடுத்த பத்து வருசத்துல சென்னைக்கு தனியா ஒரு இ.என்.டி ஜி.எச், தனியா ஒரு முடநீக்கு இயல் ஜி.எச்.தேவை. சொக்காயில்லாம போனாலும் போராய்ங்க செல்லில்லாம போறதில்லை.//
பழம பேசிகிட்டு இருக்கும் போது உங்களைக் கவனிக்கலையே:)நான் அவருக்கு க்கும் சொன்னா அதே நீங்க இங்கிலிபீசா முன்னமே சொல்லியிருக்கீங்க!இதுக்குப் பேருதான் coincidence ங்கிறதா?
கைபேசி ஆளுமை இந்தியாவை ரொம்பவே பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.நான் நோக்கியா 6260 வாங்கும் போது அப்போதைய சந்தை நிலவரத்துக்கு அது காமிரா பொறுத்தப்பட்ட நம்ம முன்னாடி வயரோட கறுப்பு போன் பேசுவோமே அந்த மாதிரி காதுக்கும் வாயுக்கும் இணைப்பு மாதிரி போன்.ஒரே முறை காமிரா எப்படி எந்திரன் மாதிரி தலையை திருப்புதுன்னு பார்த்து ஒரு க்ளிக் செய்ததுதான்.அப்புறம் காமிராவைத் தொடவேயில்லை.
ஜோதிஜி அங்கே ஸ்கைப்லதான் பேசுவதாக ஒரு முறை சொன்னார்.இங்கே officially banned.
நீங்க Love பற்றி ஏதோ கதாகாலட்சேபம் செய்யறதா பழம சொன்னாரு.அவரு வீட்டுக்குப் போனா love don't count days ன்னுதான் என் கண்ணில் பட்டது.நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று இருவரில் யாராவது ஒருவர் சொல்லியனுப்புங்க.
////கேமிரா பொறுத்துவதை விட அதை எப்படி இயங்காமல் செய்வது என்பதில் நமது ஒழுக்கங்கள் பல்லைக்காட்டும் என எண்ணுகிறேன்.//
indha vaarthai en manadhai migavum thaakkiyadhu.. ippadiyum manidhargal irukirargal... varutham alikiradhu..//
தோசையான்னு கமெண்டலாமென்றும் நமக்குத் தெரியாம இது யாருன்னு உங்களைத் தேடினா 4 கடை திறந்து வச்சிருக்கீங்க.எங்கே போய் தேடறதுன்னு தெரியலை.
இப்ப உங்ககிட்ட ஒரு ரகசியம் சொல்லப்போறேன்.முன்பு எனது அறியாமையால் தங்கிலீஷில் பின்னூட்டம் சொல்பவர்களைக் கண்டால் கடுப்பாக இருக்கும்.இப்பொழுது கொஞ்சமோ கொஞ்சம் புத்தி திரட்டலுக்குப் பிறகு ஓ!இவர்கள் கைபேசியில் கூட சில சமயம் கமெண்டுறாங்க,சில சமயம் தமிழ் தட்டச்சு மென்பொருட்கள் இல்லாததாலும் தங்கள் கருத்தை சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் தங்கிலீஷடிக்கிறார்கள் என்ற ஞானோதயம் வந்திருக்குது.
இருந்தாலும் ஏனைய நண்பர்களின் இடுகைகளில் தங்கிலீஷ் பின்னூட்டங்கள் பார்க்கும் போது நான் படிக்காமல் கடந்தே போகிறேன்.காரணம் எழுத்துக்கூட்டி பொருள் காண்பதில் நேரம் பிடிக்கிறதென்பதால்.நான்கு வரியில் சுருக்கமாக நீங்கள் சொன்னதால் பொருள் புரிந்து கொள்ள முடிந்தது.
உங்கள் மன வருத்தம் புரிகிறது.நமக்குள் எதிர்மறை எண்ணங்களை சமூகம் நிறைய புகுத்தி விடுவதன் விளைவே நான் அடைப்பானில் சொல்லியது.அதற்காகவேதான் நமது வாழ்வியலை பாதிப்பவர்களைப் பற்றிய விமர்சனங்களை முன்வைக்க வேண்டிய அவசியமிருக்கிறதென சொல்லியிருக்கிறேன்.
உங்கள் கருத்துப் பகிர்தலுக்கு நன்றி ரவிக்குமார்.
Post a Comment