Followers

Thursday, October 21, 2010

பாவம்!இந்தியாவின் ரோகிந்தன் மிசிரியும் கோவிந்தன் மேஸ்திரியும்.

யாராவது பதிவர்கள் சொல்வார்களா என்று எதிர்பார்த்து யாரும் சொல்லாத காரணத்தால் என்னுடைய தனி ஆவர்த்தனம் இந்த் இடுகை.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மனிதன் பலருக்கு காட்பாதர் மாதிரி.இன்னும் சிலருக்கு சமூகத்திற்கும் ஜனநாயகத்திற்கும் ஊறு விளைவிப்பவர்கள்.அந்த வரிசையில் எப்பொழுதும் விவாதத்திற்குரிய வில்லங்கமான ஒரு மனிதர் பால் தாக்கரே.கார்ட்டூனிஸ்ட்டாக இருந்து பின் காட்பாதராகும் வரை மகாராஷ்டிரம் சார்ந்தும்,இந்தியா சார்ந்தும் செய்யும் அடாவடி ஜனநாயக அத்துமீறல்கள் அதீதமானவை.மும்பையின் பாதாள உலக தாதாக்கள்,அரசியல் பாதுகாப்புடன் அப்பாவி மக்கள் சார்ந்த குரலும் சேர்ந்த மொத்த கலவை பால் தாக்கரே.

இடுகையைப் படிப்பவர்களில் சிலருக்கு வரதா பாயை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வரதராஜன் என்ற வர்தா பாயின் நிஜ வாழ்க்கையையும்,  மார்லன் பிராண்டோ நடித்த காட்பாதரையும் சேர்த்து அரைத்த கலவையே நாயகன் திரைப்படம் என விசயம் தெரிந்தவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.வரதா பாயின் காலத்தை 70பதுகளின் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலம் என்று ஒப்பிடுவது சரியாக இருக்கும்.ஏனென்றால் பின்னால் சொல்ல வரும் செய்திக்கு முன்னுரையாகவும் அந்தக்கால கட்ட பால் தாக்ரேயின் அரசியல் தடாலடிக்கும் துணைபுரிவதாக இருக்கும்.

70பதுகளில் பம்பாயில் வாழ்க்கை தேடி ஓடிய ஆந்திர,கர்நாடகா, கேரள,மெட்ராஸ்காரர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குள்ள மொத்த அடையாளம் மதராஸி(சி வேணும்ங்கிறவங்க சி போட்டு படிக்கவும்:)).பம்பாயின் நலன்களை மதராஸிகள் அபகரித்துக்கொள்கிறார்களென்றும்,தாராவியின் குடிசைகளுக்கு இவர்களே காரணமென்றும் மதராஸிகள் பம்பாயை விட்டு வெளியேற வேண்டும் என்ற கலவரத்தை மகாராஷ்ட்ரிய மக்கள் மூலமாக தீக்குச்சி பத்த வைத்தார்.இதில் தென் இந்தியாவின் ஏனைய மாநிலங்களைச் சார்ந்தவர்கள்,முக்கியமாக கேரள சேட்டன்களும் கூட வர்தா பாயுடன் சேர்ந்து திருப்பி அடிக்கும் ஆயுதத்தை எடுத்திருக்க முடியும்.ஆனால் வர்தா பாய் தாராவியின் தாதா என்பதாலும் கணேஷ் சதுர்த்திக்கு பணம் அள்லி விடுபவராகவும் இருந்ததுடன் நாயகன் திரைப்படம் காரணமாக பிரபலம் என நினைக்கிறேன்.கலவரங்கள் அடங்கிப் போய் பம்பாய் தன்னை "நான் காஸ்மோபோலிடனடா" என்று சொல்லிக்கொண்டது.

ஆனால் பால் தாக்கரேக்கு  மராட்டியர்களின் பாதுகாவலன் என்ற பிம்பம் வந்து விட்டது.இதற்கும் அடுத்த பத்தாண்டு காலத்தில் பம்பாயின் இந்து,முஸ்லீம் கலவரங்களின் முக்கிய களவானியாக பதவி உயர்வும் அதனைத் தொடர்ந்த தடாலடி அறிக்கைகளையெல்லாம் தொகுத்தால் பால் தாக்கரே மீதான எதிர்வினைகளே மிஞ்சும்.பால் தாக்கரேயின் சிவசேனா குடும்ப அரசியல் இரண்டாகப் பிரிந்த பின்னர், பீகாரிகளின் ஆதிக்கம் மஹாராஷ்ட்டிராவில் அதிகம்,அமிதாப் பச்சன் மீது நொட்டைச் சொல்,சச்சினிடம் வம்பு,நீதிமன்ற வாரண்டு வந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவன் என்ற திமிர்த்தனம்  என வில்லங்கத்தனங்கள் சொல்லி முடியாது.இந்த லட்சணத்துல நம்ம ரஜனி அவர்கள் பால் தாக்கரே எனக்கு கடவுள் என்று சொல்வது அபத்தமாயில்லை ரஜனி ரசிகர்களே!

இதையெல்லாம் விடுங்க பாஸ் மற்றும் பாஸிகளே!(பெண்களும் படிக்கிறாங்க இல்ல அதனால்தான்:)) இப்ப இடுகையின் தலைப்பு கதைக்கு வருவோம்.

பள்ளியில்,கல்லூரியில் படிச்சிருக்கிறோம்.வாத்யார்,லெக்சரர் சொல்வதை கேட்டும்,கேட்காமலும் தேர்வு நேரத்தில் மனப்பாடம் செஞ்சும்,பிட் அடிச்சும் எப்படியோ தேத்தி சிலசமயம் தோத்தும் விடுகிறோம்.ஆண்டனி கிளியோ பாட்ரா,ஜூலியஸ் சீஸர்,ஷேக்ஸ்பியர்,மில்டன்,உண்ணும் உணவின் ஹார்போஹைட்ரேட்,புரோட்டின்,மால்க்யூல்,என்சைம்ஸ்,திருக்குறளின் முப்பாலில் சில, அகநானூறு, புறநானூறு, கலிங்கத்துப் பரணி, கணக்கு வாத்தியார்கிட்ட கையை நீட்டி வாங்கும் தப்புக்கணக்கு, அசோக ஸ்தூபியை நிறுவியது யார் இப்படி ஏதாவது கேள்விகளுக்கு பதில் சொல்வதோடு வருட லீவை அமர்க்களப்படுத்திட்டு அப்புறம் நமது கண்கள் வென்றவர்கள் அட்டவணையில் பெயரும்,எண்ணும் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கப் போய் விடுவோம்.ஏனென்றால் இந்தியாவில் கற்கும் பெரும்பாலான மாணவர்கள் ஜனநாயகத்தின் அசடுகள்.நாம் ஐம்பெருங்காப்பியங்களில் கூட எங்காவது குறை காண்பதுமில்லை.வேண்டுமென்றால் கம்பனைப் பற்றி பட்டிமன்றம் நிகழ்த்துவோம்.ஏனென்றால் காப்பியங்கள் நமக்கு இலக்கியம்.

ஆனால் நீங்கள் பால் தாக்கரேவின் 20 வயது வம்ச வாரிசாக இருந்தால் உஃப் என்று ஊதினால் கீழே விழும் எலும்பாண்டியாக இருந்தாலும் வீர மராட்டியனின் பேரப்பிள்ளை.பத்து வருடங்களுக்கும் மேலாக Such a long journey என்ற புலிட்சர் பரிசின் B.A ஆங்கில இலக்கியத்தின் பாடப் பகுதியாக இருந்தாலும் நொள்ளைகள் கண்டுபிடிக்க உரிமை உண்டு.அதோடு மட்டுமில்லாமல் இந்தப் பாடத்தைப் படித்து படிக்கிற புள்ளக கெட்டுப்போகும்,மராட்டியர்களை இழிவுபடுத்தும் பகுதிகள் இருக்கு என்று சொல்லி ஆதி(க்க)த்ய தாக்கரே தாத்தா பால்தாக்கரேகிட்ட வத்தி வைக்க முடியும்.தாத்தா பத்து வருடம் பாடத்திட்டத்தில் இருக்கும் ஒரு நூலை 24 மணி நேரங்கள் ஏன் எதற்கென்று கேள்வி கேட்க இயலாமல் தடை செய்ய இயலும்.இந்த தடைக்கு மராட்டிய வாள் எடுத்து அப்பன், தாத்தன், பேரன் என ஒரே மேடையில் வாரிசு விழா எடுக்க இயலும்.மத்தியிலும் வாரிசு அரசியல்,மாநிலங்களிலும் பாஸ் இசம் பூரிக்கும் அரசியல்.வாழ்க!வாழ்க எத்தனை நாட்களாத்தான் சொல்வது அதனால் வளர்க இன்னும் வாரிசு இந்திய ஜனநாயகம்!

ரோகிந்தன் மிசிரியின் Such a long journey ( Pulitzer prize winner) புத்தகம் கிடைப்பவர்கள் வாங்கிப் படிக்கவும்.தாக்கரேக்களால் முடிந்த ஒரே நல்ல காரியம் இது.

பொஸ்தகம் படிக்க நேரமில்லப்பான்னு சொல்றவங்க அதே பெயரில் வந்த திரைப்படம் கிடைச்சா பார்த்துட்டு ஜனநாயக தாதா தாக்கரேக்களுக்கு உர்ர் என்ற முறைப்பு விடவும்.

5 comments:

பழமைபேசி said...

ம்ம்ம்.... சரிங்க...

ராஜ நடராஜன் said...

//ம்ம்ம்.... சரிங்க...//

பின்னூட்டம் பார்த்து ஒரு சந்தேகம்.நீங்க பழமையா?நசரா:)

ராஜ நடராஜன் said...

நசரு!ம்ம்ம் எனக்கா பழமைக்கு எதிர்ப்பின்னூட்டமா:)

கிரி said...

பதிவு பால்தாக்கரே பற்றி என்றதும் இந்த வரியைத்தான் தேடினேன்...உங்க பதிவில். சத்தியமா... நம்புங்க

"நம்ம ரஜனி அவர்கள் பால் தாக்கரே எனக்கு கடவுள் என்று சொல்வது அபத்தமாயில்லை ரஜனி ரசிகர்களே!" :-)

ராஜ நடராஜன் said...

//பதிவு பால்தாக்கரே பற்றி என்றதும் இந்த வரியைத்தான் தேடினேன்...உங்க பதிவில். சத்தியமா... நம்புங்க

"நம்ம ரஜனி அவர்கள் பால் தாக்கரே எனக்கு கடவுள் என்று சொல்வது அபத்தமாயில்லை ரஜனி ரசிகர்களே!" :-)//

தலயே வந்து சொன்னது நல்லதாப் போச்சு:)

ரஜனி ஆன்மீக பலம் கொண்ட,தமிழகத்தில் யாராலும் கவர இயலாத காந்த சக்தி கொண்ட மனிதர் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.அதே நேரத்தில் அவரது வயது,அனுபவங்களுக்கு இது இப்படித்தான் என்ற புரிதல் வந்திருக்க வேண்டிய தருணமிது.ஆனால் குழப்பங்களின் கலவையாக ரஜனி இருப்பது வருத்தம் தருகிறது.

எழுதும் போது எனது கவனம் பால் தாக்கரேவும்,கல்லூரியில் படிக்கும் அவரது 20 பையன் சொன்னான் என்ற ஒரே காரணத்தை வைத்து ஒரு பள்ளி பாடத்தின் பகுதியை நீக்கும் அடாவடி மட்டுமே எனது க்ருத்தாக இருந்தது.

ரஜனி பற்றிய விமர்சனம் அந்த கணத்தில் வந்து விழுந்த சொற்கள் மட்டுமே.