தாரை,தப்பட்டைகளோடு எந்திரன் திரை விமர்சனம் களை கட்டுமென்று பார்த்தால் இன்று படம் பார்த்து விட்டு வந்தும் பிரபல திரை விமர்சன பதிவர்களின் இடுகை ஒன்றும் கண்ணில் படவில்லை.டிக்கட் கிடைக்கவில்லையா என்ன? கட்டவுட் பாலாபிஷேகம், தரையில் சாப்பாடுன்னு களைகட்டுச்சே என்னாச்சு? தமிழகத்தில் போட்ட காசு வந்துமென்று நினைக்கிறேன்.இந்தி சத்தத்தையே காணோம்!
எப்படியோ தமிழக கோமாளித்தனங்கள் இல்லாமல் தமிழகத்திலிருந்து வரும் அதே ரசிகர் கூட்டம் பிரம்மச்சாரிகளின் கூட்டமாக,குடும்ப சகிதமாக ஹவுஸ்புல்லா ரொம்ப மெச்சூர்டா அமைதியா படம் பார்க்கிறது பார்க்க சந்தோசமாய் இருந்தது.ஆனால் இந்த அமைதியைக் குலைக்க திரையரங்கின் ஸ்டிரியோபோனிக் சத்தம் காதை கிழி கிழின்னு....
படம் துவங்கியதுமே Son pictures லோகோ வந்ததும் சன் தொலைக்காட்சி செய்தி வருகிற மாதிரி ஒரு உணர்வு.அதனைத் தொடர்ந்த ஆராய்ச்சிக்கூடம் என்னையறியாமல் தசாவதாரத்தின் ஆராய்ச்சிக்கூடத்தை நினைவு படுத்தியது.கூட கருணாஸ்,சந்தானத்தின் பித்துக்குளித்தனங்களும் அதனைத் தொடர்ந்த கதை நகர்வும் என்னமோ கோடிக்கணக்கில் காசு கொட்டினாங்கன்னு சொன்னாங்களே ஒரு எபக்டுமே இல்லையேன்னு தோன்ற வைத்தது.எந்திரனின் நகைச்சுவைக் காட்சிகள் மட்டுமே கதையை நகர்த்திச் செல்கின்றது.அப்புறம் குறிப்பிட்டுச் சொல்லும்படியா என்ன என்று இப்ப யோசித்தாலும் ரயில்,ஆராய்ச்சிக்கூட கிராபிக்ஸ்,பீட்டர் ஹெய்ன் ரயில் சண்டைன்னு கொஞ்சம் நினைவு வருது.சும்மாவே சாமியாடுற ரஜனி ரசிகர்களுக்கு கிராபிக்ஸ்தான் படைப்பாளி.
டோனி சொல்ற மாதிரி கதையே இனிமேல்தான்னு இடைவேளையில் சொல்வதால் சரி பார்க்கலாமேன்னு உட்கார்ந்தா இயந்திரமா இருக்கிற யந்திரனுக்கு உணர்ச்சிகள் கொடுக்கனுமுன்னு 1 டெராபைட் 2ஹெக்டாபைட், பைட் இயந்திரனுக்கு டாய்பிரண்டா இருந்து இப்ப பாய்பிரண்டாகனுமுன்னு ஐஸ்வர்யா மேல் காதல் வந்து விடுகிறது.காதல் என்ற நட்டு கழண்டுகிச்சுன்னா என்னாகுமென்று கதை நகர்கிறது.ஏ.ஆர் ரகுமானை இயர்போனை காதுல மாட்டிகிட்டு இன்னொரு முறை கேட்டாலே கருத்து சொல்ல முடியும்.
ரஜனிக்கு ரொமான்ஸை விட வில்லத்தனம் அல்வா மாதிரி வருகிறது.அதனை மூன்று முடிச்சு முதல் லகலகலக வரை நிரூபித்திருக்கிறார்.இதிலும் எந்திரன் வில்லனாகும் போது அசத்தல்.ஆனால் இங்கே திரையரங்கில் விசில் அடிக்க மட்டுமே ஆட்கள் இல்லை.கண்ணை கழட்டி வேறு கண் மாற்றுவது,காயம்பட்ட உடலை ரீமோல்டிங்க் செய்வது போன்றவை டெர்மினேட்டரை நினைவுபடுத்தியது.ஆங்கிலப்படங்களுக்கு கண்ணில் விளக்கெண்ணைய் இட்டு எந்தக்காட்சி எங்கே அசல் என்று துப்பறியும் பதிவர்களுக்கு இன்னும் சில ஆங்கிலப்படப் பெயர்கள் அகப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
க்ளைமாக்ஸ் எந்திரன்களின் சாகசம் இதுவரை இந்தியத் திரைப்படங்களிலே முதல்முறையாக என்ற வாக்கியத்தை உண்மை என்கிறது.ஆங்கிலப்படங்களுக்கு சவால் விடும் சிறு முயற்சியாகவாவது இதனை ஷங்கரை பாராட்ட வேண்டும்.கலாநிதி தயாரிப்பாளர் என்றதும் உலையிலே போட்ட பணம் என்று சிலர் முணுமுணுக்கலாம்.ஐங்கரனால் முடியாததை கலாநிதி வெற்றி வியாபாரமாக்கியிருக்கிறார்.எனவே இதன் நுண்ணரசியல்களில் எனக்கு ஈடுபாடு இல்லை.
ரஜனி! உடலை மெலிதாக வைத்திருக்கும் ரகசியத்தை மட்டும் என் காதுல போட்டீங்கன்னா கூட்டாளியாக வசதியாக இருக்குமில்ல!டாட்!
8 comments:
என்னாச்சு!மெய்யாலுமே ஒருத்தருக்கும் டிக்கெட் கிடைக்கலியா
எல்லாரும் தலைவருக்கு பாராட்டு சொல்ல இமயமலைக்கு போய்ட்டாய்ங்களோ:))
//எல்லாரும் தலைவருக்கு பாராட்டு சொல்ல இமயமலைக்கு போய்ட்டாய்ங்களோ:))//
நீங்க படம் பார்த்தீங்களா இல்லையா:)
ரஜனி அதுக்குள்ள இமயமலை போயிட்டாரா?வேண்டுதலா இல்ல ரசிகர் தொல்லையா?
அட....ரஜனி படமா எனக்குப் பிடிக்காதுன்னு சொன்னாலும் அவர் படம் வந்ததும் ஒரு பரபரப்பு.
இதுதான் அவரது சக்தி !
//அட....ரஜனி படமா எனக்குப் பிடிக்காதுன்னு சொன்னாலும் அவர் படம் வந்ததும் ஒரு பரபரப்பு.
இதுதான் அவரது சக்தி !//
ஹேமா!ரஜனியில்லாமல் எந்திரன் எடுத்திருந்தா ஷங்கர் கதைக்கு படம் ஊத்திக்கும்.ரஜனி என்ற தனிமனித ஆளுகையினால் மட்டுமே படம் ஹிட் என்பதில் சந்தேகமில்லை.
பதிவுலக பஞ்சாயத்துக்கள் எவ்வளவு அறிவுபூர்வமா இருந்தாலும் கூட ரஜனி ரசிகர்களிடம் எடுபடுவதில்லை என்பதே உண்மை.
எப்டி நேரம் அமைந்தது?
//எப்டி நேரம் அமைந்தது?//
ஜபர்தஸ்தி ஜோதிஜி:)
ம்ம்ம்ம்ம் படம் பார்த்தாச்சா>>>
Post a Comment