Followers

Wednesday, October 27, 2010

தேரி பின்லாடன்

சிரிக்கணுமா?உருது, இந்தி தெரியுமா?தெரிந்தால் தேரி பின்லாடன் பார்க்கிற வழியைப் பாருங்க.தெரியலையா அல்லது கொஞ்சமா தெரிஞ்சுக்க விருப்பமா? அப்ப இடுகையை ஒரு மேலோட்டம் பார்த்து விட்டு படம் பார்க்கிற வழியைப் பாருங்க.இது பலநாடுகளில் முக்கியமாக வளைகுடா,பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட படம்.தடை செய்ற அளவுக்கு என்ன இருக்குன்னு பார்க்கலாமேன்னு மூளை திசுக்களை கிள்ளுதா?அப்ப தேரி பின்லாடன் பார்த்துடுங்க.

அலி ஹசன்-.எப்படியாவது அமெரிக்கா போய் செய்தியாளராகி விட வேண்டும் என்ற கனவு கண்ணன்.விமான பயணத்தில் செய்யும் பக்ரா சில்மிசங்களால் பாகிஸ்தானிய தீவிரவாதி என்று வண்டியை விட்டு இறக்கி விட்டு விடுகிறார்கள்.இதற்கிடையே டங்கா தொலைக்காட்சிக்கு வீடியோ நணபருடன் கராச்சி சார்ந்த செய்திகளை சேகரிக்கும் பணியில் முதலமைச்சர் நிகழ்ச்சியை சேகரிக்க போக டங்கா தொலைக்காட்சி பெயரையே கேள்விப்படாத காரணத்தால் காவலர் உள்ளே விட மறுக்க, முதலமைச்சர் நிகழ்ச்சியை எப்படியாவது வீடியோ எடுத்து விடவேண்டுமென்று அறையின் மேல்கூறை வழியாக முதலமைச்சரின் மொட்டைத்தலையை படம் பிடித்து டங்கா நிறுவனரிடம் வாங்கி கட்டிக்கொள்கிறார்.

ஆறு முறை முயற்சி செய்தும் ஏழாவது முறையும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு அமெரிக்க கனவு நிறைவேறாமல் நம்ம ஊர் வெளிநாட்டுக்கு அனுப்பும் ஏஜண்ட் ஸ்டைலில் ஒரு நிறுவனத்தை அணுக அவரோ 250000 ரூபாய் கொண்டு வருமாறு கூறுகிறார்.அவ்வளவு பணம் அதிகம் என அலிஹசன் கூற பணம் கட்டாத இன்னொரு குறுக்கு வழியும் இருக்கிறதென்று AK47 சுடத்தெரியுமா என்று பின்பக்கம் உட்கார்ந்திருக்கும் 2 முஜய்தீன்,உலக வரைபடம் காட்டி முதலில் ஈரானுக்கு உன்னை அனுப்புவோம்.பின் அங்கிருந்து ஈராக்கிற்கு போனால் அமெரிக்கர்கள் உன்னை எந்த செலவுமில்லாமல் அமெரிக்கா கொண்டுபோய் விடுவார்கள் என்கிறார்.அலிஹசன் அலறியடித்து எப்படியாவது பணம் கொண்டு வருவதாக சொல்லி விட்டு கோழிப்பந்தயம் ஒன்றை வீடியோ நண்பருடன் சேகரிக்கிறார். 


கோழிகளை  சண்டைக்கு மோதவிட்டுத்தான் பார்த்திருக்கிறேன்.பதிவுலகம் வந்த காலத்தில் கூட வெட்டிப்பயல் கல்லூரிக்கால கோழி பதிவுளை போட்டதைப் படித்திருக்கிறேன்.முதல் முறையாக வாசகர் பரிந்துரை மாதிரி எந்தக் கோழி நல்லா கொக்கரக்கோன்னு மைக்கில கூவுதுன்னு தலைக்கு முண்டாசு கட்டின கராச்சி நாட்டமைகாரன் மார்க் போடுவதை தேரே பின்லேடன் இந்திப்படத்தில் முதல் முறையாகப் பார்த்தேன்.
எந்தக் கோழி மைக்கில் கொக்கரக்கோ நல்லா கூவுதுங்கிற கோழிகளின் நடிப்பு:)க்கு பறவையினங்களுக்கான ஆஸ்கார் பரிசு என புதிதாக ஒன்று ஆரம்பிக்கலாம்.

போட்டிக்கான முதல் கோழியை அறிவிக்க கோழி மைக்கில் கோக்க்..கோக் என கூவ நாட்டாமை 5 மார்க் தருகிறார்.அடுத்து இரண்டாவது கோழி கெட்டவார்த்தை ஒன்றை சொல்லி 7 மார்க் வாங்கியதும் அடுத்து சென்ற ஆண்டின் பதக்கம் பெற்ற கோழி நிலம் நோகாப் பெண்ணாக மெல்ல அடி எடுத்து வைத்து கோக் என்ற ஒரே ஒரு சன்னக்குரலில் 1 மார்க் வாங்கி தோல்வியுறுகிறது.அடுத்து வீர நடை போட்டு வந்து ஹொக்க்ரக்ஹோ என்று கூவி பரிசை தட்டிச்செல்கிறது நூரா என்ற பின்லேடன் சாயல் கோழிப்பிரியரின் கோழி.

அலிஹசன் வீடியோவை கணினியில் எடிட் செய்ய இணைய தேடலில் பின்லேடன் முகச்சாயலோடு நூரா இருப்பது கண்டு தனது புதிய திட்டத்தை நண்பனிடம் கூறுகிறார்.அமெரிக்காவோ பின்லேடனை டோராபோராவில் தேடுகிறது.நூரா பின்லேடனோ கிராமத்தில் கோழி வளர்த்துக்கொண்டிருக்கிறார்.கோழிகள் மேல் உயிராக இருக்கும் பின்லாடன் உருவத்தில் உள்ள நூராவை  அவருக்குத் தெரியாமலே பின்லேடன் மாதிரி பேச பயிற்சி தந்து வீடியோ படக்காட்சி எடுத்து டோங்கா நிறுவனர் மூலமாக அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்க பின்லேடன் உயிரொடு இருப்பதாக அமெரிக்கா நூராவை தேடுவதென கதை நகர்கிறது.

எத்தனையோ அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பின்லேடன்,ஜார்ஜ் புஷ் கடி ஜோக்குகள் சொல்லியுள்ளன.ஆனால் இருவரையும் காலை வாரி விடும்படியான சிரிப்பு பரிசை தேரே பின்லாடன் இந்திப்படம் தட்டிக்கொண்டு போய்விடும் என நினைக்கிறேன்.

இதுவரை அறிமுகமாகாத கதாபாத்திர புதுமுகங்கள்,அமெரிக்க அசல் உச்சரிப்புக்கள்,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் இருக்கிற மாதிரி லாரி,அப்படியே பாகிஸ்தானின் கராச்சி நகர்ப்புறத்தை பிரதிபலிக்கும் செட்டிங்ஸ்,ஆடைகள்,சில AK47 துப்பாக்கிகள்,நல்ல நகைச்சுவை ஸ்கிரிப்ட் கலந்து தேரி பின்லாடன் அமெரிக்காவையும்,பாகிஸ்தானையும் நையாண்டி செய்கிறது.

இந்தி கட்டாயம் படிக்கணும் என்ற அரசியல் திணிப்பினால் செய்ய இயலாத ஒரு சாதனையை இந்தி சினிமாக்கள் செய்கின்றன.அதோடு இந்தியா பாகிஸ்தான் என்று பிரிந்து நிற்கும் மக்களை இணைக்கும் பாலமாக இந்தி படங்கள் சிரிக்க வைத்து இருகோட்டு மனிதர்களை இணைக்கும் சாத்தியமும் ஒருவரை ஒருவர் நெருங்கும் புரிந்துணர்வை தரலாம்.பதிலாக மனிதர்களின் மனோபாவங்களைப் பொறுத்து. தேரி பின்லேடன் சிரிப்பையும்,கோபத்தையும் உருவாக்கும்.

டிஸ்கி.நூரா பின்லேடன் கோழியுடன் போஸ் தரும் படத்தை இணையத்தில் தேடி கிடைக்காததால் கிடைத்தவை இடுகையில்.

13 comments:

ராஜ நடராஜன் said...

இந்தியில தேரி ன்னா ஒரு பொருள்

தேரா ன்னா ஒரு அர்த்தம்.

நூரா பின்லேடனுக்கு தேரி மட்டுமே பொருந்தும்.

ஜோதிஜி said...

அதென்ன எப்போது முதல் வடை உங்களுக்குத் தானா?

ராஜ நடராஜன் said...

//அதென்ன எப்போது முதல் வடை உங்களுக்குத் தானா?//

இது தனக்கு தானே திட்டம்:)

வானம்பாடிகள் said...

ஏ தோ ஹிந்தி ஃபிலம் முஜெ ஆய் கேன் அண்டர் இஸ்டாண்ட் அ லிட்டில். ஏ பேய்சா அவுர் டாய்ம் வேஸ்ட் ஹை நா?தாட் இஸ் வை முஜே கோயி ஃபிலம் தேக்னே கேலியே தயார் நஹி. ஹி ஹி..(செந்தில் இடுகையில வெச்ச ஆப்புக்கு சேம்பிள்ணே:))))))

Chitra said...

பகிர்வுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//ஏ தோ ஹிந்தி ஃபிலம் முஜெ ஆய் கேன் அண்டர் இஸ்டாண்ட் அ லிட்டில். ஏ பேய்சா அவுர் டாய்ம் வேஸ்ட் ஹை நா?தாட் இஸ் வை முஜே கோயி ஃபிலம் தேக்னே கேலியே தயார் நஹி. ஹி ஹி..(செந்தில் இடுகையில வெச்ச ஆப்புக்கு சேம்பிள்ணே:))))))//

அச்சா ஓ ஹயா மதராஸி ஹிந்தி நகி ஷீக்கா!நய்தோ ....

ப்யூன்!கேண்டின்ல ஒரு செட் பூரி ஏக் சாயா லேக்கே ஆவ்,அப்படியே இந்த லெட்டர ரைட்டர்கிட்ட கொடுத்து சைன் வாங்கி ஜல்தி ஆவ்

அவுர் ஆப்கோ தெரிந்த ஆபிஸ் டயலாக் சேர்த்துக்கவும்:)

ராஜ நடராஜன் said...

//பகிர்வுக்கு நன்றி.//

சித்ரா மேடம்!ரொம்ப சீரியசான விசயத்தையும் சிரிப்பு மட்டுமே இலகுவாக்கும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.

படம் முழுதும் சிரிப்பை அடக்க இயலவில்லை.

நசரேயன் said...

ஹிந்தி நகி

அமைதிச்சாரல் said...

நானும் படம் பார்த்தேன்.. நிஜ பின்லேடனை பிடித்து, அப்படியே.. தேர்தல்ல நிக்கிறவரைக்கும் கற்பனை காணுற அமெரிக்க போலீஸ் கேரக்டர், நூராவை சந்திக்கும் அந்தக்கட்டம் ஒன்றே போதும்.. சூப்பர் வெடிகுண்டு க்ளைமேக்ஸ் :-))))

பழமைபேசி said...

இந்தி நகி மாலும்...

ராஜ நடராஜன் said...

//ஹிந்தி நகி//

நகி?பகுத் அச்சா:)

ராஜ நடராஜன் said...

//இந்தி நகி மாலும்...//

ஆப்கிலியே ஜரூரத் நகி!

ஆனாலும் அட்சரம் பிசகாமல் பின்னுறீங்க.நசரப் பாருங்க!இந்தி நகி:)

ஆர்.ராமமூர்த்தி said...

புதுமையா இருக்கு..!!!